Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 421
- Thread Author
- #1
வெற்றி- ஜனனி நினைவுகள்:
"மணியின் கல்யாண நாளும் வந்தது.எல்லாரும் மண்டபத்தில் இருக்க, ஜனனி மட்டும் உடல் முடியலையென்று சொல்லி வீட்டிலே இருந்து விட்டாள்".
“கீதாவை பார்த்தவன், பாப்பா என்று கூப்பிட,இதோணா என்று அங்கு வந்தவளிடம்,ஜனனி எங்கேடா? என்க,அவள் வரலைணா. வீட்டில் தான் இருக்கிறாளென்றாள்".
"ஓஓஓ என்றவன்,அங்க வீட்ல வேறு யாராவது இருக்காங்களா என்க, இல்லைணா.எல்லாரும் இங்க தான் இருக்காங்களென்க,ம்ம் சரி பாப்பு என்று சொல்லியபடி அங்கிருந்து சென்றான்".
"கீதாவிற்கு மட்டும் இருவருக்குள் ஏதோ இருப்பது புரிந்து,எப்படியே அந்த மாரியாத்தா புண்ணியத்தில் நல்லா இருக்கட்டுமென்று சொல்லிக்கொண்டாள்".
"வேகமாக ஜனனி வீட்டிற்கு செல்ல,அங்கே கதவு லேசாக ஒருகளித்து சாத்தியிருப்பதை கண்டு,உள்ளே போய் பார்க்க,ஜனனி தோட்டத்தில் சமைப்பது தெரிந்தது".
"காலடி சத்தம் கேட்டு திடுக்கிட்டு திரும்பி பார்த்த ஜனனி,அங்கு வருபவனை சிறிதும் எதிர்பார்க்கவில்லை".
"இரண்டு வருடங்களுக்கு பிறகு இன்று அவன் முகத்தை பார்த்தவள், அதிர்ச்சியில் எழுந்து,வேறு பக்கம் திரும்பி நின்று கொண்டாள்".
"அய்யோ ஜனனி உண்மை தெரியாமல் உன்னை ரொம்ப தப்பா பேசிட்டேன் டி.
தயவு செய்து என்னை மன்னிச்சிடென்றவன்,அவள் கையை பிடிக்க,அவனிடமிருந்து தனது கையை உதறியவள்,அடுப்பில் எரிந்து கொண்டிருந்த விறகை எடுத்து, வெற்றி பிடித்த இடத்தில் வைத்தாள்".
"ஏய் என்னடி பண்ணுற என பதறியவன்,அவளிடமிருந்து விறகை பிடுங்கி தூக்கி எறிந்து விட்டு, அய்யோ வாடி ஹாஸ்பிட்டல் போகலாமென்று பதற,வலித்தாலும் பல்லை கடித்து பொறுத்தவள், வாசலை நோக்கி அவனுக்கு கையை காட்டினாள்".
"ஏய் தயவு செய்து என்னைமன்னிச்சிடுடி.இப்படிலாம் பண்ணாதடி என்று கத்தியவன், பிளீஸ் வா ஹாஸ்பிட்டல் போகலாமென்க,காய் அரிந்து விட்டு ஓரமாக வைத்திருந்த அருவாள்மனையை எட்டி எடுத்தவள், தனது கழுத்தில் வைத்துக்கொண்டு மீண்டும் வாசல் பக்கம் தனது கையை நீட்டினாள்".
"அய்யய்யோஓஓஓ என்று பதறியவன் வேண்டாம்டி வேண்டாம்.உனக்கு ஒன்னு என்றால் சத்தியமா நான் உயிரோட இருக்கமாட்டேன் என்று கதறியவன்,பிளீஸ் அதை எடுடி என்று அவளிடம் போக,ஜனனியோ கழுத்தில் இருந்ததை எடுத்து ஓங்க போக,வேண்டாம் வேண்டாம்".
"நான் போய்டுறேன் டி. போய்டுறேனென்று கண்ணீரோடு சொல்லி விட்டு,அங்கிருந்து சென்று விட்டான்".
"அதன் பின்னர்,கடந்த இரண்டு வருடங்களாக,ஜனனியிடம் எத்தனையோ முறை வெற்றி மன்னிப்பு கேட்டு விட்டான்.ஆனால் அவள் ஒருமுறை கூட அவன் முகத்தை பார்த்து பேசியதும் இல்லை,அவனுக்கு எந்த பதிலும் அவள் சொல்லியதில்லை".
"பிறகு தான் அவளுக்கு அன்பு கூட நிச்சயம் நடக்கப்போவதை தடுத்து நிறுத்தி,ஊரறிய இருவருக்கும் நிச்சயம் நடந்தது".
"கோயிலுக்கு சென்று வந்த மறுநாள், மாலை வேளையில் வெற்றி பேக்கிங் பண்ணிக்கொண்டிருக்க, அவன் ரூம் வாசலில் யாரோ நிற்பதாக தோண,வாசல் பக்கம் திரும்பி பார்த்தான்".
"அங்கே ஜனனி தான் நின்று கொண்டிருந்தாள்.எதுவும் சொல்லாமல் பொறுமையாக உள்ளே வந்தவள்,சற்று தயங்கியபடியே அவனருகில் வந்து தனது வலது கையை நீட்ட,அதில் விபூதி, குங்குமம் இருந்தது".
"சாமியோடது என்பதால் அதை எடுத்து தனது நெற்றியில் வைத்துக்கொண்டவன்,மரியாதையா இங்க இருந்து போய்டு என்க,சாரிங்க என்றாள்".
"வேகமாக தனது பல்லை கடித்தவன் வெளியே போடி என்க,அன்னைக்கு எல்லாருக்கும் முன்னாடி என அவள் சொல்ல வர,வேகமாக கட்டிலில் இருந்து எழுந்தவன், மாறி மாறி அவள் கன்னத்தில் அறைந்தான்".
"உனக்கு பிடிக்கலைனா எத்தனையோ வழி இருக்குடி.அதில் எதாவது ஒன்றை சொல்லியிருக்கலாம்.அதை விட்டு எங்கப்பாவை எல்லாருக்கும் முன்பு கைகூப்பி மன்னிப்பு கேட்க வைக்கும் சூழலுக்கு கொண்டு வந்த பாரு, அப்பவே உன் மேல இருந்த காதல் எனக்குள் செத்து போய்ட்டு".
"பிறகு ஏண்டா நிச்சயம் பண்ணினனு கேட்குறியா?,வேற ஒருத்தி கூடலாம் கற்பனையிலும் என்னால் வாழ முடியாது.அந்த ஒரே எண்ணம் மட்டும் தான்".
"ஓ நீ ஆசைப்பட்ட போல வேலை கிடைச்சிடுச்சு என்றதும்,என்னை தேடி வந்துட்டியோ,இந்த நேரத்துல என்கிட்ட உனக்கு என்ன எதிர்பார்ப்பென்று அவள் தலைமுதல் கால் வரை பார்த்தவன், நான் கொலைகாரன் ஆகுறதுக்குள் இங்கிருந்து போய்டுடி என வாசல் பக்கமாய் தள்ளி விட்டான்".
" இரவு வெகு நேரம் வரை தூங்காமல் மாடியில் நடந்தவன், அதிகாலையில் தான் அறைக்குள் வந்து படுத்தான்".
"பின்னர் கோபியோடு காரில் ஏறி போகும் போது, எங்கையாவது ஜனனி கண்ணில் படுறாளா என பார்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது".
" டேய் தடிமாடு என்ற விஷாலின் சத்தத்தில், இத்தனை நேரம் கடந்த கால நினைவுகளில் இருந்து கண்ணை திறந்து வெற்றி பார்க்க, அங்கே கொலை வெறியில் விஷால் முறைத்துக் கொண்டிருந்தான்".
" என்னடா என்க, பரதேசி பயலே,அலாரம் வைத்து எங்கள் இருவரையும் எழுப்பி விட்டுட்டு, நீ என்னடா இன்னும் தூங்கிட்டு இருக்க என்க, ஹீஹீஹீ".
" இன்னைக்கு முதல் நாள் ட்ரெய்னிங் இல்லையா, அதான் நாம டைமிற்கு போகணுமென்று வைத்தேன் என்றவன்,சரி சரி நான் போய் குளிச்சிட்டு வரேனென்று ரெஸ்ட் ரூமிற்குள் வெற்றி செல்ல,விஷாலோ தன் தலையில் அடித்துக்கொண்டான்".
"நாட்களும் வேகமாய் செல்ல,முதல் கட்ட ட்ரைனிங் முடிய மூன்று மாதம் ஆனது".
" இந்த மூன்று மாதத்திற்குள் நண்பர்கள் மூவரும் பலத்த சவால்களை மற்றவர்களிடமிருந்து சந்தித்து, திறமையாய் அனைத்திலும் தேறி வந்தனர்".
" மூன்றாம் மாதம் முடிந்து இரண்டு நாட்கள் அவர்களுக்கு விடுமுறை கிடைக்க, அவரவர் வீட்டிலிருந்து பார்க்க வந்திருந்தார்கள்".
" வள்ளி தான் அழுது புலம்பிக்கொண்டிருக்க, உன் மருமகன் நல்ல முறையில் செலக்ட் ஆகி வரணுமா?, வேண்டாமாயென நீயே முடிவு பண்ணென்று போனில் சொல்ல, சரி கண்ணா என சொல்லிவிட்டார் வள்ளியம்மை".
பொள்ளாச்சி:
" விடிந்து வெகு நேரமாகியும் எழாமல் தூங்கி கொண்டிருக்கும் பேத்தியை பார்த்த ராக்கம்மா பாட்டி, என்னாச்சு இவளுக்கு?, இவ்வளவு நேரம்லாம் தூங்க மாட்டாளே".
" ஒரு வேளை உடம்புக்கு முடியலையா என நினைத்தபடி அவளருகில் வந்து கீழே குனிந்தவர், ஜனனியின் நெற்றியில் கை வைத்து பார்த்தவர், காய்ச்சல் எதுவும் இல்லை".
" சரி தூங்கட்டுமென்று சொன்னவர் வீட்டு வேலையை செய்து முடித்து விட்டு, வயலுக்கு எடுத்து போக வாளியில் சாப்பாடும், சின்ன கப்பில் இரவு வைத்த மீன் குழம்பையும் வைத்து மூடியவர், எய்யா மாரி சோறு எடுத்து வைக்கட்டுமா என்க..
"திண்ணையில் உட்கார்ந்திருத்த மாரியப்பன், இப்போ வேண்டாம் மா. புள்ளை சத்தத்தையே காணுமே? என்றார்".
" அதிசயமா இருக்குய்யா. உன் மவள் இன்னும் தூங்குறாளென்றவர், பழைய சாதத்தை சாப்பிட்டு முடித்து தோட்டத்தில் போய் கழுவி வைக்க, ராக்கு என்று கண்ணம்மா பாட்டி கூப்பிடும் சத்தம் கேட்டது".
சதூர்வேதமங்கலம்:
" அரையாண்டு விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளி திறக்க, வழக்கம் போல ஆர்கலிக்கும் நாட்கள் போனது".
"பாட்டியும் ஊருக்குள் நன்கு பேமஸானார்கள்.இரவு பகலென்று கண் விழித்து துணி தைப்பதை கண்ட ஆர்கலி, எதற்கு பாட்டி உங்களுக்கு இந்த வேலை எனக்கேட்டு சத்தம் போட, சரி சரி இனி இரவில் தைக்கல கண்ணு என்க, ஆஆஆ என்று கத்தினாள்".
" ஆரா கண்ணு, உன் கோவமெல்லாம் காதில் வாங்குற என் பேரபிள்ளைகளுக்கும் வரும். அதனால் தான் தாயை போல பிள்ளை, நூலை போல சேலையென்பார்களென்று பாட்டி பழமொழியை சொன்னார்"
" அதைக்கேட்டவள் நீங்கள் இருக்கீங்களேயென்று சிரித்து விட்டாள். ரொம்ம சிரமப்படாதீங்க பாட்டி. உங்களுக்கு பொழுது போக வேண்டுமென்று தான் இதற்கு நான் சம்மதம் சொன்னேன்".
" நீங்களென்னவென்றால் முழு நேர டெய்லரா இருக்கீங்க. உடம்பு என்ன ஆவதென்று ஆர்கலி வருத்தப்பட்டு சொல்ல, கண்ணு கண்ணு, நீ வருத்தப்படாத சாமி".
"உன் மனசு கலங்கினாள் இந்த பாவி நெஞ்சு தாங்காதும்மாயென்று பாட்டி கண் கலங்க, அப்போ இனி அதிக நேரம் மிஷின்ல உட்காராதீங்க".
"ரெஸ்ட் எடுங்களென்றவள், அண்ணீஈஈஈ நாளைக்கு இருக்கென்று பல்லை கடித்தவள், பின்னர் இரவு உணவை இருவரும் சேர்ந்து சாப்பிட்டு விட்டு, சிறிது நேரம் பேசியிருந்தவர்கள், லைட்டை ஆப் பண்ணி படுத்தனர்".
"நாட்களும் வேகமாக ஓடியது.அன்று பாட்டியும் கருப்பாயியும் மதிய சாப்பாடை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, ஆச்சி உங்க கிட்ட ஒன்னு கேட்கணுமென்க,ம்ம் கேளு கண்ணு என்க".
"ம்ம், ஆராமாக்கு ஏழாவது முடிஞ்சி எட்டாவது மாசம் ஆரம்பிச்சிடுச்சி. ஒன்பதுல வளையல் போடணுமேயென்க, ஆமா கண்ணு".
"நல்ல நாள் பார்த்து செஞ்சிடலாமென பாட்டி சொல்ல,எங்களுக்கொரு ஆசையிருக்கென்று கருப்பாயி சொல்ல,அட என்ன கண்ணு?, நீ சொல்ல வந்ததை சொல்லுமா என்றார்".
"எங்களால் முடிந்ததை வைத்து நாங்களே ஆராமாவுக்கு வளையல்காப்பு பண்ணலானு இருக்கோமென்க, அதைக்கேட்ட பாட்டிக்கு கண்கள் கலங்கி போனது".
"சிறிய வருமானத்தில் வாழும் வாழ்க்கை தான்,ஆனால் மனமோ எத்தனை பெரியதென்று நினைத்தவர்,அதற்கு என்ன கண்ணு".
"ஆமா பின்ன அப்பன் வீட்ல தானே வளையல்காப்புக்கு செஞ்சிட்டு வரணும்.அது தானே நம்ப உலக வழக்கமென்க, ஆமாம் ஆச்சி"
"அதனால் என் புருஷனே அவர் தங்கச்சிக்கு செய்முறை செய்வாரென்று சொல்லிய கருப்பாயி, நாள் மட்டும் பார்கணுமென்று சொல்லியபடியே சாப்பிட்ட பாத்திரங்களை சிங்கிள் கழுவி காய வைத்து விட்டு,ஹாலிலே முந்தானையை விரித்து அதில் படுத்துக்கொண்டார்".
"அன்று மாலை பள்ளிக்கூடம் விட்டு வீட்டிற்கு வந்த ஆர்கலியிடம், கருப்பாயி சொன்ன விஷயத்தை பாட்டி சொல்ல,போன பிறவி பந்தம் தான் போல பாட்டி".
"உசுரு இருக்கும் வரை இவங்களை மறக்க முடியாதென்றாள்.ஏங்க பாட்டி, அதுக்கு அதிக செலவு ஆகுமே. அண்ணனுக்கு பணம் கொஞ்சம் கொடுக்கலாமே என்க, அதை நான் சொல்லாம இருப்பேனா கண்ணு?.
"உன் அண்ணன்காரன் என்ன சொன்னான் தெரியுமா , என் பாசத்தை பணத்தால் விலை பேசாதீங்க ஆச்சி".
"இந்த ஏழை பயலால் முடிந்ததை என் தங்கச்சிக்கு செய்யுறேன்னு ,கோவமா சொல்லிட்டு இங்கிருந்து போய்ட்டான் கண்ணு என்றவர்,அவன் ஆசை போல பண்ணட்டும் கண்ணு என்க,சில நொடி யோசித்த ஆர்கலி சரிங்க பாட்டியென்றாள் ".