- Thread Author
- #1
92. ரிஷ்வந்த், புவனா இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் உதயா ...
அங்கு செல்லும் சனாதன்...
கமிஷனர் அலுவலகத்தில்...
கமிஷனரை வைத்து கவிப்பிரியாவின் திட்டங்களை தெரிந்து கொள்வதற்காக சனாதன் எடுத்த முதல் முயற்சி தோல்வியில் முடிந்தாலும்...
சில விஷயங்களை புரிந்து கொண்டவன்... கமிஷனரை ஒரு பார்வை பார்த்து விட்டு அந்த அறையில் இருந்து வெளியே செல்லும் பொழுது...
கமிஷனர் எழுந்து வெளியே செல்ல நினைக்கையில் அதை தடுத்து நிறுத்தியவன் சாரி சார் நான் சொல்லும் வரை நீங்கள் இந்த அறை விட்டு வெளியில் வர முடியாது வரவும் கூடாது.
உங்களுக்கு தேவையானது அனைத்தும் நேரத்திற்கு உள்ளே வரும் என்று சொல்லி விட்டு திரும்பும் போது,
கமிஷனரோ மிஸ்டர் சனாதன் நீங்கள் இப்படி என்னை அரெஸ்ட் செய்து வைத்ததற்கு எந்த முகாந்திரமும் இல்லை நான் கோர்ட்டுக்கு போவேன்..
எந்த அடிப்படையில் என்னை இப்படி நீங்கள் ஏதோ குற்றவாளி மாதிரி கைது செய்து வைத்து இருக்கிறீர்கள்... என்னை இப்படி விசாரணை செய்வதற்கு உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்று கோபத்தில் வார்த்தைகளை வேகமாக விட்டார்.
உங்க நாட்டு பிரைம் மினிஸ்டர் கிட்ட இருந்து உங்களோட ஹோம் மினிஸ்டர் வரைக்கும் எல்லாத்துக்கும் பர்மிஷன் வாங்கி தான் வச்சிருக்கேன். அது தேவைப்படுற நேரத்துல தேவைப்படுற இடத்துல நான் காட்டுவேன். இப்ப அமைதியாக உட்கார்ந்து இருந்தீங்கனா உங்களோட மரியாதை மிஞ்சும் என்று சொல்லி விட்டு சனாதன் திரும்ப ...
அப்போது கமிஷனர் எஸ்ஐ வடிவேலிடம் கண்காட்டினார். அதை புரிந்து கொண்ட அவன் இப்போது சனாதனிடம் சார் நீங்க யாரா வேணா இருங்க ... எவ்ளோ பெரிய ஆஃபீஸரா வேணா இருங்க... எதற்காக இப்ப எங்க கமிஷனர் சாரையும் என்னையும் இப்படி விசாரணை என்ற பெயரில் ஒரு அறையில் அடைத்து வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டான் வடிவேல்...
பாவம் வடிவேல்... கமிஷனரையே மதிக்கவில்லை அவன் எனும் போது கொஞ்சம் அடக்கி வாசித்து இருக்கலாம்.. விதி யாரை விட்டது...
இப்போது எஸ் ஐ வடிவேலை பார்த்து தன் கை சட்டை பட்டனை கழட்டி தனது முழங்கை வரை மடித்து விட்டவன்...
வடிவேலின் தோளின் மீது கையை போட்டு கொண்டு.. ஆமா வடிவேலு நிறை மாசமா இருக்கும் உன் பொண்டாட்டி அம்மா வீட்டுக்கு அனுப்பி விட்டுட்டு, இன்னைக்கு அவளை பார்க்க போறேன்னு சொல்லி பர்மிஷன் வாங்கி லீவ் எடுத்துக்கிட்டு உன்னோட செட்டப் போட கூட கொடைக்கானல் போக தானே பிளான் பண்ணி அதற்கு இதோ இங்கு நிற்கிற இந்த கமிஷனர் கிட்ட லீவு சொல்ல தானே வந்த என்று கேட்க...
சனாதன் பேச பேச வயிற்றில் வடிவேலுக்கு ஏதேதோ சத்தம் கேட்க ஆரம்பித்தது பயத்தில்...
இப்போது சனாதன் அவனின் பயந்த முகத்தைப் பார்த்து விட்டு, அவன் கன்னத்தில் தட்டி உன் சட்டத்திற்கு வேற ஆள் கிடைப்பாங்க ஆனா உங்க கமிஷனருக்கு உன்னை விட்டா வேற ஆள் கிடைக்க மாட்டாங்க. அதனால நீ என்ன பண்ற நான் சொல்ற வரைக்கும் உன் கமிஷனருக்கு கம்பெனி கொடு ஓகே என்று சொல்லி விட்டு அமைதியாக சென்று விட்டான் சனாதன்.
சென்றவன் திரும்பி ஒரு பார்வை வடிவேல் பார்த்து.. அப்புறம் ரம்யா உனக்கு டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பலாமா வேண்டாமான்னு யோசனை பண்ணிட்டு இருக்கா.. நான் ஏதாவது சஜக்ஷன் சொல்லட்டுமா என்று கேட்டுவிட்டு அழகான சிரிப்பை ஒன்று சிரித்து விட்டு சென்றான் சனாதன்.
சனாதன் சொல்லிச் சென்ற அனைத்து விஷயங்களையும் கேட்ட வடிவேல் பித்து பிடித்தது போல் அப்படியே நின்று கொண்டு இருந்தான்.
கமிஷனர் நிலைமையோ அதற்கு மேலும் இருந்தது.. என்ன இவன் ஒரு சாதாரண எஸ் ஐ யை கூட விடாமல் அவனுடைய அடி ஆழம் வரை நோண்டி எடுத்து வைத்து இருக்கிறான்... யாரிடம் இதனால் நம் குடும்பத்திற்கு ஏதும் ஆபத்து வருமா என்று யோசித்துக் கொண்டு இருந்தார் கமிஷனர்.
வெளியே சென்ற சனாதன் முகம் அப்படியே அமைதியாகவும் அதே சமயம் தீவிர யோசனையோடு.. மீட்டிங் ஹாலுக்கு சென்றான்.
இங்கு நடந்த அனைத்து உரையாடல்களையும் பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் இப்போது சனாதன் அறையில் நுழைந்தும் எதுவும் பேசாமல் அவனேபேச வேண்டும் என்று அமைதியாக காத்திருந்தனர்.
சார் நான் கேட்டு இருந்த நபர்களோட போன் கால் லிஸ்ட் வந்துவிட்டதா என்று கேட்டான் சனாதன்.
ம்ம்.. வந்திருச்சு சனாதன் .. இந்தாங்க என்று எடுத்து நீட்டினார் ஹோம் மினிஸ்டர்.
அதை வாங்கி கையில் வைத்துக் கொண்டு அதில் தனக்கு தேவையானவற்றை ஆராய்ச்சி பண்ணிக் கொண்டு இருக்கும் பொழுது..
ஹோம் மினிஸ்டர் அவருக்கு அதற்கு மேல் பொறுமை இல்லாமல் இப்பொழுது கமிஷனரை கைது செய்தே ஆக வேண்டுமா என்று கேட்டார்.
ஐயோ சார் இங்கே நான் அவரை கைது எல்லாம் செய்யவில்லை. அதே நேரம் அவர் தன் மருமகளிடம் பேசியது எனக்கு நெருடலாக இருக்கிறது.. அவர் ஏதோ அவளுக்கு குறிப்பாக சொல்லி இருக்கிறார்... என்று சனாதன் சொல்ல எப்படி என்று ஹோம் மினிஸ்டர் பார்வையாலே கேட்பது தெரிய அதற்கும் அவனே பதில் சொன்னான் ஏனென்றால் நான் அவரையும் அவள் மருமகளையும் பல தடவை பார்த்திருக்கிறேன். அது மட்டும் அல்லாமல் அவர் ஒரு முறை கூட தன்னுடைய மருமகளை முழுபெயர் சொல்லி அழைத்தது கிடையாது. எப்பவும் வாலு இது மாதிரி செல்ல பெயர் வைத்து தான் சொல்லுவார் பெரும்பாலும்... ஆனால் இப்போது அவர் நான் பேச சொல்லிய உடனே முழு பெயரை சொல்லி பேசியது... எனக்கு நெருடலாக இருக்கிறது. இன்னும் கொஞ்ச நேரம் அவர் யாருடனும் எந்த விதமான தொடர்பும் இல்லாமல் பேச்சு இல்லாமல் நான் சொல்லும் வரை அந்த அறையில் இருக்கட்டும் அவ்வளவு தான்.
அதே போல தான் எஸ் ஐ வடிவேலும்.. இருவரும் இப்போது வெளியில் சென்றார்கள் என்றால் அவர்களே தெரியாமல் மிகப்பெரிய குற்றத்திற்கு துணை போய் விடுவார்கள். இது நாள் வரை அவர்கள் வேலையில் மிகவும் சிறப்பாகவும் நேர்மையாகவும் தான் இருந்து இருக்கிறார்கள்..
வடிவேல் அவருடைய பர்சனல் அது எப்படியோ நமக்கு தேவையில்லாதது ஆனால் தற்சமயம் அவர்களை குழப்புவதற்காக சில விஷயங்களை அவரிடம் பேசி விட்டு வந்தேன். அவ்வளவு தான் மற்றபடி அவர் மனைவிக்கு இங்கு நடப்பது எதுவும் தெரியாது. நான் சொன்னதெல்லாம் சும்மா விளையாட்டுக்கு தான் என்று சொல்லி விட்டு, ..
தன்னுடைய நண்பர்கள் மற்றும் அதிகாரிகளுடன் சேர்ந்து.. அடுத்தடுத்து என்ன வேலைகள் செய்ய வேண்டும் என்ற விஷயங்களை சொல்லி விட்டு.. ஜெகனை பார்ப்பதற்காக சனாதன் தனியாக சென்றான்.
மருத்துவமனையில் லிபின் கொண்டு வந்து சஞ்சனாவின் போனை தர அதில் அவர்களுடைய அம்மா தொடர்ந்து போன் செய்து கொண்டு இருப்பதை பார்த்து விட்டு அனைவரும் கலந்த சற்றும் தாமதிக்காமல் அந்த போன் வாங்கி சொல்லு ஜெ மா... என்ன விஷயம் ஏன் தொடர்ந்து போன் அடித்துக் கொண்டே இருக்கிறீர்கள் என்று சஞ்சனா பேசுவது போல் அழகி பேச அங்கு இருந்து அனைவருமே ஆச்சரியமாக பார்த்தனர்.
உங்க மூணு பேருக்குமே மாத்தி மாத்தி போன் பண்ணிட்டு இருக்கோம். ஆனால் போன் நீங்க யாருமே எடுக்கல அது தான் பயமாயிடுச்சு என்று பதட்டத்தோடு பேசினார் ஜெயா...
ஏன்.. ஏன் இவ்வளவு பதட்டமாக பேசுகிறீர்கள் அங்கு யாருக்கும் என்னவும் ஆகிவிட்டதா என்று படத்தோடு கேட்பது போல் கேட்டாள் அழகி..
இங்கே எந்த பிரச்சினையும் இல்ல டா நீங்கள் யாரும் போன் அட்டென்ட் பண்ணல அதான் பயந்துவிட்டோம். அது மட்டும் இல்லை உதயா வேறு அவன் நண்பனுக்கு எதுவும் உடல்நிலை சரியில்லை என்று சொல்லி அவசரமாக கார் எடுத்துச் சென்று இருக்கிறான்.
நீங்களும் போன் அட்டென்ட் பண்ணவில்லையா? ஒரு மாதிரியாகிவிட்டது அது மட்டுமில்லாமல் லக்ஷ்மி மாவும் கூட போன் அட்டென்ட் பண்ணவே இல்லை சரி ரிஷ்வந்துக்கு கால் பண்ணினா அவனும் போன் அட்டென்ட் பண்ணவில்லை என்று குறைபட்டார் ஜெயா.
ஓஓஓ.. அது வா அம்மா கவலை படாதீர்கள் உங்கள் அனைவருடைய மொபைலுக்கும் நான் இப்போது சில வீடியோக்களை அனுப்புகிறேன் பாருங்கள் என்று சொன்னாள் அழகி.. சஞ்சனாவின் குரலில்.
ஏய் நான் என்ன கேட்கிறேன் நீ என்ன சொல்ற என்ன வீடியோ அனுப்புகிறாய் என்று கேட்டாள் ஜெயா...
அவரிடம் இருந்து போனை வாங்கிய மீனா.. என்னடா அம்மாவே வெறுப்பேத்தி கொண்டு இருக்கிறாய் என்ன ஆச்சு தெளிவாக சொல் என்று சொல்ல ஐயோ சித்தி போனை ஸ்பீக்கரில் போட்டு விடு என்று சொல்லி விட்டு...
நேற்று அழகிக்கு பிறந்தநாள் அதனால் லட்சுமி அம்மாவும் எங்களோடு தான் இருந்தார் அவருடைய போன் பார்ட்டி பண்ணும் போது தண்ணீரில் விழுந்துவிட்டது. அதனால் தான் அவர் போன் எடுக்கவில்லை அதோடு ரிஷ்வந் இன்னும் எந்திரிக்கவே இல்லை...
அதேநேரம் இங்கே சரோஜமாவுக்கு காலில் அடிபட்டு இருக்குல்ல அவங்கள கூட்டிகிட்டு புவனா ஹாஸ்பிட்டல் போயிருக்கா.. அதனால அவள் போன் அட்டென்ட் பண்ணி இருக்க மாட்டான் அவ்வளவு தான் மா.. நானே இப்போதுதான் எழுந்து பிரஷப் ஆகி வருகிறேன் என்று சொன்னாள்.
சரி வீடியோ பாருங்க நான் அனுப்பி வைக்கிறேன் இப்ப நான் போய் அடுத்து என் வேலையை பார்க்க போகிறேன் என்று சொல்லி விட்டு அடுத்து அவர்கள் ஏதேனும் பேசுவதற்கு முன்பு போனை கட் செய்தாள்.
உண்மையில் அனைவரும் ஆச்சரியத்தோடு அவளை பார்த்துக் கொண்டு இருந்தனர்.. அதே நேரம் இப்போது தங்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் அனைத்தையும் சில நொடிகள் மறந்து.. சிறிது மனம் விட்டு சிரித்தனர் ...பிறகு இப்படியே இப்போது சமாளித்து விட்டோம் சீக்கிரம் சஞ்சனா கண் விழிக்க வேண்டும் என்று அனைவரும் இறைவனை வேண்டிக் கொண்டனர்.
அதேநேரம் உதயா தனியாக ஒரு இடத்தில் அமர்ந்து தன்னுடைய நண்பனை வர வைத்து அவனுடைய லேப்டாப்பை எடுத்து வர சொல்லு அந்த லேப்டாப்பில் சில விஷயங்களை செய்து கொண்டு இருந்தான்...
சிறிது நேரத்தில் காட் இட் என்று கத்த சரியாக சனாதனும் உதயாவிற்கு போன் செய்தான்...
மாமா சரியான நேரத்திற்கு தான் கால் செய்து இருக்கிறீர்கள், நான் கண்டுபிடித்து விட்டேன்... புவனாவோட ஜெயினில் இருக்கும் லொகேஷன் போரூர் தாண்டி ஒரு பழைய குடோன் ஒன்றை காட்டுகிறது என்று சொன்னான் உதயா.
ஓகே உதயா... அங்கே அனைவரும் நலமாக தானே இருக்கிறீர்கள் என்று கேட்டான்.
மாமா நீங்க எந்த பிரச்சனையும் இல்ல அனைவரும் பத்திரமாக இருக்கிறார்கள் ஆனால் இப்பொழுது தான் அம்மா சஞ்சனாவிற்கு ஃபோன் செய்து கொண்டே இருக்க.. என்ன செய்வது என்று தடுமாறும் பொழுது, அழகி தான் சரியான நேரத்தில் சஞ்சனா போல் போனில் பேசி நிலைமையை தற்சமயம் சீராக்கியுள்ளாள் என்று சொன்னான்.
ஓகே உதயா எனக்காக கொஞ்ச நேரம் பொறுமையாக இரு. நம் வீட்டில் இருக்கும் அனைவரையும் பத்திரமாக கூட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு எவ்வளவு விரைவில் வர முடியுமோ அவ்வளவு விரைவில் வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு போனை கட் செய்தான் சனாதன்.
இப்போது ஜெகனின் நம்பரையும் ட்ரேஸ் பண்ண சொல்லி இருக்க அவனுடைய லொகேஷனும் போரூர் தாண்டி காட்டவும்
இப்பொழுது தன் ஆட்களுடன் வேகமாக கிளம்பினான் சனாதன்.
இணைந்திருங்கள்
சொல்லவா... வேண்டாமா...