• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
இரத்தினபுரி- பிளாஸ் பேக்

கோயம்புத்தூர்:

"சிறிதூ நிமிடம் வரை இருவரும் பார்வையிலே லயித்திருக்க,வழக்கம் போல் அடிக்கும் அலாரத்தின் சத்தம் கேட்டு, இருவரும் நிகழ் உலகிற்கு வந்தனர்".


"உள்ளே வந்தவள் கீழே குனிந்து நிற்க,ஆர்கலி யார் வந்திருக்காங்கனு உனக்கு தெரியலையானு ஃபாதர் கேட்க,ம்ம்னு தலையசைத்தாள்".

"தம்பி நீங்கள் கூப்பிட்டு போங்களென்க, சரிங்க ஃபாதர் என்றவாறே வா என்று அங்கிருந்து ருத்ரன் செல்ல,ஆர்கலியோ ஃபாதரை நிமிர்ந்து பார்க்க, போய்ட்டு வா என்றார்".

" வாசல் வரை வந்தவன் அங்கிருந்த காரின் டிரைவர் சீட்டில் ஏற,ஆர்கலியோ பின் பக்க கதவை திறக்கப்போனாள்".

" திரும்பி ஒரு பார்வை தான் பார்த்தான், வேகமாக முன் கதவை திறந்து உட்கார்ந்து கொண்டவள், பார்வையை ஜன்னல் பக்கம் திருப்பிக்கொண்டாள்".

" ருத்ரனின் வருகையை, ஆர்கலியும் எதிர் பார்க்கவில்லை.இவங்க எப்போ வந்திருப்பாங்களென்று? அவளுக்கு யோசனையானது".

" சிறிது நிமிட பயணம் வரை இருவருக்கும் அமைதியிலே கழிய, ம்கும்னு தொண்டையை கணைத்தவன், எப்படி இருக்க?".

" ஏன் ரெண்டு வருஷம் நான் எப்படி இருக்கேனென்று கவலை இல்லை?, இப்போ மட்டும் என்ன அக்கறையென்றாள்?".

" ஓஓஓ மேடம்,சாரி பொண்டாட்டி கோவமா இருக்கீங்களோனு ருத்ரன் சொல்லிய பிறகு தான், தான் அவன் கேள்விக்கு பதில் சொல்லியிருக்கிறோம் என்பது ஆர்கலிக்கு புரிந்து அய்யோனு வாயை மூடிக்கொண்டாள்".

" அவளின் செய்கையை ஓரக்கண்ணால் பார்த்து ரசித்தவன், அங்கிருந்த மாலின் பார்க்கிங் ஏரியாவிற்குள் சென்று காரை நிறுத்தியவன், கீழே இறங்க, ஆர்கலியும் இறங்கினாள்".

" வா என்று அவளோடு இணைந்து நடக்க,இருவருக்கும் சில அங்குலம் இடைவெளி இருந்தாலும், ஏதோ ஓர் மாயம் இருவரையும் சூழ்ந்தது".

" லிப்ட் பட்டனை பிரஸ் பண்ணியதும் ஓப்பன் ஆக, ருத்ரன் உள்ளே போக, அவன் பின்னாடி போனவள் ஒரு ஓரமாக, நிற்க,அந்த நேரம் இன்னும் சிலரும் லிப்டிற்குள் வர,சிலர் ஆண்களாக இருந்தனர்".

" இருவரின் பார்வை அவள் மேல் படுவதை பார்த்தவன், அவர்களை ஒரு முறை முறைத்து விட்டு, ஆர்கலியை பார்க்க,அவன் பார்வையில் எதை கண்டாளோ, அவனருகில் வந்து நின்று கொண்டாள்".

" ஐந்தாவது தளம் வந்து லிப்ட் நின்றதும், ருத்ரன் ம்ம் என்க, அவனோடு ஆர்கலியும் இறங்கினாள்".

" அங்கிருந்த ஷோரூமிற்கு சென்றவன், அவளுக்கு தேவையான டிரஸ்களை வாங்கி குவித்தான்".

" அவள் போதும் போதுமென்க,அவளருகில் வந்தவன், உன் புருஷன் ஓரளவிற்கு சம்பாரிக்கிறான் தான் கவலைப்படாதே".

"பல்லை கடித்துக்கொண்டு, அது இந்த ரெண்டு வருஷமா தெரியலையா? என்றாள்".

"மேலிருந்து கீழாக அவளை ஒரு பார்வை பார்த்தவன்,எதுவும் சொல்லாமல் போய் உனக்கு தேவையான இன்னர்ஸ் எடுத்து வா, இல்லை அதையும் நான் தான் எடுக்கணுமா? என்க,அய்யோஓஓ என்றாள்".

" குயிக்...குயிக்...., 10 மினிட்ஸ்ல வா என்றவன், தன் ஃபோனை பார்க்க தொடங்கினான்".

" பின்னர் அங்கிருந்து உள்ளே போனவள், தேவையானதை எடுத்தவள், அவன் பார்வையில் படாமல் முன்பு எடுத்த ஆடைகளுக்கு கீழே வைத்தாள்".

" ஓரக்கண்ணால் அவள் செய்கைகளை பார்த்தவனுக்கு சிரிப்பு வந்தது".

"எடுத்த ஆடைகளுக்கான பணத்தை கொடுத்து துணிகளை வாங்கியவன், மீண்டும் லிப்டிற்குள் ஏற, ஆர்கலியும் அவனோடு வந்து நின்றாள்".

" தரைதளத்தில் வந்து லிப்ட் நின்று ஓப்பன் ஆக, காரை நோக்கி சென்றவன், டிக்கியை திறந்து பைகளை உள்ளே வைத்து லாக் பண்ணி விட்டு, ஏறு என்றவாறே டிரைவர் சீட்டில் உட்கார்ந்தான்".

" அடுத்ததாக அவளை அழைத்துக்கொண்டு அங்குள்ள பேமஸான ஜவுளிக்கடைக்கு சென்றவன், பட்டுப்புடவை செக்க்ஷனுக்கு அழைத்து போய் புடவை எடு என்றான்".

" எதற்கு இதெல்லாமென்று ஆர்கலி கேட்க,சொன்னதை செய்டி என்றான்".

" தன்னவன் முதல் முறை டி என்று சொன்னதை கேட்டவளுக்கு இன்பமாய் இருந்தது".

" அவளின் மோன நிலையை பார்த்தவன், அவளுக்கு ஏற்ற நிறத்தில் புடவையை செலக் பண்ணி விட்டு, இதற்கு ரெடிமேட் பிளவுஸ் வேண்டுமென்றான்".

"மூன்றாவது தளத்தில் இருக்குங்க சார், புடவைக்கு பில் போட்டு கொடுத்தீங்களென்றால், முந்தானையில் நாட் போட்டுருவோம்னு சேல்ஸ் மேன் சொல்ல, சரி என்றான்".

" புடவைக்கான பணத்தை கொடுத்தவன், தனது போனில் புடவையை போட்டோ எடுத்துக்கொண்டு, கட் பண்ணி கொடுத்த பிளவுஸ் பீஸோடு அவளிடம் வந்தவன், பகல் கனவா என்க, திரு திருவென்று முழித்தாள்".

" போய் உனக்கு ரெடிமேட் பிளவுஸ் இந்த கலருக்கு ஏற்ற போல வாங்கு. எனக்கு ஒரு கால் பண்ணனும், நான் பேசிட்டு வரேனென்றவன், பிளவுஸ் செக்க்ஷனுக்கு அவளை அனுப்பி வைத்தான்".

" உள்ளே வந்தவளிடம் வாங்க மேடம் என்று சேல்ஸ் கேர்ள் சொல்ல, பிளவுஸ் மெட்டீரியலை எடுத்துக்கொடுத்தவள், இதற்கு ஏற்ற போல ரெடிமேட் பிளவுஸ்.ஓகே மேடம் என்றவாறே அவள் சைஸ் கேட்டுக்கொண்டு,எடுத்து போட்டார்".

"நல்லா ஆரி வொர்க் செய்த மாடல்களை எடுத்து போட, ஒரு பிளவுஸை எடுத்தவள் திருப்பி திருப்பி பார்த்து விட்டு, அதன் விலையை பார்க்க,இவ்வளவானு அதிர்ந்தாள்".

" இவ்வளவு ரேட்டில் வேண்டாங்க, இருப்பதிலே குறைவான விலையில் தாங்கனு சொல்லும் போதே, ருத்ரனும் அங்கு வந்து சேர்ந்தான்".

"என்ன எடுத்தாச்சா? என்க, இல்லை என்றவள், நீங்க வேற எடுங்களென்று சொல்ல, ஏன் இதுலாம் நல்லா தானே இருக்கென்றவனே ஒன்னை தேர்வு செய்து இது நல்லா இருக்கென்று சொல்லி பில்லிற்கு அனுப்பச்சொன்னான்".

சென்னை மெடிக்கல் காலேஜ்& ஹாஸ்டல்:

"ரியா நேரம் ஆகுது வாடி என்று, ஆதிரா வாசலில் நின்று கத்திக்கொண்டிருந்தாள்".

" இதோடி என்றபடியே, சூட்கேஸில் எதையோ ரியா தேடிக்கொண்டிருக்க, நீ எப்பையாவது வந்து தொலைடி, எக்ஸாமிற்கு டைமாகிட்டு. நான் போறேன்னு அங்கிருந்து சென்றாள்".

" ஐஐஐஐ... கிடைச்சிடுச்சி என்றவள், அந்த ஹீரோ பென்னிற்கு முத்தத்தை கொடுத்தவள், கதவை லாக் பண்ணி விட்டு, வேகமாக ஓடிப்போய் ஆதிராவை பிடித்தாள்".

" ஆதி இது மாமா வாங்கி தந்த பென் டி. கடைசி எக்ஸாம் அதால் எழுதணுமென்று தோன்றியது.இதை தேடினது தான் இவ்வளவு நேரமாகிட்டென்று ரியா சொல்ல, ம்ம் என்றாள்".

" இருவரும் அவர்களுக்கான எக்ஸாம் ஹாலிற்குள் சென்றனர்.மூன்று மணி நேரம் போனதே தெரியவில்லை, எழுதியதை மீண்டும் ஒரு முறை சரி பார்த்துக்கொண்ட ஆதிரா, கண்ணை மூடி திறந்தாள்".

" இன்றோடு தனது நான்கு வருட மருத்துவப்படிப்பு முடிகின்றது, இனி மேற்க்கொண்டு என்ன செய்வது என்பதை பற்றி யோசிக்காமல் இருந்து விட்டாள்".

"பேப்பரை சப்மிட் பண்ணச்சொல்லி சூப்பர்வைஸர் சொல்ல, மாணவர்களும், தங்கள் தேர்வு தாளை கொடுத்துச்சென்றனர்".

ஹாலை விட்டு வெளியே வந்த ஆதிரா, அவளுக்கு எதிரில் வந்து நின்றவனை, புருவம் சுருக்க,ஆதிரா உன்கிட்ட கொஞ்சம் பேசணுமென்றான் தீபன், சொல்லு தீபன் என்ன விஷயம்?

அவனோ,கொஞ்சம் தள்ளி வாயேன் என்க, ம்ம் என்றவள், வழியை விட்டு சுவற்றோரம் தள்ளி வந்து நின்றவள், சொல்லுடா, என்ன?".

"ஆதி ஒரு விஷயமென்க,அடேய் அதை தான் கேட்குறேனென்றாள்.ஆதி என்னை தப்பா நினைக்காதடி. மனசுக்குள் ஒன்னை வச்சிக்கிட்டு, வெளியே வேற மாதிரி பேச கஷ்டமா இருக்கு".

"நீ கோவப்பட்டாலும் பரவாயில்லை, ஐ லவ் யூ டி, வாழ்நாள் முழுவதும் உன் கூட வாழ ஆசைப்படுறேன்".

"தீபன் சொன்னதைக்கேட்ட ஆதிராவிற்கு சிறிது அதிர்ச்சி தான். பின் சுதாரித்தவள்,சாரிடா, நீ எனக்கு எப்போதும் நல்ல நண்பன் மட்டும் தான்".

"அதுவுமில்லாமல், எனக்கு சின்ன வயதிலே கல்யாணம் பேசி முடிச்சிட்டாங்கடா, இவங்க தானென்று தனது மைபைலில் உள்ள ஃபோட்டோவை காட்டியவள், என்னோட மாமா பையன், பிஸ்னஸ்மேன்டா".

"நான் எதுவும் நினைக்கலைடா, இதை இதோட மறந்துடுனு ஆதிரா சொல்ல, சாரிடி, எனக்கு கொஞ்ச நாளா தான் இதைப்போல எண்ணம்".

"மற்றபடி இத்தனை வருடமாகவும் உனக்கு நண்பனாக தான் இருந்திருக்கேனென்று வருத்தப்பட்டான்".

" என்னடா நடக்குது என்றவாறே ரியாவும், இன்னொரு தோழியான மேகாவும் அங்கு வந்தனர்".

" பேசிட்டு இருக்கோம் பக்கி என்றான்".

" அப்புறம்டா வளர்ந்த மாடே, வர வெள்ளிக்கிழமை எனக்கு நிச்சயதார்த்தம், ஒழுங்கு மரியாதையா வந்து சேருனு ரியா சொல்ல,எதேஏஏஏ..!

"அய்யோ கபிலன் சார் உங்க வாழ்க்கையில் இவ்வளவு பெரிய இடியானு தீபன் சொல்ல, ரியாவோ தன் நண்பனின் செயலைக்கண்டு முறைத்து வைத்தாள்".

" டேய்... ஆத்தா மலையேறினால் நீ செத்தாயென்று மேகா சொல்ல, அதுவும் வாஸ்தவம் தானென்றவன், என்னடி திடீர்னு ஷாக் குடுக்குற?".

"எனக்கே நேற்று தான் எருமை தெரியும். விருமாண்டி தான் சொன்னார்டா".

"நான் இல்லாமலா என்றவன், நீ எப்போ ஆதிரா கிளம்புற என்க, தெரியலைடா என்றாள்".

" நீ வாலு என மேகாவை கேட்க, ஈவ்னிங் டா மாடு".

" புதுப்பொண்ணு எப்போ என்க, எப்படியும் அப்பா ஆள் அனுப்புவாங்கடா, வந்துட்டே இருக்கலாமென்று ரியா சொல்லும் போது, அவளுக்கு கால் வந்தது".

" எடுத்து பார்க்க, விருமாண்டி என்ற பெயர் வர, சிரிப்போடே அட்டென் பண்ணியவள், சொல்லுங்க மாமா என்றவள், என்னாஆஆ என்று அதிர்ந்து, இதோ என்று கட் பண்ணி விட்டு, அடேய் அந்த விருமாண்டி தாண்டா வந்துருக்கார்.வாங்க வாங்கனு நண்பர்களிடம் சொல்லிக்கொண்டு வேகமாக சென்றாள்".

"இவள் என்ன இப்படி குண்டு போட்டுகிட்டு போறாள்?, இப்போ தான் குடும்ப இஸ்திரி பெட்டியாக ஆகப்போறேனு சொன்னாள், அதற்குள்ள விருமாண்டி வந்தாச்சினு ஓடுறாளே, ஒரு வேளை ரொம்ப படிச்சதில் மண்டை குழம்பி போய்ட்டாளோனு தீபன் சொல்ல, ம்ம் இதை இங்கே கேட்டு புண்ணியம் இல்லை மாடு".

" கீழேப்போனால் ரியா இருப்பாள், அவளிடம் கேட்டால் நல்ல பதிலை உனக்கு சொல்லுவாளென்று மேகா சொல்ல, ஏண்டி அந்த பிசாசுகிட்ட மாட்டி நான் சாகணும், நீ அதை கை தட்டி சிரிக்கணும், அப்படி தானே என்க,எஸ் டா என்றாள்".

" ச்சூஊஊஊ என்ற ஆதிரா, வாங்க லூசுங்களா கீழே போகலாமென்க,ம்ம் என்றவர்கள், பின்னர் மூவரும் ரியாவை தொடர்ந்து படியில் இறங்கி கார் பார்க்கிங்கை நோக்கி சென்றனர்".

" வேகமாக வந்த ரியாவோ அங்கே கபிலனும், அவன் அம்மா தேவகியும் இருந்ததை பார்த்து திகைத்து போனாள்".
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
பொள்ளாச்சி பெரிய வீடு:

" சத்தியமூர்த்தியின் அருகில் சென்றவன் என்னை மன்னிச்சிடுப்பா என்க".


என்னப்பா இதுலாம்?.

"நானே இந்த கல்யாணத்தை பேசி முடித்திருக்க வேண்டும்,உன்னோட முடிவில் தெளிவா இருப்பது தெரியாமல், அமைதியா இருந்துட்டேன்பா ".

" இந்த அப்பனை மன்னிச்சிடுய்யா என்க,அய்யோஓஓஓ அப்பா! ".

" வள்ளி போல நீயும் நாலு அடி வேண்டுமானால் குடு, இப்படி பேசி என்னை நோகடிக்காதப்பா".

" சரிப்பா, நடந்து முடிந்ததை விடு. இனி அதை பத்தி பேசி ஒன்னும் புண்ணியம் இல்லை".

"இனி நடக்கப் போறத பார்க்கலாம். நீ அடுத்த வாரம் திங்கட்கிழமை தானே ட்ரெய்னிங்கில் ஜாயின் பண்ணனும்?,அதுக்கு தேவையானதை ஏற்பாடு பண்ணுப்பா.பிளைட்ல டிக்கெட் போட்டுக்க, நாங்களும் அங்கு வரட்டுமாப்பா?".

"என்னப்பா இப்படி கேட்கிறனு வெற்றி கண்கலங்க,இல்ல தலைக்கு உசந்த புள்ளையாகிட்ட. பள்ளிக்கூட புள்ளை போல உன்ன விட வரோம்னு சொல்லுறேனே, அதான்".

"ஹைதராபாத் தானே கண்ணு? ".

"ஆமாப்பா, ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமி (SVPNPA) தான் முதன்மை ஐபிஎஸ் பயிற்சி சென்டர்".

"ஐபிஎஸ் டிரைனிங் இரண்டு வருஷம் ஆகும், இது 4 கட்டங்களாகவும், தொகுதிகளாகவும் பிரிந்தது".

" ரெண்டு வருஷத்தில் தான் நாம எல்லாவற்றையும் கத்துக்கணும்.தங்குறது, சாப்பாடு, ஜிம், ஹாஸ்பிட்டல்,எல்லாம் அங்கையே இருக்குப்பா.எதுக்கும் கவலை பட வேண்டாம், கவனத்தை டிரைனிங்கில் ஒழுங்கா செலுத்தணும்".

" எம்புள்ள காக்கி சட்டை போட்டு வருவது கண்ணு முன்னால நிக்கிது தம்பி, மனசு கொஞ்சம் சங்கடமாவே இருந்துச்சியா".

"எங்களை பற்றி யோசித்தே உன் ஆசை நிராசையா போய்டுமோனு, நான் கும்பிட்ட அந்த செந்தூர் முருகன் கைவிடலை.அத்தனை பேருக்கு முன்ன ஜனனி கேள்வி கேட்டப்போ சுறுக்குனு முள்ளு தச்சிது தான்,ஆனால் அந்த பொண்ணு கேட்டது வாஸ்தவம் ".

"அந்த நேரத்தில் எங்கப்பன் என்னை தலைநிமிர வச்சான் பாரு, அதுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாதுய்யா.எப்பாடி, நீ போறதுக்குள்ள ஒரு எட்டு கோயிலுக்கு போய்ட்டு வந்துரலாமாயானு கெஞ்சலாக சத்தியமூர்த்தி கேட்க, போலாம்பா.அதுக்கு முன்ன உன் தங்கச்சிய சமாதானம் பண்ணுப்பா".

"கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான், இருந்தும் முயற்சி பண்ணுறேனென்று சத்தியமூர்த்தி சொல்ல, ஏதேஏஏஏ, என்னா அடி தெரியுமாப்பா என்றான்".

" ஹாஹாஹாஹாஹானு சிரித்த சத்தியமூர்த்தி வாங்கியது நீ, எனக்கு எப்படிப்பா தெரியும்?".

" உன் தங்கச்சி அடிச்சது உனக்கு நக்கலா இருக்கென்றவன், ஊஞ்சலில் உட்கார்ந்து முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டான்".

" மகனின் செயலை பார்த்தவர், இன்னும் அந்த சிறுவயது பிடிவாதம் தானென்று நினைத்துக்கொண்டு, சரி நீ கோவமா இரு, வள்ளி கிட்ட நான் பேசலையென்க,எதேஏஏ நீ அப்படிலாம் சொல்லதப்பா, போய் பேசு".

எவனே இங்க ரோசக்காரன் இருந்தானேனு சுற்றி சுற்றி அவர் பார்க்க, அப்பா போதும்.போய் உன் தங்கச்சிய மலையிறக்கு.

ம்ம் என்றவர் அம்மாடி வள்ளி என்றார்".

"கையிலிருந்த ஆல்பத்தை பார்த்து அழுது கொண்டிருந்த வள்ளிக்கு, அண்ணன் கூப்பிடும் சத்தம் கேட்க, அங்கிருந்த பெட்டின் மேல் ஆல்பத்தை வைத்து விட்டு, கண்ணை துடைத்துக்கொண்டே கதவை திறந்தார்".

அம்மாடி தலை பாரமா இருக்கென்று சத்தியமூர்த்தி சொல்லவும் இதோணா என்றவாறே கிச்சனிற்குள் சென்றவர், டீ போட ஆரம்பித்தார்".

அப்படியே மணி என்னவென்று எட்டி பார்க்க, ஐந்து என்று காட்டியது, வேக வேகமாக வெங்காய பகோடாவை பொரித்தெடுத்தார்".

"மூன்று பேருக்கு டீயும், பகோடாவையும் எடுத்துக்கொண்டு ஹாலிற்கு வந்தவர், அண்ணா என்று அவர் முன்பிருந்த டீப்பாயின் மேல் வைத்தவர், வெற்றியின் முன்பு நீட்ட, அவன் வேறு பக்கம் திரும்பிக்கொண்டான்".

"அம்மாடி ஒருயெட்டு திருச்செந்தூருக்கு போயிட்டு வந்துடலாம். திங்கட்கிழமை உன் மருமகன் அங்க இருக்கணும்".

"ரெண்டு பேரும் மூஞ்சிய தூக்கி வச்சிருந்தால், எப்படி கோயிலுக்கு போக தோணும்?என்க,நாங்க ஒன்னும் மூஞ்சிய தூக்கி வெச்சிட்டு இல்லையேணா என்றார்".

"இன்னும் ரெண்டு மூணு நாள் தான் இருப்பானென்று சத்தியமூர்த்தி சொல்ல, அதை கேட்ட உடனே வள்ளிக்கு கண்கள் கலங்கியது.

"வெற்றி பிறந்ததிலிருந்து வள்ளியிடம் தான் அதிகமாய் இருப்பது. வெற்றியின் அம்மா அப்பா இரண்டு பேரும் இறக்கும் போது, அவனுக்கு ஒரு வயது".

"அன்றிலிருந்து அவனுக்கு தாயாகவே மாறினார். வள்ளிக்கு திருமணம் செய்து வைக்க, எத்தனையோ முயற்சி செய்து விட்டார் சத்தியமூர்த்தி"..

"வெற்றி மட்டும் போதும் என்பதில் உறுதியாய் இருக்க, அவராலும் எதுவும் செய்ய முடியவில்லை".

"இதுவரை அவனை ஒரு அடி அடித்ததில்லை.இன்று அடிக்க வேண்டிய சூழல் வந்து விட்டதை நினைத்து தான் வள்ளிக்கு வருத்தமாக இருந்தது".

திருச்சூர்-மைக்கேல் பிளாஷ் பேக்:

பீகார்- கயை மாவட்டம்...

"வீட்டிற்குள் வந்தவன் ஜானு என்று மனைவியை கட்டி பிடித்து கண் கலங்கினான்".

" அய்யோ திவாரி, எதுக்கு இப்போ கண்ணுல வேர்குதென்று ஷாலி கேட்க, யாரும் இல்லாதவனுக்கு நீ, இப்போ நம்மோட குழந்தைடி".

"பொண்டாட்டி நல்ல சேதி சொல்லிருக்காளே, அவளுக்கு எதாவது சாப்ட வாங்கி தருவோம்னு இல்லாமல், அழுது வடியுற என்றாள்".

" என்ன வேணும் சொல்லுடி?".

" ம்ம் என்றவள், எனக்கு எனக்கு அந்த சிங் கடையில இருந்து கச்சோரி வேண்டுமென்றாள்".

" இவ்வளவு தாணடி என்றவாறு வேகமாக வெளியே வந்தவன்,தனது வண்டியில் ஏறி டவுனில் இருக்கும் கடைக்குச்சென்றான்".

" அரை மணி நேரம் சென்று, இரண்டு பைகளோடு வீட்டிற்குள் வந்தான்".

" என்ன திவாரி இவ்வளவு என்க, போய் பிளேட் எடுத்துவாடி என்கவும்,ஷாலியும் எடுத்து வர,அவள் விரும்பி சாப்பிடும் அத்தனையையும் அதில் பிரித்து வைக்கவும்,அவளோ செல்லமாக முறைத்து பார்த்தாள்".

இவ்வளவையும் நான் எப்படி சாப்பிட?

வச்சி வச்சி சாப்பிடுடி என்றவன், எல்லாவற்றிலும் சிறிது சிறிதாக எடுத்து, மனைவிக்கு ஊட்டி விட்டான்.

" சரி, நீ இதை சாப்பிடு நான் வொர்க் ஷாப்பிற்கு போறேனென்று சொல்லி விட்டு, மனைவியின் நெற்றியில் ஒரு முத்தத்தை கொடுத்து விட்டு, ஷாப்பிற்கு வந்தவன்,கரீமிற்கு ஒரு பார்சலை கொடுத்து விட்டு, விட்ட வேலையை தொடங்கினான்".

" நாட்கள் இப்படியே சென்றது".

"இப்பொழுது ஷாலிக்கு ஐந்து மாதம் நடந்து கொண்டிருந்தது".

"வழக்கம் போலில்லாமல், இன்று கலெக்டர் ஆபிஸ் ஒருவித பரபரப்போடு இருந்தது".

"காலை பதினோறு மணிக்கு மீட்டிங் என்பதால், வரவைத்திருந்த ஆபிசர்ஸ் எல்லாரும், சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்தனர்".

"கான்ப்ரன்ஸ் ஹாலில் அவரவருக்கான இருக்கையில் காத்திருக்க, தனது கம்பீர தோற்றத்தோடு, வசுந்தரா சுந்தரபாண்டியன் கதவை திறந்து உள்ளே வந்தார்".

"அனைவருக்கும் வணக்கம் சொல்லி விட்டு, நேரடியாக விஷயத்திற்கு வந்தார்".

"உங்களை இன்று நான் வர சொல்லியதற்கு காரணம்,சில வருடங்களாக நம் அரசாங்கம் தேடிக்கொண்டிருக்கும் கஞ்சா மன்னன் M.D கேஸ் பற்றி தான்".

"நான் இங்கு வந்து ஏழு மாதம் ஆகிவிட்டது. ஆனால், அப்படி ஒரு செயல் நடப்பது போல தெரியவில்லை".

"இதற்கு முன்பு உள்ள ரெக்கார்டில், கஞ்சா விற்பனை பற்றி ஏகப்பட்ட புகார்கள் உள்ளது.இன்று வரை அந்த ஆள் யாரென்று தெரியவில்லை".

"ஒரு வேளை, வேறு எந்த வழியிலாவது அவன் தனது பிஸ்னசை செய்கின்றானானு மேலிடத்திலிருந்து கேள்விகள் கேட்கின்றனர்".

"கண்டிப்பா நம்ப சைடில் இருந்து யாரோ ஒரு இன்பார்மர் அவர்களுக்கு உதவியா இருக்காங்கள் என்பது தெரியும்".

இப்போதைக்கு அவன் மூவ்மெண்ட் என்ன?.

ஒரு வேளை வேறு வழியில் இந்த பிஸ்னஸ் நடக்கின்றதா?.

"தற்பொழுது உள்ள சூழல் படி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அந்த அளவு கஞ்சா கிடைக்கவில்லைனா சிபிஐ கிட்ட இருந்து ரிப்போர்ட் வந்திருக்கின்றது".

"இதைப்பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்களென்று சொல்லுங்களென தான் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு,உங்கள் கருத்து என்ன? சொல்லாங்களென்றார்.

"இவ்வளவு நேரம் வசுந்தராவின் ஆளுமையான பேச்சை கேட்டவர்கள், தன்னைவிட வயதில் குறைவான பெண்ணாக இருந்தாலும், கம்பீரத்திலும் பேச்சிலும் பல வருடம் அனுபவசாலியை போல இருப்பவரை மனதிற்குள் பாராட்டினர்".


" பின்னர் அவரவருக்கு தெரிந்ததை சொன்னார்கள்.

" ஆனால், சொல்லி வைத்த போல,யாருமே அந்த கஞ்சா மன்னதை பார்த்ததில்லை என்பதை உறுதியாக சொல்லினர்".

" வசுந்தராவிற்கு இந்த கேஸ் தான் பொறுப்பேற்றதிலிருந்து புரியாத புதிராய் இருப்பது".

" மேலும் சில விவாதங்களுக்கு பின்னர் மீட்டிங் முடிந்ததும் அங்கிருந்து கிளம்பி சென்றனர்".

" மேடம் எல்லாரும் போயாச்சென்று யோசனையாக உட்கார்ந்திருந்த வசுவிடம் பி. எ, சொல்ல, ம்ம் என்றவரோ மற்ற வேலைகளை பார்க்க தொடங்கினார்".

" நள்ளிரவு 12.30 ஆனது".

" பாய், பாய் என்று கரீம் பொறுமையாக தனது பக்கத்தில் படுத்திருந்த மைக்கேலை எழுப்ப, ம்ம் என்றவாறு எழுந்தவனிடம், சிங் வந்திருக்கிறார் என்றான்".

" அந்த பெயரைக்கேட்ட மைக்கேல் யோசனையோடே எழுந்தவன், வெளியே வர, சற்று தள்ளி ஸ்கார்பியோ கார் நிற்பதை பார்த்து அங்கே சென்றான்".

" மைக்கேல் கிட்ட வந்ததை பார்த்து கார் கதவு திறக்க, கரீமும், மைக்கேலும் உள்ளே ஏறியதும், கார் அங்கிருந்து காட்டு பங்களாவை நோக்கிச்சென்றது".

" அரைமணி நேரத்தில் பங்களாவிற்கு முன்பு வந்து கார் நின்றதும், இவர்களோடு இன்னும் ஒருவனும் இறங்கி உள்ளே சென்றுதும், என்னப்பா குடும்பஸ்தன் ஆனதும் தொழிலை விட்டுட்டியாமே.இனி என்னை தேடி வராதீங்களென்று சொல்லி அனுப்பினாயாமே?, அப்படியா?".

" ஆமா, நான் அந்த தொழிலை விட்டு ஏழு மாதம் ஆகின்றது, இனி அதை தொடுவதாக இல்லையென்றான் மைக்கேல்".

"ஓஓஓஓ மனைவியின் மந்திரமோ?, நமக்கு எதுக்கு இந்த கல்யாணம், குட்டிலாம்?, ஆசைப்பட்டவளை அனுபவிக்கணும், அப்படியே போய்டணும்".

" இவள் இத்தனை மாதம் இருந்திருக்காள், எவ்வளவு பணமென்று செட்டில் பண்ணி அனுப்பிட்டு, நம்ப தொழிலுக்கு வாயென்று சொல்லி வாயை மூடுவதற்குள், அவன் மேல் பாய்ந்த மைக்கேல்,சிங்கை அடி பின்னி எடுத்து விட்டான்".

ஆர்கலி எங்கே...?
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top