- Thread Author
- #1
84. சஞ்சனாவிற்கு வரும் ஆபத்து... உதயாவின் சென்னை வருகை....
சஞ்சனா சனாதனை பார்த்து உங்களுக்கு என்னை முன்னே வைத்து வண்டி ஓட்ட தெரியுமா? தெரியாதா? என்று கிண்டல் பேச அவன் பைக்கை ஓட்டிய வேகத்தில்...
அடப்பாவி புருஷா?.. உன்ன கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிக்கணும் போலவே என்று புலம்பிக்கொண்டு இருந்தவளை பார்த்து...
ஏண்டி லவ் பண்றதையவே இன்னும் முறையா நம்ம இருவரும் சேர்ந்து ஒரு முறை கூட சொல்லிக் கொள்ளவில்லை.
அதற்குள் என்னை நீ எத்தனையோ முறை பெருசா சொல்லிட்ட நானும் உன்னை பொண்டாட்டி சொல்லிட்டேன்... இப்ப வந்து இப்படி பொசுக்குன்னு கல்யாணம் பண்ணிக்கனுமா என்று யோசிக்கிறேன் அப்படின்னு சொல்ற... அவ்வளவு மொக்கையா வா நான் இருக்கேன்... என்று பாவமாக கேட்க...
சஞ்சனாவும் சனாதனை பார்த்து சிரித்துக் கொண்டே அவன் அருகில் நெருங்கி அமர்ந்து இருந்தவள்....
இப்போது அவனிடம் இருந்து மெல்ல விலக...
இப்ப நீ எதற்கு என்னிடம் இருந்து விலகி இறங்கிப் போகப் பார்கிறாய் என்று கேட்டான் சனாதன்.
ஆனால் அவனை விட்டு இறங்கியவளோ....
அதுவா ... அது... வந்து... என்ற இழுத்துக் கொண்டே பின்னாடி அவனைப் பார்த்துக் கொண்டே நகர்ந்து சென்று கொண்டே பேசினாள்... அதாவது ஹோம் மினிஸ்டர், பெரிய ஆபீசர்ஸ் என்று பில்டப் எல்லாம் பார்த்து... ஒரு நிமிடம் ஜெர்க் ஆனேன்.... ஆனால் இந்த சனு மாமா.... என்னோட..... என்னோட... ஃபேவரிட் மாக்கான் என்று சொல்லிக்கொண்டே வேகமாக திரும்பி ஓட எத்தனிக்க...
சஞ்சனாவை பிடிப்பதற்காக அவனும் வண்டியை நிறுத்தி ஸ்டாண்ட் போட்டு விட்டு திரும்புவதற்குள் நொடி பொழுதில் எதிரில் வந்த லாரி மோதி சஞ்சனா தூக்கி எறியப்பட்டாள்.
சரியாக அவளை தரையில் விழாது கையில் ஏந்தியவன்.... கையில் விழுந்தவளோ கண்களை மூடப் போகும் தருணம்.. தன் மாக்கானை பார்த்து ஐ லவ் யூ மாக்கான் என்று சொல்லி விட்டு கண்களை மூடினாள்.
அவளின் முகத்தில் வழிந்த ரத்தத்தை பார்த்துக் கொண்டு இருந்தவனுக்கு... அந்த நிலையிலும் அவள் தன்னிடம் காதல் சொன்ன விதத்தை நினைத்து அழாமல் இருக்க முடியவில்லை... அப்படியே அவளை தன் நெஞ்சோடு அனைத்து கத்தி கதற அந்த இடத்தில் மனிதர்கள் யாரும் இல்லை என்றாலும் அங்கு இருந்த மரங்களும் பறவைகளும் அவன் கத்தி கதறிய சத்தத்தில்... மரங்கள் அமைதியாக அவனின் துயரத்தில் பங்கு பெற... பறவைகளோ அவனை சுற்றி கத்தி கூச்சலிட்டு தங்களுடைய பரிதவிப்பை சொல்லியது..
சில வினாடிகள் மட்டுமே கத்தி... கதறியவன் சட்டென்று யோசனையோடு தன் ஆட்களுக்கு போன் செய்து வர சொல்லி விட்டு ... அவர்களுக்காக காத்து இருக்காமல்... அவர்கள் வருவதற்கு முன்பே தன்னவளை தன் மடியின் மீது அமர வைத்து வண்டியை ஸ்டார்ட் செய்தவன்.... அவளின் முகம் அவன் முகத்தோடு உரசி ... அப்படியே அவன் நெஞ்சில் துவண்டு விழ...
அவன் கண்களை மறைக்கும் கண்ணீர் துளிகளில் அவளின் ரத்த துளிகளும் கலக்க அதை துடைத்துக் கொண்டே...
சனா.... ஏய் சனா... எழுந்திரிடி... மயக்கம் போடாதடி... இதெல்லாம் சரியா நீ மட்டும் என்னிடம் காதலை சொன்ன.. நான் உன்னிடம் காதல் சொல்வதற்குள் எப்படி நீ மயக்கம் போடலாம்... என்று அவள் கன்னத்தை தட்டி எழுப்பி கொண்டே வண்டியை வேகமாக ஓட்டினாலும்.... அவள் மயக்கத்தில் நிதானம் இல்லாமல் அவன் மீது அவள் சரிய... அவளை இறுக்கி கட்டி அணைத்துக் கொண்டு சஞ்சனா இப்படி பண்ணாத டி... ப்ளீஸ் எழுந்துக்கோ டி... நீ இல்லை என்றால் நான் என்ன செய்வேன்.... இங்க பாரு டி என்று அவளுடன் பேசிக் கொண்டே வண்டியை ஓட்டிக் கொண்டு சிட்டிக்கு அருகில் வர... அவனின் ஆட்கள் ஆம்புலன்ஸ்க்கு தேவையான டாக்டர்ஸ் உதவி யோடு வந்து சேர்ந்தனர்.
அப்படியே அவளை ஆம்புலன்சில் அவனே தூக்கிக்கொண்டு ஏறினான்.
ஸ்ட்ரெக்ஷரில் படுக்க வைக்க டாக்டர்ஸ் செக் செய்து விட்டு, தலையிலும் நெஞ்சிலும் பலமாக அடிபட்டு இருக்கிறது. ரத்தமும் அதிகமாக வெளியேறிக் கொண்டு இருக்கிறது... இவர்களுடைய ரத்தம் என்ன வகை என்று உங்களுக்கு தெரியுமா என்று கேட்டார்கள்..
ஒரு நிமிஷம் டாக்டர் என்று உடனடியாக உதவயாவுக்கு போன் செய்தான்.
கால் அட்டென்ட் செய்த உதயா சொல்லுங்க மாமா என்ன விஷயம் என்று கேட்டான்...
உதயா நான் கேட்பதற்கு பதட்டப்படாமல் முதலில் பதில் சொல். வீட்டில் யாருக்கும் எதுவும் தகவல் தெரிவிக்க வேண்டாம். எப்படியாவது எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கிளம்பி, சென்னைக்கு நீ மட்டும் வா.. வீட்டில் யாரிடமும் எதுவும் சொல்ல வேண்டாம். சென்னைக்கு வருவதற்கு வேறு எதையாவது காரணம் சொல்லி விட்டு வா. என்னை சந்திக்க வருவதை சொல்லாதே என்று சொல்லி விட்டு, அதேபோல் இங்கு இருக்கும் மற்றவர்கள் யாரிடமும் எந்த போனும் பேசி எதுவும் கேட்காதே நான் சொல்லும் இடத்திற்கு வந்து சேர். சஞ்சனாவின் பிளட் குரூப் என்ன என்று கேட்டான் சனாதன்.
உதயாவும் சனாதன் சொல்வதில் இருந்தே அங்கு என்ன சூழ்நிலை என்பதை புரிந்து கொண்டவன்... மாமா பயப்படாமல் இருங்கள்.. சஞ்சுவுக்கு ஏ1 பாசிட்டிவ் என்று சொல்லி விட்டு... சற்று முன் சனாதனுக்கு தைரியம் சொன்னவன் இப்பொழுது மாமா பாப்பாவிற்கு எதுவும் ரொம்ப அடியா என்று கலங்கினான்.
உதயா நீ எனக்கு சொல்லியது தான் கொஞ்சம் தைரியத்தோடு வா. நீ கலங்கினாய் என்றால் நான் தைரியம் இழந்து விடுவேன் என்று சொல்லி விட்டு... எந்த ஹாஸ்பிடல் என்ன என்று தகவலை அனுப்பி விட்டு சஞ்சனாவின் கைகளை கோர்த்த வண்ணம் அப்படியே அமர்ந்து இருந்தான்.
ஹாஸ்பிடல் வந்து ஸ்ட்ரக்சரை கீழே இறக்கும் போதும் அவள் கையை விடாமல் பிடித்து இருந்தான்.
ஐ சி யு விற்கு அழைத்துச் செல்லும் போது தான் அவர்களின் கையை பிரித்து விட்டார்கள்.
சஞ்சனாவிடம் இருந்து பிரிந்த கை அப்படியே அந்தரத்தில் நிற்க.... அப்படியே சிலை போல் நின்று கொண்டு இருந்தான்.
பாண்டவர் இல்லம்...
மிதுன் மிதுனா இருவரும் வீட்டிற்கு சென்று விட்டார்கள். காலை நிறுத்திவிட்டு கீழே இறங்க என்ன இன்னும் அவர்களுடைய பைக் வந்து சேரவில்லை நம்மை சொல்லிவிட்டு அவர்கள் இன்னும் ஊர் சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள் போல என்று இருவருமே சனாதன், சஞ்சனா இருவரையும் கேலி பேசிக்கொண்டு வீட்டிற்குள் செல்லும் போது,....
ருத்ரா காருக்கு அருகில் நிற்கும் பிரியாவை பார்த்து விட்டு என்ன பிரியா இங்கே நிற்கிறாய் என்று கேட்டான் மிதுன்.
ஒன்றுமில்லை சரோஜா அம்மாவை பார்ப்பதற்காக வந்தேன். பார்த்து விட்டு கிளம்பி வெளியில் வரும் பொழுது இந்த காரை பார்த்து விட்டு நின்றேன். வேறு ஒன்றும் இல்லை இந்த கார் எனக்கு பிடித்த மாடல் என்று சொல்லி விட்டு.... சரி சார் நான் கிளம்புகிறேன் என்று சொல்லி மிதுன், மிதுனா இருவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு சென்றாள்.
எனக்கு என்னமோ மிதூ... இவளை பார்த்தாலே பிடிக்கவே பிடிக்காது... ஆனால் ஆனால் ஏதோ ஒரு பழமொழி சொல்வார்களே எங்கு சென்றாலும் சில விஷயங்கள் நம்மை விட்டு தொலையாது என்பது போல் படிக்கும் காலத்தில் இருந்து எங்களுடனே இந்த இம்சை எங்களுடன் வந்து கொண்டு இருக்கிறாள்... என்று புலம்பிக்கொண்டே வீட்டிற்குள் சென்றாள் மிதுனா.
மிதுன் எதார்த்தமாக ஒரு முறை பிரியாவை திரும்பி பார்க்க....
அவள் கண்களில் தெரிந்த ஒரு கொடூரமான பார்வையை மனதிற்குள் ஏதோ செய்ய... அந்த காரை கொஞ்ச நாள் வெளியில் எடுக்க கூடாது என்று தீர்மானித்துக் கொண்டான். தெரிந்தோ தெரியாமலோ மிதுன் எடுத்த இந்த முடிவு... முதல் அடியாக விழுகப் போகிறது பிரியா.. பழனி இருவருக்கும்..
வீட்டிற்குள் வந்ததுமே சஞ்சனா சனாதன் இருவரை பற்றியும் மாற்றி மாற்றி அனைவரும் கேட்க...
மிதுன் சனாதனுக்கும்... மிதுனா சஞ்சனாவுக்கும் போன் செய்து பார்த்தார்கள்.
சஞ்சனாவின் போன் மிதுன் வந்த காரிலேயே இருக்க... கார் செட்டுக்குள் இருந்ததால் அங்கு அடித்துக் கொண்டு இருந்த ஃபோனின் சத்தம் யாருக்கும் கேட்காமல் போனது.
இங்கு சனாதனுக்கு நான்கு ஐந்து முறைக்கு மேல் போனில் தொடர்பு கொண்டு அவன் எடுக்காமல் அங்கு சிலை போல் நின்று கொண்டு இருந்தான்.
போன் தொடர்ந்து அடித்துக்கொண்டே இருக்கவும் அங்கு இருந்த ஒரு நர்ஸ் அவன் அருகில் வந்து...
அவனின் தோளை தட்டி சார் கொஞ்சம் இயல்புக்கு வாருங்கள். உங்களுடைய போன் இதுவரை ஐந்து முறைக்கு மேல் அடித்து ஓய்ந்து விட்டது. அனேகமாக உங்கள் வீட்டில் இருந்தது தான் அழைத்து இருப்பார்கள். தயவு செய்து எடுத்து அவர்களிடம் விஷயத்தை கூறுங்கள். பேஷண்ட் மிகவும் சீரியஸாக இருக்கிறார்... உங்கள் ஒருவரால் சமாளிக்க முடியாது. நீங்கள் வந்ததில் இருந்து மிகவும் உடைந்து போய் அப்படியே இருக்கிறீர்கள். ப்ளீஸ் சொல்வதைக் கேளுங்கள். உங்களால் சொல்ல முடியவில்லை என்றால் உங்கள் போனை தாருங்கள் நான் சொல்கிறேன் என்று அவனிடம் போனை கேட்க...
இப்போது தான் சுயத்திற்கு வந்தவன்... சாரி.. சாரி.. சிஸ்டர் நான் பார்த்துக் கொள்கிறேன். மிகவும் நன்றி சிஸ்டர் என்று சொல்லி விட்டு, போனை எடுத்துக் கொண்டு... ஒரு ஓரமாக சென்றான்.
அந்த நர்சும் அவனுடைய மனநிலை தெரிந்து புரிந்து கொண்டவர்... வேற எதுவும் சொல்லாமல் தன் இடத்தில் சென்று அமர்ந்து விட்டார்.
மிதுன் போனை அட்டென்ட் செய்து நாங்கள் இருவரும் ஒரு முக்கியமான விஷயமாக வெளியில் செல்கிறோம். வருவதற்கு இரவாகும் ப்ளீஸ் அண்ணா கொஞ்சம் எனக்காக ஹெல்ப் பண்ணு என்று... வராத இயல்பு தன்மையை வர வைத்து கேட்க....
சரி... சரி.. டா நான் பார்த்துக் கொள்கிறேன். அதே சமயம் கவனமாக இருங்கள்.. பார்த்து டா சஞ்சு மா கவனம்... என்ஜாய் என்று சொல்லி விட்டு தன் தம்பி ஏதோ காதல் செய்வதற்காகத்தான் டைம் கேட்பதாக நினைத்துக் கொண்டு போனை கட் செய்தான்.
அறிமுகம் வளர்ச்சியோடு வீட்டில் வந்து அனைவரிடமும் அவர்கள் வர இரவாகுமாம் என்று சொல்ல அவர்களும் அதை ஏன் நினைத்துக் கொண்டு சரி சரி அவர்களால் தனியாக இருக்கட்டும். வாருங்கள் நாம் மாடிக்கு செல்லலாம் என்று அனைவரும் மாடிக்கு சென்றனர் அங்கு சென்று பார்க்க...
லிபின், கர்ணா, சரண் மூவரும் சேர்ந்து அழகாக ஒரு மேடை ஏற்ப்பாடு பண்ணி வைத்து இருக்க....
இப்போது மற்றவர்கள் அனைவரும் அதற்கு முன்பு கீழே அழகாக அமருவதற்கும் இருக்கைகள் போடப்பட்டு வைத்து இருந்தது.
இந்த முறை அனைவருமே கீழே அமர்ந்து இருக்க, மேடையில் பெரிய திரை ஒன்று ஒளிபரப்பாக அதில் மெய்யழகியின் சிறு வயது தோழி முதல் தற்போது தோழி வரை அனைவரும் அந்த திரையில் வந்து அவளுக்கு வாழ்த்துக்களை கூறினர்.
பிறகு ஒவ்வொருவரும் பாட்டு நடனம் என்று சந்தோஷமாக இங்கு அழகியின் பிறந்தநாள் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.
திருச்சியில் இருந்து அதி வேகமாக வரும் உதயா...
இணைந்திருங்கள்
சொல்லவா... வேண்டாமா...