• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 26, 2025
Messages
89
83. சஞ்சனாவிற்கு வரும் ஆபத்து... சனாதன் சஞ்சனா காதல்...

மிதுனாவை கூட்டிக்கொண்டு வரும் போது இந்த ஜெகன் எனக்கு தெரிந்து அவன் அக்காவையே கடத்த சொல்லி இருக்கிறான் என்றால் அவன் சாதாரண லோக்கல் கேங் லீடர் போல் தெரியவில்லை...

அந்த இடத்தை சுற்றிலும் கவனித்தீர்களா அது எவ்வளவு பெரிய பங்களா நம் பங்களாவை விட இரண்டு மடங்கு அதிகமானது... அது மட்டும் இல்லாமல் அங்கு ஆட்டோமேட்டிக்காக பல விஷயங்கள் இருக்கிறது சென்சாரில் தான் வேலை செய்கிறது அங்கு இருக்கும் ஒவ்வொரு இடமும்...

எனக்குத் தெரிந்து ஜெகன் உள்ளே வரும் போதே நம் அனைவரையும் அவன் பார்த்து இருக்க வேண்டும். பார்ப்போம். அவன் யார் என்ன விஷயம் என்று நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிக் கொண்டே காரை ஓட்டிக் கொண்டு இருந்தான் சனாதன்.

அப்போது அவர்களுக்கு எதிர்ப்புறமாக இரண்டு பைக் வந்து... இவர்களின் காரை குறுக்கே மரித்து நின்றது...

உடனே சனாதன் தன் இடுப்பில் இருக்கும் கன்னில் கை வைத்துக் கொண்ட இறங்க போக...

அச்சச்சோ மிஸ்டர் ஆபீஸர் சார் இங்கே அந்த அளவுக்கு எல்லாம் சீன் கிடையாது... அவர்கள் இருவரும் என்னுடைய நண்பர்கள் என்று சொல்லிக் கொண்டே காரில் இருந்து இறங்கினாள் சஞ்சனா.

இறங்கியவுடன் அவர்களிடம் சென்று ஏதோ பேசி விட்டு ஒருவரிடம் இருந்து மட்டும் பைக் சாவியை வாங்கிக் கொள்ள, மற்றொருவன் பைக்கில் இன்னொருவன் அமர்ந்து கொள்ள பைக் சீரி பாய்ந்தது எதிர்புறமாக...

இப்போது அந்த பைக் சாவி வாங்கிக்கொண்டு காருக்கு அருகில் வர என்ன இன்னுமா புரியல பெரிய ஆஃபீஸருக்கு.... சரி சரி என் முகத்தை பார்த்துக் கொண்டே இருந்தது போதும், அவர்கள் இருவரும் காரில் செல்லட்டும் நாம் இருவரும் பைக்கில் போவோம் என்று சொன்னாள் சஞ்சனா.

சனாதனும் சிரித்துக் கொண்டே காரில் இருந்து இறங்கினான்.

இப்போது மிதுன், மிதுனா இருவரும் முன் சீட்டிற்கு வந்தனர்.. இருவரையும் பார்த்து எதற்கும் கவனமாக வாருங்கள் என்று சொல்லி விட்டு சனாதன் பைக் எடுக்க...

சஞ்சனாவும் மிதுனா, மிதுன் இதுவரிடமும் சீக்கிரமாக வீட்டிற்கு வந்து சேருங்கள்... உங்க ரொமான்ஸ் எல்லாம் ரொம்ப நேரம் வைத்துக்கொள்ளாமல்... சற்று சீக்கிரமாகவே வாருங்கள் ஏனென்றால் எப்படியும் இந்நேரம் கர்ணா, லிபின் எல்லாரும் சேர்ந்து... அழகி பர்த்டே ஸ்பெஷல் ஏதாவது ஸ்பெஷலா செஞ்சு வச்சிட்டு இருப்பாங்க... அதனால சீக்கிரமாக வந்து சேருங்கள் என்று கண்ணடித்து விட்டு சென்றாள் சஞ்சனா.

மிதுன், மிதுனா இருவரிடமும் பேசிவிட்டு சஞ்சனா கார் இருந்து தள்ளி பைக்குக்கு செல்ல நினைத்து திரும்ப நொடிப் பொழுதில் அவளை வேகமாக தன் பக்கம் வேகமாக இழுத்து இருந்தான் சனாதன். இழுத்த வேகத்தில் இருவருமே ரோட்டில் ஓரத்தில் விழுந்து இருந்தார்கள்.

இமைக்கும் ஒரு வினாடி பொழுதுக்குள் நடந்து விட்ட நிகழ்வின் முதலில் மிதுன், மிதுனா இருவரும் சுதாரித்து காரில் இருந்து இறங்கி பார்க்க...

இவர்களைக் கடந்து ஒரு கார் சென்றது... சிறிது தூரத்தில் சென்று நின்ற கார் அதில் இருந்த சில இளைஞர்கள் ஹோ...... என்று கூச்சலிட்டு கத்தினர்....

ஏய் தனா... சஞ்சு.... என்று அழைத்துக் கொண்டே ஒன்றும் அடிபடலையே என்று மிதுன், மிதுனா இருவரும் அவர்கள் எழு உதவி செய்ய...

அங்கே காரில் இருந்த இளைஞர்கள் அவர்கள் எழுந்து நின்றதை பார்த்து விட்டு ஓஓஓஓஓ.. என்று... சோகமாக கத்தி விட்டு சென்றனர்.

சஞ்சனா எழுந்து நின்றாலும் அவள் உடம்பு நடுங்கி கொண்டு தான் இருந்தது...

மிதுன், மிதுனா இருவரும் வாருங்கள் நாம் அனைவரும் ஒன்றாக காரிலே சென்று விடலாம் வீட்டிற்கு என்று கூப்பிட...

சஞ்சனாவோ இல்லை இல்லை நீங்கள் இருவரும் தனியாக வியாபாரங்கள் நான் சனுவோடு பைக்கில் வந்து விடுகிறேன். பைக் இருக்கிறது தானே ஒன்று பிரச்சினை இல்லை என்று தன்னை சமாளித்துக் கொண்டு அவர்கள் இருவரையும் நீங்கள் கிளம்பி செல்லுங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று தைரியமாக சொன்னாள்.

மிதுன், மிதுனா இருவருக்கும் அவர்களை தனியே விட்டு செல்ல மனமே இல்லை என்றாலும், சனாதன் நீங்கள் தைரியமாக செல்லுங்கள் அது ஏதோ டேட்டிங் போற ஹை சொசைட்டி பசங்க ... தண்ணி அடித்து விட்டு விளையாட்டுக்கு பண்ணி விட்டு செல்கிறார்கள்... அவர்கள் போற வழி வேறு நாம் போற வழி வேறு பயப்படாமல் நீங்கள் கிளம்புங்கள் என்று ஆறுதல் சொல்லி விட்டு, இருவரையும் அனுப்பி வைத்தான் சனாதன்.

அவர்கள் செல்லும் வரை இயல்பாக இருந்த சஞ்சனா... இப்போது தீவிர சிந்தனையில் இருந்தாள்.

சனாதனும் செல்போனில் சில மெசேஜ்களை செய்து விட்டு.. சஞ்சனாவை பார்க்க அவளோ தீவிர சிந்தனையில் இருந்தாள்..

ஏற்கனவே மிதுன் தூக்கி நிப்பாட்டி வைத்து இருந்த பைக்கை அவள் அருகில் கொண்டு சென்று நிப்பாட்ட அவள் கவனம் அருகில் இருக்கும் சனாதன் மேல் இல்லாமல் வேறு எங்கோ இருந்தது...

அவளை அப்படியே தூக்கி தனக்கு முன்னால் பைக்கில் அமர வைக்க... சஞ்சனாவோ அப்படியே அவனின் கழுத்தில் தன் முகத்தை புதைத்து கொண்டாள்...

அப்போது அவளின் உடல் மொழிகளிலேயே தெரிந்தது அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து வரவில்லை என்று உணர்ந்தவன் அவளை சிறிது நேரம் அப்படியே தட்டிக் கொடுத்தான் சனாதன்.

அது ஒரு முன் மாலை பொழுதாக இருக்கவும்... சிட்டி தாண்டி அவுட்டரில் உள்ளடங்க இருந்ததால், அந்தப் பகுதியில் அதிக ஆள் அரவமற்று இருக்க... அவன் அப்படியே அவளுடன் சிறிது நேரம் பைக்கில் தன் தோளில் சாய்த்து வைத்துக் கொண்டான்..

சில நிமிடங்கள் கழித்து சஞ்சனா தான் எங்கு அமர்ந்து இருக்கிறோம் உணர்ந்து, லேசாக நெளிந்து... சனுவிடமிருந்து விலக நினைக்க,

ஓய்... என்ன டி.. இந்த சின்ன விஷயத்திற்கு இப்படி பயந்து கொண்டு இருக்கிறாய்... நான் என்னமோ உன்னை பெரிய விஜயசாந்தி ரேஞ்சுக்கு நினைத்தேன்... நீ என்னவென்றால் தேவதர்ஷினி ரேஞ்சுக்கு கூட இல்லை என்று கிண்டல் அடித்தான்...

அவன் கிண்டலா என்ன சொல்ல வருகிறான் என்று புரிந்தாலும் புரியாதது போல்...

அடப்பாவி நீ பாரின்ல இருந்து வந்தாலும் நம்ம தமிழ்நாட்டு கல்ச்சர் படி இருக்கீங்கன்னு நம்பி உன்னை நேசிக்க தான் முடிவு பண்ணி ரெண்டு நாள் கூட முழுசா முடியல அதுக்குள்ள என்ன டா இத்தனை பேர சொல்ற விஜயசாந்தின்னு சொல்ற அப்புறம் என்ன பேர் சொன்ன... தேவதர்ஷினியா யாரு டா அந்த தேவலோக ரம்பை.... பாரு பாரு நான் இப்படி மோசம் போயிட்டேனா... ஐயகோ... இது கேட்க யாரும் இல்லையா என்று அவன் தோள் பட்டையிலேயே அவளுடைய மூக்கை உறிஞ்சி தேய்க்க....

அடியே என் அல்வா குட்டி... கூச்சமா இருக்குது டி... என்ன டி நான் உன்னைய விஜயசாந்தி மேம் ரேஞ்சுக்கு வச்சு சொன்னா இப்படி பொசுக்குன்னு என்னைய பிளேபாய் ரேஞ்சுக்கு ஆகிட்ட...

நீ சின்ன பிள்ளைல அவங்க படம் எல்லாம் பார்த்தது இல்லையா என்று கேட்டான்... அதே போல் இப்ப லேட்டஸ்ட் தேவதர்ஷினி மேம்... காஞ்சனா படத்தில் வருவாங்களே அவங்கள சொன்னேன் டி என்று பரிதாபமாக சொன்னான் சனாதன்.

ஐயோ அப்படி சொன்னீயா...

நீ இப்ப லேட்டஸ்டா நயன்தாரா மேடம் அனுஷ்கா மேடம் இவங்க எல்லாம் சொல்லி இருந்தேனா நான் கொஞ்சம் யோசிச்சு இருப்பேன். நீ என்ன டா 80ஸ் கிட்ஸ் மாதிரி விஜய் சாந்தி மேம் ரெபர் பண்ணுனா.. எனக்கு பக்குனு ஆகாது என்று அப்பவும் கிண்டலாக அவனிடம் பேச...

ஏய் வாலு... சரியான கேடி... டி...!!! !!
நீ... சரி இப்ப வீட்டுக்கு போகலாமா இல்ல இப்படியே உட்கார்ந்து இருக்கியா என்று கேட்டான் சனாதன்.

ஏன் நான் இப்படி உக்கார்ந்து இருந்தா உங்களுக்கு வண்டி ஓட்ட தெரியாதா? என்று கேட்டாள் சஞ்சனா. உங்க ரேஞ்சுக்கு பழைய படத்துல சொல்லனும்னா ஜேம்ஸ் பாண்ட் நாட் நாட் செவென் படத்துல ஹீரோக்கு முன்னாடியே உக்காந்து ஹீரோயின் பைக் எவ்வளவு லாவகமாக ஓட்டுவாங்க தெரியுமா? டுமாரோ நெவர்ஸ் டைஸ்ல என்று சொல்ல..

ஏன் உனக்கு ஹிருத்திக் ரோஷன் பிடிக்காதா? அவர் கூட தான் தூம் 2 படத்துல என்று சொல்ல வரும் போது.... ஹே உனக்கும் ரித்திக் ரோஷன் ரொம்ப பிடிக்குமா?.. எனக்கும் ரித்திக் ரோஷன் ரொம்ப பிடிக்கும் என்று அவள் பேசிக் கொண்டே இருக்க ...

எம்மாடி இந்த வெயில்ல எவ்வளவு நேரம் தான் இப்படியே இங்க உக்காந்து இருக்க போற... நான் ரொம்ப பாவம் எனக்கு இந்த அளவுக்கு சூடு எல்லாம் ஒத்துக் கொள்ளாது தாயே என்று சனாதன் பாவமாக கேட்டான்.

அப்போ உனக்கு சீரியஸா இப்படி என்னை வைத்து ஓட்ட தெரியுமா?.. தெரியாதா???. என்று கேட்டாள் சஞ்சனா.

அவ்வளவு தான் அவன் பைக்கை மின்னல் வேகத்தில் ஸ்டார்ட் செய்து வேகமாக ஓட்ட ஆரம்பித்தான்...

அவன் வேகத்தில் மிரண்டு போனவள் அவனை இறுக்கி கட்டி பிடித்துக் கொண்டாள்.

சிட்டியின் நெருங்கும் வரை அவன் வேகத்தை குறைக்கவே இல்லை... சிட்டிக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்திலேயே வண்டியை வேகமாக சடன் பிரேக் போட்டு நிறுத்த அவனோடு இறுக்கமாக கட்டிக் கொண்டாள்.

சில நிமிடங்கள் அமைதியாக இருந்தவன் இப்பொழுது அவளின் தோளில் தட்டி எழுப்பி விட்டான் சனாதன்.

அவளோ கண்களை இறுக்கி மூடிய வாறே அவனை நிமிர்ந்து பார்த்து... மெதுவாக ஒரு கண்ணை மட்டும் திறந்து, பிறகு இரண்டு கண்ணையும் திறந்து பார்த்தவள்.. டேய் உனக்கு என் மீது ஏதேனும் கோபம் இருந்தால் சொல்லி விடு டா.... அதை விட்டுட்டு இப்படி எந்த ஒரு சந்தோஷத்தையும் அனுபவிக்காத என்னை இப்படி கொலை பண்ண பார்க்கிறியே இது நியாயமா?...

அடப்பாவி புருஷா?.. உன்ன கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிக்கணும் போலவே என்று புலம்பிக்கொண்டு இருந்தவளை பார்த்து...

ஏண்டி லவ் பண்றதையவே இன்னும் முறையா நம்ம இருவரும் சேர்ந்து ஒரு முறை கூட சொல்லிக் கொள்ளவில்லை.
அதற்குள் என்னை நீ எத்தனையோ முறை பெருசா சொல்லிட்ட நானும் உன்னை பொண்டாட்டி சொல்லிட்டேன்... இப்ப வந்து இப்படி பொசுக்குன்னு கல்யாணம் பண்ணிக்கனுமா என்று யோசிக்கிறேன் அப்படின்னு சொல்ற... அவ்வளவு மொக்கையா வா நான் இருக்கேன்... என்று பாவமாக கேட்க...

சஞ்சனாவும் சனாதனை பார்த்து சிரித்துக் கொண்டே அவன் அருகில் நெருங்கி அமர்ந்து இருந்தவள்....

இணைந்திருங்கள்
சொல்லவா... வேண்டாமா...

இனி பிரியா அண்ட் பழனி அவர்களின் சதி திட்டம்...

இவர்கள் திட்டத்தை இப்படி முறியடிக்க போகிறார்கள் என்றும்...

இதற்கிடையில் சனாதன் யார்?...

கவியின் தம்பி அவன் பின்னணி யார் என்று விறுவிறுப்பாக...

பல திருப்பங்களுடன்..
கால தாமத்திற்கு மன்னிக்கவும் இனி இணைந்திருங்கள் சொல்லவா... வேண்டாமா... தினமும் வரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top