- Thread Author
- #1
97. தர்மலிங்கத்தின் தெளிவும்..
சஞ்சனாவின் ஏக்கமும்...
பழனியின் சந்தேகமும்....
ஜெகன் வீட்டில்...
தர்மலிங்கம் வீட்டிற்கு வந்து காரை வீட்டில் நிப்பாட்டி விட்டு... வேகமாக உள்ளே வந்தவர்... எதுவும் சொல்லாமல் நீண்ட நாட்களுக்குப் பிறகு தன் முதல் மனைவி சவிதாவின் அறைக்கு வேகமாக சென்றவர்....
கதவை சாத்தி விட்டு அந்த கதவிலேயே சாய்ந்து நின்றார். காரில் வரும் போது சரோஜா அம்மா சொன்ன வார்த்தைகளை மறுபடியும் தனக்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டே வந்தவருக்கு... தான் பண்ணிய தவறு என்ன என்று சிந்தித்தவருக்கு முதலில் எதுவும் பிடிப்படாமல் போனாலும் பிறகு தன் மனதை ஒருநிலைப்படுத்தி நிதானப்படுத்திய பிறகு... தன் முதல் மனைவி சவிதாவும் தன் மகள் கவி பிரியாவும் நினைவுக்கு வர...
சரிதா வருவதற்கு முன்பு... என்று மூன்று பேரும் எவ்வளவு அழகாக வாழ்ந்தோம்... அப்புறம் எப்படி இப்படி சவீதா ஆனால், அவளின் உடலில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு சரிதா காரணமாக இருப்பாளோ என்றும் முதன் முதலில் இப்பொழுது தான் சரியான பாதையில் சிந்திக்க தொடங்கினார்... அதன்படி இனி தான் செய்ய வேண்டிய வேலைகள் என்ன என்று ... ஒருவாறு மனதிற்குள் ஒரு திட்டத்தை தீட்டிக்கொண்டு நிம்மதியாக படுத்தார்.
மருத்துவமனையில்...
விடியற்காலையில் எழுந்து சனாதன் படும் கஷ்டத்தை பார்த்து விட்டு.. அவனிடம் கோபப்பட்டதற்காக சனாதனிடம் புவனா மன்னிப்பு கேட்க..
விடு உதயா எல்லாம் இதோ உள்ளே படுத்து இருக்கிறாளே அவள் மீது உள்ள அன்பில் தானே என்று சொல்லிவிட்டு சனாதன் தன் பார்வையை மறுபடியும் தன்னவள் மீது பதித்து நிற்க...
அதைப் பார்த்த உதயா என்ன பாப்பா இப்படி பண்ணி வச்சிருக்க என்று குறை பட்டுக் கொண்டவன்... சரி வா கேண்டின்கு போகலாம் என்று அவளை அழைத்துக் கொண்டு சென்றான் உதயா..
கேண்டின்கு சென்று தான் இங்கு வந்ததில் இருந்து இப்ப வரை சனாதனின் நிலைமை ... அதற்குப் பிறகு அவன் செய்தது... அனைவரையும் காப்பாற்றியது... அதோடு மறுபடியும் வந்து ஒரே இடத்தில் நின்று தன்னவளை மட்டுமே பார்த்துக் கொண்டு இருப்பதையும்... பொறுமையாக சொல்லி முடிக்க புவனா அழுது கொண்டே கேட்டுக் கொண்டு இருந்தாள்.
அது மட்டும் இல்லாமல் அழகி நம்ம ஜெயா அம்மா கிட்ட அழகா சஞ்சனா மாதிரியே பேசி நிலைமையை சீராக்கி வைத்து இருக்கிறாள்... எப்படி இருந்தாலும் நம்ம மிதுனாவும், சஞ்சனாவும் வாழ போகும் வீடு.. அது மட்டும் இல்லாமல் அங்கு இருக்கும் அழகி அந்தப் பெண் எவ்வளவு அழகாக ஒவ்வொரு சூழ்நிலையும் கையாளுகிறாள் தெரியுமா? ஒவ்வொருவரையும் அப்படி பார்த்து பார்த்து தாங்குகிறாள் அந்த குடும்பத்தில் தான் நம்ம வாண்டுகளும் போய் வாழப் போகிறார்கள் என்று நினைக்கும் போது மனதிற்கு ஒரு இதம் வருகிறது தெரியுமா?.. தயவு செய்து உன் முன் கோபத்தால் யார் மனதையும் காயப்படுத்தாதே இனி என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அங்கே அழகி இரண்டு பிளாஸ்க் எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தாள்.
ஹாய் அண்ணா ... குட் மார்னிங். ஹாய் புவனா ... குட் மார்னிங் என்று சொல்லி கொண்டே வந்த அழகி கொஞ்சம் இருங்க டோக்கன் வாங்கி பிளாஷ்க்கை கொடுத்து விட்டு வருகிறேன் என்று சொல்லி விட்டு டீ ஒரு டோக்கன்... காபி ஒரு டோக்கன் வாங்கி கொண்டு போய் மாஸ்டரிடம் கொடுத்து விட்டு வந்து இவர்களோடு அமர்ந்தாள் அழகி.
எல்லோரும் எந்திரித்துவிட்டார்களா டா என்று உதயா.. அழகி இடம் கேட்க...
இல்ல அண்ணா வழக்கம் போல தாத்தா, அப்பாயி, சரோமா கண்ணு முழிச்சி இருக்காங்க... லட்சுமி மாவையும் ஒரு பார்வை போய் பார்த்தேன் அம்மா இன்னும் கண் விழிக்கவில்லை... அவருக்கு துணையாக மிதுனாவும், மிதுன் மாமாவும் எழுந்து உள்ளே சென்று அவர் அருகில் இருக்கிறார்கள்.
தனா மாமா தான் சொல்ல சொல்ல கேட்காமல் நின்று கொண்டே இருக்கிறார். ருத்ரா மாமா கவியோட பெட்டுக்கு அருகில் அப்படியே அமர்ந்து தூங்கிட்டு இருக்காரு.
கர்ணா அத்தான் தனா மாமாக்கு அருகில் இருக்கிறார்... லிபின், ரிஷ்வந்த் உக்காந்து தூங்கிட்டு இருக்காங்க இன்னும் யாருமே எந்திரிக்கவில்லை .. என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே
வேகமாக அங்க லிபின் ஓடி வந்தான்...
உதயா ப்ளீஸ் சீக்கிரம் வாங்க... என்று வேகமாக கூப்பிட்டான்...
அவனுடைய பதட்டத்திலேயே அனைவரும் அவனுக்கு பின்னே செல்ல அவனும் முன்னே சென்று கொண்டே சஞ்சனாவிற்கு பிக்ஸ் வந்து விட்டது என்று சொல்லிக் கூப்பிட்டு கொண்டு போனான்.
அனைவரும் பதட்டத்தோடு வேகமாக மேலே செல்ல... சஞ்சனாவிற்கு கை கால்கள் தூக்கிப்போட ஆரம்பித்த உடனே அவளையே பார்த்துக் கொண்டு இருந்த சனாதன் டாக்டர் என்று கத்திய சத்தத்தில் தூங்கிக் கொண்டு இருந்த அனைவரும் பதட்டத்தோடு இப்போது ஐ சி யு விற்கு எதிரில் நின்று கொண்டு இருக்க...
யாரையும் கவனிக்காமல் டாக்டர்ஸ் கூட சேர்ந்து சனாதனும் உள்ளே சஞ்சனாவின் கைகளை பிடித்தவாறு நின்று கொண்டு இருந்தான். அவளோ துள்ளி குதித்து கொண்டு இருந்தாள்...
மருத்துவரின் சிகிச்சையில் அமைதியாக படுத்தாளே தவிர அவளோட உடல் முழுவதும் நடுங்கி கொண்டே இருந்தது.
சனாதன் அவள் கையை பிடித்தவாறு நின்று கொண்டு இருந்தான்...
சார் இன்ஜெக்ஷன் போட்டு இருக்கோம் அவங்களுக்கு வந்து பெயின் ஜாஸ்தியா இருக்கு... அதே நேரம் தன் உடம்பில் அவங்களுக்கு இப்படி நடந்ததை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை... அவர்கள் மனதில் ஏதோ ஒரு முரண்பாடோடு இருக்கிறார் என்று நினைக்கிறேன்... அது தான் இப்படி ஆகிறது என்று டாக்டர் சொல்லி கொண்டு இருக்கும் போதே....
எதையும் கவனிக்காமல் ஆனால் சஞ்சனாவிற்கு இடையூறு இல்லாமல் அமைதியாக அவளின் அருகில் அதே பெட்டில் அவளை அணைத்து கொண்டு படுத்து கொண்டான்.
சனாதன் அவ்வாறு படுத்து கொள்ள டாக்டருக்கு பதட்டம் வந்தாலும்... மற்ற டாக்டர், நர்ஸ் அனைவருமே பதற... அனைவரையும் அமைதியாக இருக்க சொல்லி விட்டு சீஃப் டாக்டர் பார்த்து கொண்டு இருந்தார்.
சனாதன்... சஞ்சனாவின் அருகில் படுத்து இரண்டாம் நிமிடத்திலே சஞ்சனாவின் நடுக்கம் குறைந்து அமைதியாக படுத்து இருந்தாள். டாக்டரும் எதுவும் சொல்லாமல் மற்றவர்கள் அனைவரையுமே வெளியே இருக்க சொல்லி விட்டு, ... ஏதாவது ப்ராப்ளம் என்றால் அவரே நமக்கு கூப்பிடுவர் வாருங்கள் என்று அனைவரையும் அழைத்துக் கொண்டு சென்று விட்டார்.
வெளியே வந்து அனைவரிடமும் இப்போதைக்கு அவங்க நார்மலா தான் இருக்காங்க. ஒன்னும் பயப்பட வேண்டிய அவசியம் இல்ல. அதை விட வந்து எந்த ஊரு பேஷண்ட்டுக்கும் மன தைரியம் மிகவும் முக்கியம். அவங்களோட மன தைரியம் தான் அவங்களுடைய கஷ்டத்தில் இருந்து வெளியில் வரவைக்கும். அதற்கு கண்டிப்பா உள்ளே இருக்கிற அவர் பாதுகாப்பாக இருப்பார்... அந்தப் பெண்ணோட தைரியம் எல்லாம் அவர் தான். அவர் அருகில் இருக்கும் போது சீக்கிரமாகவே குணமாகிவிடுவார்.. ஆனால் அந்தப் பெண்ணிற்கு நெஞ்சில் பலமாக அடிபட்டதால் ரத்தம் கன்னி போய் இருக்கிறது..
அதற்கு எப்படி ட்ரீட்மென்ட் செய்யணும்னு நர்ஸ் சொல்லித் தருவாங்க இங்க இருக்கிற வரைக்கும் நர்ஸ் பாத்துப்பாங்க நீங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறீங்க அப்படிங்கறப்ப, கண்டிப்பா வீட்டுக்கு போய் அவங்க சொல்ற மாதிரி அவங்களுக்கான மசாஜ் எல்லாம் பண்ணி விடணும் அதை வந்து கேர்ஃபுல்லா பண்ணுங்க மத்தபடி தல காயம் எல்லாம் சீக்கிரமா ஆறிடும்.... எப்படியும் ஒரு 7 டேஸ்க்கு அப்புறம் தான் தலைக்கு கட்டு பிரிச்சு... காயம் எப்படி இருக்குன்னு பார்த்ததுக்கு பிறகு தான் மறுபடியும் கட்டு போடணும்... அதனால தலையில தண்ணி படாம கவனமா பாத்துக்கங்க... என்று சொல்லி
விட்டு சென்றார்.
அதே நேரம் சனாதனனின் அதிரடியில் குண்டடி பட்ட அனைவருமே.. சிகிச்சை பெற்று இருந்தாலும் அனைவருமே ஒருவிதமான தனி அறையில் தான் அடைக்கப்பட்டு இருந்தார்கள் அவர்களில் யாரையும் ஜெயிலுக்கோ, கோர்ட்டுக்கோ கூட்டிட்டு போகும் எண்ணம் சனாதனுக்கு சுத்தமாக இல்லை என்பதை தாமதமாக புரிந்து கொண்டவர்கள்.. தங்கள் நிலைமை என்ன ஆகும் என்று தெரியாமல் ஒருவித பயத்திலேயே இருந்தார்கள்.
அங்கு இருந்த ஆபீஸர்ஸ் அனைவரும் அவர்களை நல்ல விதமாகவே பார்த்துக் கொண்டாலும்... அங்கு இருந்த கயவர்களுக்கு இதுவரை எந்தவிதமான நல்ல காரியங்களும் செய்யாது இருந்ததால், தங்களுக்கு இவர்கள் காட்டும் அக்கறை எவ்வளவு நேரத்திற்கு என்று தெரியாமல் தவித்துக் கொண்டு இருந்தார்கள்...
அங்கு இருந்த காவலர்களும் சனாதனனின் உத்தரவுக்காக காத்திருக்க ... அவனோ தன்னவளின் உடல் நலம் தேறி வருவதற்காக அவளுக்கு ஆறுதலாக ஆவலுடன் இருந்தான்.
கமிஷனர் கணேஷ்வர் சம்பந்தமே இல்லாமல் தன்னிடம் தன் பெயரை சொல்லி பேச்சை ஆரம்பிக்கும் போதே அங்கு சூழ்நிலை ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்து கொண்டவள்....
அதற்கு தகுந்தவாறு பட்டும் படாமல் பேசி இருந்தாலும் ஏதோ ஒன்று தவறாக நடப்பது போல் தோன்ற தன்னுடைய மாமன் பழனிவேலை தேடி சென்றாள்.
பழனயோ எப்படி எல்லாம் அவர்கள் வீட்டில் இருப்பவர்களை தாக்க முயற்சி செய்தாலும்... அதில் இருந்து தப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள் என்ன செய்வது?... எப்படி இவர்களை பழிவாங்குவது என்று யோசிக்கும் போது... பழனியை மாமா என்று அழைத்துக் கொண்டே அங்கு வந்து சேர்ந்தால் பிரியா...
வா பிரியா .. சாரி டா இந்த மாமா... உனக்காக தான், உன் ஆசைக்காக தான் அந்த காரில் பாம் வைத்தேன். ஆனாலும் அந்த காரும் வெடிக்கவில்லை... அதே நேரம் அந்த காரில் பயணம் செய்தவர்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் தப்பித்து விட்டார்கள்... என்னஜடா செய்வது மாமாவை மன்னித்து விடு டா. உன்னுடைய விருப்பத்தை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது என்று நல்லவன் போல் பாசாங்கு செய்தான் பழனி.
அச்சச்சோ மாமா அது எல்லாம் ஒன்னும் பிரச்சினை இல்லை.. ஆனால் சாய்ந்தரம் கணேஷ் மாமா போன் பண்ணி இருந்தாரு... அவர் என்னிடம் பேசிய விதம் தான் ஏதோ எனக்கு தவறாகப்படுகிறது. போலீசில் நாம் பாம் வைத்தது எதுவும் கண்டுபிடித்து விட்டார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது என்று சொன்னாள் பிரியா.
என்ன பாப்பா சொல்.. அது எப்படி கண்டுபிடிக்க முடியும்??? என்று பதட்டப்படுவது போல் நடித்தான்.
ஐயோ மாமா நீங்க தானே சொன்னீர்கள்.. அந்தக் கார் வெடிக்கவில்லை.. அதில் பயணித்தவர்களும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று.. அப்போ ஒன்னு அந்த பாம் போலீஸ் கண்டுபிடித்து இருக்கணும் இல்லையா.. அந்த ஐந்து தடி மாடுகளில் ஏதோ ஒரு தடிமாடு கண்டுபிடித்து இருக்க வேண்டும்.
அதனால் தான் அந்த பாம் வெடிக்கவில்லை, அதே சமயம் அவங்கள வேறு காப்பாத்தி இருக்காங்க. ஆனால் அந்தப் பாம் யார் வைத்தது என்று இதுவரை கண்டுபிடித்தது போல் தோன்றவில்லை என்று சொல்லிக் கொண்டு இருந்தவளை..
அது எப்படி இவ்வளவு உறுதியாக சொல்கிறாய் என்று கேட்டான் பழனி...
இணைந்திருங்கள்
சொல்லவா... வேண்டாமா...