• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
414
லண்டன்:

"உலகெங்கிலும் இருக்கும் பல ஓவியர்கள், இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தனர்".

" தனது இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொண்டு, ஆதிராவும் வரைய ஆரம்பித்தாள்".

" ஒருமணி நேரம் சென்று முதல் சுற்று முடிந்ததற்கான பெல் சத்தம் கேட்க, ஓவியத்தை அப்படியே வைத்து விட்டு வெளியே போக சொல்லினர்".

" இரண்டாம் சுற்று மதியம் மூன்று மணிக்கு ஆரம்பமென்றும், தகுதியானவர்களின் பெயர் அரைமணி நேரத்திற்கு முன்பு, டிஸ்பிளேயாகுமென்று சொல்லி விட்டார்கள்".

" கீழே வந்தவளை பேபிமா என ஆலீஸ் கையை பிடிக்க, நல்லா வரைந்திருக்கிறேனென்றாள். அது தெரியும் டா. இந்த முறை உனக்கு தான் இந்த கப் என்றவர், சரி வா, காலையிலும் எதுவுமே சாப்பிடவில்லை".

" இங்கு பக்கத்தில் பர்கர்,பீஸா நல்லா இருக்கும்டா பேபிமா என்க, ம்ம் என்றவாறு மூவரும் அந்த ரெஸ்டாரண்டிற்குள் நுழைந்தனர்".

" சில நிமிடத்தில் சாப்பிட்டு வந்தவர்கள், அடுத்து போட்டி எப்படி இருக்குமென்று ஜேம்ஸ் சொல்லிக்கொடுக்க, போதும் ஜேம்ஸ்".

" பேபிமா பாவம், விடு என ஆலீஸ் சொல்ல, ஓகே என்றார்".

" நேரமும் கடந்து செல்ல, ரிசல்ட் டிக்ளர் ஆனது. ஆதிராவின் பெயர் 1067 வது இடத்தில் இருந்தது".

" இரண்டாவது சுற்றுக்கு 2500 பேர் தேர்வாகி இருந்தனர்".

" மீண்டும் அதே இடத்தில் போட்டி தொடங்கியது. இந்த முறை கொஞ்சம் சிக்கலான ஓவியங்கள் டிஸ்பிளேயானது".

" இதற்கான நேரம் இரண்டு மணி நேரமென்று அறிவித்தார்கள். நேரமும் ஓடிக்கொண்டிருந்தது. ஆதிராவிற்கு சிறிது பதற்றம் தொற்றிக்கொண்ட போது, தன்னை நிலைப்படுத்திக் கொள்ள சிறிது நிமிடம் எடுத்தவள், மீண்டும் வரைய தொடங்கினாள்".

"இப்படியே நான்கு நாட்களாக ஒன்பது சுற்றுகளும் ஒன்னு விட்டு ஒரு நாளென்று முடிந்தது".

" இறுதி போட்டிக்கு தகுதியானவர்கள் பெயர் வர, இன்னும் சிறிது நிமிடம் இருந்தது".

" ஆலீஸோ, ஜீஸஸ் ஜீஸஸ் என் பேபிமா பெயர் இருக்கணுமென்று வாய்விட்டு பிரேயர் பண்ணிக்கொண்டிருந்தார்".

" ஆதிராவோ தனக்குள் உள்ள படபடப்பை வெளிக் காட்டிக்கவில்லை. இதோ இன்னும் ஒன் மினிட் என்று ஜேம்ஸ் சொன்னார்".

" கவுண்டவுன் பண்ணி முடிக்க, மொத்தம் 10 பேர் தேர்வாகியிருந்தனர். ஆதிராவின் பெயர் மூன்றாமிடத்தில் இருக்க, பேபிமாஆஆஆஆ என்று தம்பதிகள் இருவரும் கத்தி கூச்சலிட்டு, ஆதிராவிற்கு முத்த மழையை பொழிந்தனர்".

" ஆதிராவிற்கு சந்தோஷத்தில் கண்கள் கலங்கியது. அந்த நேரம் மேகாவிடமிருந்து கால் வர, அட்டென்ட் பண்ணிய ஆலிஸ், மேகு...நம்ம பேபி பைனலுக்கு செலக்ட் ஆயிட்டா என்று கத்தி சொன்னார்".

" ஆலீஸ் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த மேகலாவும் சுந்தரும் கண் கலங்கினார்கள். இதற்காக தானே தன்மகள் நான்கு ஆண்டுகளாக நம்மை பார்க்காமல் இருக்கிறாள் என்று நினைத்தனர்".

" பட்டூஊஊஊ பட்டூஊஊஊ என சுந்தர் கூப்பிட, வார்த்தைகள் கண்ணீராய் வழிய, பெற்றோர்களை ஆதிரா பார்த்தாள்".

" அண்ணா, என் பேபிமாவை அழ வைக்க தான் கால் பண்ணுனீங்களாயென ஆலீஸ் சத்தம் போட்டு விட்டு, பிறகு பேசுறோமென்று சைகையில் சொல்லி அழைப்பை துண்டித்தவர், ஜேம்ஸ் போகலாம் என்க, மூவரும் அங்கிருந்து வீட்டிற்கு செல்லாமல் லாங் டிரைவ் சென்றார்கள்".

" இறுதிப் போட்டிக்கு இன்னும் மூன்று நாள் இருக்க, ஆதிரா கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கட்டும் என்று தான் இப்படி ஜேம்ஸ் லாங் டிரைவ் கூப்பிட்டு சென்றார்.போகும் வழியில் டின்னரை முடித்தவர்கள் வெகு நேரம் சென்றே வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்".

"மறுநாள் வீட்டில் ஆலிஸ் பிரையர் வைத்திருக்க,ஆலீஸ்க்கு தெரிந்த சிலரை அழைக்க, அவர்களெல்லாரும் வந்து கொண்டிருந்தனர்".

" பின்னர் ஆதிராவிற்காக பிரையர் பண்ண சொல்ல, அவர்களும் அவளை ஆசீர்வதித்தார்கள். வந்தவர்களுக்கு இரவு உணவாக இந்திய உணவுகளை ஆதிராவும், ஆலீஸூம் சேர்ந்து செய்திருந்தனர்".

" மீதமிருந்த இரண்டு நாட்களும் வேகமாக ஓடியது. இன்று ஃபைனல் போட்டி என்பதால், காலையில் பெற்றோர்களிடம் பேசிவிட்டு, ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டாள்".

" பேபி போகலாமா என்று ஜேம்ஸ் கூப்பிட, ம்ம் என்றாள். என்னடா பேபிமா பதற்றமா இருக்கா என ஆலீஸ் கேட்க, அவரை அணைத்துக்கொண்ட ஆதிராவின் முதுகில் தடவி விட்டார்".

" ஆலீஸ் டைம் போகுது என ஜேம்ஸ் சொல்ல,பின்னர் மூவரும் போட்டி நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர்".

" பைனலில் மொத்தம் பத்து பேர் தேர்வாகி இருந்தார்கள்".

" பத்து பேருடைய ஓவியங்களை பற்றி தெரிந்தாலும், யார் யார் எந்த ஓவியர் என்பது இதுவரை அவர்களுக்கு தெரியவில்லை".

" போட்டியும் தொடங்கியது. இந்த முறை 10 பேருக்கும் போட்டி மிகவும் கஷ்டமாகத்தான் இருந்தது".

" ஆதிரா மீண்டும் ஒருமுறை கான்செப்டை மனதிற்குள்ளே வரைந்து பார்த்தவள், தனது இஷ்ட தெய்வத்தை வணங்கி விட்டு வரைய தொடங்கினாள்".

" 10 பேரும் அங்கிருந்த எல்இடி டிவியில் டிஸ்ப்ளே ஆகிக் கொண்டிருந்தார்கள். சிலர் மிகவும் பதட்டமாக இருப்பதும் டிவியில் தெரிய, நடுவர்கள் பார்த்துக் கொண்டு தான் இருந்தனர்".

" இந்த முறை வரைவதற்காக, மூன்று மணி நேரங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது".

" போட்டி முடிந்ததற்கான பெல் சத்தம் கேட்டதும், வரைந்த ஓவியங்களை அதே இடத்தில் வைத்து விட்டு, போட்டியாளர்கள் தங்கள் இருக்கையில் இருந்து எழுந்து வெளியே வந்தார்கள்".

" ரிசல்ட் நான்கு மணிக்கு லைவ் ஷோ வில் அறிவிக்கப்படும் என்பதால், கலந்து கொண்ட போட்டியாளர்கள், அதற்கு தயாராகும் படி முன்பே சொல்லி இருந்தனர்".

"ஆதிராவும் கீழே வர பதற்றத்தோடு ஆலீஸூம்,ஜேம்ஸூம் அவளை பார்த்துக் கொண்டிருக்க, அவளோ தனது முகத்தில் சிரிப்பை காட்ட, அப்போதான் இவர்களுக்கும் திருப்தியாக இருந்தது".

" பைனலில் வந்த போட்டியாளர்களுக்காக, போட்டி நடத்தும் நிர்வாகமே,இரண்டாவது தளத்தில் தனித்தனி ரூம் புக் பண்ணி இருந்தனர். வா பேபிமா ரெடியாகலாமென்று இருவரும் அவளை அழைத்துக்கொண்டு அந்த அறைக்கு சென்றனர்".

"ஆதிரவுக்காக பார்த்து பார்த்து வாங்கிய பட்டுப் புடவையை எடுத்து கட்டில் மேல் வைத்த ஆலீஸ், அதற்கு மேட்சாக வாங்கிய நகைகளையும் எடுத்து வைத்திருந்தார்".

"இதை தான் போடணுமா? என மீண்டும் ஒருமுறை ஆதிரா கேட்க, ஆன்டி நீ புடவை கட்டி பார்த்ததே இல்லை தானே என்க, சரி சரி என்றாள்".

" ஆமாம்,என்ன பைனல் போட்டியை பற்றி எதுவுமே கேட்க மாட்டேங்கறீங்க இருவரும் என்று கேட்க, விடுடா பேபிமா பாத்துக்கலாம்".

" இதுவரை வந்ததே பெரிய விஷயம். அதை பத்தி நாங்க யோசிக்கவில்லை என்றனர் இருவரும். பின்னர் அவர்களுக்கான மதிய உணவு அதே ஃப்ளோரில் இருப்பதாக ரூம் பாய் வந்து சொல்லிச்சென்றான்".

வெற்றி- ஜனனி நினைவுகள்:

" ராணியோ வலியில் அழ, ஒன்னும் இல்லை கண்ணம்மா என்றவன், கோபிக்கு போன் பண்ணி காரை எடுத்து வரச்சொல்ல, சில நிமிடத்தில் அவனும் வர, மூவரும் காரில் ஏறி சென்றனர்".

" பொண்டாட்டிக்கு ஒன்னுனாக்க சின்னவர் எப்படி துடிக்கிறார் என்று சொல்லியபடியே, ராக்கம்மா பாட்டி வயலில் இறங்க, ஜனனிக்கு தான் அதை கேட்க கொலை காண்டு ஆனது".

" இந்த மனுஷன் என்ன நினைச்சிக்கிட்டு இருக்காரென்று தெரியவில்லையே. முதல்ல நமக்கு ஒரு முடிவு தெரிய வேண்டுமென்று உள்ளுக்குள் சூளுரைத்தவள், களை எடுக்கும் வேலையை தொடர்ந்தாள்".

" இரண்டு நாள் சென்று, இன்று மஞ்சள் நீர் விளையாட்டு என்பதால், அன்று வயல் வேலை இல்லை. ஜனனிக்கு அன்று நடந்த நிகழ்வு நினைவிற்குள் வந்தது".

" ராணிக்கும் கால் சரியாக,இன்று கோபியின் மேல் இருவரும் கலர் பொடி பூசலாமென்று வெற்றியும், அவளும், முதல் நாள் இரவே பிளான் பண்ணியிருக்க, அதேப்போல் கோபியை இருவரும் துரத்தினர்".

" அந்த நேரம் வாசலுக்கு வந்த ஜனனியின் பார்வையில் ராணி முன்னே ஓட, அவள் பின்னால் வெற்றி ஓடுவது தெரிந்தது".

"வேகமாக அவளும் அவர்கள் பின்னே சென்றாள். கோபியை துரத்திக்கொண்டு ராணியும் வேகமாக ஓடி விட ஓடிக் கொண்டிருந்தவன் காலில் முள் குத்தியதால்,அங்கையே வெற்றி நின்று விட்டான்".

"அது சந்து பகுதி என்பதால் அங்கு ஆள் இருப்பது யாருக்கும் தெரியாது. வேகமாக வந்த ஜனனி அங்கிருப்பவனை பார்த்து என்ன நடக்குது இங்கே?என்க, அவளை பார்த்தவனுக்கு, எரிச்சலாக வந்தது".

" வெற்றி எதுவும் சொல்லாமல் அமைதியாக போக, எட்டி அவன் சட்டையை பிடித்தவள், உங்க கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்.இப்படி போனால் என்ன அர்த்தம் என்று கேட்டுக் கொண்டிருக்கும் போது, அவள் கன்னத்தில் இரண்டு அறை விட்டான் ".

" எவ்வளவு தைரியம் இருந்தா என் சட்டை மேல கைய வைப்பாய்?, இவ்வளவு தைரியம் யாருடி உனக்கு கொடுத்தா என்று கேட்க, யார் எனக்கு கொடுக்கணும்? என்று கேட்டாள்".

" உன்ன பாக்கவே எனக்கு வெறுப்பா இருக்கு ச்சீ போ என வெற்றி சொல்ல, ஓ புதுசா ஒருத்தி வந்த உடனே, அவ கூட கொஞ்சி, குலாவ, கட்டி புரள தான் ஐயாவுக்கு புடிச்சிருக்கு என ஜனனி சொல்ல,அந்த வார்த்தை மேலும் வெற்றிக்கு கோபத்தை கொடுக்க,யாரை பார்த்து என்ன பேசுறயென்று மீண்டும் இரண்டு அறை விட்டவன்,உன்னை போல ஒன்னும் அவளுக்கு சாக்கடை புத்தி கிடையாது".

"நேரத்துக்கு தகுந்த ஆம்பள பிடிக்கிறது உன் புத்தி.உனக்கு என்ன வயசு?,அதுக்குள்ள எத்தனை ஆம்பளைடி கேக்குது என்று அவள் கழுத்தை பிடித்தவன், ஏன் மணி வெளிநாடு போய்விட்டதால் உடம்பு சுகம் கேட்டு தாங்க முடியாமல், என்னை தேடுறியா என மேலும் அவள் தலையில் நெருப்பு வார்த்தைகளை கொட்டினான்".

ஏண்டி அவன் வர வரைக்கும் என்னை பார்த்து பார்த்து நல்லா இளிச்சியே,அப்ப காலேஜ்ல எத்தனை பேருக்கு பல்லை காட்டி ரூட் விட்ட.

"இப்படி ஆம்பளைக்கு அலையுறவள் பேரு என்ன தெரியுமா என்றவன், அவள் காதில் அந்த பெயரை சொல்லி விட்டு, மணி வரவரைக்கும் உனக்கு சந்தோஷம் கொடுக்கிறதுக்கு, எவ்வளவு ரேட்னு யோசிச்சு நாளைக்கு சொல்லென்று, அவளை தள்ளிவிட்டு அங்கிருந்து வேகமாக சென்று விட்டான்".

"இவ்வளவு நேரம் தான் நேசித்தவன் பேசிய கேவலமான பேச்சுகளை கேட்ட ஜனனி கண்ணாடியை போல சுத்தமாக உடைந்து போனாள்".

"தூரத்தில் கிடந்த தாவணியை எடுத்து மேலே போட்டுக் கொண்டவள், அழுத கண்களை துடைத்து விட்டு அங்கிருந்து வேகமாக தனது வீட்டை நோக்கி சென்றாள்".
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
414
கலசங்காடு:

"பிள்ளைகளுக்கும் முழு ஆண்டு லீவ் விட,மூவரையும் அழைத்துக்கொண்டு லீலா இலங்கைக்கு வந்திருந்தாள்."இவர்கள் வந்து ஒரு மாதம் ஆகி விட்டது. சரி நான் போய் அவர்களை கூப்பிட்டு வருகிறேனென்று சொல்லி, ஜெய்யும் இலங்கைக்கு வந்து விட்டான்"

"வழக்கம் போல விடியல் ஆரம்பமாக, ஜெய் ஜெய் என பதற்றமாக ஜீவா கூப்பிடுவதை கேட்டு ஹாலிற்கு வந்தவன், அங்கு நியூஸில் சொல்ல பட்ட செய்தியை கேட்டு அதிர்ந்து போனான்!!

"அதிகாலையில் ராமேஸ்வரத்தில் உருவான சுனாமி அலைகளால்,அங்கு சுற்றி உள்ள முக்கால் வாசி கிராமங்கள் கடலில் மூழ்கி போய்விட்டதென்று தலைப்பு செய்திகள் சென்றது".

நாட்களும் கடந்து செல்ல,ஓரளவு ஜெய்யும் தன் பெற்றோரின் இழப்பிலிருந்து தேறி வந்தவன், இலங்கையிலே தங்கி விட முடிவு செய்தான்.

"நாட்களும் ஓடியது.பிள்ளைகளும் வளர்ந்து பெரிய மனுஷியானார்கள். சிம்ஹனும் பள்ளி படிப்பை முடித்து கல்லூரிக்கு சென்றான்".

"சிம்ஹன் இரண்டாமாண்டு படிக்கும் போது, என்.சி.சி.மூலயமாய் அறிமுகமானவன் தான் சர்வானந்த்".

"இருவருக்கும் ஒரு வயது வித்யாசம் இருந்தாலும்,நல்ல நண்பர்களானார்கள்."சர்வானந்திற்கு அம்மா மட்டும் தான். அப்பா இல்லையென்று சிம்ஹனிடம் சொல்லியிருந்தான்".

"சிம்ஹனுக்கு நல்லபடியாக கல்லூரி படிப்பும் முடிந்ததும்,தனது தந்தையோடு குடும்ப தொழிலில் இறங்கி விட்டான். அவ்வப்போது நண்பர்களும் நேரில் பார்த்து பேசிக்கொள்வார்கள்".

"கிரிஜா-சைலஜா இருவரும் பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் சேர்ந்தனர். சர்வானந்த், அதே கல்லூரியில் பிஜி படிக்க, இருவரையும் அவனை பார்த்துக்க சொல்லி சிம்ஹனும் சொல்லி வைத்திருந்தான்".

"வருடங்களும் ஓடியது.பெண் பிள்ளைகளும் கல்லூரி படிப்பை முடித்தனர். கிரிஜா அவர்கள் குடும்ப தொழிலை கற்றுக்கொள்ள, சைலஜா அங்குள்ள பள்ளியில் டீச்சராக வேலைக்கு சேர்ந்தாள்".

"சர்வானந்தும் நல்ல வேலைக்கு போக,அவனுக்கும் கல்யாணத்திற்கு பெண் பார்த்து முடிவானது. வீட்டிற்கு வந்து பத்திரிக்கை வைத்து சென்றான்".

"கல்யாணநாளும் வர,சிம்ஹனின் நெருங்கிய நண்பனென்பதால் குடும்பத்தோடு சென்றனர். ஜீவா மட்டும் வியாபரா விஷயமாக அப்பொழுது இந்தியாவிற்கு சென்றிருந்தான்".

"மண்டபத்தின் வாசலில் போய் காரை நிறுத்திய சிம்ஹன், நீங்க உள்ளே போங்க, காரை பார்க்கிங் பண்ணி விட்டு நான் வருகிறேன் என்று சொல்ல, மற்றவர்களும் காரில் இருந்து இறங்கி உள்ளே சென்றனர்".

"சிம்ஹனும் காரை நிறுத்திவிட்டு உள்ளே வந்து தனது வீட்டினரை தேட, சைலஜாவும் கிரிஜாவும் மேடையில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது"

"அப்போ அப்பா அம்மா எங்கே?என்று சுற்றி பார்க்க, சர்வானந்தின் அம்மாவோடு மண்டபத்தின் ஒரு மூலையில் இருவரும் பேசிக் கொண்டிருப்பது சிம்ஹனின் பார்வையில் பட்டது".

"அவர்கள் முக பாவனையில் ஏதோ தீவிரமாக மூவரும் பேசுவது தெரிந்து, காலியாக இருந்த சேரில் போய் உட்கார்ந்து கொண்ட வீர சிம்ஹன், மேடையில் இருக்கும் நண்பனை பார்த்துக்கொண்டே மாமன் மகளை பார்த்தான்".

"அதில் ஒருத்தியை உற்று பார்க்க, உள்ளம் ஏனோ வானில் பறப்பது போல தோன்றியது".

"இருவரும் தனது மாமா மகள்கள் என்றாலும், ஒருத்தி மேல தான் அவனுக்கு காதல் வந்தது".

" என்னாடா சிம்ஹா, இன்னைக்கு உன் மேடம் பட்டு பாவாடை-தாவணியில் ரொம்ப அழகா இருக்கிறாளே என்று முணு முணுத்துக் கொண்டான்".

"கெட்டிமேளம் ஒலிக்க சர்வானந்த்-பார்கவி திருமணம் நல்ல முறையில் நடந்து முடிந்தது".

"வாங்கிட்டு போன கிப்டை கொடுத்து விட்டு,குடும்பத்தோடு வீட்டிற்கு கிளம்பி வந்தனர்".

" அதன் பின்னர் அவரவர் வேலையில் பிஸியாக, தனது அம்மா- அப்பா,மட்டும் சில நாட்களாக ஏதோ யோசனையாக இருப்பது போல சிம்ஹனிற்கு தோணியது".

" ஓர் நாள் பெற்றோர் இருவரும் கார்டனில் பேசிக்கொண்டிருக்க, இரட்டையர்கள் இருவரும் பரதநாட்டிய கிளாஸிற்கு சென்றிருந்தனர்".

" அப்பொழுது அங்கு வந்த சிம்ஹனை பார்த்தவர்கள்,ஹேய் வா வீரா, உட்காரு என்றனர். ம்ம் என்றவன் தனது பெற்றோர்களிடம் நேரடியாக விஷயத்திற்கு வந்திருந்தான்".

"நானும் கொஞ்ச நாட்களாக உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதுவும் குறிப்பாக சர்வானந்த் கல்யாணத்துக்கு போயிட்டு வந்ததிலிருந்து,நீங்கள் இரண்டு பேரும் சரியில்லை".

"என்ன விஷயம்? என்று கேட்க, தலைக்கு மேல் வளர்ந்து விட்ட பின் பிள்ளையிடம் உண்மையை மறக்காமல், சித்ரா-சர்வானந்த் பற்றி பெற்றோர்கள் இருவரும்,சொல்லி முடித்தனர்".

"அதைக் கேட்ட சிம்ஹன், சர்வானந்த் என்னோட மாமா பையனா? என்று அதிர்ச்சியானான். ஆமாப்பா, சர்வாவுக்கு இந்த விஷயம் தெரியாது".

"சித்ரா, இதைப்பற்றி கடைசி வரைக்கும் சொல்ல கூடாது என்று, சத்தியம் வாங்கி விட்டதா சொல்லி லீலா வருத்தப்பட்டாள்".

"நாட்களும் ஓடியது.ஓர் நாள் வழக்கம் போல பள்ளிக்கு வேலைக்கு போவதாக சொல்லிக்கொண்டு சென்ற சைலஜா, இரவாகியும் வீட்டிற்கு வரவில்லை".

" எங்கெங்கோ தேடி பார்த்து, தெரிந்தவர் எல்லாரிடமும் விசாரித்து பார்க்க, யாருக்கும் எந்த விஷயமும் தெரியவில்லை".

" மகள் காணாமல் போனதிலே ஜீவாவிற்கு உடல்நிலை பாதிக்க தொடங்கியது. சைலஜா காணமல் போய் ஆறு மாதங்கள் ஆகி விட்டது".

" ஓர் நாள் பெட்டில் படுத்திருந்த ஜீவா, தனது தங்கை மகனை கூப்பிட்டார். என்ன மாமா என்க, என் உயிர் போவதற்குள், கிரிஜாவையும் உன்னையும் திருமண கோலத்தில் பார்க்கணுமென்று சொன்னார்".

" சரி மாமா என்றவன், பெற்றோர்களிடம் விஷயத்தை சொல்ல, நல்ல நாளில் நண்பர்கள், சொந்தங்கள் சூழ வீர சிம்ஹன்- கிரிஜா திருமணம் முடிந்தது".

" தன் மனதிற்கு பிடித்தவளே மனைவியாக வந்ததை நினைத்து, சிம்ஹனுக்கும் மகிழ்ச்சி தாங்கவில்லை".

" கிரிஜாவும் தன் கணவரின் தொழிலில் மிக உறுதுணையாக இருந்தார்".

" மேலும் மூன்று மாதம் கடந்திருக்க, ஜீவாவும் உலகத்தை விட்டு சென்று விட்டார்".

" அதன் பின்னர் ஒரு வருடம் கழித்து, எங்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அங்கே சர்வானந்திற்கும் ஒரே மகன் தான்".

"எங்களை போல இருவரின் பிள்ளைகளும் நல்ல நண்பர்களாகினர்".

"வயதின் மூப்பு காரணமாய்,எனது பெற்றோர்களும் இறந்து விட்டனர்.காலமும் வேகமாக ஓடியது. பிள்ளைகளின் திருமண வயது வந்தது".

"அவர்கள் விருப்பம் போல திருமணம் செய்து வைத்தோம். தனா சென்னையிலே தங்கிக்கொள்ள, சர்வானந்தின் பையன்,அதாவது என் மாமாவுடைய பேரன் ஆனந்த் தான் இங்கு எங்களுக்கு மகனாய் இருப்பது".

" என்றாவது ஒருநாள் ஆனந்திடம் இந்த உண்மையை சொல்லணுமென்று மனம் சொல்லிக்கொண்டே இருந்தது. அதற்கான நேரம் இப்போ தான் வந்திருக்கு போல".

"கடந்த 45 வருடங்களாக சைலஜாவை தேடாத இடமே இல்லை.ஆனால் இந்தியாவை பற்றி நாங்க சிறிதும் யோசிக்கவில்லையென,சிம்ஹன் தாத்தா அனைத்தையும் சொல்லி முடித்தார்".

இதோடு வீரசிம்ஹன் பிளாஷ்பேக் முடிந்தது..

இனி...

திருச்சூர் பாண்டியன் பேலஸ்:

"இதுவரை சிம்ஹன் தாத்தா சொன்னதை எல்லாவற்றையும் கேட்டவர்களுக்கு, என்ன சொல்வது என்றே தெரியவில்லை. சைலஜாவும் கிரிஜாவும் கண்களில் நீரோடு ஆனந்திடம் வந்தவர்கள்,எங்க அண்ணன் பையனா??என்று அழுது கொண்டே கேட்டனர்"

"மாமா, நீங்கள் ஒரு முறை சொல்லி இருக்கலாமே எங்களோட அண்ணன் என்று என, அக்கா தங்கை இருவரும் கேட்க, நான் என்ன செய்யறது?.

"சொன்னால் அத்தை தற்கொலை பண்ணிப்பேனென்று சொல்றாங்க. அப்படின்னு தான் எங்கம்மா எனக்கு சொன்னார்கள் என்றார் சிம்ஹன் தாத்தா".

லண்டன்:

"மூவரும் ரெடியாகி அங்கிருக்கும் ஏழாவது ஃப்ளோரில் பங்ஷன் நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர்".

"பங்ஷனும் இதோ ஆரம்பமானது. போட்டியை ஏற்பாடு செய்தவர்களும் மைக்கில் வந்து சில நிமிடங்கள் பேசி சென்றனர்".

"பாட்டு டான்ஸ் என்று சில ப்ரோகிராம்கள் முடிய,அடுத்தது பரிசை அறிவிப்பதற்கான நேரம் வந்துவிட்டது என்று, விழாவில் ஆங்கரிங் பண்ணிக்கொண்டிருந்த வெள்ளைக்கார பெண், அழகிய ஆங்கிலத்தில் மைக்கில் சொன்னாள்".

" அப்பொழுது நீங்கள் எல்லாரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஓவியர்.த லெஜண்ட் சரா வந்து விட்டார்கள் என்று சொல்ல, அரங்கம் முழுவதும் ஒரே கரவோசம் கேட்டது".

" சரா வின் ஓவியம் அவ்வளவு புகழ்பெற்றது. ஆனால், அவர் ஆணா?, பெண்ணா? என்று ஒரு சிலருக்கு மட்டும் தான் தெரியும். பலருக்கு சரா தான் ரோல் மாடல்".

" அப்பொழுது அங்கே மேடையில் உட்கார்ந்திருந்த ஒருவர் மேல் மட்டும் வெளிச்சம் விழுந்தது".

" அவரும் எழுந்து வந்து மைக்கின் முன்பு நின்றவர், நான் தான் உங்களுடைய சரா என்று சொல்ல, பயங்கர கைதட்டல் சத்தம் கேட்டது".

" அவரை நேரலையில் பார்த்து பலருக்கும் பேரதிர்ச்சி தான். இவரா இவரா என்று. அவ்வளவு எளிமையாக இருந்தார் சரா".

" சிறிது நேரம் அவர் ஓவியங்களை பற்றியும் வரைந்தவர்களை பற்றியும் பேசிவிட்டு, பரிசு கொடுத்து விடலாமா என்க, கொடுத்து விடலாம் என்று கோஷங்கள் எழுப்பினார்கள்".

" முதல் இரண்டு பரிசுகளை அறிவித்தார்கள்.அந்த இரண்டிலும் தனது பெயர் வரவில்லையே என நினைத்த ஆதிராவிற்கு,ஒன்றும் சொல்ல முடியவில்லை".

அழுகை வர தனது உதட்டை கடித்து கட்டுப் படுத்திக்கொண்டிருந்தாள். முதல்பரிசு யாருக்கு?, யாருக்கு ? என அந்த வெள்ளைக்கார பெண் கேட்க, தங்கள் மனங்கவர்ந்த ஓவியர்களின் பெயரை சொல்லினர்".

ஓகே.. கவுண்டவுன் ஸ்டார்ட் பண்ணிடலாமா சார்?, எனக்கும் ஒரே படபடப்பாக இருக்கிறது என்று அவளும் சரா கிட்ட கேட்க,ஓகேமா என்றார்".

"லைட்ஸ் ஆப், கமான் சொல்லுங்கள், 5 4 3 2 1 என்க, இந்த வருடத்தின் தலைசிறந்த ஓவியர் அவார்டை வாங்கப்போவது என தன் கையில் இருந்த பேப்பரில் படித்த சரா,யார் என்று அவர் சொல்லப்போகும் பெயரையே அனைவரும் பார்த்துக்கொண்டிருந்தனர்".

"தி வின்னர் இஸ் ஓவியர் ஆரா என்க,பேபிமாஆஆஆஆஆஆ என்று ஆலீஸூம் ஜேம்ஸூம் கத்தினார்கள்".

" இவ்வளவு நேரம் தனது காதை மூடிக்கொண்டு கீழே குனிந்திருந்த ஆதிரா, அவர்கள் சத்தத்தில் கண்ணை திறந்து பார்க்க, எதிரே இருந்த பெரிய திரையில் வெற்றியாளர் ஓவியர் ஆரா என்ற பெயர் டிஸ்பிளேயானது".

" அதை பார்த்தவளின் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது. ஓவியர் ஆரா மேடைக்கு வாங்கள் என்று வெள்ளைக்கார பெண் கூப்பிட, பேபிமானு இருவரும் அவளை எழுப்பி விட்டனர்".

"ஆராவின் ஓவியங்களும் ஓரளவிற்கு புகழ் பெற்றது தான்.இந்த ஆராவும் யார் என்பது பலருக்கும் தெரியாது. ஒவ்வொரு முறையும் தனது முகத்தை மறைத்துக்கொண்டு தான் அவள் போட்டியில் கலந்து கொள்வாள்".

" யார் அந்த ஆரா என்பதை காண எல்லாரும் ஆவலாக பார்க்க, அங்கிருந்த கூட்டத்திலிருந்து பட்டுப்புடவையில் அழகு தேவதையாய் மேடை ஏறி வந்தவள், தனது முகத்திலிருந்த மாஸ்கை கழட்ட, அங்கிருந்தவர்கள் மட்டுமில்லை, இந்த லைவ் ஷோவை டீவியில் பார்த்துக்கொண்டிருந்த ரியாவும்,இன்னொருத்தனும் இவளாஆஆஆஆ என்று அதிர்ந்து போனார்கள்".

ஆர்கலி எங்கே....?
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top