• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
சதூர்வேதமங்கலம்:

" வழக்கம்போல் ஆர்கலி பள்ளிக்கு சென்று வர,பாட்டி துணி தைப்பதை தெரிந்து, அக்கம் பக்கத்தில் இருப்பவர்களும், எனக்கும் சட்டை தைத்து தர முடியுமாயென்று கருப்பாயிவிடம் கேட்டு அனுப்பினார்கள்".

"ஆச்சியும் தச்சி கொடுக்கிறேனென்றார்".

"அதே போல் இரண்டு பேரின் பிளவுஸ் துணியை வாங்கிட்டு வந்து கொடுக்க பாட்டியும் தைத்துவிட,அதை போட்டு பார்த்தவர்கள்,சரியாக இருக்கென்று பணத்தையும் கொடுத்து அனுப்பினார்கள்".

"விஷயம் தெரிந்து ஊர்மக்களோ நேரடியாக வீட்டுக்கு வந்தே கொடுக்க ஆரம்பித்தனர்".

" ஓர் நாள் பாட்டி துணி தைத்துக் கொண்டிருக்க,ஆச்சி நானும் சும்மா தான் இருக்கேன். எனக்கும் சொல்லிக் கொடுங்களஎன்று கருப்பாயி கேட்க,சரி கண்ணு".

"நீ முதல்ல எம்மிங் பண்றதுக்கு, காஜா கட்டுறது, பட்டன் கட்டுறதுலாம் எப்படினு கத்துக்கோமா என்று பாட்டி சொல்லிக் கொடுத்தார்".

"முதலில் தடுமாறிய கருப்பாயி, பிறகு போக போக பழகிக் கொண்டார். இருவரும் பேச்சு துணையோடு துணிகளை தைப்பதும், தோட்டத்தில் இருக்கும் காய்கறி செடிகளை பராமரிப்பதுமாய் பொழுது போய்க் கொண்டிருந்தது".

" எதுக்கு இந்த வேலையெல்லாமென ஆர்கலி தான் சொல்லிக் கொண்டேயிருக்க தனது பேச்சிலேயே அவளை சரி கட்டினார் பாட்டி".

"ஆர்கலியும், பாட்டியும் சதூர்வேதமங்கலத்துக்கு வந்து இரண்டு மாதங்கள் முடிந்து விட்டது. ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று, மதிய உணவு நம்ம வீட்டில் தான் என ஆர்கலி சொல்லிவிட்டதால், கருப்பாயி தனது இரண்டு பிள்ளைகளையும் அங்கு கூட்டிட்டு வந்திருந்தார்".

" பிள்ளைகள் இருவரும் ஆர்கலிக்கு பயந்து கொண்டு முன் பக்கமாகவே விளையாண்டனர்".

" அப்போது, அம்மாடி ஆராவை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகணும். இங்க வந்து ரெண்டு மாசம் ஆயிடுச்சு என்க, கடந்த இரண்டு மாதமாக செக்கப்பிற்கு செல்லவில்லையேனு அப்பொழுது தான் ஆர்கலிக்கும் ஞாபகம் வந்தது".


" ஆராமா சாயந்திரம் போகலாமா?, சரிங்கண்ணி என்றாள். பின்னர் அசைவ உணவை சமைத்து சாப்பிட்டு சிறிது நேரம் ரெஸ்ட் எடுத்தவர்கள், தயாராகி, பிள்ளைகளை ஆச்சியிடம் விட்டு விட்டு,பாட்டியிடம் சொல்லிக் கொண்டு, டவுனில் இருக்கும் ஹாஸ்பிடலுக்கு சென்றனர்".

" அண்ணா, நாகேஷ்வரி டாக்டர் கிட்ட போங்களென்று கருப்பாயி சொல்ல சரிமா என்றவர், அதைப்போல பாண்டியன் மருத்துவமனையின் முன்பு போய் ஆட்டோவை நிறுத்தினார்".

" தங்கச்சிமா முடிச்சிட்டு சொல்லுங்க வரேனென்று ஆட்டோக்காரர் அங்கிருந்து சென்றார்".

" நல்ல கைராசியான டாக்டர் ஆராமா, சுற்றி இருக்கும் எல்லாரும் இவங்க கிட்ட தான் பெரும்பாலும் வருவாங்க என்றவாறு உள்ளே சென்றவர், ரிசப்ஷனில் இருப்பவரிடம் டோக்கன் கேட்க, பேரு சொல்லுங்க என்றார்".

" ஆர்கலி என்க, 20 வது டோக்கனை கொடுக்க, வாங்கிக்கொண்டு, அங்கு காலியாக இருந்த சேரில் போய் இருவரும் உட்கார்ந்து கொண்டார்கள்".

"இவர்களும்,இன்னும் அங்கு காத்திருந்தவர்களும், சுவற்றில் ஒளிபரப்பான படத்தை பார்த்து நேரத்தை கடத்தினர்".

" அரை மணி நேரம் கடந்திருக்க, கூட்டமும் அதிகமானது".

" கர்பிணி பெண்களும், குழந்தையோடுமே பலர் வருவதும் போவதுமாக இருந்தவர்".

" டோக்கன் நம்பர் 20 என்று பெல் சத்தத்தோடு கேட்க, இருவரும் எழுந்து கதவை திறந்து உள்ளே போக, நடுத்தர வயதில், கருணை முகத்தோடும், மிகவும் எளிமையாக இருந்த டாக்டர் நாகேஷ்வரி இவர்களை பார்த்து சிரித்தார்".

" சொல்லுங்களென்க, பாப்பா மாசமா இருக்குங்க மேடம், அதான் காட்டிட்டு போகலானு வந்தோமென்க, சரி என்றவறே, ஆர்கலியிடம் டீட்டைல்ஸை கேட்டு தெரிந்து கொண்டவர், உள்ளே போய் படுங்க என்க, ஆர்கலியும் அங்கிருந்த கதவை திறந்து உள்ளே சென்றவள், ஸ்டூலின் மேல் ஏறி பெட்டில் படுத்தாள்".

" சில நொடியில் டாக்டரும், நர்சும் உள்ளே வந்தனர். பின்னர் செக் பண்ணி பார்த்தவர், ஒருக்களித்து எழுந்திரிச்சிங்குங்களென்று சொல்லி விட்டு, வாஸ்பேஷனில் கையை கழுவியவர், அங்கிருந்து வெளியே சென்றார்".

" புடவையை சரி பண்ணி கட்டிக்கொண்ட ஆர்கலி, கதவை திறந்து வந்து கருப்பாயின் பக்கத்து இருக்கையில் உட்கார, வரும் ஞாயிற்று கிழமை ஸ்கேன் பண்ணி பார்க்கலாம் மா".

" உடம்பில் நீர் குறைவா இருக்குற போல தெரியுது. நல்லா தண்ணி குடிங்க, வேற எதாவது ஒவ்வாமை இருக்கா?, இல்லைங்க டாக்டர் என்றாள்".

" ஓகே என்றவர் வேக்சின் போட்டுக்குங்களென்று ஆர்கலியின் இடுப்பில் போட்டு விட்டார்".

" ரெகுலரா சாப்பிடும் விட்டமின் மாத்திரை போதுமென்றவர், சீட்டில் எழுதி கொடுக்க, தேங்க்யூ டாக்டரென்று இருவரும் அந்த அறையிலிருந்த கதவை திறந்து வெளியே வந்தவர்கள், டாக்டர் பீஸை அங்கிருந்தவரிடம் கொடுத்து விட்டு மெயின் கேட்டிற்கு வந்தனர்".

"அப்பொழுது அக்கா அக்கா என்ற குரல் கேட்டு இருவரும் திரும்பி பார்க்க, கருப்பாயியை பார்த்த அந்த நர்ஸ், மேடம் உங்களை கூப்பிடுறாங்களென்றாள்".

" அப்படியாமா என்றவர், ஆராமா நீ ஆட்டோக்கு போன் போட்டு வர சொல்லு, நான் போய் என்னனு கேட்டு வரேனென்று உள்ளே சென்றவர், கதவை திறந்து போய் டாக்டர் என்க, வாங்கம்மா".

" உங்க கூட வந்த பொண்ணுக்கு நீங்க எப்படி வேண்டும் என்க,அண்ணிங்க மேடம். ஓகே மா என்றவர்,ரொம்ப பலகீனமா இருக்காங்க".

" சரியா சாப்பிடுறாங்களா?, ஏதோ ஒரு பிரச்சினையை மனசுல வச்சி அதிலே இருக்காங்க போல, நார்மலா இருக்க போல இருந்தாலும், அவங்க அப்படி இல்லை மா".நல்லா தூங்க சொல்லுங்க,நேரம் கிடைக்கும் போது, அக்கம் பக்கம் இருக்கும் இடத்திற்கு கூப்பிட்டு போங்கள்".

" ஆமா அந்த பொண்ணு வீட்ல இருக்காங்களா?, இல்லை வேலைக்கு போறாங்களா?, டீச்சரா இருக்குங்க மேடம்".

" ஓ என்றவர் வீட்டுக்காரர்?, தம்பி வெளிநாட்டில் இருக்குதுங்க, ம்ம் ஒருவேளை அவங்க கூட இல்லை என்ற வருத்தமாக கூட இருக்கலாம்".

" சரி இதுலாம் இந்த நேரத்தில் வரும் சின்ன சின்ன விஷயங்கள் தான், பார்த்துங்குங்க என்கவும், ரொம்ப நன்றிங்க மேடம் என்று சொல்லி விட்டு வெளியே வந்தார்".

"என்ன அண்ணி ,எதுக்கு கூப்பிட்டாங்க? என்று ஆர்கலி கேட்க,இல்லமா நம்ம பின்னாடி வீட்ல இருக்காங்க இல்ல கமலா அக்கா. அவங்களுக்கு இவங்க தான் ஆபரேஷன் பண்ணாங்க.அதை பத்தி விசாரிச்சாங்க என்று சமாளித்தார்".

வெற்றி- ஜனனி நினைவுகள்:

" அதன் பின்ன வந்த நாட்களெல்லாம் ஜனனி ஒருத்தி இருப்பதை வெற்றி கண்டு கொள்ளவே இல்லை. அவளும் யோசித்து யோசித்துப் பார்த்தவளுக்கு உள்ளுக்குள்ளே கவலையானது".

"நாட்களும் வேகமாக ஓடியது 12th ரிசல்ட் வர, கீதாவும் ஜனனியும் பாஸ் பண்ணி, ஒரே காலேஜில், ஒரே கோர்ஸில் சேர்ந்து விட்டனர்".

"கல்லூரி செல்ல தொடங்கிய இரண்டு மாதங்களுக்கு பின்னர், அவர்கள் ஊரில் கோயில் திருவிழா ஆரம்பமானது. அதற்காக,வெற்றி தனது தோழியான ராணியையும் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான்".

" ஜனனியும்,கீதாவும் தாமரை குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போது,ஜனா, வெற்றி அண்ணா வீட்டிற்கு ஒரு அக்கா வந்திருக்காங்கடி".

" நேற்று மல்லிப்பூ பறிக்க நான் பெரிய வீட்டிற்கு போனேனா, அப்போ ரெண்டு பேரும் அங்க திண்ணையில் உட்கார்ந்து பேசிக்கிட்டு இருந்தாங்கடி. ரெண்டு பேருக்கும் பொருத்தம் ரொம்ப நல்லா இருக்கு தெரியுமாடி என்க, என்னடி சொல்ற என்று ஜனனி உள்ளுக்குள் அதிர்ந்தாலும், சாதாரணமாக கேட்டாள்".

"ஆமாடி அண்ணன் கூட படிச்ச பொண்ணாம்".

"எவ்வளவு அழகா இருக்காங்க தெரியுமா?,இரண்டு பேரும் நேத்து கோயிலுக்கு ஜோடியாக ஒரே கலர்ல டிரஸ் போட்டு வந்தாங்க. பார்க்கும் போது அவ்வளவு சூப்பரா இருந்துச்சஎன்று கீதா சொல்ல சொல்ல, ஜனனியின் உள்ளுக்குள், கோவமும்,பொறாமையும் உருவாகிக் கொண்டிருந்தது".

"சாமிக்கு இன்னைக்கு பெரிய வீட்டு படையல் தான். சாயந்திரம் அந்த அக்கா வெற்றி அண்ணன் கூட வருவாங்க பாரேன் என்கவும், சரிடி என்றாள்".

"அதே போல் கோயிலில் பூஜை ஆரம்பமானது. ஊர் மக்கள் எல்லாரும் கோயில் படையலுக்கு வர தொடங்கினர். இன்று பெரிய வீட்டு படையல் என்பதால் எல்லாருக்குமே கோயிலில் தான் இரவு உணவு ".

" யாரும் எந்த வித பாகுபாடில்லாமல், இந்த பந்தியில் கலந்து கொள்வது காலங்காலமாக தொடர்கின்றது".

" மற்றவர்கள் அவர்களால் முடிந்ததை பிரசாதமாக கொடுப்பார்கள். இன்னும் ஒரு சிலர் ஊர் மக்கள், வெற்றியின் வீட்டு வழக்கம் போல சாப்பாடும் போடுவார்கள்".

"ஜனனியும் வேக வேகமாக தயாராகி நிற்க, கீதாவும் அவள் அம்மா கலாவோடு வர, பின்னர் பாட்டிகள் இருவரும் கதை பேசிக்கொண்டு முன்னே செல்ல, இவர்கள் மூவரும் பின்னே சென்றனர்".

" அங்கங்கே கட்டியிருந்த ஸ்பீக்கரில் ஈஸ்வரி அம்மாவின் குரலில்,அம்மன் பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தது"

ஜனனியின் பார்வையோ அப்போ அப்போ வாசல் பக்கமே இருந்தது. சிறிது நிமிடங்கள் கடந்து செல்ல, யாரோ ஒருவர் பெரிய வீட்டிலிருந்து வந்து விட்டார்கள் என்று குரல் கொடுக்க, வாசல் பக்கம் திரும்பி பார்த்தவள் அதிர்ந்து போனாள்".

"வெற்றி பட்டு வேஸ்டி சட்டையிலும், ராணி பட்டுப்புடவை, நகைகளிலும், அழகியாய் ஜொலிக்க, இவர்களோடு பேசிக்கொண்டு கோபியும் முன்னே வர, வள்ளியும், சத்தியமூர்த்தியும் பின்னாடி நடந்து வருவதை பார்த்து, அங்கே இருந்து சிலர்கள் சின்ன தம்பிக்கு பார்த்த பொண்ணு போல".

" தம்பிக்கு ஏத்த போல நல்லா இருக்குயா ஜோடி பொருத்தமென்று பேசிக்கொண்டனர். அதையெல்லாம் கேட்க, ஜனனிக்கு அழுகை பொங்கி கொண்டு வந்தது".

"ஜனனியின் பார்வையோ வெற்றி-ராணியை விட்டு அங்கும் இங்கும் அகலவில்லை".

"ஆனால்,தூரத்தில் வரும் போதே ஜனனி அங்கு நிற்பதை வெற்றி பார்த்தாலும் கண்டுகொள்ளவே இல்லை. ராணியிடமே பேசிக்கொண்டு, சிரித்துக் கொண்டும் இருப்பதை பார்க்க பார்க்க, ஜனனிக்கு மிளகாயை அரைத்து பூசியது போல் இருந்தது".

" திடிரென்று வெற்றி ஜனனியை பார்க்க, அவள் முகம் கோபத்தில் இருப்பது தெரிந்து, இவள் ஏன் நம்மை இப்படி முறைத்து பார்க்கிறாளென்று
யோசனையோடு இருந்தவனை பூசாரி அடித்த மணியின் சத்தம் கலைத்தது”

" அப்பொழுது சத்தியமூர்த்தி என்ற குரல் கேட்டு திரும்பி பார்க்க, அங்கே பக்கத்து ஊரில் இருக்கும் அவரின் நண்பர் குடும்பம் நின்று கொண்டிருந்தது".
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
" வா கோதண்டம் என்றவர், வா மா நல்லா இருக்கியானு நண்பரின் மனைவியிடம் கேட்க, நல்லா இருக்கேணா".

" திருவிழாக்கு சொல்ல வீட்டுக்கு வந்தேன் டா. நீ இல்லை என்றதும் வந்துட்டேனென்று சத்தியமூர்த்தி சொல்ல,ஆமா மூர்த்தி, பாலாஜிக்கு துபாய்ல வேலை கிடைத்திருக்கென்று சொன்னேனே, அதான் புள்ளைய அனுப்பி வைக்க போயிருந்தோம்".

" வீட்டிற்கு வந்து விஷயத்தை கேள்வி பட்டதும் உடனே கிளம்பி வந்துட்டோமென்றார். பின்னர் பேசிக்கொண்டிருக்கும் போது, வெற்றியோடு அருகிலிருந்த ராணியை பார்த்தவர்கள், என்னடா பொண்ணு பார்த்து முடிச்சிட்டியா?, ஒருவார்த்தை சொல்லலை".

" பார்க்க நல்லா லட்சணமாக இருக்குடா பொண்ணு என்க, ஏன் கோதண்டம் இப்படி,நம்ப பொண்ணு போலடா, வெற்றி- கோபியோட தோழிடா என்றார்".

" அப்படியா என்றவர், அப்போ நம்ப பாலாஜிக்கு பார்க்கலாமா என்க,ஹாஹாஹா என சிரித்த சத்யமூர்த்தி, என்னடா வீட்டுக்கு மருமகள்னே முடிவு பண்ணிட்டியா என்றார்".

" ஏண்டா அம்மன் சன்னதியில் மனசுக்கு பட்டதை கேட்டேன். இது ஒரு குற்றமா? என்க,இல்லைடா இல்லை என்றவர்,சரி வீட்ல போய் பேசிக்கலாமென்க, பின்னர் அனைவருக்கும் இரவு உணவு கோயில் வளாகத்தில் பரிமாறப்பட்டது".

" வந்தவர்களெல்லாரும் சாப்பிட்டு சென்ற பின்னரே, வெற்றியின் குடும்பமும், கோதண்டனின் வீட்டினரும் சாப்பிட்டவர்கள், மீண்டும் சாமியை வணங்கி விட்டு, பெரிய வீட்டை நோக்கிச் சென்றார்கள்".

" வீட்டிற்குள் வந்த ஜனனி பாத்ரூமிற்குள் சென்று சத்தமின்றி அழுதவள், முகத்தை அழுந்த துடைத்து விட்டு, வழக்கமாய் படுக்கும் இடத்தில் பாயை விரித்து படுத்து விட்டாள்".

" சிறிது நிமிடத்தில் பெரிய வீட்டிற்கு வந்தவர்கள், சத்தியமூர்த்தியும், கோதண்டமும் காற்று வாக்காக, வாசலில் இருந்த சேரில் உட்கார்ந்து கொள்ள, மற்றவர்கள் வீட்டினுள் சென்றனர்".

" அம்மாடி உன் பேரு என்னமா? என கோதண்டனின் மனைவி பரணி கேட்க, ராணிங்கம்மா என்றாள்".

" அந்த ராணி போல தான் இருக்குற என்றவர், ஊரையும், அவள் குடும்பத்தையும் விசாரிக்க, ராணியும் அவர் கேட்டதற்கு சிரித்த முகத்தோடு பதில்களை சொல்லிக் கொண்டிருந்தாள்".

" கோதண்டமோ,அப்புறம்டா அடுத்து என்ன பிளான் என்க, வெற்றிக்கு ஐபிஎஸ் ஆகணும்னு ஆசை இருக்குடா. அதுக்கு தயார் படுத்தணும்".

"அப்புறம் வழக்கம் போல வீடு வயல்ணு காலத்தை ஓட்ட வேண்டியது தானென்றவர், பவித்ராவை போய் பார்த்தியா என்க, ஏர்போர்ட்டிற்கு மாப்பிள்ளை குழந்தையோடு வந்துருந்துச்சிடா".

" அப்படியே பாலாஜிக்கும் நல்ல இடத்தில் முடிஞ்சிட்டால் நம்ப கடமை முடிஞ்சிடுமென்றார். ம்ம், ஊர் பழனி, ஒரு அக்கா, ஒரு அண்ணன்".

" அக்காக்கு கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தைங்களோட ஜெர்மன்ல இருக்கு, அண்ணன் டாக்டருக்கு படிச்சிட்டு இப்போ தான் இந்தியாவிற்கு வந்துருக்கான். ராணி மூனாவது புள்ளை டா".

" நல்ல தங்கமான புள்ளை, வீட்டாளுங்களும் நல்ல மனுஷங்கள் என சத்தியமூர்த்தி சொல்ல, பொண்ணு வேண்டுமானால் கேட்டு பார்ப்போமாடா? என தயங்கியபடியே கேட்டார் கோதண்டம்".

கலசங்காடு:

"ஜெய சிம்ஹன்- லீலா கல்யாணம் முடிந்து ஒரு வாரம் கடந்துவிட்டது. இந்த ஒரு வாரத்தில் சொந்த பந்தங்களின் வீட்டுக்கு விருந்துக்கும் சென்று வந்தனர்".

"இன்று ஜெய் வீட்டில் கறி விருந்து என்பதால், வீரையனும்,மீனாட்சியும் தெரிந்தவர்கள் எல்லாரையும் மதிய உணவுக்காக அழைத்திருந்தார்கள்".

" லீலாவின் கூட வந்திருந்த உறவினர்களும், அவள் அப்பா அண்ணனும் இன்று இரவு தான் இலங்கைக்கு கிளம்புவதாக, முன்கூட்டியே முடிவு செய்திருந்தார்கள்".

"மதியம் விருந்தும் தடபுடலாக தயாரானது. சொந்த பந்தங்கள் அனைவருக்கும் வாங்கி வைத்த துணிகளையும் கொடுத்து, வயிறாற உணவை சாப்பிட வைத்து அனுப்பி வைத்தார்கள்".

"நெருங்கிய உறவினர்கள் மட்டும் இருக்கும் போது,ஜீவா என்று நகுலன் கூப்பிட, இதோ பா என்றவன் ஒரு பெட்டியை எடுத்துட்டு வந்து தந்தையிடம் கொடுத்தான்".

"அதை வாங்கியவர்,சம்பந்தி என்று அழைக்க சொல்லுங்க சம்மந்தி என்றார் வீரையன். இதுல பொண்ணுக்கு தேவையான நகைகளை, ஏதோ என் சக்திக்கு முடிஞ்சது வாங்கியிருக்கேன்".

"இதை நீங்க ஏற்றுக்கொள்ளணும் என்று சொல்லும் போது, மன்னிக்கணும் சம்மந்தி. இந்த சீர்வரிசை,நகை நட்டுலாம் கொஞ்சம் கூட எங்களுக்கு விருப்பமில்லை".

"இந்த வீட்டுக்கு மருமகளா வந்த பிறகு, எந்த ஒரு பொருளை எடுக்கவும், லீலா யோசனை பண்ண கூடாது என்பதற்காக தான், நீங்கள் வாங்கி கொடுத்த பாத்திரம் பண்டத்தை மட்டும் நான் வாங்கிக்கிட்டேன்".

"நம்ம வீட்டு பொருள் இங்கே ஒன்னுகூட இல்லையே என்று, அந்த பொண்ணு மனசுல ஒரு எண்ணம் வந்துடக்கூடாது. அந்த ஒரே காரணம் மட்டும் தான்".

"மத்தபடி என் மருமகளுக்கு போட வேண்டிய அத்தனை நகையும் நான் செஞ்சு வச்சுருக்கேன் என்றவர், மீனாட்சி என்று குரல் கொடுக்க,இதோங்க என்றவர், ஒரு நகை பையை எடுத்துட்டு வந்தார்".

"என் வீட்டுக்கு வரப்போற மகாலட்சுமிக்கு நானும் , என் மனைவியும் பார்த்து பார்த்து செஞ்சு வச்சது இதுல இருக்குங்க. நீங்க தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம். என்னைக்கா இருந்தாலும் லீலா உங்க பொண்ணு தான், நான் இல்லைன்னு சொல்ல முடியாது".

"ஆனால் இப்போதைக்கு அந்த நகைகள் வேண்டாம். நாளைக்கு பேர புள்ளைங்க காலத்துல அப்போ செய்யுங்கள் என்று சொல்ல,வீரையனின் பெருந்தன்மையை கண்டு, யாராலும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை".

"இனி மகளைப் பற்றி கவலை இல்லை என்பது ஏற்கனவே மனதில் இருந்தது என்றாலும்,இப்போ உறுதியானதை நினைத்து ரொம்ப சந்தோஷம் என்று நகுலனும் ஜீவாவும் கண்கலங்க,தம்பி என்னைக்கு பொண்ணு லீலா தான் என்பது முடிவானதோ அன்னைக்கே எங்க வீட்டு பொண்ணு தான்".

"வருத்தப்படாமல் போங்க. தாய் தகப்பனாய் இருந்து நாங்க பார்த்துக்கிறோம் என்றனர்.

"நேரமும் கடந்து சென்று கொண்டிருந்தது".

"இலங்கையில் இருந்து வந்தவர்களும் தங்கள் லக்கேஜை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வர, லீலா தனது அப்பாவையும் அண்ணனையும் கட்டிப்பிடித்து அழுது கொண்டிருந்தாள்".

"இத்தனை வருடங்களாக இருவரையும்,ஒரு நாள் கூட பிரிந்ததில்லை.அந்த கவலை தான் என்று நகுலன் சொல்ல,ஒவ்வொரு பெண்ணும் இந்த நிலைமையை தாண்டி தான் வரணும்".

"என்னால் புரிந்து கொள்ள முடியும் அண்ணானு மீனாட்சி சொல்ல, ரொம்ப சந்தோஷமா. நான் சொல்லணும்னு அவசியம் கிடையாது".

"இருந்தாலும் ஒரே ஒரு வார்த்தை சொல்றேன். லீலா அம்மா இல்லாமல் வளர்ந்த பொண்ணு. நீ அம்மாவா இருக்கணும்னு நான் கேட்க மாட்டேன். ஆனால், என் பொண்ணு உங்களுக்கு ஒரு நல்ல மகளா இருப்பாள். அதை என்னால சொல்ல முடியும் என்கும்போதே, நகுலனின் கண்கள் கலங்கியது".

"அண்ணா கவலைப்படாமல் போயிட்டு வாங்க. பிள்ளையை நான் பார்த்துக்கிறேன் என்க, ரொம்ப சந்தோஷமா என்ற அங்கிருந்த வேனில் அனைவரும் ஏறினர்".

"அதே போல் துறைமுகத்திற்கு சென்று அவர்களை அனுப்பி வைத்து விட்டு வீட்டிற்கு வந்தனர். மேலும் ஒரு வாரம் கடந்து இருந்தது".

"அப்போது பன்னீரும் பரமுவும், தங்கச்சியை கூப்பிட்டு வீட்டுக்கு வரும்படி அழைக்க, அதே போல் பெற்றோரிடம் சொல்லியவன், லீலாவை வண்டியில் ஏற்றிக்கொண்டு நண்பன் வீட்டுக்கு போகும் போது, நண்பர்களை பற்றி சொல்லிக் கொண்டே வந்தான்".

"ஒரு மணி நேரம் பயணத்தில் முதலில் பரமு வீட்டிற்கு வந்தார்கள். அவர்களோ இருவருக்கும் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பின்னர் அவர் கொடுத்த டீயை குடித்து விட்டு,பன்னீர் வீட்டிற்கு சென்றனர்".

"அவர்களும் முதன் முதலாக வந்த மணமக்களை ஆரத்தி எடுத்து வரவேற்றவர்கள். பின்னர் அவர்களால் முடிந்த பரிசையும் கொடுக்க, நம்ம வீட்டில் எதற்கு இந்த முறையென்று ஜெய் கேட்க, மாப்பு இது உனக்கு இல்லைடா".

"வீட்டுக்கு வந்த மருமகளுக்கு என்றார் பன்னீர் அம்மா. பின்னர் சரி நாங்க கடற்கரைக்கு செல்கிறோம் என்று சொல்லிக்கொண்டு, சவுக்கு தோப்பிற்கு வந்தார்கள்".

"அந்த இடத்தை பார்த்த லீலாவுக்கு மிகவும் பிடித்திருந்தது. என்னம்மா தங்கச்சி, மச்சான் நல்லா பார்த்துக்குறானா? என நண்பர்கள் கேட்க, லீலா சிரித்தாள்".

" எதாச்சும் கரைச்சல் குடுத்தான்னா சொல்லுடா. அண்ணன் இருக்கிறேன். ஒரே அடி அடிச்சு கடல்ல கட்டி போட்டுவிடுகிறேனென்று பரமு சொல்ல, அடேய் ஏன்டா இப்படி என்றான் ஜெய்".

" ஏன் லீலா,கடலுக்குள்ள நீ போய் இருக்கியா? என்று பன்னீர் கேட்க, இல்லணா. இப்ப கல்யாணத்துக்காக வரும் போது தான், நான் கடலையே பார்த்தது என்க,சரிடா, வா நாம கடல்ல போய் மீன் பிடிச்சுட்டு வரலாம் என்க, நிஜமாவா என்று லீலா ஆச்சரியமாக கேட்க,அவள் முகம் காட்டிய பாவனையில் ஜெய் மயங்கி தான் போனான்".

"பின்னர் நால்வரும் கடலுக்குள் சென்று மீன்பிடித்து கரைக்கு வந்தவர்கள், இன்னைக்கு அண்ணன் சமைக்கிறேன். சாப்பிடலாம் என்க,இல்லன்ணா நானே சமைக்கிறேன் என்றாள்".

"சரி அப்ப நீ இதை சமைச்சு வை. நாங்க மீனை கொண்டு போய் வீட்டில் கொடுத்துவிட்டு வருகிறோமென்று பரமுவும், பன்னீரும் அங்கிருந்து சென்றார்கள்".

" மரவீட்டில் இருந்த பொருட்களை வைத்து சமையலை முக்கால் மணி நேரத்தில் முடித்தவள், நண்பர்களுக்காக காத்திருக்கும் போது காத்து வேமாக வீசுவது தெரிந்தது".

"பின்னர் சிறு தூறல் விழ,அடுத்தது பெரும் மழையாக ஆரம்பித்தது. அங்கிருந்த ஜன்னல் வழியாக வெளியே தெரியும் மழையை லீலா பார்த்துக் கொண்டிருக்கும் போது, திடீரென்று பெரிய இடி சத்தம் கேட்டு அப்பா என்று கத்தி விட்டாள்'.

"உள்ளேயிருந்த கட்டிலின் மேல் கண்மூடி படுத்திருந்த ஜெய், மனைவியின் சத்தத்தை கேட்டு வேகமாக எழுந்து வந்தவன்,ஒன்னும் இல்ல ஒன்னும் இல்லையென்று மனைவியின் தோளில் தட்டிக் கொடுக்க, மீண்டும் ஒரு இடி சத்தம் கேட்க,பயந்து போய் கணவனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்".

"மனைவியின் ஸ்பரிசமும் மழையின் குளிர்ச்சியும் கிளர்ச்சியை கொடுக்க, அவர்கள் வாழ்க்கை அந்த மரவீட்டிலேயே ஆரம்பமானது".

"நாட்களும் யாருக்கும் காத்திருக்காமல் வேகமாக ஓடியது. கணவன் மனைவி இருவருக்குள்ளும் நல்ல புரிதல் வந்திருந்தது.மாமியார், மாமனாரிடமும் நல்ல பெயரை எடுத்தாள்".

"இரண்டு மாதங்கள் கடந்து இருந்தது. ஒருநாள் காலை வேலை செய்து கொண்டிருக்கும் போது,லீலாவிற்கு தலையை சுத்துவது போலிருக்க, இடுப்பில் இருந்த தண்ணீர் குடத்தை,முற்றத்திலே வைத்து விட்டு, அங்கிருந்த தூணில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள்".

" என்னடா தண்ணீர் எடுக்க போன மருமகளை காணுமேயென்று, சமையல் கட்டிலிருந்து வெளியில் வந்த மீனாட்சி, அங்கிருந்தவளை பார்த்து, ஏத்தா லீலா என்னாச்சி புள்ளை? என்க,தலை சுத்துற போல இருக்குத்தை என்றாள்".


ஆர்கலி எங்கே...?
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top