Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
கலசங்காடு:
" சரிடா மழை விட்டுறுச்சி, நான் வீட்டிற்கு கிளம்புறேனென்று ஜெய் எழ, இந்தாடா, இதை வீட்டில் கொடுடாயென, ஒரு பையில் மீன்களை போட்டு பரமு கொடுக்க, மீதி மீன்களையும் எடுத்துக்கொண்டு, மர வீட்டை பூட்டியவாறு மூவரும் வீட்டிற்கு வந்தனர்".
" அடுத்த மழை வருவதற்குள் வீட்டிற்கு போய்விடணுமென்று, வேகமாக தனது பைக்கை ஓட்டினான்".
"ஜெய்யும் வீட்டிற்குள் வந்து சேர, மீண்டும் மழை ஆரம்பமானது. என்னப்பா பரமுவும், பன்னீரும் எப்படி இருக்காங்க? என்று மீனாட்சி கேட்க,நல்லா இருக்கானுங்க என்றவன், இந்தாமா என்று பையை நீட்ட, அதை வாங்கிக் கொண்டார்".
" அதன் பின்னர் ஜெய்யும் தந்தையோடு அவர்கள் நகை கடைக்கு செல்ல ஆரம்பித்தான்".
" அவ்வப்போது இலங்கையில் இருக்கும் ஜீவாவிடம் பேசி,கடையை பற்றியும் விசாரித்துக்கொண்டான்".
" இதோடு ஜெய் கலசங்காடு வந்து மூன்று வாரங்கள் ஆகிவிட்டது.ஆனால் மறந்தும் லீலாவின் பேச்சை மூவரும் எடுக்கவில்லை".
" அன்றிரவு மூவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, அப்பா நாளைக்கு கப்பல் இலங்கைக்கு கிளம்புது, நானும் அதில் கிளம்புறேனென்று ஜெய் சொல்ல, சரிப்பா".
" அப்புறம் வெள்ளி பார் உள்ளே பெட்டியில் இருக்கு,உனக்கு தேவையானதை எடுத்து வச்சிக்கோ, பணமும் அங்கையே இருக்கு, எடுத்துக்கோ என்றவர், கையை கழுவி விட்டு எழுந்து,தனது அறைக்குள் சென்று விட்டார்".
" அய்யா, இட்லி பொடி, புளி காய்ச்சல், ஊறுகாய், ரவா லட்டு எல்லாம் பையில எடுத்து வச்சிட்டேன், வேற என்ன வேண்டுமென மீனாட்சி கேட்க, பருப்பு பொடி மட்டும் பண்ணிடுமா. வேற எதுவும் வேண்டாமென்றான்".
"சரிப்பா என்றவர்,கிச்சனை நோக்கி செல்ல, அய்யோ மீனாட்சி முதல்ல சாப்பிடு. நாளைக்கு சாயங்காலம் தான் கப்பல், அதனால் காலையிலே பண்ணிக்கலாம், இப்போ ஒன்னும் அவசரமில்லையென்று ஜெய் சொல்ல, அது வந்துப்பா என்று சிரித்தார்".
" முதல்ல உட்கார்ந்து சாப்பிடு வா என்றான். ம்ம் என்றபடியே சாப்பிட்டு எழ ஜெய்யும் அம்மாவிற்கு உதவி செய்தான்".
" சரி போய் படு என்றவர், இரவு விளக்கை போட்டு விட்டு செல்ல, ஜெய்யும் தனது அறைக்கு சென்று படுத்துவிட்டான்".
" லேசான தூறலோடு விடியலும் தொடங்கியது".
" மகன் இன்று ஊருக்கு போவதால், மீனாட்சி பரபரப்பாகவே வேலை செய்து கொண்டிருந்தார்".
" நேரமும் கடந்து கொண்டேயிருந்தது. மதிய உணவை சாப்பிட்டு முடித்தவன் எல்லாம் சரி பார்த்து, பேகுகளை முற்றத்தில் எடுத்து வந்து வைத்தான்".
" வீட்டிலிருந்து துறைமுகத்திற்கு செல்ல இரண்டு மணி நேரம் என்பதால், இப்பொழுது கிளம்பினால் சரியாய் இருக்கும் என்றவன், முதல் நாள் சொல்லிய ஆட்டோ வருகிறதா என பார்த்துக்கொண்டிருக்க,ஆட்டோவும் வாசலில் வந்து நின்றது".
" பின்னர் பெற்றோர்களிடம் சொல்லிக்கொண்டு ஏறி உட்கார, ஆட்டோவும் துறைமுகத்தை நோக்கி புறப்பட்டது".
" ஜெய்யும் இலங்கைக்கு வந்து இரண்டு வாரங்களானது.ஆனால் மறந்தும் கல்யாணப்பேச்சை ஜீவாவும் ஜெய்யும் பேசிக்கவில்லை".
"விடிந்தால் தீபாவளி என்பதால் கடையில் கூட்டமும் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. வியாபாரத்தை முடித்து விட்டு, தான் தங்கியிருக்கும் வீட்டிற்கு ஜெய் வர, நள்ளிரவு இரண்டு மணியானது".
" வழக்கமாக பைக் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி வண்டியை லாக் பண்ணியவன், வீட்டிற்கு செல்லும் சந்து வழியாக வந்தவன்,வீட்டின் முன்பு லைட் எரிவதை பார்த்து யோசனையோடே வர, வாசல் கதவு திறந்திருப்பதும் தெரிந்தது".
"எவனாவது திருடன் வந்துட்டானா என்று வேகமாக வந்தவன், உள்ளே இருந்தவர்களை பார்த்து அதிர்ந்து விட்டு,வாங்க வாங்க, எப்போ வந்தீங்களென்றான்".
" முறுக்கு சுட்டுக்கொண்டிருந்த மீனாட்சி, மதியம் வந்தோம் பா, போய் கை கால் கழுவிட்டு வா ஜெய் என்று ஜலால் பாய் சொல்ல, சரி மாமா என்றவன், நீங்களாம் சாப்டீங்களா?, ஜெய்யின் அப்பா வீரையனோ ஆச்சுப்பா".
"நீ போய் சாப்பிடு என்றவர்,மீனாட்டி சாப்பாடு எடுத்து வை, போ என்றவாறு, முறுக்கு அச்சில் மாவை வைத்து பிழிய, ஜலால் அதை வாணலில் உள்ள எண்ணெயில் போட்டு பொறித்தெடுத்தார்".
" திருப்தியாக சாப்பிட்டவன், ஒரு வார்த்தை சொல்லவேயில்லையேமா என்க, அப்பா தான் திடீர்னு கிளம்பலாம்னு சொன்னார் பா".
" அதான் வரும் போதே, வீட்டில் அரைச்ச அரிசி மாவு இருந்துச்சி எடுத்துட்டு வந்தேன். சுட்டு வச்சா நீயும் ரெண்டு சாப்டுவியேப்பா என்ற மீனாட்சி, கிச்சன் லைட்டை ஆப் பண்ணிட்டு ஹாலிற்கு வந்து பார்க்க, கணவரும், அண்ணனும் வேலையை முடித்திருந்தனர்".
" சரி சரி ரொம்ப நேரம் ஆகிட்டு போய் படுங்களென்ற ஜலால், ஹாலிலே பாயை விரித்து படுக்க, அவருக்கு பக்கத்தில் வீரையனும் படுத்து விட்டார்".
" ஜெய்யும் உள்ளே இருக்கும் பெட்ரூமில் போய் படுத்தவன், அசதியின் காரணமாய் தூங்கிவிட்டான்".
"நன்கு உறக்கத்தில் இருந்தவனுக்கு மணி சத்தமும், பட்டாசு சத்தமும், சாம்பிராணி வாசனையும் தூக்கத்தை கலைக்க,எழுந்து ஃபோனில் மணியை பார்க்க, காலை ஆறு மணி என்று காட்டியது".
" மூன்று மணி நேரம் தான் தூங்கியிருக்கோமா என்றவாறு சோம்பலை முறித்தவன், இன்னும் கொஞ்ச நேரம் தூங்குவோமென்று படுத்துவிட்டான்".
" ஜெய்யீ தம்பி ஜெய்யீ என மீனாட்சி எழுப்ப, கண் விழிக்காமலே சொல்லுமாயென்றவனிடம், எந்திரிச்சி பல்லை விளக்கிட்டு சாப்பிடுப்பா என்றார்".
" ப்ரஷ் ஆகி வெளியே வந்தவனிடம் டீயை கொடுத்தவர், சீக்கிரம் குளிச்சிட்டு சாப்பிடுப்பா".
" அப்பா எங்கையோ போகணும் கிளம்பி இருங்களென்னு சொல்லிட்டு, அண்ணா கூட வெளியே போயிருக்கார் என்றவர்,கிச்சனிற்குள் சென்று விட, என்னடா இது?, ஒரே மர்மமா இருக்கேயென்றவன், டீயை குடித்து விட்டு குளிக்க சென்றான்".
" சிறிது நிமிடத்தில் குளித்து தயாராகி வந்தவனுக்கு, வெண் பெங்கலையும் சட்னியும் பரிமாறினார்.உன் கை பக்குவமே பக்குவம் தான் மீனாட்சி".
"நீ மட்டும் ஒரு ஹோட்டல் ஆரம்பித்தாயென்று வச்சிக்கோயேன், டாப்ல போய்டுவ போ என்க, மகனின் பேச்சை கேட்டு சிரித்தவர், போப்பா, உனக்கு எப்போதும் விளையாட்டு தானென்னார்".
வெற்றி - ஜனனி நினைவுகள்:
" அதன் பின்னர் வந்த நாட்களில் ஓரப்பார்வையில் ரசித்தே இருவருக்கும் நாட்கள் சென்றது".
" அப்பொழுது ஜனனியும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வை எழுதி முடித்திருந்தாள்".
" வீட்டில் சும்மாவே இருக்க போரடிக்குதென்று பாட்டிகளோடு வயலுக்கு செல்ல, அவர்கள் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல், வயலில் இறங்கி வேலையை கற்றுக்கொண்டாள்".
" இப்படியே இவர்கள் நாட்கள் செல்ல,காதலை வாய்விட்டு சொல்லவில்லை என்றாலும், இருவரும் உணர்ந்து கொண்டனர்".
" அந்நேரம் தான் பக்கத்து தெருவிற்கு இவர்களின் பால்ய நண்பனான மணி, பாட்டி வீட்டிலிருந்து படித்து முடித்து ஊருக்குள் வந்தவன் பார்வையில் ஜனனி பட, அவளை விரும்ப ஆரம்பித்தான்".
" ஜனனியும் தெரிந்தவன் என்பதால் அவனை பார்க்கும் போது சிரித்து வைக்க, மணியோ தனது நண்பர்களிடம் ஜனனியும் நானும் காதலிக்கிறோமென்று சொல்ல, அதை கேட்ட வெற்றிக்கு கொலை வெறியானது".
" என்னடா சொல்லுற என்க, ஆமாடா அவளும் தான் என்னை விரும்புறா. நீ வேண்டுமானால் நாளைக்கு பாரு, என்னோட நம்ப செல்லாயி அம்மன் கோயில் திருவிழாவிற்கு வருவாளென்க, வெற்றியால் அவன் சொல்வதை எப்படி எடுத்துக்கொள்வது என்பதே தெரியவில்லை".
"மனம் முழுவதும் குழப்பமும் கோபமும் போட்டி போட,எதுவும் சொல்லாமல் அங்கிருந்து வீட்டிற்கு சென்றான்".
" இரவு வீட்டில் சாப்பிடும் போது, அப்பா நாளைக்கு பக்கத்து ஊர்ல திருவிழா, நானும், கீதாவும் போய் வரட்டுமாயென்று ஜனனி கேட்க, நீங்க மட்டுமா மா? என்று மாரியப்பன் யோசனையானார்".
" அப்பொழுது பெரியாத்தா என்ற குரலோடு, மணியும் அவன் அம்மாவும் வீட்டிற்குள் வந்தனர்".
" உள்ளே வந்தவர்களை பார்த்த ராக்கம்மா பாட்டி வா கமலா,வா சாப்பிடு என்க, சாப்டுட்டு தான் வரேன். திடீர்னு கழுத்து மடக்குனு சத்தம் கேட்டுது, அங்க இங்க திரும்ப முடியலத்தா என்க, தண்ணீர் படுறதுக்கு முன்னவே வழிக்கணும்தா என்றவர், செத்த இரு கையை கழுவிட்டு வரேனென்று எழுந்து சென்றார்".
" என்ன மருமவளே, அத்தகாரிய ஒரு வாய் சாப்ட சொல்லமாட்டியா?, அத்தை உங்க வீட்டில் நான் சாப்பிட சொல்லணுமா என்க, பார்ரா என்ணன் மவள் எப்படி பாயிண்டை புடிக்கிறதே என்று கமலா சிரித்தார்".
" எத்தா கமலா இங்க வாயென்க, அவரும் திண்ணையில் வந்து உட்கார, கையில் சிறுது எண்ணெய்யை எடுத்த ராக்கம்மா பாட்டி, கமலாவின் கழுத்தில் தடவி விட்டு, பேச்சுக் கொடுத்துக்கொண்டே சுளுக்கை எடுத்து விட்டு, இப்போ கழுத்தை திருப்பி பாறென்க, கமலாவும் இடம் வலம் திருப்பி விட்டு, சரியாகிட்டுமா என்றார்".
" பின்னர் கோயில் விழாவை பற்றி பேச்சு வர, உன் அண்ணன் மவளும் திருவிழாக்கு போகணும்னு தான் சொல்லிட்டு இருக்காளென்றவருக்கு, நான் போறேன் மா.சாமிக்கு வேண்டுதலை வச்சிருந்தேன் அதை செய்யணும், நான் போகும் போது கூப்பிட்டு போறென்க, சரித்தா என்றார்".
மறுநாள் விடியல் ஆரம்பமானது.காலை சாப்பாட்டை முடித்த கீதாவும் ஜனனியும் தயாராகி வீட்டு திண்ணையில் உட்கார்ந்திருக்க, கமலாவும் வந்தார்".
" மருமவளுங்காளா போகலாமாத்தா என்க, அத்தை நீ வச்சிருக்கிறது ஒரு மவன், நாங்க ரெண்டு பேரு இருக்கோம். வேண்டும்னா மாமாக்கு இன்னொரு கல்யாணத்தை பண்ணினால், முறப்பையன் வருவாரென்று கீதா சொல்ல,அடிப்பாவி".
" அத்தகாரி வாழ்க்கைக்கு இப்படி சூனியம் வைக்கிறியேனு கமலா சொல்ல, எல்லாம் ஒரு பொது சேவை தானத்தை".
"இது மட்டும் மாமாக்கு தெரிஞ்சா,ரொம்ப சந்தோஷப்படுவாரென்று கீதா சிரிக்க,இருக்கும்டி இருக்கும். உன்னையும், உன் மாமனையும் பிரி கட்டாமால் விட மாட்டேன் டி என்றார்".
"பின்னர் கலாவிடமும், பாட்டியிடமும் சொல்லிக் கொண்டு கமலா கூட இருவரும் பக்கத்து ஊர் திருவிழாவிற்கு சென்றாளுங்கள்".
"அங்கு மணியோ வெற்றியிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.பாரு இப்ப எங்க அம்மா கூட வருவாள் என்று சொல்ல, அவனும் ரோட்டில் நின்று பார்த்துக் கொண்டிருக்க,கமலா கூட ஜனனி சிரித்து பேசிக்கொண்டு வருவது, தூரத்திலிருந்தே தெரிந்தது".
" அதுமட்டுமில்லாமல் ஜனனியின் நேரம் போல, அன்று என்று பார்த்து, ஜனனியும் மணியும் ஒரே கலர்ல டிரஸ் போட்டதை கவனித்த வெற்றிக்கு, கோவம் தலைக்கு ஏறியது".