• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
457
சென்னை ஏர்போர்ட்:

" வெற்றிஈஈஈ என்ன பண்ணுற என்று சத்தியமூர்த்தி பல்லை கடித்து கேட்க, மற்றவர்களோ அவர்களை வேடிக்கை பார்ப்பது தெரிந்தது".

" சுந்தரபாண்டியனும், மைக்கேலும் சத்தியமூர்த்தியின் அருகில் வந்தவர்கள், நீங்க தான் சத்தியமூர்த்தியா? என்க, ஆமாம் என்றார்".

" சார் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும், எங்களை பாலோவ் பண்ணி வாங்களென்று கெஸ்ட் ஹவுஸ் அட்ரஸை மைக்கேல் கொடுத்து விட்டு, வசுவிடம் வந்தவர், தம்பி என்று வெற்றியின் தோளில் தட்ட, அம்மா இன்னும் உங்களுக்கு கோபம் போகவில்லையா? என்றான்.

"வெற்றி என்று சற்று கடுமையாக சத்தியமூர்த்தி கூப்பிட, அந்த குரலில் வசுவிடமிருந்து விலகி வந்தான்"

" வா என வெற்றியின் கையை பிடித்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட, வசுந்தராவோ இடிந்து போனார்".

" அந்த மனுஷன் திரும்பவும் ஓடிட்டாராணா என்கும் போது,வசுவின் கண்கள் கண்ணீரை பொழிந்தது".

" வசு... இப்போ நாம ஃப்ளைட்டில் போக போறது இல்லை. நம்ப கெஸ்ட் ஹவுஸிற்கு தான் போறோம்".

" எதா இருந்தாலும் அங்கு போய் பேசிக்கலாம். கொஞ்சம் சுற்றி பார், எல்லாரும் நம்மை தான் வேடிக்கை பாக்குறாங்களென்று மைக்கேல் சொல்ல, வசுவோ ம்ம் என தலையசைக்க, மூவரும் அங்கிருந்து வெளியே வந்தனர்".

" அப்பா என்ன பண்ணுற?, எத்தனை வருஷம் கழித்து அம்மாவை பார்த்திருக்கோம்?,பிறகு எதுக்கு இப்படி இழுத்துட்டு வர? என்று வெற்றி கோவமாக கேட்க...

"ஏன்டா உனக்கு அறிவு இருக்கா இல்லையா?,சொல்லு.ஒருநாள் ரெண்டு நாளா? கிட்டத்தட்ட 23 வருஷம் ஆகுது".

"சப்போஸ் வேறு யாரையாவது கல்யாணம் பண்ணி இருந்தால், வசுந்தரா குடும்ப வாழ்க்கை என்ன ஆவது?, இதையெல்லாம் யோசிக்க மாட்டியா?.

"எனக்கும் அவளை பார்த்த உடனே அப்படித்தான் இருந்துச்சு. அதற்காக நான் என்ன பண்ண முடியும் சொல்லு? என்று தன்னை மீறி மகனிடம் சத்தியமூர்த்தி கேட்க, இப்பொழுது தான் வெற்றிக்கும் அந்த விஷயம் புரிந்தது".

" சத்தியமூர்த்தியின் மனசோ, கண்டிப்பா அவ என்ன விட்டு மாற மாட்டாள் என்று சொல்லிக் கொண்டிருந்தாலும், நிதர்சனமோ அப்படி ஆகியிருக்கலாமென்றும் சொல்லியது".

" பெற்றவர்களுக்கு ஒரே பொண்ணு. எப்படி விட்டு இருப்பாங்க? என்று யோசனையானார்".

" இப்போ என்னப்பா பண்ணுறது? என்று வெற்றி கேட்க, இந்த அட்ரஸ்க்கு காரை ஓட்டு. அவங்க கூட இருந்த ஒருத்தர் குடுத்துட்டு போனாரு"

"ஏதோ நம்ம கிட்ட பேசணுமாம் என்று சத்தியமூர்த்தி சொல்ல, சரிப்பா அங்கு போய் என்னன்னு பார்க்கலாமென்று காரை ஸ்டார்ட் பண்ணிய வெற்றி, மைக்கேல் கொடுத்த அட்ரஸை நோக்கி சென்றான்".

" இரண்டு மணி நேர பயணத்தில் மைக்கேல் கொடுத்த அட்ரஸுக்கு முன்பு வந்து காரை நிறுத்த, வாட்ச்மேனும் கதவை திறந்து விட்டார்".

" உள்ளே போய் காரை நிறுத்த, வெற்றி அங்க எந்த அதிக பிரசங்கி தனமும் வேண்டாம். சரியா என சத்தியமூர்த்தி கேட்க, சரிப்பா என்றவன், உள்ளே போன பிறகு அதை முடிவு பண்ணிக்கலாமென்று தனக்குள் சொல்லியவன், கதவை திறந்து கீழே இறங்கினான்".

" பின்னர் இருவரும் உள்ளே செல்ல, அங்கு மேக்கேலும், சுந்தரபாண்டியனும் இருந்தனர்".

" இவர்களை பார்த்த மைக்கேல் உள்ளே வாங்களென்க, பேச்சு குரல் கேட்டு ரூமிலிருந்து வெளியே வந்த வசுந்தரா, சத்தியமுர்த்தியின் எதிரில் வந்தவர், நொடியும் தாமதிக்காமல் மாறி மாறி அறைய, இதை அங்கிருந்த மூவருமே எதிர் பார்க்கவில்லை"

" என்ன பண்ணுறீங்களென்று பதறிப்போய் வெற்றி தடுக்க, அவனை ஒரு பார்வை வசுந்தரா பார்க்க, அந்த பார்வையிலே இரண்டு அடி பின்னால் நகர்ந்து போனான்".

" தனது கை வலிக்கும் வரை அறைந்த வசுந்தரா, அழுது கொண்டே அங்கிருந்து ரூமிற்குள் சென்று விட்டார்".

வசு சென்ற பின்னர் அப்பா என அவர் அருகில் வந்த வெற்றி, அவரின் கன்னத்தை பார்க்க, கை விரல் தடம் பதிந்து சிவந்து போயிருந்தது".

" வாப்பா நாம போகலாமென்று கோவமாக அவரின் கையை பிடித்து இழுக்க, கொஞ்சம் இரு கண்ணு".

" எதோ பேசணுமென்று சொன்னாங்கள் இல்லையா என சத்தியமூர்த்தி சொல்ல, அவரின் நிதானத்தை கண்டு சுந்தரபாண்டியனும், மைக்கேலும் திகைத்து போயினர்".

" நான் மைக்கேல், வசுவோட அண்ணன். இவங்க எங்கப்பா சுந்தரபாண்டியன் என்க, வசு ஒரு பொண்ணு தானே?, இவர் அண்ணனென்று சொல்கிறாரே என சத்தியமூர்த்தி யோசனை செய்ய,முதல்ல இருவரும் உட்காருங்க என்றார் மைக்கேல்".

" பரவாயில்லை நீங்க விஷயத்தை சொல்லுங்க என்று வெற்றி கேட்க, தம்பி உனக்கு இது தெரியாத விஷயம். அதனால் நீ கொஞ்சம் அமைதியாக இருப்பா என்ற சுந்தரபாண்டியன், சத்தியமூர்த்தியை பார்த்து, உட்காருங்கள் என்றார்".

" அவரின் வார்த்தைக்கும், வயதிற்கும் மரியாதை கொடுத்து, அங்கிருந்த சோபாவில் மகனின் கையை பிடித்தவாறு உட்கார, உங்க கிட்ட ஒன்னு கேட்கணுமென்று சுந்தரபாண்டியன் வார்த்தையில் தயக்கம் காட்ட, கேளுங்க சார் என்றார் சத்தியமூர்த்தி"

"தனது தொண்டையை செருமி சரி பண்ணியவர், தவறாக எடுத்துக்காதீங்க, உங்களுக்கு கல்யாணம் ஆகிட்டா?என்க, ஆகிடுச்சுங்க சார்"

" வரும் திங்கள் கிழமை வந்தால் இருபத்தி நான்கு வருஷம் முடிய போகுதென்றார்".

" உள்ளேயிருந்து சத்தியமூர்த்தியின் வார்த்தைகளை கேட்டு கொண்டிருந்த வசுக்கு, முதலில் அவர் சொல்லிய கல்யாணம் ஆகிவிட்டது என்பதிலே உடைந்து விட, அடுத்ததாக சொன்னதில் குழம்பம் வந்தது".

" உடனே அங்கிருந்த காலண்டரில் அந்த நாள் எந்த தேதியென பார்த்தவர், கண்கள் விரிய அதிர்ந்தவர், சட்டென்று எழுந்து வாசலுக்கு வந்து தயங்கி நிற்க...

" ஓஓஓ... உங்கள் பையனா என கேட்க, ஆமாம். ஐபிஎஸ் டிரைனிங்கில் இருக்கானென்று சத்தியமூர்த்தி சொல்ல, அப்படியா என்றார்".

" அப்பொழுது அங்கு வந்த வசு, சத்தி என்க, 24 ஆண்டுகளுக்கு பின்னர் கேட்ட அழைப்பால் அவருக்கு கண்கள் கலங்கியது".

" பின்னர் சுதாரித்துக் கொண்டவர், கீழே குனிந்து தன்னை சரி படுத்திக் கொண்டு நிமிர்ந்தவர்,சொல்லுங்கள் மிசஸ் வசுந்தரா என்று அடுத்த வார்த்தைகளை முடிக்க முடியாமல் சத்தியமூர்த்தி தடுமாற,வசுந்தரா சத்தியமூர்த்தி என்று அழுத்தமாக சொல்வதைக் கேட்டு,சோபாவில் உட்கார்ந்திருந்த சத்தியமூர்த்தி மட்டுமல்ல, சுந்தரபாண்டியன் மற்றும் மைக்கேலும் அதிர்ந்து போய் எழுந்து நின்றார்கள்".

" ஒரு நிமிடம் சத்தியமூர்த்திக்கு வார்த்தை வரவில்லை. வார்த்தைகள் தொண்டையை அடைக்க, கண்கள் மட்டும் கண்ணீரை பொழிய, தாராஆஆஆ என்க, சத்தி என்றவாறு அவரின் தோளில் சாய்ந்த வசுந்தரா கதறி அழ, அதை பார்த்த மூவரும், அங்கிருந்து வெளியே சென்றனர்"

" தம்பி என்னடா நடக்குதென்று சுந்தபாண்டியன் மைக்கேலிடம் கேட்க, அப்பா, என்ன நடந்ததென்று இருவருக்கும் தான் தெரியும், அவங்களாக சொல்லாமல் நமக்கு எதுவும் தெரிய வாய்ப்பில்லை".

" நான் அப்போதிலிருந்து சொல்வது போல, வசு தான் ஏதோ தப்பா புரிந்து கொண்டு இருக்குதுப்பா என்க, எனக்கும் அப்படி தான் தோணுதுப்பா என்றார் சுந்தரபாண்டியன்".

" வெற்றியோ எதுவும் புரியாமல் இருவரையும் குழப்பத்தோடு பார்த்து கொண்டிருப்பதை கண்ட மைக்கேல், தம்பி நீங்க எந்த ஊரு? என கேட்க, வெற்றியோ பொள்ளாச்சி என்று சொன்னான்".

சதூர்வேதமங்கலம்:

" தூங்கி எழுந்த ஆர்கலி வெளியே வந்து பார்க்க, ருத்ரன் படுத்திருந்த இடம் வெறுமையாக இருப்பதை கண்டவள், இந்த மனுஷன் எங்கே போனாரு என தேடினாள்".

" கதவை திறந்து தோட்டத்தில் பார்க்க அங்கும் இல்லை. பின்னர் முன் கதவை திறக்க , அது வெளிபுறமாக தாழிட்டிருப்பது தெரிந்து, சந்து வழியாக முன்னே வந்து தாழ்ப்பாளை விலக்கியவள், போயாச்சு போலயென சொல்லியவள், தோளை குலுக்கி கொண்டு, வழக்கமான வேலையை பார்க்க தொடங்க, பாட்டியும் அங்கு வந்து சேர்ந்தார்"

" ஆரா கண்ணு பால் சுட வைக்கட்டுமா என்க, வேண்டாம் பாட்டி. பசிக்கிற போல இருக்கு. டிபனே பண்ணிடலாமென்றவள், அதற்கான வேலையை பார்க்கலானாள்"

" மனதிற்குள் மட்டும் ருத்ரனை பற்றிய எண்ணங்கள் ஓடியது".

" டிபனை செய்து முடிக்க, கிரிஜா பாட்டியும், சைலஜா பாட்டியும் அங்கு வந்தனர். இருவரையும் பார்த்தவள், வாங்க பாட்டியென்றவள், பாட்டி, பாட்டி என தோட்டத்து பக்கம் குரல் கொடுத்தாள்".

" இதோ வரேன் கண்ணு என்றவாறு பரித்த கீரைகளோடு உள்ளே வந்தவர், அங்கிருந்த இருவரையும் பார்த்து, வாங்கடாமா என்றார்".

" கண்ணு, என்ன வேடிக்கை பாக்குற?,ரெண்டு பேருக்கும் டீ போட்டு குடு என்க, நாங்க டிபன் சாப்பிடலாமென்று வந்தோம், நீங்க என்னக்கா, டீயோடு துரத்தி விடுறீங்களென்று கிரிஜா பாட்டி கேட்க, அதுக்கு என்ன கண்ணு, சாப்பிடுங்கடா".

" நம்ப பேத்தி நிறைய தான் செஞ்சிருக்கு. அந்த அம்மாவுக்கு புடிச்சதாச்சே என்று சிரித்தவர், ஆரா கண்ணு நீ பரிமாறு, நான் ரெண்டு தோசை ஊத்திடுறேன் என்றார்".

" இதெல்லாம் நல்லா இல்லையென்றவாறு சிம்ஹன் தாத்தாவும் அங்கு வந்து சேர்ந்தார்".

" ஒரு வார்த்தை அக்காளும் தங்கச்சியும் சொல்லிட்டு வராமல் ஓடி வந்தீட்டீங்களே என மனைவியையும், மச்சினியையும் முறைத்து பார்க்க, போனையே கட்டி கிட்டு அழுதீங்க".

" அதான் நாங்க வந்துட்டோமென்று கிரிஜா பாட்டி சொல்ல, எதே என்று பார்த்தார்".

" திடீர்னு இவர்கள் வருவார்கள் என்பது தெரியாததால் மூவர் சாப்பிடும் அளவிற்கு தான் காய்கறிகள் போட்ட உப்புமாவை ஆர்கலி செய்திருந்தாள்".

" தோசை போட்டு கொண்டாலும் சட்னி குறைவா இருக்கே என யோசித்தவளுக்கு, செல்பில் இருந்த சேவ் கண்ணில் பட, மட மடவென்று சேவ் டொமேட்டோ செய்யும் வேலையில் இறங்கினாள்".

" இங்கே பெரியவர்கள் நால்வரும் சிரித்து பேசியபடி இருக்க, கால் மணி நேரத்தில் தோசையும்,சேவ் பாஜியும் தயாராக, ஒவ்வொன்றாக எடுத்து வந்து ஹாலில் வைக்க, ஏம்மா, உன் பாட்டிகளுக்கு மட்டும் தான் அனுமதியா?, நான் என்ன சண்டைகாரனா??? என்றார்.

" தாத்தாவின் பேச்சு புரிய,உங்கள் வீட்டிற்கு நீங்க வந்துருக்கீங்க தாத்தா. அதற்கு ஏன் நான் வாங்க என சொல்லணும் என்க, அட அட அட,ஒரு வார்த்தை என்றாலும் திருவார்த்தையா சொன்ன அம்மு என்றார் சைலஜா பாட்டி".

" பின்னர் பேசியபடியே அங்கிருந்த உணவுகளை பகிர்ந்து சாப்பிட்டனர், எல்லாரும் இங்க இருக்காங்க?, இந்த மனுஷன் மட்டும் ஆளை காணுமேயென, ஆர்கலியின் உள்ளுக்குள் கேள்வி எழும்பாமலும் இல்லை"
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
457
சென்னை- சிம்ஹன் கெஸ்ட் ஹவுஸ்:

" நிச்சயமாக மகன் வாயை திறக்க வழியில்லை என்பது தெரிந்த தனா, வீரா என்றார்"

ஹம் சொல்லுங்க என ருத்ரன் கேட்க, இன்னும் எத்தனை வருஷம் கழித்து தான் பா, உன் வாயில் இருந்து அப்பா என்னும் வார்த்தை வரும்.

நான் சாகுறதுக்குள் கூப்பிட்டுறுவியா? என பாவமாக கேட்க, அதற்கு ருத்ரன் எந்த பதிலும் சொல்லவில்லை.

காலம் கடந்து புரிந்த ஞானோதயம் தான். உன் கால்ல வேண்டுமானாலும் விழுறேன் டா.

பெத்த ஒரு புள்ளை கடந்த 24 வருஷமா அப்பானு கூப்பிடாத கொடுமை இருக்கே நரக வேதனை என்று கதறினார்.

இந்த நிமிஷம் வரை என் மனசுக்குள்ள அப்படி தோணவில்லை. காரணம் எதுவும் என்கிட்ட கேட்க வேண்டாமென்றவன் அங்கிருந்து எழுந்து போய், கண்ணாடி வழியாக தெரியும் கடல் அலையை பார்த்து நின்றான்.

ருத்ரனுக்கும் தனா அழுதது கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது. ஆனால் அவன் நினைவிற்குள் சில நிகழ்வுகள் வந்து செல்ல, மனம் மேலும் இறுகியது.

"சரி நான் கிளம்புறேனென்று, விறு விறுவென படியில் இறங்கி கீழே வந்தவன், கார் கிட்ட வந்து பார்க்க, டிரைவர் சீட்டில் சாய்ந்து தூங்குவது தெரிய, தூக்கத்தில் இருப்பவர்களை எழுப்புவது பாவமென கிரிஜா பாட்டி சொல்லியது நினைவிற்குள் வந்து சென்றது".

" ருத்ரன் நேரமோ என்னவோ தெரியவில்லை, தூங்கிக் கொண்டிருக்கும் டிரைவர் சீனுவின் நம்பருக்கு கால் வர, அவரே எழுந்தார்".

" பின்னர் ருத்ரன் நிற்பதை கண்டவர், தலையசைத்து விட்டு போனை பார்க்க, கம்பெனி கால் என்பதை கண்டு, சொல்லுங்க தம்பி, போகலாமா என்க, ம்ம் ணா".

" சும்மா அப்படியே கொஞ்ச தூரம் போகலாம்ணா என்க, ருத்ரனை பார்த்தவர், சரி தம்பி எனக்கு தெரிந்த ஏரியா ஒன்னு இங்கே இருக்கின்றது".

" அங்கே போகலாமா என கேட்க, ஓகேணா என்றவாறு கதவை திறந்து காரில் உட்கார்ந்த ருத்ரன், போகலாம் ணா என்றான்"

" சரி தம்பியென்ற சீனு,அங்கிருந்து காரை முட்டுக்காடு என்னும் ஊரை நோக்கி ஓட்டினார்".

" ஒன்னரை மணி நேரத்தில் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர். தம்பி,சென்னையின் சலசலப்புகளிலிருந்து கிழக்கு கடற்கரை சாலையில் மறைந்திருக்கும் அழகிய கிராமம் தான் பா இந்த முட்டுக்காடு".

" மனசு அமைதியா இருக்கணுமென்று நினைச்சி குடும்பத்தோடும், நண்பர்கள் கூட ஜாலியா பொழுதை போக்கவும், சுற்றுலாவாக இங்கே வருவாங்கள்".

"சாப்பாடுங்களும் சில கடையில் நல்லா இருக்கும் தம்பியென்று சீனு சொல்ல, சரிங்கண்ணா என்றவன், கண்ணில் கூலரோடு காரிலிருந்து இறங்கி அங்கிருக்கும் சூழலை ரசித்தான்"..

" பின்னர் காலாரா நடந்தவனுக்கு மனம் அமைதியாக இருப்பது போல தோண, கடல் நீரில் கால் நனைய நின்றவனுக்கு ஆர்கலி நினைவு வந்தது".

" என்னை காணாமல் தேடியிருப்பாளா? என முணு முணுக்க, ச்சை ச்சை, சனியன் ஒழிந்ததென்று நிம்மதியா இருப்பாளென்று மனசாட்சி சொல்லியது".

" சரி நாம செய்ததற்கு இப்ப அனுபவிக்கிறோம்.வேறு வழி இல்லை என்று அவனை சமாதானப்படுத்திக் கொண்டவன், பின்னர் சீனு இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான்"

" அண்ணா மணியாயிற்று இங்கே லஞ்சு சாப்பிட்டுக்கலாமா? என்று கேட்க, வாப்பா அங்க ஒரு கடை இருக்கு. வீட்டு சாப்பாடு தான். ரொம்ப நல்லா இருக்கும் என்று அழைத்துப் போனார்"

" அங்கே போனால் விதவிதமான கடல் உணவுகள் இருந்தது. ஆனால் ருத்ரனால தான் அதை விரும்பி சாப்பிட முடியாத நிலை"

"இடது கையால் ஸ்பூன் போட்டு சாப்பிட வேண்டியிருக்க, மிக்ஸ்டு சாம்பார் சாதம் மட்டும் போதும் என்று சொல்லிவிட்டான்"

" தம்பி இது கூட சுறா புட்டு, இறால் மிளகு ஃப்ரை சாப்பிடுங்க. அது ஸ்பூனால் சாப்பிடலாமென்று சீனுவே அவனுக்கு ஆர்டர் பண்ணினார்"

" இருவரும் சாப்பிட்டு அதற்கான பணத்தை கொடுத்துவிட்டு வெளியே வந்தனர். அண்ணா இப்ப நம்ம ஹை கோர்ட் பக்கத்தில் இருக்கும் ஒரு ஆபீஸ்க்கு போகணும் என்று சொல்ல, சரி தம்பி போகலாம் என்று சொன்னார்".

"பின்னர் காரில் ஏறிய இருவரும் ஹைகோர்ட் நோக்கி சென்றார்கள்"

" புகழேந்தியின் ஆபீஸ்க்கு வந்து சேர மாலை நாலரை மணி ஆனது. அண்ணா நான் போயிட்டு ஒரு பத்து நிமிஷத்துல வந்து விடுகிறேன் என்று சொல்லி விட்டு,காரிலிருந்து இறங்கிய ருத்ரன், அங்கிருந்த படியில் ஏறி மூன்றாவது ப்ளோரில் இருக்கும் ஆபீசுக்கு சென்றான்".

" அங்கே இருந்த பூஜாவிடம் விஷயத்தை சொல்ல,சார் காலையிலேயே விஷயத்தை சொல்லி இருந்தார்கள். இந்தாங்க சாரென்று டிராவில் இருந்த டாக்குமெண்ட்டை எடுத்து கொடுத்தாள்".

" தேங்க்ஸ் என்று வாங்கியவன், பைலில் இருந்த டாக்குமெண்ட்ஸை பிரித்து படித்து பார்க்க, எல்லாம் சரியாக இருக்க, ஓகே அங்கிள்கிட்ட சொல்லிடுங்க என்று சொல்லிக்கொண்டு அங்கிருந்து கீழே வந்தவன், காரில் உட்கார்ந்து கொண்டு, அண்ணா இனி நம்ம ஊருக்கு கிளம்பலாம்"

" போற வழியில் எங்கேயாவது காபி டீ குடித்துக் கொள்ளலாம் என்று சொல்ல, சரி தம்பி. சிட்டியை விட்டு முதல்ல வெளியே போய்க்கலாம் என்று சொல்லி விட்டு காரை சதுர்வேதமங்கலத்தை நோக்கி சீனுவும் ஓட்டலானார்"

சுந்தரபாண்டியன் கெஸ்ட் ஹவுஸ்:

" 24 வருடங்களுக்கு பின்னர் தனது காதல் மனைவியின் அணைப்பில் இருந்த சத்தியமூர்த்திக்கு, நடப்பது உண்மை தானா? என்பது ஆச்சர்யமாக இருந்தது"

" தன் மேல் சாய்ந்து அழுது கொண்டிருக்கும் வசுந்தராவின் முதுகில் தட்டிக் கொடுத்தவர், தாரா உன்னிடம் நானும் நிறைய சொல்ல வேண்டியது இருக்கின்றது".

" அதை போல எனக்கும் தெரிய வேண்டிய விஷயங்கள் இருக்கு என்றார். அழுது கொண்டிருந்த வசுந்தரா, சத்தியமூர்த்தியின் வார்த்தையை கேட்டு அவரிடம் இருந்து விலகி வந்தவர்,மேலும் 4 அறையை விட்டவர் எங்கடா போய் தொலைஞ்ச??..

"என் வாழ்க்கையை நாசமாக்கிட்டு எங்கே ஒளிஞ்சிருந்த? இத்தனை வருஷமாய் நான் இருக்கனா? இல்லை செத்துட்டேனா? என உனக்கு தேட முடியலையா என்றார்".

" மனைவியின் கேள்விக்கு ஒரு நிமிடம் அமைதியாக இருந்த சத்தியமூர்த்தி, ஒருவேளை நான் வரவில்லை என்று நீ வேறு கல்யாணம் பண்ணி இருந்தால்,உன் வாழ்க்கையில் எந்த அசம்பாவிதமும் நடக்க கூடாது என்பதால் தான்,நான் தேடவில்லை என்று சொன்னார் சத்தியமூர்த்தி".

"அதைக் கேட்ட வசந்தராவுக்கு கோவம் வந்து, என்னடா பேசுற?,என்ன பேசுற சக்தி ?,நீ கட்டின தாலி என் கழுத்துல இருக்கும் போது, எப்படி இன்னொருத்தரை நான் கல்யாணம் பண்ணுவேன் என்றவாறு, சத்தியமூர்த்தியின் சட்டை பிடித்து கேட்டார்"

"என்ன இருவருக்கும் கல்யாணம் ஆயிடுச்சா என்று, இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்ததை வெளியே இருந்து கேட்டுக் கொண்டிருந்த மைக்கேலுக்கும், சுந்தரபாண்டியனுக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது"

" தாரா, உன் கேள்வி நியாயமானது தான்.தயவுசெய்து கொஞ்சம் நான் என்ன சொல்லுறேனென்று புரிந்து கொள்ளுமா என்க, சத்தியமூர்த்தியின் நிதானமான பேச்சு, மேலும் அவர்களுக்கு ஆச்சர்யத்தை கொடுக்க தவறவில்லை"

" என்ன சொல்ல போற சக்தி?, நான் ஊருக்கு போனேன், எங்கம்மா கிட்ட சொன்னேன்,அவங்க நம்மை ஏத்துக்கலை, எனக்காகவே வாழும் அவங்க வார்த்தையை என்னால் தட்ட முடியாமல், நான் இத்தனை காலமும் ஒளிஞ்சிருந்தேனென்று சொல்லப்போறாய். இதானே உன்னோட வாக்குமூலம்,புல்ஷிட் என்றார் வசுந்தரா"

" வெளியே இருந்து கேட்டுக் கொண்டிருந்த மைக்கேலுக்கு, உண்மையிலேயே தற்போது தங்கையின் மேல் கோபம் வர, ஒரு நிமிஷம் இருங்கப்பா என்று சொல்லி விட்டு உள்ளே வந்தவர், வசு என்ற அண்ணனின் அழைப்பில் திரும்பி பார்த்து,அண்ணா இந்த மனுஷன் என்னென்ன கதை சொல்லிக்கிட்டு இருக்காங்க பாருங்க? என்று அழுதார்".

" எல்லாம் கேட்டு கிட்டு தான் இருந்தேன். இவ்வளவு படித்திருக்கிறாயே கொஞ்சமாவது அவர்களுடைய தரப்பு வாதத்தை கேட்கணும்னு உனக்கு தோணவே இல்லையா?

"ஆரம்பத்தில் இருந்து நீ சொல்றது மட்டும் தான் சரின்னு சொல்லிட்டு இருக்க. கடந்த 20 வருஷமாவும் உன்கிட்ட இதை தான் நான் சொல்லிக்கிட்டு இருக்கேன்".

"சத்தியமூர்த்தி சைடிலும் என்ன நியாயம் இருக்கோ?,அவர் தரப்பு விஷயத்தை கேட்டுட்டு அடுத்தது முடிவு பண்ணு என்று. கொஞ்சம் அவர் என்ன சொல்றாரு என்பதை காதில் வாங்குவதில், உனக்கு என்ன குறைந்து விட போகின்றது?

" நீ சொல்லுவதை வைத்து மட்டும் முடிவெடுக்க முடியாது இல்லையா என கோவமாக கேட்க,தனது அண்ணனின் வார்த்தைகளில் உள்ள கோபத்தை உணர்ந்த வசுந்தரா, கீழே குனிந்து கொண்டார்"

"சில நொடி அமைதியாக இருந்த வசு, இப்பொழுது நிமிர்ந்து கம்பீரமாக நின்றவர்,ஏன் ணா,வயிற்று புள்ளையோட அப்பன் யாருன்னு சொல்ல முடியாமல்,இந்த சமூகத்தில் ஒரு பொண்ணு இருப்பது எவ்வளவு ஒரு கொடுமையான விஷயம்?,இதை நான் உனக்கு சொல்லி புரியணுமா?.

"அந்த நிலைமைக்கு இந்த மனுஷன் என்னை கொண்டு வந்து நிறுத்தி இருந்தாரே, இவருக்கு மாலை போட்டு மரியாதை செய்ய சொல்லுறியா என்று வசு கோவமாக கேட்க,அதைக்கேட்டு வசுந்தரா என்ன உளறிட்டு இருக்க? என, முதல் முறையாக வசுவிடம் சத்தியமூர்த்தி கோவப்பட்டு கேட்டார்".

"ஹாஹாஹாஹஆ என கைத்தட்டி கேலியாக சிரித்த வசு,நல்லா கேட்டியாணா?,இவர் கிட்ட நான் ஒளரிட்டு இருக்கேணாம்? இதற்கு என்ன சொல்லுற என அண்ணனிடம் பதில் வேண்டி பார்க்க,சத்தியமூர்த்தி என்ன விளையாடுறீங்களா?

"ஏதோ வசு தான் அவசரப்பட்டு எல்லாம் தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்குன்னு உங்ககிட்ட அமைதியாக பேசிட்டு இருந்தா,நீங்க என்ன முழு பூசணிக்காயை சோத்துல மறைப்பது போல,எனக்கு குழந்தையே தெரியாதுனு சொல்லிட்டு இருக்கீங்க".

"குழந்தைக்கு அப்பா நீங்க தானே என்று கோபமாக கேட்க,என்ன சார் நீங்களும் அவள் கூட சேர்ந்து கதையளக்குறீங்க?,வசு குழந்தைக்கு எப்படி நான் அப்பாவாக முடியும் என்று கேட்டு, இப்பொழுது சத்தியமூர்த்தி அதிர்ந்து போய் நின்றார்".

"ஆஆஆஆ என கத்திய வசுந்தரா, அண்ணா எனக்கு வரும் கோவத்திற்கு இந்த மனுஷனை கொலை பண்ணினாலும் பண்ணிடுவேன். தயவு செய்து வெளியே கூப்பிட்டு போய்டு என்று சொல்ல,அய்யோ தாரா நீ என்ன சொல்லுறனு எனக்கு சத்தியமாய் புரியலைமா என்றார் சத்தியமூர்த்தி".

"மிஸ்டர் சத்தியமூர்த்தி,உங்க அம்மாவோட தாலி என் கழுத்தில் எப்படி வந்ததென்று,கொஞ்சம் நல்லா யோசித்து பாருங்களென்று சொல்லிய வசுந்தரா,அழுகையோடு அங்கிருந்து வேகமாக அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டார்".

ஆர்கலி எங்கே...?
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top