- Thread Author
- #1
99. அழகியின் காதலும்... கர்ணாவின் புரிதலும்....
சஞ்சனாவோ சனாதன் சொன்ன தன் அண்ணன் உதயா இங்கு தான் இருக்கிறான் என்றதுமே... ஐயையோ தன்னுடைய அப்பா லிங்கத்தையும் நினைத்து சஞ்சனா ஒரு பக்கம் பயந்து புலம்பி கொண்டு இருக்க...
உதயா தன்னிடம் தனியாக பார்த்து அவளுக்கு மயக்கம் ஊசி போட சொன்னது சனாதன் எப்படி தெரிந்து கொண்டான் என்று புரியாமல் சீஃப் டாக்டர் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போய் நின்றார்.
சஞ்சனா, சீஃப் டாக்டர் இருவரையும் திக்கு முக்காட செய்தவனோ மெடிக்கல் ஃபைலை வாங்கி மிகவும் சிரத்தையாக செக் செய்து கொண்டு இருந்தான் சனாதன்.
முழுவதுமாக மெடிக்கல் ஃபைலை நிதானமாக படித்து முடித்து விட்டு... டாக்டரை பார்க்க... அவரோ இவனை மட்டுமே தான் பார்த்துக் கொண்டு நின்று இருந்தார்.
சனாதன் டாக்டரை பார்த்து விட்டு சஞ்சனாவை பார்க்க அவளும் தனக்குள்ளாக ஏதேதோ முனகி கொண்டே படுத்து இருந்தாள்.
அடிப்பாவி இந்த நிலையில் கூட உன் வாய் ஒட்ட மாட்டேங்குது... இருடி வந்து உன்னை கவனித்துக் கொள்கிறேன் இப்ப போய் டாக்டரிடம் பேசிட்டு வருகிறேன் இல்லை என்றால் உன்னுடன் சேர்ந்து அவருக்கு ஒரு பெட் போடனும் போல அப்படியே அதிர்ச்சி வென்ற வாழ்க்கையை நின்று கொண்டிருக்கிறார் என்று தனக்குள்ளாகவே பேசிக் கொண்டவன் இப்பொழுது டாக்டர் அருகில் சென்று ஹலோ மிஸ்டர் டாக்டர் சுரேஷ்...
எவ்வளவு நேரம் இப்படியே நிற்க போகிறீர்கள் உங்களுக்கு ஹாட் பிராப்ளம் வந்து விடப்போகிறது... நமசிவாய சாரி விளையாட்டுக்காக கூட அப்படி சொல்லக்கூடாது மன்னித்துக் கொள்ளுங்கள் என்று ஒரு மன்னிப்பை கேட்டு விட்டு... டாக்டர் நான் ஒரு போலீஸ்காரன் இயல்பாகவே எனக்கு எல்லா இடத்திலும் பார்வை இருக்கும்... அப்படி இருக்கும் போது என் மச்சானின் மீது என் பார்வை இருக்காதா என்று சொல்ல...
சார் நீங்க வேற லெவல் ஓகே நீங்க பாருங்க... உங்களை சந்தித்தது மிகவும் சந்தோஷம்... கண்டிப்பா சீக்கிரம் ஒரு நல்ல விதத்தில் உங்களை மீட் பண்ணுகிறேன் என்று சொன்னார் டாக்டர் சுரேஷ்.
கண்டிப்பாக சார் எங்களுடைய இல்ல திருமண விழாவில் உங்களை அழைப்பதற்கு நாங்களும் வருவோம் அப்பொழுது பார்க்கலாம் என்று சொல்லி அனுப்பி வைத்தான் சனாதன்...
டாக்டர் சென்றதும் சனாதன் சஞ்சனாவை பார்க்க.. அவளோ டாக்டர் போட்ட இன்ஜெக்ஷன் உதவியால் தூங்கிக்கொண்டு இருந்தாள். ஆனாலும் அவளின் துடிக்கும் உதடுகள் மட்டும் ஏதோ சொல்லிக் கொண்டே இருப்பது போல் இருக்க... பாவி தூங்கும் போதும் இம்சை பண்றா... அடியே உன் அண்ணன் என்கிட்ட கொஞ்சம் லேசா விளையாண்டு பாத்துட்டான் அவன கதற விட்டு பாக்கிறேன் டி நானு என்று சொல்லி விட்டு அமைதியாக இருக்க...
சிறிது நேரம் கழித்து மெதுவாக தன்னுடைய ஒற்றை கண்ணை மட்டும் லேசாக திறந்து பார்த்தவள் ... தன்னை தான் பார்த்துக் கொண்டே இருக்கிறான் என்று தெரிந்து வேகமாக கண்களை மூடி கொண்டாள்.
இப்போது சற்றும் யோசிக்காமல் அவள் அருகில் மெதுவாக அவளை அணைத்து படுத்துக் கொண்டான்... சனாதன்.
தன் அண்ணனை நினைத்து ஐயோ என்ன செய்யப் போகிறானோ என்று முதலில் பயந்து கொண்டு இருந்தவள் ... இப்பொழுது தன்னை அணைத்து படுக்கவும்... அவனின் சுவாசத்தை சுவாசித்துக் கொண்டே உறங்கினாள் சஞ்சனா.
சஞ்சனாவும், சனாதனும் பேச ஆரம்பிக்கும் போதே கவிப்பிரியா அறையில் இருந்த கேமராவை ஆஃப் செய்து விட்டான் ருத்ரா..
அதே போல் வீராவும், முத்தாயும்... சரோவை வீல் சேரில் வைத்து வெளியில் வராண்டாவில் நடந்து கொண்டு இருந்தார்கள்.. அவர்கள் இருவரும் பேச ஆரம்பிக்க உடனே வெளியில் வந்து விட்டார்கள்...
அதே போல் தான் லட்சுமி மாவின் அறையில் இருந்த வீடியோவையும் சரண், லீனா இருவரும் ஆப் பண்ணிட்டாங்க.
கர்ணா, லிபின் இருவரும் வெளியில் இருக்க அவர்களிடம் வந்து சரோஜா உள்ளே நடப்பதை சொல்ல... ஐந்து பேரும் அவர்களை கிண்டல் செய்து பேசிக்கொண்டு இருந்தனர் வெளியில்...
லிபின் அவன் தான் திடீரென்று ஆமாம்.. ஆமாம்.. அழகி எங்கே என்று கேட்க..?? கருணாவுக்கும் அந்த கேள்வி இருந்தாலும் இவர்களை தாண்டி எப்படி அவளை போய் பார்ப்பது.. ஏற்கனவே தானா சஞ்சனா இருவரையும் கிண்டல் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று அமைதியாக இருக்க,.. லிபின் கேட்ட மறு வினாடி ஆமாம் அவ எங்க காணோம்... இரு டா ரூம்ல தான் இருந்தாள்... ஏன் இன்னும் வெளியே வரவில்லை என்று போய் பார்த்து விட்டு வருகிறேன் என்று சொல்லி யாரையும் கவனிக்காமல் வேகமாக அறைக்குள் செல்ல...
இப்போது இவனைப் பார்த்து மற்றவர்கள் அனைவரும் கேலி செய்து சிரித்தார்கள்.
முதலில் வேடிக்கையாக அவர்கள் பேசுவதை கவனித்துக்கொண்டு இருந்த அழகி... சனாதன் கேமராவை ஆப் செய்து எடுத்தது முதல் கொண்டு எதுவும் அறியாமல்... சிறிது நேரத்திலேயே தன் அத்தானை நினைத்துக் கொண்டு கனவுலகில் அதே அறையில் கனவில் அமர்ந்து இருக்க...
திறந்து இருந்த விழிகளுக்குள்ளேயே அவள் காணும் கனவுகளை கண்டவன்... பாவி.. பாதகத்தி... கனவிலே என் பிள்ளைக்கு அம்மாவாக வாழ்வாள்... !!!. ஆனால் நிஜத்தில் மட்டும் ஒத்துக் கொள்ள மாட்டாள்.... என்று புலம்பிக்கொண்டே அவள் அருகில் சென்று...
மெய்... மெய்.. மா என்று மென் குரலில் கூப்பிட...
அவளும் கனவில் பேசுவது போல் நினைத்து கொண்டு... ஐயோ அத்தான் முடியல.. உன் பிள்ளை வயிற்றில் எப்படி உதைக்கிறான்.. கொஞ்ச நேரம் அந்த பெரியவனை பார் அத்தான்.. சின்னவன் சரோ மா பார்த்து கிட்டு இருக்காங்க என்று சினுங்க...
அடப்பாவி நான் ஒரு பேச்சுக்கு சொன்னா இவ நிஜமாலுமே இது மாதிரி தான் வாழ்ந்துட்டு இருக்காளா விளங்கிடும் என் பொழப்பு... எனக்கு கடைசி வரைக்கும் கனவுல தான்டா வாழ்க்கை என்ற புலம்பி கொண்டு அழகியின் பின் மண்டையில் ஓங்கி ஒரு அடி வைக்க நினைத்து தடவி கொடுக்க...
அழகியும் நல்ல லவகமாக தன் அத்தானிடம் தன் தலையை கொடுத்து விட்டு ஏன் அத்தான் கண்டிப்பா இந்த தடவை பெண் குழந்தை தான் பிறக்கும் நான் சொல்றேன்... நீ என்ன சொல்ற என்று கேட்க...
இதற்கு மேல் பொறுமையாக இருந்தால் சரி வராது என்று நினைத்த கர்ணா அவளை அப்படியே தூக்கி கட்டிலில் படுக்க வைத்து அவள் மீது படுத்து கொண்டு அவளை பார்க்க...
அவளோ ஐயோ என் குழந்தை என்று சொல்ல வந்து... பிறகு தான் அடடா.... நல்லா வசமாக மாட்டிக் கொண்டேனே என்று திருட்டு முழி முழிக்க....
அவளின் அலைபாயும் கண்களில்... தன்னை தொலைத்தவன்... துடிக்கும் அந்த அதரங்களில் இளைப்பாறினான்.
அழகி என்ன நடக்கிறது இங்கே... ஐயோ இதுவரை என்ன நடந்தது கனவில், அதை எல்லாமே இப்போது நிஜத்தில் இவன் நடத்தி விடுவான் போலவே என்று அவளின் மூளை கூப்பாடு போட்டு கத்தினாலும், அவளையும் அறியாமல் கர்ணாவின் பின் மண்டையில் தன் கைகளை வைத்து அழுத்த....
அழகியின் ஒத்துழைப்பில் அவளை விட்டு கொஞ்சமும் நகராமல்... முழுவதுமாக தனக்குள்ளே அவளைக் கொண்டு வந்தவன்..... அவளின் இதழ்களை விட்டு எழ மனம் இல்லாமல் அதில் இளைப்பாரிக் கொண்டே இருந்தான்.... ஒரு கட்டத்தில் அவள் மூச்சுக்கு திணற.... மெல்ல அவளின் இதழ்களை விட்டு நகர்ந்தாலும் இதழ்கள் உரசி கொண்டே இருக்க....
அவளோ கண்களை மூடி தன் தவிப்பை பெட் விரிப்பில் காட்ட...
அவளை மேலும் சோதிக்காமல் மறுபடியும் ஒரு முறை அழுத்தமாக அவள் இதழில் ஒரு முத்தமிட்டு விட்டு அவளை விட்டு விலகி எழுந்து நின்றவன்....
சில நொடிகள் தன்னை சமன்படுத்திக்கொண்டு... அழகியை பார்க்க... அவளோ கண்களை திறக்க முடியாமல் கூச்சத்தில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அப்படியே படுத்து இருந்தாள்.
அவளின் இந்த மோன நிலையை கண்டவனுக்கு பித்து தலைக்கேற... ஓங்கி தன் தலையிலேயே தட்டிக் கொண்டவன்... ரொம்ப இயல்பாக கூப்பிடுவது போல் அழகி எழுந்திரு என்ன நீ இங்கே வந்த படுத்து இருக்கிறாய். நீ தூங்குவதற்காக தான் அத்தையையும், அம்மாச்சி, தாத்தா மூவரையும் வெளியே அனுப்பினாயா? என்று கோபப்படுவது போல் நடித்தான்.
அதாவது அவன் இப்போது தான் உள்ளேயே வருகிறானாம்... என்று அப்படி ஒரு நடிப்பு...
ம்ம்.. பாவம் அழகி... அப்போ இங்கே இதுவரை நடந்தது அனைத்துமே என்னுடைய கனவு தான்... என்று நினைத்தவளுக்கு நொடியில் கண்கள் கலங்கி அழுகை வர..
ஏய் என்ன ஆச்சு அழகி... இப்ப எதுக்கு அழுகுற... என்று பதறி போய் கேட்டான் கர்ணா. ஏய் நான் விளையாட்டுக்கு தான் சொன்னேன்.
உனக்கு ரெஸ்ட் எடுக்கணும்னு தோணுச்சுன்னா ரெஸ்ட் எடு. நான் போறேன் வெளியே என்று வெளியே செல்ல நினைத்தவனை அத்தான் என்று கூறி அழைத்தாள்.
அழகியின் அழைப்பில் நின்று அவளை பார்த்தவன்...
அத்தான் இப்போ இங்க நடந்தது எல்லாமே கனவு மட்டும் தானா என்று கேட்டால் கண்களில் காதலும்... வார்த்தையில் எதிர்பார்ப்பும் இருக்க ஒரு நொடி தன்னை மறந்தவன்.. உளற நினைக்க வினாடியில் சுதாரித்துக் கொண்டவன்...
என்ன சொல்ற அழகி என்று அழகி என்ற வார்த்தையை அழுத்தத்தோடு கேட்க...
கண்களில் இருந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு அவளும் எழுந்து அமர்ந்தவள்... அவனைக் கடந்து வெளியில் செல்ல நினைக்க...
அவளை அப்படியே சுவற்றில் சாய்த்தவன்... அவளை மிகவும் நெருங்கி நின்று அவளின் கழுத்தில் முகம் புதைத்து கொண்டே... அழகி நீ உன்னை தெளிவாக புரிந்து கொண்டாய் என்றால்... நீ எதிர்பார்க்கும் பதிலும் உன்னிடமே இருக்கிறது.... அதனால் கேள்வி என்னிடம் கேட்பதை விட்டுவிட்டு பதில் சொல்ல முற்படி என்று சொல்லி விட்டு... அவளின் கழுத்தில் அழுத்தமாக தன் இதழை பதித்து எடுத்தவன்...
முகத்தை கழுவி விட்டு தலையெல்லாம் ஒதுக்கிக்கொண்டு வெளியில் வா வீட்டிற்கு சென்று அனைவருக்கும் மாற்று உடை எடுத்து கொண்டு வருவோம் என்று சொல்லி சென்றவன்... திரும்பி பார்த்து அழகி சீக்கிரமாக வா என்று சொல்லி சென்றான்.
அவனின் அழகி என்ற சொல்லின் அழுத்தத்திலேயே இவ்வளவு நேரமும் தான் அவனிடம் என்ன பேசிக் கொண்டு இருந்தோம்.... என்று சிந்தித்தவள் கடவுளே சிறிது நேரத்தில் நான் என்ன செய்ய இருந்தேன் என்று கலங்கி நின்றாள்.
இவள் கண்டிப்பாக திரும்பி வர மாட்டாள் என்று அழகியின் மனநிலை தெரிந்தவன்...
உள்ளே சென்று பார்க்க அவளின் அதிர்ந்த தோற்றமே ... இவ்வளவு நேரமும் தன் காதலை வெளிப்படுத்தியதன் விளைவாக குற்ற உணர்வில் இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டவன்....
அழகி... என்று அவளின் அருகில் சென்று அழுத்தத்தோடு கூப்பிட பயந்து போனவள் அவனை மிக நெருக்கத்தில் பார்க்க....
இணைந்திருங்கள்...
சொல்லவா... வேண்டாமா...