• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
பொள்ளாச்சி:

"ஜனனி வெற்றியை விரும்புறது முன்பே எனக்கு தெரியும்டி என்க,அன்பு சொன்னதை கேட்டு கீதா அதிர்ந்தாள்".


" ஆமாடி முட்டக்கண்ணி".

"சரி உன் கையில் போட்டுருக்கியே நிச்சயதார்த்த மோதிரம், அதோட அளவு எப்படி உனக்கு சரியா இருக்கு?".

"நீ கட்டிருக்கியே புடவை,அது யாருக்கு பிடித்த கலர்?சரி புடவையை விடு, ஜனனியோட பிளவுஸ், உனக்கு எப்படி மேட்ச் ஆகும்டி என் மக்கு பொண்டாட்டி? என்று கேள்விகளை அடுக்கினான்".

"அன்பு சொன்னதை கேட்ட பிறகு கவனித்து பார்த்தவளுக்கு அதிர்வுதான்.அவளுக்கு பிடித்த கலரிலே புடவை, அவள் விரலுக்கு ஏற்ற போலவே மோதிரமும் இருந்தது".

"அப்போ இந்த நிச்சயம் நடக்காதுனு தெரியுமா?".

"பின்ன தெரியாமல்? ".

"ஏண்டி என்னை மறந்து போய்விட்டாய் தானே? என்றான்".

"மறக்கும் படியா அய்யா பண்ணிட்டு போனீங்க?".

"ஹாஹாஹாஹ என்று சிரித்தவன்..

தாவணி பொண்ணே சுகந்தானா
தங்கமே தளும்பும் சுகந்தானா
பாறையில் சின்ன பாதம் சுகந்தானா
தொட்ட பூ எல்லாம் சுகந்தானா
தொடாத பூவும் சுகந்தானா
தோப்புல ஜோடி மரங்கள் சுகந்தானா
அயித்தையும் மாமனும் சுகந்தானா
ஆத்துல மீனும் சுகதானா
அன்னமே உன்னையும் என்னையும் தூக்கி வளர்த்த திண்ணையும் சுகந்தானா
மாமன் பொண்ணே மச்சம் பார்த்து நாளாச்சு
உன் மச்சானுக்கு மயிலப்பசுவு தோதாச்சு. .. என்று பாட ...

"கீதாவிற்கு அந்த நாட்கள் நினைவில் வந்து, வெட்கத்தை கொடுத்தது".

ஏண்டி, இத்தனை வருஷம் கழித்து "வந்துருக்கேனே, கொஞ்சமாவது என் மேல பாசம் இருக்காடி?".

"ஆமா,பாசம் இல்லாததை இவரு பார்த்தாரு? என்று முணுமுணுத்தாள்".

"வாயை திறந்து பேசுடி, பட்டாசு போல பட படனு பொறிந்து தள்ளுவ, இப்போ என்ன வாய் பூட்டு போட்டுருக்க என்கும் போதே, கீதா என்ற ஜனனியின் குரல் கேட்டது".

"அய்யோ ஜனா வந்துட்டாளென்று அவனிடமிருந்து விலகி ஓடியவள், வாசல் பக்கம் வர,அண்ணனை கூப்பிடுறாங்கடி, அவர் எங்கே?".

"அன்புவும் தோட்டத்தில் இருந்து வர, அண்ணா,பெரியம்மா கூப்பிடுது, பாரின்ல இருக்கும் உன் ப்ரண்ட் கிட்ட, கீதாவை காட்டி பேசிட்டு இருக்கேனு சொல்லிருக்கேன்".

"சரிடா குட்டி என்றவன், இருவரோடு ஜனனி வீட்டிற்கு சொல்ல,என்ன சாமி நாம கிளம்பலாமானு கந்தன் கேட்க,சரி மாமாயென்றான்".

"பின்னர் நிச்சயத்திற்கு அழைத்து வந்தவர்களோடு,மலர், கந்தன், மற்றும் அன்புவும் கிளம்பினர்".

"ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்திருந்தவனுக்கு, கீதாவினுடனான சந்திப்புகள், மனக்கண்ணில் வந்து சென்றது".

"அன்பிற்கு ஐந்து வயதாக இருக்கும் போது, ஓர் விபத்தில் அவனின் அம்மா அப்பா இருவரும் இறந்தனர்".

"இவன் தனது மாமன் கந்தன் வீட்டிற்கு வந்திருந்ததால் தப்பித்தான். தங்கையின் மகனை தன் பிள்ளையைப் போலவே கந்தனும் அவர் மனைவி மலரும் வளர்த்தனர்".

"பிள்ளைகளுக்கு ஸ்கூல் லீவ் விட்டால், வேணியையும், அன்புவையும் அழைத்துக்கொண்டு பொள்ளாச்சிக்கு வந்து விடுவார்".

"வேணி, அன்பு, ஜனனி, கீதா நால்வரும் ஒரு மாத லீவில் ஊரை சுற்றுவது, வாய்க்கல் வரப்பில் ஓடி ஆடி மகிழ்வது".

"லீவ் முடிந்து திரும்ப ஊருக்குச்செல்லும் போது அன்புவும், வேணியும் அழுது கொண்டு தான் போவார்கள்".

"தனது பெரியம்மாவோடு அன்பு வருவதால், ஜனனி அவனை அண்ணா என்றே கூப்பிட பழகிக்கொண்டாள்".

"வருஷங்களும் கடந்தது".

"கீதா, ஜனனி இருவரும் பெரிய மனுஷியாகினர்".

"இருவரும் பத்தாம் வகுப்பு தேர்வை எழுதி முடித்திருந்த நேரமது".

"அன்புவோ ஐ. டி. ஐ.முடித்து விட்டு, சில கம்பெனியில் வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கின்றான்".

"வேணி, அன்பு இருவரின் படிப்பின் காரணமாய்,அவர்கள் பொள்ளாச்சிக்கு வந்து சில வருடங்களானது".

"கல்லூரி படிப்பை முடித்த வேணி, அம்மா அப்பாவிடம் சொல்லிக்கொண்டு, அன்புவோடு பொள்ளாச்சிக்கு வந்து சேர்ந்தாள்".

"வேணியையும் , அன்புவையும் பார்த்த கண்ணம்மா பாட்டிக்கு ஆனந்த அதிர்சியானது".

"கண்ணுங்களா என்றவாறே இருவரையும் கிள்ளி முத்தம் கொடுத்தவர், இந்த பாட்டிய மறந்துட்டீங்க இல்லையா?".

"அய்யோ பாட்டி, உனக்கு தான் தெரியுமில்லைமா நாங்க காலேஜிற்கு போனது?, அதான் இங்க வரமுடியலை".

"லீவ் விட்டதும் உடனே உன்னை பார்க்க தானே ஓடி வந்தோமென்ற வேணியோ வாங்கி வந்த பொருட்களை பாட்டியிடம் கொடுத்தவள், நாங்க போய் ஜனனிய பார்த்துட்டு வரோமென்று இருவரும் சென்றனர்".

"ஜனனி வீட்டிற்கு வர,அங்கு வாசலில் இருந்த ராக்கம்மா பாட்டியை பார்த்து பாட்டி என்கவும் எலேய் வாங்கடா வாங்க".

"எப்போ வந்தீங்க?".

"பின்னர் பரஸ்பரம் நலம் விசாரித்து விட்டு, ஜனனியையும், மாரியப்பனையும் விசாரிக்க, இருவரும் வீட்டிற்கு வரும் நேரம்தானென்றார்".

அந்த நேரம் கண்ணம்மா பாட்டி டீ சொம்போடு வீட்டிற்குள் வந்தவர், பேரப்பிள்ளைகளுக்கும், தனது தோழிக்கும் டீயை கொடுத்து விட்டு அவரும் குடித்தார்.

"பிறகு நால்வரும் பேசிக்கொண்டிருக்க, ஸ்கூல் விட்டு வந்தவளோ, அக்காவையும், அண்ணனையும் பார்த்து அதிர்ந்தாள்".

"குட்டி என்றவாறு அன்புவும் எழுந்து போய் தங்கையின் தோளை தொட, அண்ணா என்று அவன் தோளில் சாய்ந்தவள் விசும்பி அழுதாள்".

"போங்க, உங்க ரெண்டு பேர்கிட்டயும் நான் பேசமாட்டேன் என்று முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அங்கிருந்து தோட்டத்திற்கு சென்றவள், துணி துவைக்கும் கல்லின் மேலே போய் உட்கார்ந்து கொண்டாள்".

"தங்கையின் கோவத்தை கண்டு, இருவரும் தோட்டத்திற்கு வர,அவளோ முகத்தை வலம், இடம் சுழித்து காட்டி விட்டு, வேறு பக்கம் திரும்பி கொண்டாள்".

"சரி அன்பு, நாம ஒரு பத்து நாள் இங்கே இருந்திட்டு போகலாம்னு வந்தோம், அது நடக்காது போல, நைட் வரும் கடைசி பஸ்ஸிலே ஊருக்கு கிளம்பலாமென்று வேணி கொஞ்சம் சத்தமாக சொல்லி விட்டு உள்ளே சென்றாள்".

"என்னாஆஆ பத்து நாளானு அதிர்ந்தவள், அய்யோஓஓ அக்காவும், அண்ணனும் போய்டுவாங்களேனு வேகமாக எழுந்து உள்ளே வந்தவள், வேணியின் அருகில் இடித்துக்கொண்டு உட்கார்ந்தாள்".

"எதுக்கும் இந்த வெட்டி ரோசமென்றார்? கண்ணம்மா பாட்டி".

உனக்கு என்ன கிழவி வந்துச்சி?.

"உன் வேலைய பாரு, உன்னை யாரும் இங்க பஞ்சாயத்து பண்ண கூப்பிடலை என்றவள், இப்போ தான் உங்களுக்கு தங்கச்சி ஞாபகம் வந்துச்சோ?".

"அடியேய் நாங்க காலேஜ் போறது உனக்கு தெரியும் தானா?.

"வேண்டுமென்றா வராமல் இருந்தோமென்ற வேணி,தங்கையின் தலையை தடவிக் கொண்டே, ஜனா எப்படி இருக்கடா என்றாள்.".

சென்னை மருத்துவக்கல்லூரி ஹாஸ்டல்:

"நிமிடங்கள் கடந்து சென்றது".

" ரியா, ரியா என்று கூப்பிட்டாள்".

" ஓரளவிற்கு அழுகை ஓய்ந்து இருக்க, பெட்டிலிருந்து எழுந்து உட்கார்ந்தவள், என்னை மன்னிச்சிடுடி".

"அன்று, நீ சொல்லும் போது நான் நம்பாமல் உன் கிட்ட சண்டை போட்டேன், இன்று தான் அந்த ரோகித் பற்றி உண்மை தெரிந்தது".

" ஓஓஓஓ".

" சரி...எழுந்து வா சாப்பிடலாம் என்றவாறே ஆதிரா வெளியே சென்றே விட்டாள்".

"பின்னர் எழுந்து போய் முகத்தை கழுவியவள், ரூம் கதவை பூட்டிக்கொண்டு டைனிங் ஹாலிற்கு செல்ல, அங்கே இருவருக்கும் டிபனை வாங்கிக்கொண்டு,ஆதிரா காத்திருந்தாள்".

"தோழியின் அருகில் போய் உட்கார்ந்து இருவரும் எதுவும் பேசாமல் சாப்பிட்டு முடித்து, கையை கழுவி விட்டு, வழக்கம் போல கல் பெஞ்சில் வந்து உட்கார்ந்தனர்.

"சிலர் அங்கங்கே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர்".

"சிலரோ வாக்கிங் சென்றனர்".

"இரவு நேரமும், மெல்லிய காற்றும் இருவருக்கும் இதமாய் இருந்தது".

"சரி இப்போ என்ன பண்ணப்போற?".

"அப்பா சொன்னப்போல, மாமாவையே கல்யாணம் பண்ணிக்க போறேன்டி.எது உண்மையான காதலென்று இப்போ தான் புரிஞ்சிதென்றாள்".

"அதற்கும் ஆதிரா,ஓஓஓ என்றாள்".

"என்னடி ?, நான் என்ன சொல்லுறேன் நீ ஓஓஓ மட்டும் சொல்லுறனு ரியா கேட்க, இது எதிர் பார்த்த விஷயம் தான் டி.அதனால்,எனக்கு ஒன்னும் புதுசா அதிர்வு வரலையே".

"ஆனால், மாமா கிட்ட எந்த முகத்தை வைத்து பேசுவேனென்று தான் தெரியலைடி.ஒவ்வொரு முறையும் மாமா ஆசையா என் கிட்ட பேச வரும், நான் வழக்கம் போல மூஞ்சில அடிச்சப்போலவே பேசிடுவேன்டினு என்று வருத்தப்பட்டாள்".

"அண்ணன் நல்லவர்னு உனக்கு புரிந்தால் சரி என்கும் போது, ரியாவின் ஃபோனிற்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்டது".

" போனை பார்க்க,அதில் விருமாண்டி என்ற பெயர் வர, முதல் முறையாக மனதுக்குள் ஒருவித படபடப்போடு அட்டென் பண்ணிய ரியா, காதில் வைத்து அமைதியாக இருந்தாள்".

"சிறிநு நிமிடங்கள் வரை அந்த பக்கம் எதுவும் பதில் இல்லாமல் போக, மாமா என்று பொறுமையாக ரியா சொல்ல,நான் தான் டி என்கும் கம்பீரக்குரல் கேட்டது".

"அந்த குரலின் கம்பீரம், இன்று அவளுக்கு புதுமையாய் இனித்தது".

"ரியா, உனக்கும் எனக்கும் வீட்டில் நிச்சயத்திற்கு ஏற்பாடு பண்ணுறாங்களென்க, அதைக் கேட்டவளுக்கு கண்கள் கலங்கியது".

"அவள் அமைதியாய் இருப்பதை வைத்து விருப்பமில்லை என்று நினைத்த கபிலன், எனக்கு தெரியும்டி உனக்கு என்னை புடிக்காதுனு.சரி இது நடக்காமல் நான் பார்த்துக்குறேன் என்க, அதைக்கேட்டவளுக்கு கோவம் வந்தது".

"யோவ் அறிவு கெட்ட மாங்கா மடையா".

"எவடா உன் கிட்ட சொன்னாள்,எனக்கு விருப்பம் இல்லைனு? என்று பட்டாசு போல பொரிந்து தள்ள, இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த கபிலனுக்கு,வானத்தில் பறப்பது போலிருந்தது".

"ஹாஹாஹா என்று அவன் சிரிக்கும் சத்ததில் சுதாரித்தவள், அய்யோ என்று மண்டையில் அடித்துக்கொண்டாள்".

"ஓய் பொண்டாட்டி, வாய் மட்டும் போதாதுடி, இவனை சமாளிக்க உன்னை தயார் படுத்திக்கோ என்றவன், எக்ஸாம் நல்லா எழுதியிருக்கியா?".

"ம்ம் மாமா".

"என்னடி ஆச்சு?".

"எப்போவும் விருமாண்டினு தான சொல்லுவாய்?".

"இப்போ மாமானு சொல்லுறியே என்க, புடிக்கலைனா போயா என்று கட் பண்ணியவளின் முகத்தை பார்த்த ஆதிரா, எழுந்து வந்து தோழியை அணைக்க,ரியாவிற்கு அந்த அன்பின் அணைப்பு தேவையாய் இருந்தது".

"மாமா கூட நிச்சயம் ஏற்பாடு பண்ணிருக்காங்கடி ஆதி".

"ஹேய்.... என்னடி சொல்லுறனு ஆதிரா அதிர, ஆமாடி,அதுக்கு தான் கால் பண்ணிருக்காங்க".

"ஓஓஓஓ.... மேடமிற்கு விருமாண்டி போய் மாமா வந்தாச்சோ என்க, இதையே தான் டி அவரும் கேட்டாரென்றாள்".

"நாங்கலாம் செம் ஷார்ப்டி என்க, சரி சரி.வா உள்ளே போகலாமென்று இருவரும் ரூமிற்கு வந்தவர்கள், சிறிது நேரம் படித்து விட்டு, பின்னர் லைட் ஆப் பண்ணி, படுத்து விட்டனர்".
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
இரத்தினபுரி-பிளாஷ்பேக்:

கோவை ராம் வீடு:


"உள்ளேயிருந்த சொந்த பந்தங்களுக்கு, மகனின் நண்பர்களை தம்பதிகள் இருவரும் அறிமுகப்படுத்திய வரலெட்சுமி டைனிங் ஹாலிற்கு அழைத்துச்சென்றார்".

"கண்ணுங்களா, முதல்ல சாப்டுங்கப்பா.பிறகு எங்கே போகணுமோ போய் சுத்திட்டு வாங்க என்றவாறு பரிமாற,அவரவர்களுக்கு பிடித்தமான உணவை பார்த்து நெகிழ்ந்தனர்".

"பரவாயில்லையே டார்லிங், எல்லாம் ஞாபகம் இருக்கு போல என்றான் விக்டர்".

"ஆமா கண்ணு, அது எப்படி மறக்கும்".
வயிறார சாப்பிட்டு வாங்க கண்ணு, நான் போய் நாளைக்கு நலுங்குக்கு ஆக வேண்டியதை பாக்குறேனென்று அங்கிருந்து செல்ல, நண்பர்களோ அரட்டையோடு சாப்பிட்டு முடித்தனர்".

"சரி வாங்கடா என்றவரே மேலே வந்தவன் ராம்,தனது அறைக்குள் அழைத்து போக,ஹப்பாடா என்றவாறே விக்டரும், ஆதுவும் மெத்தையில் விழுந்தனர்".

"ரெண்டு பன்னிக்கும் இதே வேலைடா என்றான் ருத்ரன்".

"ஆமா, நீங்களாம் படுக்கவே மாட்டீங்க பாரேன் என்கும் போதே, ருத்ரனை தவிர மற்றவர்கள் வந்து பெட்டில் சாய,நண்பர்களை பார்த்த ருத்ரன் அட அல்பைங்களா என்றான்".

"அப்புறம்டா மாடு, நெக்ஸ்ட் என்ன பிளான் என்றான் பிலீப்".

"ஊட்டிக்கு போகலாமானு ஆது கேட்க,ஒரே நாள்ல என்னத்தைடா சுற்றி பார்க்க முடியும்?அதுவுமில்லாமல் நாளைக்கு நலுங்கு ஆரம்பம்டானு ராம் சொல்ல,ஓஓஓ... அப்போ நாங்கள் போய் வரட்டுமா என்கவும்,தனியாவா என்று ராம் கேட்க,ஏன் எருமை, நாங்க என்ன குழந்தைங்களாடா என்றான் ருத்ரன்".

"இல்லைடா..என் கூடயே இருங்களேன்".
திரும்ப எல்லாரும் எப்போ ஒன்னு சேருவோம்னு தெரியலையே".

"சரி சரி நெஞ்சை நக்காத, போய் மனுஷன் குடிக்க டீ கொண்டுவாடா என்ற ஆது, தடிமாடு தலையை எட்ட வையேன்டா என்றான் விக்டரிடம்".

"ம்ம் என்று அங்கிருந்து கீழே சென்றவன், நண்பர்களுக்கு டீ கேட்க, இதோ தம்பி, பெரியம்மா சொல்லிட்டாங்க என்றார் வேலையாள்".

"குடுங்கக்கா என்றவன் டிரேயோடு மேலே வர,இந்த மாப்பிள்ளை எனக்கு வேண்டாம்டா, வேற பாருங்கடானு விக்டர் சொல்ல,மற்றவர்கள் சிரித்தனர்".

"கொழுப்பெடுத்தவனுங்களா, குடிங்கடானு ராமும் சிரித்தான்".

"சரிடா கொஞ்ச நேரம் தூங்குறோம், நைட்டும் இந்த மூனு தடிமாடால் தூக்கமில்லைனு ருத்ரன் சொல்ல, சரி படுங்கடா என்றவன், நண்பர்களுக்காகவே இன்னும் ஒரு கிங் சைஸ் கட்டிலை ரூமிற்கு வர வைத்திருந்தான்".

"டேய் டிரஸை மாத்திட்டாவது படுங்கடா என்றவாறு கீழே சென்று விட்டான்".

"எங்கப்பா புள்ளைங்கனு சிவன் கேட்க, படுத்துட்டானுங்கப்பா என்கவும், சரி கண்ணு, வந்த களைப்பு இருக்கும்,தூங்கட்டும்".

"புள்ளைங்களுக்கு எந்த குறையும் இருக்க கூடாது லெட்சுமி"

"ம்கும்... எங்களுக்கு தெரியாதாக்கும் என்று தோள் பட்டையில் முகத்தை இடித்துக்காட்டி சொல்ல, மகன் ஊருக்குள்ள வந்ததிலிருந்து, உன் ஆட்டம் கொஞ்சம் ஓவரா தான் இருக்கென்றார்".


"சரி சரி மச மசனு நிக்காமல் போய் வேலைய பாருங்களென்று வரலெட்சுமி உள்ளே செல்ல,நான் நம்ப மில்லுக்கு போய்ட்டு வந்துடுறேன்பானு ராம் சொல்ல, தம்பி நீ இங்க இருய்யா". அதெல்லாம் அப்பன் பாத்துக்குறேன் என்றார்".

"அப்பா, லோடு இன்றைக்கு கேரளா போகுது, அதை அனுப்பிட்டு மதியத்திற்கு வந்துடுறேனென்று வெளியே வந்த ராம், தனது புல்லட்டில் ஏறி மில்லுக்கு வந்தான்".

"பின்னர் நெல்லு மூட்டைகளை கணக்கு பண்ணி லாரியில் ஏற்றி விட்டு, வீட்டிற்கு வர, மதியம் இரண்டு மணியானது".

"என்னம்மா இன்னும் எழலையா?".

"போய் பார்த்தேன்பா, புள்ளைங்க நல்லா தூங்குறாங்க,சரினு வந்துட்டேன்".

"அம்மா, ஆது பசி தாங்க மாட்டான்மா என்னும் போதே, லெட்சு என்றவாறே ஆதுவும் கீழே வந்தான்".

"வா கண்ணு".

" நல்லா தூங்குனியா?ஆச்சு ஆச்சு, சிறுகுடலும் பெருங்குடலும் ஒரே சண்டை போட்டுச்சா, அதான் எந்திரிச்சிட்டேன்".

"சரி,அவங்களாம்பா?".

"எழுப்பி விட்டு தான் வந்துருக்கேன்".

"பின்னர் நண்பர்கள் கீழே வர, அவர்களுக்காக ஆர்டர் பண்ணிய, பீஸா, பர்கரும் வந்து சேர்ந்தது".

எதுக்கு இதெல்லாம்?.

"நல்லா காரஞ்சாரமா சாப்பிடலானு இருந்தால், இங்கையும் இதானா என்றான் பிலீப்".

"அச்சோ, உங்களுக்கு புடிக்குமேனு தான் கண்ணு நம்ப மீசைய( கணவர்) விட்டு வாங்கிட்டு வரச்சொன்னேன்".

பீகார்- கயை மாவட்டம்:

"இரண்டு வாரங்களுக்கும் மேலாகவே, மெக்கானிக் ஷாப் பூட்டி தான் இருந்தது.விடிந்தால் ஹோலி பண்டிகை என்பதால், அங்கங்கே கலர் பொடிகள் விற்கும் கடை போட்டிருந்தார்கள்".

"சூரியனும் தன் தங்க ஒளியோடு கிழக்கே உதயமானான்".

"அங்கங்கே பாட்டு சத்தமும் ஒலித்தது".

"ஆண்களும், பெண்களும் வயது வித்தியாசம் பார்க்காமல், கலர் பொடிகளை பூசி ஓடி ஆடி மகிழ்ந்தனர்".

"ஷாலிக்கு தான் மனதே சரியில்லை".

"அவள் தங்கை ஷாமும் மேலே வந்தவள், அக்கா வா எல்லாரும் ஜாலியா இருக்காங்க, நாமளும் போவோமென்று கூப்பிட்டாள்".

"ஷாலியோ எதுவும் பேசாமல் ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டிருந்தவள்,சற்று பார்வையை கூராக்க,அங்கே மைக்கேல் நிற்பது போலிருந்தது".

"உடனே எழுந்தவள், தங்கையோடு படியில் இறங்கி கீழே வந்தவள், வாசலுக்கு செல்ல,அக்கம் பக்கத்தில் இருக்கும் வாண்டுகள் ஹேப்பி ஷோலி திதி என்று கத்திக்கொண்டே கலர் பொடியை அவளுக்கு பூசினர்".

"ஷாலியும் அவர்களுக்கு பூசி விட்டு, அவன் நின்ற இடத்தை பார்க்க,அங்கு யாருமில்லை".

"அப்பொழுது,அவளுக்கு தெரிந்த பையன் ஒருவன் கலர் பொடி பூச வர, தப்பித்து ஓடியவள் பக்கத்து வீட்டு சந்தில் போய் ஒளிய,ஒரு கரம் அவள் கையை இறுக பற்றியது".

"அந்த தொடுதலில் திரும்பியவளின் கன்னத்தில் கலர் பொடியை பூசியவன், எப்போ கல்யாணம் பண்ணிக்கலாமென்றான்?.இப்பவே என்றவாறு அவனை இறுக அணைத்துக்கொண்டவள், மைக்கேலின் நெஞ்சில் சாய்ந்து அழுதாள்".

ஏய் எதுக்குடி அழுகுற?.

"என்னாச்சு என்றான்".

"எங்கே போனீங்க? என்று அழுது கொண்டே கேட்டாள்".

"கயைல ஒரு கடை வந்துச்சிடி, இடத்தோட விலை குறைவா இருந்துச்சி, அதான் அங்க ஆரம்பிச்சிட்டேன்.ஓஓஓ...மேடம் ரொம்ப தேடுனீங்களோ? என்க,இல்லையே என்றாள்".

"அப்படியா?, சரி நான் கிளம்புறேன் என்க, ம்கூம் என்றவள் இன்னும் இறுக்கி அணைக்க,ஏய் மனுஷனை உசுப்பேத்தாதேடி.பிறகு நடக்குறதுக்கு நான் பொறுப்பில்லை".

"பரவாயில்லை இப்படியே இருங்களென்றாள்".

"ஏய் யாராவது வந்துட போறாங்கடி என்றவனும், தன் மனம் கவர்ந்தவளின் முகத்தை ஏந்தியவன், அவள் இதழில் தன் இதழை புதைத்தான்".

"எத்தனை நிமிடமோ முத்தப்போர் நீடிக்க, யாரோ ஒருவர் கத்திக்கொண்டே வரும் சத்தம் கேட்டு, இருவரும் விலகினர்.சரி நான் பிறகு வருகிறேனென்று காற்றாய் மறைந்து விட்டான்".

"அன்றிலிருந்து இருவரும், இரண்டு நாளுக்கொருமுறை காலேஜ் போகும் வழியில்,யாருக்கும் தெரியாமல் சந்தித்துக்கொண்டனர்".

"நாட்களும் ஓட, காதலும் வளர்ந்தது".

"தனது பிஸ்னஸிலும் மைக்கேலுக்கு ஏறுமுகமாகவே இருக்க, கரீம் தான் கிண்டல் செய்து கொண்டிருந்தான்".

"பிஜி படிப்பையும் வெற்றிகரமாக முடித்தவளுக்கு, அதே காலேஜில் வேலையும் கிடைக்க, காதலர்களுக்கு இன்னும் வசதியாக போனது".

"படிப்பு முடிந்ததால் அடுத்து கல்யாணப்பேச்சு எழ,அந்த நேரத்தில் தான் ஷாலியின் திறமைக்கு வேலை கிடைத்தது.கடந்த இரண்டு மாதங்களாக செமஸ்டர் லீவ் விட்டதால், ஷாலியால் வெளியே போக முடியவில்லை".

"அவளை பார்க்காமலும் மைக்கேலால் இருக்க முடியாமல், என்ன செய்வதென்று யோசிக்கும் போது தான், அவள் அறையின் அருகில் இருக்கும் மரம் கண்ணில் பட்டது".

"சரியென்று முடிவெடுத்தவன், நள்ளிரவு நெருங்கும் வரை மறைந்திருக்க,அவன் நேரமோ என்னவோ அன்று பார்த்து நல்ல மழை.லேசாக தூரல் இருக்கும் போதே மரத்தில் ஏறி சிலாப்பின் மேல் இறங்கியவன், ஜன்னல் வழியாக ஜானு என்று கூப்பிட்டான்".

"காதலன் நினைவில் உறங்காமல் இருந்தவள், சத்தம் கேட்டு ஜன்னலை பார்த்து அதிர்ந்தவள், கதவை திறக்க மற்றொரு சிலாப்பின் மேல் தாவி ஏறி உள்ளே வந்தான்".

"ஏன் இப்படி என்றவள், டவலை எடுத்து அவன் தலையை துவட்ட, பசிக்குதுடி என்றான்".

"இவ்வளவு நேரமா சாப்பிடாமல் என்ன பண்ணுனீங்க? என்று அதிர்ந்து போய் கேட்டாள்".

"உன்னை பார்க்க வெய்ட் பண்ணிட்டு இருந்தேன்டி, நேரம் போனது தெரியலை என்க,அதைக்கேட்டவளோ அவனை அணைத்துக்கொண்டாள்".

"சரி இருங்க, நான் போய் சாப்பாடு எடுத்துவரேனென்றவள், கதவை வெளிப்புறமாய் தாழ்ப்பாள் போட்டு கீழே இறங்கி வர,எங்கும் இருட்டாய் இருந்தது".

"சத்தமில்லாமல் கிச்சன் கதவை திறந்து மீண்டும் உள்ளே போய் மூடியவள், விளக்கை ஆன் பண்ணி விட்டு, ஃப்ரிஜில் இருந்த தால் எடுத்து சூடு பண்ணியவள், ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டாள்".

"பின்னர் ஹாட்பாக்ஸில் இருந்த சாப்பாத்தியையும், வாழைப்பழம் இரண்டையும் எடுத்துக்கொண்டு, லைட்டை ஆப் பண்ணி, கதவை தாழிட்டு மேலே வந்தவள், உள்ளே வந்து டேபிளின் மேல் வைத்து விட்டு, அறைக்கதவை லாக் பண்ணினாள்".

"சாப்பிடுங்க என்க, அவள் பெட்டில் படுத்திருந்தவன் எழுந்து உட்கார, அவனுக்கு ஊட்ட வரவும் அதை பார்த்தவனுக்கு கண்கள் கலங்கியது.நினைவு தெரிந்த பின்னர், அவனுக்கு யாரும் இதுவரை ஊட்டியதில்லை".

"ஏங்க, என்னாச்சி என்றாள்?".

"ஏண்டி, இதையெல்லாம் மனுஷன் சாப்பிடுவானானு பேச்சை மாற்றினான்".

"அய்யர் வீட்டில் வேற என்ன கிடைக்குமென்றாள்".

"ம்ம், அதுவும் சரி தான்".

உன்னை கட்டுன பிறகு நான் பருப்பு கடை தான் வைக்கணும் போலயென்றவன், ஒரு வாய் சப்பாத்தியை அவளுக்கு ஊட்ட போக, நான் சாப்பிட்டேன், வேண்டாமென்றாள்".

"இருந்தும் கையை இறக்காமல் நீட்டியே இருக்க, சரியான பிடிவாதக்காரர் என்றவாறே வாயை திறந்து வாங்கியவள், மீதம் உள்ளதை மைக்கேலுக்கு ஊட்டி முடித்தாள்".

"மேலும் சிறிது நேரம் அவளோடு பேசிட்டிருந்தவன், மணியை பார்க்க, நள்ளிரவு இரண்டு என்று காட்டியது".

"சரி ஜானு, நான் கிளம்புறேன்டி".

"மழையும் விட்டிருக்கு என்றவன், மீண்டும் அணைத்து விட்டு, மரத்தில் ஏறி கீழே இறங்கிச்சென்றான்".

" கண்ணிலிருந்து அவன் மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்தாள்".

"அதன் பிறகு வாரம் வாரம், இப்படியே வந்து பார்த்து செல்ல,இன்று தான் வீட்டிற்கு தெரிந்து விட்டது".

"வண்டி பிரேக் பிடித்து நிறுத்த, இருவரும் அவரவர் நினைவில் இருந்து வெளியே வந்தனர்".

"உன்னை ஆரத்தி எடுத்து அழைக்க யாரும் இல்லைடி என்கவும் அவன் தோளில் சாய்ந்தவள் அதான் எல்லாமுமாய் நீங்க இருக்கீங்களே".

"பின்னர் தன்னிடமிருந்த சாவியால், மெக்கானிக் ஷாப்பின் பின் பக்கம் இருந்த சிறிய வீட்டின் கதவை திறந்தவன், வா ஜானு என்று அழைத்து போனான்".

ஆர்கலி எங்கே....?
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top