• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 26, 2025
Messages
93
76. அழகியின் பிறந்த நாளிற்கு கோவிலுக்கு செல்ல ரெடியாகும் உறவுகள்...

அழகியின் மனதிற்கு தோன்றும் சஞ்சலம்...


எவ்வளவு நேரம் தான் என் தங்கையை தூக்கிக் கொண்டு இருப்பீர்கள்... உங்களுக்கு வேண்டும் என்றால் கை வலிக்காமல் இருக்கலாம்... ஆனால் அவளுக்கு கால் வலிக்கும் அல்லவா?.. காலில் அடிபட்டு இருக்குல்ல அதனால் அவளை இதோ இங்கே பத்திரமாக இந்த பெட்டில் அமர வையுங்கள் பார்க்கலாம் என்று கேலி செய்தாள்.


மிதுனாவின் பேச்சில் சிரிப்பு வர,
சரிங்க அண்ணியாரே... அண்ணியாரே சொல்லியதற்குப் பிறகு மறு அப்பில் ஏது என்று சொல்லிக் கொண்டே, தன்னவளை மிகவும் பத்திரமாக அங்கு இருந்த பெட்டில் அமர வைத்தான்.

அவளின் அருகிலேயே அவனும் அமர்ந்து கொள்ள கவிக்கு தான் மிகவும் தர்ம சங்கடமாக இருந்தது. யாரையும் நிமிர்ந்து பார்க்க முடியாமல் கீழே குனிந்த வண்ணமே அமர்ந்து இருந்தாள்.

அவளை இயல்பார்க்கும் பொருட்டு ருத்ரா.. அழகியை அழைத்து சாரி அழகி, நீ கேக் கட் பண்ணும் போது கீழே இவள் தூங்கிக் கொண்டு இருந்தாள் அது தான் உடனே மாடிக்கு வர முடியவில்லை.. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் டா என்று சொன்னான்.

ருத்ரா சொல்லியதும் கவியும் இயல்புக்கு வந்து அழகியை பார்த்து அக்கா இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என்று சொன்னாள்.

சரி எல்லோரும்.. இங்கே படுங்க காலையில் எழுந்து மற்ற வேலைகளை பார்த்துக் கொள்ளலாம். மணி ரொம்ப நேரம் ஆயிடுச்சு நாளைக்கு எல்லோருக்குமே ஆபீஸ்ல லீவு தான் என்று சொல்லி விட்டு, சரோஜா அனைவரையும் படுக்க சொல்லியவர்... லட்சுமி நீங்க கீழே என்னோட அறைக்கு வந்துடுங்க, அழகி என்னோட பின் பக்க ரூமில் தாத்தாவையும் அப்பாயியையும் தங்கிக்க சொல்லு, மற்றவர்கள் அனைவரும் இங்கே படுத்துக்கொண்டாலும் பேசிக் கொண்டே இருக்க கூடாது. அனைவரும் சீக்கிரம் படுத்து தூங்குங்கள் காலையில் எதுவாக இருந்தாலும் பேசிக் கொள்ளலாம் என்று சொல்லி விட்டு தன் மருமகன் லிபினை அழைத்துக் கொண்டு கீழே சென்றார்....

லிபின் கவனமாக சரோஜாவை தூக்கி செல்ல, வீல் சேரை லட்சுமி மா தள்ளி கொண்டு சென்றார். அறையில் சென்று படுக்க வைத்து விட்டு.... சரி அத்தை நானும் போய் படுக்க போறேன் என்று சொல்லி விட்டு, லட்சுமி மா நீங்க இதோ இந்த கட்டிலில் படுத்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு சௌகரியமாக இல்லை என்றால், வேற அறை காட்டவா அங்கு சென்று படுத்துக் கொள்கிறீர்களா என்று கேட்டான் லிபின்.

செல்லம் இந்த ரூம் ரொம்ப பெருசாவும் இருக்கு, கட்டிலும் நல்ல பெருசா தான் இருக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை நான் இங்கேயே அக்காவோட இருந்து கொள்கிறேன் என்று லட்சுமி மா சொல்ல... சரிங்க ஆன்ட்டி என்று கிளம்பிய லிபினை பார்த்து செல்லம்...

எனக்கு உனக்கு கட்டி கொடுக்கிற மாதிரி பிள்ளைகள் என்னிடம் இல்லை அதாவது எனக்கு பிள்ளைகளே இல்லை அதனால சஞ்சனா, புவனா எல்லோருக்கும் நான் அம்மா. நீங்க என்னை அத்தை என்று கூப்பிடலாமே எதற்கு ஆன்ட்டி சொல்றீங்க என்று கேட்டாள்.

ஓகே அத்தம்மா... இப்ப நான் குட் நைட் சொல்லவா?... குட் மார்னிங் சொல்லவா?... சரி ஏதோ ஒன்று இரண்டு பேரும் நன்றாக ஓய்வெடுங்கள். நான் போய் தூங்க போகிறேன் என்று சொல்லி விட்டு இருவரிடமும் புன்னகையோடு மாட்டிக்கு படுக்க போனான்.

பிறகு சிறிது நேரம் லட்சுமியும் சரோஜாவும் பேசிக்கொண்டு அப்படியே உறங்கினர்.

அதே போல் மாடியில் இருந்த இளையவர்கள்... ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தாலும் அனைவரும் அமைதியாக படுத்து உறங்கினர்.

விடியல் பொழுது அனைவருக்கும் நல்ல பொழுதாக விடியட்டும் என்று நாம் நினைக்க... விதி வேறு ஒன்று நினைத்து இருந்தது.

இரவு அனைவரும் தாமதமாக உறங்க காலையில் அனைவரின் முகங்களிலுமே வெய்யோன் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்த....

அப்பொழுது தான் ஒவ்வொருவராக சோம்பல் முறித்தவாறு எழுந்து அமர்ந்தனர்.

சரியாக அந்த நேரம் லட்சுமி மா... குடிப்பதற்கு சத்துமாவு கஞ்சி கொண்டு வர... ஒவ்வொருவராக சென்று பிரஷப் ஆகிவிட்டு வந்து... லட்சுமி அம்மாவிற்கு குட் மார்னிங் சொல்லிக் கொண்டு எடுத்துக் குடிக்க ஆரம்பித்தனர்.

அப்போது அங்கு பிரஷப் ஆகிவிட்டு வந்த லிபின் ஹாய் அத்தம்மா குட் மார்னிங் என்று சொல்ல...

இப்போது ஆண்கள் அனைவருமே அவனை வித்தியாசமாக பார்த்தனர்.

ருத்ரா டேய் என்ன டா புதுசா அத்தம்மா சொல்ற என்று கவிக்கு பிரஷப்பாக ஹெல்ப் செய்து கொண்டு கேட்டான்...

அதுவா அண்ணா... என்று இரவு அவர்கள் பீல் பண்ணியதை சொல்லி அதனால் தான் நான் அப்படி கூப்பிட்டேன் என்று சொல்ல....

இப்போது பெண்கள் அனைவரும் லக்ஷ்மி அம்மாவை கட்டிக் கொண்டனர்.

அதேபோல் மிதுன், தனா, ருத்ரா, கர்ணா லிபின், ரிஷி என்று ஆறு பேருமே லட்சுமி அம்மாவிடம் வந்து குட் மார்னிங் அத்தம்மா என்று சொல்லி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க...

குழந்தையும் இல்லை சில வருடங்களுக்கு முன்பு தன் கணவனையும் இழந்த லட்சுமி அம்மாவிற்கு.... தனக்கென்று குடும்பமாக கிடைத்தவர்கள் தான் உதயா வீட்டினர்... அவர்களின் கம்பெனிக்கு வேலைக்கு வந்தவர் தான் லட்சுமி அம்மாவின் கணவர்... உண்மையான ஊழியனாக கிட்டத்தட்ட 15 வருடங்களாக இருக்க குடும்பத்தில் ஒருவராக மாறிப் போனார் நாளடைவில்... அவரின் மறைவுக்குப் பிறகு இப்பவும் குழந்தைகளோடு குழந்தைகளாக இருக்கும் லட்சுமி மாவிற்கு இப்போது தான் வளர்த்த குழந்தைகளுக்கு... நல்ல வாழ்க்கை துணை அமையும் என்பதை காணும் போது.. கண்கள் கலங்கியது.

அப்போது சரண் தான். ஐயையோ போதும் மச்சான்ஸ்... உங்களோட இந்த பாச மழையில எங்க லட்சுமி மாவின் கண்களில் அருவி கொட்ட ஆரம்பித்தது என்றால்... பிறகு அதை நிப்பாட்டுவது கடினம் என்று.... சூழ்நிலையை இலகுவாக்க கலாய்த்தான்.

அப்போது ஆர்.கே.... அது தான் இங்கே ஒரு மைக் மோகன் இருக்கிறாரே அவர் பாட ஆரம்பித்தால்.. லக்ஷ்மி மா அழுகையை நிப்பாட்ட போகிறார்கள்... அது தான் நேற்றில் இருந்து அழகியின் அழுகையை நிப்பாட்டுவதற்காக தானே பாடல்களை பாடிக் கொண்டே இருக்கிறார்... என்ன ப்ரோ என்று கர்ணாவை பார்த்து கேட்க...

டேய் நேற்று வந்தவனுக்கு கூட தெரிந்து விட்டது உன் லட்சணம் என்று கர்ணாவை மிதுன் கலாய்க்க...

அனைவரும் காலையிலேயே ஆரம்பித்து விட்டீர்களா என்று லட்சுமி அம்மா தன் கண்களை துடைத்துக் கொண்டு... அதுவும் என்னை வைத்து, சரி கீழே வாருங்கள் என்று அனைவரையும் அழைத்துக் கொண்டு சென்றார்.

கீழே சரோஜா அத்தை, வீரா, முத்தாயி எல்லோரும் புது ஆடைகள் உடுத்தி தயாராக இருக்க...

கீழ வந்தவர்களை பார்த்து சரி போய் எல்லாரும் குளித்து அவரவர்களுக்கு வாங்கி வைத்து இருக்கும் புது ஆடைகளை உடுத்திக் கொண்டு வாருங்கள்... அனைவரும் கோவிலுக்கு செல்லலாம் என்று சொன்னார் சரோஜா...

எப்பப்பா எங்களுக்கு இல்லாம் டிரஸ் வாங்குனீங்க என்று லீனா, சரண் கேட்க...

ஹய்யோ மச்சான் நம்ம ஆர்கேக்கும் கூட புது ட்ரெஸ் எல்லாம் எடுத்தாச்சு என்று தனா சொல்ல...

அட அது தான் பா எப்படிப்பா எல்லாரும் இங்க தான் ஒன்றாக இருந்தோம். எப்படி எப்படி முடிஞ்சது என்று இப்போது சரண் ஆச்சரியமாக கேட்க...

எதுக்கு மச்சான் இவ்வளவு ஷாக் ஆகுறீங்க... மச்சான் அது எல்லாம் சரோஜா அத்தை உக்காந்த இடத்துல இருந்து எல்லாரையும் வச்சு வேலை வாங்கிடுவாங்க... எங்க அத்தையா கொக்கா என்று தனா சொல்ல...

ஆர்கே சரோஜா அருகில் வந்து, ரொம்ப சந்தோஷமா இருக்கு மா. எங்க கவி ரொம்ப கஷ்டப்பட்டுட்டா... ஒரு பொண்ணா அவளால எதுத்து எதுவும் செய்ய முடியாம அவ முடங்கி இருந்தால் அப்படினா, ஒரு ஆணாக நான் கூட அவளுக்கு துணைக்கு இருந்தும் என்னாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. நான் ரொம்ப குற்ற உணர்ச்சியில் நிறைய நாள் இருந்து இருக்கிறேன். ஆனால் அதற்கெல்லாம் வடிகாலாக இறைவன் இப்பொழுது உங்கள் மூலம் ஒரு அழகான குடும்பத்தை கொடுத்து இருக்கிறார்.

என்னையும் கவியையும் இந்த குடும்பத்தோடு ஒருவராக சேர்த்துக் கொண்டதற்கு நன்றி மா என்று கண் கலங்க...

இப்போது சரண் என்னடா மச்சான் இப்போ உனக்கு கர்ணா மச்சான் ஒரு பாட்டு பாடனுமா என்று கேட்டான்....

சரண் கேட்ட கேள்வியில் அனைவரும் சிரிக்க.. சரி சரி நேரமாகிட்டு எல்லோரும் போய் குளித்து கிளம்பி வாருங்கள் என்று அனுப்பி வைத்தார்.

சரோஜமா சொல்லியதும் அனைவரும் சென்று விட அழகி மட்டும் சரோஜாவின் அருகில் வந்து..

அம்மா எனக்கு எதுவோ மனதில் தவறாக நடக்க போவது போல் இருக்கிறது மா... இன்று கோவிலுக்கு சென்று தான் ஆக வேண்டுமா என்று தவிப்போடு கேட்டாள் அழகி.

செல்லம் எதுக்கும் கலங்காதே... நீ இப்படி சொல்கிறாய் என்றால் உன் மனதிற்கு ஏதோ தவறுதலாக படுகிறது என்று புரிகிறது. அதே நேரம் இன்று உன் பிறந்த நாள் இங்கு இருக்கும் அனைவரும் உன் பிறந்தநாளை மிகவும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அதை தடுக்காதே. அதே சமயம் வரும் ஆபத்தை அனைவரும் சேர்ந்து எதிர்கொள்வோம்... இவர்கள் யார் மீதாவது உனக்கு சந்தேகம் இருக்கிறதா என்று கேட்க...

ஐயோ அம்மா என்ன இப்படி எல்லாம் கேட்கிறீர்கள்... இங்குள்ள யாருக்கும் தொந்தரவு வந்துவிடக்கூடாது என்று தான் சொல்கிறேன். அதுவும் இல்லாமல் ஏதோ இங்கு நடக்கப் போகும் அசம்பாவிதத்துக்கும் எனக்கும் தொடர்பு இருக்குமோ என்று வேறு என் உள் மனதில் சொல்லிக் கொண்டே இருக்கிறது எனக்கு சொல்ல தெரியவில்லை பல வருடங்களுக்குப் பிறகு இந்த படபடப்பு இருக்கிறது என்று அவளின் பதட்டத்தை சொல்ல...

அதுவரை அவள் பேசிய அனைத்தையும் அவளுக்கு பின் இருந்து கேட்டுக் கொண்டு இருந்த கர்ணா...

மெய் என்ன இன்னும் இங்கேயே என்ன பண்ணிட்டு இருக்க... சீக்கிரம் போய் குளிச்சிட்டு கிளம்பி வா, உனக்காக தான் அனைவரும் கோவிலுக்கே செல்கிறோம் என்று சொல்ல....

இதுவரை தனக்குள் இருந்த மன குழப்பங்கள் அனைத்தும் இருந்த தடம் தெரியாமல் காணாமல் போக...

இதோ அத்தான் நான் போய் குளித்து விட்டு வருகிறேன் என்று வேகமாக சென்றவள் அவள் அறை வரைக்கும் சென்று திரும்பி வந்து...

அத்தான் ஒரு நிமிடம் நில்லுங்கள். இப்போ நீங்கள் என்னை மெய் என்று தானே அழைத்தீர்கள் என்று கேட்டாள்.


இணைந்திருங்கள்

சொல்லவா... வேண்டாமா...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top