• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
பொள்ளாச்சி:

"நீர் துளியின் சிலிர்ப்பில் கீதா நிமிர, வாங்கிக்கோனு கண்களால் சைகை செய்தான்".


"அன்புவின் கண்ணசைவில் மகுடிக்கு மயங்கிய பாம்பு போல், அவனிடமிருந்து தாமரை பூவை வாங்கிக் கொண்டவளின் இதழோரம், லேசாக சிரிப்பு வந்தது".

"முன்னாடியே கரையில் ஏறிய இருவரும், ஈரம் போக வேண்டும் என்பதற்காய், போட்டிருந்த துணிகளை அங்கு மரத்தின் மறைவில் போய் பிழிந்து முடித்து வந்தவர்கள், போகலாமென்று வேணி குரல் கொடுக்க ,வா என்று அவர்கள் பின்னாடியே சென்றான்".

"கீதாவும் கையில் உள்ள தாமரைப்பூவை, தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டே சென்றாள்".

"அதற்கு பின்னர் வந்த நாட்களில், இருவருக்கும் வார்த்தையில்லா பார்வையில் பேச்சுகள் தொடர்ந்தன".

"இதோடு இருவரும் வந்து பத்து நாட்களுக்கு மேலானது. பள்ளிக்கூடம் போகும் போதெல்லாம் ஜனனி சிணுங்கி கொண்டே தான் போவாள்".

"மாலை வழக்கம் போல பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு வந்தவள், அங்கிருந்த தனது பெரியம்மா, பெரியப்பா, தம்பியை பார்த்து ஆனந்த அதிர்ச்சியடைந்தாள்".

"பின்னர் பொதுவான நலன் விசாரிப்போடு பேசிக்கொண்டிருந்தனர்".

"மாரியப்பனும் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தவர், வாங்க சகலை, வாம்மா மலரு என்றார்".

"பேசிக்கொண்டே இரவு உணவை வேணி சமைத்து முடிக்க, சகலை அன்புக்கு, வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைச்சிருக்கு.அங்க இங்க புரட்டி ஒன்னு( ஒரு லட்சம்) கையில இருக்கு. நல்ல நம்பிக்கையான மனுஷன் தான்".

"நம்பி அனுப்புங்கணு சொல்லுறார். அதானென்று பேச்சை இழுக்க, அம்மா என்கவும்,கையில் ஒரு சுருக்கு பையோடு வெளியே வந்தவரிடம், அங்க குடுமா என்றார்".

எய்யா கந்தா, இதுல உன் மச்சினிச்சியோடது, உன் மவளுக்கு சேர்த்ததுணு, எல்லாம் பாக்க போனால் அஞ்சு பவுனு வரும்யா.இதை வச்சி அன்புவை அனுப்புய்யா. ஊட்டுல இருக்குறது தானே.

"அம்மா.... இது பேருதவினு கந்தன் சொல்ல, எய்யா என்னா பேச்சி இது. இதை முதல்ல புடிய்யா என்றவர், கந்தனின் கையை இழுத்து அதில் சுருக்கு பையை வைத்தார்".

"அப்பொழுது, அங்கு வந்த கண்ணம்மா பாட்டி, மலரு இந்தா என்றவர், சுருக்கு பையிலிருந்து பணச்சுருளை எடுத்து கொடுத்தார்".

"இது எம் பேத்திங்களுக்காக சேர்த்து வச்சது மலரு. இந்த ஆத்தாவால முடிஞ்சது".

"அம்மா என்று மலர் கண்கலங்க, ஏம்புள்ள பெத்த ஆத்தா உசுரோட இல்லைணா என்ன, சின்னாத்தா இருக்கேன்,கலங்காத".

"போய் ஆக வேண்டியதை பாருங்க என்றவர், எய்யா அன்புனு கூப்பிட, இவ்வளவு நேரம் நடப்பதையெல்லாம் வாசல் படியில் நின்று பார்த்துக் கொண்டிருந்தவன், கண்ணம்மா பாட்டியிடம் வந்தான்".

"அப்பாடி, பார்த்து சூதானமா இருய்யா. வயித்துக்கு சாப்புடு, பொறுப்பு உள்ள உன் குணத்துக்கு, நல்லதே நடக்கும் சாமி".

"சரி நேரம் ஆகிட்டு சாப்பிட்டு படுங்க. காலையில சின்னது பள்ளிகூடம் போகணுமேனு கந்தன் சொல்ல, பின்னர் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்து, ஆளுக்கொரு இடத்தில் படுத்து விட்டனர்".

"வழக்கம் போல் அதிகாலையிலே எழுந்த மலர், வீட்டு வேலையை முடித்து அடுப்பை பற்ற வைத்து சமையல் வேலையை ஆரம்பித்தார்".

"கந்தனும் எழுந்து வந்து மனைவியை பார்த்தவர், மலரு வாளிய கொண்டு வா, டீ வாங்கிட்டு வரேன்".

"பிள்ளைகளை தவிர மற்ற மூவரும் எழுந்து போய் முகத்தை கழுவிக்கொண்டு திண்ணையில் உட்கார, கந்தனும் டீ வாளியோடு வீட்டிற்கு வந்து சேர்ந்தார்".

"டீயை குடித்து விட்டு அவரவர் வேலையை பார்க்கலானர்.ஜனனி பள்ளிக்கு ரெடியாகிக் கொண்டிருக்க, அவளுக்கு டிபன் பாக்ஸில் வேணி சாப்பாட்டை வைத்துக் கொண்டிருந்தாள்".

"காலை உணவை அனைவருக்கும் பரிமாற,வேக வேகமாக சாப்பிட்டு முடித்த ஜனனி, எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு பள்ளிக்கு கிளம்பிவிட்டாள்".

"சகலை நான் போய் மற்ற வேலைய முடிச்சிட்டு வரேன். இன்னும் ரெண்டு நாள் பள்ளிகூடம் லீவ் தான்".

"வேலை முடிந்ததும் வந்துடுறேன் என்க, சரி சகலை என்றவாறே பெரிய வீட்டை நோக்கி சென்றார்".

"இரண்டு நாட்கள் சென்று வேணியும், அன்புவும் மலரோடு ஊருக்கு கிளம்பினர்".

"நாட்களும் வேகமாக ஓடியது".

"அன்புக்கு மெடிக்கல் டெஸ்ட் முடிந்து, விசா, டிக்கெட் எல்லாம் வந்து விட்டது".

"இன்னும் இரண்டு நாட்களில் பிளைட் ஏற வேண்டும் . அதற்கு முன்பு ஊருக்கு போய் எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு வரலாமென்று பொள்ளாச்சிக்கு வந்தனர்".

"பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க, நல்லபடியா போய்டு வாப்பா என்றனர்".

"சரி என்று தலையசைத்தவன், சோமு மாமா வீட்டிலும் சொல்லிட்டு வரேன் என்க, போய்ட்டு வாப்பா என்றனர்".

"ம்ம் என்றபடியே கீதா வீட்டை நோக்கி வந்தன், அத்தை என்று கூப்பிட்டுக்கொண்டே தோட்டத்திற்கு செல்ல, கீதா அப்பொழுது தான் குளித்து முடித்து, கீற்று மறைவில் உள்ள பாத்ரூமிலிருந்து வெளியே வந்தாள்".

"அவனை பார்த்து திடுக்கிட்டவள், பின் சுதாரித்து வாங்களென்று வீட்டிற்குள் செல்ல,உள்ளே வந்தவன், அத்தை இல்லையா? என்றான்".

"பெரிய வீட்டில் தவுடு குடுக்க போயிருக்கென்று கதவு மறைவில் நின்று கொண்டு கீதா சொல்ல,ஓஓஓ.இன்னும் ரெண்டு நாள்ல நான் கிளம்புறேனென்க, அதைக்கேட்டவளுக்கு கண்கள் கலங்கியது".

"வெளியே வாடி என்கவும், ம்ம் என்றபடி கதவை தாண்டி வந்தவளின் கையை எட்டி பிடித்து இழுத்தவன், தன்னோடு அணைத்துக்கெண்டு, வர வரைக்கும் காத்திருடி".

"வந்ததும் மூனு முடிச்சை போடுறேனென்று அவள் நெற்றியில் முத்தம் வைக்க, கீதாவின் உடல் சிலிர்ப்பது அன்புக்கு தெரிந்தது".

"மேலும் அவளை சோதிக்காமல் தன்னிடமிருந்து அவளை விலக்கியவன், வரேன்னு சென்று விட்டான்".

இரத்தினபுரி பிளாஷ் பேக்

கோயம்புத்தூர்:

"ஃபாதர் சொன்னதைக்கேட்ட ருத்ரனோ மனதிற்குள் ஒரு முடிவை எடுத்துக்கொண்டு, அங்கிருந்து வீட்டிற்கு வந்தவன், சிவனிடம் விஷயத்தை சொல்ல,தம்பி ஏன் இவ்வளவு அவசரமென்றார்".

"அப்பா, இங்க உள்ள பழக்க வழக்கம் எனக்கு தெரியலை. ஒரு மனிதாபிமானத்தில் தான் அந்த பொண்ணை காப்பாற்ற அப்படி செய்தேன்".

"அதை காரணம் காட்டி, போற வர பொறுக்கி பசங்க,தப்பு தப்பா பேசியதால் தான் அவள் சூசைட் பண்ண முயற்சி பண்ணிருக்காளென்றான்".

"லட்சுமியும் சிவனும் என்ன கண்ணு சொல்லுறனு பதற,அப்படித்தான் லெட்டர் எழுதி வைத்திருப்பதாக ஃபாதர் சொல்லுகிறார்".

"ரொம்ப சின்ன பொண்ணா இருக்கேப்பானு சிவன் சொல்ல, நான் ஒன்னும் இப்பவே அவள் கூட வாழ போறது இல்லைங்கப்பா.படிச்சு முடிக்கட்டும் அதுக்கப்புறம் வந்து கூப்பிட்டு போறேன். இப்போ எந்த ஆதாரமும் இல்லாமல், அவளை என்னால் இலங்கைக்கு நிரந்தரமாக கூப்பிட்டு போக முடியாது".

"இனி இதைப்போல் முடிவு அவள் எடுக்க கூடாதுங்கப்பா. அது மட்டும் தான் என் எண்ணம்.இப்போதைக்கு சர்ச்சில் தான் கல்யாணம் பண்றது.நாளைக்கு ஈவ்னிங் நான் இலங்கை போகணும்".

"அது உங்களுக்கு தெரியும் தானே?.

"பிசினஸ் அங்க இருக்கு.அவளுக்கும் கொஞ்சம் பக்குவம் வரட்டும்.அதுக்கு பிறகு நான் அவளை கூட்டிட்டு போறேன் பா என்க,அதுவும் சரியென்று பட்டது".

"நண்பர்களும் அவன் முடிவிற்கு சரி என்று தான் சொல்ல, ஆனால் ஆதுக்கு மட்டும் இது தெரியவில்லை".

"இருவரில் ஒருவர் உடனே வாங்கடா என்று ரஞ்சன் அவசரமாக அழைக்க,கல்யாணம் முடிந்த அன்றே கிடைத்த ஃப்ளைட்டில் ஆது சென்று விட்டான்".

"வீட்டில் யாருக்கும் தெரியாமல் இது தேவையா? என்று மீண்டும் நண்பர்கள் கேட்க, எல்லாத்தையும் நீங்க பாத்துட்டு தான இருக்கிறீங்கள்டா?".

" நண்பனை ஆழமாய் ஒரு பார்வை பார்த்தவர்கள், ஓகே என்று சொல்லி விட்டனர்".

"ஃபாதரிடம் சென்று பேச, இந்த வயதில் இது தவறு தான் ஆனால்,அந்த பையன் மேல நம்பிக்கையிருக்கு.அதனால் இதற்கு நான் சம்மதிக்குறேனென்று சொல்லிவிட்டார்".

"காலையில் அந்த ஆசிரம சர்ச்சிலே கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து வைத்தார்.தன் கழுத்தில் உள்ள செயினை கழட்டிய ருத்ரன் அவளுக்கு போட்டு விட்டான்".

"அவளும், கொடுக்கப்பட்ட ரிங்கை எடுத்து ருத்ரனுக்கு போடும் போது,ஆர்கலியின் உடம்பிற்குள் ஒரு வித நடுக்கம் வந்தது".

"பின்னர் நண்பர்களும், சிவன் வீட்டில் இருந்த சொந்தக்காரர்களும், அங்கிருப்பவர்களிடம் சொல்லிக்கொண்டு வெளியே வந்தனர்".

"ஆர்கலி கிட்ட கொஞ்சம் பேசிட்டு வரேனென்றவன், அவளை அழைத்துக்கொண்டு அங்கிருந்த ஒரு அறைக்குள் சென்றவன், இங்க பாருமா, நான் இன்று இலங்கைக்கு செல்ல வேண்டும்".

"இப்போதைக்கு உனக்கு வயசு இல்லை.நம்மளோட திருமணத்தை சட்டப்படி ரிஜிஸ்டர் பண்ணுவதற்காக, இன்னும் இரண்டு வருடத்தில் வருகிறேன்".

"நீ நல்லா படிமா.எது வேண்டுமானாலும் எனக்கு கால் பண்ணென்று சொல்லி விட்டு வெளியே வந்தவன், ஃபாதரிடமும் சொல்லிக் கொண்டு அன்று மாலையே அவரவர் நாட்டிற்கு சென்றனர்".

"மேலும் இரண்டு வருடங்கள் கடந்து சென்றது.அவ்வப்போது ஆர்கலியின் நினைவு வரும்போதெல்லாம், அந்த மோதிரத்தை நெஞ்சில் அணைத்துக்கொள்வான்".

"தன்னவள் இப்பொழுது எப்படி இருப்பாள்? என்பதை நினைக்கும் நேரமெல்லாம், மனமும் ஒருவித எதிர்பார்போடு இருந்தது".

"பிசினஸ் விஷயமாக லண்டன் போகும் நேரம் வந்தது.ரஞ்சனும், ஆதுவும் இன்னொரு இடத்தில் பிராஞ்ச் ஓப்பன் பண்ண வேண்டிய வேலையில் பிஸியாக இருப்பதால், ருத்ரன் போக வேண்டியதாக இருந்தது".

"சரி என்று ருத்ரனே அங்கு கிளம்பியவன்,லண்டனிற்கு வந்து வேலை சீக்கிரம் முடிய, உடனே இந்தியாவிற்கு கிளம்பி விட்டான்".

"கோவைக்கு வந்து இறங்கியவனை, ராம் வந்து அணைத்துக்கொண்டான். பின்னர் நண்பர்கள் இருவரும் பேசிக்கொண்டே வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்".

பொதுவான நலம் விசாரிப்புகளுக்கு பின்னர், ஃபாதரை சென்று பார்த்தனர்.

"இரண்டு வருடங்களுக்கு பிறகு வந்தவனை கண்ட ஃபாதருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.ஆர்கலி தற்பொழுது இரண்டாம் வருடம் இளங்கலை படித்துக்கொண்டிருக்கிறாள்".

"மதியத்திற்கு மேலே தான் கல்லூரி முடிந்து வருவாளென்று ஃபாதர் சொல்ல, பின்னர் அவரிடம் வந்த விஷயத்தையும் சொன்னான்".

"மேலும் சிறிது நேரம் பேசியிருந்து விட்டு,ராம் அங்கிருந்து கிளம்பி விட்டான்".

"வழக்கம் போல் கல்லூரி முடித்து வந்தவளுக்கு, ஏதோ படபடப்பாக இருப்பது போலிருந்தது".

"என்னாச்சு நமக்கென்று யோசனையோடு உள்ளே வந்தவள், வழக்கம் போல வேலைகளை செய்து கொண்டிருந்தாள்".

"அப்பொழுது ஃபாதர் கூப்பிடுவதாத ஒரு சின்ன பெண் வந்து சொல்ல, சரிடா என்றவள், சர்ச்சிற்குளா போக, அங்கிருப்பவனை பார்த்து அதிர்ந்து போனாள்".

"ருத்ரனுக்கும் அதே அதிர்வு தான். பொம்மை போல் சிறு பெண்ணாக, இரட்டை ஜடையில் பார்த்த முகம் தான் அவன் நெஞ்சில் நன்கு பதிவானது".

"திருமணத்தில் அவள் வெள்ளை கவுன் போட்டிருந்ததால், பெரிதாக ஒன்றும் தோன்றவில்லை".

"அன்று ராம் நலுங்கிற்கு புடவை கட்டி வந்த உருவமோ, சற்று அவள் வயதை கூட்டி காட்டியது என்றாலும், முதல் முறை ஜாக்கிங் சென்ற போது பார்த்தவளின் தோற்றமே மனதில் பசுமரத்தில் பதிந்த ஆணியை போல பதிந்து போனது".

ஆர்கலி எங்கே...?
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
கோவை:

"அன்புவும் நல்ல முறையில் வெளிநாட்டிற்கு போய் சேர்ந்தான்".


"முதல் இரண்டு வருட சம்பளத்தில் வாங்கிய கடன்களை அடைத்தனர்.அன்புவின் நேர்மையையும், உழைப்பையும் பார்த்த முதலாளியும், சம்பளத்தை உயர்த்தி கொடுத்தார்".

"அதன் பின்னர் வேணியின் திருமணமும், பழைய கூரை வீட்டை இடித்து விட்டு, நான்கு அறைகள் கொண்ட மாடி வீட்டையும் கட்டி முடித்தான்".

"ஐந்து வருடங்களுக்கு பின்னரே ஊருக்கு வருவதாக மலரிடம் சொல்ல, அவருக்கு கண்கள் கலங்கியது.இத்தனை வருடமும் போனில் தான் அவன் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தனர்".

"தம்பி, உனக்கு கல்யாணம் பண்ணலானு மாமா சொல்லுறாங்க சாமியென்று மலர் சொல்ல, ஏற்பாடு பண்ணுங்களென்றான்".

"தான் ஊருக்குள் போன பின்னர் தானே பொண்ணு பார்க்க ஆரம்பிப்பார்கள். அப்பொழுது கீதாவை பற்றி சொல்லலாமென்ற நம்பிக்கையோடு வீட்டிற்கு வந்தவனுக்கு, ஜனனிதான் பெண்ணென்று தெரிந்து பேரதிர்ச்சி".

"பிறகு தான், அவள் இதுவரை தன்னை அண்ணா என்று அழைக்கும் நினைவு வர, கண்டிப்பாக இது நடக்காதென்று நம்பியவன், கீதாவிற்கு ஏற்ற போலவே, எல்லாவற்றையும் பார்த்து பார்த்து வாங்கினான்".

"மற்றவர்களோ, அவன் ஜனனி மேல் எவ்வளவு ஆசை வைத்திருக்கிறான் என்று பூரித்து போனார்கள்".

"அன்பு, அன்பு, அடேய் செவுட்டு பயலேனு நண்பன் ஒருவன் அவன் தோளில் அடிக்க, அந்த வலியில் தான் நிகழ்விற்கு வந்தான்".

"என்னடா மாப்ளை, தங்கச்சியை பற்றி இப்பவே கனவு காண ஆரம்பிச்சிட்ட போல?".

"அறிவுகெட்ட பயலே, எல்லாரும் வேன்ல இருந்து இறங்கியாச்சிடா, நாமதான் பாக்கியென திட்டிக்கொண்டே கீழே இறங்கிச்சென்றான்".

"சிரித்துக்கொண்டே அன்புவும் வேனிலிருந்து இறங்கி, நண்பனோடு போய் இணைந்து கொண்டான்".

பொள்ளாச்சி பெரிய வீடு:

"சத்திய மூர்த்தியோ,ஊஞ்சலில் அமைதியாக உட்கார்ந்திருந்தார்" .

"நொடிக்கொரு தரம் வெற்றி வருகிறானானு வாசலை பார்க்க வள்ளியம்மையும் தவறவில்லை".

"இருவரும் வீட்டிற்கு வந்து ஒரு மணி நேரம் சென்றிருந்தது. அப்பொழுது காலடி சத்தம் கேட்க, வராண்டாவில் உள்ள தேக்கமர தூணின் மேல் கண்களை மூடி சாய்ந்து உட்கார்ந்திருந்த வள்ளியம்மையோ வாசலை பார்க்க, வெற்றி தான் வந்து கொண்டிருந்தான்".

"இவ்வளவு நேரம் வேகமாக வந்தவன், வராண்டிவில் காலடி எடுத்து வைக்கும் போது, உள்ளே வர தயக்கம் வந்தது".

"ஊஞ்சலில் சத்தியமூர்த்தி இருப்பதை பார்த்தவன்,அப்பா என்றவாறே அவர் அருகில் சென்றான்".

"வள்ளியம்மையோ மாறி மாறி அவன் கன்னத்தில் அறைய,அம்மா வள்ளினு சத்தியமூர்த்தி சத்தம் போட, மனசு ஆறலைணா".எப்படியாப்பட்ட குடும்பம் இது?.

" சுற்றி உள்ள ஊருக்கெல்லாம் பஞ்சாயத்து பண்ண, என் அண்ணனை தான் கூப்பிட்டு போவாங்க.காரணம் பணம் இருக்குறதால் இல்லை, என் அண்ணன் நேர்மையானவர் என்பதற்காக தான்".

"அந்த மனுஷனை போய் இன்னைக்கு எல்லாருக்கு முன்பும் தலை குனிய வச்சிட்டியேடா பாவியென்று,மீண்டும் இரண்டு அறை விட்டவர், என் முகத்திலே விழிக்காதனு சொல்லி விட்டு, தனது அறைக்குள் போய் விட்டார்".

திருச்சூர்- மைக்கேல் பிளாஷ்பேக்

பீகார்- கயை மாவட்டம்:

"மனைவியோடு வண்டியில் போய்க் கொண்டிருப்பவனுக்கு, உள்ளுக்குள் இனிமையாக இருந்தது".

"எத்தனையோ முறை இதே வழியில் வண்டியில் போயிருக்கிறான். ஆனால்,இன்று என்னமோ புதிதாக இருப்பது போல் இருந்தது".

"முதலில் ஜவுளிக்கடைக்கு சென்றவன், அவளுக்கு தேவையான அத்தனை ஆடைகளையும் வாங்கிக்க சொன்னான்".

"அடுத்ததாக தாலி வாங்க சென்றனர்".

"கடைக்காரர் இருவரிடமும் தாலியை எடுத்து காட்ட, உனக்கு பிடித்த போல வாங்கு திவாரியென்றாள்".

"எனக்கு பிடித்ததா என்றவன், ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து, கடைசியில் ஒன்றை தேர்வு செய்தவன், அவளுக்கா ஒரே ஜோடி வளையல், காதிற்கு தோடு, கழுத்திற்கு இன்னொரு செயினையும் எடுத்தவன், எல்லாவற்றையும் பில் போடுங்கள் என்றான்".

"எதுக்கு இவ்வளவு? என்று ஷாலி கடிந்து கொள்ள, இது நான் வேர்வையும் ரத்தமும் சிந்தி சம்பாரித்ததுடி".உனக்கு இல்லாமல் வேறு யாருக்கு?".

"இதுவரை நீ எப்படி இருந்தாய் என்பதை விட, இனி உன் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைதான் எல்லாரும் பார்ப்பார்களென்று சொல்ல, அதற்கு பிறகு ஷாலி எதுவும் பேசவில்லை".

"தேவையான சில பொருட்களை வாங்கிக் கொண்டு, மதிய உணவையும் சாப்பிட்டவர்கள், கரீமிற்கும் பார்சல் பண்ணிக் கொண்டு, வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்".

"சிறிது நிமிடம் சென்று, கல்யாணத்துக்கு எல்லாம் ஏற்பாடு பண்ணி விட்டு கரீமும் வீட்டிற்கு வந்தான்".

"வந்தவன் மைக்கேலிடம் எல்லாவற்றையும் சொல்ல,அவனுக்கு வாங்கிய உடைகளை எடுத்து வந்து ஷாலி நீட்ட,அதை பார்த்து கண் கலங்கினான்".

"ஏன்?,என்னாச்சுனு ஷாலி கேட்க, பாய் தவிர வேறு யாரும் வாங்கி கொடுத்ததில்லை என்க.

"இனி பாபியும் இருக்கேன் ஞாபகம் இருக்கட்டுமென்று உள்ளே சென்றாள்".

"பாய் என்று கரீம் கண்கலங்க, அடேய் உன் அழுகையாலே இந்த வீட்டை மூழ்க வச்சிடுவ போல, போய் ரெடியாகுடா".

"இவ்வளவு நேரம் மைக்கேலின் கடந்த கால வாழ்க்கையை கேட்டுக் கொண்டிருந்த ஆர்கலி,மாமா மாமா ஒரு நிமிஷமென்று மைக்கேல் சொல்லிக்கொண்டிருப்பதை தடை பண்ணினாள்".

"சொல்லுடாம்மா, என்னாச்சி?".

"அது வந்து மாமா, நம்ப தமிழ்நாட்டு முறைப்படி கல்யாணம் நடக்குமா?,இல்லை அங்கு வேறு விதமாகவா?ஆர்கலி கேட்க, வேறு விதமாக தான் அம்மு".

"இங்கு எப்படி நலுங்கு வைப்பது, பந்தகால் நடுவதுனு பழக்கம் இருக்கு தானே, அதேப்போல் வடநாட்டு மக்களுக்கும், சில பாரம்பர்யமான பழக்கங்கள் உண்டுடா".

"அதும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் சடங்கு சம்பிரதாயங்களெல்லாம் வேறு மாதிரி இருக்கும்டா".

"ஓஓ..அப்போ பீகார்ல என்ன வழக்கம் மாமா?".

"அம்மு.... பொதுவாகவே கல்யாணம் என்று வரும் போது, பீகார்ல மூன்று விதமான சடங்குகள் உண்டு".

"முதல் சடங்கு திருமணத்தினத்திற்கு முந்தைய, இரண்டாவது சடங்கு திருமணநாள் அன்று பண்ணுவது.

"மூன்றாவது சடங்கு, திருமணத்திற்கு அடுத்ததா பண்ணும் சடங்கு".

"இதெல்லாம் பல நூறு வருஷமா அவர்கள் பாரம்பர்ய முறைப்படி தான் பண்ணிட்டு இருக்காங்கடா".

" என்ன மாமா இப்படிலாமா என்க, இதுக்கே மலைத்தால் என்ன ஆக, இன்னும் இதில் எவ்வளவோ இருக்கு அம்மு".

அப்படிங்களா மாமா?.

"சரி எனக்கு ஷார்ட்டா சொல்லுங்களென்க, ஹாஹாஹா என்று சிரித்து விட்டு மைக்கேலும் சொல்ல தொடங்கினார்".

"சத்ய நாராயண் கதா - இது மணமகளின் பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்படுவதுடா. இந்த பூஜைக்கு,மாப்பிள்ளையோட நண்பர்களும், உறவினர்கள் எல்லாரும் கலந்துக் கொள்ளுவாங்கள். அப்பொழுது சத்தியநாராயணன் என்பவரோட கதையை அய்யர்( பண்டிட் ஜி)சொல்லுவார்".

"செக்கா - இது பொண்ணு வீட்டில் நடக்கும் நிச்சயதார்த்தம்.மாப்பிள்ளை வீட்டிலிருந்து அவரும், அவரோட அம்மா, அப்பா, சொந்தக்காரர்கள் சிலரோடு, மோதிரங்களை மாற்றிக்கொள்ள பொண்ணு வீட்டிற்கு வருவாங்க".

"ஹால்டி குடை - நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு ஹால்டி விழா நடைபெறும். சுமங்கலி பெண்கள் எல்லாரும் ஒன்று கூடி குளிக்கும் மஞ்சளை தூள் செய்து, அதை பொண்ணு வீட்டிற்கு அனுப்புவாங்கடா".

"இந்த ஹல்டியை தான் ( மஞ்சள் கலவை) பொண்ணோட உடம்பில் பூசுவாங்க. ஹல்டியைப் பயன்படுத்தும்போது, அனைத்து பெண்களும்,பீகாரின் நாட்டுப்புறப்பாட்டும், அவங்களுடைய பாரம்பரிய பாடல்களைப் பாடுவாங்கடா அம்மு.

"இதுவரை கேட்டவளோ, அய்யோஓஓஓஓ மாமா போதும் போதும். இதுவே எனக்கு கண்ணை கட்டுது".

" நீங்க நேரடியாகவே விஷயத்திற்கு வாங்களென்று ஆர்கலி சொல்ல, ஹாஹாஹாஹானு சிரித்த மைக்கேல், சுருக்கமா சொன்னதே உனக்கு மண்டை காயுதா? .

"பின்ன,அனுமார் வால் போல எனக்கென்னானு நீளுதே என்றாள்".

"சரிடா அம்மு என்றவர், மீண்டும் தன் கடந்த கால வாழ்க்கையின் நினைவுகளில் மைக்கேலும் மூழ்கினார்'.

"முதலில் மைக்கேல் தயாராகி வராண்டாவில் காத்திருக்க, அரைமணி நேரத்தில் ஷாலியும் சிகப்பு கலர் லெகங்ஹாவில் தயாராகி வெளியே வந்தாள்".

"ஜானு என்று எழுந்தவன், ரொம்ப அழகா இருக்கே என்க, ம்ம் என்று வெட்கப்பட்டாள். சரி போகலாமா?".

"தலையை மட்டும் ஷாலி அசைக்க, தனது வலது கையை அவளின் முன்பு மைக்கேல் நீட்ட,அதில் தனது இடது கையை வைத்தாள்".

"பின்னர் இருவரும் வெளியே வர, கரீமும் கார் ஓட்டிக்கொண்டு அங்கு வந்தான்.சீக்கிரம் பாய், அந்த கிழவி கத்தி உசுர வாங்குது".

"இருவரும் ஏறியதும் கார் அங்கிருந்து கோயிலை நோக்கிச்சென்றது".

"சிறிது நிமிட பயணத்தில் கோயிலுக்கு முன்பு வந்து கார் நிற்க, இருவரும் படியில் ஏறி மேலே சென்றனர்".

"அங்கு ஒரு பக்கம் மூங்கில் மண்டபம் அமைக்கப்பட்டு, வாழை மரங்கள் மற்றும் மா இலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது".

"அந்த ஏரியாவில் உள்ளவர்களும் குடும்பமாய் வந்திருந்தனர்".

"பின்னர் அய்யர் வேத மந்திரங்கள் ஓதி விட்டு, கருகமணி கோர்த்த பவுன் தாலியை கட்ட சொல்ல, நல்ல நேரத்தில் ஷாலியின் கழுத்தில் மைக்கேலும் போட்டு விட்டான்".

"பின்னர் மீதம் உள்ள சடங்குகளை முடித்து விட்டு, அங்கிருந்தவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு, வீட்டிற்கு வந்தனர்'.

"அன்றிரவே தங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி பயணப்பட்டனர்.நாட்களும் வாரங்களானது. மூன்று வேலையும் ஷாலியே சமைத்து கொடுக்க, மைக்கேலுக்கும், கரீமிற்கும் மகிழ்ச்சி தாளவில்லை".

"வசுந்தராவும் கயை மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்ற பின்னர், சட்ட ஒழுங்கு ரொம்ப கடுமையானது".

"சிறிது நாட்கள் வரை பிஸ்னஸை நிறுத்தி வைக்கலாமென்று பேசி முடிவெடுத்தனர்".

"திருமணத்திற்கு பின்னர் மைக்கேலும் இந்த தொழிலை விடவே யோசனையானான். அதை கரீமிடமும் சொல்ல, நல்ல முடிவு தான் பாய்.பாபி ரொம்ப நல்லவங்களா இருக்காங்க. அவங்களுக்கு இதை பற்றி தெரியமால் இருப்பதே நல்லது என்றான்".

"மூன்று மாதங்கள் கடந்து சென்றது. ஓர்நாள் மதிய உணவை மூன்று பேரும் சாப்பிட்டு கொண்டிருக்க, ஷாலிக்கு வாமிட் வருவது போல இருந்தது".

"எழுந்து பாத்ரூம் போக, வாமிட்டும் வந்தது. பின்னர் முகத்தையும், வாயையும் கழுவிட்டு வெளியே வந்தவளிடம்,என்னாச்சி? என்றனர்".

"சாப்பாடு தான் ஒத்துக்கொள்ளவில்லை என்கவும் ஓஓஓ என்றவன், சரி நல்லா ரெஸ்ட் எடுவென்று சொல்லி விட்டு, கரீமோடு மெக்கானிக் ஷெட்டிற்கு வந்தான்".

"அப்படி எதுவும் நாம சாப்பிடவில்லையேனு யோசனை செய்து பார்த்தவளுக்கு, ஓஓஓ இப்படி இருக்குமோ என்ற அதிர்வு வந்தது".

"உடனே ஃபோனை எடுத்து மைக்கேலுக்கு பண்ணியவள், அவன் அட்டென் பண்ணியதும் திவாரி உடனே வீட்டிற்கு வா என்றாள்".

"சரி என்று அழைப்பை கட் பண்ணியவன்,கரீம், உன் பாபிக்கு உடம்பு முடியலை போலடா, நான் போய் பார்க்குறேனென்று சொல்லி விட்டு வீட்டிற்கு சென்றான்".

ஆர்கலி எங்கே...?
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top