• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
கலசங்காடு-இலங்கை:

"மீனாட்சி கார் வந்துடுச்சி. ரெண்டு பேரும் வாங்களென்று வீரையன் குரல் கொடுக்க, எங்க தான் மா போறோமென்றபடியே வெளியே வந்த ஜெய், செருப்பை போட்டுக்கொண்டு மெயின் ரோட்டிற்கு சென்றான்".


"அங்கே,காரின் முன் சீட்டில் ஜலால் உட்கார்ந்து இருப்பது தெரிந்து, மாமா எங்க தான் உங்க மச்சான் கூட்டிட்டு போறார் என்று கேட்டுக்கொண்டே, காரின் பின் சீட்டில் ஏறி உட்கார்ந்தான்".

" போனால் தெரியும் மருமகனேயென்று அவர் சிரிக்க ,கார் அங்கிருந்து இரத்தினகிரியை நோக்கி சென்றது".

"ஜெய் வீட்டிலிருந்து அரை மணி நேர பயணம் தான் இரத்தினகிரிக்கு".

"ஊரின் பெயரை பார்த்தவன், இந்த அப்பா இங்க ஏன் கூட்டிட்டு போறாரு?,ஒருவேளை ஜீவா வீட்டுக்கு இருக்குமா?என யோசனையோடு இருக்கும் போது, அங்கு வலது பக்கமிருந்த வீட்டின் முன்பு போய் கார் நின்றது".

"காலிங் பெல்லை ஜலால் அழுத்த,சிறிது நொடியில் ஜீவானந்த் வந்து கதவை திறந்தான்".

"அங்கிருந்த ஜீவாவை பார்த்து ஜெய் திகைக்க,இந்த வீட்டில் இவன் எப்படி ? என யோசிக்க,வாங்க வாங்களென்றவனோ நண்பனை கட்டிக்கொண்டான்".

" வாடா என்று உள்ளே அழைத்து போய்,நால்வரையும் உட்கார வைக்க, நகுலனும் அங்கு வந்து சேர்ந்தார். பின்னர் பரஸ்பரம் நலம் விசாரித்து பேசிக் கொண்டிருந்தனர்".

"ஜெய்க்கு தான் இங்கு நடப்பது எதுவும் புரியவில்லை. அப்பொழுது லீலா என்று நகுலன் குரல் கொடுக்க,எந்த வித வீண் அலங்காரங்களும் இல்லாமால், கண்ணுக்கு உறுத்தாத கலரில் புடவை கட்டி, தலை பின்னி, நெற்றியில் சிறிய சிகப்புகலர் பொட்டும், கழுத்தில் மெல்லிய செயினும், கைகளில் கண்ணாடி வளையல்களுமாய் அங்கு வந்தவளை பார்த்த ஜெய் வீட்டாருக்கு, மனது திருப்தியானது".

" டீ இருக்கும் டிரேவை அனைவரிடமும் நீட்ட, அவர்களும் எடுத்துக்கொண்டனர். ஜெய் தான் ஏதோ மந்திரிச்சி விட்ட கோழி போலவே இருந்தான்".

" அம்மா லீலா, இதான் என் பையன் ஜெய சிம்ஹன்".

" என் பையன் என்பதற்காக சொல்லவில்லை. எந்த கெட்ட பழக்கமும் இல்லை. கடைசி வரை உன்னை நல்லபடியா பார்த்துக்கும் அளவுக்கு, அவனுக்கு திறமையும், பொறுப்பும் இருக்குமா என்றார் வீரையன்".

" அவர் சொன்னதை கேட்ட லீலா, சரிங்கப்பா என்றாள். அவள் அப்பா என்று அழைத்ததே ஜெய் பெற்றோருக்கு பூரித்து போனது".

"அப்புறம் சம்பந்தி, நாம முன்னாடியே பேசின போல பண்ணிடலாமா என்க, கண்டிப்பாகங்க என்ற நகுலன், தாயில்லாமல் வளர்ந்த பொண்ணு".

" உங்களுக்கு நான் சொல்லி தெரியனுமென்று இல்லைங்க என்க, அண்ணா இனி புள்ளையை பற்றி உங்களுக்கு கவலை வேண்டாமென்று மீனாட்சி சொல்ல, அது போதுமா என்றார்".

" ஜீவாவிற்கு தான் நண்பனின் நிலையை கண்டு சிரிப்பு வந்தது".

"மீனாட்சியோ தனது கையில் கொண்டு வந்த பேகை லீலாவிடம் நீட்ட, அவளும் வாங்கிக்கொண்டாள்".

" பின்னர் அவர்களிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினர்".

" வீட்டிற்கு வரும் வரை அமைதியாகவே இருந்தான். ஓஓ இதற்கு தான் வந்தீங்களா என்க, ஆமாம்பா ஏற்கனவே நானும் ஜலாலும் வந்து பேசி முடிச்சிட்டோமென்று , மகனின் தலையில் அலுங்காமல் ஒரு குண்டை போட்டார் வீரையன்".

"என்னப்பா சொல்றீங்கனு ஜெய் அதிர, ஆமாம்பா நீ இங்கு வந்த மறாவது வாரமே, நானும் ஜலால் மட்டும் வந்து பாத்துட்டு, அவங்க அப்பா கிட்ட எல்லாம் பேசிட்டு போனோம்".

"கல்யாணம் நம்ம ஊர்ல தான் வைக்கிறது.சொந்த பந்தங்கள் நமக்கு அங்க இருக்கு. அதுதானே முறை".

" உம்மா போட்டோ காட்டினாள்.உனக்கு பொருத்தமா இருக்கும். எதுக்கு பொண்ணு விஷயத்தை தள்ளி போடணும்?,எனக்கு மனசு பிடிச்சிடுச்சி, அதான் உன் மாமனை கூப்பிட்டுக்கிட்டு வந்துட்டேன்".

உங்களுக்கு என்ன தோணுதோ அதையே செய்யுங்கள் என்றவன், சரி இப்ப நான் போய் கடையை திறக்கிறேன் என்றான்.

"ம்ம்,நாங்களும் இன்னைக்கு சாய்ந்திரமே கிளம்புறோம் பா. அடுத்த வாரம் நீயும் ஊருக்கு வந்து சேர்ந்திடு. இன்னும் மூணு வாரத்துல கல்யாணம்".

" எதேஏஏஏ, மூணு வாரத்துல கல்யாணமா என்று ஜெய் அதிர, ஆமாப்பா.முதல் முகூர்த்தத்திலேயே கல்யாணம் வச்சிருக்கு. எவ்வளவோ வேலை இருக்கென்ற வீரையன், என்ன மச்சான் நீ என்னமோ வாயை மூடிகிட்டே இருக்க என்க, அதான் நீயே பேசுறியே மாப்பிள்ளை என ஜலால் சொல்ல அதுசரி".உங்க வாய்ல இருக்கும் முத்து கொட்டிடாமல், அண்ணனும் தங்கச்சியும் பாதுகாப்பா பார்த்துக்குங்கடா என்றார்".

' பின்னர் மூவரிடமும் சொல்லிக் கொண்டு ஜெய் கடைக்கு செல்ல, இவர்களும் ஊருக்கு தயாரானார்கள்".

" நாட்களும் யாருக்கும் காத்திருக்காமல் வேகமாக ஓடியது. திருமண நாளுக்கு இரண்டு நாளுக்கு முன்பு தான் லீலா வீட்டினர் கலசங்காட்டிற்கு வந்து சேர்ந்தனர்".

"அவர்கள் அனைவரும் ஜலால் வீட்டிலேயே தங்கி கொண்டார்கள்".

" முதல் நாள் பரிசம் போட்டு பொண்ணழைப்பு முடிந்து, ஜலால் வீட்டிலிருந்து லீலாவை அழைத்து வந்தனர்".

" இலங்கையிலிருந்து வந்த சில நெருங்கிய உறவுகள், தமிழ்நாட்டில் நடக்கும் சடங்கு சம்பிரதாயங்களை, ஆச்சர்யமாக பார்த்து ரசித்தனர்".

" இரவு உணவை முடித்துக்கொண்டு கிடைத்த இடத்தில் அங்கங்கே சொந்த பந்தங்கள் படுத்து விட்டனர்".

" விடியலும் அழகாய் தொடங்கியது".

"வீட்டின் முன் பக்கம் உள்ள காலி இடத்தில் தான் கல்யாணம் என்பதால், பந்தல் போட்டு, அழகாய் அந்த இடத்தை அலங்கரித்திருந்தனர்".

" காலை 7 ல் இருந்து 8 மணிக்கு முகூர்த்தம் என்பதால், அந்த இடமே பரபரப்பாக இருந்தது".

" வழக்கமான சம்பிரதாயங்கள் முடிய, நல்ல நேரத்தில் அனைவரின் ஆசியோடும் லீலாவின் கழுத்தில் மூன்று முடிச்சை போட்டு,தன் மனைவியாக ஜெய் ஏற்றுக்கொண்டான்".

" மகளுக்கு தேவையான சீர்வரிசைகளை கல்யாண பந்தலிலே நகுலனும், ஜீவாவும் கடை பரப்பியிருக்க, பார்த்தவர்கள் சிலர் பெரு மூச்சு விட்டு சென்றார்கள்".

" மீதம் உள்ள சடங்கு சம்பிரதாயங்கள் முடிந்து, இருவருக்கும் முதலிரவையும் அன்றே ஏற்பாடு செய்திருந்தார்கள்".

" இரவும் நெருங்க, ஜலாலின் பெண்ணும், இன்னொரு பெண்மணியும் லீலாவை அலங்கரித்து பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்க வைத்து, ஜெய்யின் அறைக்கு அனுப்பி வைத்தனர்".

" பயத்தோடே உள்ளே வந்தவளை பொறுமையாக பேசியே அவளை இயல்பாக்கியவன், முதலில் இருவரும் புரிந்து கொள்வோம், பிறகு வாழ்க்கையை தொடங்கலாமென்க, சரியென்றாள்".

வெற்றி-ஜனனி நினைவுகள்:

"கோவத்தை அடக்க வெற்றியோ பெரும்பாடு பட்டான்".

" பின்னர் பக்கத்து ஊருக்கான பஸ் வர அதில் அனைவரும் ஏறிக்கொண்டனர்".

" ஜனனியோ அவ்வப்போது எதிரில் நிற்கும் வெற்றியை நிமிர்ந்து பார்க்க, ஆனால் அவன் முன்னால் நின்ற மணியோ, பார்த்திங்களாடா, எப்படி பாக்குறானு என்றான்".

" பல்லை கடித்தவன், பஸ் கம்பியை பிடுத்து இறுக்கி, கோவத்தை கண்ட்ரோல் பண்ணிக்கொண்ட வெற்றியின் நிலையை, கோபியால் புரிந்து கொள்ள முடிந்தது".

" நண்பன் வாய்விட்டு ஜனனியை விரும்புவதை சொல்லவில்லை என்றாலும், சில நாட்களாக அவனிடம் இருந்த மாற்றத்தை வைத்து நண்பனுடைய காதலை கண்டறிய முடிந்தது".

"ஆனாலும் அவனிடம் இதுவரை கேட்கவில்லை. இப்பொழுது மணி வேறு இப்படி சொல்வதும், அதற்கு ஏற்ற போல ஜனனியின் செய்கையையும் பார்த்த கோபிக்கும் ,என்ன செய்வதென்று ஒன்னும் புரியவில்லை".

" முக்கால் மணி நேரத்தில் பக்கத்து ஊரில் வந்து பஸ்ஸில் நிற்க, அனைவரும் இறங்கிக் கொண்டனர்".

" அவ்வப்போது ஜனனி திரும்பி தற்செயலாக வெற்றியை பார்க்க, அது மணியை தான் பார்ப்பதாக வெற்றியும், மணியும், கோபியுமே நினைத்துக் கொண்டனர்".

" கோயிலுக்கு செல்லும் வழிகள் எல்லாம் திருவிழா கடைகளும், அதில் மக்கள் கூட்டமும் இருந்தது.ஒரு பக்கம் ராட்டினங்களும், பஞ்சு மிட்டாய் கடையில் சிறு பிள்ளைகள் கூட்டமும், ஐஸ் வண்டிகளும், பலூன் விற்பவர்களும், கோயிலுக்கு வந்தவர்களுமென்று,எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே இருந்தது".

"கமலா நடுவில் செல்ல, கீதா, ஜனனி இருவரின் கையும் பிடித்துக் கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தார். எங்க அம்மாவுக்கு மருமகள் மேல எவ்வளவு அக்கறை பாருங்களென்று மேலும் எரிகின்ற தீயில், மணி பெட்ரோலை ஊற்றிக் கொண்டிருந்தான்".

" கோயிலுக்கு சென்றவர் சாமியை தரிசனம் செய்து விட்டு, அம்மாடி நான் வேண்டுதலையை முடிச்சிட்டு வந்துடுறேன். நீங்க ரெண்டு பேரும் இங்கையே இருங்களென்க,அதற்கு கீதாவோ,அத்தை நாங்க போய் வளையல் மணிலாம் பார்க்கிறோமேயென்றாள்".

" அப்படிங்குறீங்க, எப்படி தனியா அனுப்ப என்றவர், மகனை தேட,சற்று தூரத்தில் மணி வெற்றி கோபி மூவரும் நிற்பதை கண்டு, மணி மணி என்றார்".

" அம்மாவின் குரலை கேட்டவன் இருங்கடா வரேனென்று அங்கு வந்தவன், என்னம்மா என்க,தம்பி பாப்பாங்க கூட கடைக்கு போய்ட்டுவாப்பா".

" பாப்பாளுங்க வளையல்லாம் வாங்கணுமாம் என்க,அம்மா சொன்னதை கேட்டு சந்தோசமானவன், சரிமா நான் கூட்டிட்டு போறேன். நீ வேண்டுதலை முடிச்சுட்டு வா என்றவன், நண்பர்களிடம் கண்ணை காட்டிவிட்டு அவர்களோடு சென்றான்".

"இவனுங்களும் பின்னாடியே செல்ல வளையல் கடைக்கு புகுந்தவர்கள், ஜனனி தனக்கு தேவையான வளையல்களை எடுத்து பார்க்கும் போது, இது நல்லா இருக்கும் அது நல்லா இருக்குமென்று மணியும் எடுத்துக்காட்ட,வெற்றிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை".

"விட்டால் இருவரையும் அடித்து தொலைத்து விடும் அளவுக்கு அவனுக்கு வெறி வந்தது. இன்னும் சிறிது நேரம் இங்கு இருந்தால் அடி நிச்சயமென்பதை உணர்ந்தவன், கோபி சத்தியமா இதெல்லாம் என்னால பார்க்க முடியலடா".

"வீட்டுக்கு போகலாமா என்க, ஏண்டா? திருவிழா பார்க்க வந்து விட்டு,எதுக்கு இப்படி சொல்ற என்க, இல்லை எனக்கு ஏதோ ஒரு மாதிரியா இருக்கு. வா நம்ப போகலாம்".

"இல்லனா நீ அவன் கூட பார்த்துட்டு வா நான் வீட்டுக்கு போறேன்னு சொல்ல, இல்ல நானும் வரேன் என்றவன், மணி என்று கூப்பிட என்னடா என்றான்".

"நீங்க பாத்துட்டு வாங்கடா வெற்றிக்கு தலை வலிக்கிற போல இருக்காம், நாங்க வீட்டுக்கு கிளம்புறோம்டா, சரிடா நீங்க போங்க, நான் வருகிறேன் என்றான்".

" என்னாச்சி இவங்களுக்கு?, நல்லா தானே வந்தாங்கள். ஏன் திடீர்னு போறாங்களென்று யோசனையோடு இருந்த ஜனனியோ பொருட்களை பார்ப்பதில் கவனத்தை செலுத்தவில்லை".

" ஜனனிக்கு மட்டும் பொருட்களை தேர்ந்தெடுத்தால், கீதாவிற்கு சந்தேகம் வரும் என்பது புரிந்து, பாப்பா இது உனக்கு நல்லா இருக்குடாயென்று, கீதாவிற்கும் பொருட்களை செலக்ட் பண்ணி சொல்ல,மணியின் செய்கையை கண்டு, தோழிகள் இருவருக்கும் ஏதும் தவறாக படவில்லை".
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
சதூர்வேதமங்கலம்:

"இன்றோடு ஆர்கலி வேலைக்கு போய் ஒரு மாதம் ஆகிவிட்டது. முதல் மாதம் சம்பளம் வாங்கியவளோ பாட்டியிடம் கொடுக்க, அதை வாங்கி, சாமி படத்தின் முன் வைத்து கும்பிட்டார்".


"தோட்டத்தில் விதைத்திருந்ததில் ஒரு பக்கம் காய்கறிகள் பூவைத்தும், சிலது காய்த்தும் இருக்க, இன்னொரு பக்கம் கீரைகளும் நன்கு வளர்ந்தது".

"வீட்டுக்கு தேவையானதை தினமும் அதிலிருந்து பறித்து யூஸ் பண்ணிக் கொண்டிருந்தார்கள். கருப்பாயியும் அவ்வப்போது தேவையான கீரையை பறித்துக் கொண்டு போவார்".

" ஓர் நாள் பாட்டி பேசி கொண்டிருக்கும் போது, அம்மாடி கருப்பாயி, வீட்டில் சும்மா இருக்க ஒரு மாதிரியா இருக்கு, ஒரு தையல் மெஷின் பழையது கிடைக்குமா? என்க,யாருக்கு பாட்டி?, ஆராமாவிற்கா? என்றார்".

"எனக்கு தான் கண்ணு என்கவும், பாட்டி உங்களுக்கு தையல் தெரியுமா? என்று ஆச்சர்யமாக, நல்லா தெரியும் கண்ணு".

"வாயேன் டவுனுக்கு போயிட்டு பழைய மெஷின் ஒன்னு வாங்கிட்டு வரலாம் என்க, இருங்க பாட்டி,பக்கத்து தெருவுல தெரிஞ்சவங்க இருக்காங்க".

"அவங்க கூட தையல் மெஷின் விக்கணும்னு சொல்லிட்டு இருந்தாங்க. முதல்ல நம்ம போய் அங்க பார்க்கலாம் வாங்க.அங்கு இல்லன்னாக்க பிறகு வேண்டுமானால் டவுன்ல போயி வாங்கிக்கலாம்".

" சரி சரி மா.ஆரா கண்ணு வீட்டுக்கு வரதுக்குள்ள நம்ம மெஷினை போய் பார்த்துட்டு வரலாம். நீங்க சும்மா ஓய்வெடுங்கன்னு சொல்லுது. எவ்வளவு நேரம் படுத்து இருக்கிறது சொல்லு".

"உழைச்ச உடம்பு சும்மா இருக்க பிடிக்க மாட்டேங்குது என்றவாறு பக்கத்து தெருவுக்கு சென்றனர்".

"சிலர் அவர்களிடம் நல விசாரித்துக் கொண்டனர். அவர்களுக்கும் பதில் சொல்லிக்கொண்டே இருவரும் அங்கிருந்து கேட்டை திறந்து, கமலா அக்கா, கமலா அக்கா என்று கருப்பாயி குரல் கொடுக்க, வாடி கருப்பாயி".

"என்னடி உனக்கு இந்த பக்கம் காத்து அடிக்குது?. என்ன பண்றதுக்கா, வீட்ல ஆடு மாடு இருக்கு,பிள்ளைகளை கவனிக்கணும் இல்லையா?, அது என்னமோ வாஸ்தவம் தாண்டி".

" அப்புறம் கருப்பாயி,என்ன இவ்வளவு தூரம்?, அக்கா தையல் மிசினு( கிராமத்து வழக்கு பேச்சு) இருக்குணு சொன்னியே, ஆச்சிக்கு தேவைப்படுதாம், அதான் கூட்டிட்டு வந்தேன், அப்படியா சந்தோசம் மா".

"இந்த ஊரிலும் வேற டெய்லர் கிடையாது. என்னாலயும் முன்ன போல தைக்க முடியலை. வயிற்றில் ஆப்ரேஷன் பண்ணி இருந்ததால, கொஞ்ச நாளைக்கு மெஷின் பக்கம் போகக்கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டாரு".

" வாங்கமா மெஷினை பாருங்களென்று காட்ட, தையல் மெஷின் புதிதாக தான் இருந்தது. பாட்டி தனது அனுபவத்தை வைத்து, அதன் நிலையை புரிந்து கொண்டார்".

"நான் எடுத்துக்குறேன் மா. மெஷின் நல்லா தானிருக்கு. எவ்வளவு விலையென்று சொன்னால், இன்னைக்கு பணத்தை கொடுத்துட்டு சங்கரை வரச்சொல்லி எடுத்துக் கொள்கிறேன், அம்மா இது அரசாங்கம் ஃப்ரீயா தான் கொடுத்தது".

"உங்களுக்கு தோன்றதை கொடுத்து எடுத்துட்டு போங்கம்மா. சும்மா தான் இருக்கு, புது மிஷினா தானிருக்கு நான் 2000 ரூபாய் கொடுக்கட்டுமா என்று பாட்டி கேட்க, அய்யோ மா, 2000 பெருசு".

"அவ்வளவு எல்லாம் வேண்டாம். நீங்க 1000 ரூபாய் கொடுத்து விட்டு எடுத்துட்டு போங்கம்மா என்றார். கமலாவின் பெருந்தன்மையை பார்த்த பாட்டி, உன் மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்குமா என்றார்".

உங்களை போல பெரியவங்க ஆசீர்வாதமே போதுங்கம்மா என்ற கமலா, கொஞ்சம் இருங்களென்று உள்ளே போனவர் இருவருக்கும் டீ எடுத்து வந்து கொடுத்துவிட்டு,டீச்சர் பத்தி பிள்ளைங்க எல்லாம் ரொம்ப பெருமையா சொல்றாங்க".

"டீச்சர் மட்டும் தானா மா?, பொண்ணோட புள்ளையா?, இல்லை பையனோட பொண்ணா? என்க,மக வயிற்று பொண்ணு தான் மா".

"அப்படிங்களா சந்தோஷம், தம்பி எங்க இருக்காங்க?, தம்பி வெளிநாட்டில் இருக்கிறார்.சரிங்கம்மா என்ற கமலா,ஒரு டப்பாவில் நார்த்தங்காய் ஊறுகாயை எடுத்து வந்தவர், இதை பேத்திக்கு கொடுங்கம்மா".

"டீச்சர் மாசமா இருக்கிறதா கருப்பாயி சொல்லிருந்தாள்,அதை வாங்கிய பாட்டி, ரொம்ப சந்தோஷம்மா என்க,இதுல என்ன இருக்கு".

"மெஷின் சம்பந்தப்பட்ட நூலு, வேற எது வேண்டுமானாலும் சொல்லி அனுப்புங்க. கருப்பாயி கிட்ட நான் கொடுத்து அனுப்புகிறேன்னு கமலா சொல்ல,சரிமா.சாயந்திரம் சங்கரை பணத்தோட வரச்சொல்லுறேன்".

" பணத்தை கொடுத்து விட்டு தையல் மெஷின் எடுத்துட்டு போறேனென்று இருவரும் வீட்டிற்கு வந்தனர்".

"அதே போல் மதியம் சாப்பாட்டிற்கு சங்கர் வீட்டுக்கு வர, அவரிடம் கருப்பாயி சொல்ல, கமலாவிடம் பணத்தை கொடுத்து விட்டு மெஷினை தூக்கி வந்து வீட்டில் சேர்த்து விட்டார்.

" நல்ல நேரத்தை பார்த்து விட்டு, மெஷினை துடைத்து விபூதி பட்டையை போட்டு , சாமியை கும்பிட்டு விட்டு பாட்டியும் மெஷினில் உட்கார்ந்து, தன்னிடமிருந்த புடவையை எடுத்து ஓரம் அடித்து பார்க்க, மெஷின் நன்றாகவே வேலை செய்தது".

"பின்னர் மணியை பார்த்தவர், ஆர்கலி வரும் நேரமென்பதால் எழுந்து போய் பால் சுட வைத்து விட்டு, ஊற வைத்த கொண்டக்கடலையை வேக வைத்து, சிறிது நிமிடத்தில் சுண்டல் செய்து முடிக்க, வாசல் கேட் திறக்கும் சத்தம் கேட்டது".

" உள்ளே வந்த ஆர்கலி மெஷினை பார்த்து விட்டு இது எப்படியென்று அதிர, நான் தான் வாங்க சொன்னேன் ஆரா கண்ணுயென, மதியம் நடந்ததை பாட்டி சொல்லவும் முறைத்து பார்த்தாள்".

" அதான் ரெண்டு வேளைக்கும் சமைக்குறீங்க,தோட்டத்தை கவனிக்குறீங்க, அது போதாதென்று இந்த வேலையா?.ஆரா கண்ணு அதுலாம் ஒரு வேலையாமா".

" சும்மா இருந்தால் சோம்பேறியா ஆகுது. அதுவுமில்லாமல் அவசரத்துக்கு ஊருக்குள்ள டெய்லரே இல்லையாம். நம்ப துணிய தச்சிக்கிலாமே".

"அதுவும் சரிதான் பாட்டி என்றவள், அப்போ எனக்கும் சொல்லித்தாங்க என்க, சொல்லி தந்துவிட்டால் போச்சு என்றவர், போய் கை கால் கழுவிட்டு வா கண்ணு என்றவாறு கிச்சனிற்குள் சென்று, இருவருக்கும் தேவையானதை எடுத்து வந்து வைத்தார்".

" ஆர்கலியும் ஃப்ரஷ் ஆகி ஹாலிற்கு வந்தவள், சுவற்றின் மேலே சாய்ந்து உட்கார்ந்து கால்களை நீட்டினாள்".

" இந்தா கண்ணு என பாதாம்பால் டம்ளரையும், ஒரு தட்டில் சுண்டலையும் பாட்டி நீட்ட, வாங்கிக்கொண்டவள், நானும் இந்த நேரத்தில் துணி தைக்கலாமா பாட்டி?".

கபிலன்- ரியா நினைவுகள்:

"பின்னர் தனது தாய் தகப்பனின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்ட கபிலன், ரியாவின் நண்பர்களிடம் வந்தான்".

"முதலில் ஆதிராவிடம் வந்தவன், ஆதி நல்லபடியா இலங்கைக்கு போய்ட்டு வா. மேற்கொண்டு என்ன பண்றேன்னு சொல்லு, அண்ணனை மறந்து விட மாட்டியே?, எப்படி நான் உன்னை மறப்பேனென்றவள், கபிலனை அணைத்துக்கொண்டு அழுதாள்".

" அடேய்...தெரியும் டா. நான் சும்மா சொன்னேன் என்றவாறு தீபனிடம் வர,மாமா ராகவன் ஐபிஎஸ்ஸாக தான் வரணும் என்க, அட எருமை மாடு கபிலன் ஐபிஎஸ்னு சொல்லுடா என்று மேகா சொல்ல, இவள் ஒருத்தி".

"கரெக்ஷனுக்கு பிறந்தவள் போல, எப்ப பார்த்தாலும் நான் பேசுறதை கரெக்ஷன் பண்றதே வேலை. இந்த பிசாசை இதுக்காகவே பெத்துருக்காங்க போல என்று சொல்லிக்கொள்ளும் போது, மேலே இருக்கும் ஆண்டவன் சிரித்துக் கொண்டார்".

" தம்பி தீபன் உன் தலையெழுத்து அவள் கூட தாண்டா என்று".

"சரி மாமா நல்லபடியா முடிச்சுட்டு வாங்க. திரும்ப உங்களை பார்க்கும் போது என்னோட மாமாவை ஐபிஎஸ் ஆபிசராக தான் பார்க்கணுமென்று அவனும் அணைத்துக் கொண்டான்".

"பின்னர் மேகாவிடம் வந்தவன், வாலு குட்டி, நல்லா யோசித்து பிஜி எடு என்க,சரிங்க அண்ணா என்றாள்".

" ரியாவை பார்த்து தலையசைக்க, அவளும் ஹம் என்றாள்".

"வீட்டில் இருக்கும் வேலையாட்களிடமும் சொல்லிக் கொண்டு தேவராஜும், கபிலனும் காரில் ஏறி ஹைதராபாத் நோக்கி புறப்பட்டனர்".

"இங்கே நண்பர்களுக்கும் இன்னும் இரண்டு மணி நேரத்தில், மயிலாடுதுறையிலிருந்து கோயம்புத்தூருக்கு டிரெயின் என்பதால், அவர்களும் கண்ணன்,தேவியிடம் சொல்லிக் கொண்டு இன்னொரு காரில் ஏறி ரயில்வே ஸ்டேஷனை நோக்கி சென்றனர்".

" ஷார்ட் ரூட்டில் டிரைவர் காரை ஓட்டிக்கொண்டு வர, 1 மணி நேரத்தில் மயிலாடுதுரை ஜங்ஷனுக்கு வந்து சேர்ந்தவர்கள், அண்ணா நீங்க கிளம்புங்க".

" இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு. நாங்க போய்க்கிறோமென்று நால்வரும் அவரை அனுப்பி வைத்தார்கள்".

"அதன் பின்னர் நால்வரும் அடுத்து என்னவென்று பேசிக்கொண்டே, தீபனிடம் வம்பு வளர்த்துக்கொண்டிருக்க, நேரம் கடந்து சென்றது".

" அப்பொழுது இவர்கள் செல்வதற்கான டிரைன் வந்து விட்டதாக மைக்கில் சொல்வதை கேட்வர்கள், அங்கிருந்து 5 வது பிளாட்பார்மிற்கு சென்று, அவர்களுக்கான கோச் எங்கேயென்று தேடி நால்வரும் உள்ளே சென்று, அவரவர் சீட்டில் உட்கார்ந்து கொண்டார்கள்".

" நால்வரும் பர்ஸ்ட் கிளாஸ் ஏசி கூபே புக் பண்ணியதால், மற்றவர்கள் இடைஞ்சல் இல்லாமல், பல அரட்டையோடே பயணத்தை தொடங்கினர்".

" அப்பொழுது மேகாவிற்கு கால் வர அவள் அப்பா தான் பேசினார். சிறிது நேரம் அவரிடம் பேசி விட்டு மற்றவர்களிடமும் பேசியவர்,பார்த்து பத்திரமாக போய்வாருங்களென ஃபோனை வைத்தார்".

" பாரு உன் கூட வருவதால் எங்கள் மேல எவ்வளவு கவலைனு தீபன் சொல்ல, டேய் உன் சங்கை கடிக்காம விடமாட்டேன்டா என்ற மேகாவோ பெட்டிலிருந்து எழுந்து, மேல் பர்த்தில் இருக்கும் தீபனை அடிப்பதற்காக ஏற, அந்நேரம் அவர்கள் கூபே கதவு தட்டும் சத்தம் கேட்டது".

" ஆதிரா எழுந்து போய் கதவை திறக்க டிடி ஆர் நின்றார். அவரிடம் நால்வருக்கான டிக்கெட்டை காட்டஇனர்".

"சரி டா அடுத்து நீ என்னடா பிளானென்று ஆதிரா கேட்க,ஒரே குழப்பமா தாண்டி இருக்கு. அப்பா பிஜி பண்ண பாரின் போக சொல்லுறார்".

" எனக்கு அதில் விருப்பம் இல்லைடி. ஆர்த்தோ எடுக்கலானு பார்க்குறேன். ஐ திங் பஞ்சாப் இல்லை அலிகரால டிரை பண்ணலானு இருக்கேனென்று தீபன் சொல்ல, ம்ம், எப்போ எட்ரன்ஸ் எக்ஸாம் வருகிறது? என ஆதிரா கேட்க, இன்னும் 2 மந்த்லடி என்றான்".

" அப்போ நீ என்ன ஆதி பண்ண போற என்க, ஊருக்கு போன பிறகு தான் முடிவு பண்ணனும் டா".

"நீங்கள் மூவரும் அங்க களுத்துறைக்கு வரணுமென்க, அதற்கு நண்பர்கள் மூவரும் கோரஸாக கண்டிப்பாடி என்றனர்".

ஆர்கலி எங்கே...?
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top