• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
இரத்தினபுரி:

"ஆதுவும், ருத்ரனும் பங்ஷனுக்கு இன்வைட் பண்ணியிருக்க,வந்தவர்களை வரவேற்று பக்கத்தில் இருந்த ஹாலில் உட்கார வைத்தனர்".


"ஓப்பன் பண்ண வேண்டிய ஷோரூமின் முன்பக்கம் முழுவதும் அடைத்திருந்ததால்,எதுவும் தெரியவில்லை".

"காலை எட்டரை மணிக்கெல்லாம் மேகலாவும், சுந்தரும் அங்கு வந்து சேர, நண்பர்கள் இருவரும் தலையசைத்து வரவேற்க, அவர்களும் தலையசைத்து உள்ளே வந்தனர்".

"நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது".

"என்னடா இவர்களை இன்னும் காணுமென்று ஆது கேட்கும் போதே, ஆனந்தன் மற்றும் சிம்ஹன் தாத்தா இருவரின் காரும் முன்னும், பின்னும் வந்து நின்றது".

"ம்ம் இதோ வந்தாச்சுடா என்றான் ருத்ரன்".

"மூவரும் காரிலிருந்து இறங்கி வர, அவர்களையும், கையில் கட்டியிருந்த வாட்சையும், நண்பர்கள் இருவரும் மாறி மாறி பார்த்தனர்".

"ஆது நல்ல நேரம் ஆரம்பிக்கப்போகுதென்று மேகலா சொல்ல,அதற்கு ருத்ரனோ இவங்களை காப்பாத்துறீங்களோ என்றான்".

"பின்னர் பாட்டி கையில் கத்தரிக்கோலை கொடுத்து ரிப்பனை கட் பண்ண சொல்ல, கடவுளிடம் மானசீகமாக வேண்டிக்கொண்ட கிரிஜா பாட்டியும் கட் பண்ண,எல்லாரும் கையை தட்டினர்".

"அப்பொழுது கையில் இருந்த ரிமோட்டை ருத்ரன் பிரஸ் பண்ண, பில்டிங்கை மறைத்திருந்த திரை விலகியது".

"எல்லாரும் என்ரன்ஸை பார்த்து திகைத்தனர். அதைவிட ஷோரூமின் பெயரை பார்த்து வீட்டினருக்கும் அதிர்ச்சி தான்".

"அவ்வளவு கலைநயத்தோடு வாசல் கதவு இருந்தது".ஆனந்தனுக்கும், சிம்ஹன் தாத்தாவிற்கும் எதுவும் சொல்ல முடியவில்லை".

"சிம்ஹானந்த்" என்ற பெயர் பித்தளையில் பளபளத்தது.

"உள்ளே வாங்கள் என்றபடியே சென்றவர்கள், அங்கிருந்த மேட்ச் பாக்ஸை எடுத்த நீட்டிய ஆது,அடேய் கிரி நல்லா வேண்டிக்கிட்டு, ஆளுக்கொரு திரியை ஏற்றுங்களென்றான்".

"இடுப்பளவு இருந்த குத்து விளக்கில், வீட்டினர் ஐவரும் அவரவர் இஷ்ட தெய்வத்தை வணங்கிக்கொண்டு விளக்கை ஏற்றினர்".

"வந்திருந்த கெஸ்ட்களெல்லாரும், ஷோரூமையையும், அங்கிருந்த பொருட்களையும் சுற்றி பார்த்தனர்".

"முதல் வியாபாரத்தை, சிம்ஹன் தம்பதியினரே தொடங்கி வைத்தனர்".

"முதல் தளத்தில் ஷோரூமும், இரண்டாம் தளத்தில், ஆபிஸ் ரும் மற்றும் டிசைனிங் செக்க்ஷன் இருந்தது".

"ஷோரூம் திறந்து சில மாதங்கள் வரை, நஷ்டமில்லாமலே வியாபாரம் ஆனது".
சிறு சிறு பொருட்களை கூட மிக நேர்த்தியாக செய்திருப்பதால், வெளியே நற்பெயர் வாங்கியது".

"கிட்ட தட்ட ஷோரும் திறந்து ஆறு மாதங்கள் கடந்திருக்க,ஆனந்தனின் நண்பர் ஒருவர், தனது மகளின் திருமணத்திற்கான நகைகளை ஆர்டர் பண்ண வந்திருந்தார்".

"வந்தவர்களை நண்பர்கள் இருவரும் வரவேற்து, எப்படி?, என்ன ரேஞ்சில் வேண்டும் என்க,மகளின் திருமணத்திற்கென்றார்".

"சரிங்க சார் என்றவர்கள், தங்களிடம் உள்ள கேட்லாக்கை எடுத்து காட்டி, இதில் உள்ளதை பாருங்கள் என்றனர்".

"நேரம் கடந்து செல்ல, வந்தவருக்கோ எதை செலக்ட் பண்ண சொல்வதென்றே தெரியவில்லை".அத்தனை நகைகளும், ஒவ்வொரு விதத்தில் அழகாய் இருக்க,தம்பி எனக்கு ஒரே குழப்பாமாக இருக்குப்பானு அவரும் நண்பர்களிடம் சரணடைந்தவரோ என் பொண்ணையே வரச்சொல்லுறேனென்று, ஃபோன் பண்ணி விஷயத்தை சொல்ல, அரை மணி நேரத்தில் கல்யாண பெண் தன் தோழியோடு அங்கு வர,அவளிடம் டிசைனை காட்ட,அவளுக்கும் அதே சூழல் தான்".

"பின்னர், முன்னும், பின்னும் புரட்டி புரட்டி பார்த்தவள் ஒரு வழியாக டிசைனை தேர்ந்தெடுத்து காட்ட, அதற்கு அட்வான்சாக பெரிய தொகையை கொடுத்து சென்றனர்".

"இது தான் அவர்களுக்கு கிடைத்த முதல் பெரிய ஆர்டர் என்பதால், ஆதுவும்- ருத்ரனும் இரவு பகல் பாக்காமல் டிசைனை ரெடி பண்ணி, ஆச்சாரியிடம் கொடுத்தனர்".

"நகைகள் ரெடியாக, எப்படியும் இருபது நாட்களுக்கு மேலே தான் ஆகுமென்று, முன்பே சொல்லி விட்டனர்".

"அதைப்போலவே எல்லா நகையும் தயாராகி ஷோரூமிற்கு வந்து சேர, ருத்ரன், ஆர்டர் கொடுத்தவருக்கு கால் பண்ணி விஷயத்தை சொல்லவும், இன்னும் சில மணி நேரத்தில் வரோம்பா என்றார்".

"மாலை வேளை நெருங்கிக்கொண்டிருக்க, நண்பர்கள் இருவருக்கும் சிறிது டென்ஷனாக இருந்தது".

"முதல் பெரிய ஆர்டர், இது நல்ல படியாக முடியணுமென, மனதிற்குள் வேண்டிக்கொண்டனர்".

"அவர்களும் ஷோரூமிற்குள் வர, பெட்டியை திறந்து ஆதுவும் நகைகளை காட்ட,அசந்து போயினர்".

"நண்பர்கள் இருவரையும் வெகுவாக பாராட்டி விட்டு, மீதம் இருந்த தொகையை கொடுத்தவர், அங்கிருந்து புறப்பட, கல்யாண பெண்ணிற்கு இந்த அண்ணனுங்களுடைய கிப்ட் என்று, நண்பர்கள் இருவரும் இணைந்து,ஒரு சிறிய கிப்ட் பாக்ஸை கொடுத்தனர்".

"அதை வாங்கியவள் தேங்ஸ்ணா என்றபடியே திறந்து பார்க்க, அதில் பெண்கள் அணியும் வாட்ச் இருந்தது".

"தங்கத்தில், வைர கற்களும், எனாமலில் இயற்கை ஓவியத்தோடு இருக்கவும்,ரொம்ப நல்லாருக்கென்று சொல்லியவர்கள், தங்கள்
பெண்ணோட கல்யாணத்திற்கு வரச்சொல்லி,இருவருக்கும் இன்விடேஷனையும் கொடுத்துச் சென்றனர்".

"கல்யாண நாளும் வந்தது.அந்த ஹாலில் இருந்த பலருக்கு, மணப்பெண் போட்டிருந்த வைர நகைகளை பற்றி தான் எங்கும் பேச்சு.

"கேட்பவர்களுக்கு கடையின் பெயரை சொல்லியே, பெண்ணுடைய அப்பா, அம்மா ஓய்ந்தனர்".

"அதன் பிறகு, இலங்கை முழுவதும் சிம்ஹானந் டைமண்ட் ஷோரும் ரொம்ப பாப்புலரானது".ஒரே வருடத்தில் வாடகைக்கு வாங்கிய இடத்தை சொந்த மாக்கி,ஐந்து மாடி கட்டிடத்தோடு பில்டிங்கை எழுப்பினர்".

"இரண்டு வருடத்தில் வாங்கிய பேங்க் லோன்,மற்றும் தாத்தாவிடம் வாங்கிய பணத்தையும் வட்டியோடு திருப்பி கொடுத்தனர்".

"ஒரு நாள் வழக்கம் போல ஷோரூமை பூட்டி விட்டு, இருவரும் வீட்டிற்கு வரும் போது, ரோட்டில் ஒரு இளைஞன் மயங்கி விழுவதை பார்த்த ஆதுவோ காரை நிறுத்தினான்".

"எதற்கும் முன்னேற்பாடாக இருக்கட்டுமென்று, இருவரும் லைசன்ஸோடு வாங்கிய கன்னை எடுத்து, தங்களது இடுப்பில் சொருகிக்கொண்டே கீழே இறங்கி போய் அந்த இளைஞனை பார்த்து அதிர்ந்தனர்".

"டேய் இது ரஞ்சன்டானு சொல்லிக்கொண்டே, ஆது போய் தண்ணி எடுத்துவா என்று ருத்ரன் கத்த, ஆதுவும் ஓடிப்போய் காரை திறந்து, உள்ளே இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து, மூடியை திறந்து நண்பனின் முகத்தில் நீரை தெளித்தான்".

"சிறிது நொடிகளில் மயங்கியவன் கண்ணை திறக்க,அங்கிருந்த தனது பள்ளி நண்பர்களை பார்த்து லேசாக சிரித்தான்".

"பின்னர் பொறுமையாக எழுந்தவன், வீரா, ஆது என்று நண்பர்களை கட்டிக்கொண்டவன் உங்களை பார்த்து எத்தனை வருஷம்டா ஆகுதென்க, வாடா வீட்டில் போய் பேசிக்கொள்ளலாம்னு ஆது சொல்ல, ம்ம் என்றவாறே மூவரும் காரில் ஏறி ஆனந்தன் பேலஸிற்கு வந்தனர்".

திருச்சூர்

"தாரா எஸ்டேட்டில் வேலைக்குச் சேர்ந்த ஆர்கலிக்கு, இதோடு ஒரு வாரமாகிவிட்டது.வீட்டிலிருந்து கால் மணி நேரம் நடக்கும் தூரம் என்பதால், தினமும் நடந்து சென்று வரேனென்று பிடிவாதமாக சொல்லிவிட்டாள்".

"ஓரளவுக்கு மேல் அவளை வற்புறுத்த, மற்றவர்களுக்கும் மனம் வரவில்லை".

"தாரா எஸ்டேட்டில் ஒருபுறம் பாக்கு தோப்பும்,மற்றொருபுறம் தென்னந்தோப்பும்,மற்றொருபுறம் தேயிலை தோட்டமுமாக இருந்தது".

"ஆர்கலி முதல் முறை அந்த இடத்தை பார்க்கும் போது,அதன் அழகில் அதிசயித்து போனாள்".

" நாளைக்கே வேலைக்கு செல்லப்போவதாக சொல்ல, அவர்களும் சம்மதிக்க, மறுநாளில் அவளை அழைத்துக் கொண்டு சுந்தரபாண்டியனும்- ஷைலஜாவும் எஸ்டேட்டிற்கு வந்தனர்".

"வேலை செய்து கொண்டிருந்த வேலையாட்களோ,சைலஜா பாட்டி போலவே முக அமைப்போடு வருபவளை பார்த்து ஆச்சரியப்பட்டனர்".

"யார் இந்த பெண்? நம்ம பெரியம்மா போலையே இருக்கிறாளென்று அவர்களுக்குள் கேள்விகள் ஓடியது".

"வேலை நடக்கும் இடத்திற்கு வந்தவர்கள்,அம்மாடி, இந்த மேடம் தான் ஆர்கலி, இவங்க தான் உங்களுக்கு சூப்பர்வைசர் என்றார் சுந்தர பாண்டியன்".

"அவர்களும் சரிங்கையா என்றனர்".

"சரி நீங்க வேலையை பாருங்கள் என்றவர், மற்ற இடத்தை காட்டுவதற்காக, ஆர்கலியை அழைத்து போயினர்".

"தேயிலை பறித்துக்கொண்டிருந்த பெண்களோ, இந்த பொண்ணு என்னடி நம்ப பெரியம்மா போலவே இருக்கு?".

"ஒரு வேலை அம்மாவோட சொந்தமா இருக்குமோ?, அதான் முக ஒற்றுமை அப்படியே இருக்கு போலனு, அவர்களுக்குள் பேசிக்கொண்டனர்".

"ஆர்கலியும் சுந்தரபாண்டியன் தம்பதியரோடு எல்லாவற்றையும் சுற்றி பார்த்தவள்,சரிங்க தாத்தா, நான் வேலையை ஆரம்பிக்கிறேனென்று சொல்ல, சரிமாயென்று இருவரும் அவளோடு ஆபிஸ் இருக்கும் கட்டிடத்தை நோக்கி சென்றனர்".

"பெரிய முதலாளியை பார்த்ததும், மேனேஜர் எழுந்து வந்து வரவேற்தார்".

"அவரிடம் ஆர்கலியின் வேலை பற்றி சொல்ல, சரிங்க சார் என்றார்".

"பின்னர் முதியவர்கள் இருவரும் அங்கிருந்து கிளம்பியதும், மேனேஜரிடம் என்ன வேலை சசெய்யணும் பா என்க".

"அவள் அப்பா என்று அழைத்ததிலே, மேனேஜருக்கு ஆர்கலியின் மேல் நன்மதிப்பு வந்தது".

"அம்மாடி இது பழைய கணக்கு நோட்டுமா, இதில் இருப்பதை சிஸ்டத்தில் ஏற்றணும்,சரிங்கப்பா என்றவள், மனதிற்குள் சாமியை வேண்டிக்கொண்டு முதல் நாள் வேலையை தொடங்கினாள்.ஏற்கெனவே டைப்ரைட்டிங் கோர்ஸ் முடித்திருப்பதால், அவளால் வேகமாக கீபோர்டில் டைப்பிங் பண்ண முடிந்தது".

"அவளுக்கு சந்தேகம் வரும் இடத்தை மற்றும்,பென்சிலால் குறித்து வைத்துக்கொண்டாள்".

"மதிய உணவு இடைவேளை வந்தது கூட தெரியாமல் வேலையில் கவனமாய் இருந்தவளை, மைக்கேலின் குரல் தான் கலைத்தது".

"அம்மு வாடா சாப்பிடலாமென்க, இதோ மாமா என்றவள், சிஸ்டமில் இவ்வளவு நேரம் டைப்பிங் பண்ணியதை சேவ் பண்ணி விட்டு, ஷட்-டவுன் பண்ணிய பிறகு தான் விரல்கள் வலிப்பது தெரிந்தது".

"கையை கழுவி விட்டு வர, இருவருக்குமான உணவு கூடையை, மைக்கேல் பிரித்து வைத்துக்கொண்டிருந்தார்".

"மாமா நான் செய்யமாட்டேனா என்றவாறே அவள் வர,அந்த நேரம் அங்கு வந்த மேனேஜர், மைக்கேலை ஆர்கலி மாமா என்று கூப்பிடுவதை கேட்டு, உங்களுக்கு தெரிந்த பொண்ணாங்க?என்க ".

"என்னோட தங்கச்சி பொண்ணுங்க சார். இவ்வளவு நாள் ஊர்ல படிச்சிட்டு இருந்துச்சி,படிப்பு முடிஞ்சிட்டு அதான் இங்க கூப்பிட்டு வந்தேனென்கவும், ஓஓஓ அப்படியாங்க,சரிங்க சரிங்க".

"வாங்க சாப்பிடலாமென்று இருவரும் மேனேஜரை கூப்பிட, நீங்க சாப்பிடுங்க, நான் வீட்டுக்கு போய் சாப்பிட்டு வரேனென்று அங்கிருந்து சென்றார்".

"இவர்கள் இருவரும் சாப்பிட்டு முடித்தனர்".

"ரொம்ப நல்ல மனுஷன் அம்மு. கிட்ட தட்ட இருபத்தைந்து வருஷமா இங்க வேலை பாக்குறார்".ஒரே பையன்.இந்த வருஷம் தான் காலேஜ் சேர்ந்திருக்கிறானென்று மேனேஜரை பற்றி மைக்கேல் சொல்ல, ஆர்கலியும் கேட்டுக்கொண்டாள்".

"மாமா உங்க கிட்ட ஒன்னு கேட்க வேண்டுமென்று ஆர்கலி சொல்ல,கேளுடா அம்மு".இந்த மாமன் கிட்ட ஏண்டா தயக்கமென்றார்".

"ம்ம் என்றவள்,யாரென்றே தெரியாதா என் மேல் தாத்தா, அம்மாச்சி, மேடமிற்கு எப்படி மாமா இவ்வளவு பாசம் ?".

"அவங்கள் ஸ்டேட்டஸ் எங்கே?".

ஆசிரமத்தில் வளர்ந்த நான் எங்கே?.

"என்னை போய் இப்படி பாக்குறாங்களே, அதான் எனக்கு புரியலை என்றவள், நீங்க மட்டும் தான் இங்கு இருக்குறீங்கள்".அப்போ,அத்தை எங்கே?.

"என்றோ ஓர் நாள், ஆர்கலியிடமிருந்து, இப்படி ஒரு கேள்வி வருமென்று தெரியும்".அந்த நாள் இன்று என்பதை,மைக்கேல் சிறிதும் எதிர் பார்க்கவில்லை".
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
"மாமா நான் எதாவது தப்பா கேட்டுட்டேனா?".

"இல்லைடா அம்முனு கண்ணை மூடி திறந்து விட்டு, கடந்து போன கருப்பு தினத்தை சொல்ல ஆரம்பித்தார்".

இருபது வருடங்களுக்கு முன்பு...

பீகார் மாநிலம்- கயா மாவட்டம்.

கயை நகரம், பிகார் மாநிலத்தலைநகர் பாட்னாவிலிருந்து 100 கி.மீ. தெற்கில் உள்ளது. மேலும் வாரணாசி நகரத்திற்கு கிழக்கே 257 கி.மீ. தொலைவில் உள்ளது. பௌத்தர்களின் புனித தலமான புத்தகயா, கயைக்கு தெற்கில் 15 கி.மீ. தொலைவில் உள்ளது.

"இராமாயணத்தில் நிரஞ்சனா எனக் குறிப்பிடப்படும் பால்கு ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த நகரம், இந்துக்களுக்கும் பௌத்த சமயத்தினருக்கும் முக்கியமான புண்ணியத் தலமாக விளங்குகிறது".

"பால்கு ஆற்றாங்கரையில் விஷ்ணுபாதம் கோயில் உள்ளது. இதன் மூன்று பக்கங்களிலும் சிறு குன்றுகள் சூழ்ந்திருக்க நான்காவது தென்புறத்தில் ஆறு ஓடுகிறது".

"இயற்கை சூழல் மிக்க இடங்களும், பழைமையான கட்டிடங்களும், குறுகலான சந்துகளுமாக உள்ள நகரம் தான் கயா".

"இப்படியாப்பட்ட ஊர்ல தான், உன் மாமன் பிறந்து வளர்ந்தேன் அம்மு".

காட்டு பங்களா:

"பாய்( அண்ணா) புதுசா யாரோ, கேரளாவிலிருந்து பொம்பளை கலெக்டர் வராளாம்".

"அவள் தான் இந்தியாவிலே முதல் இடத்தில் வந்திருக்காள். ரொம்ப புத்திசாலியானவள் போலனு கரீம் சொல்லிக்கொண்டிருக்க, கஞ்சாவை புகைத்துக் கொண்டிருந்த மைக்கிலோ, ஓஓஓஓ.....

"வரட்டும்.".

"நம்மை என்ன பண்ணிட போறாள்?".

"நம்ப வழியில் தலையிட்டால்,தலை இல்லாமல் போகப்போறாள். இதுவரை நம்மை யாராலையும் அசைக்க முடிந்ததா?".

"இல்லை தானே, அப்புறம் என்னடா?".

"சரக்கு ஏற்ற லாரி வரும், போய் அந்த வேலையை பாருடா என்றவன், கண்ணை மூடி மீண்டும் கஞ்சா புகையை ரசித்து இழுத்தான் மைக்கேல் திவாரி".

"இந்த மாவட்டத்தில் தான் பீகாரின் கஞ்சா மன்னன் மைக்கேல் திவாரி இருப்பதும், அவன் தான் கஞ்சா பிஸ்னஸ் பண்ணுகிறான் என்பதும்,ஒரு சிலருக்கு மட்டும் தான் தெரியும்".

"சில வருடங்களாகவே மைக்கேல் தனது கஞ்சா பிஸ்னஸில், கொடி கட்டி பறந்து கொண்டிருக்கின்றான் வெளிப்பார்வைக்கு சிறிய மெக்கானிக் ஷாப்பிற்கு சொந்தக்காரன்".

"குடும்பம் என்ற ஒன்று அவனுக்கு இருக்கா?, இல்லையா என்பது அவனை தவிர யாருக்கும் தெரியாது".

"மைக்கேலின் சொந்த வீடு எங்கே இருக்கிறது என்பது,கரீம்கு மட்டுமே தெரியும்".

"கஞ்சா போதையில் மிதந்தவனுக்கு, மனக்கண்ணில் வந்து போனது ஒரு பெண் உருவம்".

"உடனே அந்த உருவத்தை பார்க்க வேண்டுமென்று மனசு சொல்ல, கண்ணை திறந்தவன்,அந்த சிறிய பங்களாவை பூட்டி விட்டு, வழக்கமாக சாவி வைக்கும் மர பொந்தில் வைத்தவன், பின்னாடியே நடந்து சென்றான்".

"அந்த இடம் அவனுக்கு பழக்கமானது என்பதால்,இரவு நேரத்திலும் தடுமாறாமல் நடந்து சென்றவன் விரைவிலே வண்டி நிறுத்தியிருக்கும் இடத்தை அடைந்தவன்,பைக்கில் ஏறி, காட்டு வழியாகவே மெயின் ரோட்டிற்கு வந்தவன், முகம் கொள்ளா புன்னகையோடு, தன்னை மயங்கிய மங்கையை பார்க்கச்சென்றான்".

"இரண்டு மணி நேரம் வண்டியில் பயணித்தவன், அந்த துர்கை அம்மன் கோயில் தெருவை வந்து அடைந்தான்".

"நள்ளிரவு நேரமென்றாலும்,அவன் பார்வை பதிந்த வீட்டில் திறந்திருந்த ஜன்னலில் வெளிச்சம் தெரிந்தது".

"வண்டியை யார் கண்ணிலும் படாமல் ஓரமாக நிறுத்தியவன், சுற்றி முற்றும் பார்த்துக்கொண்டே, வீட்டின் அருகில் இருந்த மரத்தில் ஏறியவன், ஜன்னல் அருகில் உள்ள சிலாப்பின் மேல் இறங்கியவன ஷாலி, ஷாலி என்க, எதையோ எழுதி கொண்டிருந்த மங்கையவளின் காதில் விழ,பட்டென்று திரும்பினாள்".

"அங்கிருப்பவனை பார்த்து அதிர்ந்தவள், எழுந்து போய் கதவை திறக்க, மற்றொரு சிலாப்பில் குதித்து உள்ளே வந்தவன்,மை ஜானுஊஊஊ என்றவாறு அவளை அணைத்துக்கொண்டான்".

"அவனை உதறி தள்ளியவள், எப்போதான் எங்க வீட்டில் பேசப்போறீங்க திவாரி?".

"வீட்டில் எனக்கு மாப்பிள்ளை பார்த்துக்கொண்டிருக்காங்க?, தெரியுமானு கண் கலங்கினாள்".

"ஏய்... எத்தனை நாள் கழித்து உன்னை பார்க்க வந்திருக்கேன்டி?, ஆசையா எதாவது குடுப்பியா?, அதை விட்டு, அழுது உங்கப்பனை கூப்பிட்டுறுவ போலடி என்றவன், அவளை சுவற்றில் சாய்த்து, துடித்துக்கொண்டிருந்த அவள் இதழில் முத்தமிட்டான்".

"கோவமாய் இருந்தவளோ, தன் மனங்கவர்ந்தவனின் முத்தத்தில் தன்னை தொலைத்தாள்".

"அப்பொழுது, ஷாலிஈஈஈஈ என்ற சத்தத்தில் பதறி விலகியவள், அங்கிருந்த தந்தையை பார்த்து அதிர்ந்தாள்".

"மைக்கேலோ நிதானமாக அவளின் தந்தையை பார்த்தவன், தனது பாக்கெட்டில் கையை விட்டு, அதிலிருந்த கருப்பு மணியை எடுத்து, ஷாலியின் கழுத்தில் போட்டுவிட்டான்".

"டேய் என்னடா காரியம் செய்திருக்கனு மைக்கேலை அடிக்க வந்தவரை கையை நீட்டி மறைத்தாள்".

"ஐயோ என் பொண்ணு வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதேனு சத்தம் போட,கீழே தூங்கிக் கொண்டிருந்த ஷாலியின் அம்மாவும், தங்கையும் எழுந்து மாடிக்கு வந்தவர்களும் அதிர்ந்தனர்".

"அய்யோ என ஷாலியின் அம்மா சத்தமிட்டு கதற, அங்கம் பக்கத்திலிருந்தவர்களும் அங்கு வந்து மைக்கேலையும், ஷாலியின் கழுத்தில் இருந்த தாலியை பார்த்து, ஆளாளுக்கு பேச ஆரம்பித்து விட்டனர்".

"யாருடி இவன்?.உனக்கு எப்படி தெரியும்? என்று தாயவள் மகளை அடித்து கேட்க, அவர் மெக்கானிக்மா என்றாள்".

"என்னாஆஆ என அதிர்ந்தவர் உன் படிப்பு என்னடி? அவன் எங்கே? என்று சொல்லி,மேலும் மகளுக்கு இரண்டு அறையை விட்டார் ஷாலியின் அம்மா".

"அம்மா அவர்கிட்ட தொழில் இருக்கு அது போதும். அவர் இல்லாமல் நான் உயிரோடு இருக்கமாட்டேன்".

"மைக்கேலுக்கோ தன் பண பலத்தை சொல்ல நா துடித்தது ஆனால்,ஷாலிக்கே இன்னும் உண்மை தெரியாது என்பதால், பல்லை கடித்துக்கொண்டு அமைதியாக இருந்தான்".

"காட்டு பங்களாவில் இருக்கும் போது தன்னவள் நினைவு வந்தவுடன், பார்க்கலாமென்று தான் நினைத்து புறப்பட்டான்".

ஆனால் மனம் என்னவோ,அவளை கையோடு அழைத்து வரச்சொல்லி சண்டித்தனம் செய்தது....!

பொள்ளாச்சி:

"மலர்,கோவைக்கு சென்று ஒரு வாரம் ஆகிவிட்டது".எப்பொழுது அன்புவுடன் கல்யாணம் பேசி முடித்தார்களோ, அதிலிருந்து,வயல் வேலைக்கு போவதை,ஜனனியும் குறைத்துக்கொண்டாள்".

"வெற்றிக்கோ ஜனனி வராதது, பைத்தியம் புடிக்காத குறையாய் இருந்தது".

" வழக்கம் போல அதிகாலையில் எழுந்தவள் வீட்டு வேலையை முடித்து விட்டு, டீயை போட்டு வாசலுக்கு எடுத்து வந்தவள், தனது அப்பாவிற்கும், பாட்டிக்கும் கொடுத்து விட்டு, அவளும் குடித்துக்கொண்டிருந்தாள்"

" அப்பொழுது, வீட்டின் உள்ளே இருக்கும் செல்ஃபோனில் கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்டது".

"இவ்வளவு காலையிலே யாரு என்று ராக்கம்மா பாட்டி கேட்க?, பார்த்தால் தானே தெரியுமென்ற ஜனனி, உள்ளே போய் ஃபோனை எடுத்து பார்க்க, மலரம்மா என்று வந்தது".

"அட்டென் பண்ணியவள்,இருவரும் பொதுவாக நலன் விசாரித்துக்கொண்டனர்".

"பின்னர் ஃபோனை அவளின் அப்பாவிடம் கொடுக்க சொல்ல, வெளியே வந்தவள்,பெரியம்மா உங்ககிட்ட பேச வேண்டுமாம் பா".

கொடுமா என்றவர், மகளிடமிருந்து ஃபோனை வாங்கி, சொல்லுங்கண்ணி, வீட்டில் எல்லாரும் நல்லா இருக்காங்களா?".

"நல்லாயிருக்கோம் கொழுந்தனாரே, இன்னும் கொஞ்ச நேரத்தில் அன்பு வந்துடுவான், நாளை மறுநாள் நிச்சயம் வச்சிக்கலானு உங்க அண்ணன் சொல்லுறாங்க".

"அப்படிங்களா அண்ணி, சரி ஆக வேண்டிய வேலையை பார்க்கலாம், புள்ளைங்களுக்கு துணி-மணி வாங்க வேண்டுமே? என்க, அதுக்கு தான் ஃபோன் பண்ணுனேன்".

"சோமு மாமா, கலா கூட ஜனனி, கீதா, நீங்கள், அத்தை எல்லாரும் கோயம்புத்தூர் பஸ் ஸ்டாண்டிற்கு வந்துடுங்க. நானும் உங்க அண்ணனும் அங்கு வந்துடுறோம்".

"சரிங்கண்ணினு ஃபோனை வைத்து விட்டு, விஷயத்தை மகளிடமும், அம்மாவிடமும் சொல்லியவர், நான் போய் சோமு கிட்ட சொல்லிட்டு வரேனென்று சென்றார்".

"மலர் சொன்ன போலவே, எல்லாரும் கிளம்பி கோவைக்கு வந்து சேர, காலை பதினோறு மணியானது".பின்னர் அங்குள்ள பிரபலமான கடைக்குள் சென்றனர்".

"இருவருக்கும்,நிச்சயத்திற்கு தேவையான உடைகளை வாங்கி முடித்து விட,நகை கடைக்கு சென்று, நிச்சயத்திற்கு போட தங்க நகைகளையும் வாங்கி முடித்து விட்டு, பொள்ளாச்சிக்கு வந்து சேர்ந்தனர்".

"ஊர்காரர்களையும், அங்காளி பங்காளிகளையும், மாரியப்பனும், சோமுவும் சேர்ந்து போய் நிச்சயத்திற்கு வருமாறு அழைத்தனர்".

"பின்னர், இருவரும் பெரிய வீட்டிற்கு சென்றனர்".

"இவர்கள் போன நேரத்தில் சத்தியமூர்த்தி வெளியே போயிருப்பதாக வள்ளியம்மை சொல்ல,சரிமாயென்று அங்கிருந்த முற்றத்து திண்ணையில் உட்கார்ந்து, நிச்சய வேலையை பற்றி பேசிக்கொண்டிருந்தனர்".

"இருவருக்கும் வள்ளியம்மை டீ கொடுத்துச் சென்றார்'.

"அரைமணி நேரம் கடந்து சென்றது".

"சத்தியமூர்த்தியும் வீட்டிற்கு வந்து சேர்ந்தவர், இருவரையும் பார்த்து வாங்க வாங்க என்றார்".

"பின்னர் மாரியப்பனிடம் கையை பற்றி விசாரிக்க, நல்லா இருக்குங்க என்றவர், ஒரு நல்ல விஷயம் சொல்லிட்டு போகலாம்னு வந்தோமென்க,சரி உள்ள வாங்க,ஏன் இங்கையே உட்கார்ந்து கொண்டு?".

"இருக்கட்டுங்க, நம்ம வீடு தானே, எங்க இருந்தாலென்னனு சோமு சொல்ல, அதுவும் சரிதானென்ற சத்தியமூர்த்தியும், திண்ணையில் உட்கார்ந்து கொண்டு, சொல்லுங்க அந்த நல்ல விஷயத்தை என்றார்".

"நாளைக்கு புள்ளைக்கு நிச்சயம் வச்சிருக்கு, வந்து நல்லபடியா முடித்து கொடுக்க வேண்டுமென மாரியப்பன் சொல்லவும், என்னாஆஆஆ என உள்ளுக்குள் அதிர்ந்த சத்தியமூர்த்தி, வெளியே காட்டிக்கொள்ளாமல் அப்படியா ரொம்ப நல்ல விஷயம்".

"மாப்பிள்ளை பார்த்ததை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லையே?".

"அய்யோஓஓஓஓ, சொல்லக்கூடாது என்றுலாம் எண்ணம் இல்லை. திடீர்னு முடிவாயிடுச்சுனு சோமு சொல்ல, அப்படியா என்றார்".

"ஆமாங்க, மலர் வந்து அதோட நாத்தனார் பையனுக்கு பொண்ணுக்கு கேட்டுச்சு. மல்லிகா இருந்தாக்க,அவள் அக்கா சொல்றதை தான் கேட்பாள்".

"இன்னைக்கு தங்கச்சி இல்லன்னு, கொடுக்க மாட்டேங்கிறாங்கனு நினைக்க கூடாது இல்லையா?".

"அன்பு ரொம்ப நல்ல பையன், வெளிநாட்டிலிருந்து நேற்று காலையில தான் வந்திருக்கிறான்".

"மறுக்க எந்த காரணமும் இல்லைங்க. பொம்பள புள்ளைய எத்தனை நாளைக்கு தான் பொத்தி பாதுகாக்க".

"அது அதுக்கு நேரம் கூடி வந்தால் நல்ல படியா முடிக்கணும் இல்லைங்களானு சத்தியமூர்த்தியிடமே மாரியப்பன் கேட்க, அவரோ வாஸ்தவம் தானென்றார்".

இவர்கள் பேச்சு வார்த்தையை உள்ளே இருந்து கேட்டுக்கொண்டிருந்த வள்ளிக்கு திக்கென்றது.வெற்றிக்கு ஜனனி மேல் விருப்பமென்று தெரியும். ஆனால் இதுவரை அவன் வெளிப்படையாக அதை காட்டிக்கொள்ள வில்லை".

"சரி கடவுள் விட்ட வழி இதுதானென்று, தனது மனதிற்குள் நினைத்துக்கொண்டார்".

"சரிங்க மறக்காமல் வந்துடுங்கனு சொல்லிக்கொண்டு கிளம்பினர்".

"சிறிது நிமிடங்கள் சென்று சத்தியமூர்த்தி உள்ளே வர, அண்ணா அது வந்து வெற்றினு வள்ளி சொல்ல, நல்லதே நடக்கும்மா.உன் மருமகன் எங்கே போயிருக்கான்?.

"சிநேகிதன் யாரோ வெளிநாட்டுக்கு போறாராம். வரச்சொல்லி ஃபோன் வந்துச்சினு, கொஞ்ச நேரத்துக்கு முன்ன தான் கிளம்பி மேட்டுப்பாளையத்துக்கு போயிருக்கான்".காலையில தான் வருவேன்னு சொல்லிட்டு போயாச்சிணா".

"ஓஓஓ என்றவர், சரி நடப்பது நடக்கட்டும்மா என்றவாறே தனது அறைக்குள் சென்று விட்டார்".

ஆர்கலி எங்கே..?
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top