• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 26, 2025
Messages
101
94. புவனா லீனா இருவரையும் பிணை கைதிகளாக்கும் ஜெகன்...

சனாதன் நடவடிக்கையில் ஜெகனின் நிலை...

ஜெகன் தன் அக்கா கவிப்பிரியா என்றும் தங்களுக்கு அடிமையாக வீட்டில் இருக்க வேண்டும் அதற்கு தடையாக இருந்த ருத்ரா அவன் காலில் வந்து விழுக வேண்டும் இந்த எண்ணத்தில் தான் அவன் இந்த கடத்தலையே நடத்த... தன்னுடைய எண்ணத்தையும் சனாதன் மிதுன் இருவரிடமும் சொல்லிக் கொண்டு... ரிஷ்வந்த் சரண் லட்சுமி மூவரையும் கூட்டிக்கொண்டு செல்லுங்கள் ஆனால் எனக்கு கவி துறையாகவும் ருத்ராவும் வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போது...

சனாதன் மிதுனுக்கு சிக்னல் காட்ட..

இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த மிதுன்.. முதன் முதலாக வாயைத் திறந்து ஏய் என்ன சொல்ற இவங்க மூணு பேர் என்றால் மீதி இருக்கும் புவனா, லீனா இருவரும் எங்கே என்று கேட்டான்.

இப்போது ஜெகன் மிதுனை பார்த்து ஆஹா... டேய் நான் கூட நீங்க ரெண்டு பேரும் சிலை ஆகிட்டீங்களோனு நெனச்சேன் டா பரவால்ல உங்களுக்குள்ள உயிர் இருக்குது என்று நக்கல் அடித்துக் கொண்டே ஆமாம் என்ன கேட்ட... புவனா... லீனாவா... யாரது எனக்கு தெரியாதுப்பா நான் கடத்திட்டு வந்தது இந்த மூணு பேரு தான் என்று சொல்லி கொண்டே தன் ஆட்களை பார்த்து...

ஏன் டா... இவர்கள் சொல்லும் பெயரில் ஏதாவது ஜிகிடிகளை கடத்தினீர்கள் என்று நக்கல் ஆக கேட்க...

கண்ணிமைக்கும் நேரத்தில் எங்கு இருந்தோ வந்த ஒரு அம்பு அவன் வாயில் அலகு குத்தி விட்டு சென்றது...

நொடி பொழுதில் நடந்த நிகழ்வில் வலியில் தடுமாறியவன்... தன் வாயில் துளைத்த அம்பை பிடுங்கி எறிந்து விட்டு பார்த்த நொடி...

எரிக்கும் சூரியனாய் தன் அருகில் நிற்கும் சனாதனை தான்....

ஒரு நொடி பயத்தில் அவன் முகம் முழுவதும் ரத்தம் பாய்ந்து சிவந்து போனது... அதே நேரம் பயத்தில் அவனது வாயில் ஏ... ஏஏ... ஏஏஏஏ... என்று தந்தி அடிக்க...

அவனுக்கு பின்னாடி இருக்கும் அவன் அடியாட்களை பார்த்து... என்னடா தம்பி உங்க அண்ணனுக்கு ஏபிசிடி சொல்ல தெரியாதா?... என்ன டா உங்க அண்ணன் மூஞ்சி இப்படி செவந்து கிடக்கு.. என்ன உங்க அண்ணன் என்னை பார்த்து சைட் அடிக்கிறானா?... ஏன்டா என்னை விட சின்னவனா இருக்க நீ எனக்கு தம்பின்னு நினைச்சா... இப்படி என்னை ஏமாத்திட்டியேடா... நான் கூட இவனை ஆம்பள அப்படின்னு நினைச்சேன்... மிதுன் ... அப்பவும் ருத்ரா சொன்ன நான் தான் நம்பல...ஆனால் இவன் அப்படித் தான் போல என்று குரலில் நக்கலையும் முகத்தில் கோபத்தையும் காட்ட குழம்பி போய் நின்ற ஜெகன்...

கடைசியில் ருத்ரா சொல்லாமல் செய்ததைப் போல் இப்பொழுது இவன் வார்த்தையாலே தன்னை ஆம்பளை இல்லையா என்று கேட்க கோபத்தின் உச்சிக்கு சென்றவன் என்ன செய்கிறோம் என்பதை யோசிக்காமல் சனாதனை தாக்க சென்றான்...

அடிக்க ஓங்கிய கையை அப்படியே பின்பக்கமாக முறுக்கி அவனது பின் முழங்காலில் ஒரு உதை விட அப்படியே மண்டியிட்டு அமர்ந்தான் ஜெகன். அதே சமயம் வலியில் ஆ... என்று கத்தி அலற.. அந்த அறை மட்டும் இல்லாமல் அந்த இடமே அதிர்ந்தது அவன் கத்திய கதறலில்....

இப்போது ஜெகனுக்கு பின்னாடி இருந்த ஆட்கள் சனாதனை தாக்க வர... மிதுன் அவர்களை சண்டையிட்டு தடுத்தான்.

அதே நேரம் தன் கால்களுக்கு கீழே மண்டியிட்டு அமர்ந்து இருந்தவனின் தலை உச்சியில் துப்பாக்கியை வைக்க மற்றவர்கள் அனைவரும் அப்படியே நின்று விட்டனர்.

இப்ப புவனாவும் லீனாவும் இருக்கும் இடத்தை சொல்றியா இல்ல துப்பாக்கியில் இருக்கிற அத்தனை குண்டையும் உன் மூளைக்குள்ளேயே இறக்கட்டுமா என்று கேட்டான் சனாதன்.

டேய் சனாதன் எங்கேயோ இருந்து வந்து... என்னை நீ ரொம்ப சோதிக்கிற.. என் மேல கை வச்ச உன்ன நான் சும்மா விடமாட்டேன் டா... இது அத்தனைக்கும் நீ அனுபவிப்பாய் என்று அப்போதும் கோபமாக பேசிக்கொண்டே அவன் பிடியில் இருந்து தன்னை விடுவிக்க போராடினான்.

சனாதன் சற்றும் யோசிக்காமல் துப்பாக்கியை எடுத்து அங்கு இருந்த ஒரு ரவுடியின் காலில் சுட்டு விட... அவனோ கத்திக்கொண்டே அப்படியே சரிந்தான்...

அடுத்த நொடி வெளியில் இருந்து இரண்டு பேர் வந்து அவனை தூக்கிக் கொண்டு சென்றனர் இதை அனைத்தையும் பார்த்த ஜெகன்...

டேய் என்னைய நீ கொன்றாலும் சரி அந்த இரண்டு சிறுக்கிகளும் இருக்கும் இடத்தை நான் சொல்லவே மாட்டேன்... உன் கைகளுக்கு அந்த இரண்டு சிறுக்கிகளும் கிடைக்கும் பொழுது... சிரஞ்சீவி சின்ன பிணம் ஆக தான் கிடைப்பார்கள் என்று ஜெகன் கத்த...

சற்றும் யோசிக்காமல் அவனை அப்படியே குப்புற தள்ளி அவன் முழங்காலிலே சுட்டு விட்டு... அங்கு சுவரில் இருந்த புகைப்படத்திலும் சுட...

அந்தப் புகைப்படத்தையும் தாண்டி இருந்து ஸ்வீட்சும் ஆன் ஆகி தெரித்து விழுந்தது....

அதற்குள் வெளியே நின்று கொண்டு இருந்த சனாதனனின் ஆட்களும் உள்ளே வர... இங்க இருக்கும் அனைவரையும் அரெஸ்ட் பண்ண சொல்லுங்க என்று சொல்லி விட்டு... மிதுன், சனாதன் மற்றும் ருத்ரா மூன்று பேருமே இப்போது உள்ளே சென்றனர். உள்ளே செல்வதற்கு முன்பு ருத்ரா ஜெகனை பார்த்து ஒரு நக்கல் பார்வை பார்க்க...

ஜெகனின் மனதிற்குள் கொலை வெறி உருவானது... ஆனால் அதற்குள் அவனை அரெஸ்ட் செய்து காவலர்கள் வெளியே இழுத்துச் சென்றனர்.

அவனும் நடக்க முடியாத தன் கால்களோடு இழுத்து இழுத்துச் சென்றான்...

குண்டாடிப்பட்டவர்கள் அனைவரையும் ஜி ஹெச் க்கு அழைத்துச் செல்ல... மற்றவர்களை போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்றனர் ஒரு குரூப்...

அண்டர் கிரவுண்டில் இருந்த அந்த அறைக்கு ஒருவர் பின் ஒருவராக கீழே இறங்க...

அங்கே இருந்த நான்கு தடியர்களும் அடிபட்டு மயங்கி கிடந்தனர்...

அதே சமயம் லீனாவும் புவனாவும் மயங்கிய நிலையிலேயே அமர்ந்து இருந்தனர்...

கீழே இருந்து நால்வரும் மயங்கி கிடப்பதை பார்த்ததுமே சனாதனுக்கு சிரிப்பு வர.. சேரில் அமர்ந்து இருந்த இரண்டு பெண்களையும் பார்த்து விட்டு...

சனாதனோ.. பாவம் டா ரிஷ்வந்த் என்று மிதுன், ருத்ரா இருவரிடமும் சொல்லி சிரிக்க... அவர்களும் வாய் விட்டு சிரித்தனர். அந்த சிரிப்பு சத்தத்தில் எழுந்த இரண்டு பேரும்...

அச்சச்சோ நீங்க தானா பா... நான் கூட மேல இருக்கிற கிறுக்கன்களில் தான் வேற யாரும் வருகிறார்களோ என்று இரண்டு பேரும் மயக்கம் வந்த மாதிரி நடிச்சோம் என்று சொல்ல...

சரி வாங்க அவங்க எல்லாம் போய் சேர வேண்டிய இடத்துக்கு போய் சேர்ந்துட்டாங்க... இவனுங்க உசுரு இருக்கா இல்லையா என்று உதைத்து கொண்டே கேட்க...

எல்லாம் வெத்து வெட்டுங்கப்பா ரெண்டே அடில எல்லாம் மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க என்ன அடி ஆளுங்களோ.... என்ற நக்கல் அடிக்க 5 பேரும் சிரித்துக்கொண்டே மேலே ஏறினார்கள்.

மேலே வந்ததும் சனாதன்,
புவனா, லீனா இருவரையும் பார்த்து உங்களுக்கு உடம்பில் ஏதேனும் அசௌகர்யமாக இருக்கிறதா என்று கேட்டான்... ஏனென்றால் அவர்கள் கொடுத்த மயக்க மருந்து உங்களுக்குள் ஏதேனும் செய்கிறதா என்று கேட்கிறேன் என்று தெளிவாக கேட்டான்.

எனக்கு மயக்கம் முன்னமே தெளிந்து விட்டது... மாமா. ஆனால் லீனா தான் கீழே வந்ததுக்கு அப்புறம் தான் தெரிந்தால் அவளுக்கு எப்படி இருக்கிறது என்று வேணா கேளுங்கள் என்று தன் அக்கா லீனாவை பார்த்து கேட்க...

அவளோ கொஞ்சம் டயர்டாக இருக்கிறது அவ்வளவு தானே தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை என்று சொன்னாள்.

சரி எதுக்கும் ஹாஸ்பிடலில் ஒரு முறை உங்கள் இருவரையும் செக் செய்து விடலாம்..‌ என்று சொல்லி விட்டு அனைவரும் சஞ்சனாவே அட்மிட் செய்து இருக்கும் ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.

அங்கே தான் ரிஷ்வந்த், லட்சுமி மா, சரண் மூவரையுமே ஏற்கனவே அனுப்பி வைத்து இருந்தனர்...

இவர்களும் அங்கே செல்லும் போது சரியாக மறுபடியும் ஒரு புதிய நம்பரில் இருந்து போன் வந்தது.

இது என்ன புது நம்பராக இருக்கிறதே யாருடைய நம்பர் என்று தெரியவில்லையே என்று யோசித்துக் கொண்டே அட்டென்ட் செய்து காதில் வைத்தான் சனாதன்.

அந்தப் பக்கம் இருந்து சொன்ன செய்தியை கேட்டவன்... அடடா அப்படியா என்று அதிர்ச்சியானான்.

ஜெகன் வீட்டில்...

சரிதா ... ஏய்... சரிதா என்று கத்திக்கொண்டே வீட்டிற்குள் வந்தார்... தர்மலிங்கம்.

எப்பவுமே சரிதா என்று கூப்பிட்டுக் கொண்டே வந்தாலும் அதில் ஒரு அமைதி இருக்கும்... என்றுமே தர்மலிங்கம் யாரிடமும் அதிகம் கோபத்தை காட்ட மாட்டார் ஆனால் கோபம் வந்தால் யார் என்ன என்று யோசிக்காமல் கோபத்தை அப்படியே காட்டிவிடுவார். இன்று தான் முதன் முதலாக சரிதாவை கோபமாக கூப்பிட்டுக் கொண்டே உள்ளே வர...

உள்ள கிச்சனில் கவி பிரியா இல்லாமல் தானே சமைத்து சாப்பிடுவதனால் கோபத்தோடு தோசை ஊற்றி சட்னி அரைக்க சோம்பேறித்தனப்பட்டு கொண்டு தோசை பொடி வைத்து சாப்பிட்டுக்கொண்டே கவிப்பிரியாவை திட்டிக் கொண்டு இருந்த சரிதா தன் கணவரின் முதல் கோபத்தை கண்டு...

என்ன இவர் இப்படி கோபமாக நம்மை ஒருநாளும் அழைத்ததே இல்லையே என்ன ஆயிற்று என்று தோசை சாப்பிடக் கொண்டே தட்டோடு எழுந்து ஹாலுக்கு வர...

ஏற்கனவே கோபத்தோடு வந்த தர்மலிங்கத்துக்கு தன் மனைவி சாப்பிட்ட தட்டோடு சாப்பிட்டுக் கொண்டே வந்து மிகவும் பொறுமையாக என்ன என்று கேட்கவும்... கோபத்தில் தட்டை வேகமாக தட்டி விட, அந்தப் பீங்கான் தட்டு தட்டு பறந்து சென்று கீழே விழுந்து உடைந்தது.

தன்னிடம் முதன் முதலில் இவ்வளவு கோவப்படும் தன் கணவரை பார்த்து முதலில் பயந்த சரிதா... பிறகு தன்னை சுதரித்துக்கொண்டு அச்சச்சோ என்ன ஆச்சுங்க ஏன் இவ்வளவு கோவப்படுறீங்க இந்தாங்க தண்ணி குடிங்க முதலில் என்று அருகில் இருந்த வாட்டர் பாட்டில் எடுத்து அவரிடம் கொடுக்க...

அவருக்கும் தண்ணீர் தாகம் இருந்ததால் கோபத்தோடு அந்த தண்ணீரை வாங்கி அருந்தி விட்டு, கவிப்பிரியாவும் ஜெகனும் எங்கே என்று கேட்டார்...

இதுவரை தன் கணவரின் கோபம் எதனால் என்றும் தெரியாமலும்.. அதே சமயம் அவரின் முதல் கோபத்தை கண்டு குழம்பி போய் இருந்தவள்..‌ இப்பொழுது கவிப்பிரியாவின் பெயரை கேட்டதும் சுதாரித்து அழுவது போல் நடிக்க ஆரம்பித்தாள்...

அழுது கொண்டே... நான் என்ன சொல்லுவேன் எப்படி சொல்லுவேன் எனக்கு தெரியவில்லை. ஆனால் சொல்லித்தான் ஆக வேண்டும்... உங்க மனச தைரியப்படுத்திக்கோங்க... அந்த ஓடுகாலி நம்ம வீட்டை விட்டு போய்விட்டாள்.

அதுவும் யாரோ ஒருவனை வீட்டிற்கு வரவைத்து அவனோடு போய்விட்டாள்... அவள் போனதில் இருந்து உங்களை நினைத்து தான் எனக்கும் நம்ம மகன் ஜெகனுக்கும் கவலை. அந்தக் கவலையில் தான் இவ்வளவு நேரமும் சாப்பிடாமல் உறங்காமல் அழுதுக் கொண்டு இருந்தேன்.

ஜெகனும் அவளை தேடி தான் சென்று இருக்கிறான் என்று சொல்லி அழுதாள்....
ஆனால் தர்மலிங்கமும் சரிதாவிற்கு ஓங்கி ஒரு அறை வைத்து விட்டு தன் வீட்டில் டிவியை ஆன் செய்து காண்பிக்க....
அங்கே...
இணைந்திருங்கள்

சொல்லவா... வேண்டாமா...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top