Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 429
- Thread Author
- #1
திருச்சூர்- பாண்டியன் பேலஸ்:
" வேலை முடிந்து வீட்டிற்கு வந்த வசு, யோசனையில் இருக்கும் தனது தாயின் அருகில் உட்கார்ந்து கொண்டு, அம்மா, அம்மா என்க.. ".
" சைலஜா பாட்டியிடம் எந்த எதிர்வினையுமில்லை. பின்னர் அவரின் தோளை தட்டி, அம்மா என வேகமாக கூப்பிட, அதில் நிகழ்விற்கு வந்தவர், பக்கத்தில் இருந்த மகளை பார்த்து, வந்துட்டியா வசு".
" இரு அம்மா டீ கொண்டு வரேனென்க, அதுலாம் ஒன்னும் வேண்டாமா. அப்புறம் ஒரு விஷயம், எனக்கு டிரான்ஸ்பர் ஆகிட்டு என்க".
" அப்படியா?, எந்த ஊருக்கென்று சைலஜா பாட்டி கேட்க, பொள்ளாச்சிக்கு மா".
" வர மண்டே ஜாயின் பண்ணனும்மா".
"ஓஓஓ.... உன் அண்ணன் வேற இல்லையே வசு, நீ மட்டும் எப்படி தனியாக போவாய்?, ஒன்னு பண்ணலாம், நாம போகலாம், அங்க வீடு பார்த்து விட்டு, பிறகு அப்பாவும், அண்ணாவும் வரட்டுமென சைலஜா பாட்டி சொல்ல,இல்லம்மா".
" நான் மட்டும் தான் போறேன். அங்க கெஸ்ட்ஹவுஸ் இருக்கு. அண்ணன் வந்த பிறகே நீங்க அனுப்புங்க".
" அதும் இல்லாமல் இன்னும் கொஞ்சம் பென்டிங் வொர்க் இருக்கு, அதை முடிச்சிட்டு தான் நான் கிளம்பணும்".
" அதற்குள் அண்ணா வந்துடும்மா என வசு சொல்ல, சரி மா. உனக்கு எது சரியா வருதோ அதைப்போலவே பண்ணுமா என்றவர், மீராக்கா, வசுக்கு காஃபி கொடுக்கலையா என்க, இதோ வந்துட்டேனென்று, வசுக்கு காஃபியை கொடுத்தவர், இதை நீ குடி என சைலஜா பாட்டியிடம் நீட்ட, நன்றிக்கா என்றார்".
" காஃபியை குடித்து முடித்த வசு,சரிமா, எனது ரூமுக்கு போகிறேனென்று சொல்லி செல்ல,சைலஜா பாட்டியின் அருகில் வந்த உட்கார்ந்த மீரா, நீ எதை நினைத்து வருத்தப்படுகிறாய் என்று எனக்கு நல்லா தெரியுது".
"வசுவோட வாழ்க்கை என்னமோ, இந்த டிரான்ஸ்பர் மூலயமாய் சரியாகிடுமென்று எனக்கு தோணுது சைலு".
"நமக்கு மட்டும் தெரிந்த விஷயம் நம்ம வீட்ல இருக்கும் வேலைக்காரங்களுக்கு தெரியாது. நீ இப்படி இருந்தால் அவங்களாம் என்ன நினைப்பாங்கள் சொல்லு? என்க".
"அக்கா சத்தியமா என்னால தாங்க முடியலைக்கா.ஒத்த புள்ளைய பெற்று, அதுக்கு ஒரு நல்லது கெட்டது செய்து பார்க்க முடியாத பாவியா ஆகிட்டேனே என்று அழுதார்".
"நீயே நம்ம வீட்ல இருக்கும் வேலையாட்களுக்கெல்லாம், நம்ம பொண்ணோட வாழ்க்கை பற்றி காட்டி கொடுத்துருவ போல?,இத்தனை வருஷம் எப்படி நம்ம கட்டி காப்பாத்திணோம்,அதை நினைத்து பாருமா".
" மீரா பாட்டி சொன்னதை கேட்ட சைலஜா பாட்டி, உனக்கு தெரியாது ஒன்னும் இல்லக்கா.இத்தனை வருஷமா என் மனசுக்குள்ளிருக்கும் வேதனையை உங்ககிட்ட தான் சொல்லி அழுதுகிட்டு இருக்கேன்".
"இவர் ஒரு வார்த்தை குழந்தை உயிரோட இருக்குனு சொல்லியிருந்தால்,எப்படியும் அந்த பையனை தேடி பிடித்து, கைகால்ல விழுந்தாலாவது,கல்யாணம் பண்ணி வச்சிருக்கலாம்.அவளும் ஒரு குடும்பமாக வாழ்ந்திருப்பாள்".
" ஆனால் இவரு பண்ணிய வேலையால், ஒரு சன்னியாசி போல இத்தனை வருஷமா வாழுறாளேக்கா?, பெத்த வயிறு எப்படி இருக்கும் சொல்லுங்க?, கடல்ல அடிச்சிக்கிட்டு போனவனுக்கு துடுப்பு கிடைச்ச போல, அம்மு கிடைச்சாள்".
" வசுவும் அந்த இறுக்கத்திலிருந்து வெளியே வந்து, சிரிக்க ஆரம்பிச்சி நல்லா போனது.அதுவும் அந்த கடவுளுக்கு பொறுக்கலை".
" ருத்ரன் மூலயமாய் மீண்டும் பிரிச்சிட்டான்.புருஷன் பொண்டாட்டி பிரச்சினையென்றாலும், எல்லாவற்றிலும் பாதிப்பு நம்ம பொண்ணுக்கு தான் கா என்று சொல்லி கதறி அழுதார் சைலஜா பாட்டி".
" அழாத சைலு,எல்லாம் நல்லதுக்கேயென்று நினைப்போம். வசு கூட நான் போறேன். நீ இங்க இருந்து பார்த்துக்கோ என மீரா சொல்ல, அக்கா நான் மனசுல நினைச்சதை நீங்க சொல்லிட்டீங்க என்க, நீ பெற்றவள், நான் தூக்கி வளர்த்தவள் மா".
" நம்ப புள்ளை வாழ்க்கை சரியாகும்னு எனக்கு ஏதோ மனசுல படுது.எல்லாம் அந்த சோட்டானிக்கரை பகவதி அம்மா அருள் தான் என்ற மீரா பாட்டி, நாளைக்கு வெள்ளிக்கிழமை. ரெண்டு பேரும் கோயிலுக்கு ஒரு எட்டு போயிட்டு வரலாமா என்க, போலாம்கா என்றார் சைலஜா பாட்டி".
" அந்த நேரம் உள்ளே வந்த சுந்தரபாண்டியன் தாத்தா,அப்படி என்ன அக்கா தங்கை இருவரும் பிளான் போடுறீங்க? என கேட்டுக் கொண்டு, அங்கிருந்து சோபாவில் வந்து உட்கார்ந்தவர், மீரா எனக்கு ஒரு டீ எடுத்துட்டு வாம்மா என்க, இதோ அண்ணா என்றபடியே உள்ளே சென்றவர், சிறிது நிமிடத்தில் டீயோடு வந்தவர், இந்தாங்கணா என்க.. ".
" கொடுமா என வாங்கி குடித்தவர்,ரொம்ப தலைவலி மா. இப்போதான் பரவாயில்லை என்றவர், மனைவியின் முகத்தை பார்க்க, அதில் அழுத தடம் இருந்தது".
" பெருமூச்சி விட்டவர், சைலு என்க, நாளைக்கு நானும் அக்காவும், சோட்டாணிக்கரைக்கு போய்ட்டு வரோம்க, அப்புறம் வசுக்கு பொள்ளாச்சிக்கு டிரான்ஸ்பர் ஆகிருக்கு".
" மண்டே ஜாயின் பண்ணனுமாம் என்க, ஓஓஓ என்றவர், மைக்கேல் வேற ஊர்ல இல்லை. அம்முவை தேடி போனவன் கிட்ட இருந்து ஒரு ஃபோனும் இதுவரை வரவில்லை".
" வசு மட்டும் எப்படி தனியா என சுந்தரபாண்டியன் யோசனையாக, அண்ணா, நான் போறேன் என மீரா சொல்ல, சரி மா".
" அப்போ, மைக்கேல் வந்ததும் நான் அங்க அனுப்பி வைக்கிறேனென்றவர், ஏன் நானெல்லாம் கோயிலுக்கு வரக்கூடாதா என கேட்க, வாங்களேன். உங்களை யாரு வேண்டாமென்றாங்க என சைலஜா பாட்டி சொல்ல,சரிங்க மேடமென்றார் சுந்தரபாண்டியன்".
சதூர்வேதமங்கலம்:
" மண்டபத்தில் பாடல்கள் ஒலிக்க, மேடையில் எல்லாம் சரியா இருக்காயென பெரியாச்சி அம்மா ஒரு முறை பார்த்தவர், சங்கரு, மாலை இன்னும் வரலைப்பா என்க..".
" நம்ப பாலு கிட்ட சொல்லியிருக்கேன் கா. காலையிலே வாங்கிக்கலாம்னு சொன்னாரு.அதான் முத்துவை வாங்க அனுப்பியிருக்கேனென்று சங்கர் சொல்லும் போதே, மாலை இருக்கும் கவரோடு, முத்துவும் அங்கு வந்து சேர்ந்தான்".
" அண்ணா மாலை என சொல்ல, அக்காட்ட குடுடா என்க, பெரியாச்சியிடம் சென்றவன், இந்தாக்கா என கவரை நீட்டினான்"
" இரண்டு கையாலையும் வாங்கியவர், கவரில் போட்டிருந்த முடிச்சை அவிழ்த்து, அதில் இருந்த மாலைகளை பொறுமையாக எடுத்தவர், அங்கிருந்த தாம்பாளத்தில் வைத்து விட்டு, இப்போ எல்லாம் சரி".
" இனி ஆர்கலி வந்த பின்ன, நல்ல நேரம் பார்த்து வளையலை போட்டுற வேண்டியது தான் என்றவர், இன்னும் உன் பொண்டாட்டி என்னடா பண்ணுறாள்?, எல்லாரும் வந்தாச்சி".
" இவளை காணுமேயென்க, தங்கச்சியை கூப்பிட தான் போனாள்கா. இரு, நான் போன் போட்டு பாக்குறேனென்று, பாக்கெட்டில் இருந்த போனை எடுத்து, மனைவியின் நம்பருக்கு கால் பண்ண, அட்டென் பண்ணிய கருப்பாயி, இதோ வந்துட்டே இருக்கோம் மாமா".
" நம்ப சின்னா வீடு கிட்ட வந்துட்டோமென்று சொல்லி போனை வைக்க, அக்கா வந்துட்டு இருக்காங்கலாம் என்று சொல்ல, சரி சங்கரு".
" நல்லநேரம் காலை ஒன்பதரைக்கு தான் ஆரம்பிக்குது, இன்னும் பத்து நிமிஷம் இருக்குப்பா என்றவர், அங்கிருந்த பாட்டியின் அருகில் போய் உட்கார்ந்து கொண்டார்".
" ஊருக்கு பொதுவான சின்ன மண்டபம் அது. யார் வீட்டில் இதைப்போல சின்ன விஷேசமென்றாலும், பஞ்சாயத்துகாரரிடம் சொல்லி விட்டு இங்கே நடத்திக்கொள்ளலாம்".
" அதற்கு வாடகை 1000 ரூபாய் என பேசி ஒரு மனதாக முடிவெடுத்திருந்தார்கள்".
" தாராளமாக நூறு பேருக்கு மேல் உட்காரும் அளவிற்கு, உள்ளே ஹாலில் இடம் இருந்தது".
" இன்று ஆர்கலிக்கு வளையல்காப்பு என்பதால், ஊரில் உள்ள அனைவரையுமே, முதல் நாளே சங்கரும், கருப்பாயியும் வீடு தேடி போய் பங்ஷனிற்கு வரச்சொல்லி அழைத்திருந்தார்கள்".
" ஞாயிற்றுக்கிழமை என்பதால், மக்களுக்கும் வசதியாக போக, எல்லாருமே வந்திருந்தனர்".
" மாமா, நான் ஆராமாவையும், பாட்டியும் கூப்பிட்டு வரேன், நீ புள்ளைங்களோடு மண்டபத்திற்கு போய், வரவங்களை பாரு என்க, சரி புள்ள".
" ஆட்டோ சொல்லியிருக்கேன், பார்த்து வந்துடுங்க என்றவாறு, சங்கர் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு, கோயில் அருகே இருக்கும் பொது மண்டபத்திற்கு சென்று விட்டார்".
" வளையல்காப்புக்கு கல்யாண புடவை தான் கட்டணும். ஆனால் அதற்கு சாத்தியமில்லை என்பதால், ஏற்கெனவே ஒரு முறை கட்டிய பட்டு புடவையை கட்ட சொல்லி, ஆர்கலியின் நீண்ட கூந்தலை பின்னி, பூவைக்கொண்டு தனக்கு தெரிந்த வரையில் கருப்பாயி அழகு படுத்தி விட்டு, முன்னே வந்து பார்க்க,நல்லா இருக்க ஆராமா".
" சரி சாமிய கும்பிட்டுட்டு வாங்க போகலாம். உன் அண்ணன் கிட்ட, நான் வேற சின்னா வீட்டு கிட்ட வந்துட்டேனு சொல்லிட்டேனென்றவர், சிலீண்டரை ஆப் பண்ணி விட்டு, தோட்டத்து கதவை தாழ்ப்பாள் போட, பின்னர் மூவரும் வெளியே வந்தனர்".
" வீட்டு சாவி கண்ணு என பாட்டி நீட்ட, நீங்க ரெண்டு பேரும் போய்,ஆட்டோவில் உட்காருங்கள் ஆச்சி. நான் பூட்டிட்டு வரேனென்று சொல்ல, இருவரும் ஆட்டோவில் உட்கார்ந்தனர்".
" சாவியை கையில் இருந்த பர்சில் போட்டுக்கொண்டு, வெளியே இருக்கும் இரும்பு கதவை உள் பக்கமாய் கையை விட்டு தாழிட்டு, ஆட்டோவில் ஏறிய கருப்பாயி, அண்ணா போகலாமென்றார்".
" ஏத்தா, உன் புருசன் இதோட அம்பது போன் அடிச்சிட்டான், இன்னுமாடா வரீங்கணு என்க, அப்படியாணா என சிரித்தவர்,கிளம்ப வேண்டாமாணா?, சாதாரண பொம்பளையா?, சட்டு புட்டு ரெடியாக, வயித்து புள்ளைகாரி, முன்ன பின்ன ஆகும் தான் என்க, இது உன் புருசனுக்கு தெரியலையேத்தா என்றவாறு ஆட்டோவை ஓட்டிச்சென்றார் ".
" ஐந்து நிமிடத்தில் அந்த மண்டபத்தின் வாசலில் வந்து ஆட்டோ நிற்க, முதலில் இறங்கிய கருப்பாயி, ஆராமா பார்த்து இறங்கென்க, ஆர்கலியும் தனது பெரிய வயிற்றை தூக்கிக்கொண்டு கீழே இறங்கினாள்".
" நல்ல நேரம் ஆரம்பிச்சிட்டுடி என்றவாறு சங்கர் அங்கு வர, வந்துட்டோம் மாமா. இங்கு எல்லாம் தயார் தானே என்க, பேச்சை குறைடி".
" தங்கச்சிய கூப்பிட்டு உள்ளே வா என்று சங்கர் முன்னே நடந்தான்".
" ம்கும் என முறுக்கி காட்டிய கருப்பாயி, படியில பார்த்து ஏறிவா ஆராமா என்றபடியே நடக்க, சரிங்க அண்ணி என்றவள், இரண்டு படியில் ஏறி மண்டபத்தின் உள்ளே வலது கால் வைத்து சில அடி நடந்தவள், எதிரில் இருப்பவர்களை பார்த்து அதிர்ந்து போய் நின்றாள்".