• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
கபிலன்- ரியா நினைவுகள்:

" அண்ணாஆஆஆ என்று தனது வயதையும் மறந்து ஓடிப்போன தேவகி தனது அண்ணன் நெஞ்சில் சாய்ந்து அழுதார்".

" கண்ணம்மா நல்லா இருக்கியாடா என்றார், ரியாவின் தந்தையும், தேவகியும் அண்ணனுமான தேவராஜ்".

" தேவகி எந்த பதிலையும் சொல்லாமல் அழுது கொண்டே இருக்க,வீட்டுக்கு கூப்பிடமாட்டியா கண்ணம்மா?".

" அண்ணனின் வார்த்தையை கேட்டவர், இது நம்ப வீடுணா. அங்கு கூப்பிட்டு தான் நீ வரணுமா?, ம்ம் என சிரித்தவர், தங்கையை அணைத்துக்கொண்டு, தனது பால்ய சினேகிதனும், தங்கையின் கணவராகிய கண்ணனிடம் வந்தவர், எப்படிடா இருக்க?".

" நண்பனை முறைத்து பார்த்தவர், எதுவும் சொல்லாமல் வேறு பக்கம் திரும்பி நிற்க,உன்னை எப்படி சமாதானம் பண்ணனுமென்று எனக்கு தெரியும்டி மாப்பு என்றவர், கண்ணனின் இடுப்பில் கிச்சு கிச்சு மூட்ட, டேய் டேய் என்ற கண்ணனோ, சிறு பிள்ளை போல துள்ளினார்".

" சில வருடங்களுக்கு பிறகு தந்தையை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த ரியா, கண்ணனின் சத்தத்தில் நிகழ்விற்கு வந்தவள், எதுவும் சொல்லாமல் வீட்டினுள்ளே சென்று விட, ஆதிராவும் தோழியின் பின்னாடி சென்றாள்".

" கபி என்று மருமகனை நோக்கி தேவராஜ் கைகளை நீட்ட,தனது தாய்மாமனை கட்டிக்கொண்டான்".

" எப்படி கண்ணா இருக்கேயென்க, நல்லா இருக்கேன் மாமா என்றவனிடம், வாழ்த்துக்கள் கண்ணா என்றார்".

" அவர் சொல்லும் வாழ்த்துக்கான காரணத்தை புரிந்தவன், மகிழ்ச்சி மாமா என்க,இருவரையும் பார்த்த கண்ணன், மாமனுக்கும் மருமகனுக்கும் அப்படி என்ன ரகசிய வாழ்த்தென்றார்".

" ஹாஹாஹாஹா என்று சிரித்த தேவராஜ், அடேய் கண்ணா என் மருமகன், இனி வெறும் கபிலன் இல்லைடா, கபிலன் கண்ணன் ஐபிஎஸ் என்கவும், எதேயென்று தேவகியும் கண்ணனும் அதிர்ந்தனர்!!".

" என்ன கண்ணா, இன்னும் விஷயத்தை நீ சொல்லலையா?, இல்லை மாமா".

" அடேய் என்னடா இங்கு நடக்குதென்று கண்ணன் முறைக்க, வர திங்கள் கிழமை ஹைதரபாத் போகணும் டா".
டிரைனிங் சென்டர் அங்கு தான். ரெண்டு நாளைக்கு முன்பு தானே எக்ஸாம் ரிசல்ட் வந்தது, என்ன தேவா சொல்லுற?.. ".

" உன் மருமகன் இதுவரை வாயை திறக்கவில்லையேனு கண்ணன் சொல்ல,அதான் நான் சொல்லிட்டேனேடா".

" ஏண்டா, நானே எட்டு வருஷம் கழித்து இப்போ தான் வந்துருக்கேன். வீட்டுக்குள்ளே விடாமல், இப்படியே வாசலில் நிற்க வைத்து பேசி அனுப்பிடுவீங்க போல?".

" அய்யோ அண்ணா... வா வா என்று தனது அண்ணனின் கையை பிடித்துக்கொண்டு வீட்டின் உள்ளே சென்றார்".

" எட்டு வருடங்களுக்கு முன்னர் பார்த்த வீடு என்றாலும், இன்னும் அதே அழகு மாறாமலிருந்தது".

"ஹாலில் உட்கார்ந்தவர், உன் மருமகள் கோச்சிக்கிட்டு போய்ட்டாள். நான் போய் பேசிட்டு வரேனென்று மகளின் அறைக்குச் சென்றார்".

" தனது அறையின் ஜன்னல் வழியாக, தூரத்தில் தெரியும் பசுவை பார்த்துக்கொண்டிருந்த ரியா, நமக்கு மட்டும் அம்மா இல்லாமல் போய்விட்டதேயென்று கண் கலங்கினாள்".

" தோழியின் மனநிலையை அறிந்த ஆதிரா எதுவும் பேசாமல் அவளின் தோளை தட்டிக்கொடுத்து கொண்டிருந்தாள்".

" அப்பொழுது, கதவு தட்டும் சத்தம் கேட்டு ஆதிரா வாசல் பக்கம் பார்க்க, தேவராஜ் தான் அங்கு நின்று கொண்டிருக்க, உள்ளே வாங்க மாமா".

" நல்லா இருக்கீங்களா மாமா என்க, நல்லா இருக்கேன் ஆதி கண்ணு, அங்கு சுந்தர், மேகலா நல்லா இருக்காங்களாயென்று தேவராஜ் கேட்க, நல்லா இருக்காங்க மாமா".

"மகளை கண்ணை காட்டி தேவராஜ் கேட்க, ம்ம் என்று ஆதிரா தலையசைக்க, ரியா கண்ணம்மா என்று தந்தையின் அழைப்பில் திரும்பி பார்த்தவளின் கண்களிலிருந்து வந்த கண்ணீரை கண்டவர், பதறிப்போய் மகளின் கண்ணை துடைத்தார்".

" அப்பா இங்க வரக்கூடாதென்று எண்ணம் இல்லைடா. அதான் தினமும் உன்கிட்ட வீடியோகாலில் பேசுறேனேடா என்றவர், நாம நிலையான இடத்தை தக்க வைக்கணுமென்றால், ஓட்டத்தை நிறுத்தக்கூடாது".

" இது நான் சொல்லி தான் உனக்கு புரியணுமாயென மகளிடம் கேட்க, இல்லைப்பா என்றாள்".

" பிறகு என்ன, என் கண்ணம்மாவிற்கு கோபம் என்றவர், ரெண்டு பேரும் எக்ஸாம் எப்படி பண்ணியிருக்கிறீங்க?, நல்லா பண்ணியிருக்கிறோம் என்றனர்".

" அப்புறம்,நிச்சயதார்த்த பொண்ணு என்ன ஆதி கண்ணா சொல்லுதென்று தேவராஜ் கேட்க, அவ எங்க மாமா வாயை திறக்கிறாள்?".

" கண்ணம்மா, கபிலனை பற்றி நான் சொல்லி தான் உனக்கு தெரிய வேண்டுமென்று அவசியமில்லை. என் தங்கச்சி மகன் என்பதை விட, அவன் ஒரு நல்ல மனிதநேயம் கொண்ட மனிதன்".

" அவனுக்கு உன்னை கட்டி வைக்கிறதுல எனக்கு பரம சந்தோஷம்.நீ பிறந்த அன்னைக்கே கபிலனுக்கு நீ தானென்று, என்னோட அப்பா அம்மா சொன்னாங்க".

" உன் அம்மா அதைக்கேட்டு ரொம்ப சந்தோஷப்பட்டாள். அவளுக்கு இங்க விளையாட்டு பிள்ளை, நண்பன் எல்லாமே கபிலன் தான்".

"நான் தான் என்ன பாவம் செய்தேனோ தெரியவில்லை, அவங்க கூட இருக்க வழியில்லாமல் போய்விட்டதென்று சொல்லும் போதே, தேவராஜ் கண்கள் கலங்கியது".

" அப்பா- மாமாயென்று ரியாவும், ஆதிராவும் இரண்டு பக்கம் அவரின் கையை பிடித்தவாறு தோளில் சாய்ந்து கொண்டனர்".

" பெருமூச்செடுத்து, தன்னை ஆசுவாசி படுத்திக் கொண்ட தேவராஜ், பர்சேசிங் எல்லாம் முடிஞ்சிடுச்சாடா என்க, ஆச்சு மாமாயென்றாள்".

" அது இருக்கட்டும்,முதல்ல எங்க ரெண்டு பேருக்கும் என்ன வாங்கிட்டு வந்திருக்கீங்க?,அதை சொல்லுங்கப்பா என்று ரியா கேட்க, வந்த அவசரத்தில் ஒன்னும் வாங்கவில்லைடா கண்ணம்மா".

"ஆஹான்.... நம்பிட்டோம்பா என்றவள், சரி வாங்கப்பா, வாங்கியதை எல்லாம் காண்பிக்கிறேன் என்கவும்,இருவரின் தோள் மேல் அணைத்துக் கொண்டு
மாடிப்படியிலிருந்து கீழே இறங்கி வந்தார்".

" மூவரும் வருவதை பார்த்தவர்கள், என்ன தேவா சமாதானம் தானேனு கண்ணன் கேட்க, பார்த்தா தெரியலையேடா என்றவாறு,அங்கிருந்த சூட்கேஸ்களை பார்த்தவர், ரியா- ஆதி, உங்க இருவருக்கும் கிரின் புளு ஸ்டிக்கர் போட்ட சூட்கேஸ்".

" யாருக்கு எது புடிக்கிதோ எடுத்துக் கொள்ளுங்கள்".

" மற்றது என் தங்கச்சி, கண்ணாக்கு, இன்னொரு சூட்கேஸை காட்டி, தேவகி அதில் இருப்பதை எடுத்து பாரு என்றார்".

" அண்ணா முதல்ல ப்ரஷ் ஆகிட்டு வா, மற்றதை பிறகு பேசிக்கலாமென்க, சரிடா கண்ணம்மாயென்று, கீழே இருக்கும் தனது அறைக்குள் சென்றார்".

"தேவா வருவதற்குள் சாப்பாடு ஏற்பாடு பண்ண சொல்லுமாயென்று கண்ணன் சொல்ல, நடந்துகிட்டு தான் இருக்குங்க.இன்னும் பத்து நிமிஷத்தில் ரெடியாகிவிடுமென்று மலர் சொல்லுச்சு என்கவும்.சரிமா என்றார்".

திருச்சூர்:

" ஆது உன்கிட்ட ஒரு விஷயத்தை சொல்லாமல் விட்டுட்டேன்டானு ருத்ரன் சொல்ல, அப்படியானு அதிர்ச்சியாய் ஆது கேட்க, ஆமாடா".அஞ்சு வருஷமா உன்கிட்ட ஒரு விஷயத்தை சொல்லாமல் இருந்துட்டேன்டா என்றான்".

" என்னடா சொல்ற?".

"என்ன பெரிய பெரிய குண்டு எல்லாம் போடுற?,அப்படி என்ன விஷயம் என்கிட்ட மறைக்கும் அளவுக்கு?,சொல்லித் தொலைடா".

" அது வந்து அது வந்து என்று ருத்ரன் பேச்சை இழுக்க,அதான் வந்து தொலைஞ்சிட்டோமே".

"ஆள் இல்லாத இடத்து கிட்ட கூப்பிட்டு வந்திருக்கிறேன். இப்பையாவது என்ன நடந்துச்சுன்னு சொல்லி தொலைடா. எனக்கு மண்டையே வெடிச்சிடும் போலிருக்கென்று, தனது தலைமுடியை கலைத்து விட்டுக் கொண்டே ஆது சொன்னான்".

" எனக்கு கல்யாணம் ஆகிட்டுடா என்று ருத்ரன் சொல்ல,ஓ அப்படியா என்றவன், பின்னர் சுதாரித்து, எதேஏஏஏஏஏஏஏஏஏ கல்யாணம் ஆகிட்டாஆஆ!!".

" என்னடா எருமை சொல்லுற?, தண்ணி அடிச்சிருக்கியா?, எங்கே வாயை ஊதி காட்டு பார்க்குமென்று, ருத்ரனின் முகத்தை திருப்பி விட்டு ஆது கேட்க, நான் சொல்லுறது உண்மை தான் மச்சான்".

"அப்புறம்டா மச்சான், பொண்ணு யாருனு சொன்னால், உனக்கு ஷாக் தான் என்க,தனது புருவத்தை சுருக்கிய ஆது, ஒருவேளை அந்த அடங்காப்பிடாரியா இருப்பாளா?, இல்லை வேறு யாராவது இருக்குமா?".

" அந்த ஜான்சிராணி தான் பெரிய இவளாட்டம் சவால் விட்டு போனாளே, அவளா இருக்க வாய்ப்பு ரொம்ப கம்மி தான்".

" ஒரு வேளை எழுத்த வீட்டில் இருக்கும் ஆல்பர்ட் மவள் ஏஞ்சலா இருப்பாளா?, ச்சை ச்சை அவள் அப்பன் பிரேயர் பண்ணியே சாவடிச்சிடுவார்னு இவனுக்கு தெரியும்".

" பிறகு யாரா இருப்பாள்?, அதும் நமக்கு தெரிஞ்ச பொண்ணுனு சொல்லுறானே இந்த தேங்கா மண்டையன்னு,தனக்குள்ளே கேள்வி கேட்டுக்கொண்டான்".

" பின்னர் நினைவு வந்து டேய் டேய் எனக்கு யாருனு தெரிஞ்சிட்டென்று ஆது கத்த, கண்டுபிடிச்சிட்டானா என்று உள்ளுக்குள் அதிர்ந்து போன ருத்ரன், ஓஓஓ யாரு? என்றான்".

" நம்ம கடைக்கும் வரும் மினிஸ்டர் பொண்ணு அந்த மேனாமினுக்கி பவித்ரா தானே என்க, நண்பன் சொன்ன ஆளை நினைத்த ருத்ரனோ கொலை வெறியில் முறைத்து பார்த்தான்".

" ஏன் இவ்வளவு பாசமான லுக்கு மச்சி".

" அவள் இல்லையா என்க, நோ என்று ருத்ரன் சொல்ல, பிறகு யாருனு தனது மண்டையில் தட்டிக்கொண்டிருந்தவன், டேய் டேய் நம்ப கூட கனடாவில் படிச்ச மெர்சி தானே?, சுத்தமென்று தலையில் அடித்துக்கொண்ட ருத்ரன், அவள் இல்லைடா".

" வேற எவள்னு நீயே சொல்லி தொலை".

" இதுக்கு மேல யோசித்தால் எனக்கு மண்டை காண்டு ஏறிடும்".

" ஆதுவை பார்த்து சிரித்த ருத்ரன், ஆர்கலியென்றான்".

" என்னாகலிஈஈஈ என்க,ம்ம் ஆர்கலி என்று மீண்டும் சொன்னான்".

" ஆர்கலியாஆஆஆஆ, நமக்கு தெரிந்து இந்த பேரில் யாரு ஆர்கலினு யோசனை பண்ணி பார்க்க, ஆதுக்கு அந்த பெயருக்கு சொந்தக்காரியானவள் நினைவிற்கு வரவேயில்லை".

" அடேய் இந்த பேர் கேள்வி பட்ட போலவே இல்லையேடா?, ஒழுங்கு மரியாதையா நீயே யார்னு சொல்லு வீர்".
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
தனது கண்ணை மூடி திறந்த ருத்ரன், கோவையில், ராம் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் ஆஸ்ரமத்தில் வளர்ந்த ஆர்கலினு தெளிவாக சொல்ல,எதேஏஏஏஏஏ அந்த குட்ட கத்திரிக்காயாஆஆ டா என்று அதிர்ந்து போனான்".

" ம்ம் அவளே தானென்க, உனக்கு ஒன்னும் மண்டையில் அடிபட்டு, மூளை குழம்பவில்லையேயென ருத்ரனின் தலையை முன்னும் பின்னும் அசைக்க, நிஜமாடா".கல்யாணம் முடிந்து ஐந்து வருஷமாகுதென்று, அடுத்த குண்டை தூக்கி, நண்பனின் தலையில் போட்டான்".

" என்னாஆஆ ஐந்து வருஷமாகுதானு தனது நெஞ்சில் கையை வைத்த ஆது, அடேய் வீர், எதா இருந்தாலும் முழுசாக சொல்லி முடிடா".

" இப்படி ஒரு ஒரு குண்டா போடாதே. சத்தியமா இந்த பிஞ்சு நெஞ்சு தாங்காதென்றான்.

" நாம ராம் வீட்டிற்கு கோயம்புத்தூர் போனோம் இல்லையா, முதல் நாள் வழக்கம் போல எனக்கு அதிகாலையிலே விழிப்பு வர, எந்திரிச்சி உங்களை பார்த்தேன்டா".

" நீங்க நான்கு பேரும் நல்லா தூங்குவது தெரிஞ்சிது. நான் ரெஸ்ட் ரூம் போய் ப்ரஷ் ஆகிட்டு, ஜாக்கிங் டிரஸ் போட்டுக்கொண்டு, வெளியே போனேன்".

" அதிகாலை நேரம், பனி படந்து லேசான குளிர்ல ஓடிக்கிட்டே ஒரு சந்தில் திரும்பும் போது,யாரோ ஒருவர் மேல் இடிக்க, அவள் சத்தத்தை வைத்து தான் அது பொண்ணு என்பது தெரிந்தது".

" திரும்பி அவளை பார்த்தேன், நல்லா பொமேரியன் குட்டி போல, புசு புசுனு சின்ன பொண்ணு ஒருத்தி கோவமா முறைத்துக்கொண்டு நின்றாள்".

" சாரி பாப்பானு நான் சொல்ல, யோவ் லேம்ப் போஸ்ட், நான் ஒன்னும் பாப்பா இல்லை, பிளஸ்டு படிக்கிறேனு சொல்லிட்டு ஓடிட்டாள்டா".

" அந்த அதிகாலை நேரத்தில், ரோஜா மொட்டு போல இருந்தவள்,என் மனசுக்குள் புகுந்துட்டாள்".

" சரி சின்ன பொண்ணுனு மனசை தட்டிக்கொண்டு வீட்டிற்கு வந்துட்டேன்".

" அப்படி இருக்கும் போது தான், அவள் பாட்டு பாடுறது மாடியில் நாம பேசிட்டு இருக்கும் போது கேட்க, ஆர்கலி தான் பாடுறாள்னு ராம் சொன்னான்".

" அப்பொழுது தான் அவள் பெயர் ஆர்கலியென்றும், பக்கத்து ஆசிரமத்தில் இருக்காள்னு ராம் சொன்னான்".

"அன்று காலையில், புடவை கட்டிக்கிட்டு நம்ப ராம் நலுங்குக்கு வந்த போது, என் கண்ணுக்கு அந்த நேரம், அவள் பெரிய பொண்ணா தான் தெரிஞ்சாள்".

" எந்த பொண்ணு மேலயும் தோன்றாத உணர்வுகள் ஏனோ அவள் மேல எனக்கு தோணியது. மூளையோ பள்ளிக்கூடம் போறவள்னு சொன்னாலும், மனசு கொஞ்சம் கூட அதை கேட்கவில்லை".

" பிறகு நலுங்கில் உனக்கும் அவளுக்கும் சண்டை வர, உன் மேல ஒரு வாளி கஞ்சி தண்ணியை ஊற்றிட்டு ஓடினாளே, அப்பொழுது எதிரில் வந்த என் மேல இடித்து, பக்கத்தில் இருந்த கார்டன்ல விழுந்துட்டோம்".

" முதல் முறையாக ஒரு பொண்ணுடைய ஸ்பரிசம் பட்ட போது, உடம்பெல்லாம் எனக்கு சிலுத்திடுச்சிடா".

"அவளுக்கும் அதே போல இருந்தது.நான் அதை கவனிச்சேன்.அவ முகம் எல்லாம் ஒரு நிமிஷம் அப்படியே செக்க சிவந்த சூரியன் போல சிவந்து போயிடுச்சுடா".

" பிறகு என் மேலஇருந்து எழுந்து ஓடிட்டாள், டேய் டேய் நிறுத்து நிறுத்து என்று ருத்ரனின் பேச்சை ஆது தடை பண்ணினான்".

" என்னடானு ருத்ரன் கேட்க, அடேய் தடிமாடு, அதனால் தான் அந்த ரோஸ் கலர் டி-ஷர்டை துவைக்கவே வேண்டாம்னு,தொட்டு தொட்டு பார்த்து, சூட்கேஸில் வைத்தாயா?".

" ஆமாடா, அதில் இருந்த பட்டன்ல, அவளோட முடி சிக்கியிருந்தது, அதானென்ற ருத்ரன் வேறு பக்கம் திருப்பி சிரிக்க, டேய் டேய் வெட்கப்படாதடா".

"சத்தியமா இந்த கருமத்தை என்னால பார்க்க முடியலை. சரி நீ மேல கண்டினியூ பண்ணு.எல்லாம் என் தலையெழுத்து.இந்த நாய் வெட்கமென்ற பேரில் பண்ணுவதை பார்க்கணுமென்று எழுதியிருக்கு போலனு, தனது தலையில் தட்டிக் கொண்டான்".

"ஆமாடா ஆமாம் என்றவன், மீண்டும் சொல்ல தொடங்கினான்".

"கல்யாணத்தன்று நாம ரெடியாகிட்டு இருக்கும் போது, மேகு கிட்ட இருந்து கால் வர, நான் அட்டென் பண்ணி பேசிட்டே ரெடியானேன்.நீங்களாம் ரெடியாகி என்னை பார்க்க, கீழே போங்கனு சொன்னேன், அதுலாம் ஞாபகம் இருக்கா என்று ஆதுவிடம் கேட்டான்".

"ஓஓஓஓ சார் அங்க லிப்டு லிப் கிஸ் அடிச்சி படம் ஓட்டுனீங்களே, அது தானே டா, ஓஓஓ எஸ் நல்லாவே ஞாபகம் இருக்குடா என்க, இப்பொழுது ருத்ரன் தனது நண்பனை முறைத்து பார்த்தான்".

" டேய் நீ பஸ்ட் எய்டு பண்ணியதை சொன்னேன் டா.சரி சரி நீ கதைய சொல்லு என்க, அதன் பிறகு நாம கல்யாணத்துக்கு போய்ட்டோம்".

"ரஞ்சன் நம்மில் யாரையாவது உடனே வாங்க அர்ஜென்ட்னு சொன்னதும், நான் போறேன்டானு நீ கிளம்பிட்ட".

" ரெண்டு நாள் சென்று, நாங்க பேசிட்டு இருக்கும் போது அவள் வந்து என்கிட்ட, உங்களை யாரு காப்பாற்ற சொல்லியது".

" பொறுக்கி பசங்களாம் அதையே சொல்லி என்னை கிண்டல் பண்ணுறாங்களென்று, அழுது கிட்டே சண்டை போட்டு கிட்டு இருக்கும் போது, திடீர்னு மயங்கி கீழே விழுந்துட்டாள்டா".

" என்னாச்சினு பதறி தூக்கும் போது அங்க வந்த பாதர் உடனே ஹாஸ்பிட்டல் போகணும்னு சொல்ல,அட்மிட் பண்ணிய பிறகு, ஃபாதர் சொல்லி தான் ஒரு விஷயம் தெரிஞ்சிது".

"அவள் சூசைட் பண்ணிக்க டேப்லட் போட்டிருக்காளென்ற உண்மை".

" அப்போ எப்படி இருக்கும் சொல்லுடா", சின்னப்பொண்ணு, இந்த அளவிற்கு போயிருக்காள் என்றாள், அவளை எந்த அளவு டீஸ் பண்ணிருப்பானுங்க, அந்த பொறுக்கி பயலுங்கள்".

" பிறகு தான் சிவன் அப்பா கிட்ட ஆர்கலியை கல்யாணம் பண்ணிக்க முடிவு பண்ணியதை சொன்னேன். நம்ப ப்ரண்ட்ஸூம் அதுக்கு ஒத்துக்கவில்லை, அவங்களும் இது தேவையானு? தான் கேட்டாங்கள்".

" நான் தான் ஃபாதரையும், மற்றவர்களையும் கன்வின்ஸ் பண்ணி, மறுநாள் சர்ச்சிலே கிறிஸ்டியன் முறைப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்டா".

சத்தியமங்கலம்:

"தனது கணவர் சொல்லியதை கேட்டு,வாங்க வாங்க நாத்தனாரே என்று கருப்பாயி சிரிக்க, மனைவியிடம் திரும்பிய சங்கர்,அப்புறம் புள்ள,அவங்க தான் ஆச்சி என்க, வாங்க ஆச்சியென்க பாட்டியும் கருப்பாயியை பார்த்து சிரித்தார்".

" பின்னர் நல்லா இருக்கிறியா தாயி என்க, நல்லா இருக்கிறேன் ஆச்சி. நீங்க நல்லா இருக்கீங்களா?, நானும் நல்லா இருக்கிறேன் தாயி".

" சரி சரி நேரம் ஆகிட்டு.முதல்ல வயிற்றுக்கு நாலு சோத்தை அள்ளி போடுங்களென்று கருப்பாயி சொல்ல, முதல்ல சோத்தை எடுத்து வை டி என்றார்".

"மாமா உனக்கும் சேர்த்தே எடுத்துட்டு வந்துட்டேன் என்று சொல்ல,என் பொண்டாட்டி என்றால் பொண்டாட்டி தான் ஆச்சி".

" நான் எள்ளுன்னா அவ எண்ணெய்யா வந்து நிற்பாள் என்றவர்,அங்கிருந்த கப்போர்டை,திறந்து அதிலிருந்து மூணு தட்டை எடுத்து, வாஷ்பேஷனில் கழுவியவர், சோத்தை போடு புள்ள".

"பசி வயித்தை கிள்ளுது என்று தரையில் உட்கார்ந்தவர், தங்கச்சிமா, ஆச்சி,நீங்களும் வாங்களென்றார்"

" நாத்தனாரே வாங்களென்று சாப்பாட்டு வாளியை திறந்து, சூடான சாதத்தை தட்டில் போடுபவரிடம், அண்ணி என்னுடைய பெயர் ஆர்கலி என்றாள்".

" அதை கேட்ட சங்கரும், கருப்பாயியும்,ஆர்கலி பேரு நல்லா இருக்கென்றனர்".

"பிறகு சாதத்தின் மேல் சாம்பாரை ஊற்றியவர், ஒரு ஓரமாக வெண்டைக்காய் பொரியல் வைத்து, ஆளுக்கு ஒரு அப்பளத்தை வைத்து கொடுத்தார்".

"நீங்க சாப்டீங்களா அண்ணி என்க, நான் சாப்பிட்டேன் மா. உன் அண்ணனுக்காக தான் காத்துட்டு இருந்தேன். மனுசன் வர போல தெரியலை".பசி வேர வயிற்றை பிறட்டிச்சா, ரெண்டு மணி சங்கு ஊதும் போதே சாப்பிட்டேனென்மா".

" பின்னர் கபோர்டில் இருந்த பாத்திரத்தை எல்லாம் எடுத்து, அங்கிருந்து தண்ணீரில் கருப்பாயி கழுவினார்".

" அய்யோ அண்ணி,எதுக்கு நீங்க அதெல்லாம் பண்ணிக்கிட்டு?,இருங்க நானும் வந்துடுறேன்னு ஆர்கலி சொல்ல, இருக்கட்டும் மா.".

" நாளைக்கு வெள்ளிக்கிழமை எப்படியும் பால் காய்ச்சுவது போலிருக்குமென்று பாத்திரத்தை எல்லாம் சிங்கிள் கழுவி, பக்கத்தில் இருந்த மேடையிலேயே கவிழ்த்து வைத்தவர்,அடுப்பை எடுத்து வைத்து துடைக்க,அதற்குள் மூவரும் சாப்பிட்டு முடித்தனர்".

"அப்புறம் புள்ள,தங்கச்சிமா கூட போ.வீட்டுக்கு மளிகை சாமானும், மாத்து துணி எல்லாம் வாங்கணுமாம். நம்ப ராஜா கடைக்கு கூட்டிட்டு போ என்று மனைவியிடம் சொல்லிய சங்கர், தங்கச்சிமா நீங்க பார்த்து போய்ட்டு வாங்கமா".

" அங்க ஐயா வீட்ல வேலை அப்படியே கிடக்கு. நான் போயிட்டு வரேன் என்று சொல்லி விட்டு, ஆச்சி கொஞ்ச நேரத்தில் வந்துடுறேன்னு அங்கிருந்து பெரிய வீட்டை நோக்கிச் சென்றார்"

"அண்ணி நீங்க உட்காருங்க, அதற்குள் நான் லிஸ்ட் மட்டும் எழுதிக்கிறேன் என்றவள்,தனது ஹேண்ட் பேக்கிலிருந்து சின்ன நோட்டையும் பேனாவையும் எடுத்து,அத்தியாவசியத்திற்கு தேவையான மளிகை பொருட்களை எழுதினாள்".

" பின்னர் ஹேண்ட் பேகின் உள் பக்கம் இருந்த பணத்தையும் எடுத்துக் கொண்டவள், இதுவரைக்கும் உபயோகிக்காமல் வைத்திருந்த போனை எடுத்து, அதில் புதிதாக வாங்கிய சிம் கார்டை போட்டு ஆன் பண்ணினாள்".

" அதில் இருபது சதவீதம் சார்ஜ் இருந்ததை பார்த்தவள், நல்ல வேளை சார்ஜ் இருக்கேயென்று நினைத்தவள், சற்று நேரத்துக்கு முன்னர் ஆட்டோக்காரர் கொடுத்து சென்ற கார்டை எடுத்து, அதிலிருந்த நம்பருக்கு கால் பண்ணினாள்"

"முதல் அழைப்பு கட்டானது.பின்னர் இரண்டாம் முறை கால் பண்ண,இரண்டாவது ரிங்கில் எடுக்கப்பட, ஹலோ அண்ணா, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பெரிய வீட்டில் கொண்டு வந்து விட்டீர்களே என்று ஆர்கலி சொல்ல, அதற்கு ஆட்டோக்காரர் சொல்லுமா தங்கச்சி என்றார்".

" அண்ணா டவுன் வரைக்கும் போகணும்னா என்க, சரிம்மா, இதோ உடனே வரேன் என்றவர், அந்த பெரிய வீட்டிற்கு தானே என்க,இல்லைணா அந்த வீடு இல்லை என்றவள், ஒரு நிமிஷம்ணா என்றவள், அண்ணி இந்த வீட்டு அட்ரஸை எப்படி சொல்லணுமென்றாள்".

"டீச்சர் வீடு என்று சொன்னால் எல்லாருக்கும் தெரியும் மா. வரும் டீச்சர் எல்லாம் இந்த வீட்டில் தான் இருப்பார்கள் என்று கருப்பாயி சொல்ல, அதை ஆட்டோக்காரரிடம் ஆர்கலியும் சொல்ல, சரிங்க தங்கச்சி, அந்த ஓட்டு வீடு தானே,எனக்கு நல்லா தெரியும்".

" இன்னும் பத்து நிமிஷத்தில் நான் வந்து விடுகிறேன் என்றபடி, அழைப்பை துண்டித்தார்".

ஆர்கலி எங்கே....?
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top