- Thread Author
- #1
95. தர்மலிங்கத்தின் கெஞ்சலும்.. புவனாவின் கோபமும்...
தர்மலிங்கம் வீட்டுக்குள் கோபமாக வர
தன்னிடம் முதன் முதலில் இவ்வளவு கோவப்படும் தன் கணவரை பார்த்து முதலில் பயந்த சரிதா... பிறகு தன்னை சுதரித்துக்கொண்டு அச்சச்சோ என்ன ஆச்சுங்க ஏன் இவ்வளவு கோவப்படுறீங்க இந்தாங்க தண்ணி குடிங்க முதலில் என்று அருகில் இருந்த வாட்டர் பாட்டில் எடுத்து அவரிடம் கொடுக்க...
அவருக்கும் தண்ணீர் தாகம் இருந்ததால் கோபத்தோடு அந்த தண்ணீரை வாங்கி அருந்தி விட்டு, கவிப்பிரியாவும் ஜெகனும் எங்கே என்று கேட்டார்...
இதுவரை தன் கணவரின் கோபம் எதனால் என்றும் தெரியாமலும்.. அதே சமயம் அவரின் முதல் கோபத்தை கண்டு குழம்பி போய் இருந்தவள்.. இப்பொழுது கவிப்பிரியாவின் பெயரை கேட்டதும் சுதாரித்து அழுவது போல் நடிக்க ஆரம்பித்தாள்...
அழுது கொண்டே... நான் என்ன சொல்லுவேன் எப்படி சொல்லுவேன் எனக்கு தெரியவில்லை. ஆனால் சொல்லித்தான் ஆக வேண்டும்... உங்க மனச தைரியப்படுத்திக்கோங்க... அந்த ஓடுகாலி நம்ம வீட்டை விட்டு போய்விட்டாள்.
அதுவும் யாரோ ஒருவனை வீட்டிற்கு வரவைத்து அவனோடு போய்விட்டாள்... அவள் போனதில் இருந்து உங்களை நினைத்து தான் எனக்கும் நம்ம மகன் ஜெகனுக்கும் கவலை. அந்தக் கவலையில் தான் இவ்வளவு நேரமும் சாப்பிடாமல் உறங்காமல் அழுதுக் கொண்டு இருந்தேன்.
ஜெகனும் அவளை தேடி தான் சென்று இருக்கிறான் என்று சொல்லி அழுதாள்....
ஆனால் தர்மலிங்கமும் சரிதாவிற்கு ஓங்கி ஒரு அறை வைத்து விட்டு தன் வீட்டில் டிவியை ஆன் செய்து காண்பிக்க....
அங்கே...
டிவியில் ஜெகன் அரஸ்ட் ஆனதும்.. அதற்கு காரணம் குடும்ப பகை காரணமாக சிலரை கடத்தியதாகவும் அவர்களை கடத்தி சென்ற மயக்கமான நிலையில் வைத்து துன்புறுத்தியதாகவும் சொல்லி நியூஸ் வாசித்துக் கொண்டு இருந்தார்கள்.
இதற்கு எதற்குங்க நீங்கள் என்னை அடித்தீர்கள்.. என்று சரிதா கோபப்பட்டாள்.
ஏண்டி அறிவு கெட்டவளே அங்க அரெஸ்ட் ஆகி இருக்கிறது நம்ம பையன்.. ஆனால் அவன் ஒன்றும் நாட்டிற்கு நல்லது செய்து தர்ணா போராட்டம் எதுவும் நடத்தி அரெஸ்ட் ஆகவில்லை ஒரு குடும்பத்தையே கடத்தி இருக்கிறார் அதற்கு அரஸ்ட் ஆகி இருக்கிறான்...
என்ன டி.. இதெல்லாம் நாலே நாள் ஆடிட்டிங் விஷயமா பெங்களூர் போயிட்டு வருவதற்குள் இங்கு என்ன நடந்து இருக்கிறது... என்ன பண்ணி வச்சிருக்கான் இவன் யாரை டி கடத்தினான். கண்டிப்பா உனக்கு தெரியாம இருக்காது எதற்காக அந்த குடும்பத்தை கடத்தினான் அவர்களுடைய நிலைமை என்ன???. எவ்வளவு பெரியவர்கள் தெரியுமா.?..!!
அவர்களுடைய கம்பெனிகளில் ஒரு பகுதிக்கு மட்டும் அதாவது ஐந்தில் ஒரு பகுதிக்கு மட்டும் நான் ஆடிட்டிங் பண்ணிட்டு இருக்கேன். அப்ப அவர்கள் எவ்வளவு பெரிய ஆட்கள் என்று தெரிகிறதா? எதற்கு.. டி அவர்களோடு இவன் வம்பு வைத்து இருக்கிறான். அது மட்டும் இல்லாமல் அவர்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் கடத்தி இருக்கிறான். என்ன பண்ணி வச்சு இருக்கீங்க இரண்டு பேரும் ஆத்தாளும் மகனும் சேர்ந்து...
அப்படி அந்த வீட்டுப் பையன் தான் நம்ம பொண்ண கூட்டிட்டு போய் இருந்தா.. நமக்கு எவ்ளோ பெரிய ஆப்பர்சூனிட்டி தெரியுமா எப்படி சொதப்பி வச்சிருக்கீங்களே டி... என்று திட்டிக் கொண்டிருக்கும் போதே சரியாக அவர் போனிற்கு ஃபோன் வர... அது அட்டென்ட் பண்ணி பேச பேச அவர் என் முகம் இருண்டு போனது... அதோட தொடர்ந்து நான்கு போன் கால்கள் வர... மொத்த சக்தியும் இழந்தது போல் தொப்பென்று சோபாவில் அமர்ந்தார்.
தன் கணவரின் நிலையை கண்டு பயந்தவள் அவர் அருகில் வந்து... என்னங்க என்ன ஆச்சு சொல்லுங்க ஏன் இப்படி உக்காந்து இருக்கீங்க என்று பயத்தில் அவரையும் உலுக்கி எடுக்க....
போச்சு..!!.. எல்லாம் போச்சு ...!!!.. எல்லாம் நாசமா போச்சு...!!!!... பாவி உன் பையன் பண்ணுன வேலையால் என்னோட மொத்த கிளைன்ட்ஸும் என்னை இனிமேல் ஆடிட்டிங் பண்ண வர வேண்டாம் சொல்லிட்டாங்க... போச்சு... போச்சு எல்லாம் போச்சு.. இனி வெளியே எப்படி போவேன். கடவுளே யாருக்கு நான் என்ன துரோகம் பண்ணினேன்.... எனக்கு ஏன் இப்படி ஒரு அசிங்கம் தண்டனை.... கடவுளே என் வாழ்க்கையின் எதற்கு இப்படி ஒரு பாதிப்பை கொடுத்த... ஏற்கனவே எனக்கு நீ கொடுத்த சோதனைகள் பத்தாதா... அதில் இருந்து மீண்டு வருவதற்கு நான் படாத பாடு பட்டேன். இப்பொழுது மறுபடியும் இவ்வளவு பெரிய இடியை என் தலையில் இறக்கி இருக்கிறாயே என்று கண் கலங்கினார்.
அப்போது ருத்ரதேவ் தர்மலிங்கத்திற்கு போன் செய்தான்...
பயந்து கொண்டே போனை அட்டென்ட் செய்த தர்மலிங்கம்... சார் சொல்லுங்க சார் .. என்னை மன்னித்து விடுங்கள் சார.. நான் ஊரிலேயே இல்லை நான் இப்போது தான் பெங்களூரில் இருந்து வருகிறேன். வந்ததும் தான் விஷயம் என்னவென்று கேள்விப்பட்டேன்...
சத்தியமா இங்க நடந்த பிரச்சனைகளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... என்னோட பிசினஸ்ல காண்டாக்ட்ல இருந்தவங்க அத்தனை பேரும் என்ன ஆடிட்டிங் பண்ண வர வேணாம்னு சொல்லிட்டாங்க ப்ளீஸ் சார் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க சார் என் பையன் பண்ணிய தப்பிற்கு நீங்கள் என்ன தண்டனை வேண்டுமானாலும் வாங்கி கொடுங்கள் நான் அதற்கு எந்த தாட்டையும் சொல்ல மாட்டேன் மறுப்பும் சொல்ல மாட்டேன் ஆனால் எனக்கு என்னுடைய வேலையை மட்டும் திருப்பி வாங்கி கொடுங்கள் சார்....
நான் இதுவரைக்கும் அடுத்தவர்கள் காசுக்கு ஒரு நாளும் ஆசைப்பட்டதே கிடையாது நான் உண்டு என் வேலை உண்டு என்று இருப்பவன் சார். சத்தியமா நான் என் பையனுக்கு வக்காலத்து வாங்கி கொண்டு வரமாட்டேன்... அவன் எந்த காரணத்துக்காக செய்து இருந்தாலும் கடத்தல் பண்ணியது எல்லாம் மிகப்பெரிய தவறு.. அதற்கான தண்டனையை அவனுக்கு நீங்க வாங்கி கொடுங்கள். நான் எந்த குறுக்கீடும் செய்ய மாட்டேன்.... ஆனால் எனக்கு என் வேலையை மட்டும் எனக்கு திருப்பி கொடுத்துவிடுங்கள் சார்... என்று கெஞ்சினார்.
இவ்வளவு நேரமாக தர்மலிங்கம் பேசியதை அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்த ருத்ரா.. சார் நான் சொல்ற ஹாஸ்பிடலுக்கு வந்து சேருங்கள் என்று தாங்கள் இருக்கும் ஹாஸ்பிடல் பெயரை சொல்லி அங்கு வர சொல்லி விட்டு போனை கட் செய்தான்.
மருத்துவமனையில்...
ரிஷ்வந்த், புவனா,லீனா, சரண், லட்சுமி அம்மா, அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது அவர்கள் உடம்பில் எதுவும் இல்லிகளாக ஏதேனும் செய்து இருக்கிறார்களா என்றும்... அதே சமயம் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட மயக்க மருந்தால் அவர்களுக்கு உடல் உறுப்புகளில் ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா என்றும் முழு பரிசோதனை செய்ய சொல்லி இருக்க...
அனைவருக்கும் முழு பரிசோதனை நடைபெற்றுக் கொண்டு இருந்தது அதே நேரம் ரிஷ்வந்த், லீனா, சரண் மூவரும் கண் விழித்து இருந்தாலும்... லட்சுமி மா வயதின் காரணமாகவா இல்லை ஏதோ ஒன்றினால் இன்னும் கண் விழிக்காமல் இருக்க புவனா தான் அவர்களுக்கு அருகிலேயே அமர்ந்து இருந்தாள்.
அப்போது அங்கு டாக்டர் நர்ஸ் அனைவருமே பரபரப்பாக தான் உள்ளே வந்தனர்.
வந்ததுமே புவனாவிடம் சொல்லி விட்டு உடனடியாக லட்சுமி மாவை ஐ சி யூ கூட்டி சென்றனர்...
அவர்களின் பரபரப்பில் கலவரமடைந்தவள் வேகமாக இங்கு வந்ததுமே தன் அண்ணனும் இங்கே தான் இருக்கிறான் என்று அறிந்து கொண்டவள் வேகமாக தன் அண்ணனை தேடி ஓடினாள்...
சரியாக உதயாவும் லட்சுமி மாவை பற்றி அவர்களுடைய பிளட் ரிசல்ட் வந்ததுமே டாக்டர் அவரின் பிரச்சினையை சொல்லி இருந்ததால்... தன் தங்கையை காண தான் ஓடி வந்தான்.
வேகமாக வந்தவள் ஐயோ அண்ணா எதற்கு அம்மாவை இப்படி வேகமாக கூட்டி செல்கிறார்கள்... லக்ஷ்மிமா இன்னும் கண்ணை திறக்கவே இல்லை.
எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது அண்ணா என்று குழந்தை போல் அழுபவளை... என்ன சொல்லி தேற்றுவது ஒன்றும் புரியாமல் தன் தங்கையா அரவணைத்து தட்டிக் கொடுத்துக் கொண்டே இருந்தான்.
அந்த நேரம் சனாதன், மிதுனா, மிதுன், மூவரும் அங்கு வந்து சேர உதயாவோடு அழுது கொண்டு இருக்கும் புவனாவை பார்த்து விட்டு மிதுனாவும் சேர்ந்து அவர்களோடு இணைந்து அழுக ஆரம்பித்தாள்.
சனாதன், மிதுன் இருவரும் சேர்ந்து தான் அவர்கள் மூவரையும் அமைதிப்படுத்தினார்கள்.
சிறிது நேரத்தில் அங்கு இருந்த நாற்காலியில் உதயாவோடு சேர்ந்து இரு பெண்கள் அமர்ந்து கொள்ள, தன் அண்ணனின் தோளில் இரு பக்கமும் சாய்ந்து கொண்ட பெண்மணிகள் அமைதியாக சோர்ந்து போய் அமர்ந்து இருந்தனர்.
டாக்டர்ஸ் அரைமணி நேரம் சிகிச்சைக்கு பிறகு வெளியில் வந்து... அவர்களுக்கான மயக்க மருந்தை செலுத்தும் போது அவர்கள் வயசுக்கு தகுந்தவாறு இல்லாமல் அதிகமாக செலுத்தி விட்டார்கள். அந்த மருந்தின் அளவு அவர்கள் என் ரத்தத்தில் கலந்து விட்டது அதுவும் இல்லாமல் அவர்களுக்கு ஏதோ சிகிச்சைகளும் மேற்கொண்டு இருக்கிறார்கள் அது என்னவென்று தெரியவில்லை பொறுமையாக தான் பரிசோதிக்க முடியும் என்று சொல்ல..
அம்மாவின் உயிருக்கு எதுவும் பாதிப்பு இல்லையே என்று கேட்டார்கள் அனைவருமே..
உயிருக்கு எதுவும் மதிப்பில்லை கவலைப்பட வேண்டாம் அதே சமயம் அவர்கள் கண்விழிக்கவும் நேரம் ஆகும்... எங்க சிஸ்டர்ஸ் பார்த்துக்குவாங்க. நீங்க கவலைப்படாம மற்றவர்களை போய் பாருங்கள் என்று அனைவரையும் அனுப்பி வைத்தார்.
ஆனாலும் புவனாவும் மிதுனாவும் அங்கு இருந்து நகர மறுக்க... அதே நேரம் லீனா, சரண், ரிஷ்வந்த் மூவருமே அங்கு வந்தனர்...
அப்போது தான் அங்கு சஞ்சனா இல்லாததை பார்த்த புவனா எங்கு சஞ்சனா என்று கேட்டாள்.
அனைவருமே சஞ்சனாவே பார்த்துவிட்டு வருவதால் எதுவும் சொல்லாமல் அமைதியாக நிற்க தன் அண்ணனை வேகமாக திரும்பி பார்த்தாள் .. அவனோ கண்களை திறக்க மாட்டேன் என்று அமைதியாக கண் மூடி அமர்ந்து இருந்தான்.
சனாதனை பார்க்க அவனோ ஏதோ சொல்ல முடியாத பரிதவிப்பில் குனிந்தே இருந்தான் தலை நிமிராமல்..
தன் அண்ணன் சனாதன் இருவரின் முகங்களையும் பார்த்த பிறகு ஏதோ தவறாக தோன்ற, ரிஷ்வந்தை பார்த்து போய் சஞ்சனாவை கூட்டிட்டு வாடா என்று சொன்னாள்...
ரிஷ்வந்த் இவ்வளவு நேரம் ஒதுங்கி நின்றவன் ... இப்போது புவனாவின் அருகில் வந்து முதலில் என்னோடு வா என்று அழைத்தான்..
ஏனென்று வார்த்தையால் கேட்கவில்லை ஆனால் கண்களால் வினாவி தன்னவனை பார்க்க...
அவனும் ப்ளீஸ் வாடி என்று கண்களாலே கெஞ்சினான்...
புவனாவும் தன் அண்ணனிடம் இருந்து எழுந்து ரிஷ்வந்த் பின்னே சென்றாள்.
சஞ்சனா இருக்கும் ஐ சி யு விற்கு முன்பு கொண்டு போய் நிறுத்தியவன் அந்த கண்ணாடி வழியே பார்க்க சொல்ல...
புவனாவும் பயந்து கொண்டே பார்த்தாள்.. அங்கே தலையிலும் உடலிலும் கட்டுகள் போட்டு வாடிய மலராக படுத்து இருக்கும்.. சஞ்சனாவை பார்த்த நொடி பளார் என்று அறைந்து இருந்தாள் ரிஷ்வந்த்தை.. அதோடு சனாதனை பார்க்க அந்த அடி தனக்கு தான் என்பதை சொல்லாமல் சொல்லியது போல் இருந்தது... சனாதனுக்கு...
இணைந்திருங்கள்
சொல்லவா... வேண்டாமா...