- Thread Author
- #1
80. காட்டு பங்களாவில் மிதுனாவின் காமெடி சாகசங்கள்....
மிதுனாவின் வாய் பேச்சில் கடுப்பான அடி ஆட்.களில் ஒருவன் தன்னுடைய பாசுக்கு கால் செய்தான்...
ட்ரிங்... ட்ரிங்... முதல் அழைப்பிலேயே அந்த பக்கம் போனை எடுத்தவன் என்ன.. டா என்று கேட்க...
பாஸ் இந்த பொண்ணு கொஞ்சம் ஓவரா வாய் பேசுகிறது என்று சொன்னான் போன் செய்த தடியன்.
டேய் அவ பேசாம இருந்தா தான் டா ஆச்சரியம் ... அது மூன்றும் மூன்று பிசாசுகள் அதிலும் இது சரியான குள்ள பிசாசு.... சரி சரி இன்னும் 20 நிமிடத்தில் நான் அங்கு வந்து விடுவேன் அது வரை கவனம் என்று சொல்லி விட்டு போனை கட் செய்தான்...
அதே நேரம் அந்த இடத்தை சனாதன் தன் ஆட்கள் மூலமாக சுற்றி வளைத்து இருந்தான்.
ஐந்து ஜீப்புகளில் மொத்தம் 30 பேர்... ஒவ்வொருவரும் ஒருவருக்கு ஒருவர் ப்ளூடூத்தில் கனெக்ட்டில் இருந்தார்கள்.
ஓகே இப்போது ஒவ்வொரு வண்டியில் இருந்தும் யாராவது ஒருவர் மட்டும் கீழே இறங்கி.. பங்களாவிற்குள் சென்று அங்கு உள்ள நிலவரம் பாருங்கள் என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே...
அந்த பங்களாவின் வடக்கு புறத்தில் நிப்பாட்டி இருந்த பொலிரோ வாகனம் அப்படியே பூமிக்கு அடியில் சென்றது.
ஒரு நொடி அந்த வண்டியில் இருந்த ஆறு பேரும் பேனிக் ஆனாலும் சுதாரித்து... சனாதனுக்கு மெசேஜ் அனுப்பினர்.. சார் எங்களுடைய வாகனம் பூமிக்கு அடியில் சென்று விட்டது... ஆனால் பயப்படும்படி ஒன்றும் இல்லை ஏனென்றால் இது ஆட்டோமேட்டிக் ஆக கார் பார்க்கிங் பண்ணுவதற்காக ஏற்பாடு பண்ணி வச்சிருந்திருப்பாங்க போல கார் வந்து நின்ன உடனே அது வீட்டுக்கு தானா கீழ மூவ் ஆகி பார்க்கிங் ஏரியாவுக்கு காரை மூவ் பண்ணிட்டு இருக்கு...
கார் ஆட்டோமேட்டிக்கா அது அப்சர்வ் பண்ணுது அப்படின்னா அப்ப நீங்க வந்துட்டீங்க உள்ள எண்ட்ராயிருக்கீங்க அப்படிங்கறது சிக்னல் அங்க இருக்க எல்லாருக்கும் அலர்ட் ஆகும் சோ நாங்க யாரும் உள்ள வரல இப்போதைக்கு நீங்க ஆறு பேருமே உள்ளார போய்... என்னன்னு எங்களுக்கு ரிப்போர்ட் பண்ணுங்க.
முடிந்தளவு யாரும் யார் கண்ணிலும் படாமல் இருக்க பாருங்க... அதே சமயம் உங்கள் கையில் இருக்கும் ஸ்மார்ட் வாட்ச் லொகேஷன் கட் ஆயிடுச்சு... ஆனால் நீங்கள் பயப்பட வேண்டாம்... உங்களோட ஸ்மார்ட் வாட்ச் ஸ்கிராப் அடில ஒரு ப்ளூ கலர் லைன் போகும்... அதுல லேசா அழுத்தி விடுங்கள் எங்களுக்கு கனெக்ட் ஆகிவிடும் என்று சொன்னான் சனாதன்.
அதே போல் அங்கு இருந்த ஆறு பேரும் செய்ய மறுபடியும் அனைவரும் தெரிந்தனர்.
இனி அவசியம் இல்லாமல் நீங்கள் யாரும் பேச வேண்டாம். ஓகே எல்லோரும் ஒரே இடத்தில் சேர்ந்து இருக்காமல்... தனித்தனியாக சென்று பாருங்கள் அங்கு என்ன நடக்கிறது என்று சொல்லி விட்டு அமைதியாக அவர்கள் ஆறு பேரின் நடவடிக்கைகளை பார்க்க ஆரம்பித்தனர்.
அதே நேரம் அந்த கூட்டத்தின் தலைவன் என்று சொல்லப்பட்டவன் 20 நிமிடத்தில் அங்கு வருகிறேன் என்று சொன்னவன் பதினொன்றாவது நிமிடத்திலேயே புயல் போல் அங்கு வந்தான்.
நல்லவேளை அவன் வரும் வழியில் நம் ஆட்கள் யாரும் இல்லை, ஆனால் அவன் வந்ததை அனைவரும் பார்த்தனர்.. காரின் உள்ளே இருப்பது யார் என்று தெரியவில்லை ஆனால் கார் வந்த வேகமே சொல்லியது அவன் தான் அங்கு இருப்பவர்களுக்கு தலைவன் என்று...
அவன் மிதுனவை அடைத்து வைத்து இருக்கும் இடத்திற்கு வந்து சேரும் நேரம் சரியாக நம் டீம் மெம்பர்ஸில் ஒருவரான விஜய் என்ற ஆபிஸர் அந்த கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டு இருந்தான்.
இப்போது அனைவருமே விஜயை கவனிக்க அங்கு நடந்த அனைத்தையும் வீடியோவாக அங்கு இருப்பவர்கள் அனைவருக்கும் காட்டிட்டு இருந்தான் விஜய்.
மிதுனாவோ கொஞ்சமும் சளைக்காமல், அங்கு இருந்த தடியர்களை பார்த்து தான் குடிப்பதற்கு அட்லீஸ்ட் ஒரு டம்ளர் தண்ணியாவது தாங்க டா... அங்க ரெஸ்டாரன்ட்ல என்னுடைய ஜிகர்தண்டாவை யார் குடிச்சாங்கன்னே தெரியல... ம்ம் என்று பெரு மூச்சு விட்டாள்.
இங்க மிதுனிற்கு அவளின் பேச்சை கேட்ட பிறகு.. இருக்கும் இடம் சூழ்நிலை மறந்து வாய் விட்டு சிரிக்க... மிதுன் அடுத்து என்ன செய்யப் போகிறான் என்பதை நொடியில் யூகித்து அந்த சத்தம் வெளியே வருவதற்கு முன்னே அவன் வாயை தன் கையால் மூடி இருந்தான் சனாதன்.
மிதுன் சூழ்நிலை புரிந்து எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பதாக கையிலும் கண்ணிலும் உறுதி கொடுக்க சனாதன் அவன் வாயில் இருந்து கையை எடுத்தான்.
சஞ்சனாவிற்கு தான் மிகவும் தர்ம சங்கடமாக இருந்தது அவளுடைய விளையாட்டுத்தனத்தை நினைத்து...
தனா மற்றும் அவர்களுடைய டிபார்ட்மென்ட் ஆட்களின் முகங்களை பார்க்க... அவர்களின் முகங்களில் என்ன நினைக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை. அனைவரும் அப்படி ஒரு அமைதியில் அமர்ந்து இருந்தார்கள்... ஏதோ ரோபோட் போல் இருப்பவர்களை பார்த்து விட்டு, தனாவின் முகத்தை பார்க்க அவனும் அவ்வளவு அமைதியாக உட்கார்ந்து இருந்தான். என்ன நினைக்கிறான் என்று புரிந்து கொள்ளவே முடியவில்லை... அடக்கடவுளே இவனுங்கள் எல்லாம் யாரு..?? இது மந்திரத்தை விட்டவர்கள் போல் இப்படி அமைதியாக இருக்கிறார்கள் என்று மனதில் பேசிக் கொள்வதாக நினைத்து சத்தம் போட்டு பேச...
வினாடிக்கும் குறைவாக அவளை அனைவரும் ஒரு முறை பார்த்து விட்டு, திரும்பி மறுபடியும் அதே போல் அமைதியாக அமர்ந்து கொண்டார்கள்.
அதே வினாடிக்கும் குறைவாக சனாதனின் கண்கள் ஓரமும் லேசாக சிரிப்பில் சுருங்கி விரிந்தது.. பாவம் அதைத் தான் சஞ்சனா கவனிக்காமல் போக... இந்த முறை அனைவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு மனதிற்குள் சொல்லிக் கொண்டாள் மிகவும் கவனத்துடன்.. அடக்கடவுளே, இவன் என்ன இப்படி இருக்கிறான் முற்றிலும் வேறு மனிதனாக இல்லை இவன் மனிதன் என்று நினைத்துக் புலம்பிக் கொண்டு இருக்க...
ஏனோ அவன் இரவில் தந்த அந்த ஒற்றை முத்தம் இப்போது இருக்கும் சூழலில் நினைவு வர... அலைபாயும் மனதை கட்டுப்படுத்திக் கொண்டு அங்கு நடப்பவற்றை பார்த்தாள்.
புயலாக வந்தவன்... மிதுனாவின் முன் வந்து நின்று இரண்டு நிமிடம் எதுவும் பேசாமல் அவளை பார்த்துக் கொண்டே இருக்க..
அதில் காண்டான மிதுனா... டேய் யாரு.. டா நீ... ஃபுட் டெலிவரி பண்ண வந்த பையனா... முதலில் முகத்தில் இருக்கிற அந்த கன்றாவி மாஸ்க் கழட்டு தம்பி... இவனுங்க ஆர்டர் பண்ண ஜிகர்தண்டா எங்க என்று கேட்டாள்...
ஆனால் எதிரில் இருந்தவனோ மிகவும் நிதானமாக தன்னுடைய சட்டை பட்டனை கழட்ட...
மிதுனாவிற்கு அடச்ச என்று ஆனது... இங்கே இருந்த மற்ற ஆண்கள் அனைவருமே ஒரு நொடி ஐயோ என்று நினைத்து சஞ்சனாவை பார்க்க... அவளோ மிகவும் சுவாரசியமாக படம் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டு இருந்தாள்.. இப்போது அங்கு இருந்த ஆண்கள் அனைவருக்கும் விட்டால் இவளும் குடிப்பதற்கு தீனி தின்பதற்கு ஸ்நாக்ஸ் கேட்பாள் போல்... இது என்ன இவ்வளவு சுவாரசியமாக படம் பார்த்துக் கொண்டு இருக்கிறாள் என்று தான் நினைக்கத் தோன்றியது......
அதே போல் மற்ற வண்டிகளில் காத்திருந்தவர்கள் கூட இவர்களின் அடுத்த உத்தரவுக்காக அமைதியாக மூச்சை பிடித்து உட்கார்ந்து இருந்தனர் என்ன இருந்தாலும் ஒரு பெண்ணுக்கு முன்னாடி அவன் மிஸ்பிஹேவ் செய்வதை நினைத்து ஒவ்வொருவரும் கொதி நிலையில் இருக்க...
இங்கு அதற்கு நேர் மாறாக நடந்து கொண்டு இருந்தது அதையும் பார்க்க பார்க்க... அங்கு இருந்தவர்களுக்கு நிம்மதியாகவும், அதே சமயம் உண்மையில் பெருமையாகவும் இருந்தது...
அவன் சட்டையை கழட்டிய உடனே மிதுனா பயப்படுவாள்.. அல்லது சிறிதேனும் கலங்குவாள் என்று நினைத்து இருக்க அவளோ...
சற்று யோசிக்காமல் அருகில் இருந்தவனே டேய் மாங்கா இந்த கை கட்ட அவுத்து விடுடா எனக்கு ரொம்ப நாளா ஆசை டா.. அதாவது 8 பேக்ஸ் வைத்து இருப்பவர்களை பார்த்து அவங்களுடைய 8 பேக்க தொட்டு பாக்கனும் என்று... இப்போ எனக்கு முன்னாடி எவ்ளோ அழகா நிக்கிறான் பாரு .. நம்ம நிறைய ஹீரோஸ் கிட்ட கூட சிக்ஸ் பேக் தான் வச்சு நான் நிறைய பார்த்து இருக்கேன் என்று, அருகில் இருப்பவனிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தாள்.
மிதுனாவின் நடவடிக்கையில் சனதன் தன் அண்ணன் மிதுனை பார்க்க அவன் முகமோ அய்யோ பாவம் என்பது போல் இருந்தது... அவன் தன்னுடைய உடம்பை தொட்டுப் பார்த்துக் கொண்டு இருந்தான். தினமும் உடற்பயிற்சி செய்யும் உடம்பு என்றாலும் அவள் எதிர்பார்க்கும் 8 பேக் உடம்பு இல்லாததால் அவனுடைய உடம்பை தொட்டுப் பார்த்துக் கொண்டு இருக்கும்... தன் அண்ணனை பார்த்து அந்த இடத்தில் அவனையும் அறியாமல் லேசாக சிரித்தான் சனாதன்.
சனாதன் சிரிக்க அவ்வளவு நேரமும் சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டு இருந்த அவர்களுடைய டீம் மெம்பர்ஸ் கூட இளம் புன்னகையை சிந்தினர்...
நிதானமாக சட்டையை கழட்டியவன் அவளுக்கு அருகில் வந்து நின்றான்...
பக்கத்தில் இருந்து மாங்காயை பார்த்து... டேய்.. டேய்.. மாங்கா உன்னை மட்டும் உன் பெயர் என்ன என்று கேட்டு அடுத்த நிமிடத்தில் இருந்து உன் பெயரை சொல்லி கூப்பிடுகிறேன். தயவு செய்து இந்த கட்டையை அவிழ்த்து விடு டா என்று கேட்டுக் கொண்டு இருந்தாள்.
பக்கத்தில் இருந்தவனோ தன் பாசை பார்த்து... மனதில் கடவுளே எங்களை காப்பாற்றி யாரும் இல்லையா என்பது போல் அவனை பார்க்க...
எதிரில் நின்றவேனோ தன் முகமூடியை கழட்டினான்...
அடுத்த நொடி.... அடக்கமாட்டாமல் குலுங்கி குலுங்கி சிரிக்க...
இப்போது முதல் முறையாக சஞ்சனாவை பார்த்து... உன் பிரெண்ட்ஸ் யாரேனும் பிராங்க் பண்ணுறாங்களா என்று கேட்டான்.
அதற்கு அவளோ சில நொடிகள் எதுவும் சொல்லாமல் இருந்து விட்டு... இல்லை என்று மட்டும் தலை ஆட்டினாள்.
அதற்குள் அங்கே சிரித்துக் கொண்டு இருந்தவளோ டேய் நீ... நீ.... அந்த காட்டு குரல் மோகன் தானே நீ... இல்ல இல்ல அவன் இல்ல நீ.... ஆமாம் நீ ... நீ... ஹான் கண்டுபிடிச்சிட்டேன் ஜூனியர் குள்ள வாத்து ஜகன் தானே நீ என்று கேட்டாள்.
இப்போது சனாதன் சஞ்சனாவை பார்த்து சஞ்சனா தயவு செய்து சொல்... அவன் உங்களுடைய படித்த மாணவனா?.. பிராங்க் எதுவும் பண்றானா?.. மிதுனா இவ்வளவு ஜாலியாக பேசிக்கொண்டு இருக்கிறாள். அவளும் அமைதியாக இருக்கிறான் என்று மறுபடியும் அழுத்தமாக கேட்டான் சனாதன்.
சனாதன் கேட்ட கேள்விக்கு சஞ்சனா சொல்லிய பதிலில்... அங்கு இருந்த அனைவருமே... ஓ... காட் என்று நினைத்தனர்.
இணைந்திருங்கள்
சொல்லவா... வேண்டாமா...