• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 26, 2025
Messages
93
75.அழகியின் பிறந்தநாள் கொண்டாட்டம்...
அழகியின் கோரிக்கை நிறைவேறுமா...



மாடியில் இவர்கள் படுத்து இருந்ததற்கு எதிர்புறமாக ஒரு பகுதியில் அழகான மேடை அரேஞ்ச் பண்ணி அங்கு அழகாக டெகரேட் செய்யப்பட்டு, நடுவில் தேவதை அமைப்பில் அழகான ஒரு கேக் இருந்தது....

கண்கள் கட்டப்பட்டு இருந்த அழகியை கைத்தாங்களாக எழுப்பி அவளை அலங்கரிக்கப்பட்ட மேடைக்கு கூட்டிட்டு வந்தார்கள் மிதுனா, புவனா, சஞ்சனா லீனா என நம் பெண்கள் பட்டாளம்...

அங்கே அப்போது தான் பார்த்தார்கள்.. லட்சுமி அம்மாவும் அங்கு இருந்ததை, ...

அம்மா நீங்களும் இங்க தான் இருக்கீங்களா என்று சஞ்சனா புவனா மிதுனா மூவருமே ஒன்னா சேந்து கேட்க...

ஆமா கண்ணுங்களா மிதுன் தம்பி தான் கார் அனுப்பி வைத்தார். பத்து மணிக்கு இருக்கும் நான் வந்த போது, தம்பி தான் பின் பக்கமாக இங்க வந்து இருக்க சொல்லி விட்டு சென்றார்கள்.. நானும் இங்கு வந்து ஏதோ இருந்த சின்ன சின்ன வேலைகளை செய்து கொண்டு இங்கே இருந்தேன்... இதோ இங்க இருக்கிற பூவெல்லாம் நான் தான் ஆர்கனைஸ் பண்ணேன் நல்லா இருக்கா என்று கேட்டார் லட்சுமி மா...

உங்க கைவண்ணமே கைவண்ணம் தான் மா இதைக் கேட்கவும் வேண்டுமா என்று பேசிக்கொண்டு இருக்கும் போது சரி சரி எல்லாரும் பேசிக் கொண்டே இருந்தால் என்ன பாவம் அழகி கண்ணை கட்டி கொண்டு எவ்வளவு நேரம் நின்று கொண்டே இருப்பாள்... என லட்சுமி அம்மா சொல்ல...

இன்னும் அவள் பிறந்த நேரத்திற்கு 10 நிமிடங்கள் இருக்குமா... அவ சரியாக 12 மணி 25 நிமிடத்திற்கு தான் பிறந்தாள்.. அப்போது அவருடைய கண்களை திறந்து கொள்ளலாம் என்று வீல் சேரில் வந்த சரோஜா சொன்னார்.

அழகிக்கோ அனைவரின் குரலும் கேட்கிறது... கர்ணாவின் குரல் மட்டும் கேட்கவில்லையே என்ன ஆயிற்று? அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லையே என்று மனதிற்குள் புலம்பி கொண்டு இருந்தாள்... கடவுளே நான் இந்த வரைக்கும் பிறந்த நாட்கள் இந்த மாதிரி எல்லாம் கொண்டாடியதில்லை முதன் முதலில் எனக்கும் பிறந்தநாள் கொண்டாட்டம் நடக்கிறது இதுவரைக்கும் நான் இந்த நாளில் உன்னிடம் எதையுமே வேண்டியது இல்லை... இன்னும் சொல்லப்போனால் இந்த நாளை நான் என் அப்பா அம்மாவிற்கு பிறகு, வீராவிற்காக, முத்தாயிக்காக கோவிலுக்கு செல்வேன் அதோடு சரி... இது நாள் வரை நான் அதிகம் எதையும் நேசித்ததும் இல்லை... எதிர்பார்த்ததும் இல்லை. உன்னிடம் நான் எதையும் கேட்டதும் இல்லை... முதன் முதலில் கேட்கிறேன் என்னுடைய இந்த பிறந்தநாளிற்கு தயவு செய்து என் கண் கட்டை அவிழ்க்கும் போது நான் பார்க்கும் முதல் முகம் என் அத்தானாக இருக்க வேண்டும் என்னை ஏமாற்றி விடாதே என்று இறைவனிடம் வேண்டிக் கொண்டு இருந்தாள்...

இவ்வளவு நேரமும் கண்களை கட்டியிருந்தாலும் சுற்றிலும் எரிந்த விளக்குகளின் வெளிச்சத்தில் வெளிச்சமாக இருந்த இடம் ... அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு அப்படியே இருட்டாக மாறியது... அடுத்த நொடி பெண்கள் அனைவரும் ஹே என்று கத்த அழகிக்கோ கண்களில் இருந்து கண்ணீரே வந்துவிட்டது... இறைவா நான் அவ்வளவு பாவப்பட்ட ஜென்மமா என்று அழுக ஆரம்பித்த அந்த நொடி...

மீண்டும் அங்கே அனைத்து விளக்குகளும் எரிய ஆரம்பிக்க, இப்பொழுது கிட்டாரின் மெல்லிசையில்

நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்....
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்..

இளவேனில் உன் வாசல் வந்தாடும் இசைத்தென்றல் உன் மீது பண்பாடும்..

நலம் வாழ என்னாளும் என் உடலில் வாழ்த்துக்கள்....
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்..

மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம்...
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்...
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம்
தவறாகலாம்...

விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு....
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு...

இதில் என்ன பாவம் எதற்கு இந்த சோகம் கிளியே...
நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்....
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்......

கிழக்கினில் தோன்றும் தினம் கதிரானது...
மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது...
கடலில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது....
நிலவினை நம்பி இரவுகள் இல்லை...
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை..
ஒரு வாசல் மூடி மறு வாசல் வைப்பான் இறைவன்...

நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்....
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்..

என்று பாடலை பாடிக்கொண்டு கர்ணா அழகியின் முன் வந்து நிற்க...

அவன் பாடியது கேட்டு மனம் நெகிழ்ந்து இருந்தாலும்... தன் அத்தானின் வாயில் இருந்து வரும் மெய் என்ற அழைப்பிற்காக அவன் முகம் பார்த்து ஏங்கிப் போய் நின்றாள்....

அவளின் ஏக்கம் புரிந்தவன் அவளை ரொம்பவும் சோதிக்காமல், ஆனாலும் அதே சமயம் தன்னுடைய கொள்கையில் இருந்து விட்டுக் கொடுக்காமல், பேச்சை இயல்பாக மாற்றி வா அழகி கேக் கட் பண்ணலாம் மணி ஆகிவிட்டது என்று கேக்குக்கு அருகில் அழைத்துச் சென்றான்.

கர்ணாவின் மனம் புரிந்தாலும்.. அவனின் அழகி என்ற அழைப்பு மனதிற்கு வருத்தம் தந்தாலும்.. மனதிற்கு சங்கடமாக இருக்க மற்றவர்களுக்காக அதை காட்டிக் கொள்ளாமல்... தன் கைபிடித்து கூட்டிச்செல்லும் தன் அத்தானின் கைகளை இறுக பற்றி கொண்டு அவனோடு நடந்தாள்...

அழகியின் கைகள் தன் கைகளை பிடித்திருக்கும் விதத்திலேயே புரிந்தது அவர் தன்னிடம் என எதிர்பார்க்கிறார் என்று ஆனால் அவனின் எதிர்பார்ப்பை அவள் பூர்த்தி செய்யாமல் அவனும் அவளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய மாட்டேன் என்று அவனும் பிடிவாதத்தோடு...

அவளைக் கேக் கட் பண்ண சொல்லி அவளின் கைகளை எடுத்து விட்டான் கர்ணா.

அங்கு இருப்பவர்கள் அனைவருக்குமே இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் காதல் பனிப்போர் தெரிந்ததால் யாரும் கண்டு கொள்ளாமல் அவர்கள் விருப்பம் போல் இருக்க விட்டு அமைதியாக இருந்தனர்.

அழகியும் சரியாக நேரம் வர கேக்கை கட் செய்தால் மற்றவர்களுக்காக... ஆனால் அவளின் பார்வை முழுவதும் கர்ணாவின் மீது மட்டுமே இருந்தது.

முதலில் கட் செய்து கர்ணாவிற்கு தான் ஊட்டி விட்டாள்... அவனும் இந்த மறுப்பும் சொல்லாமல் விஷ் யு ஹாப்பி பர்த்டே அழகி என்று சொல்லி வாங்கிக் கொண்டான்.

மெய்யழகி என்று கூட சொல்ல மாட்டீர்களா அத்தான் என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் மெதுவாக கேட்டாள் கர்ணாவின் மெய்.

என்னை பொறுத்தவரை நான் நினைத்ததை என்றும் சாதிப்பவன்... நான் நினைப்பது எதுவுமே நியாயமானதாக தான் இருக்கும் அதனால் என்றும் நான் என் நிலையில் இருந்து இறங்கி வரமாட்டேன் என்று அவனும் மற்றவர்களை பார்த்துக் கொண்டு இயல்பாக செல்வது போல் சிரித்துக் கொண்டே அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாக சொன்னான்.

சரிங்க அத்தான் நீங்கள் உங்கள் மனம் போல் இருங்கள்... அதே தான் நானும் என் மனம் போல் இருக்கிறேன் என்று சொல்லி விட்டு, அழகியும் அதே பிடிவாதத்துடன்... கர்ணாவிடம் இருக்கும் தன் மனதை மாற்றி, அங்கு இருந்த மற்றவர்களுக்கு கேக்கை கட் பண்ணி கொடுத்துக் கொண்டு இருந்தாள்.

யாருக்கு கொடுத்தோம் எவ்வளவு கொடுத்தோம் என்ற எண்ணம் எல்லாம் எதுவும் பதியாமல், ஒரு இயந்திரம் போல் அனைவருக்கும் கேக்கை கட் பண்ணி கொடுத்து, அவர்கள் கூறும் வாழ்த்து மொழிகளுக்கு போலியாக புன்னகைத்துக் கொண்டு இருந்தவளுக்கு.... அழுகை முட்டிக்கொண்டு வர கீழே செல்லலாம் என்று நினைக்கும் பொழுது...

என் தாயீ எங்கள் இருவருக்கும் கேக் கிடையாதா என்று கேட்ட குரல்களை கேட்ட பிறகு... அவளால் கீழே செல்ல முடியுமா என்ன சட்டென்று திரும்பி பார்க்க அவளுடைய வீராவும்,முத்தாயும் பட்டு வேட்டி, பட்டு சட்டையில் வீராவும், தன் பேத்திக்கு பிடிக்கும் என்று சுங்குடி சேலையில் கண்டாங்கி சேலை போல் கட்டி கொண்டு முத்தாயும் நிற்க...

இப்போது இருவரையும் வேகமாக கட்டிக்கொண்டு வீரா... ஆஆ... என்று கதறி அழுதாள்.... எப்படி அழுவது என்று நினைத்து தயங்கி கொண்டு இருந்தவளுக்கு... இப்பொழுது தன் அப்பாயியையும் தாத்தாவையும் பார்த்த அடுத்த நொடி எந்த தங்கு தடையும் இல்லாமல் அழுக ஆரம்பித்து விட்டாள்.

கர்ணாவோ இவள் அழுகுவதற்கு வாய்ப்பு கிடைத்து விட்டதா? இவள் அழுகையை எப்படி நிப்பாட்டுவது என்று தெரியாமல் விழித்துக் கொண்டு இருக்க...

ஆபத் பாண்டவனாக ருத்ரா தன்னுடைய கவியை கைகளில் ஏந்தி கொண்டு மாடிக்கு வந்து கொண்டு இருந்தான்.

உடனே அங்கு இருந்த மைக்கை எடுத்து....

கனவா!! இல்லை காற்றா!!
கனவா!! நீ காற்றா!!

கையில் மிதக்கும் கனவா நீ!!
கை கால் முளைத்த காற்றா நீ!!

கையில் ஏந்தியும் கனக்கவில்லையே!!
நுரையால் செய்த சிலையா நீ!!
இப்படி உன்னை ஏந்தி கொண்டு இந்திரலோகம் போய் விடவா!!
இடையில் கொஞ்சம் வலி எடுத்தாலும்!! சந்திர தரையில் பாயிடவா...!!

கையில் மிதக்கும் கனவா நீ!!
கை கால் முளைத்த காற்றா நீ!!

கையில் ஏந்தியும் கனக்கவில்லையே!!
நுரையால் செய்த சிலையா நீ!!

என்று பாட்டு பாட ஆரம்பிக்க அங்கு இருந்த அனைவரின் கவனமும் இப்போது கவி ருத்ராவின் மேல் செல்ல... அழகியாளும் அதற்கு மேல் அழுக முடியாமல், இப்போது அவளும் தன் தாத்தா அப்பாயியோடு சேர்ந்து கவி ருத்ராவை பார்க்க....

இருவருக்காக பாட்டு பாடி கொண்டு இருப்பது என்னமோ கர்ணா தான். ஆனால் கவி ருத்ரா இருவருமே அந்த படத்தில் வருவது போல் வேறு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டு தான் மாடிக்கு ருத்ரா கவியை தூக்கிக் கொண்டு வந்தான்.

மாடிக்கு வந்த பிறகு தான் இருவருமே கர்ணா பாடிக் கொண்டு இருப்பதை கேட்க.. ருத்ராவிற்கு வெட்கம் கலந்த மகிழ்ச்சி தான் என்றாலும்... மற்றவர்கள் யாரையும் கவனிக்காமல் தன் கவியை பார்த்துக் கொண்டே இருந்தான்.

கவி நிலமையோ அதை விட மோசம் அவன் அவன் நெஞ்சில் தன் முகத்தை பதிய வைத்தவள் ... அப்படியே அவன் கழுத்தை இறுக்கமாக கட்டிக்கொண்டு யாரையும் பார்க்க முடியாமல் தவிக்க அவளின் அவஸ்தைகளை ரசித்துக் கொண்டு இருந்தான் ருத்ரா.

அப்போது மிதுனா தான் வேகமாக சென்று ஐயோ கொழுந்தனாரே..

எவ்வளவு நேரம் தான் என் தங்கையை தூக்கிக் கொண்டு இருப்பீர்கள்... உங்களுக்கு வேண்டும் என்றால் கை வலிக்காமல் இருக்கலாம்... ஆனால் அவளுக்கு கால் வலிக்கும் அல்லவா?.. காலில் அடிபட்டு இருக்குல்ல அதனால் அவளை இதோ இங்கே பத்திரமாக இந்த பெட்டில் அமர வையுங்கள் பார்க்கலாம் என்று கேலி செய்தாள்.

மிதுனாவின் கேலியில்..

விடியலில் இவர்களுக்கு என்ன காத்திருக்கிறதோ?


இணைந்திருங்கள்

சொல்லவா... வேண்டாமா...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top