• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
இலங்கை-இரத்தினபுரி:

சோபாவில் உட்கார்ந்திருந்த ருத்ரனோ தனது கையில் கட்டியிருந்த வாட்சை பார்த்து விட்டு,கிச்சனிற்குள் சென்ற நண்பனுக்காக காத்திருக்க,மேலும் சில நிமிடங்கள் கடந்து சென்றது தான் மிச்சம்".

"கிரிஜா பாட்டியும்,ஆதுவும் இந்த ஜென்மத்தில் வெளியே வருவது போல தெரியவில்லை".ஆது என்று பல்லை கடித்துக் கொண்டு எழுந்தவன்,கிச்சனிற்குள் சென்று பார்க்க,கொலை வெறி வந்தது".

" அங்கே டைனிங் டேபிளின் மேல ஆது உட்கார்ந்திருக்க,ஒரு கையில் லட்டுவையும்,இன்னொரு கையில் ஜூஸ் டம்ளரோடு கண்ணா இன்னும் கொஞ்சமென்று,கிரிஜா
பாட்டி ஆதுக்கு ஊட்டிக்கொண்டிருந்தார்".

" பாட்டிஈஈஈஈ என்று ருத்ரன் கத்த,இதோ முடிஞ்சிட்டு வீரா என்றவாறே திரும்பியவர்,ஆது கண்ணா போதுமாப்பா".

" போதும்டா கிரி, இங்கு பாரு வயிறு எப்படி இருக்கென்க,வளருர புள்ளைப்பா என்றவர்,நல்லபடியா போய்ட்டு வாங்க என்கவும்,ருத்ரனோ,அடேய் இந்த அக்கிரமத்தையெல்லாம்,சத்தியமா என்னால் பாக்க முடியலைடா என்றான் ".

" பின்ன என்ன வெங்காயத்துக்குடா பாக்குற?என்ற ஆதவன், சரிடா கிரி டைமிங்குக்கு சாப்பிடு, ஈவ்னிங் நாம ஷாப்பிங் போகலாம்".

" ச்சூஊஊஊஊ முடியலை சாமியென்று ருத்ரன் சொல்ல,போதும் கிரி,அவனுக்கு காண்டு ஏறுது என்றபடியே அங்கிருந்து நண்பனிடம் வந்தவன்,டேய் வாடா என்க,ம்ம் என்றவாறே இருவரும் கிளம்பினர்".

" காரை ஓட்டிக்கொண்டிருந்த ருத்ரனோ,இந்த லோன் நமக்கு கிடைச்சிடும் தானே ஆது?, கண்டிப்பாடா வீரா".

"ம்ம் உள்ளுக்குள் கொஞ்சம் நெர்வசா இருக்குடா என்ற ருத்ரனின் தோளை தட்டியவன்,நம்ப ஆனந்து இருக்கும் போது எதற்கு கவலை?".

"அரை மணி நேரம் பயணத்தில், இருவரும் பேங்கிற்குள் வந்து சேர்ந்தனர்".அங்கிருந்த அட்டெண்டரிடம் மேனேஜர் வந்து விட்டார்களா?என்க,வந்துட்டாங்க சார்".

"உள்ளே ஒரு கிளையன்ட் கூட பேசிட்டு இருக்காங்க என்கவும்,ஆதுவும் சரிங்கண்ணா என்றான்".

" சிறிது நிமிடங்கள் கடக்க,பெல் சத்தம் கேட்டு அட்டென்டர் உள்ளே சென்ற சில நொடியில் இவர்களிடம் வந்தவர்,தம்பி,சார் உங்களை வரச்சொல்லுறாங்க".

" இருவரும் கதவை தட்டி உள்ளே சென்றவர்கள்,அங்கிருந்தவரை பார்த்து,இவர் எப்போடா வந்தாரென்று ருத்ரன் கேட்க,ஆதவனோ தெரியலைடா என்றான்".

" வாங்க மிஸ்டர்ஸ் ருத்ரன் அன்ட் ஆதவன் என்று மேனேஜர் சொல்ல, மரியாதை நிமித்தமாக இருவரும் குட் மார்னிங் சார் என்றனர்"

" குட் மார்னிங் என்று சொல்லியவர், யங் மேன்ஸ் உட்காருங்கள் என்றவாறு அங்கிருந்த சேரை காட்டினார்".

"தேங்க்யூ சார் என்றபடி இருவரும் அங்கிருந்து சேரில் உட்கார்ந்து கொண்டு,பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஆனந்தனை முறைத்தனர்".

" இருவரையும் பார்த்து கண்ணடித்தவர்,எப்படி என் சர்ப்ரைஸ் என்க,ருத்ரனோ உங்க சர்ப்ரைஸில் ஆசிட்டை ஊத்த என்றான் ".

" ஹி ஹி ஹி என்று ஆனந்தன் சிரித்தார்".

" ஏம்பா,ஆனந்த் சாரை தெரியுமென்று ஒரு வார்த்தை நீங்கள் சொல்லியிருக்க கூடாதா?,சார் எங்க பேங்க்குடைய பெரிய கஷ்டமர் என்று மேனேஜர் சொல்ல,அதற்கு ருத்ரனும், ஆதவனும் நல்லது சார் என்றனர்".

" பின்னர் ஃபைலை குடுங்கப்பா என்க,கையிலிருந்த ஃபைலை மேனேஜரிடம் ஆதவன் நீட்ட,அதை வாங்கிய மேனேஜர் படிக்க தொடங்கினார்".

" இங்க வரணு ஏன் சொல்வில்லை? என்று ருத்ரன் கேட்க,இந்த பக்கம் பிஸ்னஸ் விஷயமாக ஒரு மீட்டிங் இருந்துச்சி வீரா,அதை முடிச்சிட்டு இந்த வழியா வரும் போது தான்,உங்க லோன் விஷயம் ஞாபகம் வந்துச்சி, அதான்".

" ஓஓஓஓ,இதை நம்பலாமா என்று ஆதவன் பல்லை கடித்து கேட்க,அறிவு கெட்டவனே,அப்பன் சொல்றத கொஞ்சமாவது நம்புடா என்றார் ஆனந்தன்".

" லுக் மிஸ்டர் என்ற குரல் கேட்டு, இருவரும் மேனேஜரை பார்க்க,உங்க டாக்குமெண்ட்ஸ் எல்லாம் கிளியரா இருக்கின்றது".

" போதாதற்கு,இவ்வளவு பெரிய மனுஷனே உங்களுக்கு சூரிட்டி தரும் போது வேற என்ன வேண்டும் என்றவர்,இன்னும் ஒன் வீக்ல,உங்கள் லோன் சேங்க்ஷன் ஆகிவிடுமென்றார்".

"மேனேஜர் சொன்னதை கேட்ட இருவரும்,தேங்க்யூ தேங்க்யூ சோ மச் சார் என்க,வித் மை பிளசர் என்றவர், பிஸ்னஸில் பெரிய ஆளா வாங்க".

"எங்களோட பேங்கிலே,உங்கள் டிரான்சாக்க்ஷனை வைக்கணுமென்று சொல்ல,அதற்கு நண்பர்கள் இருவரும் நிச்சயமாக சார்.அதில் எந்த மாற்றமும் இல்லை என்றனர் ".

"பின்னர் அவரிடம் சொல்லிக்கொண்டு,இருவரும் வெளியே வந்து காரில் வெய்ட் பண்ண,சிறிது நிமிடங்கள் சென்று ஆனந்தனும் அங்கு வந்தார்".

"பின் பக்க கதவை திறந்து உள்ளே ஏறியவர்,அடேய் தடிமாடுங்களா உடனே திரும்பி பார்க்காதீங்க".

"அந்த ரைட் சைடுல நிக்கிற கருப்பு நிற கார்ல தான்,பேங்க்கில் கொள்ளையடிக்க வந்தவனுங்க இருக்கானுங்க".காலையில் தான் இன்ஃபர்மேஷன் வந்தது,அலார்ட் பண்ண தான் நான் வந்தேன்".

"நீங்க ரெண்டு பேரும் நேரா வீட்டுக்கு போகாமல்,நம்ப கிளையண்ட் மீட்டிங்கை அட்டென் பண்ணுங்க".

"இன்னும் நீ அன்டர்கிரவுண்ட் ஆபிசராதான் இருக்கியாப்பா?என்று ஆது கேட்க,சொந்த பிரச்சினைக்கெல்லாம் எனக்கு பிடித்த இந்த வேலையை ஒரு போதும் என்னால் விட முடியாது என்ற ஆனந்தனை முறைத்தவன்,உன் வேலையால் தான் என் அம்மாவை நான் இழந்தேன் பா".

சென்னை:

"கெஸ்ட்ஹவுஸிற்கு நள்ளிரவிற்கு மேல் தான் வசுந்தராவும்,மைக்கேலும் வந்து சேர்ந்தனர்". இங்கு வருவதாக ஃபோன் பண்ணி சொல்லியதால்,வீட்டை பாதுகாக்கும் நடுத்தர வயது தம்பதியினர், வசுந்தராவிற்காக காத்திருந்தனர்.

"இருவரும் வசுவிடமும், மைக்கேலிடமும் நலம் விசாரித்து விட்டு,அவர்கள் தங்கியிருந்த அறைக்குள் சென்று படுத்தனர்".

மைக்கேல் ஹாலிலே படுத்து விட, வசுந்தரா அவரது அறைக்குள் சென்று படுத்தாலும், சிறிதும் உறக்கம் வந்த பாடில்லை".கடந்து சென்ற பல நினைவுகள் கண்ணீரில் கரைய,அந்த இரவோ விடியல் வரை வசுவிற்கு தூங்கா இரவாய் கழிந்தது".

"ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து போய் குளித்து முடித்தவர் டிரஸை மாற்றிக்கொண்டு,தயாராகி வெளியே வர,கிச்சனில் இருந்து வந்த வேலையாள்,வசும்மா காஃபி என்றார்".

" கொண்டு வாங்கக்கா என்றவாறே அங்கிருந்த சோஃபாவில் போய் உட்கார,வசுவிற்கு காஃபியை கொண்டு வந்து நீட்ட,நீங்க அக்கா என்கவும் இப்பொழுதுதான் குடிச்சேன் மா,நீ குடி என்று சொல்லி சென்றார்".

மைக்கேலும் அங்கு வர,அண்ணா நாம கிளம்பலாமா என்க,நேரம் ஆறு தான் ஆகுதும்மானு மைக்கேல் சொல்ல,சரிணா என்ற வசுவும், தனது ரூமிற்குள் சென்றவருக்கு இன்று என்று பார்த்து,நேரம் என்னவோ மிகவும் பொறுமையாக போவது போலவே இருந்தது".

" தனது கையில் இருந்த வாட்சில் அவ்வப்போது,மணியை பார்க்கவும் தவறவில்லை.சிறிது நிமிடங்கள் சென்று வசுவின் ரூம் கதவு தட்டும் சத்தம் கேட்டது".

"சேரிலிருந்து எழுந்து போய் கதவை திறக்க,வேலையாளோ வாம்மா சாப்பிடலாம்மா என்க,வேண்டாம்கா என்றார்".

" வசு,உடம்புக்கும் தெம்பு வேணும் என்று மைக்கேல் சொல்ல, அமைதியாக வந்து உட்கார்ந்தவர், வேலையாள் பரிமாறிய டிபனை சாப்பிட ஆரம்பித்தார்".

" இருவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு, அங்கிருந்தவர்களிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினர்".

" அம்மாடி வசு,ஃபாதர் அகஸ்டினோட லெட்டர்ல ஆர்கலி எந்த இடத்துல வேலை பார்க்கிறது என்பதை பற்றி, எதுவுமே எழுதவே இல்லை".

"ஆனால்,தி-நகர்ல தங்கியிருந்ததாக எழுதி இருக்காரு.அப்போ அது பக்கத்துல தான் ஏதோ ஒரு ஏரியாவுல குடியிருக்கலாம் இல்லையா?என்று, கார் ஓட்டிக்கொண்டே மைக்கில் கேட்க,நானும் அதைப்பற்றி தான்ணா இவ்வளவு நேரமாக யோசித்துக் கொண்டே வருகிறேன்".

"ஒன்னு பண்ணலாமாணா, என்னுடைய பிரண்டு ஒருத்தி,இங்க இருக்கிறாள்.லாஸ்ட் டைம் கூட நம்ம வீட்டுக்கு பேமிலியோடு வந்தாளே என்று சொல்ல,அந்த தேவி அம்மாவாமா? வசு".

" ஆமாணா,தேவி கிட்ட வேண்டுமானால் உதவி கேட்டு பாக்கலாமா என்று சொல்லிய வசு,பிறகு வேணாம்ணா,அப்போ ஆர்கலியை பற்றி ஏன்?,எதுக்கென்ற கேள்விகள் அவளிடமிருந்து வருமென்று சொல்ல,நீ சொல்வதும் சரிமா.நாம தி-நகர் கிட்டயே போய் பார்க்கலாமே என்க,ஓகேணா என்ற பின்னர் அவர்கள் கார் தி- நகரை நோக்கிச்சென்றது".

" கீழ்பாக்கம் மெடிக்கல் காலேஜை தாண்டி,ஷார்ட் ரூட்டில் கார் சென்று கொண்டிருக்க,கண்ணுக்கெட்டிய தூரம் வரை அந்த ரோட்டில் யாரும் தென்படவில்லை".

" கார் வலது பக்கம் திரும்பி செல்லும் போது,சில அடி தொலைவில் யாரோ ரோட்டோரம் விழுந்து கிடப்பது தெரிந்தது".

" அம்மாடி வசு,யாரோ ஒரு பொண்ணு மயங்கி கிடக்குதும்மா என்று மைக்கேல் சொல்ல,சுற்றி முற்றும் பார்த்தவர்,அண்ணா உங்க கன் இருக்கு தானே என்க,ம்ம் டேஸ் போர்டில் தான் இருக்கு வசு".

" யாரையும் இந்த காலத்தில் நம்ப முடியாது என்றபடியே,காரை ஓரமாக நிறுத்தி விட்டு,டேஸ்போர்டை திறந்து அதில் இருந்த கன்னை எடுத்து தனது இடுப்பில் சொருகிக்கொண்ட மைக்கேல்,கதவை திறந்து இறங்கியவர்,அந்த பெண்ணை நோக்கிச் சென்றார்".

"அருகில் போய் சுற்றி பார்த்தவர்,பின்னர் கீழே குனிந்து மயங்கி இருப்பவளின் முகத்தை திருப்பி,வசூஊஊஊ என்று அதிர்ந்தார்!".

"காரில் உட்கார்ந்து கொண்டு, நடப்பவைகளை பார்த்துக் கொண்டிருந்த வசு,மைக்கேலின் குரலை கேட்டு வேகமாக கதவைத் திறந்து அங்கே போய் பார்த்து விட்டு, ஆர்கலி என்று கத்தினார்".

"அய்யோ வசு,நெத்தில ரத்தம் வந்துட்டு இருக்கு,உடனே ஹாஸ்பிட்டலுக்கு கூப்பிட்டு போகணும்மா என்று மைக்கேல் சொல்லிக்கொண்டே ஆர்கலியை குழந்தையை போல தனது கையில் தூக்கிக்கொண்டார்".

" பின்னர்,அம்மாடி வசு அந்த ஹேண்ட்பேகை எடுத்துக்கிட்டு போய் சீக்கிரம் கதவை திற என்க,மைக்கேல் சொன்னதை போல வசுவும் செய்ய, காரின் பின் இருக்கையில் ஆர்கலியை படுக்க வைத்தவர்,பக்கத்தில் எதாவது ஹாஸ்பிட்டல் இருக்கானு கூகுளில் பாரென்றபடியே காரை ஓட்டினார்".

"அண்ணா,என் பொண்ணை இந்த நிலமையிலா நான் பார்க்கணுமென்று,வசுந்தரா கதறி அழுதார்".

" வசு பயப்படுற அளவிற்கு ஒன்றும் இல்லைனு சொல்லிக்கொண்டே, இரண்டு பக்கமும் ஹாஸ்பிட்டல் ஃபோர்டு எதாவது தென்படுகின்றதா? என பார்த்துக்கொண்டே காரை ஓட்டிச்செல்ல,நூறடி தூரத்தில் கே.கே. மருத்துவமனை என்ற ஃபோர்டு கண்ணில் பட்டது".

"ஹாஸ்பிட்டல் உள்ளே போய் காரை நிறுத்தியவர்,கதவை திறந்து இறங்கி,வேகமாகச் சென்று ரிசப்ஷனில் உள்ளவரிடம் விஷயத்தை சொல்ல,அவரோ அட்டென்டரை அனுப்பி வைத்தார்".

" ஆர்கலியின் நெற்றியில் ரத்தம் வருவதை பார்த்தவர்கள்,சார் இது போலிஸ் கேஸென்று சொல்ல,பல்லை கடித்த வசு, அவர்களை பார்த்து தான் யாரென்று சொல்ல,ஆர்கலிக்கு உடனடியாக முதலுதவியை ஆரம்பித்தனர்".

" வசு அழாதம்மா, நம்ப பாப்பாக்கு எதுவும் ஆகாதென்று சொல்லியவர், நான் கார் பார்க்கிங்கில் இருக்கேன்".

" எதா இருந்தாலும் உடனே கால் பண்ணு,வண்டி வேற வழியிலே நிறுத்திட்டு வந்துருக்கேனென்று மைக்கேல் சொல்ல,சரிணா. நீங்க போங்க,எதாச்சும் தேவையென்றால் நான் உடனே ஃபோன் பண்ணுறேன் என்றார்".
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
பொள்ளாச்சி:

"இமைக்க மறந்து தன்னவளை ரசித்தவன்,யாரோ தொண்டை செருமும் சத்தம் கேட்டு நிகழ்விற்கு வந்தான்".

" கீதா எல்லாருக்கும் டீயை கொடுமாயென்ற வள்ளி, சின்னம்மா இந்தாங்க என்று,கண்ணம்மா பாட்டியிடம் தூக்குவாளியை நீட்டினார்".

" அதை வாங்கியவர்,மூடியை திறந்து,உள்ளே பதமாக கரைத்து எடுத்து வந்த ரவா கஞ்சியை,டம்ளரில் ஊற்றி குடித்தவர்,என்னத்தா வள்ளி, சூரியன் மேற்கே மறைய போறான், இப்போ போய் டீ வாளிய தூக்கிட்டு வந்திருக்க?".

" பாட்டியின் பேச்சை கேட்டவன்,ம்ம் காள மாட்டுக்கு பல்லு வலி அதான் நேரமாகிட்டென்று வெற்றி சொல்ல,அதை புடுங்கி தூரமாய் கடாச( எறிவது) வேண்டிதானேயென்றார் ராக்கம்மா பாட்டி".

"ஜனனியோ,இங்கு நடப்பதை எதுவும் கண்டு கொள்ளாமல்,டீ குடிப்பதே தனது தலையாய கடமையென்றிருந்தாள்".

" மேலும் சிறிது நிமிடங்கள் செல்ல,வேலையாட்கள் எழுந்து போய், வயலில் இறங்கி மீண்டும் வேலையை தொடங்கினர்".

" அத்தை வா வீட்டுக்கு போகலாமென்று வெற்றி சொல்ல, இன்னும் கொஞ்சம் நேரம் போகட்டும் சாமி,நான் போய் வீட்டுக்கு கொஞ்சம் கீரை பறிச்சிட்டு வரேனென்னு சொல்லிய வள்ளி,அங்கிருந்து சென்றார் "

" கையில் மண்வெட்டியோடு வாய்க்காலில் இறங்கிய வெற்றியோ, வயலுக்கு தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த மடையை,மீண்டும் மண்ணை வெட்டி மூடி விட்டு,வேலையாட்கள் அங்கங்கே குமித்து வைத்திருந்த களைகளை கூடையில் அள்ளிப்போய் வரப்பில் கொட்டினான்".

" இடுப்பு ஒடிய செஞ்சவளுங்களுக்கு, இது பண்ண தெரியாதாக்குமென்று ராக்கம்மா பாட்டி சொல்ல,இங்க பாரு கிழவி ஒரு நாளைக்கு உனக்கு கச்சேரி இருக்கென்று வெற்றி பல்லை கடிப்பது கண்டு,மற்றவர்கள் சிரித்தனர்".

" மதியம் ஒரு மணி சங்கு ஊதும் போது,பாதி வயல் வேலை முடிந்திருந்தது".

" அடியேய்..,வயித்துக்கு நாலு அள்ளி போட்டு வந்து வேலைய பாருங்க என்றவாறே ராக்கம்மா பாட்டி வேலையை செய்ய,நீயும் வா ராக்கு என்று கண்ணம்மா பாட்டி கூப்பிட, சம்பந்தி மேல ரொம்ப கரிசனம் தான் போல என்றார் இன்னொரு பாட்டி".

" இருக்காதா பின்வென்று சொல்லி கண்ணம்மா பாட்டியும் சிரித்தார்".

" பின்னர்,வேலை செய்தவர்கள், பக்கத்தில் இருந்த வாய்க்கால் தண்ணீரில் கை கால்களை கழுவி விட்டு வரப்பில் ஏறி,களத்து மேட்டில் வைத்திருந்த உணவு வாளியை நோக்கிச் சென்றனர்".

" அவரவர் வீட்டில் என்னென்ன எடுத்து வந்துருக்கீங்க என்று கேட்டுக்கொண்டே,வாளியை திறந்தவர்கள் பகிர்ந்து சாப்பிட,அங்கே நடவு வயலில் ஆட்களோடு,வெற்றியும் அண்டை வெட்டிக்கொண்டிருந்தான்".

" சொத்துக்கு வாரிசு,சேத்துல கிடக்கேயென்று கண்ணம்மா பாட்டி சொல்ல,உடையவன் பொருளை பாக்கலைனா,உழக்கு கூட மீறாதென்றார் இன்னொரு பாட்டி".

" கீழே குனிந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த தோழியை பார்த்த கீதா,ஏண்டி,உன்னை தானடி அண்ணா பார்க்குது,அது தெரிஞ்சும் இப்படி மூஞ்ச தூக்கி வச்சிக்கிட்டு எவளுக்கோனு இருந்தால் என்ன அர்த்தமென்றாள்".

"அதற்கு ஜனனியோ,எவனையும் என்னை பாருடானு நான் இங்கே நிக்கலையே".

" இன்னுமாடி அதையே நினைச்சிட்டு இருக்க?".

" வருஷம் போய்ட்டுடி, இப்போ அண்ணன் மனசுலையும் நீ தான் இருக்கடி ஜனா,அது ஏன் உனக்கு புரியலை?என்று மீண்டும் தோழியிடம் கீதா கேட்க, நிமிர்ந்து பார்த்த ஜனனி, இப்போ நான் சாப்டணுமா?,இல்லை இதை வயல்ல கொட்டணுமா? சொல்லென்றாள்".

" நல்லா கொட்டிக்க என்ற கீதாவோ,வேகமாக சாப்பிட்டு விட்டு அங்கிருந்து எழுந்து சென்றாள்".

" கோவமாக போகும் தனது தோழியை ஒரு கணம் நிமிர்ந்து பார்த்த ஜனனி, மீண்டும் சாப்பிட தொடங்கினாள்".

" கீரை பறிக்க சென்ற வள்ளியும் அங்கு வந்து நின்று,வெற்றி வெற்றி என்று குரல் கொடுக்க,இதோ வந்துடுறேன் அத்தை என்று சொல்லிக் கொண்டே வேலை செய்து கொண்டிருந்தான்".

" இவ்வளவு நேரம் கீழே குனிந்து கொண்டே வேலை செய்த அசதியால், மர நிழலில் தனது முந்தானையை கீழே விரித்து,சில பெண்கள் படுத்துக் கொண்டனர்".

" கண்ணம்மா பாட்டியும்,ராக்கம்மா பாட்டியும் வெற்றிலையை போட்டு எழுந்தவர்கள்,அடியேய் குமரிங்களா எந்திரிங்கடி,இப்ப தான் போட்டி போட்டு படுத்திருக்காளுங்க என்றனர்".

" ம்ம்ம் என்றாலே,இந்த காலத்து குமரிங்க இடுப்பை புடிச்சிக்கிறாளுங்க,அப்பல்லாம் இப்போ இருப்பது போல ஏது பஸ் வசதி?

"வயல்லையே நடந்து போய் நெல்லு அரைச்சிட்டு வந்து சமைச்சு சாப்பிடணும்,அந்த காலத்தில் நாங்க செய்யாத வேலையா?என்றார் கண்ணம்மா பாட்டி".

"இந்த கிழவிகளுக்கு வேற வேலையே கிடையாது?".

எப்போ பார்த்தாலும் அந்த காலத்தில் அதை செஞ்சேன் இந்த காலத்தில் இத செஞ்சேன்னு புலம்பறதே வேலையா இருக்கு

"அந்த கடவுள் ரெண்டுத்துக்கும் உடம்பை இரும்புல செஞ்சானா?என்னனு தெரியலையே என்று,நடுத்தர வயது பெண்மணி ஒருவர் சொல்ல,இந்த ரெண்டும் வைரம் பாய்ந்த தேக்குடி என்றார் கண்ணம்மா பாட்டி".

" போதும்டி ஆத்தா,எந்திரிங்கடி வேலையை முடிக்கலாம் என்று சொல்லிக்கொண்டே,பாட்டிகள் இருவரும் முன்னே நடந்து செல்ல,மற்றவர்களும் எழுந்து அவர்களுடன் சென்றனர்".

"அண்டை வெட்டிக் கொண்டிருந்த ஆண்களும்,வெற்றியிடம் சொல்லிக் கொண்டு வீட்டிற்கு சாப்பிட சென்றனர்".

"சிறிது நிமிடம் சென்று கரையேறி வந்தவன்,மண்வெட்டியை கொண்டு போய்,போர் கொட்டகைக்குள் வைத்து விட்டு,வாய்க்கால் நீரில் தன்னை சுத்தம் செய்து கொண்டு,போலாம் என்று நடக்க,வள்ளியும் அவன் பின்னே சென்றார்".

" இருவரும் வீட்டிற்குள் வந்து சேரும் போது,சத்தியமூர்த்தியிடம் ஊர்க்காரர்கள் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது".

" வாங்க என்று சொல்லிக்கொண்டே உள்ளே போனவர்,வந்தவர்களுக்கு மோர் கொண்டு வந்து வள்ளி கொடுக்க,அதை வாங்கி குடித்தவர்கள், மீண்டும் தங்களது பேச்சை தொடர்ந்தனர்".

"பின்னர் அனைவரும் சொல்லிக் கொண்டு அவரவர் வீட்டை நோக்கி சென்றனர்".

"உள்ளே வந்த சத்தியமூர்த்தி,அங்கே கிச்சனில் வள்ளிக்கு சமையலில் உதவி செய்து கொண்டிருக்கும் வெற்றியை பார்த்தவர்,வயல்ல வேலை எப்படிப்பா போகுது என்க,பாதி வேலை முடிச்சிட்டாங்கப்பா".

"ம்ம் என்றவாறே தனது அறைக்குச்சென்று கதவை சாத்தியவர்,உள்ளே இருந்த அறைக்கதவை திறந்து பார்க்க,சுவற்றில் பாதியளவு அங்கே பெரியதாக இருந்த பெண்மணியின் புகைப்படத்தை பார்த்தார்".

" எங்கிருந்தாலும் குடும்பாய்,தீர்க்க சுமங்கலியா நீ வாழனும்".

" இந்த துரோகிப்பயலை தயவு செய்து மன்னித்து விடு மா என்று வழக்கம் போல் மன்னிப்புக்கேட்டவரோ கதவை சாற்றி விட்டு ஹாலிற்கு வந்தார்".

திருச்சூர் பயணம்:

கார் பிரேக் அடித்து நிற்க,இத்தனை நேரம் கடந்து சென்ற நிகழ்வில் மூழ்கியிருந்த வசு,என்னாச்சிணா? என்றார்.

"மணி ஒன்பதாகுதுமா".

"கர்ப்பிணி பொண்ணு,வெறும் வயித்தோட இருக்கலாமா?என்கவும், அச்சோ அதை நான் மறந்துட்டேன்ணா".

" அண்ணா,இப்போ நாம எந்த ஊர்கிட்ட இருக்கிறோம்?என்று வசு கேட்க,இதோ ஈரோடு வந்துட்டோம்மா என்றார்".

"தூங்கிக்கொண்டிருந்த ஆர்கலிக்கும் அப்பொழுது விழிப்பும் வந்தது".

" அவள் கண் திறந்து பார்க்க,வசுவின் மடியில் தூங்கியபடி வந்தது தெரிந்து,சாரி மேம் என்றவாறு எழுந்து உட்கார்ந்தாள்".

"அட..இதில் என்ன அம்மு இருக்கு".

"நான் தான் என் பொண்ணுனு சொல்லிட்டனே என்றார்".

"பின்னர்,மூவரும் இறங்கி ஹோட்டலிற்குள் சென்று,வசுவும், மைக்கேலும் அவர்களுக்கு வேண்டியதை ஆர்டர் பண்ணினர்".

" ஆர்கலியோ,தனக்கு இரண்டு இட்லி மட்டும் போதுமென்க,குழந்தையை காரணம் காட்டி மேலும் இரண்டு இட்லியை சாப்பிட வைத்தனர்".

"இன்னும் ஒரு இட்லி சொல்லட்டுமா என்று மைக்கேல் கேட்க,ஐயோ!,மாமா போதுமென்று தன்னை மீறி மாமா என்று அழைக்க,அதைக் கேட்டு மைக்கேலின் கண்கள் கலங்கியது".

"மன்னிச்சிடுங்க,மேடம் உங்களை அண்ணா என்று கூப்பிடுவதால், எனக்கு பட்டென்று மாமா என்று வந்துவிட்டதென்று அவள் சொல்லியதை கேட்டவர்,தாராளமா கூப்புடு அம்மு".

"உனக்கு நான் தான் மாமா என்றார்".

" தேங்க்யூ மாமா,உரிமையாக எனக்கு கிடைத்த உறவு நீங்களென்று சொல்லி ஆர்கலியும் கண் கலங்கினாள்".

ஐயோ கடவுளே,பெத்த தாய் நான் உயிரோட பக்கத்தில் இருக்கிறேன்.ஆனால் என்னால் சொல்ல முடியலையே என்று, உள்ளுக்குள் வசு கதறிக் கொண்டிருந்தார்.

"வசுவின் முகத்தை வைத்து, மைக்கேலுக்கு அவர் நிலைமை புரிந்தது".

பின்னர் மூவரும் சாப்பிட்டு முடித்து, பில்லுக்கான பணத்தை கொடுத்து வெளியே வரும் போது,இஞ்சி சோடா பாட்டில் வாங்கிட்டு வந்த மைக்கேல்,அம்மு வழியில் வாமிட் வர போல இருந்தால் இதை குடிச்சிக்கோ.

இல்லை நெஞ்சு கரிக்கிற போல இருந்தாலும் சொல்லுடா என்று, பாட்டிலை நீட்ட,ஆர்கலியோ தேங்க் யூ மாமா என்றாள்.

ஏன் அம்மு,மாமான்னு சொல்லிவிட்டு எதுக்குமா தேங்க்யூ சொல்லி தள்ளி வைக்கிறாய்?என்க,சரி இனிமே சொல்ல மாட்டேன் என்று சொல்லியவள்,காரின் கதவை திறந்து, பின் சீட்டில் போய் உட்கார்ந்து கொண்டாள்.

வசு உன் மனசு புரியுதுமா,கொஞ்ச காலம் பொறுத்து தான் போக வேண்டுமென்றவர்,வாமா போகலாமென்று காரை நோக்கிச்சென்றார்.

அந்த நள்ளிரவு பயணம்,ஆர்கலியின் மனதிற்குள் அமைதியை தந்தது. "பிறந்ததில் இருந்து காரில் செல்லும் வாய்ப்புகள் இரண்டு முறை தான் கிடைத்தது".

ஃபாதரை தவிர உறவென்று இதுவரை இல்லாதவளுக்கு,இன்று தன் மேல் இவ்வளவு அன்பை பொழியும் இருவர் கிடைத்ததற்கு,மனதிற்குள்ளே கடவுளுக்கு நன்றியை சொன்னாள்.

"அவள் மனசாட்சியோ அவன் இல்லையா?என்று கேட்டது".

"எவன் என்று அவளும் கேட்டாள்".

" உன் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டானே அவன் தான் என்று, மனசாட்சியும் சொல்லியது".

"அந்த உறவு முடிந்து போய்விட்டது. போய் உன் வேலையை பாரென்று தனது மனசாட்சியை அடக்கினாள்".

"பின்னர் வெளியே தெரியும் இரவின் அழகை ரசிக்க ஆரம்பித்தாள்".

இரவு நேரமென்பதால்,அவ்வளவாக வண்டிகள் செல்லவில்லை.

இவர்கள் காருக்கு முன்பு,எதோ ஒரு கல்லூரியின் பேருந்தில், மாணவர்கள் ஆட்டம் பாட்டத்தோடு செல்வது தெரிந்தது.

காலேஜ் பசங்க டூர் போறாங்கள் போலவென்று,மைக்கேல் சொல்லிக்கொண்டு வந்தார்.

அம்மு எதாவது சூடாக குடிக்கிறியாம்மா என்று கார் ஓட்டிக்கொண்டே கேட்க,இப்போ எதுவும் வேண்டாம் மாமா.

மாமா உங்களுக்கு குடிக்கணுமா?என ஆர்கலி கேட்க,இல்ல அம்மு, உனக்காக தான்டா கேட்டேனென்றார்.

இந்த சோடாவே போதும் மாமா என்றவள்,அதை திறந்து குடிக்க, காரின் வேகத்தில் அவள் மேலே சிந்தியது.

பார்த்து அம்மு என்றவாறே தனது புடவை முந்தானையால் மகளின் மேலே சிந்திய சோடைவை வசு துடைத்து விட,அய்யோ மேடம் என்ன பண்ணுறீங்க?என்று பதறினாள்.

கார் ஒட்டிக்கொண்டிருந்த மைக்கேலோ என்னாச்சி அம்மு என்றபடியே,காரை ஓரமாக நிறுத்தி விட்டு,பின்பக்கம் திரும்பி பார்க்க, புடவையெல்லாம் வீணா போகுது பாருங்க மேடமென்றாள்.

அட இதுக்கு தானா என்றவர்,வசுக்கு தன் மகள் மேல் அம்புட்டு பாசம் அம்முவென்று மைக்கேல் சொல்ல, ஆமாம் மாமா.

இன்றைக்கு தான் பார்த்தாங்கள், ஆனால் எத்தனையோ பிறவி பந்தம் போல இருக்கென்று ஆர்கலி சொல்ல,மகள் சொல்லியதை கேட்ட வசுக்கு,கண்கள் கலங்கியது.

காரில் இருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து நீட்டியவர்,இதில் கையை கழுவிக்குங்க என்க, காரிலிருந்து இறங்கிய இருவரும் பாட்டிலில் இருந்த தண்ணீரில் கையை கழுவிக்கொண்டனர்.

பின்னர்,அந்த தண்ணீரால் தனது முகத்தையும் கழுவி விட்டு,புடவை முந்தானையால் முகத்தை நன்கு துடைத்துக்கொண்ட ஆர்கலி,வசுவோடு காரில் ஏறிக்கொண்டு போகலாமென்றாள்.

ஆர்கலி எங்கே...?
 
Member
Joined
Nov 8, 2025
Messages
51
சூப்பர் அம்மா பொண்ணை சந்தித்துவர்
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top