• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 26, 2025
Messages
101
93. கடத்தப்பட்டவர்கள் அறைக்கு வந்து போகும் புதியவன்...

ஜெகனின் கிண்டலும்... அவனின் வலியும்...


ரிஷ்வந்த் புவனா அடைபட்டு இருக்கும் அறை..

முதன் முதலில் மயக்கம் தெளிந்தது புவனாவிற்கு தான்... மயக்கம் தெரிந்தாலும் ஆனால் அவளால் இயல்பாக கண்களை திறந்து என்ன நடக்கிறது என்று பார்க்க முடியவில்லை கண்களில் ஏதோ ஒரு விதமான எரிச்சல் இருக்க .. கண்களை மெதுவாக திறந்து மூடிக்கொண்டு இருந்தாள்.

அப்போது யாரோ இரண்டு தடியர்கள் லட்சுமி அம்மாவை ஸ்ட்ரக்சரில் வைத்து உள்ளே இழுத்து வந்து.. அவரை தூக்கி ஒரு சேரில் கட்டி வைத்தார்கள். அவருடைய தலை தொங்கியவாறு இருந்தது.

புவனாவிற்கு தான் கண்களில் அவரைப் பார்த்ததும் கண்ணீர் வர மனதிற்குள் அழுதாள்.

ஆனால் அதே சமயம் தன்னை ஆராய்ச்சி பண்ணி பார்க்கும் பொழுது தான் தெரிந்தது தலைக்கு கீழே தனக்கும் எந்த ஒரு உணர்வும் இல்லாதது போல் மரத்துப் போய் இருப்பது... மயக்கம் தெளிந்த நேரமாக அவளும் முயற்சிக்கிறாள் தன்னுடைய கை கால்களை அசைப்பதற்கு... ஏனோ அவளால் சிறிது கூட அசைக்க முடியவில்லை.

அமைதியாக அங்கு நடப்பதை கவனிக்க ஆரம்பித்தாள்...

லட்சுமி அம்மாவை தள்ளி கொண்டு வந்தவன்.. டேய் இது பிபி டா... அப்புறம் இந்த பொண்ணு, அந்தப் பையன் இருவரும் ஏ ப்ளஸ் டா.. என்று லீனா சரண் இருவரையும் பார்த்து சொன்னான்.

அப்புறம் அந்தப் பொண்ணு பிபி தாண்டா... அந்தப் பொண்ணுக்கு பக்கத்தில் இருப்பவன் பி மைனஸ் டா என்று சொன்னான்.

ஆமாம் எதுக்கு டா இதையெல்லாம் அண்ணே எடுக்க சொன்னாரு... வர வர அண்ணனோட நடவடிக்கைகள் எல்லாம் முற்றிலும் வித்தியாசமாக இருக்குடா... அண்ணா படித்து இருந்தாலும் கட்ட பஞ்சாயத்து மட்டும் பண்றாரு நினைத்தோம்.. ஆனால் அண்ணா கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி பவுடர் பிசினஸ் பண்ணாரு... அப்புறம் பொண்ணுங்க சப்ளை பண்ணாரு...

இப்ப என்ன என்றால் நம் அண்ணனை பார்க்க நிறைய வெளிநாட்டுக்காரங்க எல்லாம் வராங்க..

அதே மாதிரி நம்ம சின்ன அண்ணனோட அக்காவை தானே கடத்த சொன்னாங்க... இப்ப சம்பந்தமே இல்லாம அவங்களுக்கு தெரிஞ்சவங்க எல்லாம் கடத்த சொல்லி இப்ப இதையெல்லாம் கலெக்ட் பண்ண சொல்றாங்க... அண்ணா ஏதோ பெரிய தப்பு பண்றாருன்னு தெரியுது.. ஆனா என்னனு தான் தெரியல என்று புலம்பினான்.

டேய் மாரி உனக்கு எதுக்கு இந்த வேண்டாத கவலை எல்லாம்.. சொல்ற வேலையை செஞ்சோமா கூலி வாங்குனமா? போய்கிட்டே இருக்க வேண்டியது தான்... யார் என்ன பண்ணா நமக்கு என்ன டா... வந்தது என்று கேட்டான் கூட்டத்தில் ஒருவன்.

அப்படி சொல்லல டா என் பொஞ்சாதி தான் என்கிட்ட ரொம்ப சண்டைக்கு வர்றா.. இந்த மாதிரி நான் பண்ற இந்த வேலை பிடிக்காமல் இதை விட்டுட்டு வா வா என்று.. அண்ணா கிட்ட சொல்லிட்டு அடிதடி எல்லாம் பண்றது இல்ல அண்ணா.. வெளியில் போகலாம் என்று நினைக்கிறேன்.. என் பொண்டாட்டி வீட்டு பக்கமே போய் ஏதாவது பொழப்ப பாத்துகிட்டு வாழ்ந்து கிடலாம் என்று முடிவு எடுத்து இருக்கேன்... அதை எப்படி அண்ணா கிட்ட சொல்றது அப்படின்னு தான் தெரியல...

அண்ணா வேற இப்போது பெரிய பெரிய அசைன்மென்ட் எடுக்குறாரு... கைல காசு புழங்கும் நேரம், அதனால் பரவாயில்லை கொஞ்ச நாள் பொறுத்துக்கடி என்று சொன்னால் அவ பயப்படுறாள் என்ன செய்றதுன்னு புரியல டா என்று தன்னுடைய சகாவிடம் புலம்ப...

அப்போது தன்னுடைய அடையாளங்களை மறைத்து தலை முதல் கால் வரை ஒரு விதமான கருப்பு உடை அணிந்து வந்தான்...

அனைவரையும் பார்க்க அனைவருமே மயக்கத்தில் தான் இருந்தார்கள்.

டேய் மாரி எப்ப இவர்கள் எல்லாம் கண்விழிப்பார்கள் என்று கேட்டான்.

அண்ணே எப்படியும் இன்னும் இரண்டு மணி நேரங்கள் ஆகும்.... என்று மாரி என்பவன் சொன்னான்.

இவனைத் தேடி இவனுடைய ஆட்கள் இங்கு வந்து கொண்டு இருக்கிறார்கள்.

நாம் தெரிந்தோ தெரியாமலோ கொஞ்சம் இந்த முறை மிகப்பெரிய இடத்தில் கை வைத்து விட்டோம். சரி சின்னவன் இங்கு வரும் போது நான் வந்தது ... இது போல் அவர்களுக்கு நான் மருத்துவ பரிசோதனை செய்தது எதுவும் அவனுக்கு தெரியக்கூடாது.

இது முழுக்க முழுக்க அவனுடைய அக்காவிற்கான கடத்தல் நாடகமாக மட்டும் தான் இருக்க வேண்டும் சரியா என்று, தன் ஆட்களை பார்த்து சொல்லி விட்டு அங்கு இருந்து விரைவாக சென்றான்.

அவன் சென்ற சில நிமிடங்களில் ஜெகன் அங்கே வந்தான். என்ன மயக்க மருந்து டா கொடுத்து தொலைஞ்சீங்க... எப்ப போன் பண்ணி கேட்டாலும் எல்லாரும் மயக்கமா இருக்காங்க எல்லாரும் மயக்கமா இருக்காங்க அப்படின்னு சொல்றீங்க...

அந்த ஓடுகாலி கழுதை வேற தப்பிச்சுட்டாடா... அது மட்டும் இல்லாமல் ரொம்ப பாதுகாப்பா பத்திரமா இருக்கா... எனக்கு கேட்கவே கடுப்பா இருக்குது என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே...

சனாதன் தன்னுடைய ஆட்களோடு அங்கு வந்து சேர்ந்தான்.

ஜெகனின் ஆட்கள் வெளியே நின்றிருந்தவர்கள் வேகமாக உள்ளே வந்து... அண்ணா நம்ம இடத்தை சுற்றி ஆட்கள்.. அதாவது வெளி ஆட்கள் இருக்கிறார்கள். எனக்கு தெரிந்து அவர்களைப் பார்க்கும் போது போலீஸ் போல் தோன்றுகிறது என்று சொன்னான்.

அதற்குள் சனாதனின் ஆட்கள் வெளியே நின்று இருந்த அனைவரையும் அடித்து தப்பிக்க விடாமல் கைது செய்து விலங்கிட்டு, ஒரு இடத்தில் அமர வைத்து இருந்தனர் கிட்டத்தட்ட 13 பேர் இருந்தார்கள்...

அதே நேரம் உள்ளே இருந்த ஜெகன் கண்டிப்பாக இந்நேரம் நம் ஆட்கள் அனைவரையும் கைது செய்து இருப்பார்கள் இப்போது என்ன செய்யலாம் என்று ஒரு நொடி யோசித்தவன்...

எனக்கு அந்த ஓடுகாளி என் வீட்டிற்கு வரும் வரை... எனக்கு பிழைய கைதியாக யாராவது ஒருத்தர் கண்டிப்பாக வேண்டும்... இங்கே இருக்கும் ஆட்களில் இதோ இவளையும் இவளையும் நம்மளுடைய அண்டர் கிரவுண்ட் அறைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று சொன்னான் ஜெகன்...

உடனே புவனா, லீனா இருவரையும் வேகமாக அந்த சூழல் நாற்காலிகோடு அந்த அறையின் மூலையில் ஒரு புகைப்படம் இருக்க அதற்கு கீழ் இந்த பட்டனை அழுத்திய அடுத்த நொடி தரை தளத்தில் ஒரு பாதை உருவாக அதில் புவனா லீனா இருவரையும் இழுத்துக் கொண்டு கீழே சென்றனர்...

அதே நேரம் சனாதன் உள்ளே ஒவ்வொரு அறையாக கடந்து ஜெகன் இருக்கும் அறைக்கு வந்து வெளியில் நின்று கொண்டு உள்ளே என நடக்கிறது என்று பார்ப்பதற்காக சிறிது நேரம் அமைதியாக இருக்க இப்போது ஜெகனே தன் ஆட்களிடம் கண்காட்டி கதவை திறந்து விடச் சொன்னான்.

இப்போது நிதானமாக தன்னுடைய ஆட்கள் அனைவரையும் அந்த இடத்தையே சுற்றி வளைத்து நிற்க சொல்லி விட்டு, சனாதன் மிதுன் இருவரும் மட்டும் அந்த அறைக்குள் சென்றனர்.

ஜெகன் அங்கு இருந்த ஒரு சூழல் நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருந்தான்.

அவனுக்கு அருகில் ரிஷ்வந்த், சரண், லட்சுமி மா மூவரும் மயக்கத்தில் இருந்தனர்.

சனாதனை பார்த்த ஜெகன்... டேய் என்ன டா நீ வந்து இருக்க... ஆமாம் கேள்வி பட்டேன் நீ ஏதோ சிங்கப்பூரில் பெரிய போலீஸ் பருப்பாமே.... ஆனா பாரு இது இந்தியா அதுவும் தமிழ்நாட்டுல சென்னை.. இது என் ஏரியா...

என் வீட்டுக்கே வந்து உன் தம்பி என் கூட பொறந்த அந்த ஓடுகாலியே... ஏதோ தேவதை மாதிரி தூக்கிட்டு போவான் அதை பார்த்துட்டு நான் சும்மா இருக்கறதுக்கு என்ன சொம்ப பையன் நெனச்சியா...

எனக்கு அந்த ஓடுகாலி என் வீட்டிற்கு வரவேண்டும்... அப்புறம் என்கிட்ட ஏதோ பெரிய சீன் போட்டுக்கிட்டு தூக்கிட்டு போனான்ல உன் தம்பி ருத்ரா அவன் என் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கணும்... அந்த குடைமிளகாய் மாதிரி ஒன்னு அந்த ஓடுகாலியோட வண்டிய ஓட்டிக்கிட்டு வந்துச்சே.. அதுவும் என் காலில் விழுந்து மன்னிப்பு கேக்கணும் சொல்ல நினைச்சேன் ஆனா பாரு...

அதை யாரோ ஆக்சிடென்ட் பண்ணி தூக்கிட்டாங்கலாமே... அது என்ன இன்னும் உயிரோட இருக்கா இல்ல பூட்ட கேஸ் ஆயிடுச்சா என்று நக்கல் அடித்தான்.

ஜெகனின் பேச்சுகளை கேட்டுக் கொண்டே அந்த அறையில் புவனாவும், லீனாவும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு... ஆனால் அவர்கள் இங்கு இருந்து வெளியே செல்ல வாய்ப்பு இல்லை அவர்கள் இங்கே தான் இருக்க வேண்டும் ஆனால் எங்கு இருக்கிறார்கள் என்று பார்வையை அந்த அறை முழுவதும் விட்டு அலசி ஆராய்ந்து கொண்டு இருந்தான் சமாதன். ஆனால் அவன் பார்வை என்னவோ எதிரில் இருக்கும் ஜெகன் மீது மட்டும் இருப்பதாக தான் தோன்றும்...

மிதுனும் சனாதன் என்ன செய்ய போகிறான் என்பதை பார்ப்பதற்காக அமைதியாக இருந்தான் ஜெகனைப் பேச விட்டு...

தான் இவ்வளவு பேசியும் எதுவும் பேசாமல் தன்னையே பார்த்துக் கொண்டு இருக்கும் அண்ணன் தம்பி இருவரையும் பார்த்து கடுப்பான ஜெகன்...

டேய் அவனுங்களா டா நீங்க... என்னமோ ஃபிகரை சைட் அடிப்பது போல் பார்த்துக் கொண்டே இருக்கிறீர்கள் என்று கேட்டான் ஜெகன்.

ஆனால் இருவரும் இப்போதும் அமைதியாகவே இருக்க கடுப்பான ஜெகன்... உங்களுக்கு வேணும்னா என்னை பார்ப்பதில் ஆசை இருக்கலாம் .. ஆனால் எனக்கு உங்களை பார்க்க பார்க்க ஏதும் இல்லை. கடுப்பு தான் வருகிறது முதலில் இங்கே இருக்கும் இந்த மூன்று வேஸ்ட் பீஸையும் தூக்கிக்கொண்டு இடத்தை காலி பண்ணுங்க... என்று சொன்னான்.

இப்போது சனாதன் மிதுனுக்கு சிக்னல் காட்ட..

இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த மிதுன்.. முதன் முதலாக வாயைத் திறந்து ஏய் என்ன சொல்ற இவங்க மூணு பேர் என்றால் மீதி இருக்கும் புவனா, லீனா இருவரும் எங்கே என்று கேட்டான்.

இப்போது ஜெகன் மிதுனை பார்த்து ஆஹா... டேய் நான் கூட நீங்க ரெண்டு பேரும் சிலை ஆகிட்டீங்களோனு நெனச்சேன் டா பரவால்ல உங்களுக்குள்ள உயிர் இருக்குது என்று நக்கல் அடித்துக் கொண்டே ஆமாம் என்ன கேட்ட... புவனா... லீனாவா... யாரது எனக்கு தெரியாதுப்பா நான் கடத்திட்டு வந்தது இந்த மூணு பேரு தான் என்று சொல்லி கொண்டே தன் ஆட்களை பார்த்து...

ஏன் டா... இவர்கள் சொல்லும் பெயரில் ஏதாவது ஜிகிடிகளை கடத்தினீர்கள் என்று நக்கல் ஆக கேட்க...

கண்ணிமைக்கும் நேரத்தில் எங்கு இருந்தோ வந்த ஒரு அம்பு அவன் வாயில் அலகு குத்தி விட்டு சென்றது...
நொடி பொழுதில் நடந்த நிகழ்வில் வலியில் தடுமாறியவன்... தன் வாயில் துளைத்த அம்பை பிடுங்கி எறிந்து விட்டு பார்த்த நொடி...
எரிக்கும் சூரியனாய் தன் அருகில் நிற்கும் சனாதனை தான்....
இணைந்திருங்கள்

சொல்லவா... வேண்டாமா...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top