• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
414
திருச்சூர்-பாண்டியன் பேலஸ்:

" ஸ்சூஊஊஊஊ.... எம்மா ரெட்டை ரோஜாக்களே, நீங்களும் ஏதாவது ரகசியம் மறைத்து வைத்திருந்தால் தயவு செய்து சொல்லிடுங்க".

"ஒருத்தன் என்னன்னாக்க கல்யாணம் பண்ணிட்டேன்னு குண்டு போடுறான்.சிங்கம் என்னவென்றால் ஏதோ தினத்தந்தியில் வரும் கன்னிதீவு போல, ஒரு பெரிய கதையை சொல்லி முடிச்சிருச்சு".

"நீங்க மட்டும் ஏன் அமைதியா இருக்கீங்க. எதா இருந்தாலும் சொல்லிடுங்க. இந்த பிஞ்சு நெஞ்சு இப்பவே தாங்கிக்கொள்கிறேன் என்று ஆது சொல்ல, இப்பொழுது ஆனந்தும்,சிம்ஹன் தாத்தாவும் அவனை முறைத்து பார்த்தனர்".

" ஏண்டா,எதுக்கு இதுங்க ரெண்டும் என்ன இப்படி முறைக்கிது என்க, அதை கேட்ட ருத்ரன், நமக்கு இது என்ன புதுசா என்றான்".

" அப்பொழுது அம்மா என்ற குரல் கேட்டு எல்லாரும் வாசல் பக்கம் பார்க்க, தன வீர சிம்ஹன் வேகமாக வீட்டின் உள்ளே வந்தார்".

" அம்மா என்னாச்சி மா உங்களுக்கு?,இப்ப எப்படி இருக்கு என்று தனது தாயிடம் வந்த தனா கண்ணீரோடு கேட்க, நான் நல்லா இருக்கேன் தனா.எனக்கு ஒன்னும் இல்லை என்றார் கிரிஜா பாட்டி".

" இவரும் வந்தாச்சா, எங்க மேடம் இல்லாம சார் மட்டும் தனியாக வந்திருக்காங்க என்று ருத்ரன் சொல்ல, அதற்கு ஆதுவோ, தெரியலையேடா.கொஞ்சம் பின்னாடி பாரு மேடம் வந்துட்டு இருப்பாங்க என்றான்".

" அங்கிருந்த ஆனந்த் தன் ஆருயிர் நண்பனை கோவமாக பார்த்துக்கொண்டிருந்தார்".

" ஆமா தனா உனக்கு எப்படி தெரியுமென்று சிம்ஹன் தாத்தா கேட்க, இவன் தான் பா சொன்னானென்று ஆனந்தை கைக்காட்டினார்".

" பின்னர் மற்றவர்களை பார்த்து தனா யோசனையானவர், சைலஜாவையும்- கிரிஜாவையும் பார்த்து அதிர, அடேய் மீண்டும் கதை ரிப்பீட்டுடா,எப்பா சாமி என்னை ஆளை விடுங்க".

" நான் போய் நாயர் கடையில் ஒரு டீயை குடிச்சிட்டு வரேனென்று ஆது எழ, ஆது கண்ணா என்று சைலஜா பாட்டி கூப்பிட,அந்த அழைப்பு கிரிஜா பாட்டி கூப்பிடுவது போல இருக்க,திரும்பியவன் நீங்களா கூப்பிட்டதென்று கேட்க, ஆமாம் கண்ணா என்றார்".

" அடேய் கிரி, இரட்டை ரோஜா உன்னை போல கூப்பிடுறாங்கடா என்று ஆது சொல்ல, பின்ன, என் கூட பிறந்தவள் என்னை போல தானே கூப்பிடுவா கண்ணா என்றார் கிரிஜா பாட்டி".

" இந்தப் பகுமானத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.சிங்கம் பேசினதெல்லாம் கேட்டு தலைவலிக்குது. மனுஷன் குடிக்கிறதுக்கு முதல்ல டீய போடுங்க என்றான்".

" ஆது சொன்னதைக் கேட்டு சிரித்த வசு, மலரம்மாயென்று உள்பக்கம் குரல் கொடுக்க,இதோ வசுயென்றவாறு கையில் டிரேயோடு வந்தவர், யாருக்கு காஃபி?, யாருக்கு டீ வேண்டுமென்று கேட்டு கொடுத்தார்".

"அப்பொழுது ஆதுவின் செல்ஃபோனில் ரிங்டோன் சத்தம் கேட்க,அடச்சை நிம்மதியா ஒரு டீயை குடிக்க விடாமல், எந்த கரடி தான் கால் பண்ணுதோயென்று பாக்கெட்டில் இருந்த ஃபோனை எடுத்து பார்க்க, அதில் ரஞ்சு என்று பெயர் காட்டியது".

"அட்டென் பண்ணியவன் சொல்லுடா கரடி என்க, டேய் எங்கேடா இருக்கயென ரஞ்ஜன் கேட்க,நானா?, இமயமலையில் ஏறி, இப்போ தான் உலக சாதனை பண்ணினேன்".

"அதை கின்னசில் போட ஆட்கள் வந்துட்டு இருக்காங்களென்றான். ஆது சொன்னதை கேட்ட ரஞ்சன், அடேய் தடிமாட்டு முண்டம்,முதல்ல எங்கே இருக்க சொல்லி தொலைடா என கத்த,நாங்களாம் இரட்டை ரோஜா வீட்டில் இருக்கிறோமென்றான்".

"எதேஏஏஏ இரட்டை ரோஜாவா என ரஞ்சன் அதிர,ஆமாம் ஆமாம் பார்க்க அப்படி தான் இருக்கு. ஏண்டா, ஒரு டீயை நிம்மதியா குடிக்க விடாமல், கால் பண்ணி உசுர வாங்குறியே என ஆது சொல்ல, டேய் உடனே பிபிசி பாருடா என்றான்".

"நேர்ல வந்தேன் மூஞ்சி மொகரைய ஒடைச்சிடுவேன்டா.என்னமோ வேலை வெட்டியில்லாதவன் போல, டிவி பார்க்க சொல்லுற என ஆது சத்தம் போட,அடேய் அறிவுகெட்ட முண்டம் சீக்கிரம் பார்த்து தொலைடா என்று ரஞ்சன் போனில் கத்தினான்".

"பின்னர் கையில் இருக்கும் டீயை பார்த்தவன்,அநேகமா அந்த ரெண்டு கருப்பாடுங்க தான் நான் உன்னை குடிக்க கூடாதென்று காண்டு ஏறி சாபம் விட்டிருக்கனுமென்க, அதைக்கேட்ட சிம்ஹன் தாத்தா,டேய் என்றார்".

"குற்றம் உள்ள நெஞ்சி தான் குறு குறுக்குமாம் என்க,ஆதவன் பேசுவதையே வியப்பாய் பார்த்துக் கொண்டிருந்த வசுந்தராவிடம்,மேடம் அது ஒரு அரவேக்காடு தப்பா எடுத்துக்காதீங்க என்றார் ஆனந்த்".

"எம்மா ரெட்டை ரோசா, கொஞ்சம் டிவியை ஆன் பண்ணிக்கிறேனென்றவன், டிவி சுவிட்சை ஆன் பண்ணி,அதில் சேனல் ஹிஸ்டிரியில் பிபிசி சேனலை தேடி வைத்தவன்,அங்கு ஸ்கிரீனில் தெரிபவளை பார்த்து,அடேய் வீர் என்று கத்தினான்".

"என்னடா என்று ருத்ரனும் எழுந்து வந்து டிவியை பார்க்க,மற்றவர்களும் என்னதென்று திரும்பி டிவியை பார்க்க,வசுந்தரா பேமிலியை தவிர மற்றவர்களும் ஆதிராஆஆஆஆ என்று அதிர்ந்து போயினர்".

"லைனில் இருந்த ரஞ்சன் பார்த்தியாடா என்க, நீ கட் பண்ணு, பிறகு பேசிக்கலாமென்ற ஆது, ஆதிரா பேசுவதை பார்க்கலானான்".

பிபிசி நியூஸ் நேரலை:

"ஹலோ ஆரா மேடம் கங்கிராட்ஸ் என்றவாறு வெள்ளைக்கார பெண் ஆதிராவை கட்டி அணைக்க,தேங்க்யூ என்றாள்".

"சரி சரி முதல்ல சரா சார் கையால் வின்னர் கப் வாங்குங்கள்.பிறகு பேசிக்கலாமென்க,ஹம் ஓகே என்றவள், சார் ஒரு நிமிஷம், இந்த பரிசை,என்னோட பேமிலி கூட சேர்ந்து வாங்கிக்கிறேனென்று சொல்ல,கண்டிப்பாகம்மா,நீங்கள் கூப்பிடுங்களென்றார்".

"ஆலீஸ்-ஜேம்ஸ் இருவரையும் பார்த்து மேடைக்கு வாங்களென்று கையசைக்க,அவர்களோ ஒருவித பதற்றத்தோடு இருவரும் மேடைக்கு வந்தனர்".

" பின்னர் சரா கப் குடுக்க,மூவரும் இணைந்து வாங்கிக்கொண்டனர்".

"அந்நேரம் சராவிற்கு தொடர்ந்து கால் வர,ஒரு நிமிஷமென்று அங்கிருந்து சென்றார்".

"பின்னர் பரிசு தொகையை போட்டி நடத்தும் ஸ்பான்சர் கொடுக்க, அதையும் இணைந்து வாங்கினர்".

"டேய் எருமைங்களா தள்ளுங்கடா நாங்களும் பார்கணுமென்று ஆனந்தன் சொல்லு, ம்ம் என்றனர்"

" ஓகே... இப்போ பேசலாம் என்க, ஹம் என்று இதழ் பிரிய சிரித்தவளை பார்த்து, ஒருத்தன் அசந்து போனான்".

" உங்க நேம் ஆராவா?,இல்லை புனை பெயரா? என்க, நான் ஆதிரா சுந்தர் . என் பெயரில் இருக்கும் தி என்ற வார்த்தையை எடுத்து விட்டால் ஆரா என்று சொன்னாள்"

"ஆமாம் உங்களோட ப்ரொபஷனல் ஓவியம் தானா? என்க,நோ இது என்னுடைய ஹாபி மட்டும் தான். நான் ஒரு டாக்டர்.கோர்ஸ் முடித்து இப்போ தான் ஒன் மந்த் ஆகுதென்க, வாஆஆஆட்..!!".

"நீங்கள் டாக்டரா?? என்று வெள்ளைக்கார பெண் அதிர, ஹம் என்று சிரித்தாள்.

"டீவியை ஆப் பண்ணிய ஆது, எப்புடிடா?, இவளா அந்த ஆரா?? என்று கண்களை விரித்தான்".

"ருத்ரனுக்கும் அதே அதிர்ச்சி தான்.ஆமாம் டா.நம்ம கடைக்கு ஓவியம் வரைந்து அனுப்பியது, ஜேம்ஸ் தான் டா".

" அது மட்டுமில்லாமல், அங்கு மேகு வீட்டின் ஹால்ல இவளோட டிராயிங் தான் சுவர் முழுவதும் இருக்குடா. நம்ப கடை திறப்பிற்கு கூப்பிட போன போது, நான் பார்த்தேன் டா என்றான்".

"அப்பொழுது, அக்கா,யார் இந்த பொண்ணு?,ரொம்ப அழகா இருக்கிறாளென்று சைலஜா பாட்டி கேட்க,நம்ப பேத்தி தான் சைலு.தனாக்கு அடுத்து பிறந்தது மேகலா".

" மேகலாவோட ஒரே பொண்ணு தான் ஆதிரா.சென்னையில் மெடிசின் படிக்கிறாளென்றார்".

"அதைக்கேட்ட சைலு ஓஓஓ, சூப்பர்கா".

"எனக்கு வசுவும், மைக்கேலும் தான் என்க,பின்னர் தனாவிடம்,நடந்த விஷயத்தை சுருக்கமாக சிம்ஹன் தாத்தா சொல்லி முடித்தார்".

வெற்றி - ஜனனி நினைவுகள்:

"அதன் பின்னர் வந்த நாட்களில், மறந்தும் வெற்றி இருக்கும் திசையை ஜனனி பார்ப்பதில்லை".

மூன்றாவது வருடம் கல்லூரி படிப்பையும் முடித்தவள், முழு நேரமாக வயல் வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள்".

மேல் படிப்பு படி, இல்லை அரசாங்க தேர்வு எழுதென்று மாரியப்பன் எவ்வளவோ சொல்ல, வேண்டாம்பா என்று சொல்லி விட்டாள்.

"துபாயில் இருந்த பாலஜி ஊருக்குள் வர,ராணியை பெண் பார்க்க அழைத்து சென்றார்கள். பார்த்தவுடன் இருவருக்கும் ஒருவரையொருவர் பிடித்து விட்டது".

நல்ல நாளில் சொந்தங்கள் சூழ இருவருக்கும் கல்யாணம் முடிந்தது. மீண்டும் ராணியோடு துபாய்க்கு சென்று விட்டான்.

" நான்கு மாதங்கள் செல்ல, ராணி கன்சீவாக இருப்பதாய் பாலாஜி சொல்ல, மருமகளை பார்த்து கொள்வதற்காக கோதண்டமும், அவர் மனைவியும் அங்கு சென்றனர்".

"பத்தாவது மாதம் இறுதியில் அழகான ஆண் குழந்தையும் பிறந்தது".

" நாட்களும் வேகமாக ஓடியது".

" வெளிநாட்டிற்கு சென்றிருந்த மணியும் ஊருக்குள் வந்தான். வந்தவனுக்கு கல்யாணத்தை முடித்து விடலாமென்று,அவன் பெற்றோர்கள் முன்பே முடிவு செய்ய நாளை பெண் பார்க்க போகலாமென்று மகனிடம் சொல்லினர்".

"அப்பொழுது நண்பர்களை பார்க்க வந்தவன்,அவர்களிடம் பொண்ணு பார்க்க போகும் விஷயத்தை சொல்ல, என்னடா விளையாடுறியா?, நீதான் ஜனனியை லவ் பண்ணுறியே பிறகு எப்படி வேற பொண்ணு பார்க்க என கோபி கேட்க, அட போடா".

"நான் மட்டும் தான் டா ஜனனியை காதலித்தேன்.அந்த புள்ளை அண்ணாவா நினைத்து தான் பழகியிருக்கென்று, அன்று நாம பக்கத்து ஊர் திருவிழாவிற்கு போனோமே ,அன்று தான் தெரியும் என்றான்".

" மணி சொன்னதை கேட்ட வெற்றி என்னடா சொல்லுற என அதிர, ஆமாடா. அன்று நீங்க கிளம்பிய பிறகு, நான் எங்க அம்மா கிட்ட மறைமுகமா ஜனனியை விரும்புவதை சொன்னேன்".

" அதைக்கேட்ட எங்க அம்மா, தொடப்பகட்டை பிஞ்சிடும். உங்கிட்ட பாப்பாங்கள் என்று தானே சொன்னே"

"இன்னொரு முறை இதைப்போல எண்ணம் வச்சிக்கிட்டு புள்ளைங்கள் கிட்ட பழகுனாய், பெத்த புள்ளைனு பார்க்க மாட்டேன் என்று சத்தம் போட்டார்".

" பிறகு வெளிநாட்டிற்கு கிளம்பிட்டு ஜனனி கிட்ட சொல்லும் போது,மணி அண்ணா பார்த்து போ. வேளா வேளைக்கு சாப்பிடுணா. அத்தை-மாமாவை நாங்க பார்த்துக்குறோமென்று வார்த்தைக்கு வார்த்தை அண்ணா அண்ணானு சொல்லுச்சிடா".

" அப்பவே என் மனசுல இருந்த அழுக்குலாம் போய்ட்டு டா என்றான்".

" உண்மை தெரிந்த வெற்றி, அய்யோ கடவுளே.பெரிய தப்பு பண்ணிட்டேனே?, அவசரப்பட்டு, அறிவு கெட்டு போய் சுயபுத்தியின்றி எவ்வளவு அசிங்கமா என்னவளை பேசிட்டேனென்று, உள்ளுக்குள் உடைந்து போனான்".
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
414
திருச்சூர் பாண்டியன் பேலஸ்:

"வந்திருந்தவர்களை பார்த்து விட்டு மீராம்மாவே,மதிய உணவை தயார் செய்து விட்டார்".

" வசுமா என ஹாலின் ஓரம் நின்று அவர் கூப்பிட,இதோமா என்று எழுந்து போனவரிடம், மதிய சாப்பாடு ரெடிமா".

"நேரம் ஆகிட்டு பாரு".

"அவங்க வேறு மருந்து சாப்பிடணுமே? என்க, ஆமாமா என்றவள், நீங்க எடுத்து வைங்கம்மா என்றார்".

"சரி வாங்க லஞ்ச் சாப்பிட்டுக்கலாம், மற்றதை பிறகு பேசிக்கலாமென்று வசு சொல்ல, ஆதுவோ, அதுவும் சரிதாங்க கலெக்டர் மேடமென்றான்".

"அடேய் எருமை என்ன கிண்டலா? என சிம்ஹன் தாத்தா கேட்க,ஏன் கிரி உன் புருசரை எல்லாரும் என்னனு சொல்வாங்க?,கொஞ்சம் சொல்லுடா என்கஹம்..பிஸ்னஸ் மேன்னு சொல்லுவாங்க ஆது கண்ணா என்றார்".

"குட், எங்களை எப்படி சொல்லுவாங்க என கேட்க,தீவிட்டி தடியனுங்களென்று சிம்ஹன் தாத்தா சொல்ல,ஓஓஓ என்றவன்,உங்க சின்ன வயது பேர் இதானா சூப்பர் சூப்பர்".

நீ சொல்லுடா கிரி என மீண்டும் ஆது கேட்க, உங்களையும் பிஸ்னஸ் மேன், டிசைனர்ஸ்னு சிலர் சொல்லுவாங்க கண்ணா என கிரிஜா பாட்டி சொல்ல, அப்போ இவங்களை கலெக்டர் மேடமென்று தானே சொல்ல வேண்டுமென்க, வேலிட் பாயிண்ட் என்ற ருத்ரன், தன் நண்பனுக்கு ஹை-பை கொடுத்தான்".

அக்கா, இவங்க ரெண்டு பேரும் இருந்தாலே போதும். நமக்கு சிரித்து சிரித்து எந்த நோயும் வராதென்று சைலஜா பாட்டி சொல்ல, ரெட்டை ரோசா, உங்க மாமா காதில் விழுற போல, இன்னொரு முறை சொல்லுங்களென்று ஆது சொல்ல, ஆண்டவனே என்றார் ஆனந்த்".

"அவரையும் இங்க வர வைக்கவா, வர வர லிஸ்ட் பெருசாகுது மாமாயென ருத்ரன் சொல்ல, வசுக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை".

"சாப்பிட்டு தெம்பா பேசுங்கப்பா என்று சுந்தரபாண்டியன் சொல்ல, ஓகே வாடா போகலாம். நமக்கு எவ்வளவோ வேலை இருக்கென்று ஆது சொல்லிக்கொண்டே ருத்ரனை டைனிங் ஹாலிற்கு கூப்பிட்டு போக, ஆமாம் இதுங்க இரண்டும் இரண்டு நாட்டோட பிரதமர்".

"நாம வேலை வெட்டி இல்லாத ஆளுங்க பாரென்று ஆனந்த் கிட்ட சிம்ஹன் தாத்தா சொல்ல, மாமாஆஆஆ.. ஏன் தான் இப்படி சின்னவனுங்க கிட்ட இப்படி வம்பு பண்ணுறீங்களென்றார் கிரிஜா பாட்டி".

" ஆமாடி, உனக்கு அப்படி தான் தெரியும். அவனுங்களை ஒன்னும் சொல்லிடக் கூடாதே, உடனே வரிஞ்சி கட்டி கிட்டு வந்துடு என்க,மாமா நீங்கள் கொஞ்சம் கூட மாறவேயில்லை".

" அப்போ பார்த்த போல தான் இருக்கீங்களென்று சைலஜா பாட்டி சொல்ல, ஹாஹாஹா என சிரித்தவர், இந்த வீர சிம்ஹன் எப்போதும் ஒரே மாதிரி தான் பாப்பு என்க, ஸ்சூ ஸ்சூ என ஆதுவின் சத்தம் கேட்க, அடேய் வந்தேன்னா,படவா என்றார் சிம்ஹன் தாத்தா".

" பின்னர் அனைவரும் மதிய உணவை சாப்பிட்டு முடித்தனர். அப்புறம்டா கிரி, அங்க தலைக்கு மேல வேலை கிடக்கு. நான் இன்றைக்கு நைட் கிளம்புறேனென்று ஆது சொல்ல, எனக்கும் சேர்த்தே டிக்கெட் போடுடா என ருத்ரன் சொல்ல, சரி என்றான்".

"அப்பொழுது தான் தனாவிற்கு காலையில் ஒருவர் கொடுத்த செல்ஃபோன் ஞாபகம் வந்தது".

" இதோ வரேனென்று வெளியே சென்றவர், காரில் இருந்த விசிட்டிங் கார்டு மற்றும் செல்ஃபோனையும் எடுத்து உள்ளே வந்தவர், தம்பி என ருத்ரனிடம் வர, நிமிர்ந்து பார்த்தவன் சொல்லுங்க என்றான்".

" இந்தாயென்று இரண்டையும் நீட்ட யோசனையோடு வாங்கியவன், இது காணாமல் போன என்னோட ஃபோனாச்சே?, இது எப்படி உங்களிடமென்க, காலையில் தான் ஒருவர் கொடுத்துட்டு போனார்பா".

" வேறு எதுவும் சொல்லவில்லையென்று தனா சொல்ல, தேங்க்ஸ் என்ற ருத்ரன், ஆது வாடா என எழுந்து ரூமிற்கு சென்றான்".

" போகும் மகனை பார்த்த தனாவிற்கு வேதனையாக இருந்தது".

" நண்பனின் வேதனையான முகத்தை பார்த்த ஆனந்த், தனாவின் தோளில் தட்டிக்கொடுக்க, ரொம்ப தப்பு பண்ணிட்டேன் டா என கண் கலங்கினார்

" நேரமும் கடக்க, ருத்ரனும், ஆதுவும் எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு இலங்கைக்கு கிளம்பினர்".

" பின்னர் தனாவிடம் வீட்டிலிருப்பவர்களை கிரிஜா பாட்டி அறிமுகப்படுத்தி வைக்க,அவருக்கும் ஆச்சர்யமாக இருந்தது".

" அப்பொழுது தனது நண்பனும், தந்தையும் பேசிக்கொண்டிருப்பதை பார்த்த தனாவிற்கு, ஏக்கமாக இருந்தது".

" அப்புறம் மா ஒரு வருத்தமான விஷயமென தனா சொல்ல, சொல்லு தனா என்று கிரிஜா பாட்டி கேட்க, வசந்தி இறந்துட்டாங்கம்மா என்க, என்னப்பா சொல்லுறயென்று அதிர்ந்து போனார்".

" ஆமாம் மா என நடந்ததை தனா சொல்ல, கிரிஜாவின் அதிர்ந்த சத்தத்தில் திரும்பிய சிம்ஹனும் மகன் சொன்னதை கேட்டு ஷாக் ஆனவர், பாவம்,அந்த பொண்ணோட ஆத்மா சாந்தியடையட்டுமென்றார்".

" மேலும் இரண்டு நாள் அங்கிருந்து விட்டு மனமேயில்லாமல் தனா சென்னைக்கு கிளம்பி விட, ஏங்க நாம எதற்கு இங்கு வந்தோமென கிரிஜா பாட்டி கேட்க?, ஏன் அது இப்போ தான் உனக்கு நினைவு வந்ததா? என்றார் சிம்ஹன் தாத்தா".

" ம்கும்... என்றவர், ஏன் சைலு, நானும் வந்ததில் இருந்து பார்க்கிறேன், ஆர்கலியை காணுமே?, ஏன் எங்கள் யாரையும் பார்க்க அவளுக்கு பிடிக்கவில்லையா?, இல்லை வீரா மேல் உள்ள கோவத்தில் உள்ளையே இருக்காளா என்க,தனது அக்காவின் கேள்விக்கு சைலஜா பாட்டியால் எந்த பதிலையும் சொல்ல முடியவில்லை".

" சொல்லு சைலு, ஆர்கலி எந்த ரூம்ல இருக்காள்?, நான் போய் பேசுகிறேனென்று சொல்ல, அவர் சொன்னதைக்கேட்ட வசு, அங்கிருக்க மனமில்லாமல் எழுந்து தனது ரூமிற்கு சென்று விட, போகும் மகளை கண்ணீரோடு பார்த்துக் கொண்டிருந்தார் சைலஜா பாட்டி"

" என்னாச்சி சைலுவென கிரிஜா பாட்டி பதற,ஏய் ஒன்னும் இல்லை. எதற்கு இப்படி டென்ஷனாகுற என மனைவியின் உடல் நிலை எண்ணி அமைதி படுத்திய சிம்ஹன் தாத்தா, உன் பேத்தி வேலை விஷயமா டெல்லி போயிருக்காள் கிரிஜா".

" அப்படியா என கிரிஜா பாட்டி நம்பாமல் கேட்க, பின்ன நான் ஏன் பொய் சொல்ல போறேனென்றவர், அப்படி தானே சைலு என்க, ஆமாக்கா".

" பிஸ்னஸ் பற்றி தெரிஞ்சிக்க அங்கு போயிருக்காளென்றார்".

" ஓஓஓ சரி சரியென்றார்".

" அந்நேரம் சிம்ஹன் தாத்தா செல்ஃபோனிற்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்டு எடுத்து பார்த்தவர், சுந்தர் தானென்று சொல்லி அட்டென் பண்ணி, சொல்லுங்க மாப்பிள்ளை என்றார்".

இலங்கை- களுத்துறை:

" வழக்கமாய் காலையில் எழுந்த மேகலா குளித்து தயாராகி, கீழே இருக்கும் பூஜையறையில் வந்து விளக்கேற்றி, சாமி கும்பிட்டு முடிக்க, வீட்டின் ஹாலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது".

" வேலையாட்கள் வர இன்னும் அரைமணி நேரம் இருக்கின்றதே, பிறகு யார் இவ்வளவு காலையிலே வந்திருப்பதென்று யோசனையோடே, இரவு விளக்குகளை அணைத்து விட்டு, கதவை திறந்து பார்க்க, அங்கே யாரும் இல்லை".

" என்னடா இது?, நமக்கு தான் பிரம்மையோ என நினைத்தவர், கதவை தாழிட்டு விட்டு மீண்டும் உள்ளே செல்ல, மீண்டும் பெல் சத்தம் கேட்டது".

" அம்மா வராகி தாயே, காலையிலே என்ன சோதனையென்று சொல்லியவர், மீண்டும் கதவை திறந்து பார்க்க, வாசலில் பொக்கே இருந்தது".

" யார் வைத்திருப்பார்களென்று குனிந்து எடுக்க, சர்ப்ரைஸ் என்னும் கோரஸ் குரல் கேட்டு அதிர்ந்து போய்,கையிலிருந்த பொக்கே கீழே விழுந்து சிதறியவாறு, பின் பக்கம் திரும்பி பார்த்த மேகலாவின் கண்கள் இரண்டும் கலங்கியது".

"மேகு என்றவாறு தனது ஆருயிர் தோழியை ஆலீஸ் வந்து அணைத்துக்கொண்டார்".

"அப்பொழுது ம்மா என்ற மகளின் குரல் காதோரம் கேட்க,உடல் சிலிர்த்து பாப்பூஊஊஊஊ என்று கதறியவர், பின் பக்கம் தன் கையை நீட்டி மகளை துலாவி பிடித்தவர்,வேறு எதுவும் பேசாமல் அமைதியாக கண்ணீர் வடித்தார்".

சில நிமிடங்கள் அவர்களை தொந்தரவு பண்ணாமல் இருந்த ஜேம்ஸ்,ஏண்டா மேகு, அண்ணன்காரன் ஒருத்தன் இத்தனை வருஷம் கழித்து வந்துருக்கேன் அவனை வாடாணு ஒரு வார்த்தை சொல்லலையே என்க,பின்னர் சுதாரித்த மேகு,வாங்கணா, ஏய் வாடி என தனது தோழியை ஒரு கையிலும், மகளை இன்னொரு கையிலும் பிடித்துக்கொண்டு வீட்டினுள் சென்றார் மேகலா".

அந்நேரம் மாடியிலிருந்து கீழே வந்த சுந்தர் வாடா மடையா.டிரிப் எப்படி போச்சு? என்றவர், ஆலீஸ் வாமா என்று சொல்லி விட்டு,மகளை நோக்கி பாப்பூஊஊஊ என தனது இரு கைகளையும் நீட்ட,ஆதஇராவோ தந்தையை கண்டு ஓடி போய் அணைத்துக்கொண்டாள்".

"அண்ணா என மேகு முறைக்க, அதற்கு ஜேம்ஸோ, உனக்கு சர்ப்ரைஸ் குடுக்கலானு இவள் தான் சொன்னாள் டா.அதான் அவனுக்கு மட்டும் கிளம்புறதை சொன்னோம் என்றார்".

"ஏண்டி இப்படியென்க,ஹேய் சும்மாடி என்ற ஆலீஸ், ஏய் ஒரு வாய் டீ குடு டி என்க இதோடி என உள்ளே செல்ல,ஓய் இரு மேகு நானும் வரேனென்று ஆலீஸூம் சென்றார்".

"மகளோடு நண்பன் அருகில் வந்து உட்கார்ந்த சுந்தர், சந்தோஷம் டா. நீ நினைத்ததை சாதிச்சிட்ட என்க, நான் இல்லைடா. நம்ப பொண்ணோட திறமையும், அவளுடைய உழைப்பும் தான் காரணம்".

"எப்பா...பேபிமா பெயரை கேட்ட போது எனக்கு இருந்த சந்தோஷத்தை எப்படி சொல்லுறதுனே தெரியலை தெரியுமாடா. அதும் இல்லாமல் அத்தனை பேருக்கு முன்னால் என் பேபி எங்களை அம்மா- அப்பா சொன்ன நேரத்தில்,எங்க மனநிலை இருக்கே என சொல்லும் போதே ஜேம்ஸின் கண்கள் கலங்கியது".

" நண்பனின் கையை சுந்தர் தட்டிக்கொடுக்க, இருவருக்கும் நடுவில் உட்கார்ந்திருந்த ஆதிராவோ, என்ன கொடுமை இதெல்லாம்?.. ".

"நம்ப புள்ளை இவ்வளவு பெரிய போட்டியில் வின் பண்ணிட்டு வந்துருக்காளே,அதை கொண்டாடனும்,இல்லை அட்லீஸ்ட் அவளுக்கு விஷ் பண்ணனும் என்ற எண்ணம்கொஞ்சம் கூட இல்லாமல் இருக்கீங்களே என்றாள்".

மகள் சொன்னதை கேட்ட சுந்தர், ஹாஹஆஹா என சிரித்தவர், நாளைக்கு ஈவ்னிங் நம்ப பாரடைஸ் வில்லாவில் பார்ட்டி இருக்குடா என்க, அதிர்ந்து போனவள், சுந்தரை பார்த்து,ஆமாவா எனக்கேட்டாள்"

"காஃபி, டீ ரெடி என சொல்லிக்கொண்டே ஆலீஸூம் மேகுவும் அங்கு வந்தவர்கள்,அவரவர் விருப்பமானதை எடுத்து கொடுத்தார்கள்".

"இதோ நான்கு வருடங்களுக்கு பின்னர் தனது தாயின் கையால் போட்ட டீயை குடித்த ஆதிரா, கண்களை மூடி அந்த வாசத்தை ரசித்து முகர்ந்தாள்".

ஆர்கலி எங்கே...??
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top