• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
திருச்சூர்-பாண்டியன் பேலஸ்:

"டெல்லியில் மீட்டிங்கை முடித்த வசு, அன்று மாலையில் கிடைத்த ஃப்ளைட்டிலே கிளம்பி வீட்டிற்கு வருவதற்கு, இரவு ஒன்பது மணியானது".


"காரில் வரும் போது, அண்ணானு வசு கூப்பிட, சொல்லுடா என்றவாறு மைக்கேல் கார் ஓட்டிக்கொண்டிருந்தார்".

" நம்ப வீட்டிற்கு வந்தவர்களுக்கும், அம்மா- அப்பாவிற்கும் ஏதோ சம்பந்தம் இருக்குணா".

" அந்த அம்மா,நம்ப அம்மா போலவே இருக்காங்களே, கவனிச்சீங்களாணா?,ஓஓ சரியா பாக்கலைடாமா".

" மைக்கேல் சொன்னதை கேட்ட வசுவோ, சரிணா என்று பின்னர் பொதுவான விஷயத்தை பேசிக்கொண்டே வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்".

"காரிலிருந்து இருவரும் இறங்கி வீட்டின் உள்ளே செல்ல, அங்கே சைலஜா பாட்டி அழுது கொண்டிருக்க, வேலையாட்கள் அவரை சமாதானம் பண்ணிக்கொண்டிருப்பது தெரிந்தது".

" என்னாச்சிமா என்றவாறு இருவரும் வர பிள்ளைகளின் குரலை கேட்டவர், நம்ப அம்முவை காணுமென்று அழுதுகொண்டே சொன்னார்".

"அதைக்கேட்ட இருவரும் என்னம்மா சொல்லுறீங்களென்று,அதிர்ந்து போனார்கள்".

" அந்த நேரம் உள்ளே வந்தவர்களை பார்த்த சைலஜா பாட்டி, என்னங்க அம்மு கிடைச்சிட்டாளானு பதறி எழுந்து போய் கேட்க,இல்லம்மா என்ற சுந்தரபாண்டியனோ தலையை கீழே தொங்க போட்டுக்கொண்டார்".

"ச்சூஊஊஊஊ என்ற ருத்ரன், தாத்தா. அடுத்து எவனையாவது ஏமாற்ற போயிருப்பாள். அவளுக்காக எதுக்கு இப்படி வருத்தப்படுறீங்க?.

" நல்ல வழியில் பிறந்திருந்து, அப்பா அம்மா கிட்ட வளர்ந்திருந்தால், அவளும் நல்ல பெண்ணா இருந்திருப்பாள்".

"ஆசிரமத்தில் வளர்ந்த பிச்சைக்காரி, பின்ன அவளை பெற்றவள் போல தானென்று சொல்ல வந்தவனின் கன்னத்தில், மாறி மாறி அறைந்த வசுந்தரா, இன்னொரு வார்த்தை ஆர்கலியை பற்றி தப்பா பேசினாய், சுட்டு கொன்றுவிடுவேனென்று, தனது இடுப்பில் இருந்த கன் எடுத்து, ருத்ரனின் நெற்றியில் வைத்தார்".

" அவரின் செயலை பார்த்து, வசுஊஊஊ என்று மற்றவர்கள் அலறினர்".

ருத்ரனோ வசுந்தராவிடமிருந்து இப்படி ஒரு அதிரடி செயலை, சிறிதும் எதிர் பார்க்கவில்லை".

" மேடம் அவளுக்கு தாலி கட்டிய புருஷன் நான் சொல்லுறேன், அவள் நடத்தை கெட்டவள்".

" புருஷன்காரன் நான் இலங்கையில் இருக்கும் போது, இங்கே இருப்பவள் கர்பமாக இருக்கிறாலென்றாள்?என்ன அர்த்தமென்க, ருத்ரன் சொல்லியதை கேட்டு, இப்போ மற்றவர்களோடு வசுந்தராவும் அதிர்ந்து போனார்".

" வசுவோ எதுவும் சொல்ல முடியாத அதிர்ச்சியில் இருக்க,அவர் கையிலிருந்த கன் கீழே விழுந்தது".

" மிஸ்டர் நீங்க சொல்வதென்று பேச்சில் தடுமாறிய வசுவை பார்த்து கசப்பாய் சிரித்தவன், தனது பேண்ட் பாக்கெட்டிலிருந்த ஃபோனை எடுத்தவன், அதில் அவர்கள் திருமணத்தின் போது எடுத்த ஃபோட்டோக்களை காட்டினான்".

" அதை பார்த்தவர்களுக்கு ஆர்கலியின் புருஷன் இவன் தான் என்பது புரிந்தாலும், அவளை நடத்தை கெட்டவள் என்று சொல்வதை தான்,அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை".

" தம்பி உங்கள் பெயரென்று சுந்தரபாண்டியன் கேட்க, ருத்ர வீர சிம்ஹன் என்றான்".

" பெயரைக்கேட்ட சைலஜா பாட்டி, நம்ப குடும்பப்பேரை வைத்திருக்கிறானே. இவனுக்கும் அக்கா- மாமாவிற்கும் எப்படி உறவென்று? யோசனையானார்".

"அப்பொழுது, வசுவின் செல்ஃபோனிற்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்க, கையில் இருந்த ஃபோனில் பெயரை பார்த்தவர், யாரு என்று யோசனையானார்".

" முதல் அழைப்பு முழுவதும் கட் ஆக, மீண்டும் அதே நம்பரில் இருந்து கால் வர, அட்டென் பண்ணியவர் ஹலோ என்று சொல்ல, அந்த புறமிருந்து ஹலோ வசுந்தரா சுந்தரபாண்டியன் மேடமா? என்று கேட்கப்பட்டது"

" எஸ் ... நான் தான் சொல்லுங்களென்க, ஹேய் வசு.. நான் தேவராஜ் பேசுறேனென்று சொன்னார்".

" தேவராஜ் என்ற பெயரை கேட்டு சில நொடி யோசனையான வசு, பின்னர் ஞாபகம் வர, தேவாஆஆஆ என்க, நானே தான் மா".

" பிரியா நல்லா இருக்காளா?, எத்தனை குழைந்தைகள்?, எப்படி என் நம்பர் கிடைத்ததென்று வசு கேள்விகளை அடுக்க, ம்ம் பிரியா ரொம்ப நல்லா இருக்காள்".

" ஒரு பொண்ணு மெடிசின் படிக்கிறாள் என்றவர், உனக்கு வசுனு ஆர்வமாக கேட்க, எனக்கா தேவா.... ".

" உனக்கு தெரிஞ்சிருக்குமே என்ற பதிலே தேவாவிற்கு உண்மையை புரிய வைக்க, அப்போ.. அப்போ என்று தேவா தடுமாற,எஸ், நான் இன்னும் கல்யாணம் பண்ணிக்கவில்லை தேவா".

"அதைக்கேட்ட தேவா, ஏய் வசு.... உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் என்கும் போதே, கால் கட்டாகியது".

" மீண்டும் அந்த நம்பருக்கு வசு டிரைப் பண்ணி பார்க்க,நீங்கள் டயல் செய்த எண்ணை தற்பொழுது தொடர்பு கொள்ள இயலவில்லை, தயவு செய்து சிறிது நேரம் கழித்து மீண்டும் தொடர்பு கொள்ளுங்கள் என்று கம்ப்யூட்டர் வாய்ஸ் கேட்டது".

" கண்ணை மூடி தன்னை நிதானப்படுத்திய வசு, அம்மா என்ன நடந்துச்சென்று தெளிவாக சொல்லுங்களென்றார்".

"மிஸ்டர் ருத்ரன், நீங்கள் நினைப்பது போல,என்னால் ஆர்கலியை தவறாக நினைக்க முடியாது".

" அவள் அப்படிப்பட்ட பெண்ணாக இருக்க சிறிதும் வாய்ப்பில்லைனு வசு சொல்ல, ஓகே பைன் மேம்".

" அவளை பற்றி பேச எனக்கு விருப்பம் இல்லை, நான் ஹாஸ்பிட்டலுக்கு கிளம்புகிறேனென்று சொல்லியவன், தாத்தா நான் கார் எடுத்துக் கொண்டு போகட்டுமா? என்க,சுந்தரபாண்டியனோ எடுத்துக்கப்பா என்றார்".

" ஓகே தாத்தா என்றவாறு, ருத்ரன் அங்கிருந்து சென்றான்".

" ருத்ரன் சென்று விட்டானென்று உறுதியாக தெரிந்த பின்னர், தனது அப்பாவின் முன்பு வந்து வசு நிற்க,அவரின் மகளின் முகத்தை பார்க்க முடியவில்லை".

"ஏன் பா?, ஏன்?... இப்படி பண்ணுனீங்கள்?, உங்களுக்கு கௌரவ பிரச்சினையா இருந்திருந்தால், என்னை வீட்டை விட்டு அனுப்பியிருக்கலாம்".

"எங்கோ ஒரு மூலையில் நானும், என் பொண்ணும் உயிரோட இருந்திருப்போமே, இருபத்திரெண்டு வருஷம் கழித்து இப்போ தான் என் பொண்ணு கிடைத்தாள்.இப்போ மீண்டும் காணாமல் போய்விட்டாளேனு கதறி அழுதார்".

" வசுவின் வேதனையை கண்டு, பெற்றோர்களால் எதுவும் சொல்ல முடியவில்லை".

" அம்மாடி வசு, உன் பொண்ணு இந்த உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் உன் கிட்ட ஒப்படைக்க வேண்டியது எனது பொறுப்பென்று மைக்கேல் சொல்ல, எப்படிணா? சாத்தியம்".

" எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை. வீட்டில் இத்தனை பேர் இருக்கும் போது, அம்மு வெளியே போனதை யாரும் பார்க்கவில்லையானு வசு கேட்க, அப்பொழுது, வசு கண்ணு என்று சொல்லியவாரு வீட்டில் வேலை செய்யும் நடுத்தர வயது பெண்மணி ஒருவர் அங்கு வந்தார்".

" சொல்லுங்க பெரியம்மா என்க, பாப்பா போனதை நான் பார்த்தேனென்றார்".

"என்னம்மா சொல்லுறீங்களென்க, ஆமா மா. காலையில் ஒரு பத்து மணி இருக்கும். ஒரு தம்பி செகப்பா, தாடி வச்சிக்கிட்டு கார்ல வந்துச்சி".

" நான் அப்போ தோட்டத்து செடிக்கு தண்ணி ஊற்றிக் கொண்டு இருந்தேன். நேரா உள்ளே போனது, கொஞ்ச நேரம் கழித்து அந்த பையன் வெளியே போய்ட்டு".

"பிறகு நான் செடி நட்டு கிட்டு இருக்கும் போது, பாப்பாவும் வேலைக்கு போய்டு வரேன் பாட்டினு சொல்லிட்டு தான் போச்சு".

" மதியம் என்னோட அக்கா பொண்ணுக்கு மேலுக்கு முடியலைனு, நம்ப ஊட்டுக்கு போனு வந்துச்சினு நான் போய்ட்டேன் கண்ணு".

" இப்போ தான் வீட்டுக்கு வந்தேன்.வந்த பிறகு தான் பாப்பாவை காணும்னு சொல்லிக்கிட்டாங்கள்".

" சரிங்க பெரியம்மா என்றவர், நீங்க போய் சாப்பிட்டு படுங்கம்மானு அவரை அனுப்பி வைத்த வசு, அப்போ ருத்ரன் தான் வந்துருக்கணும்".

" இருவருக்குள் ஏதோ பிரச்சினை நடந்துருக்கு. அதன் பிறகு தான் அம்மு இங்கேயிருந்து போயிருக்காளென்க, மற்ற மூவரும் வசுவின் வார்த்தைகளை கேட்டு ஆமாம், அப்படி தான் நடந்திருக்கணுமென்றனர்".

ஹைதராபாத்:

"ஹேய் நாங்களும் தமிழ்நாடு தான் டா என்க,அப்படியா என்றவன், அடச்சை இவ்வளவு நேரம் அந்த வெள்ளக்கார பயல் இங்கிலீஷில் பேசி, வேஸ்ட் பண்ணிட்டோமேனு விஷால் சொல்ல, அதைக்கேட்டு மற்ற இருவரும் சிரித்தனர்".

" அப்பொழுது அவர்கள் ரூம் கதவு தட்டும் சத்தம் கேட்டு பார்க்க, பாய்ஸ் உங்களை சென்டாப் பண்ண வந்தவங்களை போய் பார்த்து பேசிட்டு வாங்களென்று ஆபிசர் ஒருவர் சொல்லிச்சென்றார்".

" ஆமாடா, அவங்களை மறந்து விட்டோமேயென்று பேசிக்கொண்டே மூவரும் கீழே இறங்கி வந்தவர்கள், தங்கள் குடும்பத்தினரை தேடி அங்கே சென்றனர்".

"சத்தியமூர்த்தி யாருடனோ சிரித்து பேசிக்கொண்டிருப்பதை பார்த்த வெற்றி, யாரு கூட அப்பா இப்படி ஜாலியா பேசிக்கொண்டு இருக்காங்கனு யோசனையாக போக, கபிலனும் தன் வீட்டினரை தேடிக்கொண்டே வந்தான்".

" தூரத்தில் வந்து கொண்டிருந்த மகனை பார்த்தவர், என்னோட பையன் வெற்றி என்று அவரிடம் பேசிக் கொண்டிருந்தவரிடம் சொல்ல, அவரும் திரும்பி பார்க்க, அங்கு கபிலன் தேடுவது ஒரு பக்கம் தெரிந்தது".

"கபிலன் என்று அவர் குரல் கொடுக்க, தனது மாமாவின் குரல் வந்த திசையில் திரும்பி பார்த்தவனும் அங்கு வந்தான்".

" தேவா,இது என் பையன் வெற்றிவேலென்க, ஹாய் அங்கிளென்று வெற்றியும் தலையசைத்தான்".

" கபிலனும் அங்கு வர, சத்யா, இது நம்ப தேவகி பையனென்கவும் என்னாஆஆஆ என்று சத்தியமூர்த்தி அதிர்ந்தார்".

" கபிலனுக்கும், வெற்றிக்கும் அங்கு நடப்பது எதுவும் புரியவில்லை".

"அண்ணா இவங்க ரெண்டு பேரும் எதுவும் புரியாமல் குழம்பி நிக்குறாங்களென்று வள்ளி சொல்ல, அட ஆமாமென்று நண்பர்கள் சிரித்தனர்".

" பின்னர், சத்தியமூர்த்தி தனது மகனிடம் இது தேவா என்கிற தேவ்ராஜ், என் குளோஸ் ப்ரண்ட். காலேஜ்ல ஒன்னா தான் படிச்சோம்.ரொம்ப வருஷம் கழித்து இப்போ தான் மீட் பண்ணிக்கிட்டோமென்று சொன்னவர், கபிலன் உங்களை சின்ன வயதில் பார்த்திருக்கிறேன்".

" உங்களுக்கு கோயில்ல மொட்டை போடுவதற்காக, எங்களையும் தேவா கூப்பிட்டிருந்தான்".

"அப்போ நாலு வயசு இருக்குமா தேவாயென்க,ஆமா சத்யானு தேவராஜ் சிரித்தார்".

"விஷாலும் போனில் பேசி விட்டு அங்கு வர, தேவா இவன் விஷால்,நம்மை போல வெற்றியும், இவனுமென்றார்".

" பின்னர் அனைவரும் ஒன்றாக ஹோட்டலுக்கு சென்று, மதிய உணவை சாப்பிட்டு முடித்தவர்கள்,அங்கிருந்து கிளம்பினார்கள்".

" வள்ளியம்மை தான் வெற்றியின் கன்னத்தை தடவி அழுது கொண்டிருந்தார்.அம்மா உங்க குழந்தையை நாங்க கண்ணும்,கருத்துமா பத்திரமா பார்த்துக்குறோம்".

"நீங்க கண் கலங்க வேண்டாமென்று விஷால் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல, அவன் சொன்ன மாடுலேஷனை கேட்டு வள்ளியம்மை சிரித்து விட்டார்".
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
சதூர்வேதமங்கலம்:

" சதூர்வேதமங்கலம் வந்துடுச்சி இறங்குங்களென்று, நடத்துனர் விசில் அடித்து சொல்ல, ஜன்னலோரம் உட்கார்ந்திருந்தவளோ தனது அருகில் தூங்கிக் கொண்டிருந்தவரிடம், பாட்டி வாங்களென்றவாறு சீட்டிலிருந்து எழுந்த ஆர்கலியோ படியிலிறங்கி கீழே வந்தவள், பார்த்து வாங்க பாட்டியென்றாள்".


" இருவரும் பஸ் ஸ்டேண்டிற்குள்ளிருந்து வெளியே வர,அங்கு ஆட்டோக்கள் வரிசையாக நிற்பதை பார்த்தவள், ஆட்டோ என்று குரல் கொடுத்தாள்".

" முதலாவதாக நின்ற ஆட்டோக்காரரும் அவர்களிடம் வந்தவர், சொல்லுங்கம்மா, எங்கே போகணுமென்க,அட்ரஸை காட்ட, இங்கே போகணுமென்றாள்".

"உட்காருங்கம்மா என்றார். பின்னர் இருவரும் ஏறியதும், ஆட்டோவும் அங்கிருந்து புறப்பட்டது".

" பத்து நிமிட ஆட்டோ பயணத்தில், அந்த பெரிய வீட்டின் முன்பு வந்து ஆட்டோவை நிறுத்தியவர், நீங்க சொன்ன அட்ரஸ் இதான்மா என்றார்".

" சரிங்க அண்ணா என்றவள், பாட்டி, வாங்களென்று ஆட்டோவிலிருந்து கீழே இறங்கியவள், எவ்வளவுணா என்க".

" எழுவது ரூபாய்மா என்றவர், தங்கச்சி இது என்னுடைய கார்டு. எப்போ ஆட்டோ வேண்டுமானாலும் கூப்பிடுங்களென்று தனது கார்டை நீட்ட,அதை வாங்கியவள் சரிங்கண்ணா என்க,ஆட்டோவும் அங்கிருந்து புறப்பட்டது".

"அங்கிருந்த பெரிய இரும்பு கேட்டை திறந்தவள்,பாட்டியோடு உள்ளே போனாள்".

" கதவு திறக்கும் சத்தம் கேட்டு, அங்கு வேலை செய்து கொண்டிருந்த வேலையாள், வாசல் பக்கம் பார்க்க,ஆர்கலியும், பாட்டியும் வருவது தெரிந்தது".

"அவரிடம் வந்தவள்,அண்ணா, கண்ணன் சாரை பார்க்கணும்".

" அப்படியாமா, திண்ணையில் உட்காருங்க, நான் போய் சொல்லிட்டு வருகிறேனென்று உள்ளே போனவர், சிறிது நிமிடத்தில் திரும்பி வந்து, அய்யா வரச்சொல்லுறாங்க, உள்ளே போங்கம்மா".

"சரிங்கண்ணா என்றபடியே வீட்டினுள்ளே செல்ல,அங்கு ஹாலில் இருந்த கண்ணனையும், தேவகியையும் பார்த்து, வணக்கம் சார், வணக்கம் மேடமென்றாள்".

" வணக்கம்மா என்றவர், உட்காருங்களென்று அங்கிருந்த சோபாவை காட்டியவர், தேவகி குடிக்க எதாவது கொண்டு வாம்மா என்க, இதோங்களென்று எழுந்து உள்ளே போனார்".

"சொல்லுங்கம்மா, யார் நீங்கள்?, என்ன விஷயமாக என்னை பார்க்க வந்துருக்கீங்க?,சார், நான் ஆர்கலி சத்தியமூர்த்தி, இவங்க என்னுடைய பாட்டி".பேப்பரில், உங்க ஸ்கூலுக்கு டீச்சர் தேவையென்று விளம்பரம் பார்த்தேன், அது விஷயமாக தான் வந்தேனென்றாள்".

" ஆமா மா நான் தான் கொடுத்தேன் என்றவரிடம், சார் இது என்னுடைய சர்டிபிகேடென்று, தன்னிடம் உள்ள ஃபைலை அவரின் முன்பு போய் நீட்ட, அதை வாங்கி படித்து பார்த்தார்".

" அப்பொழுது இருவருக்கும் டீ எடுத்து வந்த தேவகி, முதல்ல இதை குடிங்களென்று சொல்ல, பாட்டிக்கு டீயை கொடுத்தவளோ, எனக்கு வேண்டாங்க மேடம்".

" ஏம்மா, நல்லா இருக்கும் குடியென கண்ணன் சொல்லி சிரிக்க, அய்யோ சார், அப்படிலாம் எதுவுமில்லை,நான் டீ குடிக்கிறதில்லை என்க,அச்சோ என்ற தேவிகா, இருமா பால் கொண்டு வரேனென்று செல்ல,அதுலாம் ஒன்னும் வேண்டாங்க மேடமென்றாள்".

"ரெடியா தான்மா இருக்கென்று உள்ளே போனவர், சூடாக இருந்த பாலில் ஹார்லிக்சை கலந்து எடுத்து வந்தவர், இந்தாம்மா என்று நீட்ட, தேங்க்யூ மேடமென்று வாங்கிக் கொண்டவள், ஒரு வாய் குடித்து விட்டு நன்றியோடு, எதிரில் இருந்த தேவிகாவை பார்க்க, ம்ம் குடிமாயென்று தலையை அசைத்தார்".

" தேவி, நம்ப ஸ்கூல் விளம்பரத்தை பார்த்து வந்துருக்காங்களென்று கையிலிருந்த ஃபைலை மனைவியிடம் நீட்ட,அதை வாங்கி படித்த தேவிகாவிற்கு, திருப்தியாக இருந்தது".

" சரிம்மா, நீங்க மண்டே வந்து ஜாய்ன் பண்ணிக்கீங்க.வீட்டிலிருந்து பத்து நிமிடம் நடந்து போற தூரத்தில் தான் ஸ்கூல் இருக்கு".

" எந்த நேரத்தில், என்ன உதவி வேண்டுமென்றாலும், தயங்காமல் கேளுங்கம்மானு கண்ணன் சொல்ல, வேலை கிடைத்த சந்தோஷத்தில், ஆர்கலிக்கு கண்கள் கலங்கியது".

" ரொம்ப நன்றிங்க சாரஎன்றாள். அப்பொழுது, சங்கரூ... சங்கருனு கண்ணன் குரல் கொடுக்க, இதோன்ணா என்றவாறு நடுத்தர வயது ஆண் ஒருவர் அங்கு வந்தார்".

" இவங்க தான் நம்ப ஸ்கூலிற்கு புதிதாக வந்திருக்கும் டீச்சர்.நீ வீட்டை கூப்பிட்டு போய் காட்டு.அப்படியே, அவங்களுக்கு தேவையானதை செய்து கொடுடா,சரிங்கண்ணா என்றவர், டீச்சர் போகலாமாயென்று ஆர்கலியிடம் கேட்க, ஐயோ அண்ணா".தங்கச்சியென்றே சொல்லுங்க,ஒன்னும் பிரச்சினை இல்லையென்றாள்".

" சரிங்க சார். மண்டே நான் ஜாயின் பண்ணிக்குறேன் என்றவள், வரேன் சார்,வரேன் மேடமென்று சொல்லி அங்கிருந்து வெளியே செல்ல, சங்கர் அவளுக்கு முன்பு நடந்து சென்றார்".

"தங்கச்சிமா, எல்லாம் நம்ப மக்கள் தான்.யார் கிட்ட எந்த உதவி கேட்டாலும்,உனக்கு செஞ்சு தருவாங்க".
பயமில்லாமல் இருக்கலாமென்று சொல்லிக்கொண்டே, அங்கிருந்த இரும்பு கதவின் பூட்டை திறந்த சங்கர், பார்த்து வாங்களென்றார்".

"சிறிய பூந்தோட்டத்தோடு வீடு பார்க்க அழகாய் இருந்தது".

"அங்கே தாழ்வாரத்தின் மேலே உள்ள மரசட்டத்திலிருந்த சாவியை எடுத்து,வீட்டின் கதவை திறந்த சங்கர், தங்கச்சிமா, உள்ளே போய் வீட்டை பாருமா என்றவன்,ஆச்சி நீங்களும் போய் பாருங்களென்றான்".

"ஒரு பெட்ரூம், ஹால் கிச்சனோடு, வீடு மிகவும் சுத்தமாக இருந்தது.கிச்சனில் சமைக்க அடுப்பும், சிலிண்டரும் தயாராகவே இருந்தது".

" இது நம்ப சின்ன தம்பியோட ஏற்பாடு தான் தங்கச்சிமா, அப்புறம், சமைக்க பாத்திரங்களும், அரைக்க கிரைண்டர், மிக்ஸிலாம், அந்த நாலாவது அறைக்குள்ளே இருக்கென்று கிச்சன் கபோர்டை காட்ட,அப்படியாணா என்றவள், அந்த கபோர்டை திறந்து பார்க்க,எல்லா பொருளும் இருந்தது".

" அத்தியாவசிய சாமான் மட்டும் தான் தங்கச்சிமா வாங்கணும். ஏன்னா அதை வாங்கி வச்சா கெட்டுப் போயிடுனு தம்பி சொல்லிடுச்சு.உனக்கு என்ன வேணும்னு சொல்லு தங்கச்சிமா, நான் போய் வாங்கிட்டு வரேன்".

"அண்ணா, கடை எங்க இருக்குன்னு சொல்லுங்க, நானும் வரேன்னு ஆர்கலி சொல்ல, தங்கச்சிமா பஸ் விட்டு இறங்குனீங்களே அங்க தான் போகணும்".

"பக்கத்திலேயே காய்கறி விளைய வைக்கிறாங்கள். தினமும் அவங்க எடுத்துட்டு வந்துருவாங்க, அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்".

"மளிகை ஜாமான் மட்டும் மாசத்துக்கு வாங்கி வச்சிக்கிறது நல்லது. இல்லன்னா யாராச்சும் டவுனுக்கு போனால், அவங்க கிட்ட சொன்னா கூட வாங்கிட்டு வந்து கொடுப்பாங்கம்மா".

சரிங்கண்ணா.அப்போ லிஸ்ட்டு எழுதி வைக்கிறேன். ஒன்னும் அவசரமில்லை. சாயந்திரம் போய் வாங்கிட்டு வாங்களென்க, இப்பவே மணி பாரு மூணாகுது. நீங்க காலையில சாப்பிட்ட போல தெரியலை".

"செத்த இருங்களென்று தனது இடுப்பிலிருந்த போனை எடுத்த சங்கர், மனைவிக்கு போன் பண்ணி, கருப்பாயி ரெண்டு பேர் சாப்பிடுற அளவுக்கு சோறு எடுத்துக்கிட்டு, நம்ம ஓட்டு வீட்டுக்கு வாயென்றவாறு போனை வைத்தார்".

நாயர் மருத்துவமனை:

"ஆதுவோ கிரிஜாவை பார்த்து அதிர்ந்ததை கண்ட சிம்ஹன் தாத்தா, கண்ணா, மற்றதை பிறகு பேசிக்கலாமென்கட,அவனோ தாத்தாவை முறைத்து பார்த்தான்".

"ஆதுவின் பார்வையை கண்டவர், கிரிஜா பாட்டியை கண்ணை காட்ட, ம்ம் என்றான்".

"பின்னர் கிரிஜாவும் சைலஜாவும் எதுவும் பேசிக்கொள்ளாமல், கையை மட்டும் பிடித்துக் கொண்டு கண் கலங்கினர்".

" மேலும் மனைவியை கவலை படுத்த வேண்டாமென்று நினைத்தவர், வீரா நீ போய் குளிச்சிட்டு வேர டிரஸ் போட்டு வா".

"போகும் போது ஆதுவையும் கூப்பிட்டு போ என்க, எவன் கூடயும் நான் போகவில்லையென்றான்".

"நேற்றிலிருந்து ஒரே டிரஸில் இருப்பதால், ருத்ரனும் கார் சாவியை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு போனவன் தான்,மணியோ இரவு பத்தாகின்றது, இன்னும் வந்த பாடில்லை".

" மாலையான பிறகு தான் கிரிஜா பாட்டியும், சுந்தரபாண்டியன் தாத்தாவும் வீட்டிற்கு கிளம்பி சென்றனர்".

" ஆதவனுக்கும் உள்ளுக்குள் நண்பனை பற்றி கவலை இருந்தாலும், வெளியே காட்டிக்கொள்ளாமல், கிரிஜா பாட்டியிடம் புது பிராஞ்ச் ஓப்பன் பண்ணிய பங்ஷனை பற்றி பேசிக்கொண்டிருந்தான்".

"மாத்திரையின் உதவியால் கிரிஜா பாட்டியும் தூங்கி விட, போர்வையை எடுத்து பாட்டிக்கு போர்த்தி விட்டவன், கதவை திறந்து வெளியே உட்கார்ந்திருந்த சிம்ஹன் தாத்தாவிடம் வந்தவன், இவன் குளிக்க வீட்டிற்கு போனானா?, இல்லை நிலாவுக்கு போனானா?".

" சரி... நான் போய் சாப்பிட எதாவது வாங்கி வரேனென்று ஆது சொல்ல, அதுலாம் ஒன்னும் வேண்டாமென்றார்".

" ஏன், கிரிக்கு பக்கத்தில் உனக்கு ஒரு பெட் ரெடி பண்ணனுமா?"

" காலையில் போன பேரன் இன்னும் ஹாஸ்பிட்டலுக்கு வராமல் இருக்கிறான்.என்ன ஆச்சோனு யோசனை பண்ணிக் கொண்டிருந்தார்".

திருச்சூர் பாண்டியன் பேலஸ்:

"இன்றோடு ஆர்கலி காணமல் போய், இரண்டு நாட்கள் ஆகிவிட்டது".

"வசுவும் தனக்கு தெரிந்த டிடெக்டிவ் ஏஜன்சியிடம் சொல்லி, ஆர்கலியை தேட சொல்லியிருந்தார்".

"அதிகாலையிலே கிளம்பி போன மைக்கேல், ஓய்ந்து போய் வீட்டிற்கு வர, இரவு பத்து மணியானது".

அண்ணா, எங்கேணா போனீங்கள்?.

"ஃபோனும் அட்டென் பண்ணலையென்று வசு கேட்க, இருடா என்று தன்னை ஆசுவாசப் படுத்துக்கொண்டவர், அம்முவை தேடி போனேன் டா".

"ஆர்கலி ஃபோட்டோவை காட்டி தேடி விசாரிக்கும் போது, திருச்சூருக்கு போற பஸ்ல ஏறும் போது பார்த்ததாக, நம்ப வீட்டு கடைசியில் இருக்கும் கடைகாரர் சொன்னார்".

" அதை நூல் புடிச்சிக்கிட்டு போய் விசாரிக்கும் போது, பாதி வழியில இறங்கினதா, கண்டக்டர் சொன்னார்".

" அவர் சொன்ன இடத்தில் போய் கேட்க, அங்கிருந்து ஷேர் ஆட்டோவில் ஏறி ரயில்வே ஸ்டேஷன் போக சொல்லியதாகவும், அவரும் ஸ்டேஷன்ல விட்டதாக ஆட்டோக்காரர் சொல்ல,அங்கிருக்கும் கடைகாரவங்க கிட்ட இந்த பொண்ணை பார்த்தீங்களானு கேட்கும் பொழுது, சென்னை போற டிரைன்ல ஏறினதா சொன்னாரு".

" எப்படி இந்த பொண்ணு தானென்று சொல்லுறீங்களென்று, அவர் கிட்ட நான் கேட்க,டிரைன் மூவ் ஆகிட்டதாகவும், அம்மு வேகமாக ஓடி போய் ஏறப்போக, கால் சிலிப்பாகி கீழே விழப்போறதை பார்த்து, போலீஸ்காரர் ஓடி வந்து பிடித்ததையும், பிறகு டிரைனில் ஏற்றி விட்டதாக சொன்னாங்களென்றார்".

" சென்னைக்கா என்று மூவரும் அதிர்ந்தனர்".

"இப்போ என்னணா பண்ணுறது?, கடவுள் ஏன் என்னை இப்படி சோதிக்குறான்? ".

" கடைசி வரை எனக்கு நிம்மதியே இருக்க கூடாதென்று முடிவு பண்ணிட்டானாயென்றவாறு வசு கதறி அழுதார்".

" மகளின் கண்ணீரை துடைக்க முடியாமல் பெற்றோர்கள் இருவரும் வேதனைப் பட்டனர்".

ஆர்கலி எங்கே...?
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top