• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 26, 2025
Messages
105
98. பழனியின் குழப்பமும்.... பிரியாவின் தெளிவும்....

சஞ்சனா... சீஃப் டாக்டர் இருவரின் அதிர்ச்சியும்....

பழனி மாமா பிரச்சினை எல்லாம் ஒன்றும் இல்லை.. ஆனால் சாய்ந்தரம் கணேஷ் மாமா போன் பண்ணி இருந்தாரு... அவர் என்னிடம் பேசிய விதம் தான் ஏதோ எனக்கு தவறாகப்படுகிறது. போலீசில் நாம் பாம் வைத்தது எதுவும் கண்டுபிடித்து விட்டார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது என்று சொன்னாள் பிரியா.

என்ன பாப்பா சொல்ற.. அது எப்படி கண்டுபிடிக்க முடியும்??? என்று பதட்டப்படுவது போல் நடித்தான்.

ஐயோ மாமா நீங்க தானே சொன்னீர்கள்.. அந்தக் கார் வெடிக்கவில்லை‌.. அதில் பயணித்தவர்களும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று.. அப்போ ஒன்னு அந்த பாம் போலீஸ் கண்டுபிடித்து இருக்கணும் இல்லையா.. அந்த ஐந்து தடு மாடுகளில் ஏதோ ஒரு தடிமாடு கண்டுபிடித்து இருக்க வேண்டும்.

அதனால் தான் அந்த பாம் வெடிக்கவில்லை, அதே சமயம் அவங்கள வேறு காப்பாத்தி இருக்காங்க. ஆனால் அந்தப் பாம் யார் வைத்தது என்று இதுவரை கண்டுபிடித்தது போல் தோன்றவில்லை என்று சொல்லிக் கொண்டு இருந்தவளை..

அது எப்படி இவ்வளவு உறுதியாக சொல்கிறாய் என்று கேட்டான் பழனி...

அது எப்படின்னா சம்பந்தமே இல்லாமல் என் பெயரை சொல்லி கூப்பிட்டாரு அப்பவே அங்கு ஏதோ பிரச்சினை என்பது எனக்கு புரிந்தது என்று பிரியா சொல்ல...

என்ன சொல்ற ஏதாவது புரியிற மாதிரி சொல்லு உன் கிட்ட பேசும் போது உன் பெயர் சொல்லாமல் வேறு யாரு பேர் சொல்வார்கள் என்று பழனி உண்மையாகவே குழம்பிப் போய் கேட்டான்.

அப்படி இல்ல மாமா இதுவரை கணேஷ் மாமா என் பெயரை சொல்லி ஒரு நாளும் கூப்பிட்டதே கிடையாது அதாவது எப்பவும் ஏதேனும் செல்ல பெயர் வைத்து இல்லை என்றால் அதாவது கோபமா இருந்தால் கூட பாப்பா என்று தான் அழைப்பாரே தவிர என் பெயரை சொல்லி அவர் அழைக்கவே மாட்டார்... இதுவரை அவர் என்னிடம் நேரடியாக எப்பவும் கோபப்பட்டதே இல்லை என்னை திட்டியதும் இல்லை ஆனால் இன்று அவரின் குரலில் கோபமும் பதட்டமும் அதே சமயம் பயமும் இருந்தது அதன் விளைவு தான்... என் பெயர் சொல்லி அவர் கூப்பிட்டதும்...

அதோடு அவருக்கு மறுபடியும் நான் போன் செய்தால் அவருடைய போன் சுவிட்ச் ஆப் என்று வருகிறது.. கண்டிப்பா மாமாவிற்கு ஏதோ பிரச்சனை அதுவும் அவர்கள் அலுவலகத்திலேயே ஏதோ பிரச்சனை என்று தோன்றுகிறது.

என்ன பாப்பா என்ன என்னமோ சொல்கிறாய்... கணேஷ் அண்ணாவிற்கே பிரச்சனை என்று சொல்றியா.. அப்ப நாம மாட்டிக்குவோமா என்று கேட்டான் பழனி.

கண்டிப்பா நான் உங்களை வந்து இப்ப எந்த ஒரு பொய்யான நம்பிக்கையும் கொடுத்து ஏமாற்ற விரும்பவில்லை. இது போலீஸ் கண்டுபிடிச்சு இருந்தாங்க அப்படின்னா இந்நேரம் பிரஸுக்கு தகவல் போயிருக்கும்.. கண்டிப்பா மீடியாவுக்கு இன்பாம் பண்ணாம இருக்க மாட்டாங்க அப்படியே அதை சீக்கிரமா வச்சுக்கணும் அப்படின்னு நினைச்சாங்கன்னா கண்டிப்பா அந்த இடத்துல நமக்கு பிராப்ளம் அதிகமாக தான் இருக்குனு தான் அர்த்தம்....

ஆமாம் அந்த பாம் நீங்க எங்க வாங்கினீங்க எப்படி வாங்கினீங்க என்று கேட்டாள் பிரியா...

ஐயோ என்ன இவள் இதையெல்லாம் கேட்கிறாளே எப்படி சமாளிக்கிறது என்று ஒரு நொடி யோசித்து விட்டு... ஏன் பாப்பா கேட்கிற என்று கேட்டான் பழனி.

அந்த பாம் பிளாஸ்ட் ஆனா கூட பரவால்லாஸ்ட் ஆகம அவர்கள் கைக்கு கிடைத்திருந்தால் அது யாரு வாங்க நான் எங்க வாங்குனாங்க என்று ஈசியா கண்டுபிடித்து விடுவார்கள் அதற்கு தான் கேட்கிறேன் என்று சொல்லும் போதே பழ்னின் ஆகா தப்பு பண்ணிட்டோமோ என்று உள்ளுக்குள் பயந்தாலும் வெளியே அதை காட்டிக் கொள்ளாமல்...

இதுக்குன்னு ஒரு வெப்சைட் இருக்கு அந்த வெப்சைட்ல போய் ஆன்லைன்ல தான் வாங்கினேன் என்று சொன்னான்.

ஓஓஓ.. யாரோட பெயர்ல வாங்கி இருக்கீங்க என்று கேட்டாள்....

நீ பயப்படாத பாப்பா நான் எல்லாமே ஃபேக் ஐடி கொடுத்து தா ங வாங்கி இருக்கேன்... நம்மை யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்று சொன்னான் பழனி...

சரி மாமா நீங்கள் எதற்கும் கவனமாக இருங்கள் நான் கணேஷ் மாமா வீடு வரைக்கும் போயிட்டு வருகிறேன் என்று சொல்லி விட்டு கிளம்பினாள்.

பிரியா சென்ற அடுத்த நொடி பழனி மொபைலுக்கு ஃபோன் வர அதை அட்டென்ட் செய்து பேச ... அந்தப் பக்கம் இருந்து செல்லப்பட்ட செய்தியில் பழனி முகம் இருண்டு போனது.

மருத்துவமனையில்....

காலை 8 மணி போல் மெதுவாக கண்களை திறந்தால் சஞ்சனா.... கண்களை திறந்து பார்க்க உடம்பில் தோன்றிய வலியில் மறுபடியும் கண்களை இறுக்க மூடி கொண்டாள்...

அவளின் சுவாசத்தை தன் சுவாசமாக சுவாசித்துக் கொண்டு அவள் அருகில் படுத்து இருந்தவன்... அவளின் வலி உணர்ந்து மெதுவாக எழுந்து அமர்ந்தவன் அவளின் புருவ முடிச்சுகளை மெதுவாக நீவி விட்டான் சனாதன்.

அவனின் இதமான வருடலில் மெதுவாக கண்களை திறந்து பார்த்தவள்... அங்கே கண்களில் மன்னிப்பும், முகத்தில் சந்தோஷமும்... கை விரல்களின் அழுத்தத்தில் காதலையும் உணர்ந்தவள் அவ்வளவு வலியிலும் .... அவன் கண்களை பார்த்து ஐ லவ் யூ சனு என்று சொன்னாள் சஞ்சனா.

அவளின் காதுக்கு மிக அருகில் சென்று போடி என்று சொன்னவன் ...அடுத்த சில விஷயங்களை சொல்ல..

ஐயோ சனு... போடா என்னால் முடியாது சாமி என்று கெஞ்சினாள்.

ஏ லூசு நான் ஒன்றும் உன்னிடம் கேட்கவில்லை நான் தருகிறேன் என்று தான் சொன்னேன் என்று சொன்னான்.. சனாதன்.

ஏய் சனு இது ஒன்றும் நம்ம பெட்ரூம் கிடையாது.. அதே மாதிரி நான் இப்ப தான் உனக்கு லவ் டிக்ளர் பண்ணி இருக்கேன்.. நான் என்னமோ உன் கூட கல்யாணம் பண்ணி பஞ்சு மெத்தையில.. பட்டு புடவை கட்டிகிட்டு, தலை நிறைய ஜாதி மல்லி வச்சுக்கிட்டு... பால் சொம்போட உனக்கு முன்னாடி நிற்பது போல் பேசுகிறாய்... என்று சஞ்சனா சொல்லி கொண்டு இருக்க...

இப்போது சனாதன் அவளுக்கு மிக அருகில் அமர்ந்து இருந்தவன்... பதட்டமாக கீழே இறங்கி சென்று அங்கு சுவற்றில் ஒரு சின்ன பட்டர்ஃபிளை மாதிரி இருந்த பட்டர்பிளை கேமராவை ஆஃப் பண்ணினான்.

இதுவரை இங்கு இவர்களுக்குள் நடந்த காதல் அரங்கேற்றத்தை.. ஏற்கனவே பாதுகாப்புக்காக கவி, சரோ மா, லட்சுமி மா இவர்களின் அறைகளில் பொருத்தி வைத்து இருந்த பட்டர்பிளை கேமராவில் அனைவரும் பார்த்துக் கொண்டு இருந்தனர்...

சஞ்சனா கட்டில் மெத்தை என்று பேசும் போது தான் .. ஆஹா இங்கு வைத்து இருந்த கேமரா நினைவுக்கு வந்து அதை எடுத்தான் சனாதன்.

அவனின் பதட்டத்தோடு... அவன் செய்த செயலிலேயே தெரிந்தது என்ன வேலை செய்து வைத்து இருக்கிறான் என்று...

அடப்பாவி மச்சான் என்னடா பண்ணி வச்ச .. கேமராவா பாதுகாப்புக்குனு செஞ்சியா ... ஆனா அது இப்போ உனக்கு.... ரிவர்ஸ் ல வந்து உனக்கு... நீயே ஆப்பு வச்சு கிட்டியா போச்சு ... போச்சு... மானம்... போச்சு... ஹாஹா ஹாஹாஹா என்று சிரித்தாள்... சுத்தமாக சிரிக்க முடியவில்லை என்றாலும் மெல்ல சிரித்தால் ஆனால் அந்த சிரிப்பிலும் அவளுக்கு வலி உணர அதை தன்னவனுக்காக மறைத்துக் கொண்டாள்.

லேசாக அசடு வழிபவன் போல் புன்னகைத்து கொண்டு சனாதன் அருகில் வர...

அவனின் செய்கையில் மொத்தமாக உருகிப் போனால் சஞ்சனா... தன் வலியையும் மீறி காதலோடு அவனை பார்க்க....

அடியே ஜில்லு... இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்ன ஒரு மாதிரி கூப்பிட்ட இல்ல அது மறுபடியும் கூப்பிடுடி என்று கேட்டான்... சனாதன்.

எப்படி கூப்பிட்டேன் எப்பவும் உன்னை சனு ங கூப்பிடுவேன் .. வேறு எப்படி கூப்பிடுவேன் ...அப்படித் தான் கூப்பிட்டேன் என்று கேட்டாள் மச்சான் என்ற கூப்பிட்டதை மறந்து...

அதுவா இப்ப நான் கேமராவை ஆஃப் பண்ணும் போது நீ அப்படியே ஸ்ப்ளோவில் சொன்னது போல ஒரு வார்த்தை அதை நினைவு படுத்தி பாரு என்று சொல்லிக்கொண்டு இருந்தான்...

என்ன சொன்னேன் ஞாபகம் இல்லையே என்று யோசித்தாள்.. உண்மையாக அவள் ஒரு வேகத்தில் அப்படி சொன்னாளே தவிர.. மணி மச்சான் என்று கூப்பிடவில்லை அதனால் அவருக்கு சொல்லியது நினைவு வராமல் யோசிக்க தலை வலிப்பது போல் இருக்க..

அவளின் முகத்தில் தோன்றிய அசௌகரியத்தில் இருந்தே அவளின் வலியை உணர்ந்து... ஹேய் சில் சனா... ரொம்ப எல்லாம் யோசிக்காத என்று சொல்லி கொண்டே டாக்டர்ஸை கூப்பிட அங்கு இருந்த அலார பட்டனை அழுத்தினான் சனாதன்.

அடுத்த நிமிடம் டாக்டர்ஸ் உள்ளே வர...

சஞ்சனா முகத்தில் இருந்த தெளிவும் அவளின் மன உறுதியும்... எனக்கு அருகில் இருக்கும் சனாதன் தான் என்று அங்கு இருந்தவர்கள் அனைவருக்கும் இந்த ஒரு நாளிலேயே தெரிந்து இருக்க ...

என்ன மிஸ்டர் சனாதன் உங்கள் வைஃப்..‌ ஒரு வழியாக கண் விழித்து விட்டார்களா...‌என்று டாக்டர் கேட்க...

சஞ்சனாவோ எதே.... நான் இந்த ஆளோட சம்சாரமா என்னய்யா சொல்றீங்க.... ஹலோ டாக்டர் ... ஏற்கனவே நெஞ்செல்லாம் வலிக்கிறது... இதில் நீங்கள் வேறு பீதியை கிளப்பாதீர்கள்... மலைக்கோட்டையில் இருக்கிற என்ற ஐயன் கருப்பனுக்கு மட்டும் தெரிஞ்சுச்சு... வீச்சருவாளை தூக்கிட்டு வந்துருவாராக்கும்... என்று பழைய துடுக்குத்தனத்தோடு பேசினாலும்... அவளின் உடலில் உள்ள சோர்வு அவள் முகத்தில் தெரிய...

ஏய் வாயாடி கொஞ்ச நேரம் அமைதியாக இரு டி... டாக்டர் உதயா சொன்னது போல் மறுபடியும் ஒரு மயக்க ஊசியை போட்டு விடுங்கள் இவளுக்கு... இவ்வளவு நேரமும் இருப்பவர்களை எல்லாம் படாத பாடு படுத்தி விட்டு இப்ப பாரு வாய்கிழிய பேசுறது என்று சொல்லி கொண்டே போன சனாதனனை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டு இருந்தார் சீஃப் டாக்டர்.

சீஃப் டாக்டரின் நிலைமை அப்படி என்றால்... சஞ்சனாவின் நிலைமை அதற்கு மேல் இருந்தது என்ன அண்ணா இங்கு வந்து இருக்கிறாரா... ஐயோ அப்ப லிங்கத்துக்கு எல்லாம் தெரியுமா?... போச்சு நான் இன்னைக்கு கைமா தான்... என்று வாய்விட்டு புலம்பிக் கொண்டு இருந்தாள் சஞ்சனா.

டாக்டர் பரிசோதித்து விட்டு.. இரண்டு நாட்கள் கண்டிப்பாக இங்கே அப்சர்வேஷன் ல இருக்கட்டும் ... பிறகு ஐந்து நாட்கள் கழித்து தலையில் இருக்கும் கட்டை பிரித்து காயம் பார்த்துக்கொண்டு பிறகு அடுத்த கட்டு போட்டு விடலாம் என்று சொல்லி விட்டு... தன்னுடைய சீஃப் டாக்டரை பார்க்க...

அவரின் பார்வையோ சனாதன் மீது மட்டுமே இருந்தது.
ஆனால் டாக்டர் சொன்னதை கேட்டுக் கொண்டு இருந்த சனாதன் ஓகே டாக்டர்... என்று அவளின் மெடிக்கல் ரிப்போர்ட்டை வாங்கி வைத்துக் கொண்டான்.
சீஃப் டாக்டர் தனக்கு பதில் சொல்லாததை அப்போது தான் பார்த்த டூயூட்டி டாக்டர்...
யோசனையோடு அவர் அருகில் செல்ல....
இணைந்திருங்கள்

சொல்லவா... வேண்டாமா...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top