Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
பொள்ளாச்சி:
" தனது மருமகன் சொன்னதைக் கேட்ட வள்ளியோ, வெற்றியை முறைத்து பார்க்க, ஆஹான் என்று சிரித்தான்".
" இங்க பாரு வள்ளி. அடிக்கடி என்னால வர முடியாது. போகிற இடத்தை பற்றி உனக்கே தெரியும். ட்ரைனிங் முடிஞ்சு ரெண்டு வருஷம் கழிச்சு தான் வருவேன்".
"அதுக்கு நடுவுல நிச்சயமா நான் வரமாட்டேன். இங்க நான் காலடி வைக்கும் போது போஸ்டிங்கோட தான் வருவேன் என்று வெற்றி சொல்ல, ரெண்டு வருஷம் எப்படி கண்ணா பார்க்காம இருக்க முடியுமென்று கண் கலங்கினார்".
" அட அழுமூஞ்சி, நீதான் என்ன பார்க்க வருவியே, அப்புறம் என்ன?,அட ஆமா.இதை நான் மறந்தே போயிட்டேனே கண்ணானு, மருமகனின் கன்னத்தை தடவிக்கொண்டு வள்ளி சொல்ல,உனக்கு தான் நிம்மதியா இருக்கும் இல்ல, நான் இல்லாமல்?"
" மருமகன் சொன்னதை கேட்டவர், ஏன் கண்ணு இப்படி சொல்ற?,நீ இல்லாம நான் எப்படி இருப்பேன் என்கும் போது வள்ளியின் கண்கள் மீண்டும் கலங்கியது".
" மேலும் இரண்டு நாட்கள் போனதே தெரியவில்லை".
"ஞாயிற்றுக்கிழமையின் காலையும் வழக்கம் போல் அழகாய் விடிந்தது".
"இன்று தான் மூவரும் ஹைதராபாத்திற்கு செல்ல வேண்டி இருப்பதால், அவரவர் பேக்கிங் முடித்து காலையிலேயே பெட்டியை கொண்டு வந்து ரெடியாக வைத்து விட்டனர்".
"மகனுக்காக கோயிலில் விசேஷ பூஜைக்கு சத்தியமூர்த்தி ஏற்பாடு செய்திருந்தார். காலையிலேயே மூவரும் கோயிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தனர்".
" வள்ளியோ, வெற்றிக்கு பிடித்த அனைத்து விதமான உணவுகளையும் செய்து, டேபிள் முழுவதும் நிறைத்திருந்தார்".
"மதிய உணவு வேலை வந்ததும், மூவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் போது, நாளைக்கு எல்லாம் நீ அங்கு தனியா சாப்பிடுவாயில்லையா என்று சத்தியமூர்த்தி கேட்க,எப்படிப்பா நான் அங்கே சாப்பிடுவேன்".
"என் மனசுல நீங்களாம் இருக்கும் போது, எப்படி நான் மட்டும் அங்க தனியா சாப்பிடுவேன், நீங்களும் அங்கே என் கூட தான் இருப்பீங்கள், அப்போ உங்களுக்கு அப்படியில்லையா என்கும் போதே வெற்றியின் கண்கள் நீரை பொழிந்தது"
"அதுல என்ன சந்தேகம்?.இந்த அப்பன் நெஞ்சில் நீ தான் ராசா இருக்கடானு சிரித்தார்".
"அந்த நேரம், கோபியும் வீட்டிற்கு வர, வாடா மாப்பிள்ளை. சாப்பிடுனு சத்தியமூர்த்தி சொல்ல, இருக்கட்டும் மாமா. இப்பதான் உங்க தங்கச்சி கையால கஞ்சி தண்ணி குடிச்சிட்டு வரேன்".
"எதேஏஏஏ கஞ்சி தண்ணியானு அதிர்ந்தார். ஆமாம் மாமா,டயர்டா இருக்க போல இருக்குமா, ஹார்லிக்ஸ் போட்டு பால் குடுனு சொன்னேன்".
" அதை தான் அந்த லட்சணத்தில்,உங்க தங்கச்சி போட்டு கொடுத்ததுனு கோபி சிரிக்க, இருக்கும்டா இருக்கும்.மாலா தப்பு பண்ணிடுச்சி, சுடு தண்ணீரை எடுத்து மூஞ்சில ஊத்தியிருக்கணுமென்று வள்ளி சொல்ல, சித்தி நீயுமா என்றான்".
" அடேய்,ஓடுறது,மேயுறது, பறக்குறதுனு எல்லாம் இருக்கு, ஒரு வாய் சாப்பிடென்று வெற்றியும் கூப்பிட, எனக்கு இப்போ வேண்டாம்டா".
" கொஞ்ச நேரம் கழித்தே சாப்பிட்டுக்குறேன் என்றவன், மாமா சாப்பிட்டு முடிச்சிட்டு நம்ப தேங்காய் லோடு கணக்கு பாருங்களெனறான்".
"ஏம்பா, அதான் ஆயிரம் தடவை நீ பார்க்குறாயே, அது போதாது என்பதால், நான் வேற பார்க்கணுமானு சத்தியமூர்த்தி கேட்க,மாமா, இன்றோடு மாசம் முடியுது".
சரிப்பா, சாப்பிட்டு வரட்டுமா?, இல்லை இப்படியே எந்திரிச்சி வரட்டுமா?
ஏன் மாமா ஏன்னு பாவமாக பார்த்தான்.
"அதேபோல் சத்தியமூர்த்தியும் சாப்பிட்டு வர, தன் கையிலிருந்த நோட்டை நீட்டினான்".
" அனைத்தையும் பார்த்து முடிக்க, ஒரு மணி நேரம் ஆனது".
" பின்னர், வந்த பணத்தை பேங்கில் போட்டு விட்டதாக சொல்லியவன், மாமா இந்த முறை அந்த சிவபிரகாசத்துக்கு ரெண்டு லோடு தேங்காய் அதிகமா வேண்டுமாம்".
" அப்படியா, சரி பார்த்து அனுப்புப்பா".
" அப்புறம் நானும் உன் சித்தியும் வெற்றி கூட போய்ட்டு வரோம்பா என்க, நான் பார்த்துக்குறேன் மாமா, நீங்க நல்லபடியாக போய்ட்டு வாங்களென்றான்".
" நேரமும் கடந்து சென்றது, மூவரும் தயாராகி பூஜையறைக்குள் சென்று சாமியை கும்பிட, சத்தியமூர்த்தி மற்றும் வள்ளியின் கால்களில் நெடுஞ்சான்கிடையாக விழுந்தான்"
" நல்லா இரு சாமி என்றனர்".
" பின்னர், சாமி ரூமிலிருந்து வெளியே வந்த வெற்றி, ஹாலில் இருக்கும் தனது முன்னோர்களின் ஃபோட்டோவிற்கு முன்பு நின்று வணங்கியவன், வெளியே வர கோபியும் காரில் தயாராக இருந்தான்".
" சத்தியமூர்த்தி முன்பக்கம் ஏறிக்கொள்ள, வெற்றியும், வள்ளியும் பின்னாடி சீட்டில் ஏறியதும் வண்டியை ஸ்டார்ட் பண்ணியவன்,கோவை ஏர்போர்ட்டை நோக்கி ஓட்டிச் சென்றான்".
" என்ன மாமா, மகனை போலீஸ் ஆக்கிட்டு தான் மறு வேலையை பாக்குறீங்க போலனு கோபி கேட்க, ஆமாடா".உன்னையும் தானேடா எக்ஸாம் எழுதுவென்று தலையால தண்ணீர் குடிச்சேன், எங்கேஏஏ முடிஞ்சதென்றார்".
திருச்சூர்:
நேரம் போனதே தெரியாமல் ஆர்கலி வேலை பார்த்துக் கொண்டிருக்க,பாப்பா, பாப்பா என்ற மேனேஜர் சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தாள்".
" மணி பாருமா என்க, மாலை 5.30 என காட்டியது.எஸ்டேட்டில் வேலை செய்பவர்களுக்கு வார சம்பளம் என்பதால், வேலையாட்களும் வாசலில் வந்து நின்றனர்".
" பாப்பா, நான் பேர் படிக்குறேன், நீ ஆளை பார்த்துக்கோனு மேனேஜர் சொல்ல, சரிங்க சாரென்றாள்".
"மேனேஜர் ஒவ்வொருவராக பெயரை கூப்பிட, அவர்கள் எத்தனை நாட்கள் வேலைக்கு வந்திருக்காங்கள், லீவ் எடுத்தார்களானு செக் பண்ணியவள், சம்பளத்தை கணக்கு பண்ணி கொடுத்தாள்".
" மீதம் உள்ள பணத்தை டிராவில் வைத்து பூட்டியவள், இந்தாங்க சாரென்று சாவியை மேனேஜரிடம் கொடுத்து விட்டு, தனது ஹேண்ட் பேகை எடுத்துக்கொண்டவள், வருகிறேன் சாரென்று சொல்லிக்கொண்டு வீட்டை நோக்கி நடக்கலானாள்".
"மாலை வேளையில் இப்படி காலார நடந்து செல்வது, ஆர்கலிக்கு பிடித்தமானது".
" எஸ்டேட்டிற்கு வேலைக்கு வந்த சிறிது நாட்களிலே, வீட்டிற்கு போகும் வழியில் உள்ள கடைகளில் இருப்பவர்களுக்கு, ஆர்கலியும் பழக்கமானாள்".
" ரோட்டில் நடந்து கொண்டிருந்தவள், சேச்சி சேச்சி( சகோதரி) என்ற குரலில் திரும்பி பார்க்க,பத்து வயது மதிக்க தக்க பெண்ணொருத்தி ஓடிவருவது தெரிந்தது".
" சொல்லு மானு என்று ஆர்கலி கேட்க, தன் கையிலிருந்த கவரை நீட்டியவள், பாட்டி கொடுத்தாங்களென்க,ஓகே மானு பாய் என்றவாறு நடந்து சென்றாள்".
" அரை மணி நேரத்தில் வீட்டிற்கு வந்தவள், தனது அறைக்குள் சென்று ஃப்ரஷ் ஆகி வெளியே வர,அம்முனு கூப்பிட்டுக்கொண்டே சைலஜா பாட்டி, ஹார்லிக்ஸோடு வந்தவர், இதை குடிடா என்றார்".
" வாங்கி குடித்து முடித்தவள்,மானு கொடுத்த கவரை நீட்ட,உள்ளே இருந்த முந்திரிகொத்தை எடுத்து, ஆர்கலியிடம் ஒன்றை நீட்டி விட்டு, தானும் சாப்பிட்டார்".
"சிறிது நேரம் இருவரும் பேசிக்கொண்டிருந்து விட்டு டிவி யை ஆன் பண்ணி பார்க்க ஆரம்பித்தவள், அதில் மூழ்கிப்போனாள்".
"வசுவும் ஆபிஸிலிருந்து வந்து விட்டார்".
"மகளை பார்த்த சைலஜா பாட்டி, வசு காஃபி என்க, குடுமா என்றவாறு, ஹாலில் இருந்த சோபாவில் உட்கார்ந்தவர், கண்ணை மூடி சாய்ந்து கொண்டார்".
" மனதிற்குள்ளே இன்று நடந்த நிகழ்வுகள் படமாய் விரிய, கிட்ட தட்ட என் வாழ்க்கை கதைதானென்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டிருக்க, வசு அம்மாடி வசுயென்ற அம்மாவின் குரலில் கண்ணை திறந்தவர், அவர் நீட்டிய காஃபியை வாங்கிக்கொண்டார்".
"மகளின் முகத்திலிருக்கும் சோடையை பார்த்த சைலஜாவிற்கு, ஏதோ சரியில்லை என்பது புரிந்தது".
" திரும்பி ஆர்கலியை பார்க்க, அவளோ சமையல் நிகழ்ச்சியை நோட் பண்ணிக்கொண்டிருப்பது தெரிந்தது".
" தன் மகளின் அருகில் உட்கார்ந்த சைலஜா, என்ன ஆச்சுமா?.ஏதாவது பிரச்சனையா?".
"காஃபியை குடிக்காமல் கையில் வைத்துக் கொண்டிருந்த வசுவோ ஆமாம்மென்கும் போதே, வசுவின் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்து ஓடியது".
" மகளின் கண்ணீரை பார்த்தவர், என்னம்மா, ஏன் இப்படியென்று கண்ணீரை துடைத்து விட்டவர், என்னனு சொல்லு?".
" அம்மா... இன்றைக்கு ஒரு லட்டர் வந்துச்சி, என் கதை போலவே. குழந்தையோட அப்பாவை அப்பாயென்று உலகத்திற்கு சொல்ல, அனுமதி வேண்டி பெட்டிசன் போட்டுருக்காங்க ஒரு தாய்".
" இதில் கொடுமை என்னவென்றால், அந்த ஆணுக்கு கல்யாணம் ஆகி குடும்பம் இருக்கு, இவங்க யாருனே தெரியாது என்று சொல்லிட்டார்ம்மா".
" அதை கேட்ட அதிர்ச்சியில் அந்த அம்மா அதே இடத்தில் இறந்துட்டாங்க.அந்த பையன் தான் போலிஸ்கு போகாமல் குறை தீர்ப்பு முகாமான இன்றைக்கு வந்து பெட்டிசன் குடுத்துருக்கான்மா".
" அப்போ என் பொண்ணுக்கும் அதே நிலமை தானேனு வசு கதறி அழ,அவர் சத்தத்தில் டீவி பார்த்துக் கொண்டிருந்த ஆர்கலியும் பதறி போய் அங்கு வந்தவள், என்னாச்சி மேடமென்றாள்".
" அது வந்துடா அம்மு என்றவாறே சைலஜா பாட்டி பேச்சில் தடுமாற, வசுக்கு தெரிஞ்ச அம்மா ஒருத்தவங்க இறந்துட்டாங்க அம்மு என்றவாறு அங்கு வந்தார் மைக்கேல்".
"ஓஓஓ இவ்வளவு தானா மாமா, நான் வேற பயந்துட்டேன் என்கும் போது தான் வசுக்கும் சுதாரிப்பு வந்தது".
" ரொம்ப வேண்டியவங்க அம்மு என்றபடியே தன் கண்ணை துடைத்தவர், நீ போய் டிவி பாரு அம்முயென்று அனுப்பி வைத்தார்".
" இல்லைங்க மேடம், நீங்க அழுததும் மனசுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது என்றவள், வசுவின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள்".
" இதற்கு பெயர் தான்,தான் ஆடா விட்டாலும், தன் தசை ஆடும் என்பது போலயென்று, மைக்கேலும், சைலஜாவும் மனதிற்குள் நினைத்துக்கொண்டனர்".
"அப்பொழுது எஸ்டேட்டிற்கு போயிருந்த சுந்தரபாண்டியனும் வீட்டிற்குள் வந்தவர், அங்கிருந்த நால்வரையும் பார்த்து என்னாச்சு?, ஏன் உம்மென்று இருக்கீங்களென்றார்".
" அது வந்து தாத்தா, திடீர்னு மேடம் ரொம்ப அழுதுட்டாங்களென்று ஆர்கலி சொல்ல,என்னாஆஆ என்று பதறியவர்,வசு எதாவது பிரச்சினையானு கேட்க, வசுந்தராவோ தனது தந்தையை முறைத்து பார்த்தார்".

Last edited by a moderator: