• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 26, 2025
Messages
97
90. உறவுகளின் அன்பும்... ஒற்றுமையும்....

சனாதனின் அதிரடி நடவடிக்கைகளும்....

சனாதன் உதயாவிடம் பேசி விட்டு சஞ்சனாவை பார்க்க அறைக்குள் சென்றான்.

துறு துறுவென்று அலைபாய்ந்து வாய் பேசும் மொழிகளுக்கு உயிர் கொடுக்கும் அவள் கண்கள்....

என் இதழ்கள் ஒட்டவும் வேண்டுமா என்று கேள்வி கேட்பது போல் என் நேரமும் ஏதேனும் பேசிக் கொண்டே இருக்கும் அந்த இதழ்களும்....

அவள் பேசும் போது அவள் காதுகளில் ஆடும் ஜிமிக்கியும்.... அவளின் கைகள் காட்டும் அபிநயங்களும்...
அவளின் ஒவ்வொரு உடல் மொழிகளையும் ரசிக்க வைத்தவள்....

இன்று அமைதியின் உருவமாய்... மருத்துவமனை ஆடை அணிந்து உடல் எங்கும் கட்டுகளும் கட்டையும் மீறி இருக்கும் ரத்த துளிகளும்.... பல அபிநயங்கள் காட்டும் அந்த முகம் இன்று களை இழந்து சோர்ந்து போய் இருக்க....

ஆணவனுக்கு தன் மீதே கோபம் வர வேகமாக அதை விட்டு வெளியில் வந்தவன் சற்றும் யோசிக்காமல் அங்கு இருந்த சுவற்றில் தன் கைகளைக் கொண்டு வேகமாக அடித்துக் கொண்டே இருக்க...

மருந்துகள் வாங்க சென்றிருந்த உதயா வந்து பார்க்க.. ஒரு நொடி அவன் செயலில் ஒன்றும் புரியாமல் விக்கித்து நின்றாலும் மறுகணம் தன் கையில் இருந்த மருந்துகளை பக்கத்தில் இருந்து சேரில் வைத்து விட்டு என்ன செய்கிறீர்கள் என்று வேகமாக அவனை வந்து தடுத்தான்.

அப்போது சரியாக மிதுனாவும் மற்றவர்களும் வந்து சேர்ந்தனர்... அவர்களை எல்லாம் கவனிக்கும் நிலையில் உதயாவும் சனாதனும் இல்லை...
சனாதன் அப்படியே மண்டியிட அவனோடு சேர்ந்து உதயாவும் அமர்ந்து மாமா... மாமா.... என்ன ஆச்சு ஏன் இப்படி அய்யோ பாருங்கள் கையை என்று கையை பார்க்க கை கன்னி போய் இருந்தது....

ஐயோ மச்சான் இதற்கே இப்படி பதட்டப்படுகிறாயே அங்கே போய்.... பார்... அழகோவியமாக சுற்றித்திரிந்தவள் அலங்கோலமாக கிடக்கிறாள். எல்லாம் என் கவனக்குறைவு தானே ... இதுவரை என்னுடைய எந்த ஒரு அசைன்மெண்டிலும் நான் இந்த அளவுக்கு சரிக்கியதே கிடையாது...

ஆனால் இன்று என் உயிர் என் கண் முன்னே... என் உடலை விட்டு பிரிவது போல் இருக்கு டா... டேய் உண்மையை சொல்.. பார்த்து பழகிய இந்த கொஞ்ச நாளிலேயே என்னால் தாங்க முடியவில்லை... செத்து விடனும் என்று தோன்றுகிறது நீ எப்படி டா இப்படி இருக்கிறாய் என்று கேட்டு உதயாவை கன்னத்தில் அடித்துக் கொண்டே இருந்தான்.

ஐயோ மாமா எனக்கு பிறகு நீண்ட நாட்கள் கழித்து பிறந்தவள்... அவள் எனக்கு தங்கை மட்டுமல்ல மகள் தேவதை எல்லாம் அவள் தான்... அவளை இப்படி பார்க்க எனக்கு மட்டும் என்ன மாமா.... நான் உயிர் இருந்தும் உயிரில்லா ஜடம் போல் தான் இருக்கிறேன்.... என்று மனதிற்குள் கதறியவன் வெளியில் சனாதன் அடிக்கும் அடிகள் அனைத்தையும் வாங்கிக் கொண்டவன் கண்களில் கண்ணீர் மட்டும் தாரை தாரையாக வந்தாலும், வாய் மட்டும் திறந்து எதுவும் சொல்லாமல் அவன் அடிக்கட்டும் என்று அமைதியாக இருந்தான் உதயா..

உதயாவை அடிக்க ஆரம்பித்ததுமே மிதுனா வேகமாக சனாதன் அருகில் வந்தவள்... ஐயோ மாமா ப்ளீஸ் அடிக்காதீங்க... அங்கே அண்ணாவை பாருங்க அழுகுறான்... என்று சொல்லி கொண்டே சனாதன் அடிப்பதை நிறுத்தி விட்டு தன் அண்ணனை கட்டிப்பிடித்துக் கொண்டாள்.

இப்போது அவள் கதறி அழுக... சனாதன் இயல்புக்கு வந்தவன் கண்களை துடைத்துக் கொண்டு மற்றவர்கள் அனைவரையும் பார்த்து விட்டு பேசாமல் அமைதியாக எழுந்து நின்றான்.

இவ்வளவு நேரமும் மௌனமாக அழுது கொண்டு இருந்த உதயா... தன் தங்கை கதறி அழுவதை பார்த்து விட்டு, ஐயோ பாப்பா இப்ப எதற்கு இப்படி அழுகிறாய்? நம்ம சஞ்சுவுக்கு எதுவும் ஆகாது கவலைப்படாதே என்று அவளை சமாதானம் படுத்திக் கொண்டு அவனும் அழுது கொண்டே இருந்தான். இரு சிறுவர்களையும் பார்த்த பெரியவர்கள் மனம் கணக்க அவர்கள் அருகில் வந்தவர்கள்... இருவரையும் சமாதானப்படுத்தி அமர வைத்தனர்.

அதற்குள் சனாதன் எங்கோ சென்று விட்டு வந்தவன்.. உதயாவை தனியாக அழைத்துச் சென்று நான் நினைத்தது போலவே நடந்து விட்டது.. கோவிலில் நம் பக்கம் கவனத்தை திசை திருப்பி விட்டு அந்த பக்கம்.. ரிஷ்வந்த் சென்ற காரை கடத்தி விட்டார்கள்.

என்னுடைய சந்தேகம் எல்லாம் கவியை நம்ம கூட சேர்த்துக் கொண்டதால் அவனுடைய தம்பி ஜெகன் இதை எல்லாம் செய்கிறானா?.. இல்லை நான் இங்கு வந்த காரணத்தினால் என்னுடைய எதிரிகள் செய்கிறார்களா ?.. என்று தான் தெரியவில்லை, ஆனால் யாராக இருந்தாலும் சஞ்சு கண் விழிப்பதற்குள் கண்டிப்பாக அனைவரையும் பிடித்து விடுவேன்.

ஆனால் நீ தான் இங்கு இருந்து மிகவும் கவனமாக அனைவரையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்னால் இனி அவர்களை பிடித்து அவர்களுக்கு சரியான தண்டனை நான் கொடுக்கும் வரை இங்கு வரமாட்டேன். உன் மீது உள்ள நம்பிக்கையில் தான் செல்கிறேன் அதே போல் பயப்படாதே கண்டிப்பாக ரிஸ்வந்த் மற்றும் நம் வீட்டு ஆட்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் வராமல் காப்பாற்றி விடுவேன் என்று சொல்லி விட்டு அங்கு வந்து கொண்டு இருந்த தன்னுடைய சகோதரர்களையும் ஜேம்ஸையும் அழைத்துக் கொண்டு செல்ல.. எதற்கும் தன் தம்பிகள் கர்ணா, லிபின் இருவரையும் பார்த்து நீங்கள் இருவரும் இங்கேயே இருங்கள்.

சரிங்க அண்ணா என்று இருவரும் சொல்ல.. ஒரு முறை சஞ்சனாவை பார்த்து விட்டு அவளின் முகம் முழுவதும் கட்டு போட்டு இருக்க... அவளின் கண்களிலும்.... இதழிலும் லேசாக முத்தமிட்டவன்.... லவ் யூ டி... நீ மட்டும் குணமாகி என்னிடம் வந்து சேர், பிறகு இருக்கு உனக்கு.. அப்ப தெரியும் நான் யார் என்று .... சிறுபிள்ளை போல் அவளிடம் சண்டையிட்டு விட்டு... அவளின் கால்களை பிடித்து முத்தம் கொடுத்து விட்டு சாரி டி சனா...என்று சொல்லி விட்டு திரும்பி பார்க்காமல் சென்று விட்டான்.

அவன் வேகமாக வெளியே செல்லவும் அங்கு இருந்த அனைவருக்கும்... விபின் கர்ணா இருவரும் சேர்ந்து... மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் ஹோட்டலில் ரூம் புக் செய்து வைத்து அங்கு அழைத்து சொல்கிறேன் என்று சொல்ல...

மருத்துவமனைக்குள்ளேயே பாதுகாப்பாக ஏதேனும் அறைகள் பார்த்து கேட்டு தங்க வைக்கலாமே என்று கேட்டான் உதயா...

இல்லை உதயா அது சரியா வராது... பேஷன்ட் எல்லாருக்கும் தொந்தரவா இருக்குமே என்று லிபின் சொல்லும் போது, ..

இல்ல நம்ம சரோஜா அம்மாவும் பேஷண்ட் தான்... அவர்களை இங்கே அட்மிட் பண்ணி அவர்களுக்கு துணையாக தாத்தா அப்பாயி இருவரும் இருக்கட்டும்.

அதே போல் கவியும் அட்மிஷன் போட்டு கவிக்கு துணையாக .. அழகியும் மிதுனாவும் இருக்கட்டும்.

இப்படி இருப்பது தான் நல்லது. அது மட்டும் இல்லாமல் தனா மாமா இந்த தளம் முழுவதும் நம் கட்டுப்பாட்டில் இருக்கும் படி தான் வைத்து இருக்கிறார். அனைவரும் நம் கண் எதிரில் இருந்தால் நாம் பயப்படாமல் இருக்கலாம். இல்லையென்றால் இங்கும் அங்கும் ஆக ... நம் கவனத்தை திசை திருப்ப எதிராளிகளுக்கு நாமே இடம் அளித்தது மாதிரி ஆகிவிடும் என்று உதயா சொல்ல... கர்ணாவும் நானும் அதையே தான் நினைத்தேன் உதயா என்று சொல்லி விட்டு லிபின் இங்கேயே அனைவரும் இருப்போம்.

சரி உதயா நீ இங்கே சஞ்சு மா பக்கத்திலேயே இரு.. நாங்கள் சேர்ந்து டாக்டர் இடம் பேசிவிட்டு வருகிறேன் என்று லீதில் கர்ணன் இருவரும் செல்ல.. முத்தாயி மடியில் தலை வைத்து படுத்து இருந்தாள் மிதுனா.

கர்ணா லிபின் இருவரும் சென்ற பிறகு மிதுனாவை பார்த்த உதயாவின் கண்கள் மறுபடியும் மௌனமாக கண்ணீரை வடிக்க..

ஹரிணிக்கு மனம் ஒரு மாதிரி இருக்க... தன் டேபிளை விட்டு எழுந்து அவன் அருகில் வர நினைத்து எழுந்தாள்.. ஆனால் அதற்குள் அழகி உதயாவின் அருகில் வந்து, உதயா வின் கண்களை துடைத்து விட்டு.. அண்ணா அழுகாதீங்க ... இதுவரை வீடியோ காலில் உங்களைப் பார்த்து பேசும் போதெல்லாம் எவ்வளவு அழகாக சிரிப்பீர்கள்... அப்படி சிரிக்கும் அண்ணனை தான் இங்கு இருக்கும் தங்கைகள் அனைவருக்கும் பிடிக்கும். நீங்கள் அழுதீர்கள் என்றால் மிதுனாவின் நிலையை யோசித்துப் பாருங்கள் என்று சொல்லி உதயாவின் கண்களை துடைத்து விட்டு, தான் கொண்டு வந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து குடிக்க கொடுத்தாள்.

அப்போது காரில் இருந்து சஞ்சனாவின் போன் தொடர்ந்து அடித்துக் கொண்டு இருக்கவும் அதை எடுத்து வந்து கொடுத்தான் உதயாவிடம் லிபின்.

அதில் அவனுடைய அம்மா தான் அழைக்கிறார்கள் என்பதை பார்க்க என்ன செய்வதென்று புரியவில்லை...

அங்கு இருந்து அனைவரும் செய்வது அறியாத நிற்க .. யாரும் எதிர்ப்பத வகையில் சஞ்சனாவே போனில் பேசினாள்...

அதே நேரம்..

ரிஷ்வந்த் காரை சிறு விபத்துக்கு உள்ளாக்கி அவர்களை மயக்கமடைய செய்து... அந்த காரில் இருந்த அனைவரையும் கடத்தி இருந்தார்கள்.

அனைவரையும் ஒரே அறையில் தனி தனி சேரில் கட்டி போட்டு வைத்து இருந்தார்கள். அனைவரும் ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தார்கள்... அவர்களுக்கு துணையாக நான்கு தடியர்களும் அந்த அறையில் அமர்ந்து இருந்தார்கள்.

கமிஷனர் அலுவலகம்....

கமிஷனர் அலுவலகமே மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்தது. ஆனால் கமிஷனருக்கு அங்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் தவித்துக் கொண்டு இருந்தார். மதியமே ஹோம் மினிஸ்டர் வந்து அமர்ந்து இருக்க... டெல்லியில் இருந்தும் சிபி ஆபீசர்களும் அதோடு வெளிநாட்டில் இருந்தும் சில ஆபீஸர்கள் வந்து அமர்ந்து ஏதோ முக்கியமாக பேசிக் கொண்டே இருக்க...

பொறுமை இழந்து போன சிட்டி கமிஷனர்... தனக்கு அருகில் இருந்த தனக்கு விசுவாசமாக இருக்கும் எஸ்ஐயை அழைத்து.. யோவ் எஸ்ஐ என்ன தான் யா உள்ளே நடக்குது. இது என்னோட ஆபீஸ் தானா....!!???.. இல்ல எனக்கு ஒன்னும் புரியல ஹோம் மினிஸ்டர் வந்ததில் இருந்து இப்ப வரைக்கும் உள்ளே என்ன நடக்குது என்று ஒன்னும் புரியவில்லை...

சிபிஐ ஆபீசர்கள் மட்டும் இல்லாமல் வெளிநாட்டில் இருந்து எல்லாம் எதற்கு ஆபிஸர்ஸ் வந்து இருக்கிறார்கள்... என்று புலம்பி கொண்டு இருக்கும் போது புயல் போல் வேகமாக வந்தான் சனாதன்.

சனாதன் தன்னை தான் பார்க்க வருகிறான் என்று நினைத்து கமிஷனர்... ஹலோ சனாதன் என்ன இந்த பக்கம், ஏதாவது கம்ப்ளைன்ட் கொடுக்க வேண்டுமா என்று கேட்க...

கமிஷனரை ஒரே ஒரு நொடி ஒரு பார்வை பார்த்து விட்டு... எதுவும் பேசாமல் ஹோம் மினிஸ்டர் இருந்த அறைக்குள் நுழைந்தான்.

சனாதனன் இந்த நடவடிக்கையில் மேலும் குழம்பிப்போன கமிஷனர்... இதற்கும் தன் மருமகள் கவிப்பிரியாவிடம் இதைப் பற்றி சொல்லி வைப்போம் என்று தன்னுடைய போனை எடுக்க...

சரியாக இரண்டு காவலர்கள் வந்து கமிஷனரையும் கமிஷனருக்கு அருகில் இருந்த எஸ்ஐ, இருவரையும் ஒரு அறைக்கு அழைத்துச் சென்றனர்.

அவர்கள் இருவரிடமும் இருந்த செல்போன்கள் பறிக்கப்பட்டு, கமிஷனர் அலுவலகத்தில் ஒரு அறையில் இருவரும் விசாரணை கைதிகள் போல அமர வைக்கப்பட்டு இருந்தனர்.


இணைந்திருங்கள்

செல்லவா... வேண்டாமா...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top