• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
346
சென்னை சிம்ஹன் பேலஸ்:

"நான் சொன்னப் போலவே, விருந்துக்கு ஏற்பாடு பண்ணிடுங்க".

" மறக்காமல், பால் பாயாசத்தில் சுகர் போடுவதற்கு முன்பு,ஒரு கப்பில் தனியா எடுத்து வைங்க".

" அப்புறம், புதுசா கார்பெட்லாம் வரும், ஒழுங்கா கிளீன் பண்ணி,எல்லா ரூமிலையும் மாற்ற சொல்லுங்க".

" நான் லஞ்சிற்கு வந்துடுவேன் என்றவாறு,வீட்டு நிர்வாகத்தை பார்க்கும் மேனேஜரிடம் சொல்லியபடியே,கம்பீரமான நடையோடு படியிலிறங்கி வந்து கொண்டிருந்தார், விஷாலா டெக்ஸ்டைல்ஸின் ஓனர் விஷாலாதேவி".

"வயது ஐம்பதை தாண்டினாலும், யாரும் சொல்ல முடியாது".

" கீழே வந்தவர்,நேராக டைனிங் ஹாலிற்கு சென்று,தனக்கான இருக்கையில் அமர,உணவை பரிமாறினர்".

" தேவையானதை சாப்பிட்டு முடிக்கவும், அம்மா என்றபடியே வேலையாள் ஒருவர்,அவரின் முன்பு காஃபியை வைக்க,எடுத்து குடித்து விட்டு, அங்கிருந்து வெளியே வந்து காரில் ஏறியதும், காரும் அங்கிருந்து கிளம்பியது".

" அரைமணி நேர பயணத்தில் தி. நகரில் இருக்கும்,அந்த ஐந்து மாடி கட்டிடத்தின் பார்க்கிங் ஏரியாவிற்குள் கார் நுழைந்தது".

" தனக்கான இடத்தில் வந்து கார் நின்றதும்,காரில் இருந்து இறங்கிய தேவி(விஷாலாதேவி) அங்கிருக்கும் லிப்டை நோக்கிச் சென்றார்".

"லிப்ட் பட்டனை பிரஸ் பண்ண,அது ஓப்பன் ஆனதும்,மூன்றாவது தளத்தின் நம்பரை அழுத்த,கதவை மூடிக்கொண்டு மேலே போய் நின்றது".

" லிப்ட் ஓப்பன் ஆனதும் வெளியே வந்த தேவி,அங்கிருந்து ரைட் சைடில் இருக்கும் தனது கேபினிற்கு சென்றவர்,உள்ளே இருந்த சாமி படத்திற்கு முன்பு வணங்கி விட்டு, சேரில் உட்கார்ந்தார்".

" சிறிது நொடிகள் சென்று கதவு தட்டும் சத்தம் கேட்க,எஸ் என்று குரல் கொடுக்க,தேவியின் பி.ஏ.ஜாக்குலின் வந்தாள்".

" குட்மார்னிங் மேம்.இன்றைக்கான ஷெட்யூல் என்று சொல்ல வர,நோ நோ".இன்றைக்கு எந்த ஷெட்யூலும் நான் பார்க்க போறதில்லை".

"நான் ஹேப்பி மூடில் இருக்கேன்".அந்த டெண்டர் மட்டும் அட்டென் பண்ணிட்டு,நான் வீட்டிற்கு கிளம்பிடுவேன்".

" மற்றதையெல்லாம், நீயே பார்த்துக்கொள் என்றவாறு சேரிலிருந்து எழுந்த தேவி,நான்காவது தளத்திற்கு செல்லும் படியில் ஏறிச்சென்றவர் டிசைனிங் செக்க்ஷன் என்ற பெயர் பித்தளையில் பொறிக்கப்பட்டிருந்த கண்ணாடிக்கதவை திறந்து உள்ளே போக,அங்கிருந்தவர்கள்,தேவிக்கு விஷ் பண்ண,தலையை அசைத்து ஏற்றுக்கொண்டவர்,தனது டேபிளின் முன்பு போய் அமர்ந்து,கண்ணை மூடி ஒரு நிமிடம் தனது இஷ்டமான கடவுளை வேண்டிக்கொண்டார்".

" பின்னர் அங்கிருந்த பென்சிலை எடுத்து, மனதில் தோன்றிய உருவத்தை அங்கிருந்த போர்டில் வரையத் தொடங்கினார்".

" விஷாலா டெக்ஸ்டைல்ஸில், குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உடைகளை மட்டுமே தயாரிக்கின்றனர்".

" பிறந்ததிலிருந்து பன்னிரெண்டு வயது வரை உள்ள அனைத்து ஆடைகளும்,சீசனுக்கு ஏற்றவாறு இங்கே கிடைத்துவிடும்".

" இந்த டெக்ஸ்டைலை தொடங்கியதிலிருந்து கடந்த இருபது ஆண்டுகளாக, வெற்றிகரமாக தேவிதான் நடத்தி வருகின்றார்".

" தற்பொழுது சம்மர் சீசன் என்பதால், உயர்தர பருத்தியிலான உடைகள் விற்பனையாகிக் கொண்டிருந்தது".

" முதல் தளத்தில் பிறந்த ஒரு வயது குழந்தைகளுக்கும்,இரண்டாம் தளத்தில் பெண் குழந்தைகளுக்கும், மூன்றாம் தளத்தில் ஆபிஸ் மற்றும் நான்காவது தளத்தில் டிசைனிங் செக்க்ஷனும்,ஐந்தாவது தளம் முழுவதும் ஆண் குழந்தைகளுக்காக பிரித்து இருந்தனர்".

" தான் வரைந்த ஓவியத்தை பார்த்தவர்,அங்கிருந்த கலரை தொட்டு வண்ணம் தீட்டி விட்டு, மீண்டும் சற்று தள்ளி நின்று ஓவியத்தை பார்க்க,வாட்டர்மெலன் டிசைனில் பெண் குழந்தைகளுக்கு ஃப்ராக்கும்,ஆண் பிள்ளைகளுக்கு டிராயர் வித் ஸ்லீவ்லெஸ் பனியனும் வரைந்திருந்தார்".

" இதை ரெடி பண்ண சொல்லிடுங்க என்றவாறு,மற்றவர்கள் செய்யும் டிசைனை செக் பண்ணி பார்த்து விட்டு,அதில் உள்ள சிறு திருத்தங்களையும் சொல்லி முடித்தவரின் ஃபோனிற்கு,கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்டது".

" டிராயிங் டேபிளின் மேலிருக்கும் ஃபோனை எடுத்து பார்த்தவரின் முகத்தில் புன்னகை வந்தது".கால் கட் ஆவதற்குள் அட்டென் பண்ணிய தேவி,சொல்லுங்க வீர்".

" மைடியர் விஷாஆஆஆஆ டார்லிங்,
எப்படி இருக்க?",இந்த மாமனை மிஸ் பண்ணுறியாடி என்றார்,தேவியின் காதல் கணவர் தன வீர சிம்ஹன்".

" ம்ம் என்றபடியே ஃபோனோடு அங்கிருந்து வெளியே வந்து, படியிலிறங்கி கீழே வந்தார்".

" ஓஓஓ மேடம் டிசைனிங் செக்க்ஷனில் இருந்தீங்களாக்கும் என்றவருக்கு,ம்ம் என்ற பதிலை சொல்லியபடியே,தனது கேபீனை திறந்து உள்ளே வந்த தேவி,என்ன சொன்னீங்க?".

" மிஸ் யூ டி பொண்டாட்டி".

" ஆஹான்".

" சார்,சூரத்திற்கு போய் எத்தனை நாளாகுது?என்று தேவி கேட்க,இரண்டு மணி நேரமாகுதுடி பொண்டாட்டி".என்ன செய்ய,மனுஷனுக்கு அப்படி என்ன சொக்குபொடி கலந்த மந்திரம் போட்டுருக்கியோ?".

" முப்பது வருஷமா அந்த அழகியிடம் மயங்கி போய் இருக்கேன்டி என்று தனா சொல்ல,ஓஓஓஓ சாரை நான் தான் மயக்குனேனாக்கும்?".

" வீர்.... வீரென்று,சார் எங்கே போனாலும்,உங்க பின்னாடியே சுற்றிச்சுற்றி வந்தது மறந்து போய்விட்டது போல தி கிரேட் பிஸ்னஸ் மேன் தன வீர சிம்ஹனுக்கென்று சொன்னார் விஷாலா தேவி".

எஸ்.எஸ்.மருத்துவமனை:

அய்யோஓஓஓ,எதோ ஒரு வேகத்தில் என் மகளென்ற உண்மையை சொல்லி விட்டேன் போலையே..வசு...எதையாவது சொல்லி சமாளியென்று அவரின் மனசாட்சி சொல்லியது".

"ஆமாடா ஆர்கலி,உன்னை என் மகளாக நினைத்து விட்டேன், அதனால் தான் அப்படி சொன்னேன்".

" ஓஓஓ சரிங்க மேடமென்றாள்".

" என்னமா,என் மேல உனக்கு நம்பிக்கையில்லையா?,உனக்காக இல்லையென்றாலும் உன் வயிற்றில் வளரும் சிசுவிற்காவது நீ வாழணும்டா என்று,அவள் தலையில் கோதி விட்டார்".

வசுந்தரா சொன்னதை கேட்ட ஆர்கலி, என்னா, சிசுவா என்று அதிர்ந்து போனவள்,என்ன சொல்லுறீங்க? ".

" ஆமாடாமா,டாக்டர் தான் சொல்லிட்டு போனாங்கள்".கடவுளோட பாக்கியத்தை பாறேன், மகளோடு பேரப்பிள்ளையும் எனக்கு கிடைத்திருக்கின்றதே என்று கண் கலங்கினார்".

" யாரென்னு தெரியாத ஒருவர்,இன்று பார்த்த தன் மேல் இவ்வளவு அன்பா என்பதை அவளால் ஏற்க முடியவில்லை".

என் வாழ்க்கை பயணமே எதை நோக்கி என்றே இதுவரை எனக்கு தெரியவில்லை?.இந்த லட்சணத்தில்,என் வயிற்றில் சிசுவா

" கடவுளே ஏன் இந்த சோதனை? ".

" நானே பூமிக்கு பாரமென்று வாழ்க்கையை முடித்துக்கொள்ள இருப்பவளுக்கு,இப்படி ஒரு வழியை காட்டியிருக்கின்றாயே?".இதை என்னவென்று சொல்லுவேனென்று பலவாறு தன் மனதிற்குள் பேசிக்கொண்டிருந்தவளை,அம்மு, அம்மு என்ற குரல் நிகழ்விற்கு கொண்டு வந்தது.

என்னடாமா யோசனை?.

உன்னை பற்றி எந்த விஷயமும் நான் கேட்க மாட்டேன்.நான் மட்டுமில்லை,நம் வீட்டில் இருப்பவர்களும் தான். அம்மாக்கூட வந்துடு அம்மு,உன்னை கண்ணுக்குள்ள வச்சி தாங்குறேனென்று உருகி சொல்லும் வசுந்தராவை பார்த்தவளுக்கு, தன்னை மீறி அழுகை பீரிட்டது.

மேடம் என்றபடியே,வசுந்தராவின் இடுப்பை கட்டிக்கொண்டு கதறி அழுபவளை,தேற்ற வழியின்றி அவரும் கலங்கி போனார்.

தனது மகளின் இந்த நிலமைக்கு யார் காரணமென்று தெரியவில்லையே?. ஆர்கலிக்கு திருமணம் முடிந்து, சென்னையில் இருப்பதாக மட்டும் தானே தன்னிடம் சொன்னது.மீண்டும் அவரிடம் விசாரிக்க செல்வதற்கு முன்பு,அவரும் இறந்து விட்டார்.ஆர்கலி வாயை திறந்து சொன்னால் மட்டுமே,உண்மை தெரியும்.

"தற்பொழுது அவள் இருக்கும் நிலமைக்கு,எதையும் சொல்ல வழியில்லை".முதலில் என் மகளை நான் கூப்பிட்டு போகிறேன்.

" சிறிது நாட்கள் சென்ற பின்னர், அவளிடம் கேட்டு மற்றதை தெரிந்து கொள்ளலாமென்று மனதிற்குள் சொல்லிக்கொண்டவர் அம்மு....நீ இதுவரை அழுதது போதும்.இன்றிலிருந்து,உனக்கு இந்த அம்மா இருக்கேன்".

"நான் உயிரோடு இருக்கும் வரைக்கும்,இனி உன் கண்ணில் ஒரு துளி நீர் வரக்கூடாது".

"உன் வயிற்றில் வளரும் என் பேர பிள்ளைக்காக,புதிய வாழ்க்கையை தொடங்குடா என்றார்".

" இவ்வளவு தூரம் அன்போடு பேசும் வசுந்தராவின் வார்த்தையில் இருக்கும் உண்மையான அன்பை,ஆர்கலியால் புரிந்து கொள்ள முடிந்தது".

"கடவுள் விட்ட வழி இது தான் போல".

" சிறு வயதில் இருந்து பாதர் சொல்லிக்கொடுத்தது போல, காரணமின்றி எதுவும் நமது வாழ்க்கையில் நடக்காது என்ற வார்த்தையை நினைத்துக்கொண்டாள்".

" சென்னையில் இருந்தால், நிச்சயமாக அவன் கண்ணில் பட வாய்ப்பு இருக்கின்றது".இவங்களும் கலெக்டர் என்று சொல்லுறாங்கள்,நம்பி போவோம் என்று முடிவெடுத்தவள்,உங்க கூட நான் வரேன் மேடம்".

" ஆனால்,அங்கு எனக்கு ஒரு வேலை வாங்கி தந்துடுங்க,பக்கத்தில் எங்கையாவது நான் தங்கிக்கொள்கின்றேன்".

" அவள் வரேன் என்று சொன்னதே இப்போதைக்கு போதும்,மற்றது தனது அம்மா பார்த்துக்கொள்ளுவாங்கள் என்ற உண்மையை உணர்ந்த வசுந்தரா,சரிடா அம்மு உன் விருப்பம் போல செய்யுறேன்".

"நான் போய் டாக்டர் கிட்ட பேசிட்டு வருகிறேன்,பார்மாலிட்டீஸ் முடிஞ்சதும் நாம போகலாமென்றவர், அங்கிருந்த கதவை திறந்துக்கொண்டு வெளியே சென்றார்".

" சிறிதா நொடிகள் கண்ணுக்கு முன்பாக இருக்கும் ஹேண்ட்பேகையே வெறித்து பார்த்தவள்,ஒரு நொடிகள் தனது கண்ணை மூடி திறந்து விட்டு, எழுந்து போய் அந்த பேகை எடுத்து வந்து பெட்டில் உட்கார்ந்தாள்".

" பின்னர் அதன் நடுவில் இருக்கும் ஜிப்பை திறந்து பார்க்க,அதனுள் பழுப்பு நிற கவர் இருந்தது".

" ஒரு முறை அந்த கவரை பார்த்து விட்டு மீண்டும் ஜிப்பை பூட்டியவள்,மற்றொரு ஜிப்பை திறந்து கையை விட,அவள் கையில் அகப்பட்டது பழைய' நோக்கியா எக்ஸ்பிரஸ் மியூசிக்' ஃபோன்".

"அதை வெளியே எடுத்தவள்,அதன் பின் கவரை திறந்து,அதனுள் இருந்த சிம்கார்டை கழட்டி,அதை பத்திரமாக ஹேண்ட் பேகில் மறைவாய் உள்ள ஜிப்பில் ஒளிய வைத்தவள்,மீண்டும் ஃபோனை உள்ளே வைத்து பழையபடி ஜிப்பை பூட்டிய ஆர்கலி,பேகை டேபிள் மேல் வைத்து விட்டு,பெட்டில் வந்து உட்கார்ந்து கொண்டாள்".

கதவை திறந்து வெளியே வந்த வசுந்தரா, அங்கிருந்த நர்ஸிடம் ரெஸ்ட் ரூம் எங்கே இருக்கென்று கேட்க,லெப்ட் சைடில் இருக்கு மேம் என்கவும், உள்ளே போய் சத்தமின்றி அழுதவர்,பின்னர் தனது முகத்தை கழுவி விட்டு,ரிசப்ஷனிற்கு சென்று விஷயத்தை சொல்ல,அங்கிருந்த பார்மில் டீட்டைல்ஸ் பில் பண்ணி பணத்தை கட்டி விட்டு மேலே வந்தார்.

"அம்மு வாடா நாம போகலாமென்க,சரிங்க மேடமென்றவள்,எழுந்து போய் ஹேண்ட்பேகை எடுத்து தனது வலது பக்க தோளில் மாட்டிக்கொண்டு, போகலாம் மேடமென்றாள்".

இருவரும் ஹாஸ்பிட்டலின் உள்ளே இருந்து வெளியே வர,அவர்களுக்கு முன்பு வந்து நின்ற காரை பார்த்தவர், வா அம்மு.நம்ப கார் தான் என்றவாறு பின்கதவை திறந்து ஏற,மற்றொரு கதவு வழியாக ஆர்கலியும் உள்ளே ஏறி உட்கார,போகலாம்ணா என்றார்.

சரிமா என்ற மைக்கேல்,அங்கிருந்து திருச்சூரை நோக்கி காரை ஓட்டத்தொடங்கினார்...
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
346
இலங்கை- இரத்தினபுரி:

"திரும்ப சொல்லுங்க அங்கிள்" என்று ருத்ரன் கேட்க, இதற்கு முன்னர் உன் காதில் விழுந்தது சரி தான் சாமி. என்னோட தங்கச்சி,அதாவது உன்னோட அம்மாவும்,விஷாலா டெக்ஸ்டைல்ஸின் ஓனரும்,தி பேமஸ் வைர வியாபாரி வீர சிம்ஹனின் மருமகள்,விஷாலா தேவி தான் அதற்கு காரணம்" என்று தனது மருமகனிடம் தெளிவாக சொன்னார்.

தனது தாய்மாமனின் தெளிவான வாக்குமூலத்தை கேட்டவனுக்கு, அதன் பின்னர் எதுவும் பேச முடியவில்லை".
ஒரு பார்வை மற்றும் அவரை பார்த்தான்.

" அந்த பார்வையில் சுந்தருக்கு என்ன புரிந்ததோ,அங்கிருந்து வெளியே சென்றார்".அவர் போகும் வரை அமைதியாக இருந்த ருத்ரன்,விஷாலா தேவி என்று கத்தினான்".

"உடனே தனது ஃபேனை எடுத்தவன், இந்தியா செல்வதற்கு டிக்கெட் பார்க்க,அவன் நேரமோ என்னவோ தெரியவில்லை.இன்று கிளம்பும் எந்த ப்ளைட்டிலும் டிக்கெட் இல்லை. நாளைக்கு செல்ல தான் கிடைத்தது".

" சரியென்று அதிலே டிக்கெட்டை புக் பண்ணியவன்,ஆர்கலி".

" உன்னை விட மாட்டேன்டி".

"இந்த உலகத்தில் எந்த மூலையில் வேண்டுமானாலும் நீ இரு, உன்னை கண்டு பிடிக்காமல் விடமாட்டேன்டி".

" இவ்வளவு நடந்துருக்கு,புருஷன்காரன் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லனுமென்று உனக்கு எண்ணம் வரவில்லை".

"வரேன்டி,வந்து உன்ன நேரில் பாக்குறேனென்றபடியே எழுந்தவன், லிப்டில் ஏறி கீழே வந்தவன்,தனது காரை நோக்கிச் செல்லும் போது, அவனது ஃபோனிற்கு கால் வந்தது".

" கையிலிருந்த ஃபோனில் பெயரை பார்த்து விட்டு,கண்டுகொள்ளாமல் தனது காரில் ஏறியவன்,அங்கிருந்து தனது வீட்டை நோக்கிச்சென்றான்".

இருபது நிமிட பயணத்தில் அந்த மாளிகையின் முன்பு வந்து நிற்க, ஹாரன் சத்தம் கேட்டு வாட்ச்மேன் கதவை திறந்ததும், நீண்டு ஓடிய பாதையில் பயணித்த அந்த கார்,அங்கிருந்த போர்டிகோவில் போய் நின்றது".

"காரிலிருந்து இறங்கியவனோ வீட்டின் உள்ளே சென்றான்.பணத்தின் செழுமை,அந்த வீடு முழுவதும் இருக்கும் ஒவ்வொரு பொருளிலும் எதிரொளித்தது".

" வேக நடையோடு உள்ளே வந்தவன், அங்கு ஷோபாவில் அமர்ந்திருந்த பெண்மணியின் அருகில் உட்கார்ந்தவன்,அவரின் மடியில் தலை வைத்து அமைதியாக படுத்துக்கொண்டான்".

"மடியில் படுத்திருந்த பேரனின் தலைமுடியை கோதி விட்டவர்,என்னாச்சு வீரா?என்றார் ருத்ரனின் பாட்டியான கிரிஜா வீர சிம்ஹன்".

" அவனோ மௌனமாய் இருந்தான்".

என்னாச்சி?,பிஸ்னஸில் எதாவது லாஸ் ஆகிவிட்டதாயென்று யோசித்தார்

" அப்பொழுது அவர் தொடையில் ஈரம் படுவதை உணர்ந்தவர்,வீரா என்று பதறிப்போய் பேரனின் தலையை தூக்கி பார்க்க,அந்த ஆறடி ஆண்மகனின் கண்ணிலிருந்து நீர் கசிந்துக் கொண்டிருந்தது".

" வீரா.. வீரா... எதுக்குப்பா கண் கலங்குற?,அப்படி என்னாச்சினு சொல்லுப்பா?என்கும் பொழுது,மாடிப்படியிலிருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்தார் வீர சிம்ஹன்".

" இருவரையும் பார்த்துக் கொண்டே வந்தவர்,எதிரில் இருந்த சோபாவில் உட்கார்ந்து,கால் மேல் கால் போட்டுக் கொண்டு,பேரனை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்".

"அவரின் பார்வையிலே,தனது தாத்தாவிற்கு எல்லா உண்மையும் தெரிந்து விட்டது என்பதை,ருத்ரனால் புரிந்துகொள்ள முடிந்தது".

" கிரிஜா என்று சத்தம் கொடுக்க, பேரனின் செய்கையில் மூழ்கி இருந்தவர்,கணவரின் கம்பீரக் குரலைக் கேட்டு நிமிர்ந்து பார்க்க, எட்ட வா என்றார் வீர சிம்ஹன்".

" என்னங்க,என் வீரா கண்ணுல தண்ணி வருது, எட்டவானு சொல்றீங்களேயென்று கிரிஜா பாட்டி கேட்க,ஏய் உன்னை எட்ட வாயென்று சொன்னேன் என்று,மீண்டும் அழுத்தமாக சொன்னார்"

அந்தக்குரலில் சோபாவில் இருந்து எழுந்தவர், கணவரின் அருகில் போய் உட்கார்ந்து கொண்டார்.

" வீராஆஆ என்ற கண்டனக்குரலில் தலையை திமிர்த்தியவன், தாத்தாவை பார்க்க,அப்பார்வையே சொல்லியது உண்மையை சொல்லென்று".

" இனி முடி மறைக்க ஒன்றும் இல்லை என்று அவனுக்கு நன்கு புரிந்தது".

தனது எதிரில் இருக்கும் தாத்தா- பாட்டியை ஒரு பார்வை பார்த்தவன், நாளைக்கு இந்தியாவிற்கு போகிறேன்.

மேற்கொண்டு சொல்லென்று,அவர் பார்வையில் சொல்வது போல் இருக்க,பாட்டி என்று கூப்பிட்டான்.

" சொல்லுப்பா வீராவென்று கிரிஜா பாட்டி சொல்ல,எனக்கு எனக்குவென்று வீரா தன் பேச்சில் தடுமாற,உன் செல்ல பேரனுக்கு கல்யாணம் ஆகி மூன்று வருஷம் ஆகுது கிரிஜா,அது மட்டுமில்லாமல்,இந்த அய்யாக்கு ஒரு வாரத்திற்கு முன்பு தான் டைவர்ஸ் ஆச்சு, இது உனக்கு தெரியுமா என்றார் வீர சிம்ஹன்".

கணவர் சொன்னதைக்கேட்ட கிரிஜா பாட்டி,என்னா என்று அதிர்ந்தார்! .

"மனைவியின் அருகில் உட்கார்ந்திருந்த வீர சிம்ஹன், நிதானமாக எழுந்து போய் பேரனின் முன்பு நின்றார்".

"கீழே உட்கார்ந்திருந்தவன், தாத்தாவின் தோரணையை கண்டு எழுந்து நிற்க,பேரனின் கன்னத்தில் பளார்,பளாரென்று நான்கு அறை விட்டார்".

கணவரின் செய்கையை கண்ட கிரிஜா பாட்டியோ அய்யோ என்னங்க என்று பதற,திரும்பி மனைவியை ஒரு பார்வை பார்க்க,வாயை கப் சிப்பென்று பாட்டி மூடிக்கொண்டார்.

"தனது பேரனை பார்த்தவர்,என்ன நடந்ததென்று நீயே உன் திருவாயால் சொல்லென்றார்".

ருத்ரனும்,ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்ததை சொல்லத் தொடங்கினான்.

சென்னை

"கார் விழுப்புரம் தாண்டி செல்ல, இன்றோடு எனக்கும் இந்த சென்னைக்குமான உறவு முடிந்து விட்டதென்று தனது மனதிற்குள் நினைத்துக்கொண்டாள் ".

மேலும் சில மணி நேரம் கடந்திருக்க, அண்ணா போகும் வழியில் ஹோட்டல்ல நிறுத்துங்கண்ணா, லஞ்ச் முடிச்சிட்டு போகலாமென்றார்.

மைக்கேலும் சரிமா என்றபடியே காரை ஓட்டிக்கொண்டிருந்தவரின் பார்வையில்,தூரத்தில் தெரியும் அடையார் ஆனந்தபவன் ஹோட்டல் நேம் போர்டு தெரிந்தது.

"அம்மாடி," ஏ டூ பி இருக்கு அங்க நிறுத்தட்டுமா?எனக் கேட்டுக்கொண்டே காரை ஓட்ட,வசுவும் சரிங்கண்ணா என்றார்.

" ஹோட்டலின் நுழைவு வாயிலில் நுழைந்த காரோ, அங்கிருந்த பார்க்கிங்கில் போய் நின்றது".

" அம்மு வாடா என்க,எனக்கு வேண்டாம் மேடமென்றாள் ஆர்கலி".

" உனக்காக இல்லை என்றாலும்,உன் வயிற்றில் வளரும் சிசுக்காக சாப்பிடு பாப்பாயென்றார் மைக்கேல்".

" அவர் சொன்னதைக்கேட்டு அதிர்ந்து பார்த்தவள்,நீ ரோட்டில் மயக்கம் போட்டு விழுந்திருந்தல்ல,அப்போ உன்னோட கை நாடிய பிடிச்சி பார்த்தேன்மா".

"ஓஓஓ அப்படிங்களா"

அதற்கு மேலும் மறுக்க முடியாமல், ஆர்கலியும் காரிலிருந்து கீழே இறங்க,மைக்கேலோ,நீங்க ரெண்டு பேரும் உள்ளே போங்க,நான் வரேனென்றார்.

" பின்னர்,வசுவும்,ஆர்கலியும் உள்ளே சென்று காலியான இருக்கையில் அமர்ந்து கொண்டனர்" வசுக்கோ,உள்ளுக்குள் இருக்கும் ஆனந்தத்தை வெளிப்படுத்த முடியவில்லை".

இத்தனை வருடங்களுக்கு பிறகு,தன் மகளோடு,அருகில் உட்கார்ந்து சாப்பிடும் பாக்கியம் கிடைத்திருப்பதை நினைத்து, கடவுளிடம் மனதிற்குள் நன்றியை சொல்லிக்கொள்ள மறக்கவில்லை".

தனது ஃபோனிலிருந்து பெரியைய்யா என்ற பெயர் கொண்ட நம்பருக்கு கால் பண்ண,இரண்டே ரிங்கில் அட்டென் பண்ணியது தெரிந்து,அய்யா என்று மைக்கேல் கூப்பிட,தம்பி என்றார் சைலஜா".

"பெரியம்மா" என்று மைக்கேல் சொல்ல,தம்பி நீயும் உன் தங்கச்சியும் என் பேத்திய பார்த்திட்டீங்களாய்யா?,அவ நல்லா இருக்காளா? ".

" ஏன் போனதில் இருந்து ஒரு ஃபோன் கூட பண்ணவில்லை என்று,சைலஜா பாட்டி கேள்விகளை அடுக்கினார்".

" அம்மா... அம்மா..கொஞ்சம் மூச்சு விட்டு நிதானமா பேசுங்க என்று மைக்கேல் சொல்ல,என் படபடப்பு உனக்குமா புரியவில்லை என்று சைலஜா பாட்டி கேட்க,அம்மா பாப்பா உங்களை போலவே இருக்காங்கம்மா".

" என்ன தம்பி சொல்லுற? என்க, ஆமாங்கம்மா,நம்ப சின்ன பாப்பா அம்மு உங்களை போல தான் இருக்காங்க".

" ஒன்னும் கவலை படாதீங்கம்மா".

"அங்க தான் வந்து கொண்டு இருக்கின்றோம் என்று சொல்லி, அழைப்பை கட் பண்ணியவர், ஹோட்டலின் உள்ளே சென்றார்".

" அவரும் வந்து எதிரில் அமர்ந்ததும்,மூவருக்கும் தேவையானதை சொல்ல,உணவும் சிறிது நிமிடத்தில் வந்து சேர்ந்தது".

" பின்னர் மூவரும் சாப்பிட்டு முடித்து, பில்லை பே பண்ணி விட்டு வெளியே வந்தனர்".

" நீங்க ரெண்டு பேரும் இங்கையே இருங்கம்மா,நான் போய் காரை எடுத்து வரேனென்று சொல்லிச்சென்ற மைக்கேல்,காரை எடுத்து வந்து அவர்கள் முன்பு நிற்க, இருவரும் ஏறிக்கொண்டதும், திருச்சியை நோக்கி கார் ஓடத்தொடங்கியது".

" ஆர்கலி தூங்குவது தெரிய,மகளின் தூக்கம் கலையாதவாறு,தனது மடியில் சாய்த்துக்கொண்டவரின் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது".

" பத்துமாதம் சுமந்து பெற்ற மகளை, இருபத்தி இரண்டு வருடங்கள் கழித்து பார்க்கும்,தாயின் நிலமையை வார்த்தையால் சொல்ல முடியவில்லை".

" பொறுமையாக மகளின் தலையில் தடவி விட்டவரின் சிந்தனைகளோ கடந்த காலத்தில் ஓட ஆரம்பிக்க, வலுக்கட்டாயமாக,அந்த நினைவில் இருந்து வெளியே வந்தார்".

" எப்படி இருக்க வேண்டிய என் மகள், அனாதையாக வாழ்ந்திருக்காளே? ".

" சத்தியமூர்த்தி.,உன்னை நான் சும்மா விடமாட்டேன்".இத்தனை வருஷமும் உன்னை பற்றி நான் தேடலை".இனி உன்னை கண்டு பிடித்து நேர்ல வரேன்".

" எனக்கு செய்த நம்பிக்கை துரோகத்திற்கு,உன்னை பழிவாங்காமல் விடமாட்டேன் என்று, மனதிற்குள் சொல்லிக்கொண்டார்".

வசுந்தராவும் கண்ணை மூடி பின் சீட்டில் சாய,சில நாட்களுக்கு முன்னர் தனது தந்தை சொன்ன விஷயங்கள் நினைவிற்கு வந்தது.

"வழக்கம் போல,தனது ஆபிஸிற்கு தயாராகி கீழே வந்த மகளை பார்த்த சுந்தர பாண்டியன்,அம்மா வசு உன் கிட்ட கொஞ்சம் அவசரமாக பேசணுமென்றார்".

" இந்த நேரத்திலாங்கப்பா? என்றவாறே கையில் கட்டியிருக்கும் வாட்சை பார்க்க,ஆமாம் மா என்றார்".

" தந்தையின் குரலில் இருந்த நடுக்கமே வசுவிற்கு கவலையை தர, சரிங்கப்பா சொல்லுங்க என்று வசு சொல்ல,இங்கே வந்து உட்காருமா என்கவும்,தந்தை உட்கார்ந்திருக்கும் சோபாவில் வந்து வசுவும் உட்கார்ந்தார்".

" அவர் அமைதியாக இருப்பதை கண்டு,அப்பா என்று வசு கூப்பிட,நிமிர்ந்து மகளை பார்த்த சுந்தர பாண்டியனின் கண்கள் கலங்குவது தெரிந்து, என்னாச்சிங்கப்பா?என்று வசு பதற,உள்ளே வேலையாக இருந்த சைலஜாவும்,மகளின் குரலைக்கேட்டு வேகமாக அங்கு வந்தார்".

" அம்மா,என்னாச்சிமா?,எதுக்கு அப்பா இப்படி கண் கலங்குறாங்களென தாயிடம் கேட்க,சைலஜாவிற்கும் கணவரின் செய்கைகள் எதுவும் புரியவில்லை".

"அம்மாடி வசு இந்த அப்பனை மன்னிச்சிடுமா என்று கதறி அழ, அய்யோ அப்பாஆஆஆ,என்ன நடந்ததென்று தயவு செய்து சொல்லிட்டு அழுங்க?

" தலையும் புரியாமல் வாலும் புரியாமல்,இப்படி மொட்டையா மன்னிப்பு கேட்டால் என்ன அர்த்தமென்று கோவப்பட்டு வசுந்தரா கேட்க,அம்மாடி வசு,என் பேத்தி அதாவது உன்னோட ஒரே பொண்ணு,இன்னும் உயிரோட தான் இருக்காள்".

" அப்பா சொன்னதைக்கேட்ட வசுந்தரா,என்னாஆஆஆஆஆ என்று எழுந்தவர்,நிஜமாக என்னோட பொண்ணு இந்த உலகத்தில் உயிரோட இருக்காளா என்றவாறு மயங்கி கீழே விழுந்தார்".

ஆர்கலி எங்கே....?
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top