• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 26, 2025
Messages
98
81. கவிப்பிரியாவிற்கு பதிலாக மிதுனாவை கடத்த....
கடத்த சொல்லியவன் கவிப்பிரியாவின் தம்பி ஜெகன்...


அங்கே சிரித்துக் கொண்டு இருந்த மிதுனாவோ டேய் நீ... நீ.... அந்த காட்டு குரல் மோகன் தானே நீ... இல்ல இல்ல அவன் இல்ல நீ.... ஆமாம் நீ ... நீ... ஹான் கண்டுபிடிச்சிட்டேன் ஜூனியர் குள்ள வாத்து ஜகன் தானே நீ என்று கேட்டாள்.

இப்போது சனாதன் சஞ்சனாவை பார்த்து சஞ்சனா தயவு செய்து சொல்... அவன் உங்களுடைய படித்த மாணவனா?.. பிராங்க் எதுவும் பண்றானா?.. மிதுனா இவ்வளவு ஜாலியாக பேசிக்கொண்டு இருக்கிறாள். அவனும் அமைதியாக இருக்கிறான் என்று மறுபடியும் அழுத்தமாக கேட்டான் சனாதன்.

தனா பொதுவாகவே அவள் கொஞ்சம் அசட்டு தைரியம் உள்ள பெண் தான்... அதிலும் நாம் இங்கு இருப்பதை அவள் கண்டு கொண்டாள்.

அந்த வண்டியில் அமர்ந்து இருந்த மற்றவர்கள் அனைவரும் அது எப்படி நாம் இங்கே வந்த விஷயம் அவர்களுக்கு தெரிந்தது என்று கேட்டார்கள்...

அனைவரையும் ஒரு முறை பார்த்து விட்டு சனாதனை பார்த்து.. அங்கு இருக்கும் ஆட்களுக்கும் உங்கள் ஆளுக்கும் சம்பந்தமே இல்லையாம்.. எவ்ளோ சீக்கிரம் அவருக்கு தகவல் சொல்லி அவரை சற்று..‌ இல்லை
.. இல்லை .. வெளியே சென்றாள் கண்டிப்பாக அவர்களில் கவனத்தில் பட்டு விடும், அதனால் உள்ளடங்கி மறைவாக இருக்க சொல்கிறாள். யாருக்கும் சந்தேகம் வராமல் கவனமாக இருக்க சொல்கிறாள் என்று சொல்லி விட்டு, ... அமைதியாக சஞ்சனா மிதுனாவின் கண்களையே பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள்.

அதேநேரம் சஞ்சனா சொல்லியது போல் அங்கு இருந்த விஜய்க்கு அவர்களுக்கு உண்டான ஷார்ட் ஃபார்ம் மில் மெசேஜை அனுப்பி விட,...

விஜயும் யார் கவனத்தையும் கவறாமல் சற்று ஆட்களுக்குள் நகர்ந்து உள்ளடங்கி நின்றான். அதனால் அங்கு நடக்கும் விஷயங்களை தெளிவாக காட்ட முடியாமல் போனாலும் அங்கு பேசும் பேச்சை வைத்து அனைவரும் கேட்டுக் கொண்டு இருந்தனர்.

மிதுனாவோ அடடா அவர் உள்ளடங்கி சென்றதால் நம் விழிகள் பேசுவது கண்டுபிடிக்க முடியாமல் திணறுவாளே என்று நினைத்து கொண்டு இருக்கும் போதே...

என்ன சீனியர் இந்த ஜூனியரை இப்படி பார்க்கவும் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறதாக என்று கேட்டான் ... முதன் முதலில் அவளுக்கு எதிரே நின்று கொண்டு இருந்தவன்.

டேய் ஜெகன் நீ எப்படி வேணா இருந்துட்டு போடா ... எனக்கு என்ன... டா வந்துச்சு?? இப்ப என்னைய எதுக்கு டா கடத்திட்டு வந்து இருக்கிறாய் என்று கேட்டாள் மிதுனா.

அது சரி என்ன டா நீ, ஏதோ பெரிய தாதா மாதிரி இல்ல இல்ல பெரிய டான் பில்டப் கொடுக்கிற... ஆமா என்னைய வந்து நீ முதலில் கடத்த சொல்லவில்லை என்று தான் இந்த மாங்கா சொன்னா நீ வேற யாரையோ கடத்த சொல்லி என்னை மாற்றி கடத்தி விட்டார்கள் என்று சொன்னான் நீ என்ன டா பண்ணிட்டு இருக்க...

மனிதர்களை கடத்திக் கொண்டு இருக்கிறாயா?... இல்ல குறிப்பா பெண்களை மட்டும் கடத்துறவனா என்ன டா பெரிய கேங்ஸ்டர் மாதிரி பில்டப் எல்லாம் பண்ணிட்டு இருக்காங்க உனக்கு...

ஏதோ நான் படிக்கும் போது நீ சீனியர் அப்படிங்கற ஒரே காரணத்துக்காக மட்டும் தான்... இவ்வளவு நேரம் மரியாதை கொடுத்து, நீ பேசறது எல்லாம் கேட்டுட்டு இருந்தேன். இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசின.. அடிச்சு பல்லெல்லாம் கழட்டி கொடுத்துடுவேன்.

சரி டா இனி நான் பேசவே இல்ல நீயே சொல்லு ... இப்ப எதுக்கு என்னை கடத்தி இருக்க... இல்ல அப்படியும் சொல்ல முடியாது... நீ கடத்த சொன்னது என்ன இல்லை என்று இப்போது தான் இந்த மாங்கா சொன்னான். ஆளை மாற்றி கடத்தியதற்கு நீ இவர்களைக் கொன்று போட்டு இருப்பாயாம்... ஆனாலும் என்னை பார்த்த பிறகு தான், எங்கள் பாஸ் எங்களை மன்னித்து விட்டார் என்று சொன்னான். சரி நீ யார் எதற்கெடுத்த சொன்னாய் என்று என்னிடம் சொல்ல கூட வேண்டாம்.... எப்படியும் என்னை காப்பாத்துறதுக்கு என்னோட ஸ்வீட் லவ்வபிள் பாய் ... என் டார்லிங் ... என் செல்லத்தோட கண்டிப்பா வந்து காப்பாற்றுவார். நீ சொன்னா சொல்... சொல்லாட்டி போ. ஆனால் எனக்கு அதுக்கு முன்னாடி குடிப்பதற்கு ஏதாவது கொடு டா. ரொம்ப நேரமா தாகமாக இருக்கிறது குடிக்க கொடுங்கடான்னு கேட்டுக்கிட்டே இருக்கேன் ஒருத்தன் கூட ஒரு பாட்ட தண்ணி வேண்டாம்.. ஒரு சொட்டு கூட கொடுக்காமல் இருக்கிறார்கள் என்று புலம்பி கொண்டு இருந்தாள் மிதுனா.

அவள் புலம்பல்களை கேட்டுக் கொண்டு இருந்தவன் அடச்சீ..
நீ எல்லாம் எப்பவும் மாறவே மாட்டாயா என்று கேட்டு விட்டு... தன் காதுகளை குடைந்து கொண்டவன் சற்றும் யாரும் எதிர்பார்க்காத தருணம் தன் இடுப்பு மறைவில் இருந்த துப்பாக்கியை எடுத்து, இவ்வளவு நேரமும் மிதுனா மாங்கா... மாங்காய்.. என்று யாரை சொல்லிக் கொண்டு இருந்தளோ... அவனின் நெற்றியில் சுட்டு தள்ளினான்.

ஒரு வேலையை கூட உருப்படியாக செய்வது கிடையாது... எதை எடுத்தாலும் சொதப்பல் என்று சொல்லிக் கொண்டே துப்பாக்கியை கையில் வைத்துக் கொண்டு இப்போது மிதுனாவை பார்க்க....

ஜெகனின் செயலில் ஒரு நொடி அதிர்ந்தாலும்.... ஆனால் அவன் தன்னை பார்ப்பதற்குள் தன்னை சுதாரித்துக் கொண்டவள்.... இப்போது மிகவும் இயல்பாக அமர்ந்து இருந்தாள்.

ஜெகன் அங்கு இருந்த மற்றவனை பார்க்க இருவர் வந்து இறந்து கிடந்தவனை தூக்கிக் கொண்டு சென்றார்கள்.

கடவுளே இவனோட மோட்டிவேஷன் என்னன்னு தெரியாம கண்டிப்பா நம்ம ஆட்கள் உள்ளே வர மாட்டார்கள்.. இவனிடம் எவ்வளவு பேசியும் இவன் வாயை திறக்க மாட்டேங்கிறான்... என்ன செய்வது என்று தனக்குள் யோசித்துக் கொண்டு இருக்கும் போது....

இப்போது அவளின் அருகே ஒரு சேரை போட சொல்ல ... சேரை போட்டதும் அங்கே அமர்ந்தவன்... ஆமாம் உன்னை காப்பாற்ற என்று... யாரோ வருவார்கள் என்று சொன்னாயே யாரது என்று கேட்டான் ஜெகன்.

இவ்வளவு நேரமும் பேசிக்கொண்டே இருந்தால் இப்பொழுது மிகவும் அமைதியாக இருந்தாள்.

சொல்லு சீனியர் இவ்வளவு நேரம் பேசிக்கிட்டே இருந்த இப்ப பேசாம அமைதியா இருக்க உன்னை யார் காப்பாற்ற வருவார்கள்?.. இந்த இடம் எங்கே இருக்கு என்று உனக்கு தெரியும?.. நீ எங்கு இருந்து இங்கு வந்து இருக்கிறாய் என்று தெரியுமா?...

நான் என் அக்காவை தான் கடத்த சொன்னேன் ஆனால் இந்த அரவேக்காடு அவன் தான் பிணமாகி விட்டானோ?!??! ...அந்த அறவேக்காடு பிணம் என்னவென்றால் உன்னை கடத்திக் கொண்டு வந்து விட்டான். நீ எப்படி என் அக்காவோட இருந்தாய் என்று கேட்டான்.

இப்பவும் மிதுனா அமைதியாகவே இருக்க ஏய் வாய் திறந்து சொல்ல டி என் அக்கா கவி பிரியாவோடு உனக்கு என்ன வேலை என்று கேட்டான்.
அந்த தரித்திரம் புடிச்சவளுக்கு எவ்வளவு தைரியம்... ஏதோ ஒரு ஊர் பெயர் தெரியாதவனை நடுவீட்டிற்குள் வந்து தூக்கி கொண்டு செல்கிறான் கொஞ்சம் கூட வெட்கம்..‌ மானம்...‌ சூடு..
சொரணை இல்லாமல் இளித்துக் கொண்டு அவனோடு செல்கிறாள். மானங்கெட்டவள் உன்னுடன் அவ எப்படி பழகினால் என்று கேட்டான்.

எதிரில் இருப்பவன் பேச பேச அடப்பாவி நீ கவிப்பிரியாவின் தம்பியா டா... அவளை கடத்துவதற்கு அது தான் என்னை கடத்தி விட்டாயா?.. ஆனால் அவளை ஏன் நீ கடத்த வேண்டும் ஆமாம் முதலில் கடத்தல் என்ற வார்த்தையே தவறாக இருக்கிறதே... நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா என்று மனதில் நினைத்தாலும், ஒரு வார்த்தையை கூட வெளியில் விடாமல் அமைதியாக அமர்ந்து இருந்தாள் மிதுனா...

இப்போது சனாதன் சஞ்சனாவை பார்த்து இப்போது என்ன செய்யலாம் உள்ளே சென்று அட்டாக் பண்ணலாமா என்று யோசித்து கேட்க...

முதலில் உள்ளே இருக்கும் விஜய் சாரை கேமராவை மட்டும் எப்படியாவது மிதுனாவின் முகத்துக்கு நேராக வைக்க சொல்லுங்கள் என்று சொன்னாள்.

சஞ்சனா சொல்லியது விஷயத்தை விஜய்க்கு சொல்ல... அவனும் மிதுனாவிற்கு நேராக அவள் முகம் தெரியும் படி கேமராவை ஃபிக்ஸ் பண்ணி வைத்தான்....

விஜயை கவனித்துக் கொண்டு இருந்த மிதுனா ... அவனுடைய நடவடிக்கைகளை புரிந்து கொண்டு இப்பொழுது சஞ்சனாவிற்கு மறுபடியும் தகவல்களை சொல்லிக் கொண்டு இருந்தாள் கண் இமைகள் மூலமாகவே...

சில வினாடிகள் அவள் சொல்வதைக் கேட்டுக் கொண்டு இருந்த சஞ்சனா..

தற்சமயம் இங்கே ஆட்கள் அதிகம் பேர் இல்லை மிஞ்சிப் போனால் 15 அடி ஆட்களும்.. ஜெகனும் தான் இருக்கிறார்கள்... ஆனால் ஜெகனின் நடவடிக்கை பார்க்கும் போது அவன் நார்மலாக தோன்றவில்லை... அதாவது அவன் மிகப்பெரிய சதிகாரன் போல் தோன்றுகிறது அவனிடம் ஆட்கள் வேண்டுமானால் குறைவாக இருக்கலாம் அவனிடம் ஆயுதம் கண்டிப்பாக நிறைய இருக்கிறது என்று நினைக்கிறேன் என்று கண்களால் அவளுக்கு சைகை மூலம் சொல்லிக் கொண்டு இருந்தாள் மிதுனா.

சஞ்சனாவும் மிதுனா கண்களில் பிலிங் பண்ணி சொல்லும் விஷயங்களை சொல்லிக் கொண்டே இருந்தாள்.

அப்போது கடுப்பான ஜெகன் என்ன டி....‌ அப்படி பார்த்துக் கொண்டே அமைதியாக இருக்கிறாய்... கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாதா என்று கடுபடித்தான்.

இங்க பாரு என்னை குள்ள வாத்து, அம்மாஞ்சி அப்படின்னு என்னென்ன சொல்லி கிண்டல் பண்ணி இருப்ப... உன் பேச்சால் என்னுடைய முதல் காதல் கூட கருகிப் போய்விட்டது தெரியுமா?.. ஆனால் இப்போ நான் எப்படி இருக்கேன் சொல்... எப்படி இருக்கேன் சொல்லு டி ... இப்ப அழகா இருக்கேனா என்று கேட்டான்...

இதுவரை அமைதியாக தான் சொல்ல வேண்டிய விஷயங்களை தன் கண் இமைகளால் சொல்லி முடித்தவள், ஜெகனை பார்த்து..

அட போடா குள்ள வாத்து. இப்பவும் நீ எங்களுக்கு குள்ள வாத்து தான். இப்ப மட்டும் இல்ல எப்பவும் நீ எங்களுடைய குள்ள வாத்து தான். அது எல்லாம் காலேஜ் லைப்பில் மலரும் நினைவுகளாக சந்தோஷப்பட வேண்டியது. அதை மனதிற்குள் வைத்து இவ்வளவு வன்மத்தை வளர்த்து வைத்து இருக்கிறாய். அவள் உன்னை விட்டு சென்றாள் என்றால் அதற்கு நாங்கள் உன்னை இப்படி கிண்டல் செய்தது காரணம் அல்ல, உண்மையாக உன்னை அவள் நேசித்து இருந்தால்... நாங்கள் கிண்டல் செய்த பொழுது எங்களிடம் அவள் எதிர்த்து போராடி இருக்க வேண்டும். உனக்காக எங்களிடம் அவள் சண்டை போட்டு இருக்க வேண்டும். அப்படி எதுவும் சொல்லாமல் உன்னை காயப்படுத்தி சென்றவள் உன்னுடைய உண்மையான காதலியா? அவளுக்காக தான் இப்பொழுது என்னை இப்படி கடத்திக் கொண்டு வந்து உட்கார வைத்து இருக்கிறாயா? என்னமோ போ. என்ன வேணாலும் செய். இப்ப என்னை விட போறியா? இல்ல வேற ஏதாவது பிளான் வச்சிருக்கியா? என்று கேட்டாள் மிதுனா.

இணைந்திருங்கள்

சொல்லவா... வேண்டாமா...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top