• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
திருச்சூர்- மைக்கேல் பிளாஷ் பேக்:

பீகார்- கயை மாவட்டம்:

"மதிய உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்த மைக்கேல், மனைவியின் முகத்திலிருக்கும் யோசனையை கவனிக்க தவறவில்லை".


" இவளுக்கு என்னாச்சி?, உடம்பு எதாவது சரியில்லையா?,கொஞ்ச நாட்களாகவே ஏதோவொரு யோசனையில் இருக்காள்".

" என்ன விஷயமென்று வாயை திறந்து சொன்னால் தானே, மனுஷனுக்கு தெரியுமென்று தனக்குள்ளே பேசிக்கொண்டான்".

" கணவன் தன்னை கவனிப்பது கூட தெரியாமல், தனது யோசனையிலே ஷாலி உழன்டுக் கொண்டிருந்தாள்".

" சாப்பிட்டு முடித்து கையை கழுவியவன், ஏன் ஜானு,உனக்கு எதாவது குறை வைத்திருக்கிறேனா? என்க, அய்யோ திவாரி, ஏன் இப்படி?".

" கர்பிணி பெண்ணோட ஆசைகளை எல்லாம், நிறைவேற்றனுமென்று படே தாதி( பெரியபாட்டி) சொன்னாங்க.இதுவரை நீ எதையுமே என்னிடம் கேட்டதில்லை. இப்போ கேட்கிறேன், உன் மனசுல அப்படி ஆசைகள் இருக்கா?, அதை சொல்லு."உனக்கு என்ன வேண்டும் கேளுடி. நானும் பாக்குறேன், கொஞ்ச நாளாக நீ சரியில்லை".

"எப்போ பார்த்தாலும் ஏதோ ஒரு உலகத்தில் இருக்கிறாய். என்ன விஷயமென்று சொன்னால் தானே எனக்கு தெரியும்".

"ஒரு வேளை இவனால் முடியாதென்று நினைத்து விட்டாயா?".

"ஏன் திவாரி இப்படி பேசுற?, குறையென்று எனக்கு எதுவுமேயில்லை.நீ என்னை எப்படி பார்த்துக்கிறனு இந்த ஊர்ல இருக்கவங்களுக்கு தெரியும்".

"உன்னை குறை சொன்னால், கடவுளுக்கே பொறுக்காது".

" இந்த வெங்காய பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.ஒழுங்கா சொல்லுடினு கடுமையாக கேட்டான்".

"கணவனின் கோப குரலை கேட்ட ஷாலி, இதற்கு மேல் அமைதியாக இருந்தால் நல்லதில்லைனு,உன் கிட்ட ஒன்னு சொல்லணும் திவாரி.அதைக்கேட்டு நீ கோவப்படக்கூடாது என்க,ஏய் விஷயத்தை முதல்ல சொல்லுடி, மற்றதை பிறகு பார்க்கலாமென்றான்".

" எனக்கு,எனக்குனு இழுக்க, ம்ம் உனக்கென்று மைக்கேலும் கேட்க, எங்க வீட்டு பக்கத்திலிருக்கும் துர்க்கை அம்மன் கோவிலுக்கு போய், ஒரு முறை அம்மனை சேவிக்கணும்னு தோணுது".

" மனைவி சொன்னதை கேட்டவன்,ப்பூஊஊஊ".

"இவ்வளவு தானா டி".

" அதுக்கென்ன ஜானு, இன்றைக்கே போகலாமென்றவன், கரீமிற்கு கால் பண்ணியவன் அடேய் நானும் உன் பாபியும் கோயில் வரை போய் வருகிறோம், நீ ஒர்க் ஷாப்பை பார்த்துக்கோ என்று சொல்லி ஃபோனை வைத்தான்".

" இங்கே பாருடி, எதா இருந்தாலும் நீ சொன்னால் தான் எனக்கு தெரியும். வாத்திச்சி மண்டைக்குள்ளே விஷயத்தை வச்சிக்கிட்டால், கண்டு பிடிக்கும் அளவிற்கு இந்த மெக்கானிக் படிக்கவில்லைடி".

" இனி எதா இருந்தாலும் என் கிட்ட சொல்லணும்".

" ஓகே வா,சரி ஜானு... கொஞ்சநேரம் நான் படுக்குறேன், நீ ரெடியாகிட்டு சொல்லுனு உள்ளே போய் மெத்தையில் படுத்து கண்ணை மூட,அசதியும், கை கால் வலியிலையும், மைக்கேலிற்கு உறக்கம் வந்தது".

" ஷாலியும் குளித்து முடித்தவள் தயாராகி மணியை பார்க்க, மாலை ஐந்து என்று காட்டியது.பின்னர் உள்ளே ரூமிற்குள் வந்தவள், திவாரி, திவாரினு கணவனின் தோளில் தட்டினாள்".

" ம்ம் என்றபடியே எழுந்தவனிடம் மணியாகிட்டு என்க,இதோடினு டவலை எடுத்துக்கொண்டு ரெஸ்ட் ரூமிற்குள் சென்றவன்,வேக வேகமாக குளித்து வெளியே வர, ஷாலியும் அவனுக்கு டிரஸை எடுத்து பெட்டில் வைத்திருக்க, அதை போட்டுக்கொண்டு தயாராகினான்".

" இருவரும் மெயின் ரோட்டிற்கு வந்தவர்கள்,ஜானு அவ்வளவு தூரம் வண்டியில் உன்னால் உட்கார முடியுமா?, கார் இல்லை ஆட்டோவில் போகலாமா என்க, நம்ப வண்டியே போதுமென்றாள்".

"பின்னர் அங்கிருந்த பைக்கில் ஏறி, இருவரும் கோயிலை நோக்கிச் சென்றனர்".

" ஒருமணி நேர பயணமோ மேலும், அரைமணி நேரம் தாமதமானது".

" அய்யோ திவாரி, எதுக்கு தான் இப்படி வண்டியை உருட்டுறாயென்று ஷாலி கேட்க, அடிப்பாவி".உனக்கு சேப்டி இல்லைனு தான் டி".

ம்கும்... அந்த பையனை பாரு, உன்னை முந்திக்கொண்டு சைக்கிளில் போறானென்று சிரித்துவிட்டாள்.

" ஏண்டி சொல்ல மாட்டாய், உன்னை அலுங்காமல், குலுங்காமல் கூப்பிட்டு போக நினைத்தேன்டி".

" ஓஓஓ இதில் மட்டும் தான் அலுங்கல், குலுங்கலோ என்க, ஏய் ச்சீ ச்சீ.கோயிலுக்கும் போகும் போது தப்பா பேசாதடினு சிரித்தான்".

" அடப்பாவி திவாரி என்றாள்.பின்னர் பேசிக்கொண்டே இருவரும் கோயிலுக்கு வந்து சேர இரவு ஏழு மணியானது. இவர்கள் போன நேரம், அம்மனுக்கு பூஜை நடந்து கொண்டிருந்தது".

" தெரிந்தவர்கள் சிலர் கோயிலுக்குள் வந்த போது, ஷாலியை பார்த்து நலம் விசாரித்தனர்".

"தனது வீட்டிலிருந்து யாராவது வருவார்களாயென்று பார்வையால் ஷாலி அலசிக்கொண்டிருந்தாள்".

" மனைவியின் தேடல் எதுவென்று மைக்கேலுக்கு புரிந்தாலும், அவள் ஆசையை எப்படி நிறைவேற்றுவது என்பது தான், சற்று யோசைனாயாக இருந்தது".

" சரி அம்மனுக்கு அலங்காரம் முடிந்து பூஜை ஆரம்பிக்க, இன்னும் நேரம் இருக்கின்றது".

" ஒரு முறை முயற்சி செய்து பார்ப்போமென்று முடிவெடுத்தவன், இங்க தெரிந்தவர் ஒருவர் இருக்கிறார், அவரை பார்த்துட்டு வருகிறேன் ஜானு என்க, சரி என்றாள்".

" ஐந்து நிமிடம் நடந்து செல்லும் தூரம் தான் என்றாலும், தயக்கத்தின் காரணமாய் மேலும் சில நிமிடங்களானது".

" கண்ணை மூடியவன் இனி கடவுள் விட்ட வழியென்று நினைத்து விட்டு, ஹாலிங்பெல்லை அழுத்தினான்".

" சிறிது நொடியில் கதவு திறக்க, அங்கிருந்த ஷாலியின் அப்பாவோ மைக்கேலை பார்த்து அதிர்ந்தவர், பின்னர் உள்ளே வாங்க என்றார்".

" ஷாலியின் அம்மாவும் கிச்சனிலிருந்தே வெளியே வந்தவர், மைக்கேலை பார்த்து விட்டு, பார்வையால் யாரையோ தேடினார்".

" என்னை மன்னிச்சிடுங்களென்று இருவரின் காலில் விழுந்தவன், ஷாலியின் நிலையை சொன்னான்".

" அதைக்கேட்ட இருவருக்கும் சந்தோஷமாக இருந்தது, எந்திரிப்பானு சொல்லி விட்டு, உள்ளே போய் குடிக்க தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தவர், ஷாலிய நீங்க நல்லா பார்த்துக்குறீங்களென்று கேள்வி பட்டோமென்றனர்".

" சரி வா கோயிலுக்கு போகலாமென்று ஷாலியின் அப்பா சொல்ல, சரிங்க என்றவாறே கிச்சனிற்குள் சென்ற ஷாலியின் அம்மா,வீட்டிலிருந்த பதார்த்தங்கள் சிலவற்றை எடுத்து ஒரு கவரில் போட்டவர், போலாமென்க மூவரும் வீட்டை பூட்டிக்கொண்டு கோயிலுக்குள் வந்தார்கள்".

"மூவரும் கோயிலுக்குள் நுழைய அம்மனுக்கு ஆரத்தி காட்டுவது தெரிந்தது, கண்ணை மூடி சாமியிடம் ஷாலி வேண்டிக்கொண்டிருக்க, இவர்கள் அருகில் வந்தது தெரியவில்லை".

" பொறுமையாக மகளின் தோளில் ஷாலியின் அம்மா கையை வைக்க, அந்த ஸ்பரிசத்தில் பட்டென்று கண்ணை திறந்தவள், அங்கிருந்த தாயையும்,அப்பாவையும் பார்த்தவளின் கண்கள் அதிர்சியில் உறைந்தாலும், கண்ணீரை சிந்த மறக்கவில்லை".

" எட்டு மாதங்களுக்கு பிறகு பார்க்கும் மகளின் கன்னத்தை தடவிக்குடுத்த ஷாலியின் அம்மாவின் கண்களும் கலங்கியது".

" ஷாலி என்று மகளின் தலையை தடவி விட, மம்மா( அம்மா) என்றவாறே அவரின் தோளில் சாய்ந்து அழுதாள்".

" அவளின் அழுகையை பார்த்த மைக்கேலுக்கு, ஏதோ ஓர் மூலையில் வலித்தது".

" அவனின் முகச்சுனக்கத்தை பார்த்தவள், நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேனென்றவள், திவாரி வா என்றபடியே அவன் கையை எட்டி பிடித்தவள், எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்களென்று பெற்றவர்களின் காலில் விழுந்தாள்".

" ஏன்டா இப்படியென்றவர் மகளையும், மருமகனையும் தூக்கி விட்ட ஷாலியின் அப்பா, மனைவியிடம் கண்ணை காட்ட, ம்ம் என்றவர், கையில் போட்டிருந்த தங்க வளையலை கழட்டி மகளுக்கு போட்டு விட்டார்".

" பின்னர் மகளிடம் கர்பத்தை பற்றியும், எத்தனை மாசம் ஆகுதென்று கேட்டுக்கொண்டார்".


பொள்ளாச்சி பெரிய வீடு:

"வெற்றி கண்ணுனு வள்ளியம்மை கூப்பிட்டதும், சிறு பிள்ளை போல அவர் மடியின் மேல் வந்து தலைவைத்து படுத்தவன், மன்னிச்சிடு என்றான்".

"வலிக்குதா சாமியென்று வள்ளியம்மை கேட்க, ஆமா... மனசாட்சி இல்லாமல்
நல்லா அடிச்சிட்டு, வலிக்குதா, இல்லை இனிக்குதானு கேள்வியா?".

" சரி... சரி... அத்தை ஏதோ கோவத்தில் தான் சும்மா எரும்பு கடிக்குற போல தட்டுனேன்".

" எதேஏஏஏ... ".

" இதா எரும்பு கடிச்சது?, நல்லா பாருனு வெற்றி தனது கன்னத்தை காட்ட, இரண்டு பக்கமும் லேசாக வள்ளியின் கைவிரல் தடம் இருந்தது".

" ஆள பார்த்தா முருங்கக்காய் போலிருக்க, அடி என்னமோ இடி மாதிரி விழுது என்றவன், ஆனாலும் உன் கோவம் நல்லா இருந்துச்சி வள்ளினு சிரித்தான்".

" அட படுவாயென்று மருமகனின் தோளில் தட்டிய வள்ளி,அடுத்த முறை வேண்டுமானால் கட்டையால அடிக்குறேன்".

" ஆக,வள்ளியம்மை மேடம் ஒரு முடிவோட தான் இருக்கீங்களென்று வெற்றி சொல்ல, ஆமாடா என்றார்".

" பின்னர் , அண்ணா... ஜனனி, கீதாவையும் கூப்பிட்டு போகலாமானு வள்ளியம்மை கேட்க, நம்ப ஊர்ல அந்த வழக்கம் இல்லையே மா".

" ம்ம்.. வேண்டுமென்றால் இப்படி பண்ணலாம், இதைப்போல கோயிலுக்கு போறோம்,விருப்பம் உள்ளவங்க வாங்களென்று சொல்லுவோம்".

" மாரியப்பன் நிச்சயமா கோயிலுக்கு வருவார், ஏனென்றால் அவருக்கு முருகன் மேல பக்தி அதிகம்".

" சத்தியமூர்த்தி சொன்ன போலவே, ஊருக்குள் செய்தி பரவ, கோயிலென்றதும், பாதி பேர் கிளம்பி விட்டனர்".

" அனைவரையும் அழைத்துச்செல்ல, அவர்களுடை டிரான்ஸ்போர்டிலிருந்து இரண்டு பஸ்ஸும் வந்தது".

"நல்ல நேரத்தில் அரோகரா போட்டுக்கொண்டு, பொள்ளாச்சியிலிருந்து திருச்செந்தூரை நோக்கி கிளம்பினர்".

" முன்பக்கம் உள்ள சீட்டில் சத்தியமூர்த்தியும், மாரியப்பன், சோமு மூவரும் உட்கார்ந்து கொண்டு, டிரைவருடன் பேச்சுக் கொடுத்துக்கொண்டே வந்தனர்"

" வெற்றியும், அவனுடைய நண்பன் உட்கார்ந்திருந்த சீட்டிற்கு பின்னாடி நான்கு சீட்டுகள் தள்ளி, கீதாவும், ஜனனியும் உட்கார்ந்திருந்தனர்" .

" இன்னுமா உன் கோபம் போகவில்லையென்று தன் அருகில் உட்கார்ந்திருந்த நண்பனிடம் வெற்றி கேட்க,கோபியோ( நண்பன்) வெற்றி சொல்வது காதில் விழுந்தாலும் கண்டுக்கொள்ளாமல், ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டிருந்தான்"

" திங்கட்கிழமை நான் ஹைதராபாத் போகணும்".

" வர இரண்டு வருஷமாகும், அதுவரை நீ தான் இங்கு அப்பாவையும், அத்தையையும் பார்த்துக்கணுமென்று சொல்லி, கோபியின் கையை பிடிக்க, எல்லா வெங்காய வெண்ணையும் எங்களுக்கு தெரியுமென்றவன், வெற்றியிடமிருந்து தனது கையை உருவிக்கொண்டான்".

" எப்பா வேலு( பஸ் டிரைவர்), டீ கடைய பார்த்து நிறுத்துப்பானு சோமு சொல்ல, சரிணா என்றார்.

" அதைப்போலவே ரோட்டோரமாய் இருந்த டீகடையின் அருகில் பஸ்ஸை நிறுத்தினார்,பஸ்ஸில் தூங்கியவர்களை தவிர மற்றவர்கள் கீழே இறங்கி அவரவருக்கு தேவையானதை வாங்கி குடித்தனர்".

" பின்னர் மீண்டும் பயணத்தை தொடங்க, இரண்டு பஸ்ஸும், காலை ஆறு மணிக்கு திருச்செந்தூருக்கு போய் சேர்ந்தது".
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
இரத்தினபுரி-ருத்ரன் பிளாஷ்பேக்:

"பட்டுப்புடவையில் அழகுப் பதுமையாய் அமர்ந்திருந்தவளை பார்த்தவன் எவ்வளவு அழகா இருக்காளென்று வாய்விட்டு சொல்லிக்கொண்டான்".


" ருத்ரன் என்று ஃபாதர் குரல் கேட்ட பின்னர், தன் தலைமுடியை கோதி சமாளித்துக்கொண்டவன்,ஆர்கலியின் பக்கத்தில் உட்கார,கார் அங்கிருந்து ரிஜிஸ்டர் ஆபீஸை நோக்கி ஓடத்தொடங்கியது".

"சிறிது நிமிடங்கள் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தவன், தன்னவளின் கையை பிடிக்க,அவள் உடல் சிலிர்ப்பதை அவனால் உணரமுடிந்தது".

" ஓ காட்".

"ரொம்ப இம்சை பண்ணுறாளேனு உள்ளுக்குள் சொல்லிக்கொண்டவன், அவளின் இடது கையை இறுக்கமாக பிடிக்க, அவனிடமிருந்து கையை உருவ முயன்றாள்".

"தன்னவளின் முயற்சியை ஓரக்கண்ணால் பார்த்தவனுக்கு சிரிப்பு வந்தது.மௌனமாக சிரித்துக்கொண்டே ஜன்னல் பக்கம் திரும்பியவன், இடது பக்க மீசையை தடவி விட,அதை பார்த்தவளோ எச்சில் விழுங்கினாள்".

" இவர் எவ்வளவு ஹேண்ட்ஸமாக இருக்கிறார்,இவருக்கு பொருத்தமானவளா நானென்று யோசித்துக் கொண்டாள்".

"ரிஜிஸ்டர் மேரேஜ் முடிந்த பிறகு, அடுத்தது என்ன என்று, வேகமாக மனதிற்குள் பிளான் போட்டு முடித்தவன், இரண்டு நாள் இவள் கூட இருக்கணும்".

" ஏண்டி,ஒரு ரெண்டு மூணு வருஷம் முன்னாடியே பிறந்திருக்கக் கூடாதானு முணுமுணுத்தவன்,வலது பக்கம் கையால் தனது நெஞ்சில் தட்டிக் கொண்டான்".

"நம்ம தலையெழுத்து கல்யாணம் பண்ணியும் கன்னி பையனா தான் இருக்கணும் போல.சரி சரி.ஒரு வருஷம் தானே படிச்சு முடிக்கட்டும். அதுக்கப்புறம் என் பொண்டாட்டி, என் கூட தான் இருக்க போறாளென்று சொல்லும் போது, அவன் அகத்தில் இருக்கும் மகிழ்ச்சி,முகத்திலும் தெரிந்தது".

"இருவரும் அவரவர் யோசனையில் மூழ்கியபடியே,வர வேண்டி இடத்திற்கு வந்து சேர்ந்தனர்".

"ஆர்கலியின் அருகில் வந்த வரலெட்சுமி, என் வாலு குட்டியா இது என்றார். அம்மா என்று கண்களை உருட்டி ஆர்கலி பார்க்க,அழகா இருக்கடி கண்ணு என்றவாறு அவள் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டவர், வாடா, நல்ல நேரம் தொடங்கப் போகுதென்றார்" .

"இன்று ரிஜிஸ்டர் ஆபிஸில் முதல் கல்யாணம்,ருத்ரன்-ஆர்கலிக்கு தான்".

"இருவரின் பெயரை ஆபிஸ் அசிஸ்டென்ட் சொல்லி கூப்பிட உள்ளே சென்றவர்கள், ராம் கொடுத்த மாலையை இருவரும் மாற்றிக் கொண்டார்கள்".

" பின்னர்,வழக்கமான பார்மாலிட்டீஸை முடித்து விட்டு,ரிஜிஸ்தர் காட்டிய நோட்டில் கையெழுத்திட்டனர்".

"ருத்ரன் சார்பாக, சிவமும், வரலெட்சுமியும் கையெழுத்து போட, ராம், மற்றும் ஃபாதர் இருவரும் ஆர்கலிக்காக சாட்சி கையெழுத்தை போட்டார்கள்".

" பிறகு, தனது கையில் உள்ள நகை பெட்டியை வரலெட்சுமியும் சிவனும் சேர்ந்து கொடுக்க, அதை வாங்கிய ருத்ரன், மானசீகமாக தன் பிரியமானவர்களை நினைத்துக்கொண்டே,பெட்டியை திறந்தவன்,அதிலிருந்த தாலிச்செயினை எடுத்து, ஆர்கலியின் கழுத்தில் போட்டு விட்டான்".

" ரிஜிஸ்டர் ஆபிஸில் எல்லாம் நல்லபடியாக முடிந்ததும், அங்கிருந்து சிறிது நிமிட தொலைவில் இருக்கும் தில்லை காளியம்மன் கோயிலுக்கு சென்றனர்".

" ஏற்கெனவே சிவம் வந்து கோயில் அர்ச்சகரிடம் சொல்லி வைத்திருக்க, அம்மனுக்கு அர்ச்சனை பண்ணிய பின்னர், ஆர்கலிக்கு மெட்டியை போட சொல்லி ருத்ரனிடம் கொடுக்க, வரலெட்சுமி சொல்லியது போலவே செய்து முடித்தான்".

" காலை டிபனை அங்குள்ள ஹோட்டலில் முடித்தவர்கள், வீட்டிற்கு கிளம்பலாமென்று சிவன் சொல்ல, அப்பா, நான் ஆர்கலியை வெளியே கூப்பிட்டு போறேனென்றான்".

" தம்பி,சம்பிரதாயம்லாம் இருக்குப்பா, அது முடித்து பிறகு போய்வாங்களென்று வரலெட்சுமி சொல்ல, அவர் வார்த்தையை மறுக்க முடியாமல் சரிங்கம்மா என்றவனை, சிவம் முறைத்து பார்த்தார்".

"ஏன்டா, இதை தான்டா நானும் சொன்னேன்னு சிவம் சொல்ல, அதைக் கேட்ட வரலட்சுமிக்கு சிரிப்பு வந்துவிட்டது".

"என்னங்க சின்ன பிள்ளை கிட்ட போய் மல்லு கட்டிக்கிட்டு என்க,ஆமாடி உனக்கு அப்படித்தான் இருக்கும் என்க, மற்றவர்களோ அவர்கள் பேசுவதை கேட்டு சிரித்தனர்".

"சரி வாங்க வீட்டிற்கு போகலாமென்று வந்த வண்டியில் ஏறி வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்".

" அம்மாடி மிதிலா, போய் உன் அண்ணனுக்கு ஆரத்தி கொண்டுவாமாயென்று வரலட்சுமி தனது மருமகளிடம் சொல்ல, இதோங்கத்தை என்றவள்,தன்னிடமிருந்த குழந்தையை கணவர் ராமிடம் கொடுத்துவிட்டு உள்ளே போனாள்".

ஆரத்தி எடுப்பதற்காக எல்லாம் தயாராகவே வரலெட்சுமி எடுத்து தான் வைத்திருந்தார்.

"இருவரின் தலையையும் மூன்று சுற்று சுற்றி, பொட்டு வைத்துவிட்டு, அதை வாசலில் ஊற்றச்சென்றாள்".

" உள்ளே வாங்கப்பா என்றவர், இருவரையும் சாமி அறைக்க கூட்டிட்டு போய்,அம்மாடி ஆர்கலி விளக்கை பத்தவை என்றார்".

" வரலட்சுமி வார்த்தையை கேட்டு ஆர்கலிக்கு கண்கள் கலங்கியது.ஓஓஓ,நான் சும்மாதான் உன்னைய என் பொண்ணுனு சொல்லுறேனென்று நினைச்சுகிட்டு இருக்கியா..?".

"உண்மையிலேயே நீ நான் பெத்த பொண்ணுதாமா.அப்படித்தான் இத்தனை வருஷமா நான் உன்ன நெனச்சிட்டு இருக்கேன்னு வரலட்சுமி சொல்ல, அம்மா என்று அவரை அணைத்துக்கொண்டு அழுதாள்".

" ஏய் பாப்பு, இப்படி ஒரு அழுமூஞ்சியை கட்டி வச்சுட்டேன்னு அவன் என்கிட்ட சண்டைக்கு வர போறானென்று ராம் சொல்ல,என்ன, எங்க அண்ணனை வம்புக்கு இழுக்குறீங்க என்று கேட்டாள் மிதிலா".

கடலூர் மாவட்டம்:

"அம்மா... என்று கார் ஓட்டிக்கொண்டே கபிலன் கூப்பிட, தூங்கிக் கொண்டிருந்த தேவகி, மகனின் சத்தம் கேட்டு சொல்லுப்பா என்றார்"

"அம்மா மணி இப்பவே நைட் 11 ஆயிடுச்சு.சாப்பிட்டு போயிடலாமா?.

"நம்ம வீட்டுக்கு போறதுக்கு எப்படியும் இன்னும் ரெண்டு மணி நேரம் ஆகும்".

"சரி கபி,நல்ல ஹோட்டலா பார்த்து நிறுத்து, ம்ம் ஏ டு பிக்கு போகலாமா மா? ".

"ம்ம் போகலாம் பா"

அதேபோலவே அங்கு இருந்து அடையாறு ஆனந்த பவன் ஹோட்டல் பார்க்கிங்கில் கொண்டு போய், காரை நிறுத்தியவன் இறங்குங்களென்றான்".

"ஆதிரா லேப்டாப்பில் வேலையில் மூழ்கி விட்டால், சுற்றத்தில் நடப்பது எதுவும் தெரியாது".

" அம்மா, உன் அண்ணன் மகளை எழுப்பு, கும்பகர்ணி போல தூங்குறாள் என்க, நான் தூங்குவதை நீங்க பார்த்தீங்களானு ரியா கேட்டாள்".

"ஓஓஓஓ".

" மேடம் அப்போ தியானத்தில் இருந்தீங்க போல, சரிதான் என்றவன், ஆதி, ஆதி என்க, கபிலனின் குரலில் அண்ணா என்று நிமிர்ந்தாள்".

" வாடா சாப்பிடலாம்".

" இதோணா என்றவள், செய்த வேலையை ஃபோல்டரில் சேவ் பண்ணி விட்டு, லேப்டாப்பை ஷட்டவுன் செய்தவள், போலாம்ணா என்றவாறே கீழே இறங்கினாள்".

" கபியும் கீழே இறங்கி கார் டோரை லாக் பண்ணியவன், வாங்க என்று முன்னே நடந்து சென்றான்".

" எப்பா... கால் வலி என்று தேவகி சொல்ல,ஸ்பிரே அடிக்கட்டுமா மா என்றாள் ஆதிரா".

" அதெல்லாம் ஒன்னும் வேண்டாங்கண்ணு, காலை மடிச்சு வச்சிருந்தேனா அதான் என்றவர், கொஞ்ச நேரத்தில் சரியாகிடும், நீங்க வாங்க என்றார்".

" அம்மா என்று கபி கை காட்ட, அங்கே போய் மூவரும் உட்கார்ந்தனர்.பேரர் வந்ததும் அவரவர்க்கானதை ஆர்டர் கொடுக்க, சிறிது நிமிடத்தில் நால்வரும் சொல்லிய டிபன் வகைகள் வந்து சேர பின்னர் சாப்பிட்டு முடித்தனர். வேறு எதாவது வேண்டுமாயென்று கபிலன் கேட்க, ரியா, எனக்கு காஃபி வேண்டுமென்றாள்".

" அவளை ஒரு பார்வை பார்த்தவன், ஆதி உனக்குடா என்க,எதுவும் வேண்டாம்ணா என்கவும், ரியாவிற்கு மட்டும் ஆர்டர் பண்ணினான்".

" மணி என்ன ஆகுது, இந்த நேரத்தில் இவளுக்கு காஃபி கேட்குதென்று முணுமுணுத்தான்".

"ஆஹா ஆஹா என்றவாறே ரியா காஃபியை குடித்து முடித்தவள்,ம்ம் போகலாமென்று எழ, தேவகிக்கு அண்ணன் மகளை பார்த்து சிரிப்பு வந்து விட்டது".

" இவளுக்காகவே, இன்னும் நாலு மாடு வாங்கணும் போலடா கபிலா என்றது, அவன் மனசாட்சி".

"மீண்டும் பயணத்தை தொடங்கினர்".

" இரவு நேர பயணம், பக்கத்தில் தன் மனதிற்கு பிரியமானவள், காரில் மெல்லிசையாக இளையராஜாவின் பாடல்கள் ஒலிக்க, கபிலனுக்கு பேரின்பமாக இருந்தது".

" அப்பொழுது தேவகியின் ஃபோனிற்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்க, அச்சோ... ".

" உங்க அப்பாவா தான் இருக்கும் கபி, நாம வந்து சேர்ந்ததை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லலையே என்றபடியே, அட்டென் பண்ணியவர் சொல்லுங்க என்க,ஏன்டி, எந்த உலகத்தில் இருக்கீங்க?,ஆத்தாளும், மவனும்".மணி என்ன ஆகுது?, இதுவரை ஒரு போன காணுமென்றார் கபிலனின் அப்பா,கண்ணன்".

" இதோ நம்ப கடலூரை தான்டி வந்தேட்டோங்க என்க,ம்ம், பார்த்து பத்திரமா வாங்களென்று சொல்லி வைத்து விட்டார்".

" இரவு நேரத்தில் அவ்வளவு டிராபிக் இல்லாததால் அனாயசயமாக காரை ஓட்டுபவனை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தவள்,எப்படி இத்தனை நாளா இந்த மனுஷனை கவனிக்காமல் போனோமென்று யோசனையானாள்".

"ரொம்ப நேரமாக தன்னை ஒருத்தி விழுங்குற போல பார்த்துக்கொண்டே வருகிறாள் என்பது புரிய,அவள் பக்கம் திரும்பியவன், தனது இடது புருவத்தை மேலே தூக்கி என்ன என்றான்".

" இப்படி திடிரென்று தன்பக்கம் திரும்பி கேட்பானென்று எதிர்பார்க்காத ரியா, கபிலனின் சைகையில் அதிர்ந்து போனாள்".

" அவளின் அதிர்சியான தோற்றத்தை பார்த்தவன்,கீர் மேல் இருந்த கையை எடுத்து அவளின் இடது கையை பிடித்தவன், அவள் கையை எடுத்து கீர் மேல் வைத்து, அதன் மேல் தனது கையை வைத்துக்கொண்டான்".

" ரியாவிற்கோ கபிலனின் கைப்பிடி ஸ்பரிசங்கள்,சொல்லொன்னா உணர்வுகளை அள்ளி பொழிந்தது".

" பிளீஸ் விடுங்களென்று கண்களால் அவனிடம் கெஞ்சினாள்".

" ரியாவின் கண்கள் பேசிய மொழியில், கட்டிளங்காளையவன் கிறங்கி போனான்".

" மனமேயில்லாமல் ரியாவின் கையை விட்டவன், கவனத்தை ரோட்டில் பதித்தான்".

" இவ்வளவு நேரம் அவனின் கையிற்குள் அகப்பட்டிருந்த தனது கையை எடுத்து நெஞ்சின் மேல் வைத்து கண்ணை மூடியவளின் இதழோரம், மெல்லியதாக சிரிப்பு வந்தது".

ஆர்கலி எங்கே?
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top