• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
இரத்தினபுரி-ஆனந்தன் பேலஸ்:

"காரின் ஹாரன் சத்தம் கேட்டு வாட்ச்மேன் கதவை திறந்து விட,உள்ளே ஓடி போய் போர்டிக்கோவிலில் வந்து நின்றது".


"பின்னர் மூவரும் இறங்கி வீட்டில் உள்ளே செல்ல, அங்கே ஆனந்தன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்".

"கார் சத்தம் கேட்டு வாசல் பக்கம் திரும்பியவர்,ரஞ்சனை பார்த்து புருவத்தை சுருக்கி, ரஞ்சன் தானே என்க,ஆமாம் அங்கிள்".

"எத்தனை வருஷம் ஆச்சுப்பா உன்னை பார்த்து என்றவர் முதல்ல ஃப்ரஷ் ஆகிட்டு வந்து சாப்பிடுங்க டா என்றவறோ,வேலையாளிடம் மூவருக்கும் டின்னர் எடுத்து வைக்க சொன்னார்".

"வாடா என்றபடி மாடிக்கு சென்ற சிறிது நிமிடத்தில் மூவரும் கீழே வர, வேலையாள் அவர்களுக்கு உணவை பரிமாறினர்".

"சாப்பிடும் போது ரஞ்சனுக்கு கண்கள் கலங்கியது. அவனை நண்பர்கள் இருவரும் கவனித்துக் கொண்டு தான் இருந்தனர்".

"என்னமோ நடந்திருக்கிறது என்பது மட்டும் அவர்களுக்கு புரிந்தது".

"பின்னர் மூவரும் சாப்பிட்டு முடித்து, ஆனந்தனுடன் சொல்லிக் கொண்டு மொட்டை மாடிக்கு சென்றனர்".

"ரஞ்சா, வீட்ல எல்லாரும் எப்படி இருக்கிறார்களென நண்பர்கள் இருவரும் கேட்க,அவனோ எதுவும் சொல்லாமல் சத்தமிட்டு அழுதான்".

"என்னடா ஆச்சுனு ருத்ரன் கேட்க, அம்மா உயிரோட இல்லடா என்றான்".

"என்ன என்று இருவரும் அதிர்ந்து கேட்க, எதைடா சொல்ல என்றவன், தனது வாழ்வில் நடந்ததை நண்பர்களுடன் சொல்ல தொடங்கினான்".

"கடைசியா எக்ஸாம் எழுதிட்டு,உங்க கிட்ட சொல்லிட்டு நான் வீட்டிக்கு போனேன் டா, அப்போ வாசல்ல ஒரே கூட்டமா இருந்துச்சி".

"என்ன நம்ப வீட்டில் இவ்வளவு கூட்டம் இருக்கென்று ஓடிப்போய் பார்க்கும் போது,அம்மா...அம்மானு தடுமாறியவன்,மாலை போட்டு படுத்திருந்தாங்கள்டா".

"அம்மானு நான் கத்தி கதறி அழுதேன்டா. கொஞ்ச நேரத்தில் பாடியை எடுத்துட்டு போய்ட்டாங்கள்".

"அப்பொழுது தான்,ராகினி அங்க இல்லைனு எனக்கு தெரிஞ்சதுடா".

"ராகினி ராகினினு நான் அழுதுக்கொண்டே வீடு முழுவதும் தேட, வேலையாள் தான் சொன்னார் டா, பாப்பா ஹாஸ்பிட்டலில் இருக்குதுனு".

"என்ன சொல்றீங்கனு அழ, அப்போ தான் டா அவர் நடந்ததை சொன்னார்".

"ரஞ்சனின் அப்பாவிற்கு டெக்ஸ்டைல்ஸ் வியாபாரம்.அதனால் அடிக்கடி வெளியூர் போய்விடுவார் குடும்பத்தையும், பிள்ளைகளையும், ரஞ்சனோட அம்மா தான் பார்த்துக்கொள்வது".

"நேற்று காலையில், ராகினிக்கு அம்மா சாப்பாடு ஊட்டிக்கிட்டு இருக்கும் போது, அப்பாவும் அவர் கூட ஒரு பொம்பளையும் வந்துருக்காங்க".

"தனது புருஷன் கூட வந்திருப்பதால், யாரோ தெரிந்சவங்கனு நினைத்து, வாங்கனு சொல்லியிருக்காங்க.வந்த பொம்பளை ஷோஃபாவில் உட்கார்ந்து கொண்டு ம்ம் சீக்கிரம்னு சொன்னாளாம்".

"என்ன விஷயம்னு புரியாமல் கணவனை பார்க்க,அவர் எதுவும் சொல்லமால் கீழே குனிந்து கொண்டு, இந்த வீட்டை விட்டு போய்டுனு சொல்லிருக்கிறார்".

"என்ன விளையாட்டுங்கனு அந்த ஆள் சட்டை பிடித்து அம்மா கேட்க, ஏய் என் புருஷன் கிட்ட என்னடி உனக்கு பேச்சினு, அந்த பொம்பளை அம்மாவை பிடித்து இழுத்து தள்ள,அருகாலில் போய் விழுந்தவங்க திரும்ப எந்திரிக்கலையாம்".

"ராகினி அம்மானு கத்திட்டு மயங்கினவள் தான் எழலையாம். உடனே அந்த ஆள் வேலைக்காரவங்களை மிரட்டி, படிக்கட்டில் தடுக்கி விழுந்து இறந்துட்டதா சொல்ல சொல்லிட்டான்".

"நான் போய் ஹாஸ்பிட்டலில் பார்க்கும் போது, ராகினி அதிர்ச்சியில் மயங்குனவள் தான், இன்று வரை கண் விழிக்கலைடா.அம்மா காதலித்து கல்யாணம் பண்ணிக்கிட்டதால் வீட்டிலையும் அவங்களை சேர்த்து கொள்ளவில்லையாம்".

"அதன் பிறகு, கரஸ்ல டிகிரி படிச்சிக்கிட்டே,கிடைத்த வேலைக்கு போய்ட்டு, கவர்ன்மெண்ட் ஹாஸ்பிட்டலில் தான் அவளுக்கு வைத்தியம் பாத்துட்டு இருக்கேன்டா".

"கையில் காசு இல்லாமல்,நேற்றிலிருந்து வெறும் தண்ணிய தான் குடிச்சிட்டு இருந்தேனா, அதான் மயங்கிட்டேன்டானு கதறி அழுதான்".

"ரஞ்சனின் கதையை கேட்ட நண்பர்களும் கண் கலங்கினர்".

"ஏண்டா முட்டாள், ஒரு முறை வந்து எங்களை பார்த்திருக்கலாமே என்க, வந்தேன் டா, அன்று தான் நீங்க கனடா போனதாக, வீட்டில் இருந்த வாட்ச்மேன் சொன்னாரு.நீங்க இல்லாமல் நான் போய் எப்படிடா ஹெல்ப் கேட்க?".

அறிவு கெட்டவனே, நாம என்ன அப்படியாடா பழகினோம்?.

"சரி போனது போய் தொலையட்டும்டா, காலையில் போய் ராகினிய நல்ல ஹாஸ்பிட்டலில் சேர்க்கலாம்,ரெண்டு பேரும் சேர்ந்து தான் சிம்ஹானந்த் ஷோரும் வச்சிருக்கோம்".

"வாடா நீயும் ஒரு பார்ட்னராக சேரு, உன் ஐடியாவை முதலீடா போடுடானு நண்பர்கள் சொல்ல, வேண்டாம்டா".

"முதலாளி என்ற ஆசையெல்லாம் அம்மா போன உடனே போய்ட்டு.வேலை குடுங்கடா செய்யுறேன், சரி நீ நம்ப ஷோரூமிலே டிசைனிங் செக்க்ஷன்ல நாளைக்கு வந்து ஜாயின்ட் பண்ணுடா".

"ஏற்கெனவே அங்க ரெண்டு பேர் இருக்காங்க என்றான் ருத்ரன்".

"சரிடா என்றவர்கள் பள்ளிக்கால கதையை பேசிக்கொண்டு, மொட்டை மாடியிலே தூங்கி விட்டனர்".

பொள்ளாச்சி:

"ஜனனிக்கு அன்பு உடன் நிச்சயதார்த்தமென்று எப்போ கீதாவுக்கு தெரிந்ததோ,அப்பொழுதிலிருந்து தோழியிடம் பேசுவதை நிறுத்தி விட்டாள்".

"இதைப் பற்றி வெற்றிக்கு சொன்னாயென்றால், நான் உயிரோடு இருக்க மாட்டேனென்று, ஒரே வார்த்தையில் தோழியின் வாயை அடைத்த ஜனனி, வழக்கம் போல வேலையை பார்க்க தொடங்கினாள்".

"நிச்சயதார்த்த நாளும் வந்தது. காலையிலே ரேடியோ செட்டுக்காரர் வந்து,இளையராஜா பாட்டை ஒலிக்க விட்டார்.சமையல் வேலைக்கும் ஆட்கள் வந்து சேர்ந்தனர்.அவர்கள் போட்ட லிஸ்டில் உள்ள பொருட்களையெல்லாம் சோமுவும், இன்னொருத்தரும் தோட்டத்தில் கொண்டு போய் கொடுத்தனர்".

"சமையல் மாஸ்டரோ, உதவி செய்ய வந்த இரண்டு பெண்களிடம், சாம்பாருக்கு,பொரியலுக்கு தேவையான காய்கறிகளை கொடுத்து அரிய சொன்னார்".

"நல்ல நேரம் பார்த்து விட்டு அடுப்பில் சூடத்தை ஏற்றி சாமியை வணங்கியவரோ வேலையை தொடங்கினார்.

"நேரமும் கடந்து கொண்டிருந்தது".

"சொந்த பந்தங்களும்,வந்து கொண்டிருந்தனர்.மாப்பிள்ளை வீட்டாரும் அங்கு வந்து சேர்ந்தனர்".

"வந்தவர்களை, சோமு தம்பதியும், மாரியப்பன், ராக்கம்மா பாட்டி, கண்ணம்மா பாட்டி ஆகியோர் வரவேற்தனர்".

"அன்புவை பார்த்து ஐந்து வருடங்களுக்கு மேலானதால், சிலர் அவனோடு பேசி நலம் விசாரித்தனர்".

"வந்தவர்களுக்கு ஒரு ஆள், குடிக்க மோர் கொடுத்துக்கொண்டிருந்தார்".

"உள்ளே இருந்த தங்கையை பார்க்க வந்த வேணி, ஜனா என்க,அக்காவின் குரலைக்கேட்டு திரும்பி பார்த்தவள் வாக்கா என்றாள்".

"பின்னர் குழந்தையை வாங்கி கொஞ்சும் தங்கையை பார்த்த வேணிக்கு, தங்கள் வீட்டிற்கே தங்கை வரப்போவதை நினைத்து சந்தோஷமாக இருந்தது".

"முதல் நாள் மேட்டுப்பாளையம் சென்ற வெற்றி ஊருக்குள் வர, பாட்டு சத்தம் கேட்டது".

என்ன ஊர்ல பாட்டு சத்தம் கேட்குது?.

"யார் வீட்டில் விசேஷம்னு தெரியலையேனு யோசனையோடு வீட்டிற்கு வந்தவன், புல்லட்டை ஷெட்டில் நிறுத்தி விட்டு வீட்டிற்குள் சென்றான்".

"அந்த நேரம், வள்ளியும் தயாராகி தனது ரூமில் இருந்து வெளியே வந்த வள்ளியோ மருமகனை பார்த்து விட்டு, வா கண்ணா, அந்த பையன் நல்ல படியாக பிளைட் ஏறிட்டானா".

"ம்ம் என்றவன்,ஊருக்குள் பாட்டு சத்தம் கேட்குதே, யார் வீட்டில் என்க, ஜனனிக்கு நிச்சயதார்த்தம், அப்பா போயாச்சி, நானும் போய்ட்டு வரேனென்று அங்கிருந்து வெளியே சென்றார்".

"என்னாஆஆஆஆ அவளுக்கு நிச்சயதார்த்தமா?".

"அது எப்படி என்று பல்லை கடித்தவன், வீட்டை பூட்டிக்கொண்டு வெளியே வர, தூரத்தில் வள்ளி போவது தெரிந்தது".

"வண்டியை எடுத்தவன், நேராக ஜனனி வீட்டை நோக்கிச்சென்றான்".

"அங்கே ஜனனிக்கு வாங்கிய பட்டுப்புடவை, மேக்கப் பொருட்கள் அடங்கிய தாம்பூலத்தை மலரும், அவர் கணவர் கந்தனும் இணைந்து மாரியப்பனிடம் கொடுக்க போக, நிறுத்துங்க என்று சத்தம் கேட்டது".

"பந்தலில் இருந்த எல்லாரும் வாசல் பக்கம் பார்க்க,அங்கே அய்யனார் கணக்காய் வெற்றி நின்று கொண்டிருந்தான்".

"வாங்க தம்பியென்று மாரியப்பன் சொல்ல, யாரைக்கேட்டு அவளுக்கு வேற ஒருத்தரோடு நிச்சயம் பண்ணுறீங்க?".

"என் பொண்ணுக்கு பண்ண, நான் யாரை தம்பி கேட்க வேண்டுமென்று அவர் சொல்ல,உங்க மகளுக்கு கல்யாணம் என்ற ஒன்று நடந்தால் அது என் கூட மட்டும் தான்".

"இதனால் கூட்டத்தில் அங்கங்கே சலசலப்பு உண்டானது".

"சத்தியமூர்த்தியோ எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்".

"தம்பி நீங்க என்ன சொல்லுறீங்கனு மாரியப்பன் கேட்க, ஜனனி என்னோட பொண்டாட்டி என்றவன், ஏய் வெளியே வாடி என்று கத்தினான்".

"அவனின் சத்தம் கேட்டு உள்ளுக்குள் திகில் இருந்தாலும், தைரியமாய் வெளியே வந்தவள், என்ன விஷயமென்றாள்?".

"நான் உன்னை விரும்புறேன்னு தெரிஞ்சும் நீ எப்படிடி வேற ஒருத்தனுக்கு கழுத்தை நீட்ட சம்மதிக்கலாமென்று அவளை அறைய வர,அவன் கையை தடுத்தவள்,என்னை கல்யாணம் பண்ண உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?".

பத்து பைசா சம்பாரிக்க துப்பு இருக்கா?.

இல்லை சொல்லும் படி எதாவது வேலை?.

"பாட்டன் சொத்துல வாழுற நீயே தெண்டச்சோறு, உனக்கு நான் கேடா?.

என் மாமன் வெளிநாடு போய் உழைத்து முன்னேறினவர், நீங்க?.

"சொல்லுங்க?,படிப்பை தவிர உங்களுக்கு சொந்தம்னு நீங்க சம்பாரித்ததில் என்ன இருக்கென்றாள்".

"அத்தனை பேருக்கு முன்னாடி, ஜனனி கேட்ட கேள்வியால் நிலைகுலைந்து போகவும்,என்ன வெற்றி சார், எங்கே போச்சு உங்க வாய் சவடால் என்றாள்".

"அப்பொழுது போஸ்ட் மேன் வாசலில் வந்து நின்று, வெற்றி தம்பி என்று கூப்பிட்டார்".

"எல்லாரும் அவரை பார்க்க, தம்பி ரிஜிஸ்டர் தபால் வந்திருக்குப்பானு பேனாவை நீட்ட, கையெழுத்து போட்டு வாங்கியவன், அவர் கொடுத்த பழுப்பு நிற கவரை திறந்து, உள்ளே இருந்த லட்டரை படித்தவன், நிதானமாக ஜனனியின் எதிரில் போய் நின்று, லெட்டரை அவளிடம் நீட்டினான்".

"அதை வாங்கி படிக்கும் போதே, தனது கழுத்தில் இருந்த செயினை கழட்டி அவள் கழுத்தில் போட,எல்லாரும் அங்கு நடப்பதை பார்த்து அதிர்ந்தனர்".

"பின்னர் கீழே இருந்த குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியில் வைத்தவன்,எல்லாரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு, இந்த நிமிஷத்தில இருந்து இவ என் பொண்டாட்டி".

"அப்பா போஸ்டிங் முடித்து இந்த மண்ணில் நான் கால் வைக்கும் போது, எங்க கல்யாணம் நடக்குற போல ஏற்பாடு பண்ணுங்களென்றான்".

"கந்தனுக்கோ சொல்லொன்னா கோவம் வந்தது".

"இங்க பாருங்க தம்பி, என்னமோ வந்தீங்க,உங்க இஷ்டத்திற்கு எல்லாம் முடிவு பண்ண நாங்களாம் யாரு?.

"யாரைக்கேட்டு இப்படி ஒரு செயல் செய்தப்பானு கோவமாக கேட்க, அவர் கேள்வியில் உள்ள நியாயம் மற்றவர்களுக்கும் சரியென பட்டது".

"நடந்தது நடந்து போயிடுச்சி அடுத்தது ஆக வேண்டியதை பாருங்கப்பா".

"எப்போ கழுத்துல போட்டிருந்த செயினை கழட்டி சின்னதம்பி ஜனனி புள்ளை கழுத்துல போட்டுச்சோ, அப்பவே அதுக்கு உரிமையானதா ஆகியாச்சு என்றார் ஊரில் வயதான ஒருவர்".

" பின்னர் சிறிது நேரம் அந்த இடத்தில் சலசலப்பு அதிகமாக எல்லாரையும் பார்த்த சத்தியமூர்த்தி, எழுந்து நின்று கையெடுத்து கும்பிடவும், அதை பார்த்து பதறினர்".
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
பீகார்- கயை மாவட்டம்:

"ஷாலி அவன் குலம் கோத்திரம் என்னனே தெரியலைடி,தாலியை கழற்றி எரியுடி என்றவாறு மகளின் கன்னத்தில் மாறி மாறி அறைந்தார்".


"சுற்றி இருப்பவர்களும், எவ்வளவோ சொல்ல எனக்கு திவாரி தான் வேண்டுமென்பதில் பிடிவாதமாக இருந்தாள்".

"எல்லாரையும் கர்வமாக ஒரு பார்வை பார்த்தவன், ஷாலியை தோளோடு அணைத்துக்கொண்டு அங்கிருந்து படியில் இறங்கி கீழே வந்தவன், ஜானு நான் கட்டிய தாலியை தவிர உன் கிட்ட எந்த நகையும் இருக்கக்கூடாது".

"அதைக்கேட்டவள், தாலியை தவிர எல்லாவற்றையும் கழட்டியவள், அங்கிருந்த டேபிளின் மேல் வைத்துவிட்டு, யாரையும் திரும்பி பார்க்காமல் சென்றாள்".

"மறைவாக நிறுத்தியிருந்த வண்டியை ஸ்டார்ட் பண்ணியவன், ம்ம் என்க, பின்னாடி சீட்டில் ஏறி உட்கார்ந்தவளின் கண்ணிலிருந்து, தாரைதாரையாக கண்ணீர் வழிந்தோடியது".

"இரவு நேர வண்டி பயணத்தில், இருவரும் முதல் முதலில் சந்தித்த நாள் நினைவு வந்தது".

"மூன்று வருடங்களுக்கு முன்னர், அன்று கோயிலில் ஏதோ விஷேச நாள் என்பதால், யாரும் நம்மை கவனிக்க வாய்ப்பில்லை.ஆதலால் பிசினஸ் டீலிங்கு இங்கையே வைத்துக்களாமென்று வந்திருந்தான்".

"நேரம் கடந்து செல்ல, பெண்கள் அங்கங்கே பூஜை தட்டோடு சுற்றிக்கொண்டிருந்தனர்".

"அப்பொழுது தற்செயலாக மைக்கேல் வாசல் பக்கம் பார்க்க,ஐந்தரை அடிக்கும் மேல் உள்ள உயரத்தில், அளவான உடல் எடையோடு, நீண்ட விழிகளில் மை தீட்டி, கண்ணாடி கற்கள் வைத்த புடவையில், கையில் பூஜைக்கூடையோடு வருபவளை பார்த்து திகைத்தான்".

"எப்பாஆஆஆஆ அழகிடி என்று முணுமுணுத்தவன்,தன்னை கடந்து கோயிலின் உள்ளே போனவளை பின் தொடர்ந்து சென்றவனோ வந்த வேலையை மறந்து, தன் முன்னால் உலாவருபவளை இமைக்க மறந்து ரசித்தான்".

"அப்பொழுது யாரோ தோளில் கை வைக்க, திரும்பியவன் அங்கிருப்பவரை பார்த்து, ஓஓஓ ஷிட் என தலையில் தட்டிக்கொண்டவன், அவனோடு சென்று பிஸ்னஸை பற்றி பேச ஆரம்பிக்க, அதிலே மூழ்கினான்".

"ஒரு வழியாக பேச்சு வார்த்தை முடிந்து, வந்த பார்டியும் சென்று விட, வேகமாக கோயில் உள்ளே போனவன், தன்னை மயக்கியவளை தேடி அலைய, அவள் அங்கு இல்லை".

"எங்கே போனாளென்று தெரியவில்லையேனு புலம்பியவன் மண்டையில் பல்பு எரிந்தது".

"நாம தான் இங்கையே இருக்க போறோமே, அவளை கண்டு பிடித்து விடலாமென்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்ட மைக்கேல், மெக்கானிக் ஷாப் ஆரம்பிக்கப்போகும் இடத்திற்கு வந்து சேர்ந்தான்".

"காலை விடியல் ஆரம்பமானது, நல்ல பிள்ளை போல குளித்து முடித்தவன், ஊர் தலைவர் யாரென்று கேட்டு சென்றவன், தான் ஒரு அனாதை என்றும், கையில் கிடைத்த காசை வைத்து,மெக்கானிக் ஷாப் திறக்க போவதாகவும், நீங்க தான் தந்தை ஸ்தானத்திலிருந்து ஆசீர்வதிக்கணுமென்று காலில் விழ, மைக்கேலின் நடிப்பில் தலைவரும் கவிழ்ந்தார்".

"அந்த நேரம் சாச்சி( சித்தி) என்ற குரலோடு உள்ளே வந்தவளை பார்த்தவனுக்கு,கலர் கலர் பல்புகள் எரிந்தது".

"சாச்சா( சித்தப்பா) கோயிலுக்கு போகணும், சாச்சி வரேனென்று சொன்னாங்களென்க,உள்ளே தான் இருக்காமா என்றார்".

"ம்ம் என்றவள், உள்ளே சென்று விட்டாள்".

"ஓஓஓ கோயிலுக்கு போறாளானு மனதிற்குள் குறித்துக்கொண்டவன், தலைவரிடம் பேசி விட்டு, கோயிலுக்குள் போய் தியான மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டான்.அரை மணி நேரம் கடந்து செல்ல, அழகு பதுமையும் கோயிலுக்குள் வந்து சேர்ந்தாள்".

"மெக்கானிக் ஷாப்பை வெற்றிகரமாக தலைவரை வைத்து திறந்தவன், அங்கு இருக்கிறவர்களிடம் நல்ல பேரையும் சிறிது நாட்களிலேயே பெற்றான்".

"சில நாட்களிலே அவள் பெயர் ஷாலி என்றும், கல்லூரியில் பிஜி படித்துக் கொண்டிருக்கிறாள் என்பதும் தெரிந்தது".

"கோயிலுக்கு வந்து கொண்டிருந்த ஷாலிக்கு,யாரோ தன்னை பின் தொடர்ந்து வருவது போல தோன்றியது.அவள் சுற்றி பார்க்கும் போது,யாருமே அங்கு இருக்க மாட்டார்கள்.இன்றும் அப்படி தானிருந்தது".

"எந்த தீங்கும் தன்னையும், தன் குடும்பத்தையும் தீண்டக்கூடாதென்று வேண்டுபவளை, கருவறையில் இருந்த துர்கா தேவியோ வேதனையோடு பார்த்தார்".

"மேலும் சிறிது நாட்கள் கடந்து சென்றது".

"ஓர் நாள் கல்லூரி முடிந்து வீட்டுக்கு வரும் போது மழை தூறல் விழ, ஷாலியோ மேலும் வேகமாக நடந்து வந்துக்கொண்டிருக்க, மழையும் ஆரம்பமானது".

"முழுவதும் நனைந்து விட, அவள் போட்டிருந்த உடைகளோ அவள் உடலோடு ஒட்டிக்கொண்டு, அவளின் அங்க அடையாளங்களை காட்ட,சில கேடு கெட்ட குணம்கொண்டவர்கள் ரோட்டோர கடையிலிருந்து ரசித்து பார்த்தனர்".

"அய்யர் பொண்ணு சும்மா தள தளனு வராளென்ற வார்த்தை, வேலை செய்து கொண்டிருந்த மைக்கேலின் காதில் விழ,எழுந்து போய் ஜன்னல் வழியாக பார்க்கவும்,ஷாலி வருவது தெரிந்தது".

"எங்கிருந்து அவ்வளவு கோவம் வந்ததோ தெரியவில்லை,வேகமாக வெளியே போனவன், எதிரில் வருபவளின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு ஷெட்டிற்குள் வந்தான்".

"தன்னை இழுத்து வந்தவனை பார்த்து திகைத்து போய் நிற்க, ஏண்டி அதான் மழை வருதே, எங்கையாவது நிற்க வேண்டியது தானே?".

"உன்னை யாருடி இப்படி ரோட்டில் வரச்சொன்னா என்றவாறே ஓங்கி ஒரு அறை விட, வாங்கிய அறையில் ஷாலிக்கு பொறி கலங்கியது".

"கரீம் என்று வேகமாக குரல் கொடுக்க, பாய் என்றவாறே அங்கு வந்தவன், கீழே குனிந்து கொண்டு துண்டை நீட்ட அதை வாங்கியவனோ அதிர்ந்து நிற்பவளின் மேலே போட்டான்".

"போய் சாய் வாங்கி கிட்டு, காஃபியும் வாங்கி வாடானு கரீமிடம் சொல்ல, குடையை எடுத்துக்கொண்டு அவன் வெளியே சென்றான்".

"கரீம் சென்றதை உறுதி படுத்தியவன் அதிர்ந்து நிற்பவளோடு நெருங்கி நின்று,அவள் நெற்றியிலிருந்து வடியும் தண்ணீரை தனது விரல்களால் கோடு போட்டு கழுத்து வரை வந்தவன்,அவள் காதில் விஷயத்தை சொல்ல திகைத்தாள்".

"பின்னர் வேகமாக டவளை தன்னோடு போர்த்திக்கொண்டவள்,சுவர் பக்கம் திரும்பி நிற்க,பின்னழகோ அந்த ஆண் மகனை பித்தாக்கியது".ஜானு என்றவாறே அவளோடு ஒட்டி நின்றவன்,கல்யாணம் பண்ணிக்கலாமாடி என்றான்".

இரத்தினபுரி- ஆனந்தன் பேலஸ்:

"வழக்கம் போல அதிகாலையில் எழுந்து வாக்கிங் போய் விட்டு உள்ளே வந்த ஆனந்தன்,டீயை கொண்டு வந்து கொடுத்த செல்லாவிடம், பசங்க எந்திரிச்சிட்டாங்களா? என்றார்".

"மூவரும் ரூமில் இல்லை என்றார், அந்த நடுத்தர வயது பெண்மணி".

"இல்லையா? "

" என்னம்மா சொல்லுற?,ஆமா, நைட் மூன்று பேரும் டெலஸ்கு போனாங்கள்".

" சரிமா நான் போய் பாக்குறேன்".

" நீ அந்த எருமைங்க குடிக்கிறதுக்கு ரெடி பண்ணு என்க, புள்ளைங்களுக்கும் ரெடி தான் ணா.நீ கொடுக்கும் செல்லம் தான் அவனுங்களும் இஷ்டத்திற்கு சுத்துறதுனு மொட்டை மாடியை நோக்கி சென்றார்".

"மூன்று மாடிகளின் படியில் ஏறி மேலே வந்தவர், மூவரும் டிரையாங்கிள் வடிவில் தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து, அங்கிருந்த பைப்பிலிருந்து தண்ணீரை திறந்து மூவர் மேலும் தெளித்தார்".

"அய்யோ மழை மழை என்று பதறி எழுந்த ஆது, அங்கு நின்ற தந்தையை பார்த்து முறைத்தான்.மற்ற இருவரும் அடித்து பிடித்து எழுந்து நின்றனர்".

"என்ன ஆனந்தன் விளையாட்டுனு ருத்ரன் கேட்க?,ஏன்டா மணி என்ன ஆகுது?".போய் எக்சர்சைஸ் பண்ணுங்க டா என்று சத்தம் போட,நாங்க எல்லாம் பிட்டா தான் இருக்கிறோம்".

"எதுக்கு நள்ளிரவில் வந்து எழுப்பி உசுர வாங்குற என்றான் ஆது".

"எதேஏஏஏ நள்ளிரவாஆஆஆ, அடேய் தடிமாடு மணி ஏழு ஆகப்போகுதுடா".

"போங்கடா, போய் பல்லை விளக்கிட்டு சூடா எதாவது குடிங்க என்றவர், மாடியில் உடற்பயிற்சி பண்ண, ஆனந்தனை பார்த்த ருத்ரன், இந்த வயசான காலத்துல எதுக்கு மாமா உனக்கு இந்த வேலை?".

"ரஞ்சனுக்கோ இவர்கள் பேசுவதை கேட்டு சிரிப்பு வந்தது".

"பின்னர் மூவரும் கீழே போய் ஃப்ரஷ் ஆகி வர, செல்லா (மேற்பார்வையாளர்) செல்லம் ரஞ்சுக்கும் இஞ்சி டீ என்று, சமையல் அறையை பார்த்து ருத்ரன் குரல் கொடுத்தான்".

"மூவருக்கும் பிடித்தமான டீ காஃபி, பிளாக் காஃபியை கொடுத்தவர்,என்ன கண்ணா சமைக்க என்க, மனுசன் சாப்டுற போல எதாவது பண்ணுயென்றான் ஆதவன்".

"கண்ணா என்றவர், சரி சரி எதாவது பண்ணு ஆனால் மறக்காமல் ரஞ்சுக்கு பூரியும் செய், அவனுக்கு ரொம்ப புடிக்குமென்றான்".

"ஆதுவும் ரஞ்சனும் ஒரே அளவு என்பதால், நண்பனின் புது உடையை குளித்து முடித்து போட்டுக்கொண்டான்".

"ருத்ரனுக்கும் இங்கேயே அவன் டிரஸ் இருப்பதால், அவன் அதை போட்டுக்கொண்டான்.பின்னர் மூவரும் தயாராகி கீழே வர, செல்லா அவர்களுக்கு டிபனை பரிமாறினார்".

"ஆனந்தனிடம் சொல்லிக்கொண்டு, மூவரும் ஷோரூமிற்கு சென்றனர்".

"ரஞ்சா, மூன்றாவது மாடியில் டிசைனிங் செக்க்ஷன், அங்க நீ போ என்க, சரிடா என்றவாறு படியில் ஏறிச்சென்றான்".
அவன் வருவதற்குள் இருவரும் லிப்டில் ஏறி வந்து சேர்ந்தனர்".

"அங்கிருந்த ரிஷப்சனிஸ்டிடம் ரஞ்சன் விஷயத்தை சொல்ல, உள்ளே போங்க சாரென்று அனுப்பி வைத்தாள்".

"கதவை திறந்து உள்ளே போக, இரண்டு ஆண்கள் மாஸ்க்கோடு வேறு பக்கம் திரும்பிக்கொண்டு சிஸ்டத்தில் டிசைன் பண்ணுவதும், இன்னொரு பக்கம் வரைவதற்கான ஃபோர்டு, பெயின்டிங் மெட்டீரியல் இருப்பதும், அறை முழுவதும் நகைகளுக்கான மாடல்கள் வரைந்து மாட்டியிருப்பதும் தெரிந்தது".

"அவர்கள் அருகில் நடந்து சென்றவன் சார் என்க, இருவரும் திரும்பி பார்க்கவும், டேய் என்று அதிர்ந்தான்".

"ஹாஹாஹா, நாங்க தாண்டா அந்த டிசைனர்ஸ் என்றவன், ரஞ்சா ஸ்கூல்ல ஓவியப்போட்டியில் எப்போதும் நீ தாண்டா முதலாவதா வருவாய்".
உன் டிராயிங் ஆர்வம் தெரிஞ்ச பின்ன தான் நாங்களும் கிறுக்க ஆரம்பித்தோம்டா. அதனால் இன்றிலிருந்து நீயும் இங்க டிசைனர்".

நாங்களும் டிசைனருக்கான சம்பளம் "தான் வாங்குறோம், இனி உனக்கும் அதே தான் என்க, கண் கலங்கியவன், நண்பர்கள் இருவரையும் அணைத்துக்கொண்டான்".

"அன்று மாலையே ராகினியை பிரபலமான ஹாஸ்பிட்டலில் சேர்த்தனர்".

"வெளியே தங்கிக்குறேன் என்றவனை பற்றி ஆனந்தனிடம் சொல்ல,ஒழுங்கா வீட்டில் தான் இருக்கணுமென்று சொல்லி விட்டார்".

"ருத்ரனாவது தாத்தா பாட்டியோடு இருக்கின்றான். ஆனால் ஆதுவோ இத்தனை வருடமாக தந்தையோடே இரவை கழித்தவனுக்கு, ரஞ்சன் வந்தது கொண்டாட்டமானது".

"நாட்கள் ஓட, ரஞ்சனின் டிசைன்களுக்கும் நல்ல வரவேற்பு இருந்தது. மூன்று பேரும் கடுமையான உழைப்பை போட,இலங்கையை தாண்டியும் சிம்ஹானந்த் டைமண்டிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது".

"நேரம் கிடைக்கும் போதெல்லாம், நண்பர்கள் மூவரும் ஊர் சுற்ற கிளம்பிடுவர்.அந்த நேரத்தில் எல்லாம் செல்லாவின் பாடுதான், பெரும் பாடாக இருக்கும்".

"சிம்ஹன் தாத்தாவோ எருமைங்க எங்கே என்றால், வேலை விஷயமா வெளியே போயிருக்காங்க என்பார்".

"மூவரும் பைக்கில் போவது தான் வீட்டினற்கு பயம். அதனால் தான் அவர்கள் ஊர் சுற்ற கிளம்பினாலே, செல்லாவை கேள்வி கேட்டு துளைப்பார்கள்".

ஆர்கலி எங்கே?
 
Last edited by a moderator:

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top