• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
439
சதூர்வேதமங்கலம்:

"தற்செயலாக இடது பக்கம் ஆர்கலி திரும்ப,அங்கே தூண் மேல் சாய்ந்து தன்னையே பார்த்துக் கொண்டிருப்பவனை கண்டவளுக்கு, கடைசியாக அவனை பார்த்த அந்த நாள் நினைவு வந்தது".

"அந்நாளில் அவன் பேசிய பேச்சுக்களின் வலியால், இப்பொழுதும் அவளின் கண்கள் கலங்க, வேறு பக்கமாய் தனது முகத்தை திருப்பிக்கொண்டாள்".

"ஆர்கலியையே பார்த்திருந்தவன்,வேகமாக அவளை நோக்கி வந்தான்".

" ம்கும் என தொண்டையை செருமி தன்னை சரி பண்ணிக்கொண்டவன், என்ன இங்க உட்கார்ந்திருக்க?, பூச்சி எதாவது இருக்க போகுது, எந்திரி என்க…அவள் அமைதியாக இருக்கவும் கீழே குனிந்து அவள் தோளில் கை வைக்க, பட்டென்று அவன் கையை தட்டி விட்டவள் "ஹலோ மிஸ்டர்.ருத்ர வீர சிம்ஹன், என் தோள் மேல கை வைக்கிறதுக்கு எவ்வளவு ரேட் என்பதை,இதுவரை உங்க கிட்ட நான் பேசவே இல்லையே என்க,ஆர்கலியின் வார்த்தையை கேட்டவன், கன்னத்தில் அரை வாங்கியது போல் அங்கிருந்து சென்று விட்டான்".

"இனி தாண்டா இந்த ஆர்கலியோட ஆட்டம் உனக்கு தெரியும் என்றவள், கைகளை ஊன்றி பொறுமையாக எழுந்து,அங்கிருந்து வீட்டை நோக்கி செல்ல, கருப்பாயி அவளை தேடி வருவது தெரிந்தது".

"வா ஆராமா,மணி என்ன ஆகுது?, இன்னும் சாப்பிடாமால் இருக்க?, உனக்கு பசிக்கவில்லையென்றால், வயிற்றில் இருக்கும் என் மருமக புள்ளைங்களையும் பட்னி போடுவது எவ்வகை நியாயம்?

"உன் அண்ணன் வேற என் தொங்கச்சி இல்லாமல் சாப்பிடமாட்டேனு இருக்காரு என கிண்டல் செய்ய…

"ஏண்டி உன் கிட்ட என்ன சொல்லி அனுப்பினேன், இங்க வந்து கெக்கே பெக்கேனு இளிச்சிட்டு நிக்கிற என சங்கரின் குரல் கேட்க, வந்துட்டார்யா திருப்பாச்சி அண்ணன்".

" எம்மா பாசமலரு வாத்தா என்க, என்னடி கொழுப்பா?, வாய் இருக்காதென்ற சங்கர், தங்கச்சிமா வாடா கண்ணு சாப்பிடலாமென்க, இதோணா என்று சென்றாள்".

அங்கிருந்த தரையில் சங்கர் உட்கார, அவனுக்கு அருகிலே ஆர்கலியும் உட்கார,எக்கா நீங்களும் வாங்க. நாம தானே பார்த்துக்கலாமென்று மலரை சாப்பிட கூப்பிட, சரி சங்கரு என்றவர், கருப்பாயி, இலையை வச்சி பரிமாறு, நான் அப்பளத்தை பொரிச்சிட்டு வரேனென்று உள்ளே போய்விட்டார்".

"சிறிது நிமிடத்தில் மலரும் வந்து விட, அந்நேரம் ருத்ரனும் சாப்பிட வந்தான்".

" நான் பரிமாறுரேன் நீங்கள் சாப்பிடுங்களென்க, இருக்கட்டும், நானும் கீழவே உட்கார்ந்துக்குறேன் என்றவன், சங்கரின் பக்கத்தில் உட்கார, பின்னர் ஐவரும் தேவையானதை போட்டுக்கொண்டு சாப்பிட்டு முடித்தனர்".

ருத்ரனுக்கு இது புது அனுபவமாக இருந்தது. எப்போதும் யாராவது ஒருவர் பரிமாறியே சாப்பிட்டு பழகியவனுக்கு, இன்று வேண்டியதை தானே போட்டு சாப்பிடுவது பிடித்திருந்தது".

"பின்னர் கையை கழுவிக்கொண்டு சங்கரை தேடி வர,அங்கே சங்கர், கருப்பாயி, மலர், ஆர்கலி நால்வரும் வெளியே இருக்கும் வராண்டாவில் உட்கார்ந்திருந்தனர்".

" காலடி சத்தம் கேட்டு சங்கர் திரும்பி பார்க்க,ருத்ரன் வருவது தெரிந்து, ஏதோ பேசனுமென்று சொன்னாரே இந்த தம்பியென்பது நினைவில் வர, எழுந்தவர், வாங்க தம்பியென முன்னே நடக்க, ருத்ரனும் பின்னாடியே சென்றான்".

" வீட்டிற்கு பின்னாடி இருக்கும் அடர்ந்த மரங்களின் ஊடே அங்கங்கே கல்பெஞ்சு இருந்தது. அதில் ஒன்றில் போய் உட்கார்ந்து கொண்ட சங்கர், வாங்க தம்பி உட்காருங்கள் என்றார்".

"அந்த இடத்தை சுற்றிப் பார்த்தவன் ரொம்ப அழகா இருக்கு இல்லையா என்க,ஆமாம் தம்பி அந்த காலத்து மனுஷன் பார்த்து பார்த்து வச்ச மரம்".

"தேவராஜ் ஐயாவோட அப்பா சிவராஜ் ஐயா நட்ட மரங்கள் தான் இதெல்லாம் என்று சொல்லி விட்டு, ருத்ரனை பார்த்தார்".

" சங்கரின் பார்வையை கண்டவன் மாமா என்க, சொல்லுங்க தம்பி, ஏதோ பேசணும் என்றீங்களே என சங்கர் கேட்க, ஆமாம் மாமா".

" இந்த வாங்க போங்க எல்லாம் வேண்டாம் மாமா. ருத்ரனென்றே சொல்லுங்கள் என்றவனுக்கு, தங்கச்சி புருஷனை மரியாதையோடு கூப்பிட வேண்டியது , எங்களோட கடமைப்பா என்று சொல்லி சிரித்தார்".

" பின்னர் நேரடியாக விஷயத்துக்கு வந்தவன், மாமா நிச்சயமாக என் மேல தவறான எண்ணம் தான் உங்களுக்கு இருக்கும் என்று நினைக்கிறேன்".

ஆனால், இதுக்கப்புறம் உங்க தங்கச்சியுடைய வாழ்க்கை பற்றி நீங்க கவலைப்பட வேண்டாம். கடைசி வரைக்கும் அவளையும், குழந்தையும் பார்த்துக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு மாமா".

மைக்கில் அங்கிள் சொன்னாங்க, நீங்களும் அக்காவும் தான், ஆர்கலிக்கும் பாட்டிக்கும் இத்தனை நாள் பாதுகாப்பாக இருந்தீர்கள் என்று, இதை நான் உயிர் இருக்க வரைக்கும் மறக்க மாட்டேன் என்க, ருத்ரனின் வார்த்தையை கேட்டவர், தம்பி, தங்கச்சிமா இந்த வீட்டுக்கு வந்த அன்றையிலிருந்து என் கூட பிறந்த பிறப்பா தான் இந்த நிமிஷம் வரைக்கும் நான் நினைக்கிறேன்".

"தங்கச்சிமாவும் அப்படி தான்.என்னோட தங்கச்சிக்கு நான் செய்ய வேண்டியது கடமை. மைக்கேல் சார் ஆர்கலி பற்றி விசாரிக்கும் போது, எனக்கு அவர் மேல சந்தேகமா இருந்தது.

அதனால் தான் அன்னைக்கு போனில் நான் கடுமையாக பேசினேன்.வாழ வேண்டிய பொண்ணு, இப்படி புள்ளைங்களோடு தனிமரமா நின்றால், நல்லாவா இருக்கும்?.

சொந்த பந்தம் இல்லாதவங்களுக்கு தான் அந்த அருமை தெரியும். கடவுளாக பார்த்து அந்த தங்கச்சி என்ற உறவு எனக்கு கொடுத்திருக்கான்.

"அது வாழ்க்கை நல்லா இருக்கணும் என்ற எண்ணம் எனக்கு இருக்காதா? பா என்க, எந்த ஒரு ரத்த பந்தமும் இல்லாமல் இவர்களுக்குள் எப்படி இப்படி ஒரு பாசம் என்று, ருத்ரன் வியந்து போய் சங்கரை போனான்"

ருத்ரனின் பார்வையை கண்ட சங்கர், என்ன தம்பி இப்படி பாக்குறீங்க என்க, இல்ல மாமா உங்களோட பாசத்தை பார்த்து ஆச்சரியமா இருக்கு எனக்கு. இந்த அளவுக்கு என் மேலயும் பாசம் காட்டுவீங்களா? என கேட்க, கண்டிப்பா".

"தங்கச்சி புருஷன் மேல பாசம் இல்லாம எப்படி இருக்க முடியும். ஆர்கலி மேல எவ்வளவு பாசமோ அந்த அளவுக்கு சொல்ல முடியாது. ஏனென்றால் என் தங்கச்சி இடத்தை யாராலும் நிரப்ப முடியாது".

" கூட பிறந்தால் தான் அண்ணன் தங்கச்சி இல்லை, அன்பால் இணைந்தாலும் உறவு தான்".

" நீங்க ரொம்ப படிச்சவங்க. உங்களுக்கு நான் அறிவுரை சொல்லுணுமென்று அவசியம் இல்லை. புருஷன் இல்லாமல் பொண்டாட்டியால்,இந்த உலகத்தில் வாழ்ந்திட முடியும்".

" ஆனால்,பொண்டாட்டி இல்லையென்றால் புருஷனுக்கு வாழ்க்கையே கிடையாது. பார்த்துக்குங்க என்றார்".

இலங்கை களுத்துறை பயணம்:

"நண்பர்கள் மூவரும் தூங்கிக்கொண்டிருக்க, கதவு தட்டும் சத்தம் கேட்டது".

" ரஞ்சன் எழுந்து போய் கதவை திறக்க, மூன்று பேருக்கும் இதில் டிரஸ் இருக்கு பா, ஆனந்த் தான் கொடுத்துட்டு போனரென்று சொல்லிய ஜேம்ஸ், குளிச்சிட்டு வாங்க, மார்னிங் பிரேக் பாஸ்ட் சாப்பிட வெய்ட் பண்ணிட்டு இருங்காங்களென்க, சரி மாமா என்று சொல்லிய ரஞ்சன் கதவை சாத்தி விட்டு, நண்பர்களை எழுப்பி விட்டான்".

" மூவரும் தயாராகி வெளியே வர ஒரு மணி நேரமானது. பின்னர் வீட்டை பூட்டிக்கொண்டு,பக்கத்தில் இருக்கின்ற ஆதிராவின் வீட்டிற்குள் சென்றனர்".

" அங்கே ஹாலில் எல்லாரும் இருப்பது தெரிந்து, என்னடா பெரிய மீட்டிங் போய்ட்டு இருக்கு போலயென்று ஆது சொல்ல, ம்ம்.. "

" வெட்டியா பேசி உசுர வாங்காமல், நாம சொல்லிட்டு கிளம்பிடலாமென்று ருத்ரன் சொல்ல, நண்பனை முறைத்து பார்த்த ஆது, ஆமாம்".

"நான் தான் ஆசைப்பட்டு பேசுறேன் பாருயென்றவனுக்கு, இருக்கலாம், யாருக்கு தெரியுமென்றான் ரஞ்ஜன்".

" என்ன ஆனந்த், மூன்று பேரையும் வெத்தல பாக்கு வச்சு அழைச்சா தான், வீட்டுக்குள்ள வருவானுங்களா? என சிம்ஹன் தாத்தா கேட்க, இருக்கலாம் மாமா என்றார்".

" டேய் சிங்கம் நம்மை பற்றி தான் பேசிட்டு இருக்கென்று ருத்ரன் உள்ளே செல்ல, மற்ற இருவரும் அவன் பின்னாடியே சென்றவர்கள், அங்கிருந்து சோபாவில் உட்கார,என்னப்பா கிளம்பலாமா என ஆனந்த் கேட்க, ஏன் வேற எதாவது பிளானா என்றான் ருத்ரன்".

" நோ நோ என்றார் ஆனந்த்".

" பின்ன, என்ன கேள்வி இது என்றவன், ராகினிக்கு நினைவு வந்து விட்டது என்க, என்னாஆ என அதிர்ந்தனர்".

"ஆமாம் மாமா.நைட் தான் டாக்டர் போன்ல சொன்னாரு என்ற ரஞ்ஜன், நாங்க போற வழியில் சாப்பிட்டுக்கிறோம்".

" நீங்க சாப்பிட்டு கிளம்புங்களென்று சொல்லி விட்டு, மூவரும் அங்கிருந்து ஹாஸ்பிட்டலை நோக்கி சென்றனர்".

" வேகமாகவும், அதே நேரம் நிதானத்தோடும் காரை ஓட்டி வந்த ருத்ரன்,ஹாஸ்பிட்டலின் பார்க்கிங் ஏரியாவிற்குள் நுழைந்து காரை நிறுத்தி விட்டு, வார்டிற்கு செல்ல ரஞ்ஜனுக்கு தான் பட படப்பாக இருந்தது".

" ராகினி இருக்கும் ஃப்ளோருக்கு வந்தவர்கள், அறைக்கதவை திறந்து உள்ளே போய் பார்க்க, அங்கிருந்த ஜன்னலோரமாய் நின்று வெளியே பார்த்துக் கொண்டிருந்த ராகினி, கதவு திறந்த சத்தம் கேட்டு திரும்பி பார்த்தவளுக்கு,இத்தனை வருடங்களாய் மறைந்திருந்த அழுகை வந்தது".

" வேகமாக தனது அண்ணனிடம் வந்தவள், அண்ணா என கட்டிக்கொண்டு அழ, ரஞ்ஜனுக்கும் அழுகை வந்தது".

"பின்னர் மற்ற இருவரையும் நலம் விசாரித்தவள், அண்ணா உன் கிட்ட ஒன்னு சொல்லணுமென்றாள்".

" ராகினி, முதல்ல உனக்கு உடம்புக்கு எப்படி இருக்குமா, அதை சொல்லலென்று ருத்ரன் கேட்க, நல்லா இருக்கேன் வீராணா என்றாள்"

" ஒற்றை பிள்ளையான ருத்ரனுக்கு ராகினியை ரொம்ப பிடிக்கும். எப்போதும் பள்ளியில் அண்ணா, அண்ணா என அவன் பின்னாடியே தான் இருப்பாள்"

" சில வருடங்களாய் கேட்காத அந்த குரலை கேட்டவனுக்கும் கண்கள் கலங்கியது"

"மீண்டும் அண்ணா நான் ஒன்னு சொல்லணுமென்றாள் ராகினி"

" என்னடா சொல்லு என்க, நம்ப அம்மாவை அந்த பொம்பளை தான் ணா அடித்து கொன்றாள். அதை அப்பா இல்லை இல்லை ச்சை அந்த ஆளும் வேடிக்கை பார்த்தார்ணா".

" நான் அம்மானு கதறி ஓடும் போது, அந்த பொம்பளை குறுக்கே கால் நீட்டிட்டாள். அதில் தடுக்கி தான் மாடியிலிருந்து கீழே விழுந்துட்டேணா என அன்று நடந்ததை சொல்லி ராகினி அழ,கேட்ட மூவருக்கும், கட்டுக்கடங்காமல் கோவம் வந்தது".
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
439
சதூர்வேதமங்கலம்:

" என்னடா, நாம எவ்வளவு பெரிய ஆளு, இவன் சாதாரண கூலிக்காரன், நமக்கு யோசனை சொல்லுறானே என நினைப்பீங்க என்க".

"அய்யோ மாமா, நான் அப்படிலாம் நினைக்கவில்லை என்று ருத்ரன் சொன்னான்".

"என் அனுபவத்தில் சொல்லுறேன் தம்பி, என்னோட அம்மா சாகும் போது, எனக்கு 5 வயசு. அப்பாக்கு வயல் வேலையை தவிர ஒன்னும் தெரியாது".

" வயசான பாட்டி, எதோ அவங்களுக்கு தெரிஞ்சதை எங்களுக்கு பொங்கி போடுவாங்கள்"

" ஒரு நாள் நல்ல மழை, நானும், பாட்டியும் வீட்டுல தூங்கிட்டு இருந்தோம்,நடு சாமத்தில அய்யோனு எங்க பாட்டி அலரல் சத்தம் கேட்டு நான் எந்திரிச்சி பார்க்க, எங்கப்பா, வாசல் படியில் ரத்தத்தோட கிடந்தார்.

"வருஷம் ஓட, பாட்டியும் செத்து போச்சு, யாரும் இல்லாமல் ஆகிட்டேன். கடவுள் புண்ணியத்துல தேவராஜ் அய்யாவோட அம்மாவும், அவரு மனைவியும் பசிக்கு சோத்தை போட்டாங்க".

" தேவராஜ் அண்ணனோட தங்கச்சி தேவகி அக்காக்கு பெரிய மனசு தம்பி. அண்ணா, முதல்ல இவனுக்கு ஒரு பொண்ணு பாருணா, இவனை குடும்பமாக்குணானு, சொல்லிட்டே இருக்கும்".

" பிறகு தான் கருப்பாயியை பார்த்து கட்டி வச்சாங்க. அதன் பிறகே வாழ்க்கை எவ்வளவு அழகானதுனு எனக்கு புரிஞ்சிது".

எதுவுமே இல்லாதவனுக்கு எல்லாமுமா மாறினாள். தாய்க்கு பிறகு தாரம்னு சொல்லுவாங்க தம்பி, ஆனால் எனக்கு மனைவியே அம்மாவா இருக்கா.

"போனதையே நினைத்து வாழுறவன், போக்கத்த பயல்னு எங்க பாட்டி சொல்லும்".

"இனி ரெண்டு பேரும் புதுசா வாழ்க்கையை ஆரம்பியுங்க. பொண்டாட்டி கிட்ட தோற்று போற ஆண்கள், வாழ்க்கையில் எப்போதும் தோற்க மாட்டாங்க".

உங்கள் அனுபவத்தை பாடமா எனக்கு சொல்லியிருக்கீங்க மாமா. எனக்கும் பேருக்கு தான் மாமா அம்மா- அப்பா.

ஆனால் அதற்கு தகுதியானவங்க, தாத்தாவும், பாட்டியுமே என்றவன், தன் சிறுவயது விஷயங்களையும், இலங்கைக்கு போனதையும் சொன்னான்.

என் பிள்ளைங்களுக்கு அந்த நிலை வர விட மாட்டேன் மாமா என்றவன், இன்னும் ரெண்டு நாள்ல நாங்க இங்க இருந்து கிளம்புறோம்.

நேரம் கிடைக்கும் போது, நீங்க கண்டிப்பா வரணும் மாமா என ருத்ரன் சொல்ல, நிச்சயமா தம்பி. தாய்மாமன் சீரோட வருவேனென்றவர், போகலாமா என எழ, ம்ம் மாமா என்றவாறு சங்கரும், ருத்ரனும் பேசிக்கொண்டே, வீட்டை நோக்கி நடந்தனர்.

ஆர்கலி மட்டும் ஹாலில் உட்கார்ந்திருப்பதை கண்ட சங்கர், எங்கே உன் அண்ணி என்க,மாடுகளுக்கு தண்ணீர் காட்டிட்டு வரேனென்று போயிருக்காங்கண்ணா என்றாள்.

ஓஓ என்றவர், சரி மா, நானும் வீடு வரைக்கும் போய்ட்டு வரேன். எதாவது வேண்டுமென்றால் போன் போடுங்களென்று சொல்லிக்கொண்டு அங்கிருந்து சென்றார்.

ஹாலில் இருக்கும் மனைவியை பார்த்துக்கொண்டே அவள் எதிரில் இருக்கும் ஷோபாவில் வந்து உட்கார்ந்தவன், ஆர்கலியையே பார்க்க.

சிறிது நிமிடம் வரை கண்டு கொள்ளாமல் இருந்தவள், எதுக்கு இவன் இப்படி பாக்குறானென்று முணு முணுத்தவள், பார்வையை வாசல் பக்கம் திருப்பிக்கொண்டாள்.

கழுத்து வலிப்பது போல இருந்ததால் திரும்பி உட்கார்ந்தவள், வலம் இடம் கழுத்தை அசைத்து விட்டு முன் பக்கம் பார்க்க, ருத்ரன் தனது பார்வையை மாற்றாமல் அதே பொஷிசனில் இருப்பதை கண்டவள், லூசாகிட்டானோ?.

இல்லை ஆணி எதாவது அடிச்சி உட்கார்ந்திருக்கானா?, என்று மனதிற்குள் திட்டி விட்டு, சோபாவிலிருந்து எழுந்தவள், பாட்டி எங்கே என பார்வையை சுழற்றி தேட, மூன்று பாட்டிகளும்,எதிரில் இருக்கும் இன்னொரு ரூமில் பேசிக்கொண்டிருப்பது தெரிந்து, அங்கே சென்றாள்.

"யாரோ வரும் காலடி சத்தம் கேட்டு, சைலஜா பாட்டி வாசல் பக்கம் பார்க்க, அங்கே ஆர்கலி வருவது தெரிந்தது".

"கிரிஜா, அம்மு தான் வராளென்று சொல்ல,அதோடு அவர்கள் பேச்சை நிறுத்திக் கொண்டனர்.

தயங்கியபடியே உள்ளே வந்தவள், பாட்டி ஏதாவது தொந்தரவு பண்ணிட்டேனா? என்று கேட்க அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல,நீ வா மா. வந்து உட்காரு என்றார் சிம்ஹன் தாத்தா.

இதழ் பிரியாமல் சிரித்தவள், தரையில் உட்கார, அட என்னம்மா பண்ணுற?, இங்கே தான் சோபா இருக்கே, அதில் உட்காரென்று கிரிஜா பாட்டி சொல்ல, பரவாயில்லைங்க என்றாள்.

அவள் யாரோ மூன்றாவது மனுஷி போல பேசியதை கேட்டவர், ஏம்மா அம்மு, சைலஜாவை பாட்டியா ஏற்றுக்கொள்ள முடிந்த உன்னால், என்னை பாட்டியாக ஏற்க மனம் இல்லையா?.

நாங்கள் எந்த பாவமும் அறியாதவங்களென்று சொல்ல, அய்யோ பாட்டி, ஏன் இப்படிலாம் சொல்லுறீங்கள்.

நான் அப்படிலாம் எதுவும் நினைக்கவில்லை. நீங்களும் பாட்டி தானென்று சிரித்தவளை பார்த்தவர், உன் கிட்ட கொஞ்சம் பேசணும் மா என்றார்.

ம்ம் பேசுங்க பாட்டியென ஆர்கலி சொல்ல, உன் புருஷனை பற்றி உனக்கு என்னமா தெரியும்?, சொல்லு பார்க்கலாமென்று கேட்க..

எனக்கு புருஷன் எங்கே இருக்காங்க பாட்டி?, அவரை பற்றி நான் சொல்ல என்னும் போதே, ஏதோ படாரென்று உடையும் சத்தம் கேட்க, அய்யோஓஓ ரத்தமென்று மலரின் அலரல் சத்தம் கேட்டு, என்னாச்சியென ரூமிலிருந்தவர்கள் வெளியே வந்து பார்த்து அதிர்ந்து போனார்கள்".

" முதலில் சுதாரித்த கிரிஜா பாட்டி, வீரா என பதறி போய் பேரனின் கையை பிடிக்க ,ரத்தம் வழிந்தோடியது".

என்னாச்சி வீராயென்கும் போதே ஈர துணியோடு அங்கு வந்த மலர், அம்மா இந்த துணியை கட்டுங்க, ரத்தம் போய்ட்டு இருக்கு பாருங்களென்றவர், இடுப்பில் இருந்த போனை எடுத்து சங்கருக்கு கால் பண்ணினார்..

"மனைவியிடம் பேசிக்கொண்டிருந்த சங்கர், போன் சத்தம் கேட்டு, புள்ள அதை எடு என்க, கருப்பாயியும் எழுந்து போய் டிவி இருக்கும் டேபிள் மேலேயிருந்த போனை எடுத்து பார்த்து, மலரக்கா தான் மாமா என்க"

" அட்டென் பண்ணி என்னனு கேளு புள்ளயென்க, கருப்பாயியும் அழைப்பை ஏற்று சொல்லுக்கா என்றவர் அங்கு சொல்லபட்டதை கேட்டு, இதோ அனுப்பி வைக்குறேன்கா என்று கட் பண்ணி விட்டு, மாமா அந்த தம்பி கையில் பீங்கான் வெட்டி காயமாம்".

ரத்தம் அதிகமாக போகுது, உன்னை வர சொல்லுறாங்களென்க, அய்யைய்யோ என்றபடியே கொடியில் இருந்த சட்டையை போட்டுக்கொண்டு, பெரிய வீட்டை நோக்கி வேகமாக வந்தார்.

"எல்லாரும் பதறி போய் ருத்ரனிடம் கேட்டுக் கொண்டிருக்க, ஆர்கலியோ அதை பற்றி கண்டுக்கொள்ளாமல், சாவகாசமா எழுந்து ஹாலிற்கு வந்தவள்,அவர்கள் யாரையும் சட்டை பண்ணாமல், அங்கிருந்து வெளியே சென்றாள்".

" ருத்ரனும் ஆர்கலியை தான் பார்த்துக்கொண்டிருந்தான்".

" மூச்சை ஆழமாக இழுத்து விட்டவள், தனது வீட்டை நோக்கி நடந்து செல்ல, எதிரே வந்த சங்கரும், வீட்டுக்காடா என்க, ஆமாணா என்று சொல்லிச் சென்றாள்".

" வேக எட்டில் உள்ளே வந்து ருத்ரனை அழைத்துக்கொண்டு டவுனில் இருக்கும் ஹாஸ்பிட்டலுக்கு செல்ல, அவன் சட்டை முழுவதும் இருக்கும் ரத்தத்தை பார்த்து போலீஸ் கேஸ் என்றனர்".

" பல்லை கடித்து தன்னை நிதானம் பண்ணிக்கொண்டவர், சார் கிட்ட பெரியவர் வீட்டில் இருந்து சங்கர் வந்துருக்கேனு சொல்லுங்க என்க, அந்த நர்ஸ் பொண்ணோ எதுவும் சொல்லாமல் கதவை திறந்து உள்ளே போய் விஷயத்தை சொல்லி சில நிமிடத்திலே வந்தவள், டாக்டர் வரச்சொல்லுறாங்க என்றாள்".


" பின்னர் உள்ளே சென்ற சங்கர், டாக்டர் இவங்க என் தங்கச்சி வீட்டுக்காரர், பீங்கான் தட்டு உடைஞ்சி கையை வெட்டிருச்சி என்க, ருத்ரனை ஒரு பார்வை பார்த்தவர், அங்கிருந்த நர்ஸிடம் கையை சுத்தம் பண்ண சொல்லி விட்டு, ஒன்பது தையலை போட்டவர், ஏன் மேன் பொண்டாட்டி மேல உள்ள கோவத்தை, பீங்கானிலா காட்டுவது? என்க".

" அதைக்கேட்ட ருத்ரன் அதிர்ந்து பார்த்தான்".

சென்னை சிம்ஹன் பேலஸ்:

" கண்ணையா டிபனை எடுத்து வையுங்களென்று சொல்லியவாறு டைனிங் டேபிளின் முன்பு வந்து தனா உட்கார,அவருக்கு டிபனை பரிமாற, சாப்பிட்டு முடித்தவர், மதிய சாப்பாட்டை நம்ப பீங்கான் பேக்டரிக்கு அனுப்பிடுங்க என்றபடியே வெளியே போக, காரும் அவர் முன்பு வந்து நிற்க, கதவை திறந்து முன்பக்கம் ஏறி உட்கார்ந்ததும், கார் அங்கிருந்து புறப்பட்டது".

"ஒரு பார்வையாளராக ஹாலில் உள்ள சோபாவில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்த தேவியிடம் வந்த வேலையாள், அம்மா உங்களுக்கு டிபன் என்க, வேண்டாம் ணா".

" ஒரு டீ மட்டும் போதுமென்று கண்ணை மூடிக்கொள்ள, அங்கிருந்து கிச்சனிற்குள் வந்த வேலையாளோ, எப்படி ஆட்டம் போட்ட மனுஷி, இப்படி அடங்கி போய் இருக்காங்க".

" இதான் விதி என்பது போலயென தனக்குள் சொல்லிக்கொண்டவர், சிறிது நிமிடத்தில் டீ கிளாஸோடு தேவியிடம் வந்து, டீ மா என்று சொல்லி விட்டு, டீப்பாயின் மேல் வைத்து சென்றார்".

" பெரு மூச்சை ஒன்று விட்ட விஷாலா தேவி, கலங்கிய கண்களோடு, டீயை எடுத்து குடித்தவர், இன்றும் சொல்லாமலே கிளம்பிட்டீங்களே தனா".

" இவ்வளவு பெரிய தண்டனையை கொடுத்ததற்கு, என்னை கொன்று
புதைத்திருக்கலாமே?, ஒரு நொடி கூட நான் இல்லாமல் இருக்கமாட்டீங்கள்".

" அப்படி இருந்த மனுஷன், கேவலம் ஒரு பிச்சைக்கார மருமகளுக்காக என் கிட்ட பேசாமல் இருக்கீங்களே?, இது எவ்வகை நியாயாம் தனா".

" இன்னும் எத்தனை நாளைக்கு தான் உங்கள் வெட்டி வீராப்பென்று நானும் பார்க்கிறேன்".

" விஷா விஷாயென்று புலம்பி என் கிட்ட வந்து தானே ஆகணும், வர வைக்கிறேன் இருங்களென்று மனதிற்குள் சொல்லிக் கொண்ட தேவி, டீயை குடித்து முடித்து விட்டு, மேலே இருக்கும் தனது அறைக்குள் சென்றவர், டெக்ஸ்டைல்ஸிற்கு தயாரானார்".

" அரை மணி நேரத்தில் பழைய மிடுக்கோடு தயாராகி கீழே வந்தவர், சாப்பிட உட்கார, வேலையாள் டிபனை பரிமாற, தேவையானதை சாப்பிட்டவர், தனாக்கு லஞ்ச் நான் கொண்டு போறேன்".

" ரெடியானதும் சொல்லுங்களென்று சொல்லி ஹேண்ட் பேகை எடுத்துக்கொண்டு வெளியே செல்ல, வேலையாளுக்கோ தலை பிய்த்துக்கொண்டு போனது".

" அப்பனே முருகா, ஞான பண்டிதா, ஏனப்பா இந்த அடியேனை இப்படி சோதிக்குறாய்?, இந்த அம்மா கொண்டு போனால் எனக்கு தானே கச்சேரி".

" வேண்டாமென்றாலும் இந்த அம்மாவிடமும் எனக்கு கச்சேரி, இதற்கு ஒரு தீர்வில்லையா??என்க, வசந்தி மேடம் இருந்திருந்தால் நமக்கு பிரச்சினை இல்லையென்று இன்னொரு வேலையாள் சொல்ல,ம்ம் என்றவர், சரி மதிய சமையலை தொடங்குவோம்".

"எங்கப்பன் செந்தூராண்டவர், எதாவது வழியை காட்டுவாரென்று சமையல் அறைக்குள் சென்றார்".

ஆதிரா எங்கே...?
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top