• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Dec 26, 2024
Messages
11
போன் வழியாக இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த வாசுதேவனுக்குமே மனதில் குற்ற உணர்ச்சி தோன்றியது.

திருமணம் முடித்த நாளில் இருந்தே அவருக்காகவே வாழ்ந்த மனைவிக்கு தான் என்ன செய்து விட்டோம்…?

அது மட்டுமா அவரது கூட்டு குடும்பத்தை அனுசரித்துக் கொண்டு, அவர் கொடுக்கும் சொற்ப வருமானத்தில் சிக்கனமாக வாழ்க்கையை நடத்தி, அதில் மிச்சம் பிடித்த பணத்தில் மகளுக்காக ஆபரணங்களை சேர்த்தவர், தனக்காக ஒரு குண்டுமணி தங்கத்தைக் கூட வாங்கிக் கொள்ளவில்லை.

தனக்கு முடியாத காலத்தில் தோள் கொடுத்த உறவை புரிந்து கொள்ளாவிடின் அந்த தாம்பத்திய வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லையே…

வாசுதேவன் வீட்டிற்கு வந்தபோது சாரதாவும் உமாவும் வசந்தியின் கணவருக்காக சமையல் செய்து கொண்டிருந்தனர்.

சற்று நேர நலவிசாரிப்புகளுக்குப் பிறகு வசந்தியே நேரடியாக தான் வந்த விஷயத்தைப் பற்றி கூறினாள்.

“அப்பா நீங்க சரின்னு சொன்னா உடனே மண்டபத்துக்கு அட்வான்ஸ் கொடுத்திடுவோம்.”

“தப்பா நினைச்சுக்காதீங்க மாப்ள பதினைஞ்சாம் தேதி கண்டிப்பா எங்களால வர முடியாது. மத்த ரெண்டு டேட்ல எதை நீங்க தேர்ந்தெடுத்தாலும் எங்களுக்கு சம்மதம் தான்.”

“அப்பா அப்படி என்ன என்னைவிட முக்கியமான வேலை?”

“முக்கியம் தான்ம்மா வாழ்க்கை முழுவதும் எனக்காகவே வாழ்ந்த என் மனைவியோட ஆசை எனக்கு எல்லாத்தையும் விட ரொம்ப முக்கியம் தான்.

ஒருவேளை உங்க அம்மா வராட்டியும் பரவாயில்லை இந்த பங்ஷனை அந்த தேதியில தான் நடத்துவேன்னு நீ சொன்னா, கண்டிப்பா அவ இல்லாம நானும் எங்கேயும் வர மாட்டேன். உனக்கு சம்மதம்னா நீ அப்பவே உன் பங்ஷனை வச்சுக்கோ.”

வசந்திக்கு முகம் சுருங்கி விட்டது அவளது கணவர் தான் அங்கு நிலவிய அமைதியை உடைத்தார்.

“பரவாயில்லை மாமா எங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல, கடைசி முகூர்த்தத்தையே பிக்ஸ் பண்ணிக்கலாம். அத்தைக்கு அதுக்குள்ள எல்லா பரீட்சையும் முடிஞ்சிடுமா?”

“ ஒரு நிமிஷம் மாப்ள, சாரதா…”

ஏற்கனவே தனது கணவர் கூறியவற்றை கேட்டு உணர்ச்சி குவியலில் இருந்தவருக்கு பல வருடங்களுக்குப் பிறகான அவரது அன்பான அழைப்பில் கண்களில் நீர் தேங்கி விட்டது.

அவர் கண்களை துடைத்து வெளியே அழைத்து வந்தாள் உமா.

“சாரதா உனக்கு இந்த தேதியில எதுவும் பிரச்சனை இல்லையே?”

அவர் தொண்டை குழியில் வார்த்தை சிக்கிக் கொண்டது, தலையை மட்டும் அசைத்து சம்மதம் கூறினார்.

தனது மகனிடமும் மருமகளிடமும் கூட இதே போல அவர்களில் சம்மதத்தை கேட்டார்.

“சரி மாப்ள எங்களுக்கு சம்மதம் நீங்க மண்டபம் பார்க்க ஆரம்பிங்க. அம்மாடி வசந்தி செய்ய வேண்டிய முறை பத்தி என் மருமககிட்ட தெளிவா சொல்லிடு, ஏன்னா இந்த வீட்ல உன் அம்மாவுக்கு அடுத்து எல்லாமே உன் அண்ணி தான் புரிஞ்சுதா?”

இப்படியாக வசந்திக்கு இவ்வீட்டில் தனது மனைவி மற்றும் மருமகளுக்கான முக்கியத்துவத்தை உணர்த்தத் தொடங்கினார் வாசுதேவன்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
958
Nice story. மாமியார் ஆசையை நிறைவேற்றும் மருமகள். வாசுதேவன் இத்தனை ஆண்டுகள் கழித்தாவது மனைவியின் ஆசைகள் தெரிந்து புரிந்துகொண்டதே பெரிதென்றாகிறது.
போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள் சரண்யா 💐 💐 💐
 
Joined
Dec 26, 2024
Messages
11
Nice story. மாமியார் ஆசையை நிறைவேற்றும் மருமகள். வாசுதேவன் இத்தனை ஆண்டுகள் கழித்தாவது மனைவியின் ஆசைகள் தெரிந்து புரிந்துகொண்டதே பெரிதென்றாகிறது.
போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள் சரண்யா 💐 💐 💐
நன்றி சிஸ்🙂🙂
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top