Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
கபிலன்- ரியா நினைவுகள்:
" அண்ணாஆஆஆ என்று தனது வயதையும் மறந்து ஓடிப்போன தேவகி தனது அண்ணன் நெஞ்சில் சாய்ந்து அழுதார்".
" கண்ணம்மா நல்லா இருக்கியாடா என்றார், ரியாவின் தந்தையும், தேவகியும் அண்ணனுமான தேவராஜ்".
" தேவகி எந்த பதிலையும் சொல்லாமல் அழுது கொண்டே இருக்க,வீட்டுக்கு கூப்பிடமாட்டியா கண்ணம்மா?".
" அண்ணனின் வார்த்தையை கேட்டவர், இது நம்ப வீடுணா. அங்கு கூப்பிட்டு தான் நீ வரணுமா?, ம்ம் என சிரித்தவர், தங்கையை அணைத்துக்கொண்டு, தனது பால்ய சினேகிதனும், தங்கையின் கணவராகிய கண்ணனிடம் வந்தவர், எப்படிடா இருக்க?".
" நண்பனை முறைத்து பார்த்தவர், எதுவும் சொல்லாமல் வேறு பக்கம் திரும்பி நிற்க,உன்னை எப்படி சமாதானம் பண்ணனுமென்று எனக்கு தெரியும்டி மாப்பு என்றவர், கண்ணனின் இடுப்பில் கிச்சு கிச்சு மூட்ட, டேய் டேய் என்ற கண்ணனோ, சிறு பிள்ளை போல துள்ளினார்".
" சில வருடங்களுக்கு பிறகு தந்தையை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த ரியா, கண்ணனின் சத்தத்தில் நிகழ்விற்கு வந்தவள், எதுவும் சொல்லாமல் வீட்டினுள்ளே சென்று விட, ஆதிராவும் தோழியின் பின்னாடி சென்றாள்".
" கபி என்று மருமகனை நோக்கி தேவராஜ் கைகளை நீட்ட,தனது தாய்மாமனை கட்டிக்கொண்டான்".
" எப்படி கண்ணா இருக்கேயென்க, நல்லா இருக்கேன் மாமா என்றவனிடம், வாழ்த்துக்கள் கண்ணா என்றார்".
" அவர் சொல்லும் வாழ்த்துக்கான காரணத்தை புரிந்தவன், மகிழ்ச்சி மாமா என்க,இருவரையும் பார்த்த கண்ணன், மாமனுக்கும் மருமகனுக்கும் அப்படி என்ன ரகசிய வாழ்த்தென்றார்".
" ஹாஹாஹாஹா என்று சிரித்த தேவராஜ், அடேய் கண்ணா என் மருமகன், இனி வெறும் கபிலன் இல்லைடா, கபிலன் கண்ணன் ஐபிஎஸ் என்கவும், எதேயென்று தேவகியும் கண்ணனும் அதிர்ந்தனர்!!".
" என்ன கண்ணா, இன்னும் விஷயத்தை நீ சொல்லலையா?, இல்லை மாமா".
" அடேய் என்னடா இங்கு நடக்குதென்று கண்ணன் முறைக்க, வர திங்கள் கிழமை ஹைதரபாத் போகணும் டா".
டிரைனிங் சென்டர் அங்கு தான். ரெண்டு நாளைக்கு முன்பு தானே எக்ஸாம் ரிசல்ட் வந்தது, என்ன தேவா சொல்லுற?.. ".
" உன் மருமகன் இதுவரை வாயை திறக்கவில்லையேனு கண்ணன் சொல்ல,அதான் நான் சொல்லிட்டேனேடா".
" ஏண்டா, நானே எட்டு வருஷம் கழித்து இப்போ தான் வந்துருக்கேன். வீட்டுக்குள்ளே விடாமல், இப்படியே வாசலில் நிற்க வைத்து பேசி அனுப்பிடுவீங்க போல?".
" அய்யோ அண்ணா... வா வா என்று தனது அண்ணனின் கையை பிடித்துக்கொண்டு வீட்டின் உள்ளே சென்றார்".
" எட்டு வருடங்களுக்கு முன்னர் பார்த்த வீடு என்றாலும், இன்னும் அதே அழகு மாறாமலிருந்தது".
"ஹாலில் உட்கார்ந்தவர், உன் மருமகள் கோச்சிக்கிட்டு போய்ட்டாள். நான் போய் பேசிட்டு வரேனென்று மகளின் அறைக்குச் சென்றார்".
" தனது அறையின் ஜன்னல் வழியாக, தூரத்தில் தெரியும் பசுவை பார்த்துக்கொண்டிருந்த ரியா, நமக்கு மட்டும் அம்மா இல்லாமல் போய்விட்டதேயென்று கண் கலங்கினாள்".
" தோழியின் மனநிலையை அறிந்த ஆதிரா எதுவும் பேசாமல் அவளின் தோளை தட்டிக்கொடுத்து கொண்டிருந்தாள்".
" அப்பொழுது, கதவு தட்டும் சத்தம் கேட்டு ஆதிரா வாசல் பக்கம் பார்க்க, தேவராஜ் தான் அங்கு நின்று கொண்டிருக்க, உள்ளே வாங்க மாமா".
" நல்லா இருக்கீங்களா மாமா என்க, நல்லா இருக்கேன் ஆதி கண்ணு, அங்கு சுந்தர், மேகலா நல்லா இருக்காங்களாயென்று தேவராஜ் கேட்க, நல்லா இருக்காங்க மாமா".
"மகளை கண்ணை காட்டி தேவராஜ் கேட்க, ம்ம் என்று ஆதிரா தலையசைக்க, ரியா கண்ணம்மா என்று தந்தையின் அழைப்பில் திரும்பி பார்த்தவளின் கண்களிலிருந்து வந்த கண்ணீரை கண்டவர், பதறிப்போய் மகளின் கண்ணை துடைத்தார்".
" அப்பா இங்க வரக்கூடாதென்று எண்ணம் இல்லைடா. அதான் தினமும் உன்கிட்ட வீடியோகாலில் பேசுறேனேடா என்றவர், நாம நிலையான இடத்தை தக்க வைக்கணுமென்றால், ஓட்டத்தை நிறுத்தக்கூடாது".
" இது நான் சொல்லி தான் உனக்கு புரியணுமாயென மகளிடம் கேட்க, இல்லைப்பா என்றாள்".
" பிறகு என்ன, என் கண்ணம்மாவிற்கு கோபம் என்றவர், ரெண்டு பேரும் எக்ஸாம் எப்படி பண்ணியிருக்கிறீங்க?, நல்லா பண்ணியிருக்கிறோம் என்றனர்".
" அப்புறம்,நிச்சயதார்த்த பொண்ணு என்ன ஆதி கண்ணா சொல்லுதென்று தேவராஜ் கேட்க, அவ எங்க மாமா வாயை திறக்கிறாள்?".
" கண்ணம்மா, கபிலனை பற்றி நான் சொல்லி தான் உனக்கு தெரிய வேண்டுமென்று அவசியமில்லை. என் தங்கச்சி மகன் என்பதை விட, அவன் ஒரு நல்ல மனிதநேயம் கொண்ட மனிதன்".
" அவனுக்கு உன்னை கட்டி வைக்கிறதுல எனக்கு பரம சந்தோஷம்.நீ பிறந்த அன்னைக்கே கபிலனுக்கு நீ தானென்று, என்னோட அப்பா அம்மா சொன்னாங்க".
" உன் அம்மா அதைக்கேட்டு ரொம்ப சந்தோஷப்பட்டாள். அவளுக்கு இங்க விளையாட்டு பிள்ளை, நண்பன் எல்லாமே கபிலன் தான்".
"நான் தான் என்ன பாவம் செய்தேனோ தெரியவில்லை, அவங்க கூட இருக்க வழியில்லாமல் போய்விட்டதென்று சொல்லும் போதே, தேவராஜ் கண்கள் கலங்கியது".
" அப்பா- மாமாயென்று ரியாவும், ஆதிராவும் இரண்டு பக்கம் அவரின் கையை பிடித்தவாறு தோளில் சாய்ந்து கொண்டனர்".
" பெருமூச்செடுத்து, தன்னை ஆசுவாசி படுத்திக் கொண்ட தேவராஜ், பர்சேசிங் எல்லாம் முடிஞ்சிடுச்சாடா என்க, ஆச்சு மாமாயென்றாள்".
" அது இருக்கட்டும்,முதல்ல எங்க ரெண்டு பேருக்கும் என்ன வாங்கிட்டு வந்திருக்கீங்க?,அதை சொல்லுங்கப்பா என்று ரியா கேட்க, வந்த அவசரத்தில் ஒன்னும் வாங்கவில்லைடா கண்ணம்மா".
"ஆஹான்.... நம்பிட்டோம்பா என்றவள், சரி வாங்கப்பா, வாங்கியதை எல்லாம் காண்பிக்கிறேன் என்கவும்,இருவரின் தோள் மேல் அணைத்துக் கொண்டு
மாடிப்படியிலிருந்து கீழே இறங்கி வந்தார்".
" மூவரும் வருவதை பார்த்தவர்கள், என்ன தேவா சமாதானம் தானேனு கண்ணன் கேட்க, பார்த்தா தெரியலையேடா என்றவாறு,அங்கிருந்த சூட்கேஸ்களை பார்த்தவர், ரியா- ஆதி, உங்க இருவருக்கும் கிரின் புளு ஸ்டிக்கர் போட்ட சூட்கேஸ்".
" யாருக்கு எது புடிக்கிதோ எடுத்துக் கொள்ளுங்கள்".
" மற்றது என் தங்கச்சி, கண்ணாக்கு, இன்னொரு சூட்கேஸை காட்டி, தேவகி அதில் இருப்பதை எடுத்து பாரு என்றார்".
" அண்ணா முதல்ல ப்ரஷ் ஆகிட்டு வா, மற்றதை பிறகு பேசிக்கலாமென்க, சரிடா கண்ணம்மாயென்று, கீழே இருக்கும் தனது அறைக்குள் சென்றார்".
"தேவா வருவதற்குள் சாப்பாடு ஏற்பாடு பண்ண சொல்லுமாயென்று கண்ணன் சொல்ல, நடந்துகிட்டு தான் இருக்குங்க.இன்னும் பத்து நிமிஷத்தில் ரெடியாகிவிடுமென்று மலர் சொல்லுச்சு என்கவும்.சரிமா என்றார்".
திருச்சூர்:
" ஆது உன்கிட்ட ஒரு விஷயத்தை சொல்லாமல் விட்டுட்டேன்டானு ருத்ரன் சொல்ல, அப்படியானு அதிர்ச்சியாய் ஆது கேட்க, ஆமாடா".அஞ்சு வருஷமா உன்கிட்ட ஒரு விஷயத்தை சொல்லாமல் இருந்துட்டேன்டா என்றான்".
" என்னடா சொல்ற?".
"என்ன பெரிய பெரிய குண்டு எல்லாம் போடுற?,அப்படி என்ன விஷயம் என்கிட்ட மறைக்கும் அளவுக்கு?,சொல்லித் தொலைடா".
" அது வந்து அது வந்து என்று ருத்ரன் பேச்சை இழுக்க,அதான் வந்து தொலைஞ்சிட்டோமே".
"ஆள் இல்லாத இடத்து கிட்ட கூப்பிட்டு வந்திருக்கிறேன். இப்பையாவது என்ன நடந்துச்சுன்னு சொல்லி தொலைடா. எனக்கு மண்டையே வெடிச்சிடும் போலிருக்கென்று, தனது தலைமுடியை கலைத்து விட்டுக் கொண்டே ஆது சொன்னான்".
" எனக்கு கல்யாணம் ஆகிட்டுடா என்று ருத்ரன் சொல்ல,ஓ அப்படியா என்றவன், பின்னர் சுதாரித்து, எதேஏஏஏஏஏஏஏஏஏ கல்யாணம் ஆகிட்டாஆஆ!!".
" என்னடா எருமை சொல்லுற?, தண்ணி அடிச்சிருக்கியா?, எங்கே வாயை ஊதி காட்டு பார்க்குமென்று, ருத்ரனின் முகத்தை திருப்பி விட்டு ஆது கேட்க, நான் சொல்லுறது உண்மை தான் மச்சான்".
"அப்புறம்டா மச்சான், பொண்ணு யாருனு சொன்னால், உனக்கு ஷாக் தான் என்க,தனது புருவத்தை சுருக்கிய ஆது, ஒருவேளை அந்த அடங்காப்பிடாரியா இருப்பாளா?, இல்லை வேறு யாராவது இருக்குமா?".
" அந்த ஜான்சிராணி தான் பெரிய இவளாட்டம் சவால் விட்டு போனாளே, அவளா இருக்க வாய்ப்பு ரொம்ப கம்மி தான்".
" ஒரு வேளை எழுத்த வீட்டில் இருக்கும் ஆல்பர்ட் மவள் ஏஞ்சலா இருப்பாளா?, ச்சை ச்சை அவள் அப்பன் பிரேயர் பண்ணியே சாவடிச்சிடுவார்னு இவனுக்கு தெரியும்".
" பிறகு யாரா இருப்பாள்?, அதும் நமக்கு தெரிஞ்ச பொண்ணுனு சொல்லுறானே இந்த தேங்கா மண்டையன்னு,தனக்குள்ளே கேள்வி கேட்டுக்கொண்டான்".
" பின்னர் நினைவு வந்து டேய் டேய் எனக்கு யாருனு தெரிஞ்சிட்டென்று ஆது கத்த, கண்டுபிடிச்சிட்டானா என்று உள்ளுக்குள் அதிர்ந்து போன ருத்ரன், ஓஓஓ யாரு? என்றான்".
" நம்ம கடைக்கும் வரும் மினிஸ்டர் பொண்ணு அந்த மேனாமினுக்கி பவித்ரா தானே என்க, நண்பன் சொன்ன ஆளை நினைத்த ருத்ரனோ கொலை வெறியில் முறைத்து பார்த்தான்".
" ஏன் இவ்வளவு பாசமான லுக்கு மச்சி".
" அவள் இல்லையா என்க, நோ என்று ருத்ரன் சொல்ல, பிறகு யாருனு தனது மண்டையில் தட்டிக்கொண்டிருந்தவன், டேய் டேய் நம்ப கூட கனடாவில் படிச்ச மெர்சி தானே?, சுத்தமென்று தலையில் அடித்துக்கொண்ட ருத்ரன், அவள் இல்லைடா".
" வேற எவள்னு நீயே சொல்லி தொலை".
" இதுக்கு மேல யோசித்தால் எனக்கு மண்டை காண்டு ஏறிடும்".
" ஆதுவை பார்த்து சிரித்த ருத்ரன், ஆர்கலியென்றான்".
" என்னாகலிஈஈஈ என்க,ம்ம் ஆர்கலி என்று மீண்டும் சொன்னான்".
" ஆர்கலியாஆஆஆஆ, நமக்கு தெரிந்து இந்த பேரில் யாரு ஆர்கலினு யோசனை பண்ணி பார்க்க, ஆதுக்கு அந்த பெயருக்கு சொந்தக்காரியானவள் நினைவிற்கு வரவேயில்லை".
" அடேய் இந்த பேர் கேள்வி பட்ட போலவே இல்லையேடா?, ஒழுங்கு மரியாதையா நீயே யார்னு சொல்லு வீர்".