- Thread Author
- #1
74. அழகான காதலும்....
அழகியின் பிறந்தநாள் சஸ்பென்ஸ் ...
கவிப்பிரியாவை பற்றி அனைவரும் தெரிந்து கொண்ட பிறகு அனைவரையும் உறங்க சொல்ல அனைவருக்கும் படுக்கையை மாடியில் போட சொல்லி இருந்தான் மிதுன். அதே போல் அனைவரும் பெண்கள் ஒரு பக்கம் ஆண்கள் ஒரு பக்கமாக படுக்க...
இவ்வளவு நேரமும் கவிப்பிரியாவை பற்றி பேசிக்கொண்டு இருந்தவர்கள் அனைவரும் அவள் நினைப்பிலேயே ஒவ்வொரு மனநிலையில் படுத்து உறங்க... அழகி மட்டும் எழுந்து அமர்ந்து தனக்கு எதிராக படுத்து இருக்கும் கர்ணாவை பார்த்துக் கொண்டு அமைதியாக அமர்ந்து இருந்தாள்.
கர்ணாவுக்கும் படுத்தவுடன் உறக்கம் வராமல் அழகி என்ன பண்ணுகிறாள் என்று பார்க்கலாம் என்று நினைத்து திரும்பி படுக்க, அவள் அமர்ந்து இருப்பது தெரிய அப்படியே படுத்துக் கொண்டான் எழுந்து கொள்ளாமல்...
அவள் பார்வை என்னவோ கர்ணா மீது இருந்தாலும் எண்ணம் எல்லாம்... அவனின் மெய் என்ற அழைப்புக்காக மனம் ஏங்கி தவிக்க.. மற்றவர்களுக்கு முன்பு மாமா என்று அழைத்தவள் இப்போது எதைப் பற்றியும் சிந்திக்காமல் எல்லோருக்கும் முன்புமே அவனை அத்தான் என்று அழைக்கிறாள் என்பதை மறந்து விட்டாள்.
அதோடு அவனை வேண்டாம் என்று சொல்வதும் அவள் .. தான் என்பதையும் மறந்து விட்டு அவனிடம் மட்டும் தன்னை அவாய்ட் பண்ணுவதை நினைத்து கோபப்பட்டு கொண்டு அமர்ந்து இருந்தாள்...
அழகியின் மனநிலையை அவளாகவே உணர வேண்டும் என்பதற்காகத்தான் அவனும் அவளை விட்டு பிடிக்க... அவளோ எதையும் யோசிக்காமல் தன்னை கர்ணா அவாய்ட் செய்வதை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு மறுகினாள்.
அவள் கண்களில் இருந்து கண்ணீர் வர.. அவளைப் பார்த்துக் கொண்டே படுத்து இருந்த கர்ணாவிற்கு இதயம் வலிக்க ஆரம்பித்தது.. அடியே லூசு.. நீயும் லூசு மாதிரி இருந்து .. என்னையும் லூசு ஆக்குறாளே இவ.. என்று மனதில் புலம்பி கொண்டவன் இதற்கு மேல் விட்டால் இவள் அழுது மொட்டை மாடியில் கப்பல் விட வைத்து விடுவாள்... அப்புறம் எல்லோரும் அய்யோ மொட்டை மாடி வரைக்கும் மழை பேஞ்சு வெள்ளம் வந்துருச்சுன்னு பயந்துருவாங்க என்று சொல்லிக் கொண்டே.. படுத்துக்கொண்டே தலையை மட்டும் அங்கும் இங்குமாக திருப்பி பார்க்க... அனைவரும் சீராக தூங்கிக் கொண்டு இருந்தார்கள்.
இப்போது மெதுவாக எழுந்து அமர்ந்தான் கர்ணா...
அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாளே தவிர அழகி அவன் உட்கார்ந்ததை கவனித்தால் என்றால் இல்லவே இல்லை... அவள் அவளுக்கான உலகில் சஞ்சரித்துக் கொண்டு இருக்க... தன்னவன் நினைப்பில்.. அவனின் ஒதுக்கத்தில் கண்ணீர் மட்டும் வழிந்து கொண்டே இருந்தது.
இப்போது மெதுவாக அவள் பக்கம் தவழ்ந்து சென்றான்... அவள் அப்படியே அமர்ந்து இருந்தாள்....
கர்ணா அப்படியே அவளை தன் நெஞ்சோடு சாய்த்துக்கொள்ள... அவ நெஞ்சில் வாகாக சாய்ந்து கொண்டவள்....
ஏன் அத்தான் இப்போ எல்லாம் என்னை மெய் என்று கூப்பிட மாட்டேன் என்று அடம் பிடிக்குறீங்க... என்னை இதுவரை யாரும் அது போல் அழைத்ததே இல்லை... எல்லோரும் அழகி என்று தான் கூப்பிடுவார்கள்.. என்னை முதன் முதலில் மெய் என்று கூப்பிட்டது நீங்கள் தான். எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும் அத்தான்... உங்களை நான் மிகவும் நேசிக்கிறேன்.. உங்க கூட கடைசி வரைக்கும் இருக்கணும்னு ஆசைப்படுகிறேன். உங்களை நான் முதல் முதலில் பார்த்த அந்த நிமிடம் எனக்குள் அப்படியே நீங்கள் வந்து விட்டீர்கள்... ஆனால் என்ன செய்வது நான் ஒரு அதிர்ஷ்டம் இல்லாதவள்...
உன் தடம் தேடி....
மேகமென சுற்றி அலைகிறேன்...
நீ இருக்கும் ஒர் இடம்...
அறியாமல்....
நான் வந்த வழித்தடங்கள் யாவும்...
உன்னை பற்றி சொல்ல...
தென்றலில் களையும் மேகமாகிறேன்...
களையும் மேகமாய்
என் மனம் துடிக்க....
என் நில வழித்தடங்கள் கூட...
வான் வழித்தடங்களாக
நிலையற்று இருக்கிறது.....
சந்திரனாய் குளிர வைத்தாய்...
நட்சத்திரங்களாய் மிளிர வைத்தாய்...
களையும் மேகமாயினும்
தென்றலாய் சுகம் தந்தாய்...
கன்னியின் மதிக்கு தெரிகிறது கன்னியின் தவறு...
ஏனோ கன்னியின் மனது...
வெய்யோனாக என்னை விட்டு
தள்ளியே இருக்க சொல்கிறது....
நான் என்ன பண்ணுவேன் அத்தான்... எனக்கு நீ வேணும்னு ஒரு மனசு சொல்லுது.. ஆனால் என்னால் உனக்கு எந்த சந்தோஷமும் கிடைக்குமானு தெரியலையே அத்தான்... என் இளமையை அதில் வரும் காதலை நான் உணரும் முன்பே திருமணம் என்ற பெயரில் என்னை நாசம் செய்து விட்டானே... என்று புலம்பினாள்... விரக்தி சிரிப்பை சிந்தியவள்...
திடீரென்று குறும்பு புன்னகையுடன்
நான் பிசிக்ஸ் இல்ல இல்ல அதுக்கு என்ன சொல்லுவாங்க ஹான்... ம்ம்... கெமிஸ்ட்ரி .. அதுல ரொம்ப வீக் நான் என்ன பண்ணுவேன் அத்தான்... அந்தப் பாவி பையன் என்ன ரொம்ப சோதிச்சிட்டான்...
நீயே பாரு என் மாரை என்று அவளுடைய சேலையை விளக்கி காட்ட போனவள்... அச்சச்சோ நம்ம மாடில தானே இருக்கும் எல்லோரும் தூங்கிட்டு இருக்காங்க நான் பார் ஏதேதோ உளறிக்கிட்டு இருக்கேன்... சரி சரி நான் தூங்குறேன் நீயும் போய் தூங்கு, காலைல மெய் மட்டும் கூப்பிடு என்று சொல்லி விட்டு அமைதியாக அவன் மடியில் அப்படியே படுத்து கொண்டாள் கர்ணாவின் மெய்....
அவள் உறங்கி விட்டாள்.... அவள் பேசியதை கனவில் பேசியதாக நினைத்துக் கொண்டு அவள் படுத்து விட்டாள். ஆனால் அவளை தாங்கிக் கொண்டு இருந்தவனின் கண்கள் இப்போது கண்ணீரை சிந்தி கொண்டு இருந்தது...
அவள் அருகில் படுத்திருந்த லீனா, புவனா, மிதுனா மூவருமே அவள் பேசிய அனைத்தையும் கேட்டு மனம் கனத்து போக.. கடவுளே இந்த இரண்டு பெண்களுக்கும் அவர்களுக்கு மனதில் இருக்கும் காயங்கள் நீங்க, நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் நீங்கள் தான் என்று... மனதார வேண்டிக் கொண்டு படுத்து உறங்கினார்கள்.
சனாதனிடம் இருந்து வேகமாக சஞ்சனா மாடிக்கு வர... அங்கே கர்ணா, அழகி இருவரின் நிலைமையும் கண்டு விட்டு அப்படியே வராமல்... மாடி படியின் வாசலிலேயே நிற்க...
என்ன இவ அவ்வளவு வேகமாக வந்து விட்டு ... இங்கே ஏன் நிற்கிறாள்... அதுவும் ஏன் இப்படி ஒரு ஓரமாக மறைந்து நிற்கிறாள் என்று அவனும் மெதுவாக வந்தவன்... அவளை போலவே மெதுவாக மறைந்து நின்று அவளுக்கு பின்னால் இருந்து பார்க்க...
அங்கே தன் தம்பியும் அழகியும் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்து விட்டு அவனும் அப்படியே அமைதியாகவே நின்று கொண்டு இருந்தான்.
அங்கு அழகி படுத்து உறங்கியதும்...
கர்ணா அழுது கொண்டு இருப்பதை பார்த்தவள்...
ஐயோ இந்த லூசு சனு எங்க போய் தொலைஞ்சுச்சு... எவ்வளவு நேரம் நான் இப்படியே நிற்பது...
இந்த அண்ணன் தம்பிங்க எல்லாரும் சரியான மஞ்ச மாக்காண்களா இருக்காங்க... அழகா லட்டு மாதிரி பொண்ணுங்க இருக்கும் போது.. இப்படி அழகான ஒரு ராத்திரி கிடைச்சு இருக்கு அழகா ஜாலியா என்ஜாய் பண்ணாம...
ஏதோ கும்பகர்ணன் தம்பி மாதிரி எல்லாம் படுத்து தூங்குதுங்க... சுத்த வேஸ்ட்... அதில் கில்லாடி நம்ம ருத்ரா மாம்ஸ் தான்... ஒரே நாள்ல லவ் பண்ணி ஒரே நாளில் ரொமான்ஸ் பண்ணி எவ்வளவு அழகா இந்த பேக்குகளோட சேராமல் நழுவி விட்டார் என்று பொறுமி கொண்டு இருந்தவளை..
பின் இருந்து அப்படியே கட்டிப்பிடித்து அவளின் கழுத்தில் முகம் புதைத்தான் சனாதன்.
அவ்வளவு தான் இவ்வளவு நேரமும் ஓயாமல் புலம்பி கொண்டு இருந்த வாய்... பெஃபி குயிக் போட்டு ஒட்டியது போல் ஒட்டிக்கொள்ள...
சிறிது நேரம் சஞ்சனாவின் கழுத்தில் அவளின் வாசத்தை முகர்ந்து கொண்டு இருந்தவன்... அப்படியே பின்னிருந்து அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து மிகவும் மெதுவாக ஓய் .... சனா என்ன இது ஓகே வா என்று கேட்டான்...
அவளோ அவன் மூச்சுக் காற்றின் சூட்டில் தன்னை மறந்து நின்றாள்.
சஞ்சனாவின் நிலையை நினைத்து மனதிற்குள் சிரித்துக் கொண்டவன்... ஓய் என்ன .. டி.. பொண்டாட்டி... இதுக்கே இப்படி ஃப்ரீசாகி போய் நின்னா... நாங்கள் என்ன செய்வது...?... ஹலோ சானா பேபி என்று இப்போது அவளை தன் பக்கமாக திருப்பி அவளின் இடையோடு கைகோர்த்து தன் பக்கம் இழுத்து அணைத்துக் கொள்ள...
இப்போது அவ்வளவு நெருக்கத்தில் சனாதனின் முகத்தை பார்த்தவள்... கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருக்க...
சனாதனும் அவளின் பார்வைக்கு சளைக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தான்...
சிறிது நேரம் இருவருமே அப்படியே இருக்க திடீரென்று அங்கு...
ஹேய்... என்று அனைவரும் கத்தும் சத்தம் கேட்டு சட்டென்று இருவரும் விலகியவர்கள்...
மாடியை பார்க்க அங்கு...
இவ்வளவ நேரமும் இருட்டாக இருந்த மாடி முழுவதும் ... அப்படியே வண்ணமயமாக காட்சியளித்தது. ஏதோ ஒரு பெரிய ஸ்டார் ஹோட்டல் போல் தெரிந்தது..
அங்கே படுத்து இருந்த அனைவரும் அழகாக அமர்ந்து இருக்க அதிலும்... அழகியின் கண்கள் கட்டப்பட்டு இருந்தது.
சனாதன் சஞ்சனாவை பார்த்து ஏய் சீக்கிரமா வா என்று கூப்பிட... ஐயோ சாமி ஒரு நிமிஷம் இருங்க, இங்க என்ன நடக்குது என்று கேட்டாள் சஞ்சனா.
உன்னோட செல்லுல மெசேஜ் அனுப்பி இருப்பாங்க... ஆனால் நாம் தான் இப்போது வேற உலகத்தில் இருந்தோமே அதனால தான் உனக்கு தெரிய வாய்ப்பில்லை. இன்னைக்கு அழகியோட பர்த் டே. அவளுக்கான செலிப்ரேஷன் தான் இங்கே நடக்க போகுது அதனால தான் மாடியில் எல்லாரும் படுக்கறதுக்காக, படுக செட் பண்ணி வச்சான் மிதுன். சரி ரொம்ப நேரம் நிக்க வேணாம் வா போகலாம் என்று சொல்லி .. வினாடி நேரத்திற்குள் அவளை கதவிற்கு பின்னே இழுத்து கட்டிப்பிடித்து கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்து விட்டு சட்டென்று வெளியே வந்து மாடிக்கு போய்விட்டான்.
ப்ரீசிங் மோடில் நின்று கொண்டு இருந்த சஞ்சனாவை பார்த்து... இவனுங்களையா நீ மஞ்ச மாக்கான்னுங்க சொன்ன என்று அவளுடைய மனசாட்சி கேட்பது போல் இருக்க, தன்னை உலுக்கி கொண்டவள் அடச்சே என்று சொல்லி விட்டு அவளும் மாடிக்கு சென்றாள்...
மாடியில் இவர்கள் படுத்து இருந்ததற்கு எதிர்புறமாக ஒரு பகுதியில் அழகான மேடை அரேஞ்ச் பண்ணி அங்கு அழகாக டெகரேட் செய்யப்பட்டு, நடுவில் தேவதை அமைப்பில் அழகான ஒரு கேக் இருந்தது....
கண்கள் கட்டப்பட்டு இருந்த அழகியை கைத்தாங்களாக எழுப்பி அவளை அலங்கரிக்கப்பட்ட மேடைக்கு கூட்டிட்டு வந்தார்கள் மிதுனா, புவனா, சஞ்சனா லீனா என நம் பெண்கள் பட்டாளம்...
அங்கே அப்போது தான் பார்த்தார்கள்.. லட்சுமி அம்மாவும் அங்கு இருந்ததை, ...
அம்மா நீங்களும் இங்க தான் இருக்கீங்களா... இதெல்லாம் எப்போ எப்படி என்று பெண்கள் அனைவருமே கேட்டனர்.
இணைந்திருங்கள்
சொல்லவா... வேண்டாமா...