• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
கலசங்காடு:

"லீலா பாத்ரூமிற்கு சென்று வந்து படுக்க, மீண்டும் வலி வந்தது. என்னங்க,என்னங்கயென ஜெய்யை எழுப்ப, பதறி எழுந்தவன், என்னாச்சி லீலா?, வயிறு வலிக்குதுங்களென்றாள்.

"இதோ அம்மாவை கூப்பிடுறேனென்று வெளியே போனவன் அம்மா, அம்மா என்க, மகனின் குரலை கேட்டு எழுந்து வெளியே வந்தவர்களிடம் விஷயத்தை சொன்னான்.

"என்னங்க, நீங்க போய் சாலா அம்மாவை கூட்டிட்டு வாங்க, ஜெய் நீ போய் லீலா கிட்ட செத்த இருப்பா.நான் அடுப்புல வெந்நீர் போட்டுட்டு வந்துடுறேனென்று மீனாட்சி செல்ல, தோளில் துண்டை போட்டுக்கொண்ட வீரையன்,அங்கிருந்து மருத்துவச்சியை கூப்பிட சென்றார்".

வலிக்குதுங்க என்று கண் கலங்கியவளிடம் ஒன்னும் இல்லைடி என்றவாறு தோளோடு அணைத்துக்கொண்டான்.

" அப்பொழுது காலடி சத்தம் கேட்டு மனைவியிடம் இருந்து ஜெய் தள்ளி உட்கார, உள்ளே வந்த மீனாட்சி,ஏத்தா என்னடா பண்ணுது?, ரொம்ப வலிக்கிறதுங்கத்தை.அவள் முகத்தை வைத்தே, இது பிரசவ வலி தானென்பதை புரிந்து கொண்டார்".

" இதோ உன் மாமா சாலாமாவை கூப்பிட போயிருக்காரு கொஞ்ச நேரம் பொறுத்துக்க என்கும் போது லீலாவுக்கு வலி அதிகமாக்கிக் கொண்டே இருந்தது".

" அப்பொழுது ஆத்தா மீனாட்சி என்றவாறு உள்ளே வந்த சாலா பாட்டி , பேராண்டி செத்த வெளியில இருப்பா.சுடுதண்ணி வச்சிருக்கியா ஆத்தா?,ஆச்சுங்கமா.

சரி துணி எடுத்துட்டு வா என்றவாறு, லீலாவின் வயிற்றில் கையால் அழுத்தி குழந்தையின் சுழற்சியை பரிசோதித்தார்.

" நிமிடங்கள் செல்ல லீலாவிடமிருந்து கத்தல் அதிகமானது. ஜெய்க்கு தான் மனைவி உள்ளே கதறுவதை கேட்டு தாங்க முடிவுயவில்லை".

" என்னப்பா இப்படி துடிக்கிறாளென்க ,பிரசவமென்றால் சும்மாவாப்பா?,இதற்கு தான் மறு ஜென்மம்னு சொல்லுறாங்க".

"ஒரு பொண்ணோட வாழ்க்கை பிறந்து வாழ்ந்து சாகிறது மட்டும் இல்லப்பா.பத்து மாசம் சுமந்து, அந்த குழந்தையை பெற்றெடுக்கும் போது, மறுபிறவி எடுக்கிறாள்".

" பிரசவம் என்பது சாதாரண விஷயம் இல்லைப்பா.அதனால தான் தாயை, தெய்வத்தை விட மேலானதுனு சொல்லுகிறார்கள்".

" உன்னை உங்கம்மா வயிற்றில் வச்சிக்கிட்டு அவள் பட்ட பாடுகளை பார்த்து தான், அடுத்த குழந்தை வேண்டானு நான் முடிவு பண்ணினேன்".

"புடிச்சதை சாப்பிட முடியாமல், நிம்மதியா படுக்க முடியாமல்னு, ஏகப்பட்ட சோதனைகளை தாங்கி, குடும்பத்தையும் கவனிக்கணும்"

" இதில் மருமகளை கொடுமை பண்ணுற சில பிறவிங்களும் இருக்காங்க. அதையெல்லாம் தாங்கணும்".

" இதனால் தான் பொண்ணை பூமா தேவியோடு ஒப்பிடுறாங்க. தாய்மையோட வலி, குழந்தையை பார்த்தால் சரியாகிடும்ணு சொல்லுவாங்க பா".

" அந்நேரம் வீல் என்ற சத்தம் லீலாவிடம் கேட்க, சிறிது நொடியில் அந்த வீட்டு வாரிசின் குரலும் கேட்டது".

" அப்பனே செந்தூராஆஆஆஆ என்றார் வீரையன்".

" சிறிது நிமிடத்தில் என்னங்க, ஜெய் என்கும் மீனாட்சியின் குரல் கேட்க, திண்ணையில் உட்கார்ந்திருந்த இருவரும், வேகமாய் உள்ளே வர, வெள்ளை துணியில் சுற்றிய குழந்தையோடு மீனாட்சி வந்தார்".

"நம்ப குலங்க என்று பிள்ளையை காட்ட,பேரனை வாங்கியவர் குழந்தையின் காலில் முத்தமிடும் போது, வீரையனின் கண்கள் ஆனந்தத்தில் கலங்கியது".

" பின்னர் மகனிடம் நீட்ட, அம்மா எப்படி தூக்கணும்?,பயமா இருக்குமா என்றான். பிறகு தாயின் கைகளிலே தனது மகனை பார்த்த ஜெய்க்கு ஆனந்தம் தாங்கவில்லை".

" அம்மா, லீலா?, நல்லா இருக்காப்பா. மயக்கத்தில் தான் இருக்காளென்றார்".

" என்னைய்யா உன் அப்பனே வந்துட்டாரு போலனு சாலா பாட்டி லீலாவின் அறையிலிருந்து வெளியே வர, ஆமாத்தை என்ற வீரையன், மருமவள் எப்படித்தை இருக்கென்க, மயக்கம் தான்யா".

" இத்தனை மாசம் தூங்காத தூக்கம் இப்போ தூங்குவாள். அப்புறம் மீனாட்சி, லீலா எந்திரிச்சதும், நல்லா ஆத்துன பால்ல மஞ்சள் தூளை போட்டு குடுத்தா".

" கஞ்சில நிறைய பூண்டு போட்டு பசை போல வச்சி கொடு என்றவர், சரிய்யா நான் கிளம்புறேன் என்க, அத்தை சும்மா போறியே என்கவும், உன் கையால ஒரு வாய் டீ போட்டு கொண்டு வா மீனாட்சி என்றவர், குழந்தையை வாங்கி, அங்கிருந்த முற்றத்து திண்ணையில் சாய்ந்து உட்கார்ந்து, மூக்கு மட்டும் காலை மாலை லேசா எடுத்து விடணும்".

" அப்புறம் வீரா உன் பேரன் அதிர்ஷ்டகாரன்யா,நெஞ்சில சூரியன்
மச்சத்தோடு பிறந்திருக்கான்".

" என்னத்தை சொல்லுற?என்க, ஆமா வீரா, பேரும் புகழும் பெற்று செல்வத்தில் புரளுவான் என்கும் போது, அம்மா என்றவாறு மீனாட்சி டீ எடுத்து வர, குடுத்தா என்று வாங்கி குடித்தார்".

" ஜெய்யின் பார்வை ரூம் பக்கமே இருக்க, அய்யா பேராண்டி, கொஞ்ச நேரத்தில லீலா எந்திரிச்சிடும், அப்போ போய் பாருய்யானு சிரிக்க, நீ இருக்கியே கிழவி என்று சிரித்தான்".

"அதன் பின்னர் நாட்களும் ஓட, மீனாட்சியின் கவனிப்பில் லீலாவும் நன்கு தேறி வேலையை பார்க்க போக, ஏத்தா நீ புள்ளை வளர்க்குறத மட்டும் பாரு என்கவுமா, அத்தை எனக்கு ஒன்னும் இல்லை".நான் நல்லா இருக்கேனென்றவள் சமையலை ஆரம்பித்தாள். சொந்த பந்தங்களும் பிள்ளையை வந்து பார்த்து சென்றார்கள்".

" ஜெய் தான், தன் மனைவியோடு பேச முடியாமல் தவித்து போனான்".

" பகலெல்லாம் யாராவது வருவதும், இரவில் அவன் அம்மாவோ குழந்தைக்கு துணைக்கு இருப்பதால், அவனால் மனைவியோடு இருக்க முடியாமல் போனது".

" குழந்தை பிறந்த விஷயத்தை நகுலனுக்கு தந்தி கொடுத்தவர்கள், 16 ஆம் நாள் பெயர் வைப்பதாகவும், முடிந்தால் வருமாறு சொல்லினர்".

" பேரன் பிறந்ததை கேட்டு நகுலனுக்கு சந்தோஷம் தாளவில்லை. கடையில் வேலை செய்பவர்கள் எல்லாருக்கும் புது துணியும், இனிப்பையும் வாங்கி கொடுக்குமாறு மகனிடம் சொல்லியவர், மனைவியின் ஃபோட்டோவின் முன்பு போய் நின்று, ஆனந்தி நம்ப பொண்ணுக்கு மகன் பிறந்திருக்கான்மா".

" உன்னோட ஆசீர்வாதத்தை நம்ப வாரிசுக்கு கொடுமா என்றவர், பங்ஷனுக்கு தான் போய் வருவதாகவும், இலங்கையில் திருவிழா நேரமென்பதால் மகனை கடையை பார்த்துக்க சொல்லி கப்பல் ஏறியவர், கலசங்காடிற்கு வந்து சேர்ந்தார்".

சென்னை சிம்ஹன் பேலஸ்:

" இரண்டு நாட்களாக தேவியிடம் ஒர் வார்த்தை கூட, தனா பேசவேயில்லை. ஏன் அப்படி ஒருவர் இருக்கிறார் என்பதையே கண்டு கொள்ளவில்லை".

" தனது அறையிலிருந்த தேவி, அய்யோ இவர் என்ன இப்படி இருக்கார்?, எப்படி சமாதானப்படுத்துவதுனு தெரியவில்லையே?, எல்லாம் நம்ப புள்ளைக்காக தான செய்தேன்".

" அவனுக்கு நல்லா நம்மை போலவே பணக்கார இடத்தில் பொண்ணு எடுக்கணும்னு ஆசைப்பட்டதில் என்ன தப்பு?".

" நாளைக்கு நான் லயன்ஸ் கிளப், சோஷியல் சர்வீஸ்னு போகும் போது, என் மருமகள் இன்னாரென்று சொல்ல கௌரவமான இடத்திலிருந்து பொண்ணு எடுத்திருந்தால் தானே, என்னை மதிப்பாங்கள்".

" அதை விட்டு, அப்பா அம்மா தெரியாத அனாதை, பத்து பைசாக்கு வக்கில்லாத பிச்சக்காரி என்றால்,கௌரவ குறைச்சலா இருக்குமென்று, இவங்கள் யாருக்கும் புரியவில்லையேனு புலம்பிக்கொண்டிருக்க, நீ எந்த கோடீஸ்வரனோட மகளென்ற கேள்வியில், திடுக்கிட்ட தேவியோ திரும்பி பார்த்தார்".

" சோபாவில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்த தேவி, வாசலில் கணவர் நிற்பதை பார்த்து எழ, ம்ம் சொல்லுங்க விஷாலா தேவி?, நீங்க எந்த ஜமீன் குடும்பத்து வாரிசு? என்க, டார்லிங் என்ன கேள்வியென்று சிரித்துக்கொண்டே கணவரிடம் செல்ல, ச்சை எட்டப்போ".

" உன் நிழல் பட்டாவே சாக்கடையில் குளித்த போல ஆகிடும்".

" கூவத்தில் பிறந்து, சங்கு பொறுக்கி வித்து, கஞ்சியும், கூழையும் குடிச்சி, ஓட்டை விழுந்த வீட்டில் வாழ்ந்த பரதேசி நீ, ஸ்டேட்டஸ் பற்றி பேசுறியா என்க, அய்யோ தனா இப்படி சொல்லாதீங்கனு தேவி தனது காதை பொத்த, உண்மையை தானே சொன்னேன்".

" ஏதோ இளிச்சவாயன் நான் கிடைச்சதால், உனக்கு இந்த ராஜயோக வாழ்க்கை. இல்லை என்றால் நீயும் அந்த குப்பத்தி பன்னி கூட தான் வாழ்ந்திருப்பனு தெரியாது போல".

" சொல்ல முடியாது, எவனாவது என்னை விட பணக்காரன் வந்தால், அவனை கட்டிக்க என்னை டைவர்ஸ் பண்ண மாட்டேனு என்ன நிச்சயம்? என்கவும்,அய்யோ இப்படிலாம் பேசி என்ன கொல்லாதீங்க தனாயென்று தேவி அழ,நீ பண்ணும் ஆளு தான்".

" சரி, எனக்கு ஒரு உண்மைய சொல்?, உண்மையிலே நான் யாரை விரும்பினேன்?,அந்த கேள்வியை சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்பது, தேவியின் அதிர்ந்த முகமே காட்டிக்கொடுத்தது".

" இருந்தும் சமாளித்த தேவி, டார்லிங் என்ன கேள்வி இது?, ஷாலா ஷாலானு தூக்கத்தில் கூட சொல்லுவீங்களே, அப்போ உங்கள் காதல் இந்த விஷாலா தேவி மேலே தானே என்க,நான் யாரை காதலித்தேனென்று மீண்டும் தனா கேட்டார்".

" இத்தனை வருடங்களுக்கு பிறகு தன் கணவரிடமிருந்து இப்படி ஒரு கேள்வி வருமென்று நினைக்காத தேவி, என்ன சொல்லவென்று மனதிற்குள் யோசனையாக, நான் காதலித்தவள் யார்னு சொல்ல போறியா? இல்லையா என்க, தனாவின் இந்த அதிரடி செயலில் தேவிக்கு விழி பிதிங்கி போனது".

" ஆம், தேவியின் நெற்றி பொட்டில் தனாவின் கன் இருந்தது".

" கமான் ... டெல் மீ.. ஒன் .. டூ... என்கும் போது, சொல்லிடுறேன் சொல்லிடுறேன். உங்களுக்கு காதல் வந்த பொருளின் சொந்தக்காரி, வசந்தி வசந்திதான் என்கவும், அதைக்கேட்டு அதிர்ந்தது தனா மட்டுமல்ல,தேவிக்கு ஜூஸ் எடுத்து வந்த போது, இவர்களின் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த வசந்தியும் தான்".

" வசந்திக்கு இது தெரியுமானு தனா கேட்க,தெரியக்கூடாது என்பதற்காக தானே அவளை சூரத்திலுள்ள பட்டேலுக்கு நல்லவன்னு சொல்லி கல்யாணம் பண்ணி அனுப்பினேன்".

" அது மட்டுமில்லாமல், அந்த முட்டாளுக்கு, இந்த நிமிஷம் வரை இந்த உண்மைகள் தெரியாதென்கும் போது, படீரென்று எதோ விழுந்த சத்தம் கேட்டு, இருவரும் திரும்பி பார்க்க, அங்கே வசந்தி நின்று கொண்டிருந்தார்".

" சுதாரித்த தேவி, ஏய் வாடி வா, நானும் தனாவும் புரோகிராமிற்கு பிராக்டீஸ் பண்ணிட்டு இருந்தோமென்று சொல்லிக்கொண்டே வர, ஒரு அடி பின்னாடி எடுத்து வைத்த வசந்தி, மாடிப்படியில் கால் தடுமாறி, தலை குப்புற உருண்டு போய் தரையில் விழ,வசந்தியின் தலையிலிருந்து ரத்தம் வெளியேறியது"
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
" வசந்தினு தேவி கத்தும் போது வேலையாட்களும் ஓடி வந்து பார்க்க, வசந்தி படியில் உருண்டு வந்து கீழே விழுவதை கண்டனர்".

" தேவியும் தனாவும் பதறி போய், கீழே வந்தவர்கள், வசந்தி வசந்தி என்க,அவரிடம் எந்த மூச்சு பேச்சுமில்லை".

" சீக்கிரம் தூக்குங்களென்று தனா சொல்ல, வேலையாள் இருவர் வசந்தியை தூக்கிக்கொண்டு வெளியே செல்ல, டிரைவர் காரை எடு என்றபடியே தனாவும் வெளியே வர, பின்னர் காரில் ஏற்றிக்கொண்டு ஹாஸ்பிட்டலுக்கு சென்றார்கள்".

" டாக்டர் எமர்ஜன்சியென போகும் போதே தனா போனில் சொல்லி விட, வாசலில் அட்டெண்டர்களும் தயாராக இருக்க, கார் வந்து நின்றதும், வசந்தியை தூக்கிக்கொண்டு உள்ளே செல்ல, சிறிது நொடியிலே வெளியே வந்த டாக்டர், தனா, அவங்க இறந்து போய் பத்து நிமிஷம் ஆகுதுடா என்றார்".

" தனது டாக்டர் நண்பன் சொன்னதை கேட்ட தனா, என்னாஆஆ என அதிர்ந்து போனார்".

ஆமாடா, கீழே விழுந்த போதே அவங்க உயிர் போயிடுச்சிடா. கடவுளே என்ற தனா, வசந்தி அவங்களோட உடல் உறுப்பை தானம் செய்வதாக, ஏற்கெனவே இங்க எழுதி கொடுத்திருக்காங்கடா என்கவும், அப்படியா டா".

" சரி தனா, அப்போ ஆக வேண்டியதை நான் பார்க்கிறேன், பாடிய நம்ப மெடிக்கல் காலேஜிற்கு அனுப்பிடுடா. படிக்கும் பிள்ளைகளுக்கு உபயோகமாக இருக்கட்டுமென்று வீட்டை நோக்கி சென்றார்".

" வீட்டில் தேவியோ பித்து பிடித்த போல உட்கார்ந்திருக்க, வேலையாட்களின் பார்வையும் தேவியின் மேல் தான் இருந்தது".

" அப்பொழுது கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டு, வேகமாக எழுந்து போன தேவி, தனா, வசந்திக்கு எப்படி இருக்கென்க, அவரோ எதுவும் பேசாமல் உள்ளே போய் விட்டார்".

"தனாவோடு ஹாஸ்பிட்டலுக்கு போயிருந்த வேலையாட்கள் தான், வசந்தி மேடம் இறந்துட்டாங்களென்று, அழுது கொண்டே சொன்னார்கள்".

" அதைக்கேட்ட அனைவரும் என்னாஆஆ என்று அதிர்ந்தவர்கள், வசந்தியை நினைத்து கண் கலங்கினார்கள்".

" தேவி எப்பொழுதுமே வேலையாட்களிடம், எரிந்து விழுவதும், முதலாளி என்ற திமிரோடும் தான் பேசுவார். ஆனால், வசந்தியோ அனைவரிடமும் அன்பாகவே பழகுவார்".

" யாருக்கு என்ன காரியம் ஆக வேண்டுமென்றாலும், வசந்தியிடம் தான் வந்து சொல்வார்கள்".

" இனி நாம யாரிடம் போய் நம் குறைய சொல்லயென, மனதிற்குள்ளே வேதனைப்பட்டார்கள்".

"அப்பொழுது கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்க, தனது ஃபோனை எடுத்து பார்த்து விட்டு அட்டென் பண்ணியவர், சொல்லுடா என்க, அங்கு சொல்ல பட்ட செய்தியை கேட்டு, என்னடாஆஆஆ சொல்லுற என்றவாறு அதிர்ந்து எழுந்தார்".

" மேலும் அந்த பக்கத்திலிருந்து என்ன சொன்னார்களோ தெரியவில்லை. அழைப்பை கட் பண்ணியவர், வேகமாக வெளியே போய் டிரைவரிடம் காரை எடுப்பா என்றவாறு முன்பக்கம் காரில் ஏறி உட்கார, காரும் வெளியே வர, அந்நேரம் ஒரு நடுத்தவர வயதானர், அங்கிருந்த வாட்ச்மேனிடம் உள்ளே போகணுமென கேட்டுக் கொண்டிருந்தார்".

" அதை பார்த்த தனா,காரை நிறுத்தென்றவர், யாருங்க? என்க, அவர் தன்னிடமுள்ள விசிட்டிங் கார்டையும், ஐ போன் ஒன்றையும் நீட்டி, இதை கொடுக்க வந்தேனென்க, அதை வாங்கிய தனா, உங்க நம்பரை கொடுத்துட்டு போங்க".

" நான் பிறகு பேசுறேன் சார் என்க, சரிங்கயென்றவர், அவர் நம்பரை சொல்ல, தனாவும் நோட் பண்ணிக்கொண்ட பின்,காரை எடுப்பா என்றதும், டிரைவரும் தனா சொன்ன ஊரை நோக்கி காரை ஓட்டிச் சென்றான்".

சதூர்வேதமங்கலம்:

" இன்று பிள்ளைகளுக்கு அரையாண்டு பரிட்சை நடப்பதால், வாசல் பக்கமிருந்த தூணில் சாய்ந்து கொண்டு எதிரில் இருக்கும் குளத்தையே ஆர்கலி பார்த்துக் கொண்டிருந்தாள்".

" அப்பொழுது, வழக்கமாய் தோன்றும் அந்த எண்ணம் வர சுற்றி தன் பார்வையால் அலச, கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் இல்லை".

" கொஞ்ச நாளாவே யாரோ தன்னை உற்று பார்ப்பது போல உள்ளுணர்வு சொல்லிக் கொண்டேயிருந்தது".

" சுற்றி பார்த்தால் யாரும் இருக்க மாட்டார்கள். ஒரு வேளை நம்ப பிரம்மையோவென்று நினைத்துக்கொண்டாள்".

" பின்னர் எக்ஸாம் ஹாலிற்குள் சென்றவள், பிள்ளைகளை சுற்றி பார்க்க, சிலர் யோசிப்பதும், சிலர் எழுதிக்கொண்டும் இருந்தனர்".

" சிறிதா நிமிடங்கள் சென்று பெல் அடிக்கும் சத்தம் கேட்டு, வாங்க வாங்க, பேப்பரை கொண்டு வந்து கொடுங்களென்றாள்".

" பிள்ளைகளும் பரிட்சை முடிந்து வீட்டிற்கு செல்ல, பேப்பரை ஹெட்மாஸ்டர் ரூமில் கொடுத்து விட்டு, ஆர்கலியும் மதிய சாப்பாட்டிற்கு வீட்டிற்கு கிளம்பினாள்".

"சில நாட்களாக வெயில் அதிகமாக இருப்பதால், காலையில் வரும் போதே குடை எடுத்து வர, இப்பொழுது அது பயனாக இருந்தது".

"ஏழாவது மாதம் என்பதால் நடக்க கொஞ்சம் சிரமமாகவே இருந்தது. வாக்கிங் உடலுக்கு நல்லது தான் என்பதால், பாட்டியிடமும் இதை பற்றி சொல்லவில்லை".

"வீட்டிற்கு வந்தவளின் முக சோடையை பார்த்த பாட்டி, என்ன கண்ணு, உடம்பு எதாவது பண்ணுதானு பதற, இல்லை பாட்டி".

" வெயில்ல வந்ததால் அப்படி இருக்கென்க,அதுக்கு தான் சொல்லுறேன். ஆட்டோவில் போயென, நீ எங்க கேட்குறாயென்று? கருப்பாயி சொல்ல, அண்ணி. ..கண்ணுக்கெட்டிய தூரத்திலிருக்கும் ஸ்கூலிற்கு ஆட்டோவா என்றவள், முகத்தை கழுவிட்டு வந்து சாப்பிட உட்கார, கருப்பாயி அவளுக்கு சாப்பாட்டை பரிமாறினார்".

"சாப்பாடு பரிமாறிக்கொண்டே, இன்னும் எத்தனை பரிட்சை இருக்கு ஆராமா என்க, நாளையோட முடியுதுங்கண்ணி".

" அதிலிருந்து ஒரு வாரம் லீவ் தான் என்றவள், நீங்களும் சாப்பிடுங்களேயென்க, நாங்க பிறகு சாப்டுறோம்".

" நீ இந்த கீரையையும், முட்டையையும் நல்லா சாப்பிடு. தினமுமா என்று ஆர்கலி அலுக்க,என் மருமக பிள்ளைங்களுக்கு தான்".

"உனக்கு யாரு குடுக்குறா என்றவாறு இன்னும் கொஞ்சம் கீரையை அள்ளி ஆர்கலியின் தட்டில் வைக்க,ஒரு நாத்தனாரை எப்படிலாம் கொடுமை பண்ணுறாங்க பாருங்களென்றாள்".

" பிறகு சாப்பிட்டு முடித்தவள் இருவரிடமும் சொல்லிக்கொண்டு ஸ்கூலிற்கு வந்து சேர, மதிய பரிட்சையும் ஆரம்பமானது".

"அடுத்த நாளும் வந்தது".

" இன்றோடு அரையாண்டு தேர்வு முடிய, திருத்த வேண்டிய பேப்பர் கட்டுகளை எடுத்துக்கொண்டவள், டீச்சரிடமும், ஹெட்மாஸ்டரிடமும் சொல்லிக்கொண்டு வீட்டிற்கு செல்லும் போது, மீண்டும் தன்னை யாரோ பின் தொடர்வது போல தோன்றியது".

" சுற்றி பார்க்க, இருபுறமும் நெற்கதிர்கள் காற்றில் ஆடிக்கொண்டிருக்க, இடது பக்கமிருக்கும் ஆழ்வார் குளத்தில் சிலர் குளித்துக் கொண்டிருப்பதும் தெரிந்தது".

" பின்னர் யோசனையோடே நடக்க ஆரம்பித்தாள். சிறிது நிமிடங்கள் சென்று புல்லட் ஒன்று பின்னாடி வரும் சத்தம் கேட்டு ஓரமாக ஒதுங்கி நடக்க, ஆர்கலி என்ற குரலில் சடாரென்று திரும்பி பார்த்தாள்".

" அங்கே இளைஞன் ஒருவன் வண்டியில் உட்கார்ந்திருந்தான். யார்? என யோசனையோடு ஆர்கலி பார்க்க,அவளை பார்த்து சிரித்தவன், என் பெயர் மதிமாறன்".

" உங்களை நான் கோயம்புத்தூரில் பார்த்திருக்கேனென்க, அதைக்கேட்டு திடுக்கிட்டவள், எதுவும் பேசாமல் வேகவேகமாக சென்றாள்".

"கோயம்புத்தூரில் பார்த்திருக்கிறானென்று சொல்கிறானே, அப்போ நான் ஆசிரமத்தில் வளர்ந்தவளென்று தெரிஞ்சிருக்குமோ?, அய்யோஓஓஓஓ".

" நான் கடைசி வரையிலும் நிம்மதியா வாழணுமென்பது , கடவுளுக்கு பொறுக்காதா?,பாட்டியும் நானும் அனாதையென்பது தெரிந்தால், இந்த வேலை நிலைக்காதே?.

" பொய் சொல்லியிருக்கோமென்று அந்த கண்ணன் சார் நினைத்தால், என்ன நடக்குமென்று தெரியவில்லையேனு உள்ளுக்குள் கதறிக்கொண்டே வீட்டிற்கு வந்தவள், எதுவும் பேசாமல் அறைக்குள் போய் கதவை சாற்றிக்கொண்டாள்".

" பாட்டிக்கு தான் ஒன்றும் புரியவில்லை. அம்மாடி ஆரா கண்ணு, ஆரா கண்ணுயென கதவை தட்ட, ஆர்கலியோ கதவை திறந்த பாடில்லை".

" அம்மாடி, என்னாச்சினு சொன்னா தானே எனக்கு தெரியும். இப்படி கதவை சாற்றிக்கொண்டால் என்ன அர்த்தமென்கும் போது,உள்ளே வரலாமா என்ற குரல் கேட்டு, ஆர்கலி கதவை திறந்தாள்".

" பாட்டி, பாட்டி என்கும் போதே ஆர்கலிக்கு மேல் மூச்சு வாங்கியது. அம்மாடி ஒன்னும் இல்லை, ஒன்னும் இல்லையென்று, வாசல் பக்கம் சென்றவர், சொல்லுப்பா, யார் வேண்டுமென்க, ஆர்கலி என்றான்".

" அவன் சொன்னதை கேட்டவர், என்ன தம்பி எகத்தாலமா?, என் பேத்தி கிட்ட உனக்கு என்ன பேசயிருக்கு?,ஏன் இல்லையென்று உள்ளே வந்தவனோ,வீட்டை சுற்றி பார்த்தான்".

" பின்னர் அங்கிருந்த சேரில் உட்கார்ந்து கொண்டவன், ஆசிரமத்தில் வளர்ந்த அனாதை தானே இவளென்று, கால் மேல் கால் போட்டு ஆட்டிக்கொண்டே சொல்ல, அதற்கு என்னவென்ற குரல், வாசல் பக்கமாய் கேட்க, திடுக்கிட்டு எழுந்தான்".

" நிதானமாக உள்ளே வந்த கண்ணனை பார்த்தவன்,வாங்க சார். சும்மா டீச்சரை பார்த்து விட்டு போகலாமென்று வந்தேனென்க, இன்னொரு முறை இந்த வீட்டில் உன்னுடைய பார்வை பட்டுது, செதில் செதிலா செதுக்கி போட்டுறுவேனென்று கண்ணன் சொன்னதை கேட்டவனோ, அதிர்ந்தவாறு வீட்டை விட்டு வெளியே போய்விட்டான்".

"ஆர்கலியோ அழுத விழிகளோடு அதிர்ந்து போய் நிற்க,ஆச்சியோ கண்ணனை வாப்பா, உட்காரென்று சேரை காட்டினார்".

" அம்மாடி ஆரா கண்ணு என்று அவளின் தோளை தட்ட, ஆங் என நிகழ்விற்கு வந்தவள், சார் மன்னிச்சிடுங்களென்க, எனக்கு எல்லாம் தெரியும்மா என்றார் கண்ணன்".

" நீங்க வந்த இரண்டாவது நாளே, உங்களை பற்றி அம்மாவே என்னிடம் சொல்லிட்டாங்களென்றவர், மாடியிலிருந்து பார்க்கும் போது,அந்த மிராசு மகன் கேட்டை திறந்து வருவது தெரிந்தது".

" அவன் சரியில்லாதவன், அதனால் தான் நான் வந்தேனென்றவர்,அம்மாடி ஊர் உலகத்திற்காக நாம வாழவில்லை. அதை மனதில் வைத்துக்கொள்".

" கவலைபடாமல் நிம்மதியா இருமா. வாயும் வயிறுமா இருக்குற பொண்ணு, கண்டதை யோசிக்காதே. அப்பா இருக்கேனென்றவர், வரேங்கம்மா என்றவாறு சென்றார்".

"கண்ணன் போனதும் கதவை தாழிட்டவர், வேகமாக சமையல் கட்டிற்குள் சென்று பாலை ஆற்றி எடுத்து வந்தவர், இதை குடியென ஆர்கலியிடம் நீட்ட, வாங்கி குடித்தவள், வரும் வழியில் நடந்ததை சொன்னாள்".

" இனி கவலை இல்லை ஆரா கண்ணு. நாம ஒன்னும் ஏமாற்றவில்லை, திருடவில்லை".

"அதனால் தான் கண்ணன் தம்பிகிட்ட உண்மைய அதாவது, நாம இருவரும் ஆசிரமத்தில் வளர்ந்தோமென்றும், நீ தான் என்னை பாட்டியா தத்தெடுத்துக்கிட்டயென்று சொன்னேன் என்றார்".

" பாட்டியென அவர் தோளில் சாய்ந்த ஆர்கலி, கதறி அழுதாள்".

" பேத்தியின் தோளை தட்டிக்கொடுத்தவர், போய் துணிய மாற்று கண்ணு. நல்லவர்கள் ஏதோ ஒரு வகையில் நமக்கு உதவி செய்வாங்க".

ஆர்கலி எங்கே...??
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top