- Thread Author
- #1
85. மருத்துவமனையில் சனாதன் உதயா சந்திப்பு....
பழனியின் உள்நோக்கம் தெரியாமல் பழனியோடு இணைந்து பிரியா செய்யும் செயல்..
திருச்சியில்...
தன் அப்பாவிடம் மட்டும் நான் என் நண்பன் ஒருவருக்கு ரத்தம் கொடுப்பதற்காக வெளியூர் செல்கிறேன் என்று சொல்லி விட்டு உதயா கிளம்ப...
அவன் முகத்தில் இருந்த தீவிரத்தில் எதுவும் கேட்காமல் காரை நிதானமாக ஊட்டி செல் உதயா என்று சொல்லி மட்டும் அனுப்பி வைத்தார் அவனுடைய தந்தை லிங்கம்.
தன் தந்தையிடம் சரி பா ... ஆனால் நான் வரை இரண்டு நாட்கள் ஆகும்... என்று சொல்லியவன் வீட்டில் என்று இழுக்க....
நான் சொல்லி கொள்கிறேன்... ஆனால் நீ மட்டும் நிதானமாக வண்டி ஓட்டி செல் என்று அனுப்பி வைத்தார்.
தன் தந்தையிடம் சரி என்று சொல்லியவன்... சிட்டியை தாண்டும் வரை அமைதியாக வந்தவன் பைபாஸ் ஏரியா வந்த பிறகு... அதிவேகமாக காரை செலுத்தினான்.... வரும் வழியில் தன் தங்கையின் பிளட் குரூப் சார்ந்த இரண்டு நண்பர்களையும் அழைத்துக் கொண்டு... புயல் போல் காரை ஓட்டிக் கொண்டு வந்தான்.
சிட்டி உள்ளே வந்ததும் தான் சிறிது நிதானத்திற்கு வந்து பொறுமையாக ஒட்டியவன்.. தனா சொல்லி இருந்த மருத்துவமனைக்கு வேகமாக வந்து சேர்ந்தான். கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரத்தில் வந்து சேர்ந்து இருந்தான்.
காரில் இருந்த மற்ற இரண்டு நண்பர்களுக்கும் காரில் இருந்து இறகுவதற்கு பத்து நிமிடங்கள் ஆனது... அந்த அளவுக்கு அவர்களுக்கு தலை சுற்றலும் உடல் நடுக்கவும் இருந்தது.
காரை நிறுத்தி ரிசிப்ஷனில் எப்படி செல்ல வேண்டும் என்பதை மட்டும் கேட்டு விட்டு, எதிரில் யார் வருகிறார்கள் வரவில்லை என்று எதையும் யோசிக்காமல் வேகமாக தனாவிடம் விரைந்து சென்றான்.
தனா நின்ற இடத்திலேயே மறுபடியும் வந்து நின்று கொண்டு ஐசீயூ கதவு திறப்பதற்காக தன் பார்வையை அங்கேயே வைத்து... அவன் கண்களில் மட்டுமே உயிர் இருப்பது போல்... நிலையாக நின்றான்.
அவ்வளவு வேகமாக வந்த உதயா... தனா நின்ற கோலத்தை பார்த்து விட்டு... அமைதியாக அவன் அருகில் சென்று நிற்க...
அவன் எங்கே உதயாவை கவனித்தான்.... இமைக்காத அந்த விழிகளும் ... அசையாது நிற்கும் அவனின் தோரணையும் பார்த்து உதயா மிகவும் பயந்து போனான்... உதயாவும் பத்து நிமிஷம் பொறுத்து இருந்து பார்ப்போம் என்று நினைத்து அமைதியாய் நிற்க....
உதயாவின் அருகில் ஒரு நர்ஸ் வந்து... எக்ஸ்கியூஸ் மீ நீங்கள் இவருக்கு சொந்தமா என்று கேட்டாள்.
ஆமாம்.. என் மாமா என்று சொன்னான்.
அப்போ உள்ளே இருப்பது.. என் தங்கை சஞ்சனா. ப்ளீஸ் சிஸ்டர் இங்க என்ன நடக்குது சொல்லுங்கள்... நான் வந்ததில் இருந்து பார்க்கிறேன் மாமா ஏதோ மரம் போல் அப்படியே நிற்கிறார்.. என்ன ஆச்சு சஞ்சனா உயிருக்கு எதுவும் ஆபத்தா என்று அந்த வார்த்தையை கேட்பதற்குள் தவியாக தவித்து போனான் உதயா...
சார் உங்க தங்கையை இங்க கொண்டு வரும் போது ஹெவி பிளட் லாஸ்.. இப்போது அவரின் குரூப் சேர்ந்த பிளட் இங்கு இருந்ததால் சிகிச்சை நடந்து கொண்டு இருக்கிறது. ஆனால் அந்த ரத்தம் பத்தாவது இன்னும் குறைந்தது நான்கு யூனிட்டுகள் தேவைப்படும் என்று சொல்ல...
என்ன டாக்டர் சொல்கிறீர்கள் அவ்வளவு ரத்தம் தேவைப்படுமா?.. அப்போ என் தங்கை நிலைமை என்ன என்று கதறினான்.
எவ்வளவோ பேசண்டுகளையும் அவர்களின் உறவுகளையும் பார்த்த அந்த செவிலிப் பெண்... சார் கொஞ்சம் பொறுமையாக இருங்கள். பதட்டப்படாதீர்கள் .... உங்கள் பெட்ரூப் என்ன என்று கேட்டாள்.
அதன் பிறகு தான் தன் தலையில் அடித்துக் கொண்டவன் அய்யோ என்னுடைய ரத்தமும் அதே வகை தான் தயவு செய்து எடுத்துக் கொள்ளுங்கள் என் அன்பர்களை அழைத்து வந்திருக்கிறேன் எடுத்துக் கொள்ளுங்கள் என்று அப்பொழுதுதான் திரும்பிப் பார்க்க அவன் நண்பர்கள் இருவரும் அங்கு வந்து சேர்ந்தனர்.
பிறகு மூவரிடமும் தேவையான ரத்தத்தை எடுத்துக் கொள்ள... சஞ்சனாவின் சிகிச்சைக்கு தேவையான இரத்தமும் கிடைத்தது.
ரத்தம் கொடுத்து விட்டு அங்கு ஓய்வெடுக்க சொல்ல... தன் நண்பர்கள் இருவரையும் பார்த்து அவர்களுக்கு ஜூஸ் வாங்கி கொடுத்தவன் .... தனக்கு கொடுத்த ஜூசையும் அவர்களிடமே கொடுத்து விட்டு, ரொம்ப நன்றி டா என்று சொல்ல அவர்கள் அடி வாங்க போற உதயா நீ முதலில் போய் பாப்பா வை பாரு என்று சொல்ல... கலங்கிய விழிகளுடன் தனாவிடம் வந்து சேர்ந்தான்.
வந்து பார்க்க தான் வந்த போது எப்படி நின்று கொண்டு இருந்தானோ அதே போலவே இப்போதும் நின்று கொண்டு இருப்பதை பார்த்து விட்டு... தனாவின் அருகில் வர,
அப்போது அங்கு வந்த அந்த சிஸ்டர்... சார் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க அவர் வந்ததில் இருந்து ஒரே மாதிரி நின்று கொண்டே இருக்கிறார். அவரிடம் அசைவுகளே அதிகம் இல்லை.. இப்படியே அவர் இருந்தார் என்றால் ஒன்று .. மனம் பேதலித்து போகும்.. இல்லை என்றால் ஒரு சமயம் பாரலைஸ் கூட ஆகலாம்... எதுவும் நடக்கலாம்.. அவரை சமாதானம் படுத்துங்கள் என்று சொன்னாள்.
உதயாவும் அந்த நர்சிடம் தேங்க்யூ சிஸ்டர் கண்டிப்பாக நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லியவன், வராத புன்னகையை அவரிடம் கடினப்பட்டு சிறிதாக சிரித்து விட்டு..
இப்போது கடவுளே நாமும் கலங்கினால் மிகவும் சிரமமாக போய்விடும். இன்னும் வேறு யாருக்கும் தெரியாது போல் தோன்றுகிறது. அப்படி இருக்க நாம் தான் தைரியமாக இருக்க வேண்டும் என்று, தன்னை சமன்படுத்திக் கொண்டு உதயா... தனாவின் அருகில் சென்று மாமா என்று அழைத்தான்.
சனாதனும் எந்தவித எதிர்வினையும் ஆற்றாமல் அப்படியே இருக்க...
சிறிதும் யோசிக்காமல் அவனை கட்டிப்பிடித்துக் கொண்டு மாமா ப்ளீஸ் இப்படியே நிற்காதீர்கள்... எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது என்று அவனை கட்டி பிடித்துக் கொண்டு அழுக...
தன்னை விட சிறிது உயரமாக இருந்தாலும் உதயா ... குழந்தை போல் தன்னை கட்டி பிடித்துக் கொண்டு அழுகவும் ... அப்போது தான் சுயம் வந்தாலும் சனாதனும் அவனை இறுக்கி கட்டி பிடித்துக் கொண்டான். சனாதனின் கண்ணீர் தன் சட்டையை நனைக்க, இவ்வளவு நேரமும் சனாதன் நின்று கொண்டு இருந்ததை நர்ஸ் சொல்லியதால் சிறிது நேரம் அழட்டும் என்று அமைதியாக சனாதனுக்கு ஆதரவாக அப்படியே நின்றான் உதயா...
சனாதனால் அழுகையை அடக்க முடியாமல் தடுமாறிக் கொண்டு இருக்க.. இப்படியே விட்டால் சரியாக அது என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க வேண்டும் அதற்கு இவர் நார்மலாக இருந்தால் மட்டும் தான் முடியும் என்று நினைத்து உதயா தன்னை சமன்படுத்திக் கொண்டு தைரியமாக... மாமா ப்ளீஸ் அழுகாதீர்கள் என்று சொல்லி.. தனாவை தன்னிடம் இருந்து பிரித்து அப்படியே அங்கு இருந்த சேரில் அமர வைத்து... அவனின் கைகளை தன் கைகளுக்குள் புதைத்துக் கொண்டான்.
சனாதனம் சிறிது நேரம் அழுது கொண்டே அமர்ந்து இருந்தவன்... ஐயோ உதயா தன்னை விட சிறியவனாக இருந்தாலும் இவ்வளவு பொறுப்பாக இருக்கும் பொழுது நாம் இப்படி அழுது கொண்டே இருந்தால் அவன் என்ன செய்வான் பாவம் என்று ... தன்னுடைய வேதனையை தாங்கிக் கொண்டு, இப்பொழுது உதயாவை நிமிர்ந்து பார்த்தான்.
ஆனால் அடுத்த நொடி அவனின் கண்களில் இருந்த தவிப்பை கண்டதும்... அப்படியே சேரில் இருந்து இறங்கி அவன் கால்களை கட்டிக்கொண்டு என்னை மன்னித்து விடு உதயா... சனுவை நான் பத்திரமாக பார்த்துக் கொள்ளாமல் போய் விட்டேன் என்று கதறி அழுக.... ஐயோ மாமா என்ன பண்றீங்க.... ப்ளீஸ் மாமா முதலில் எழுந்திருங்கள் என்று பதறிப் போய் எழுந்து சனாதனையை தூக்கி விட்டான்.
அப்போது அங்கு வந்த நர்ஸ்... சார் இவர் இங்கு வந்ததுமே இந்த தளம் முழுவதும் இவர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டார். ஆனாலும் ஐசீயூவில் இன்னும் இரண்டு பேஷண்ட்கள் இருக்கிறார்கள்... இவர் இப்படி கதறி அழுவது இவ்வளவு நேரம் அவர் இருந்த மனநிலைக்கு சரியாக ஒரு தீர்வு தான்... அதனால் தான் நானும் அவர் அழுகட்டும் என்று சிறிது நேரம் அமைதியாக இருந்தேன். ஆனால் சார் புரிந்து கொள்ளுங்கள் அங்கே ஆபரேஷன் நடந்து கொண்டு இருக்கு... உங்கள் வீட்டுப் பெண்ணுக்கும் நீங்கள் இங்கு அழுது கொண்டே இருப்பது அவர்களின் மனதையும் பாதிக்கும். தைரியமாக கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்று சொல்ல...
இரண்டு ஆண்களுமே தங்கள் பரிதவிப்பை தங்களுக்குள் பூட்டி கொண்டு அமைதியாக அமர்ந்தனர்.
இருவரையும் கண்ட அந்த நர்ஸ் மனதிற்குள் எப்பேர்பட்ட மனிதர்கள் இவர்கள் என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை அவளால்.. அதே சமயம் உள்ளே இருக்கும் அந்த பெண்ணை நினைத்தும் பெருமையாக இருந்தது... இப்படி ஒரு பெண்ணிற்காக இருவரும் இந்த அளவுக்கு வருத்தப்படுகிறார்கள் என்றால் அந்தப் பெண் எந்த அளவிற்கு இவர்கள் மனதில் இடம் பிடித்து இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே போய் தன் இடத்தில் அமர்ந்தாள். பாவம் அவள் அறியவில்லை அவளுக்காக அவளின் நிலைமை தெரிந்தால் கலங்கி துடிக்கும் உறவுகள் எத்தனை என்று...
அதே நேரம் பிரியா பழனியிடம்... மாமா சத்தியமா சொல்றேன் என்னால் முடியலை... அந்த அன்னாடங்காச்சி சிறுக்கியை அந்த ருத்ரா தூக்குவதும்... கொஞ்சுவதும் எனக்கு பார்க்க முடியவில்லை. எனக்கு அப்படியே பெட்ரோலை உடம்பு முழுவதும் ஊற்றி கொளுத்திக் கொள்வது போல் இருக்கிறது.... அதுவும் அவனின் காரில் அவளை வைத்து நகர் வலம் வருவான் என்று நினைக்கும் போதே எனக்கு அப்படியே ஜிவ்வென்று இருக்கிறது என்று பிரியா புலம்பி கொண்டு இருந்தாள்...
ஆனால் பழனியோ ஆமாம் இவளுக்கு அந்த ருத்ராவை முதலில் பிடிக்குமா?... இல்லை அவன் வைத்து இருக்கும் காரை ரொம்ப பிடிக்குமா?.. என்று மனதிற்குள் கேலியாக நினைத்துக் கொண்டு, வெளியில் கண்ணு நீ ஏன் கவலைப் படுற... அதான் அந்த காரில் பாம் செட் பண்ணி விட்டேனே... பிறகு என்ன? ... இன்று இல்லை என்றாலும் எப்படியும் அந்த காரை எடுத்துக் கொண்டு வெளியில் செல்லும் போது அந்த காரில் இரண்டாம் முறையாக அவன் போட போகும் பிரேக்... அது அவனுக்கு மட்டும் இல்லாமல் அந்த காருக்குள் இருப்பவர்களுக்கும் அதே சமயம் அந்த காருக்கும் கடைசி யாத்திரை அது தான்.... கவலையே படாமல் நீ ஜாலியாக இரு...
உனக்கு கிடைக்காத எதுவும் வேறு யாருக்கும் இல்லை என்று அவளை உசுப்பேற்றி விட்டுக் கொண்டு இருந்தான் அந்த கிழ நரி....
அதே நேரம் மருத்துவமனையில் சஞ்சனாவின் சிகிச்சை அறையில்...
இணைந்திருங்கள்
சொல்லவா... வேண்டாமா...