• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
463
சதூர்வேதமங்கலம்:

" சிம்ஹன் தாத்தா தன் மனைவிக்கு பார்த்து பார்த்து பரிமாறுவதை கவனித்த ஆர்கலிக்கு,நமக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு குடும்பம் வாய்க்கவில்லை?, என்பதை நினைத்து உள்ளுக்குள் கதறினாள்".


அம்மாடி ஆர்கலி ஒரு காஃபி கிடைக்குமா? என்று சிம்ஹன் தாத்தா கேட்க, கண்டிப்பா தாத்தா. இதற்கு ஏன் இவ்வளவு தயக்கமென்று, எழுந்து போய் சூடாக இருந்த பாலில் காஃபி பொடியை கலந்து எடுத்துட்டு வந்து அவரிடம் கொடுத்தாள்".

" நேரமும் கடந்து கொண்டிருக்க, மதியம் என்ன சமைக்கிறது என்பதை ஆர்கலி கேட்க, அப்பொழுது கருப்பாயியும் அங்கு வந்தார். அங்கு இருந்தவர்களை பார்த்து சிரிக்க, வாம்மா. பசங்க இன்னும் ஊரிலிருந்து வரவில்லையா? என்று பாட்டிகள் கேட்க, இல்லைங்க ஆச்சி".

"இனிமேல் புது வருஷம் பிறந்த பிறகு தான் பள்ளிக்கூடம் திறப்பாங்கள் ஆச்சியென்று சொன்னார்".

" நல்ல வேளை அண்ணி வந்தாங்கள். இல்லையென்றால் இவர்களிடம் என்ன பேசுவதென்று, நான் குழம்பி போயிருப்பேனேனு தன் மனதிற்குள் ஆர்கலி நினைத்துக் கொண்டாள்".

" பிறகு இருவரும் பேசிக்கொண்டே மதிய உணவை சமைக்க, ஆராமா உன் கிட்ட ஒன்னு கேட்கணுமென்று கருப்பாயி சொல்ல, அண்ணி, இது என்ன புது பழக்கம்?, பர்மிஷன்லாம் கேட்குறீங்களென்றாள் ஆர்கலி".

" சும்மா தான், மனசு ஏனோ குழம்பிட்டே இருக்கு. கேட்காமலும் இருக்க முடியலை, நீ ஒன்னும் தப்பா எடுத்துக்கமாட்டியே? என அவர் தயங்கினார்".

" ஒரு நொடி அவரின் முகத்தை பார்த்தவள், அண்ணி என் உசுரு இந்த மண்ணுக்குள் போகும் வரை, உங்க உறவு முறியாது."

" சூழ்நிலை மாறலாம், ஆனால் உங்களோட அன்பை ஒரு போதும் நான் மறக்கமாட்டேன்ணி. நிச்சயமா உங்களை பார்க்க நானும், உங்க மருமக புள்ளைங்களோட வருவேன்"

" தாய்மாமன் சீரெல்லாம் விட்டு குடுக்கமாட்டேன், புரிஞ்சிக்குங்களென்று பொரியலை வதக்க, தான் மனதில் கேட்க தயங்கிய கேள்விக்கான பதிலை, ஆர்கலி சொல்லியதை கேட்டு கருப்பாயிக்கு கண்கள் கலங்கியது"

" இது போதும் ஆராமா. நீ அப்படி இல்லையென்றாலும், உள்ளுக்குள் சின்ன பயம் தான் என்றார்".

" சிரித்து சமாளித்தவள், உங்களைப்போல நல்ல உள்ளங்களோட அன்பை பெற,நான் எவ்வளவு பாக்கியம் பண்ணியிருக்கேனோ என, ஆர்கலி தன் மனதிற்குள்ளே சொல்லிக்கொண்டாள்"

" சமையல் ரெடியானதும், வெளியே திண்ணையில் பேசிக்கொண்டு இருப்பவர்களை சாப்பிட கூப்பிட, தோட்டத்தில் இருந்து எடுத்து வந்த தலைவாழை இலையில், உணவை பரிமாற, ரசித்து சாப்பிட்ட முதியவர்கள், இருவரையும் பாராட்ட தவறவில்லை"

" சரி கொஞ்ச நேரம் போய் படுக்குறோமென்று சொல்லியவாறு, மூவரும் அங்கிருந்து பெரிய வீட்டை நோக்கி சென்றனர்".

" இந்த வீட்டில் படுக்க மூவருக்கும் வசதி குறைவு என்பதால், ஆர்கலியும் அவர்களை போக வேண்டாமென்று தடுக்கவில்லை".

" ஆச்சியும், கருப்பாயியும் தரையில் படுத்துக்கொண்டு டிவி பார்க்க, ஆர்கலியோ அறைக்குள் சென்று கட்டிலில் படுத்தாள்".

"காலையிலிருந்து ரொம்ப நேரமாக , கிச்சனில் நின்று கொண்டே சமைத்ததால் காலும், இடுப்பும் ரொம்ப வலித்தது"

" அசதியின் காரணமாய் ஆர்கலியும் தூங்கிவிட்டாள்"

" நன்கு தூக்கத்தில் இருந்தவள், நான் தரமாட்டேன் நான் தரமாட்டேனென்று சத்தம் போட, டிவி பார்த்துக் கொண்டிருந்த இருவருக்கும் உள்ளறையிலிருந்து ஆர்கலியின் சத்தம் கேட்டு, பதறி எழுந்து போய் பார்க்க, அவளோ தனது வயிற்றை பிடித்தபடி தரமாட்டேன் என்று சொல்லியவாறே இருக்க, அவளின் மூடிய கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் வழிந்தோடிக் கொண்டிருந்தது"

" அம்மாடி ஆரா கண்ணு, ஆராமா என இருவரும் அவளை தட்டி எழுப்ப, சில நொடியில் கண்ணை திறந்தவள், இருவரையும் பார்த்து என்னாச்சி?, என பதறி எழுந்தாள்".

" அய்யோ ஆராமா, எதுக்கு இப்படி பதறி அடிச்சுக்கிட்டு எழுந்திருக்கிற?, யாருக்கும் ஒன்னும் இல்ல என்று கருப்பாயி கொஞ்சம் சத்தமாக சொல்ல, தூங்கிட்டு இருந்தேனா, நீங்க எழுப்புனதும் அதான் பயந்துட்டேன்ணி என்றாள்"

"ம்ம் அட ஒன்னும் இல்லை, கால் கொஞ்சம் வீக்கம் வந்த போல இருக்கே, அதான் கொஞ்சம் வெந்தயகஞ்சி குடிக்கிறியானு கேட்க வந்தேனென்று சமாளித்தார்".

" ஆமாணி,அப்போ கொஞ்சம் வலி இருந்தது தான். தூங்கினதும் சரியாகிட்டு என்று எழுந்தவள், ரெஸ்ட் ரூமிற்குள் செல்ல, பாட்டியும், கருப்பாயியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு வெளியே வந்தவர்கள்,ஏதோ கனவு கண்டிருக்கு போல, அதான் ஆச்சி என்றவாறு ஃப்ரிஜில் இருந்த பால் எடுத்து சுட வைத்தார்"

" இரவு எட்டு மணிக்குலாம் ருத்ரனும் சதூர்வேதமங்கலத்திற்கு வந்து சேர்ந்தான்"

" பேரனை சிம்ஹன் தாத்தா முறைத்து பார்க்க, அவனோ அதை கண்டும் காணாமல், லேப்டாப்பில் தனது வேலையை பார்க்கலானான்"

" உன் பேரன் எங்கே போனான் கிரியென மனைவியிடம் கேட்க, அவரோ கணவரை முறைத்து பார்த்தார்".

" என்ன கிரி, கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், மாமனை ரசிக்கிற?, உன் புருஷன் ஆல்வேஸ் ஸ்மார்ட் தான் கிரியென்று தனது மீசையை தடவிக்கொண்டு சிம்ஹன் தாத்தா சொல்லி சிரித்தார்".

" புள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாண்டானாம், அந்த கதையா தான் இருக்கென்று கிரிஜா பாட்டி சொல்ல, ஆமா நான் கிழவன். இவள் 16 வயது இளம் சிட்டு என்றவர், அவன் எங்கே போனானென்று மீண்டும் கேட்டார்".

" ஏங்க, நான் தான் வீரா கிட்ட மூன்று மாதமா பேசுறது இல்லையே, எனக்கு எப்படிங்க தெரியும்?, உங்களுக்கு வேண்டுமென்றால் நீங்களே போய் கேளுங்களென்று சொல்லி விட்டு, அறைக்குள் சென்று விட,இவள் சொல்லுவதை நம்பலாமா என யோசனையானார் சிம்ஹன் தாத்தா".

சென்னை- சுந்தரபாண்டியன் கெஸ்ட் ஹவுஸ்:

" வசு சொல்லிய வார்த்தைகள் கேட்டவர், வேகமாக வசுவின் அறைக்கதவின் முன்பு போய் நின்ற சத்தியமூர்த்தி, தாரமா ப்ளீஸ், தயவு செய்து கதவை திற என்று தட்டினார்"

"சிறிது நேரம் தட்டிக் கொண்டே இருக்க, மனம் கேட்காமல் எழுந்து வந்து கதவை திறந்த வசுந்தரா,சொல்லுங்க சத்தியமூர்த்தி?

"இப்பொழுது என்ன கதை சொல்ல போறீங்க? என்று கையை கட்டிக் கொண்டு கேட்டார்"

" நீ அழுது கொண்டிருக்கும் போது, உன் கழுத்தில் தாலி கட்டியது மட்டும் எனக்கு ஞாபகம் இருக்கு. எந்த சூழ்நிலையில் அதை கட்டினேன் என்பது எனக்கு ஞாபகமே இல்லை தாரா என்றார் சத்தியமூர்த்தி"

" அவர் சொல்லியதை கேட்ட வசுந்தரா, தனது கைகளை தட்டி சிரித்தவர், படம் வரைவதில் தான் நீங்க பெரிய ஆர்டிஸ்ட் என்று, இத்தனை வருஷமா நினைத்துக் கொண்டிருந்தேன்".

" ஆனால், திரைக்கதை எழுதுவதிலும் மிஸ்டர்.சத்தியமூர்த்தி பெரிய கில்லாடியா இருக்கீங்களே என்றார்"

" சத்தியமூர்த்தி நீங்க என்ன பேசுறீங்களென்று யோசித்து தான் பேசுறீங்களா? என மைக்கேல் கேட்க,அவர் பக்கம் திரும்பிய சத்தியமூர்த்தி,சார் பொய் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு வரவில்லை".

" என்ன நடந்ததென்று எனக்கு உண்மையிலே ஞாபகம் இல்லை. தாராவிற்கு தாலி கட்டியதும், மேலும் சில விஷயங்கள் மட்டும் தான் எனக்கு நினைவில் இருக்கின்றது".

" ஏனென்றால் என்று சொல்லியபடியே ஒரு நிமிஷம் அமைதியாக இருந்தவர், எங்கப்பா நான்கு வருஷம் கோமாவில் இருந்தாங்க போதுமா என்னும் வெற்றியின் குரல் கேட்டு, என்னாஆஆ என மற்ற இருவரும் அதிர்ந்தனர்".

" ஆனால் வசு மட்டும் அதை நம்பாமல், நீ என்னப்பா புது கதை சொல்லிட்டு இருக்க?, ஓஓஓ அவரோட புள்ளையாச்சே, அதான் நீயும் நல்லா கதை எழுதுற என்றார் வசுந்தரா".

" நீங்கள் நம்புவதும் நம்பாமல் போவதும் உங்களுடைய இஷ்டம், அப்புறம் சார் எங்களுடைய ஊர் பொள்ளாச்சியில் இருக்கும் வேடன்புத்தூர் கிராமம்.அங்க வந்து பெரிய வீடு என்று கேட்டால் எல்லாரும் சொல்லுவாங்க".

" எங்க அப்பா வார்த்தையில் நம்பிக்கையிருந்தால் அங்கு வாங்க, மற்றதை பேசிக்கொள்ளலாம்".

" நீங்கள் வர சொன்னீங்க என்பதற்காக தான் வந்தோம்.இவங்க என்னமோ ரொம்ப ஓவரா பேசிட்டு இருக்காங்க?.

" இவ்வளவு பேச்சு பேசுறவங்க, இத்தனை வருஷம் எங்கே போயிருந்தாங்களாம்?, எத்தனையோ வழி இருக்கே தேட?, அதில் எதையாவது முயற்சி பண்ணினாங்களா? இல்லை தானே?.

" அதை விட்டு சும்மா எங்கப்பாவை குறை சொல்லிட்டே இருக்காங்க என்று வெற்றி கோவப்பட்டு பேச, வெற்றி போதும் வாயை மூடுடா என்றார் சத்தியமூர்த்தி"

"இப்பொழுது நான் உடனடியாக போகணும் என்றவன், அப்பா வாங்கயென்று அவரின் கையை பிடித்து இழுத்துக்கொண்டே வெளியே செல்ல, மற்ற மூவரால் ஒன்னும் சொல்ல முடியவில்லை"

" எதுக்கு வெற்றி இப்படி என்னை இழுத்திட்டு வரயென்று சத்தியமூர்த்தி கோவப்பட, அப்பா, சென்னை விமானநிலையத்தில் குண்டு வச்சிருக்காங்கனு மெசேஜ் வந்துருக்கு"

" நான் உடனடியாக அங்கே போகணும். நீங்க நம்ப விஷாலோட வீட்டில் இருங்களென்று சொல்ல, நீ எப்படி இங்கே என சத்தியமூர்த்தி கேட்க, அப்பா, நாங்க டிரைனிங்கிற்காக இங்கே சென்னைக்கு வந்திருக்கோம்".

" விஷாலுக்கும், கபிலனுக்கும், பெங்களூர்ல டிரைனிங் போட்டுருக்காங்க. வள்ளி நீ இந்த ஃப்ளைட்டில் வருவதாக சொல்லுச்சி. அதான் உன்னை பார்க்க வந்தேன் என்றவாறு காரை வேகமாக ஓட்டினான்"

" இப்பொழுது மகளின் முன்பு வந்த சுந்தரபாண்டியன், ஏன் வசு, அவரை பார்த்தால் கதை சொல்லுற போலவா இருக்கிறது?.

" சின்ன வயதில் இருந்து நீ பேசுறது மட்டும் சரி, நீ நினைப்பது மட்டும் தான் உண்மை என்கும் உன்னோட குணம் மாறவேண்டும் என்பதற்காக தான், உன்னை ஹாஸ்டலில் தங்கி படிக்க வைத்தோம்"

" ஆனால் கொஞ்சம் கூட உன் குணம் மாறவேயில்லை. சத்தியமூர்த்தி பக்கம் யோசிக்கணும்பானு, உன் அண்ணன் இத்தனை வருஷமா சொல்லிட்டே தான் இருக்கான்"

" நான் தான் மகளென்று வந்ததும் பொது தன்மையா யோசிக்காமல், சுயநலமாக உன் பக்கம் மட்டுமே, இத்தனை வருஷம் நியாயம் இருக்கென்று நினைத்து விட்டேன்"

" அது எவ்வளவு பெரிய தப்பு? என்பது இப்பொழுது தான் புரியுது"

" அந்த பையன் சொன்ன போல நீ நம்ப வேண்டிய அவசியமில்லை. ஆனால் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியணும்"

" சோ, நீ இங்கையே ரெஸ்ட் எடு. நானும் மைக்கேலும் போய் விஷயத்தை தெரிந்து கொண்டு வரோமென்க, அப்பா, நானும் வரேன்பா என வசு சொல்ல, எதுக்கு, அங்க வந்தும் நீ சொல்லுவது பொய், கதை கட்டுறனு சொல்வதற்கா என்று கேட்டார்"
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
463
சதூர்வேதமங்கலம்:

"சைலஜா பாட்டியின் செல்ஃபோனிற்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்டு,எழுந்து போய் எடுத்துப் பார்க்க,தனது கணவரிடம் இருந்து தான் கால் வருது என்பது தெரிந்து, அட்டென்ட் பண்ணியவர், ஹம் சொல்லுங்க?,இப்போ வசு எப்படி இருக்கா? என்று கேட்டார்".

"சைலு,உன் பக்கத்தில் யாராவது இருக்கிறார்களா? என்று சுந்தரபாண்டியன் தாத்தா அந்த பக்கமிருந்து கேட்க, ஆமாங்க என்க, ஹம்...சரி அப்படியே போன் எடுத்துக் கொண்டு கொஞ்சம் வெளியில வாம்மா என்றார்"

"ஓகே என்றவர் தற்செயலாக பேசிக்கொண்டே நடப்பது போல வீட்டிலிருந்து வெளியே வந்த சைலஜா பாட்டி,ஏங்க என்னாச்சிங்க?, வசுக்கு ஒன்னும் பிரச்சினை இல்லையே என்று பதற?,ஏய் ஏய் ஷைலு முதல்ல மனுஷனை சொல்ல விடுமா"

"இப்போ எதுக்கு நீ இப்படி பதறுர? நாங்க இப்போ சென்னையில் தான் இருக்கிறோம் என்றவர்,உன் கிட்ட ஒரு முக்கியம விஷயம் சொல்ல வேண்டும் சைலு என சுந்தரபாண்டியன் தாத்தா சொல்ல,ம்ம் சொல்லுங்க என்று கேட்டார்"

"நம்ப பொண்ணு வசுக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்று அவர் சொல்ல, ஓஓஓ அதுவா...இது தான் எனக்கு முன்பே தெரியுமே என்று, சுந்தரபாண்டியன் தாத்தாவின் தலையில் பெரிய குண்டை தூக்கி போட்டார் சைலஜா பாட்டி"

"என்ன உனக்கு தெரியுமா?? என்று அதிர்ந்தவர்,இதைப் பற்றி ஏன் இத்தனை வருஷம் நீ வாயவே திறக்கவில்லை சைலு என்று சுந்தரபாண்டியன் தாத்தா கோபப்பட, நீங்க மட்டும் எல்லாத்தையும் என்கிட்ட சொல்லிட்டு தான் பண்ணீங்களா? என்று திருப்பி கணவரிடம் கேட்க, அதற்கு நீயும் அப்படியே இருப்பதா என்று கோபப்பட்டார்"

"ஏங்க தாய்க்கு தெரியாதா பொண்ணை பற்றி?,தாய் அறியாத சூல் எதாச்சும் பொண்ணு கிட்ட உண்டா? என்றார்".

" இல்லை தான் மா. அதற்காக நீ ஏன் இத்தனை வருஷமும் என் கிட்ட இதை பற்றி பேசவில்லை சைலு? என்க, சொல்லியிருந்தால் என்ன பண்ணியிருப்பீங்க?,ஹம் சொல்லுங்க"

"வசு கன்சீவாக இருப்பது தெரிந்து நீங்க என்ன பண்ணுனீங்க?, ஞாபகம் இல்லையா என வார்தையில் கணவரை வறுத்தெடுக்க, அய்யோஓஓஓ"

"அப்போ இருந்த சூழல் அப்படி சைலு. எந்த அட்ரஸும் இல்லாதவன் குழந்தையை எப்படி சுமக்க சொல்ல முடியும் சொல்லு?

" இதுக்கு காரணமானவனை பற்றி கேட்டாள்,மொட்டையா சத்தியமூர்த்தி சன் ஆப் சந்திரன்,ஊர் திருச்சி. இதை தவிர உன் பொண்ணுக்கு ஒரு மண்ணும் தெரியவில்லை"

"காலேஜ்ல போய் நேரடியாக விசாரிக்க முடியாமல், ஆள் வைத்து விசாரித்தேன். அவங்க குடுத்த அட்ரஸ்,சென்னையில் இருக்கும் லோக்கல் கார்டியனுடையது".

"நானும் அவர்களிடம் போய் விசாரிக்க,கடந்த ஆறு மாதமாக சத்தியமூர்த்தி பற்றி எதுவும் தெரியவில்லையென்றும், திருச்சியில் இருக்கும் இன்னொரு நண்பருக்கு, தெரிந்தவரின் மகன் தான் அவனென்றும், அவர் கேட்டதால் மட்டும் தான் என் அட்ரஸை கொடுத்தேன்னு சொல்லிட்டார்"

"அந்த நேரம் பார்த்து நீயும் திருத்தணிக்கு யாத்திரைக்கு போயிருக்க,வேறு வழியின்றி, உன் கிட்ட கூட உண்மையை சொல்லாமல்,குழந்தை பற்றி மறைத்து, ஆசிரமத்தில் குடுத்துட்டு வந்தேன்"

" நடந்தது தான் உனக்கு தெரியுமே என்று சுந்தரபாண்டியன் தாத்தா சொல்ல,சரி இப்போ எதற்கு இந்த விஷயமென்று சைலு பாட்டி கேட்க, இன்னைக்கு ஏர்போர்ட்டில் சத்தியமூர்த்தியை சந்தித்தோமென்றார்".

"என்னங்க சொல்லுறீங்க என்று சைலு பாட்டி அதிர,ஆமாம்மா என்றவர். பிறகு நடந்ததை எல்லாம் சொல்லி முடித்தவர்
இனி நம்ப பொண்ணுக்கும், பேத்திக்குமான அங்கீகாரத்தை வாங்கி கொடுத்து விட்டு தான் எனக்கு மறு வேலை என்றவர், சரி சொல்லு என்ன நீ சொல்ல வந்த என்றார்".

" வசுவை விட,அம்முக்கு தான் வலி அதிகம். ருத்ரன் என்ன பேச்சுலாம் நம்ப பேத்தியை பேசியிருக்கான் தெரியுமாங்க? என்றவாறு கதறி அழ, அந்த நேரம் தங்கையை தேடி வாசலுக்கு வந்த கிரிஜா பாட்டிக்கு, தூரத்தில் தன் உடன் பிறந்தவள் அழுவது தெரிந்தது"

" சைலூஊஊ என வேகமாக அங்கே வந்தவர், திரும்பி நின்று பேசிக்கொண்டிருக்கும் தங்கையின் தோளை தொட,அழுதவாறு சைலு பாட்டியும் திரும்பி பார்க்க, அங்கே தனது அக்கா நிற்பதை கண்டவர், மேலும் அழுதார்".தங்கையின் கையிலிருந்து போனை வாங்கி ஹலோ சொல்ல,ஹம் அண்ணி நான் சுந்தரபாண்டியன் தான் என்றார்"

" நீங்களா என்றவர்,என்ன சொன்னீங்க?,என் தங்கச்சி இப்படி அழறாளென்று கோவமாக கேட்க, எங்க தலையெழுத்துங்க வேற என்னத்தை சொல்லுவேனென்று, அவரும் அழுவது கிரிஜா பாட்டிக்கு புரிந்தது"

"நீங்க வைங்க, பிறகு அவளிடம் பேசுங்களென்று லைனை கட் பண்ணியவர், சைலு, சைலு அக்கா இருக்கேன்"

" எதுக்கு இப்படி அழுறமா என்று கேட்டு அவரும் வருத்தப்பட, கிரி கிரி என் தேம்பியவரை கண்டவர், நீ இங்கையே இரு. நான் இதோ வரேனென்று சொல்லி உள்ளே போக,அந்த நேரம் சிம்ஹன் தாத்தா வெளியே வர, எண்ணங்க, மலர் கிட்ட சொல்லி தண்ணீர் எடுத்து வர சொல்லுங்களென்று குரல் கொடுத்தார்".

"தனது அறையிலிருந்த ஜன்னல் வழியாக இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ருத்ரன் என்னவா இருக்கும் என்று யோசனையோடு வெளியே வர, மலரிடமிருந்து தண்ணீர் கிளாஸ் வாங்கிக் கொண்டு, சிம்ஹன் தாத்தா தனது மனைவி இருக்கும் இடத்தை நோக்கி சென்றார்"

" கணவரிடமிருந்து தண்ணீர் கிளாஸை வாங்கிய கிரிஜா பாட்டி, தனது தங்கையிடம் கொடுத்து முதல்ல இதை குடி சைலு.எதா இருந்தாலும் பேசிக்கலாம் என்க, அவரும் வாங்கி குடித்து விட்டு அமைதியாக இருந்தார்"

"என்ன பாப்பு ஆச்சு என சிம்ஹன் தாத்தா கேட்க, என்னத்தை மாமா சொல்றது என்று சொல்லி, மீண்டும் கதறி அழுதார்"

" ஃபர்ஸ்ட் அழுகையை நிறுத்து.என்ன நடந்தது என்று சொல்லுமா? அப்பதானே அதுக்கு தகுந்த போல நாம ஏதாவது முடிவெடுக்கலாம் என்று அவர் கேட்க,நான் பெற்றது ஒரு பொண்ணு"

"அது வாழ்க்கை இப்படி அந்தராசியில் நிற்கிறது மாமா என்று, தனது தலையில் அடித்துக் கொண்டார்"

" வசுக்கு என்னாச்சி பாப்பு என இருவரும் பதற,என்னத்தை கா இந்த பாவி சொல்லவென்று அழுது கொண்டே சொல்ல,சரிடி நீ முதல்ல அழுகையை நிறுத்துடி"

" எங்களுக்கு நீ எதுவும் சொல்ல வேண்டாமென்ற கிரிஜா பாட்டி, சரி வா உள்ளே போகலாமென்று தங்கையை அழைத்துக்கொண்டு வீட்டின் உள்ளே சென்றார்"

களுத்துறை:

"ஆதுவின் கேள்வியில் கண்ணீரோடு ராகினி கீழே குனிந்து கொண்டாள்".

" ம்ம் பதில் சொல்லுங்க மிஸ் ராகினி?,என் மேல உங்களுக்கு ரொம்ப ரொம்ப நல்ல எண்ணம் போல, இதை நினைக்கவே அப்படியே உடம்பெல்லாம் எனக்கு புல்லரிக்குது என்றான்"

" நீங்க தானே இந்த பொண்ணை கல்யாணம் பண்ண இஷ்டம் இல்லையென்று சொன்னீங்க என கோவமாக ராகினி கேட்க,ஆமாம்டி நான் சொன்னேன் தான்"

" ஏன் இப்பவும் சொல்லுறேன், உன்னை கல்யாணம் பண்ண எனக்கு இஷ்டம் இல்லை தான் என்றான்"

" அதைக்கேட்டவள் மேலும் அழுக, அடியேய் மக்கு,இன்னும் உன்னை புதுசா கல்யாணம் பண்ண என்னடி இருக்கு?

"என்னைக்கு உன் கிட்ட என் காதலை சொன்னேனோ, அப்பவே உன்னை என் பொண்டாட்டிய நினைச்சு தான் சொன்னேன்"

" என்ன ஊர் உலகம் வழக்கபடி உன் கழுத்துல மூணு முடிச்சு போடலை. அது தான் உனக்கு குறையா இருக்கு இல்லையா? என்று ஆது கேட்க, அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை என்று தலையசைத்தாள்"

" பின்ன வேற எப்படி டி?.எதுக்கு இப்படி ஒப்பாரி வச்சுக்கிட்டு இருக்க என்பதை சொல்லுடி?

" நியாயமாய் ஒப்பாரி வைக்க வேண்டியது நான் தான். நீ உன் மாமா, அண்ணன்காரனும் சேர்ந்து கிட்டு, நேற்று இருந்து எனக்கு எவ்வளவு பீதியை கிளப்பி இருக்கீங்க தெரியுமாடி? என்று ஆது கோபப்பட இப்பொழுது ராகினிக்கு சிரிப்பு வந்தது"

" ஏண்டி ஒரு மனுஷன் எவ்வளவு வருத்தப்பட்டு பேசுறேன். நீ சிரிக்கிறியே என்று ஆதவன் பல்லை கடித்தான்"

" சரி சிரிக்கல. இப்ப என்ன பண்ணனும் சொல்லுங்க? என்று கேட்டாள். ஓ நான் என்ன சொன்னாலும் செய்வியா என்று விஷமமாக ஆதவன் கேட்க, என்னால் முடிந்ததை செய்வேனென்று ராகினியும் சொன்னாள்"

" சரி கிட்ட வா என ஆது சொல்ல, பக்கத்தில் தான் நிற்கிறேன்.நான் ஒன்னும் பாகிஸ்தானில் நிற்கவில்லையே என்று ராகினி சொல்ல, நல்லாவே பேசுற டி நீ என்றவன், முதல்ல நான் சொன்னதை செய்யுடி என்றான்"

" என்ன இந்த மனுஷன் ஓவரா டி போடுறாரு என்று மனதிற்குள் திட்டிக் கொண்டவள், எதிர் வீட்ல நிக்கிறவங்களாம் பாக்குறாங்க பாருங்க என்று, அந்த வீட்டிற்கு எதிர்ப்புறத்தில் இருக்கும் வீட்டை எல்லாம் ராகினி சுட்டிக்காட்டி சொல்ல, இந்த அறிவு உனக்கு முன்னாடியே வேலை செய்யவில்லையா? என்று கேட்டான் ஆதவன் என்னும் ஆது"

" ஆட ஆண்டவனே, எந்த பால் போட்டாலும் இந்த மனுஷன் சிக்சர் அடிக்குறாரே என்று முணு முணுத்தவள், அங்கிருந்து ருமிற்குள் செல்ல, ராகினி என்றவாறு ஆலிஸும் அங்கே வந்தார்"

" அத்தை என்க, வாமா என அவளை ஹாலிற்கு கூப்பிட்டு போனவர், அங்கிருந்த சோபாவில் உட்கார வைத்தார்.இவர்கள் பின்னாடியே ஆதுவும் அங்கு வந்து உட்கார்ந்தான்".

" ராகினி- ஆது கல்யாண தேதி முடிவு பண்ணனும்.அடுத்த மாதத்தில் ரெண்டாவது வாரத்தில் முகூர்த்தநாள் வருது. அதை பிக்ஸ் பண்ணிடலாமா? என ஜேம்ஸ் கேட்க, ஆதுவோ வேண்டாமென்றான்".

" ஏனென்று ஆனந்த் கேட்க, கல்யாணத்துக்கு எல்லாரும் வரணுமா? இல்லை நானும் பொண்ணு மட்டும் போதுமா? என்றவாறு தந்தையை முறைத்துக் கொண்டே ஆது கேட்க, எல்லாரும் தான் வரணும் என்று சொன்னார்"

" எப்படி வருவாங்க? அவங்க மூன்று பேரும் இந்தியால இருக்காங்க. ஆர்கலிக்கு டெலிவரி முடிந்து தான் வீரா இங்கே வருவான்".

" எனக்கு தெரிந்து இன்னும் ஒன் வீக் குள்ள சிங்கமும், கிரியும் இங்கே வர வாய்ப்பு இருக்கின்றது.அவங்க வந்த பிறகு முடிவெடுக்கலாம் என்க, ஆமாம் பா"

"இதும் யோசிக்க வேண்டியது தான்.அத்தை-மாமா,வீரா இல்லாமல் பண்ண முடியாது என்று ஆனந்த் சொல்ல, மற்றவர்களும் ஆம் என்றார்கள்".

"சரி அடுத்த காரியத்தையும் முடிச்சிடலாமென்று ஜேம்ஸ் சொல்ல, என்ன காரியம் மாமாயென்று ரஞ்ஜன் கேட்க, வாங்க என்று சொல்லி விட்டு, எழுந்து வெளியே சென்றார்"

ஆர்கலி எங்கே...?
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top