Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
சதூர்வேதமங்கலம்:
" ஆட்டோ சத்தம் கேட்டு வாசல் பக்கம் பார்க்க,ஆர்கலியும், கருப்பாயியும் உள்ளே வந்தனர்".
"பிள்ளைகள் இருவரும் சாப்பிட்டு, ஹாலில் தூங்க,சங்கரும், பாட்டியும் டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள்".
" கையை கழுவிட்டு வந்து சாப்பிடுங்களென்ற பாட்டி, இருவருக்கும் சாப்பாட்டை எடுத்து வைக்க, நீங்க சாப்டீங்களா? என்றவாறு இருவரும் சாப்பிட்டு முடித்தனர்".
" மனைவியை பார்த்த சங்கர்,ஏ புள்ள வீட்டுக்கு போகலாமா?, சரி மாமா என்றவர், ஆளுக்கொரு புள்ளையை தூக்கி தோளில் போட்டவர்கள்,இருவரிடமும் சொல்லிக்கொண்டு அங்கிருந்து சென்றார்கள்".
" சிறிது நேரம் பாட்டியிடம் பேசியிருந்து விட்டு, ஆர்கலியும் உள்ளே போய் படுத்து விட்டாள்".
காலை கதிரவனும் வழக்கம் போல கிழக்கே உதயமானது.
" ஆர்கலியும் தயாராகி ஸ்கூலிற்கு சென்று விட்டாள்".
" வீட்டு வேலைகளையெல்லாம் முடித்து விட்டு, கணவருக்கு மதிய உணவையும் சமைத்து வைத்த கருப்பாயி, வீட்டை பூட்டி, வழக்கமாய் வைக்கும் இடத்தில் சாவியை வைத்து விட்டு, பாட்டியிடம் வந்து சேர்ந்தார்".
" என்ன கண்ணு வேலையெல்லாம் முடிஞ்சிதானு கேட்டுக்கொண்டே பிளவுஸ் துணியை வெட்டியவரிடம், ஆச்சி ஒரு விஷயமென்க, சொல்லு கண்ணு".
"பின்னர் பாட்டியிடம் டாக்டர் சொன்னதையெல்லாம் சொல்ல, அதைக்கேட்டவருக்கு கண்கள் கலங்கியது".
" ஆச்சி என்னாச்சி?,என்னத்தை கண்ணு சொல்லயென்றவர், ஆரா கண்ணுக்கு விவாகரத்து ஆகி 5 மாசம் ஆகுதென்கவும், என்ன ஆச்சி சொல்லுறீங்கனு பதறினார்".
" ஆமா கண்ணு, ஏழை பொண்ணாம், அதனால மருமகளா ஏத்துக்க முடியாதுனு சொல்லிட்டாங்கனு பாட்டி கண் கலங்க,அந்த பையன் ஒன்னுமே சொல்லலையா? ".
" ம்கும்.... பையன் தான் விவாகரத்து கேட்டது கண்ணு. விதி என்பதா இல்லை மனிதர்கள் செய்த சதினு சொல்வதானே தெரியலை".
" ஆச்சி சொல்லியதை கேட்ட கருப்பாயிக்கு ஒன்னும் சொல்ல முடியவில்லை".
" இப்படி ஒரு விஷயம் இருக்குன்னு கொஞ்சம் கூட நான் எதிர்பார்க்கல ஆச்சி என்று வருத்தப்பட்டவர், நம்ம வீட்டு பொண்ணு கூட வாழுறதுக்கு அவங்களுக்கு கொடுத்து வைக்கல, முடிஞ்சதை பத்தி இனி பேச வேண்டாம்".
"இனிமே ஆராமா வை நம்ப நல்லா பாத்துக்கலாம் ஆச்சி. கடவுள் அந்த பொண்ணுக்கு நல்ல வழி வச்சிருப்பானென்று பட்டன் கட்டும் வேலையை பார்க்க தொடங்கினார்".
" பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆர்கலியோ வயிற்றில் குழந்தைகள் உதைக்கும் அசைவை உணர, சில நொடி அமைதியானவள், அங்கிருந்த சேரில் உட்கார்ந்து கொண்டாள்".
" ஓகே.. இவ்வளவு நேரம் பாடம் நடத்துனேன் இல்லையா, அதில் இருந்து சில கேள்வியை போர்டில் எழுதுறேன். அதற்கு பதில் எழுதுங்களென்று சொல்லியவள், எழுந்து போய் சிறு சிறு கூட்டல் கணக்குகளை எழுதினாள்".
" யோசித்து நிதானமா பதில் எழுதணும். யாரும் யாரையும் காப்பியடிக்க கூடாதென்று சொல்லிக்கொண்டே வெளியே வந்தவள், இயற்கை காற்று மேல பட, மனம் சிறிது லேசான போல இருந்தது".
"அவள் வெளியே நிற்பதை பார்த்த ஜீவிதா டீச்சர்,என்னாச்சி என்க, சும்மா தான் கா. குழைந்தைகள் அசைவு தெரிஞ்சிதா, அதான் வெளியே வந்து நிற்கிறேன்".
" ம்ம் புள்ளைங்களுக்கு இப்போ பிரேக் விடும் நேரம் தான், இரு ஆயாம்மா கிட்ட சொல்லி லெமன் ஜூஸ் ஒன்னு வாங்கி வரேனென்று , அங்கிருந்து சென்றார்".
"இடைவேளைக்கான பெல் சத்தம் கேட்டதும், பிள்ளைகள் வகுப்பை விட்டு வெளியே ஓடி வந்தார்கள்".
"ஆர்கலிக்கு ஸ்கூலுக்கு எதிரே ஆயா விற்கும் மிளகாய் பொடி போட்ட நெல்லிக்காய் சாப்பிட ஆசை வந்தது".
" பிள்ளைகள் இருக்கும் போது போனால்,டீச்சரும் நம்மை போலவென்று நினைத்து சிரிப்பார்களென்று எண்ணியவள்,அங்கிருந்தே எதிரில் இருக்கும் நெல்லிக்காயை பார்த்துக் கொண்டிருந்தாள்".
"சிறிது நிமிடத்தில் ஜீவிதா டீச்சரும் லெமன் ஜூஸோடு அங்கு வந்தவர், இதை குடிமா என்க, வாங்கி குடித்தாள்.பின்னர் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்".
"அப்பொழுது அவர்களிடம் வந்த ஒரு மாணவியோ, டீச்சர் இதை ஆயா கொடுக்க சொன்னாங்க என்க, யாருமானு ஆர்கலி கேட்கவும்,எதிரில் இருக்கும் ஆயா கடையை காட்டி சொல்லி விட்டு,ஒரு பேப்பர் பொட்டலத்தை நீட்ட, அதை வாங்கி பிரித்துப் பார்க்க அதில் நெல்லிக்காய் இருந்தது".
"சந்தோஷமாக ஒன்னை எடுத்து வாயில் போட்டவள், பாட்டி கடையை பார்க்க, சாப்பிடுமா என்று பாட்டி அங்கிருந்து தலையசைத்தார்".
கலசங்காடு:
"தலை சுத்துதுனு மருமகள் சொல்லியதை கேட்டவர், ஒருவேளை அப்படி இருக்குமா?என்று மனசுக்குள் கணக்கு பண்ணிக்கொண்டு, ஏம்மா லீலா,வீட்டு தூரம் எப்போ ஆனம்மா, இரண்டு மாசம் ஆகுதுங்கத்தை என்றாள்".
"செந்தூரா என் வீட்டுக்கு நீ வந்துட்டியாப்பா என்றவர்,சரி லீலா. வா பக்கத்துல தான் மருத்துவச்சி அம்மா இருக்காங்க.ஒரு எட்டு போய் பாத்துட்டு வரலாமென்க, சரிங்கத்தை என்றாள்".
" அதன் பின்னர் இருவரும் வீட்டை பூட்டிக்கொண்டு, பக்கத்து தெருவிலிருக்கும் மருத்துவச்சியான சாலா பாட்டி வீட்டிற்கு வர, அங்கு சிலருக்கு பச்சிலை கொடுத்துக் கொண்டிருந்தார்".
" சிறிது நிமிடம் சென்று இவர்கள் உள்ளே போக,வாத்தா, ஏது இம்புட்டு தூரமென்க, அம்மா, மருமவள் தலை சுத்துதுனு சொல்லுது, ரெண்டு மாசம் தூரம் போகலையாம்.மாரியாத்தா என்றபடியே லீலாவின் கையை பிடித்து நாடி பார்த்தவர், நல்ல சேதி தான் தா".
"குடும்பம் தழைச்சிருக்கு,மருமகள் உண்டாகிருப்பதாக பாட்டி சொல்ல,தனது இடுப்பிலிருக்கும் சுருக்குப்பையிலருந்து காசை எடுத்து இந்தாங்கம்மா என்று கொடுத்தவர், மருமகளை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தார்".
" ஏப்புள்ள எதாவது குடிக்க கொண்டு வரட்டுமா என்க, ஒன்னும் வேணாத்தை.நேரம் ஆகிட்டு, மாமாவும் உங்க புள்ளையும் மதிய சாப்பாட்டுக்கு வந்துடுவாங்களே என்றவள், சமையல் அறைக்குள் நுழைந்தாள்".
" சாமி அறைக்கு போன மீனாட்சி, எங்குலம் நல்ல படியா பூமிக்கு வர நீங்கள் அருள் புரியணுமென்று வேண்டியவர், மருமகளோடு சமையலை செய்ய தொடங்கினார்".
"லீலாவின் மனதிற்குளிருக்கும் சந்தோஷத்தை சொல்ல வார்த்தையில்லை.எப்போ கணவன் வருவானென்று வாசல் பக்கம் ஒரு கண்ணை வைத்திருந்தாள்".
" வேகவேகமாக கேசரி கிண்டிய மீனாட்சி, லீலா இந்தாமானு மருமகளுக்கு ஒரு வாய் ஊட்டியவர், என்ன சாப்பிட ஆசப்படுறியோ அத்தை கிட்ட கேளுத்தா என்றார்".
" மதிய சாப்பாட்டிற்கு வீட்டிற்கு வந்த கணவரிடம், மீனாட்சி விஷயத்தை சொன்னார். அதைக்கேட்ட வீரையன் அப்பனே முருகா என்றார்".
" பின்னர் சிறிது நேரத்தில் ஜெய்யும் வர, அவன் சாப்பிடும் வரை அமைதியாகயிருந்த லீலாவை கண்டவன்,என்ன உம்முனு இருக்க?".
" ஒன்னும் இல்லைங்க என்றாள்.பின்னர் எழுந்து போய் கையை கழுவியவன், வழக்கம் போல சிறிது நேரம் மதியத்தில் படுத்து விட்டு மாலை 5 மணிக்கு மேல தான் கடைக்கு போவான்".
" உள்ளே போய் கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்திருக்க, லீலாவும் சாப்பிட்டு அறைக்குள் வந்தவள், கதவை தாழிட்டு தயங்கி நின்றாள்".
" என்னடி புதுசா ரூமிற்கு வர போல நிக்கிற?, உங்க கிட்ட ஒன்னு சொல்லணும் என்க, ம்ம் சொல்லு.அதுல என்ன தயக்கமென்றான்".
"கணவனின் அருகில் வந்தவள், அவன் காதில் விஷயத்தை சொல்ல, அதைக்கேட்ட ஜெய்யிற்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை".
"அதன் பின்னர் வந்த நாட்கள் மசக்கையின் அவதிகளோடும், கணவர் வீட்டின் அன்பிலும் லீலா திக்குமுக்காடி போனாள்".
"விஷயம் கேள்வி பட்ட உடனே நகுலன் மகளை பார்க்க வந்து விட்டார்.பத்து நாட்கள் மகளோடு இருந்து விட்டு தான் மீண்டும் இலங்கைக்கு சென்றார்".
" அதன் பின்னர் வந்த நாட்களில் வீரையன், மீனாட்சி, ஜலால், அவர் மனைவி, ஜெய்யின் நண்பர்கள் குடும்பத்தினர்களென்று, எல்லாரும் அவரவர் கையில் கிடைத்ததை எல்லாம் லீலாவிற்கு சாப்பிட வாங்கியும், செய்தும் கொடுத்தனர்".
" ஏழாவது மாதம் ஆரம்பமானது. மனைவியிடம் அழகு மேலும் கொஞ்சம் கூடி இருக்க, ஜெய் தான் அவஸ்தை பட்டு போனான்".
" அவனை கண்டு லீலாவிற்கு சிரிப்பு தான் வந்தது. "
"மாதங்களும் வேகமாக கடந்தது. ஒன்பதாவது மாதத்தில் வளையல் காப்பு வைத்துக் கொள்ளலாமென்று முன்பே நகுலனிடம் சொல்லி விட்டனர்".
" அம்மாவசையிலிருந்து ஏழாவது நாளை கணக்கு பண்ண ஞாயிற்றுக்கிழமை வந்தது. எல்லாருக்கும் வசதியாக இருக்கும் என்பதால், அந்த நாளையே பிக்ஸ் பண்ணினார்கள்".
" சொந்த பந்தம், தெரிந்தவர்களுக்கும் இரண்டு நாட்களுக்கு முன்பே சொல்லி விட்டனர்".
"தாய் வீட்டிலிருந்து தான் ஒன்பது வகை சாதம் சீர் வரணுமென்பதால், நான் தான் செய்வேனென்று ஜலால் சொல்லி விட, கொஞ்சம் என்னையும் கூட்டு சேர்த்துக்குங்கணா என்றார் நகுலன்".
" சமையலுக்கு ஆட்களை வைத்து ஒன்பது விதமான சாதத்தை செய்து கொண்டு, தெரிந்த சிலரையும் கூப்பிட்டு சீர் வரிசைகளோடு பக்கத்து தெருவிலிருக்கும் ஜெய் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்".
" வந்தவர்களை வீரையனும், ஜெய்யும் வரவேற்து உட்கார வைத்தனர்.பரமுவிடமும், பன்னீரிடமும் நீங்க எப்படா இதை போல விசேஷத்திற்கு கூப்பிட போறிங்களென்க..."
" என் மச்சான் மவளை( ஜெய்) தான் கட்டலானு இருக்கோமென்க, அகராதி புடிச்ச பயலுங்க என்றனர்"
"நல்ல நேரம் தொடங்கியதும், சுமங்கலி பெண்கள் வந்து, லீலாவிற்கு இரண்டு கைகளிலும் வளையலை போட்டு, பொட்டு வைத்து ஆசீர்வாதம் செய்தனர்".
" பங்ஷனை வெகு விமர்சையாக கொண்டாடினர். லீலாவின் தந்தையும் ஜீவானந்தமும் ஆனந்த கண்ணீர் மல்க பார்த்துக் கொண்டிருந்தார்கள்".
"சம்பிரதாயப்படி வளையல் போட்ட பெண் தாய் வீட்டிற்கு சென்று வரணும் என்பதால், ஜலாலும் அவர் மனைவியும் லீலாவை வீட்டிற்கு அழைத்து போய் ஒரு வாரம் வைத்திருந்தனர்".
"காலை, மாலை நேரம் கிடைக்கும் போதெல்லாம் மீனாட்சி மருமகளை போய் பார்த்துட்டு வந்து கொண்டிருந்தார்".
" ஒரு வாரம் கடந்து செல்ல காலையிலே ஜெய்யும் மாமன் வீட்டிற்கு வந்தான். என்ன மாப்பிள்ளை என்க, அதான் உங்க மகள் ஒரு வாரம் இருந்தாளே, இப்போ கூப்பிட்டு போறேன் மாமா என்க, ஜலால் தனது மருமகனை பார்த்து சிரித்தார்".
" அதுக்குனு இவ்வளவு காலையிலேவா என்றவர், சாப்பிட்டு பிறகு கூப்பிட்டு போப்பா".
" அதைப்போலவே காலை டிபன் முடிந்ததும்,ஜலால் தம்பதியிடம் சொல்லிக்கொண்டு மனைவியோடு தங்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்"
" பிரசவத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே வயிறு கீழே இறங்க தொடங்கியது.எப்போ வேண்டுமானாலும் பிரசவம் ஆகலாமென மருத்துவச்சி பாட்டி சொல்லியிருக்க, மீனாட்சியும் தயாராகவே இருந்தார்".
"பிரசவத்திற்கு ஒரு வாரம் இருக்க, இரவில் தூங்கிக்கொண்டிருந்த லீலாவிற்கு வலி வந்தது.சில நேரத்தில் சூட்டு வலியாகவும் இருக்குமென்று, மீனாட்சி முன்னவே சொல்லியிருக்க, அதுதானென்று இருந்து விட்டாள்".