Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
இரத்தினபுரி- பிளாஸ் பேக்
கோயம்புத்தூர்:
"சிறிதூ நிமிடம் வரை இருவரும் பார்வையிலே லயித்திருக்க,வழக்கம் போல் அடிக்கும் அலாரத்தின் சத்தம் கேட்டு, இருவரும் நிகழ் உலகிற்கு வந்தனர்".
"உள்ளே வந்தவள் கீழே குனிந்து நிற்க,ஆர்கலி யார் வந்திருக்காங்கனு உனக்கு தெரியலையானு ஃபாதர் கேட்க,ம்ம்னு தலையசைத்தாள்".
"தம்பி நீங்கள் கூப்பிட்டு போங்களென்க, சரிங்க ஃபாதர் என்றவாறே வா என்று அங்கிருந்து ருத்ரன் செல்ல,ஆர்கலியோ ஃபாதரை நிமிர்ந்து பார்க்க, போய்ட்டு வா என்றார்".
" வாசல் வரை வந்தவன் அங்கிருந்த காரின் டிரைவர் சீட்டில் ஏற,ஆர்கலியோ பின் பக்க கதவை திறக்கப்போனாள்".
" திரும்பி ஒரு பார்வை தான் பார்த்தான், வேகமாக முன் கதவை திறந்து உட்கார்ந்து கொண்டவள், பார்வையை ஜன்னல் பக்கம் திருப்பிக்கொண்டாள்".
" ருத்ரனின் வருகையை, ஆர்கலியும் எதிர் பார்க்கவில்லை.இவங்க எப்போ வந்திருப்பாங்களென்று? அவளுக்கு யோசனையானது".
" சிறிது நிமிட பயணம் வரை இருவருக்கும் அமைதியிலே கழிய, ம்கும்னு தொண்டையை கணைத்தவன், எப்படி இருக்க?".
" ஏன் ரெண்டு வருஷம் நான் எப்படி இருக்கேனென்று கவலை இல்லை?, இப்போ மட்டும் என்ன அக்கறையென்றாள்?".
" ஓஓஓ மேடம்,சாரி பொண்டாட்டி கோவமா இருக்கீங்களோனு ருத்ரன் சொல்லிய பிறகு தான், தான் அவன் கேள்விக்கு பதில் சொல்லியிருக்கிறோம் என்பது ஆர்கலிக்கு புரிந்து அய்யோனு வாயை மூடிக்கொண்டாள்".
" அவளின் செய்கையை ஓரக்கண்ணால் பார்த்து ரசித்தவன், அங்கிருந்த மாலின் பார்க்கிங் ஏரியாவிற்குள் சென்று காரை நிறுத்தியவன், கீழே இறங்க, ஆர்கலியும் இறங்கினாள்".
" வா என்று அவளோடு இணைந்து நடக்க,இருவருக்கும் சில அங்குலம் இடைவெளி இருந்தாலும், ஏதோ ஓர் மாயம் இருவரையும் சூழ்ந்தது".
" லிப்ட் பட்டனை பிரஸ் பண்ணியதும் ஓப்பன் ஆக, ருத்ரன் உள்ளே போக, அவன் பின்னாடி போனவள் ஒரு ஓரமாக, நிற்க,அந்த நேரம் இன்னும் சிலரும் லிப்டிற்குள் வர,சிலர் ஆண்களாக இருந்தனர்".
" இருவரின் பார்வை அவள் மேல் படுவதை பார்த்தவன், அவர்களை ஒரு முறை முறைத்து விட்டு, ஆர்கலியை பார்க்க,அவன் பார்வையில் எதை கண்டாளோ, அவனருகில் வந்து நின்று கொண்டாள்".
" ஐந்தாவது தளம் வந்து லிப்ட் நின்றதும், ருத்ரன் ம்ம் என்க, அவனோடு ஆர்கலியும் இறங்கினாள்".
" அங்கிருந்த ஷோரூமிற்கு சென்றவன், அவளுக்கு தேவையான டிரஸ்களை வாங்கி குவித்தான்".
" அவள் போதும் போதுமென்க,அவளருகில் வந்தவன், உன் புருஷன் ஓரளவிற்கு சம்பாரிக்கிறான் தான் கவலைப்படாதே".
"பல்லை கடித்துக்கொண்டு, அது இந்த ரெண்டு வருஷமா தெரியலையா? என்றாள்".
"மேலிருந்து கீழாக அவளை ஒரு பார்வை பார்த்தவன்,எதுவும் சொல்லாமல் போய் உனக்கு தேவையான இன்னர்ஸ் எடுத்து வா, இல்லை அதையும் நான் தான் எடுக்கணுமா? என்க,அய்யோஓஓ என்றாள்".
" குயிக்...குயிக்...., 10 மினிட்ஸ்ல வா என்றவன், தன் ஃபோனை பார்க்க தொடங்கினான்".
" பின்னர் அங்கிருந்து உள்ளே போனவள், தேவையானதை எடுத்தவள், அவன் பார்வையில் படாமல் முன்பு எடுத்த ஆடைகளுக்கு கீழே வைத்தாள்".
" ஓரக்கண்ணால் அவள் செய்கைகளை பார்த்தவனுக்கு சிரிப்பு வந்தது".
"எடுத்த ஆடைகளுக்கான பணத்தை கொடுத்து துணிகளை வாங்கியவன், மீண்டும் லிப்டிற்குள் ஏற, ஆர்கலியும் அவனோடு வந்து நின்றாள்".
" தரைதளத்தில் வந்து லிப்ட் நின்று ஓப்பன் ஆக, காரை நோக்கி சென்றவன், டிக்கியை திறந்து பைகளை உள்ளே வைத்து லாக் பண்ணி விட்டு, ஏறு என்றவாறே டிரைவர் சீட்டில் உட்கார்ந்தான்".
" அடுத்ததாக அவளை அழைத்துக்கொண்டு அங்குள்ள பேமஸான ஜவுளிக்கடைக்கு சென்றவன், பட்டுப்புடவை செக்க்ஷனுக்கு அழைத்து போய் புடவை எடு என்றான்".
" எதற்கு இதெல்லாமென்று ஆர்கலி கேட்க,சொன்னதை செய்டி என்றான்".
" தன்னவன் முதல் முறை டி என்று சொன்னதை கேட்டவளுக்கு இன்பமாய் இருந்தது".
" அவளின் மோன நிலையை பார்த்தவன், அவளுக்கு ஏற்ற நிறத்தில் புடவையை செலக் பண்ணி விட்டு, இதற்கு ரெடிமேட் பிளவுஸ் வேண்டுமென்றான்".
"மூன்றாவது தளத்தில் இருக்குங்க சார், புடவைக்கு பில் போட்டு கொடுத்தீங்களென்றால், முந்தானையில் நாட் போட்டுருவோம்னு சேல்ஸ் மேன் சொல்ல, சரி என்றான்".
" புடவைக்கான பணத்தை கொடுத்தவன், தனது போனில் புடவையை போட்டோ எடுத்துக்கொண்டு, கட் பண்ணி கொடுத்த பிளவுஸ் பீஸோடு அவளிடம் வந்தவன், பகல் கனவா என்க, திரு திருவென்று முழித்தாள்".
" போய் உனக்கு ரெடிமேட் பிளவுஸ் இந்த கலருக்கு ஏற்ற போல வாங்கு. எனக்கு ஒரு கால் பண்ணனும், நான் பேசிட்டு வரேனென்றவன், பிளவுஸ் செக்க்ஷனுக்கு அவளை அனுப்பி வைத்தான்".
" உள்ளே வந்தவளிடம் வாங்க மேடம் என்று சேல்ஸ் கேர்ள் சொல்ல, பிளவுஸ் மெட்டீரியலை எடுத்துக்கொடுத்தவள், இதற்கு ஏற்ற போல ரெடிமேட் பிளவுஸ்.ஓகே மேடம் என்றவாறே அவள் சைஸ் கேட்டுக்கொண்டு,எடுத்து போட்டார்".
"நல்லா ஆரி வொர்க் செய்த மாடல்களை எடுத்து போட, ஒரு பிளவுஸை எடுத்தவள் திருப்பி திருப்பி பார்த்து விட்டு, அதன் விலையை பார்க்க,இவ்வளவானு அதிர்ந்தாள்".
" இவ்வளவு ரேட்டில் வேண்டாங்க, இருப்பதிலே குறைவான விலையில் தாங்கனு சொல்லும் போதே, ருத்ரனும் அங்கு வந்து சேர்ந்தான்".
"என்ன எடுத்தாச்சா? என்க, இல்லை என்றவள், நீங்க வேற எடுங்களென்று சொல்ல, ஏன் இதுலாம் நல்லா தானே இருக்கென்றவனே ஒன்னை தேர்வு செய்து இது நல்லா இருக்கென்று சொல்லி பில்லிற்கு அனுப்பச்சொன்னான்".
சென்னை மெடிக்கல் காலேஜ்& ஹாஸ்டல்:
"ரியா நேரம் ஆகுது வாடி என்று, ஆதிரா வாசலில் நின்று கத்திக்கொண்டிருந்தாள்".
" இதோடி என்றபடியே, சூட்கேஸில் எதையோ ரியா தேடிக்கொண்டிருக்க, நீ எப்பையாவது வந்து தொலைடி, எக்ஸாமிற்கு டைமாகிட்டு. நான் போறேன்னு அங்கிருந்து சென்றாள்".
" ஐஐஐஐ... கிடைச்சிடுச்சி என்றவள், அந்த ஹீரோ பென்னிற்கு முத்தத்தை கொடுத்தவள், கதவை லாக் பண்ணி விட்டு, வேகமாக ஓடிப்போய் ஆதிராவை பிடித்தாள்".
" ஆதி இது மாமா வாங்கி தந்த பென் டி. கடைசி எக்ஸாம் அதால் எழுதணுமென்று தோன்றியது.இதை தேடினது தான் இவ்வளவு நேரமாகிட்டென்று ரியா சொல்ல, ம்ம் என்றாள்".
" இருவரும் அவர்களுக்கான எக்ஸாம் ஹாலிற்குள் சென்றனர்.மூன்று மணி நேரம் போனதே தெரியவில்லை, எழுதியதை மீண்டும் ஒரு முறை சரி பார்த்துக்கொண்ட ஆதிரா, கண்ணை மூடி திறந்தாள்".
" இன்றோடு தனது நான்கு வருட மருத்துவப்படிப்பு முடிகின்றது, இனி மேற்க்கொண்டு என்ன செய்வது என்பதை பற்றி யோசிக்காமல் இருந்து விட்டாள்".
"பேப்பரை சப்மிட் பண்ணச்சொல்லி சூப்பர்வைஸர் சொல்ல, மாணவர்களும், தங்கள் தேர்வு தாளை கொடுத்துச்சென்றனர்".
ஹாலை விட்டு வெளியே வந்த ஆதிரா, அவளுக்கு எதிரில் வந்து நின்றவனை, புருவம் சுருக்க,ஆதிரா உன்கிட்ட கொஞ்சம் பேசணுமென்றான் தீபன், சொல்லு தீபன் என்ன விஷயம்?
அவனோ,கொஞ்சம் தள்ளி வாயேன் என்க, ம்ம் என்றவள், வழியை விட்டு சுவற்றோரம் தள்ளி வந்து நின்றவள், சொல்லுடா, என்ன?".
"ஆதி ஒரு விஷயமென்க,அடேய் அதை தான் கேட்குறேனென்றாள்.ஆதி என்னை தப்பா நினைக்காதடி. மனசுக்குள் ஒன்னை வச்சிக்கிட்டு, வெளியே வேற மாதிரி பேச கஷ்டமா இருக்கு".
"நீ கோவப்பட்டாலும் பரவாயில்லை, ஐ லவ் யூ டி, வாழ்நாள் முழுவதும் உன் கூட வாழ ஆசைப்படுறேன்".
"தீபன் சொன்னதைக்கேட்ட ஆதிராவிற்கு சிறிது அதிர்ச்சி தான். பின் சுதாரித்தவள்,சாரிடா, நீ எனக்கு எப்போதும் நல்ல நண்பன் மட்டும் தான்".
"அதுவுமில்லாமல், எனக்கு சின்ன வயதிலே கல்யாணம் பேசி முடிச்சிட்டாங்கடா, இவங்க தானென்று தனது மைபைலில் உள்ள ஃபோட்டோவை காட்டியவள், என்னோட மாமா பையன், பிஸ்னஸ்மேன்டா".
"நான் எதுவும் நினைக்கலைடா, இதை இதோட மறந்துடுனு ஆதிரா சொல்ல, சாரிடி, எனக்கு கொஞ்ச நாளா தான் இதைப்போல எண்ணம்".
"மற்றபடி இத்தனை வருடமாகவும் உனக்கு நண்பனாக தான் இருந்திருக்கேனென்று வருத்தப்பட்டான்".
" என்னடா நடக்குது என்றவாறே ரியாவும், இன்னொரு தோழியான மேகாவும் அங்கு வந்தனர்".
" பேசிட்டு இருக்கோம் பக்கி என்றான்".
" அப்புறம்டா வளர்ந்த மாடே, வர வெள்ளிக்கிழமை எனக்கு நிச்சயதார்த்தம், ஒழுங்கு மரியாதையா வந்து சேருனு ரியா சொல்ல,எதேஏஏஏ..!
"அய்யோ கபிலன் சார் உங்க வாழ்க்கையில் இவ்வளவு பெரிய இடியானு தீபன் சொல்ல, ரியாவோ தன் நண்பனின் செயலைக்கண்டு முறைத்து வைத்தாள்".
" டேய்... ஆத்தா மலையேறினால் நீ செத்தாயென்று மேகா சொல்ல, அதுவும் வாஸ்தவம் தானென்றவன், என்னடி திடீர்னு ஷாக் குடுக்குற?".
"எனக்கே நேற்று தான் எருமை தெரியும். விருமாண்டி தான் சொன்னார்டா".
"நான் இல்லாமலா என்றவன், நீ எப்போ ஆதிரா கிளம்புற என்க, தெரியலைடா என்றாள்".
" நீ வாலு என மேகாவை கேட்க, ஈவ்னிங் டா மாடு".
" புதுப்பொண்ணு எப்போ என்க, எப்படியும் அப்பா ஆள் அனுப்புவாங்கடா, வந்துட்டே இருக்கலாமென்று ரியா சொல்லும் போது, அவளுக்கு கால் வந்தது".
" எடுத்து பார்க்க, விருமாண்டி என்ற பெயர் வர, சிரிப்போடே அட்டென் பண்ணியவள், சொல்லுங்க மாமா என்றவள், என்னாஆஆ என்று அதிர்ந்து, இதோ என்று கட் பண்ணி விட்டு, அடேய் அந்த விருமாண்டி தாண்டா வந்துருக்கார்.வாங்க வாங்கனு நண்பர்களிடம் சொல்லிக்கொண்டு வேகமாக சென்றாள்".
"இவள் என்ன இப்படி குண்டு போட்டுகிட்டு போறாள்?, இப்போ தான் குடும்ப இஸ்திரி பெட்டியாக ஆகப்போறேனு சொன்னாள், அதற்குள்ள விருமாண்டி வந்தாச்சினு ஓடுறாளே, ஒரு வேளை ரொம்ப படிச்சதில் மண்டை குழம்பி போய்ட்டாளோனு தீபன் சொல்ல, ம்ம் இதை இங்கே கேட்டு புண்ணியம் இல்லை மாடு".
" கீழேப்போனால் ரியா இருப்பாள், அவளிடம் கேட்டால் நல்ல பதிலை உனக்கு சொல்லுவாளென்று மேகா சொல்ல, ஏண்டி அந்த பிசாசுகிட்ட மாட்டி நான் சாகணும், நீ அதை கை தட்டி சிரிக்கணும், அப்படி தானே என்க,எஸ் டா என்றாள்".
" ச்சூஊஊஊ என்ற ஆதிரா, வாங்க லூசுங்களா கீழே போகலாமென்க,ம்ம் என்றவர்கள், பின்னர் மூவரும் ரியாவை தொடர்ந்து படியில் இறங்கி கார் பார்க்கிங்கை நோக்கி சென்றனர்".
" வேகமாக வந்த ரியாவோ அங்கே கபிலனும், அவன் அம்மா தேவகியும் இருந்ததை பார்த்து திகைத்து போனாள்".