• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 26, 2025
Messages
102
96. தர்மலிங்கத்துக்கு சரோஜா கொடுக்கும் வாய்ப்பு....

புவனாவின் கோபமும் உதயாவின் பதட்டமும்...

ஜெகன் வீட்டில்..

தன்னுடைய வேலையை காப்பாற்றிக் கொள்வதற்காக.. தன் மனைவி, மகன் என்று யாரின் நிலைமையும் பற்றி சிறிதும் யோசிக்காமல்.. தன்னை பற்றி மட்டுமே சிந்தித்து சுயநலத்தோடு முடிவெடுத்து வேகமாக ருத்ரா சொன்ன மருத்துவமனைக்கு கிளம்பினார்...

சரிதாவோ இருக்கும் சூழ்நிலை புரியாமல், தன் கணவரிடம் பாசத்தை காட்டுவதாக நினைத்து ஏங்க ஒரு நிமிஷம் நில்லுங்க... இரவு நேரத்தில் வந்தவுடன் இப்படி கிளம்பி செல்கிறீர்களே ஏதேனும் சாப்பிட்டு விட்டு செல்லுங்கள் என்று சொல்ல...

கோபமாக திரும்பி தன் மனைவியை பார்த்து இப்போது நான் வெளியே செல்லவில்லை என்றால் அடுத்த நொடி நீ நான் உன் மகன் அனைவரும் நடுத்தெருவில் நின்று பிச்சை தான் எடுக்க வேண்டும் உனக்கு பரவாயில்லையா என்று கேட்க...

சரிதாவோ ஏங்க என்னங்க சொல்றீங்க நீங்க என்று அதிர்ச்சியாக கேட்க... அவருக்கு நின்று நிதானமாக பதில் சொல்ல நேரமும் இல்லை விருப்பமும் இல்லாமல் வேகமாக சென்ற தன் காரி.ல் ஏறி புறப்பட்டார் தர்மலிங்கம்.

அடுத்த 15-வது நிமிடத்தில் ருத்ரா சொன்ன மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தவர்... பார்க்கிஙில் காரை நிறுத்தி விட்டு ருத்ராவிற்கு ஃபோன் செய்தார்.

அவனும் சரோஜா அத்தை இருக்கும் அறைக்கு வழி சொல்லி அங்கே வர சொன்னான்.

அப்போது தான் அழகி... சரோஜா, வீரா, முத்தாயி மூவரையும் சமாதானப்படுத்தி, இரவு உணவாக இட்லி வாங்கி வர சொல்லி மூவரையும் சாப்பிட வைத்து விட்டு, சரோஜாவிற்கான மாத்திரையை எடுத்துக் கொடுத்துக் கொண்டு இருந்தாள்.

அப்போது உள்ளே வந்த ருத்ரா ... சுருக்கமாக கவியின் அப்பா தர்மலிங்கம் பற்றியும், அதேபோல் ஜெகனால் வந்த தொல்லைகள் பற்றியும் சொல்லி விட்டு, அதே நேரம் சனாதன் தர்மலிங்கத்தின் வேலைக்கு உலை வைத்ததையும் பற்றி சொல்லி கொண்டு இருக்க...

வேகமாக மூச்சு இரைக்க உள்ளே வந்தார் தர்மலிங்கம்...

அவர் அனுமதி இல்லாமல் வேகமாக வந்துவிட உள்ளே இருந்தவர்கள் அவரை வினோதமாக பார்க்கும் பார்வையில் தான்... ஐயோ இது மருத்துவமனை அதோடு இவர்கள் இப்பொழுது நோயாளி வேறு.. கொஞ்சமா பொறுமை இல்லாமல் வந்த தன்னுடைய முட்டாள்தனத்தை விவரித்து தரும் தலையில் அடித்துக் கொண்டு.. தன் தவறை உணர்ந்து சாரி மன்னித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு வெளியே போகப் போனார்.

அப்போது சரோஜா இதற்கு முன்பே ருத்ரா மூலம் அவர் பற்றி அனைத்து விவரங்களையும் அறிந்ததால்... மனிதனுக்கு ஏற்படும் இயல்பான பரிதவிப்பு தான் என்பதை உணர்ந்து கொண்டவர் பரவாயில்லை தர்மலிங்கம் உள்ளே வாருங்கள் என்று கூப்பிட்டார்.

தர்மலிங்கமும் மிகவும் சங்கடத்தோடு அவர்கள் முன்னே வந்து நின்று விட்டு, அனைவரையும் ஒரு பார்வையால் பார்த்து விட்டு சரோஜமாவை பார்த்து கைகட்டி நின்றார்.

எப்போது ஆடிட்டிங் வரும் போது ஒரு முறை கூட இதுபோல அவர் கைகட்டி தன் முன் நின்றது கிடையாது இப்பொழுது தன் மகன் செய்த பிழையால் தன் முன்னே இப்படி கைகட்டி நிற்கும் அவரின் நிலைமையை கண்டு உள்ளுக்குள் வருந்தினாலும் இவரிடமும் பல குறைகள் இருப்பது கவியின் மூலம் தெரிந்து கொண்ட சரோஜா....

அவரின் தப்பை சுட்டிக்காட்டும் பொருட்டு... தர்மலிங்கம் மரியாதை என்பது மனதில் இருந்து வர வேண்டும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு வெளித்தோற்றத்தில் வருவது என்றுமே நிலையானது அல்ல... அந்த மாதிரி வரும் போலி மரியாதையை என்றும் நான் ஏற்றுக் கொள்பவளும் அல்ல.

அதே நேரம் வயதில் மூத்தவர்களோ பெரியவர்களோ என்றும் அனைவரையும் சமமாக பார்ப்பவள் நான். அதனால் தேவையில்லாத போலி மரியாதைகள் வேண்டாம் என்று சொன்னார் சரோஜா.

தர்மலிங்கம் சங்கடத்துடன் தான் கட்டி இருந்த கைகளை விலக்கிவிட்டு என்னை மன்னித்து விடுங்கள் மா... என் மகள் பண்ணியது மிகப்பெரிய தவறு தான்... அதற்கு நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அதே சமயம் எனக்கு என் வேலையை திருப்பி தர சொல்லுங்கள் அம்மா என்று கேட்டார் தர்மலிங்கம்.

சில வினாடிகள் அமைதியாக அவரைப் பார்த்துக் கொண்டே இருந்த சரோஜா.. தர்மலிங்கத்தை பார்த்த மிஸ்டர் தர்மலிங்கம் நீங்கள் செய்த தவறு என்ன என்று ஒருநாள் முழுவதும் அலசி ஆராய்ந்து பாருங்கள். பிறகு இந்த பிரச்சினையை எப்படி சரி செய்யலாம் என்று உங்களுக்குள் ஒரு தீர்வு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். அப்படி கிடைத்தால் அதை நீங்கள் செய்யுங்கள், அப்படி நீங்கள் சரியான முடிவு தேர்ந்தெடுத்து விட்டீர்கள் என்றால்.. உங்களை தேடி உங்கள் வேலை தானாக வரும் என்று சொல்லி விட்டு நீங்கள் கிளம்பலாம் என்று சொல்லாமல் சொல்வது போல் அமைதியாக கண்களை மூடி படித்துக் கொண்டார்.

தர்மலிங்கமும் இதற்கு மேல் தான் இங்கு நிற்பது பிரயோஜனம் இல்லை என்பதை உணர்ந்து யோசித்துக் கொண்டே மருத்துவமனையில் இருந்து தன் வீட்டை நோக்கி சென்றார்....

அதே நேரம் லட்சுமிமாவின் அறைக்கு நேர் எதிரில் தன் அண்ணனின் தோளில் சாய்ந்து அமர்ந்து இருந்த புவனா லட்சுமி மா பற்றிய துக்கத்தை தன் அண்ணன் மீது இறக்கி வைத்து விட்டு பிறகு தன் கண்களை துடைத்து கொண்டு தன்னை சுற்றி இருப்பவர்களை கவனிக்க அதில் சஞ்சனா இல்லாமல் இருக்கவும் தன் அண்ணனிடம் சஞ்சனா எங்கே என்ற கேட்க அவனும் கண்ணிமைகளை திறக்கவே முடியாது என்பது போல் கண்களை மூடி அமர்ந்து இருக்கவும் சனாதனை பார்த்தாள்... அவனும் என்னால் எதுவும் சொல்ல முடியாது என்று ஏதோ ஒரு பரிதவிப்பில் தலை குனிந்த வண்ணம் நின்று இருக்க இப்பொழுது அனைவரையும் விட்டுவிட்டு தன்னவனை பார்த்து.... ரிஷ்வந்த் போய் சஞ்சனாவை அழைத்துக் கொண்டு வா என்று சொல்ல...

ரிஷ்வந்த் இவ்வளவு நேரம் ஒதுங்கி நின்றவன் ... இப்போது புவனாவின் அருகில் வந்து முதலில் என்னோடு வா என்று அழைத்தான்..

ஏனென்று வார்த்தையால் கேட்கவில்லை ஆனால் கண்களால் வினாவி தன்னவனை பார்க்க...

அவனும் ப்ளீஸ் வாடி என்று கண்களாலே கெஞ்சினான்...

புவனாவும் தன் அண்ணனிடம் இருந்து எழுந்து ரிஷ்வந்த் பின்னே சென்றாள்.

சஞ்சனா இருக்கும் ஐ சி யு விற்கு முன்பு கொண்டு போய் நிறுத்தியவன் அந்த கண்ணாடி வழியே பார்க்க சொல்ல...

புவனாவும் பயந்து கொண்டே பார்த்தாள்.. அங்கே தலையிலும் உடலிலும் கட்டுகள் போட்டு வாடிய மலராக படுத்து இருக்கும்.. சஞ்சனாவை பார்த்த நொடி பளார் என்று அறைந்து இருந்தாள் ரிஷ்வந்த்தை.. அவர்களின் பின்னே வந்த சனாதனை அத்தோடு ஒரு பார்வை பார்க்க அந்த அடி தனக்கு தான் என்பதை சொல்லாமல் சொல்லியது போல் இருந்தது... சனாதனுக்கு...

சாதனை ஒரு நொடி எரிக்கும் பார்வை பார்த்தவள்... எதுவும் சொல்லாமல் ரிஷ்வந்த்தை கட்டி பிடித்துக் கொண்டு மௌனமாக அழுது கொண்டு இருந்தாள்.

புவனாவின் கண்ணீர் ரிஷ்வந்தின் மார்பை நனைக்கும் போது, ரிஷ்வந்தின் கண்ணீர் புவனாவின் தலையில் விழுக அவனை நிமிர்ந்து பார்த்தவள்.. கண்களிலேயே அழாதே என்று சொல்ல...

சஞ்சனாவை ஒரு பார்வை பார்த்து விட்டு அவள் எனக்கும் தோழி தாண்டி என்று மெல்ல அவளின் காதில் சொல்லி விட்டு அருகில் இருந்த ஸ்டீல் பெஞ்சில் அமர்ந்து கொண்டு புவனாவை தன் மடியில் படுக்க வைத்து தட்டி கொடுத்து கொண்டு இருந்தான்..

புவனாவும் உடலும் உள்ளமும் சோர்ந்து போய் இருக்க... அப்படியே அவள் ரிஷ்வந்த் மடியில் உறங்க ஆரம்பித்தாள்.

நேரங்கள் கடந்து போக ... அதிகாலை 3 மணிக்கு கண் விழித்தால் புவனா... அப்போது சஞ்சனாவின் அறைக்கு முன்பு அனைவரும் ஒவ்வொரு விதமாக உட்காரந்த வண்ணம்...‌ உறங்கி இருக்க... உதயா மடியில் மிதுனா உறங்க... உதயாவும் ரத்தம் கொடுத்தது வேகமாக காரில் வந்தது என்று மன அழுத்தம் என்று அவனும் உறங்கி இருந்தான்.. அதே போல் சரண் மடியில் லீனா படுத்து இருந்தாள்.

மிதுன் உதயா அருகில் அமர்ந்தவாறு உறங்கி இருந்தான்.

கர்ணா, லிபின், அழகி மூவரும் அதே வரிசையில் லட்சுமி மாவின் ஐசியூவுக்கு எதிராக அமர்ந்து உறங்கி கொண்டு இருந்தனர்.

ஆனால் சனாதன் மட்டும் சஞ்சனாவின் அறை வாசங அந்த கண்ணாடி வழியாக அவளை பார்த்துக்கொண்டு நின்று கொண்டு இருந்தான்.

புவனாவிற்கு அவன் நிலை நன்றாக புரிந்தது... அப்படி அவனை பார்க்கும் பொழுது தான் கோபப்பட்டதை நினைத்து முதன் முதலில் வருந்தினாள்.

மெதுவாக அவனிடம் சென்று... மாமா என்று மெல்ல கூப்பிட்டாள்... ஆனால் அவன் சிந்தனை முழுவதும் தன்னவளின் நினைவுகள் மட்டும் இருக்க... அவளோடு மனதோடு மனதாக உரையாடிக் கொண்டு இருந்தான் சனாதன்.

மெல்ல அவனை தொட்டு மாமா என்று கூப்பிட... மெதுவாக அவளை திரும்பி பார்த்தவன்.. அப்படியே அவளின் கைகளை பிடித்து கொண்டு... என்னை மன்னித்து விடு மா என்று சொல்லி கண் கலங்கினான்... சரியாக அந்த நேரம் கண் விழித்த உதயா..

புவனாவிடம் மன்னிப்பு கேட்பதை பார்த்து விட்டு... ஐயோ மாமா என்ன பண்றீங்க... உங்களுக்கே தெரியாம நடந்த விஷயத்திற்கு எத்தனை முறை மன்னிப்பு கேட்பீர்கள் அதுவும் நாங்கள் அனைவரும் உங்களைவிட வயதில் சிறியவர்கள் அதுவும் புவனா சின்ன பொண்ணு மாமா அவ கிட்ட கூட மன்னிப்பு கேட்கணுமா விடுங்க மாமா பரவாயில்ல பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னான் உதயா.

உதயா எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது லட்சுமிமாவும் இன்னும் கண் திறக்கவில்லை... இவளும் இப்படி வாடிய மலர் போல் கிடக்கிறாள்... இருவரில் ஒருவர் கூட இன்னும் கண் திறக்காமல் இருப்பது எனக்குள் கோடி முறை ஊசிகளால் குத்துவது போல் இருக்கிறது... என்னால் முடியவில்லை டா என்று உதயாவை கட்டிப்பிடித்துக் கொண்டு அழுக...

சனாதன் அங்கு கயவர்களை தாக்கி தங்களை காப்பாற்றும் போது இருந்த அவனின் கம்பீரமும்... இப்போது குழந்தை போல் அழுகும் இந்த சனாதனை பார்க்கும் போது எத்தனை வித்தியாசம் இன்று மனதிற்குள் வியந்தவள்...

மாமா தயவு செய்து அழுகாதீர்கள் நான்தான் உங்களை தவறாக நினைத்து உங்கள் மீது கோபப்பட்டு விட்டேன் மன்னித்து விடுங்கள் மாமா தயவு செய்து அழுகாதீர்கள் கண்டிப்பாக ரெண்டு பேருமே இன்னும் சிறிது நேரத்தில் கண்விழித்து நம்மோடு பேசுவார்கள் பாருங்கள் என்று அவளும் ஆறுதல் சொல்ல ...

அப்போது தான் உதயா தன் தங்கையை கோபமாக பார்த்து என்ன பண்ணுன என்று கேட்டான்...

அண்ணா மன்னித்துவிடுங்கள் சஞ்சனாவை இப்படி ஒரு கோலத்தில் பார்த்ததும் என்னால் கோபத்தை அடக்க முடியாமல் ரிஸ்வந்தை அடித்துவிட்டேன் அதே சமயம் அந்த அடி மாமாவிற்கு தான் என்பது போல் அவரே ஒரு பார்வையும் பார்த்து விட்டேன் என்று தலை குனிந்த வண்ணம் சொல்ல...

கோபத்தில் தன் தங்கையை அடிக்க கை ஓங்கிய உதயாவை தடுத்து நிறுத்தினான் சனாதன்.

மச்சான் ப்ளீஸ் கோபம் வேண்டாம் ... இங்கு நடக்கும் ஒவ்வொன்றுமே நாம் அனைவரும் ஒருவர் மீது ஒருவர் வைத்து இருக்கும் பாசத்தால் வந்தது... இதை இப்படியே விட்டு விடுங்கள் என்று சொல்லி விட்டு திரும்பி மறுபடியும் தன்னவளை பார்ப்பதற்காக அந்த கண்ணாடி வழியே... அவளைப் பார்த்துக் கொண்டு நின்று இருந்தான் சனாதன்.
புவனாவை அழைத்துக் கொண்டு அதை மருத்துவமனையில் இயங்கும் கேண்டினிற்கு அழைத்து சென்றான் உதயா.


இணைந்திருங்கள்

சொல்லவா... வேண்டாமா...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top