- Thread Author
- #1
73. சஞ்சனாவிடம் மாட்டிக்கொண்ட சனாதன்...
ருத்ர கவிப்பிரியாவின் காதல்...
சரோஜாவின் அறையில் தன் தோழியின் உணவு மற்றும் அவளுடைய அவல நிலையை சொல்லி கொண்டே வந்த ரஞ்சித், அதற்கு மேல் பேச முடியாமல் போக சரோஜாவின் மடியிலே படுத்து அழுது கொண்டு இருந்தான்...
அங்கு இருந்த ஒவ்வொருவருமே அவன் சொன்ன விஷயங்களை கேட்டு கண் கலங்கி அமர்ந்து இருக்க... சனாதன் மட்டும் கோபத்தோடு எழுந்து வெளியில் சென்றான்.
சரோஜாமா ரஞ்சித்தின் தலையை அமைதியாக வருடி கொடுக்க அவன் அப்படியே அமைதியாக படுத்து இருந்தவன்... ஆஹா அவர்களுக்கு கால் வலிக்குமே என்று வேகமாக எழுந்து மன்னிப்பு கேட்டான் ரஞ்சித் .
டேய் ஒரு குழந்தையை பெற்று எடுக்கும்போது வலிக்காத வலியை ஆடா இப்போது நான் அனுபவிக்க போகிறேன் எனக்கு தான் அந்த பாக்கியம் இல்லை இது போல் உங்களை தாங்கும் பாக்கியமாவது எனக்கு கொடுங்கள் என்று சொல்ல அம்மா என்று கதறி அவர்களை கட்டிப்பிடித்துக் கொண்டான் ரஞ்சித்.
இப்போது மிதுன், கர்ணா, லிபின் மூவரும் கூட தங்கள் அத்தையை பார்த்து விட்டு அவர்களுக்கு அருகில் சென்று அவர்களுக்காக இருக்க.. பெண்களும் அமைதியாக அவருக்கு ஆறுதலாக அவர் அருகில் நின்று கொண்டு இருந்தார்கள்.
சூழ்நிலையை இலகுவாக அழகி தான் சரி சரி அனைவரும் சென்று அவர் அவருக்கு விருப்ப பட்ட அறையில் படுத்து உறங்குங்கள். காலையில் பார்த்துக் கொள்ளலாம் அம்மாவுக்கு மாத்திரை கொடுக்க வேண்டும்... என்று சொல்ல...
நிறைய அறைகள் இருந்தாலும் அனைவரையும் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றான் மிதுன்.
அங்கே ஒரு பக்கமாக இருக்கும் மற்றொரு பக்கம் பெண்களுக்கும் படுக்கை வசதிகள் செய்யப்பட்டு இருக்க...
இப்படி ஒரு மன கஷ்டத்தோடு இங்கு வந்து படுக்க வருவோம் என்று நினைக்கவில்லை நீங்கள் அனைவரும் வருகிறீர்கள் என்று தெரிந்ததால் இப்படி ஏற்கனவே செட் செய்ய சொல்லி இருந்தேன் சரி இப்போது யாரும் இதைப் பற்றியும் யோசிக்காமல் சென்று உறங்குங்கள்..
இனி பிரியாவின் பொறுப்பு நம் அனைவருடையது...
அவளுக்கு இனி ஒரு துன்பமும் நேராது அவள் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் இன்றோடு முடிந்து விட்டது என்று நினைத்து விட்டு காலையில் எழும் போது அனைவரும் அவரது இயல்பான குணத்தோடு எழுந்திருங்கள் என்று சொல்லி விட்டு, மிதுன் சென்று ஒரு மெத்தையில் படுக்க...
அதே போல் அங்கு அனைவரும் விரிக்கப்பட்டு இருந்த ஒரு ஒரு மெத்தையில் சென்று படுத்துக் கொண்டனர்.
சனாதனை தொடர்ந்து சென்ற சஞ்சனா பார்க்க அங்கு சனாதன் யாரிடமோ கோபமாக பேசிக் கொண்டு இருந்தான். ஒன்று இரண்டுக்கும் மேற்பட்ட போன் கால்ஸ் பண்ணி விட்டு திரும்பி பார்க்க அங்கே சஞ்சனா நின்று கொண்டு இருந்ததை பார்த்து விட்டு அவளிடம் வந்தவன்..
ஹே சனா என்ன இங்க நிக்கிற வா.. எல்லாரும் படுப்பதற்கு மாடியில் அரேஞ்ச் பண்ணி இருக்கிறான் மிதுன். மணி ரொம்ப நேரம் ஆயிடுச்சு படுக்க போகலாம் வா என்று அழைக்க,
சஞ்சனாவும் ஏன் சனு யாரிடம் இவ்வளவு கோபமாக போனில் பேசிட்டு இருந்தீங்க என்று கேட்டாள்.
நாளைக்கு ஆபீஸ்க்கு போகும் போது உனக்கு எல்லா விஷயமும் புரியும். இப்போது அமைதியாக வா... போய் படுக்கலாம் ரொம்ப அசதியாக இருக்குது என்று சொன்னான்.
ஆனால் அப்போதும் அவள் அப்படியே நிற்க ... அவள் முகம் மட்டும் களை இழந்து போய் இருந்ததால் அவள் அருகில் வந்தவன்... என்ன டா ... என்ன ஆச்சு ... ஏன் ஒரு மாதிரி இருக்க என்று கேட்ட அடுத்த நொடி...
அவனை இறுக கட்டி பிடித்துக் கொண்டவள் அழுக ஆரம்பித்து விட்டாள்.
சிறிது நேரம் அவள் அழுகட்டும் என்று அவளை அணைத்தவாறு அவளின் முதுகையை நீவி விட்டுக்கொண்டு அமைதியாக நின்றான் சனாதன்.
அவளின் அழுகை மட்டு பட்டு இப்போது அழுகை முழுவதும் கேவலாக மாற...
என்ன டா ... என்ன ஆச்சு ... என்ன மா... இப்படி எதுவும் சொல்லாமல் அழுது கொண்டே இருந்தால் எப்படி டா... என்று கேட்க...
அவளோ அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டே... நம்ம அழகி, இப்ப பிரியா இவர்கள் வாழ்க்கையில் எல்லாம் ஆண்டவன் ஏன் இவ்வளவு கொடுமைப்படுத்தி இருக்கிறான் சனு...
இவர்களின் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை எல்லாம் கேட்கும் பொழுது, அந்த நேரங்களில் நாம் எல்லாம் எவ்வளவு சந்தோஷமாக இருந்து இருக்கிறோம் என்று நினைக்கும் போது... மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது சனு என்று விம்மி விம்மி கொண்டு இருந்தாள்.
ஏய் சனா... லூசா நீ.... எதற்கு எதை முடித்து போட்டு பேசுகிறாய்... உன்னை நான் மிகவும் புத்திசாலி என்று நினைத்தேன். நீ என்ன சிறுபிள்ளை போல இருக்கிறாய் என்று அவன் அவளை கேலி செய்து அவளை இயல்பாக்க நினைத்தான் சனாதன்.
ஹலோ சனு... ரொம்பவும் என்னை கிண்டல் பண்ண ஆரம்பிச்சுடாத இது தான் சந்தர்ப்பம் என்று... நான் எல்லாம் எப்பவுமே புத்திசாலி தான். ஆனாலும் தொடர்ந்து இரண்டு நாட்களாக இரண்டு பெண்களின் வாழ்க்கை முறைகளை கேட்டு ... மனதிற்குள் ஒரு சிறு நெருடல், சங்கடம் அது தான் என்னால் கண்ட்ரோல் பண்ண முடியவில்லை என்று, அவன் மார்பில் சாய்ந்து கொண்டே மூக்கை உறிஞ்சி கொண்டு பேசினாள்..
சரி சரி நீ ரொம்ப புத்திசாலி தான்... நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் இப்போது என்னோட ஷர்ட்டை வீணாக்காமல் கொஞ்சம் நகர்ந்து நிற்கிறாயா என்று கேட்டான் சனாதன்.
இவ்வளவு நேரமும் அவனை கட்டிப்பிடித்து நின்று கொண்டு இருந்தது மறந்து,
ச்சீ.. கருமம்... ஏன் டா என்று சொல்ல வந்து விட்டு, ஏனோ தடுமாறியவள் ... அப்படி சொல்லாமல்...
ஆமா பெரியதுரை இவரு ... இவரு சட்டை நாங்க கசக்கி அதுல எங்க கண்ணீர் தண்ணீர் பட்ட உடனே இவருடைய 1000 ரூபாய் ஷர்ட் ... கிழிஞ்சு போய்விடும், அப்படியே கிழிந்து போனா?... அது ஒரு நல்ல ஷார்ட் ஆகுமா?. பெரிசா பேச வந்துட்டாரு என்று முனகி கொண்டே, அவனை தள்ளி விட்டு ... சென்றாள் சஞ்சனா..
அவள் சென்ற பின்பு ஐயோ... எப்பா... என்ன டா இது... சட்டென்று வந்து கட்டிபிடித்து கொண்டாள்... நல்ல வேளை அழுக ஆரம்பித்தாலள்... வேறு ஏதாவது பேசி இருந்தால்... ஐயோ என் நிலைமை என்ன ஆகி இருக்கும்.. நான் என்ன பேசுவது எப்படி கையாள்வது அவளை என்று தெரியாமல் விழித்துக் கொண்டு இருந்து இருப்பேன் என்று தன்னை நினைத்து பெருமூச்சு விட்டவன் மாடிக்கு சென்றான்.
லூசு பையன் இவனுக்கு காதல் வரும் இவனுக்குள்ள காதல் வருவதற்குள் பாவம் சஞ்சனா உன் பாடு தான் மிகவும் மோசமாக இருக்கு என்று விதி இவர்கள் இருவரையும் பார்த்து சிரித்தது...
பிரியாவின் அறையில்...
தம்பி வாழ்க்கையில் நடந்த அனைத்தும் சொல்லிக் கொண்டு வயிற்று வலியில்
வலி அதிகமாக.. அவன் மடியிலேயே படுத்து இருந்தவள் இப்போது வலியில் அவனை இடையோடு கட்டிக்கொண்டு இறுக்கி படுத்துக் கொண்டு இருந்தாள்.
அவளின் வலியை இதற்கு மேல் கேட்க முடியாமலும்... பார்க்க முடியாமலும் தவித்த ருத்ரா....
அப்படியே படுத்து அவளை தன் மீது போட்டுக் கொண்டான். அதில் அவளின் கால்கள் சற்று திரும்பியதில் கால் வலி கொடுக்க, ஐயோ மாமா என்று கத்தினாள்.
அவளின் மாமா என்று அழைப்பில் ஒரு நிமிடம்... ருத்ராவிற்கு உலகமே சுற்றாமல் நின்று விட்டது போல் தோன்றியது பிறகு அவளை தன்னோடு மெதுவாக போட்டுக்கொண்டு அவளின் தலையை வருடி கொண்டே இப்ப என்ன டி சொன்னாய் என்னை என்று கேட்டான்.
அப்போது தான் அவளும் அவனை அழைத்த விதத்தை எண்ணி பார்த்து விட்டு, நான் என்ன சொன்னேன் நான் ஒன்னும் சொல்லவில்லையே என்று சமாளித்தாள்...
அடியே பொய் சொல்லாதடி இப்ப நீ என்னை மாமா என்று தானே கூப்பிட்டாய் என்று கேட்டான்...
அச்சச்சோ அப்படி இல்ல ருது மா சொன்னேன் என்று சமாளித்தவளை...
ஓஹோ அப்படியா சரி... சரி... அப்ப எனக்கு இப்படி பொய் பேசும் பெண் வேண்டாம்.. அதற்கு நான் என்னிடம் எப்போதும் வம்பு கட்டும் அந்த கவிப்பிரியாவையே திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொல்ல..
சட்டென்று கண்கள் கலங்கியவள்.. ஏன் மாமா அப்போ நான் பொய் சொன்னா என்னை விட்டுப் போய் விடுவீர்களா?.. என்று கேட்டாள்... என் அம்மா என் அப்பாவை அப்படித் தான் கூப்பிடுவார்..
அது தான் நீங்களும் திருமணத்தை பற்றி பேசவும் நானும் உங்களிடம் உரிமையோடு மாமா என்று கூப்பிட்டேன். ஆனால் நீங்கள் கேட்கும் போது எனக்கு வெட்கமாக வந்து விட்டது. அதனால் தான் அப்படி சொன்னேன்...
ஆனால் நீங்கள் ஒரே நொடியில் என்னை வேண்டாம் என்று சொல்கிறீர்கள் ... அப்போ அவ்வளவு தான் என் மீது நீங்கள் கொண்டு நேசம்.. எனக்கும் தெரியும் என் மீது பாசம் வைத்தவர்கள் எல்லோரும் என்னை சீக்கிரமாக கைவிட்டு விடுவார்கள் என்று ... ஆனால் ஏனோ உங்களை அப்படி நினைக்காமல் போனது என் தப்பு தான். இந்த தரித்திரம் பிடித்தவளுக்கு எதுவும் நிலைக்காது என்று புலம்பிக்கொண்டே போனவளை பார்த்து மௌனமாக சிரித்துக் கொண்டு இருந்தவன், ஐயோ சாமி இவள் புலம்ப ஆரம்பித்தால் என் கதி அவ்வளவுதான் அதோகதி தான் போல என்று நினைத்தவன், அவளின் பேச்சை இதற்கு மேல் கேட்க முடியாது டா சாமி என்று மறுபடியும் அவளின் இதழ்களை தன் இதழ்களுக்குள் வசப்படுத்தினான்....
முதன்முறை அவன் இட்ட முத்தத்தில் அதிர்ச்சி அடைந்தது போல், இந்த முறையும் அதிர்ச்சியானாலும் நொடியில் தன்னை மாற்றிக் கொண்டு... அவனின் முத்தத்தை முழுவதுமாக ரசித்ததோடு.... அவனுக்கு முழு ஒத்துழைப்பும் கொடுத்தாள்.
கவிப்பிரியாவிற்கு தன்னுடைய இடத்திற்கு வந்து சேர்ந்த ஒரு நிம்மதி கிடைக்க.. இறைவா இப்ப கிடைத்துள்ள உறவுகள் அனைத்தும் எனக்கு நிரந்தரமாக இருக்கும் என்றால் மட்டும் என்னை உயிரோடு வைத்து இல்லை என்றால் இந்த நொடியை நான் முழு சந்தோஷத்தோடு இருக்கிறேன் இப்பவே என்னை உன்னிடம் அழைத்துக் கொள் என்று நினைக்க...
அவளையும் அறியாமல் அவள் கண்களில் இருந்து கண்ணீர் வர.... அந்தக் கண்ணீரின் உப்பு சுவை ருத்ரா அவன் இடும் முத்தத்தில் உணர...
அவளை தன்னிடம் இருந்தது எனக்கு மெதுவாக கட்டிலில் படுக்க வைத்து விட்டு, அவள் அருகிலேயே அரவணைத்தவாறு படுத்துக் கொண்டு.. என்ன டா கால் ரொம்ப வலிக்கிறதா, இரு உனக்கு கொடுக்க வேண்டிய மாத்திரையை நான் கொடுக்கவே இல்லை பார் என்று சொல்லிட்டு, அவளுக்கான மாத்திரையை எடுத்துக் கொடுக்க அவளும் சமத்தாக வாங்கி போட்டுக் கொண்டாள்.
சரி நீங்கள் போய் தூங்குங்க இனி எதுவாக இருந்தாலும் காலையில் பேசிக் கொள்வோம்.. ரொம்பவும் நேரம் ஆகிவிட்டது என்று சொல்லி அவனை சென்று தூங்க சொன்னாள்.
நானும் அதே தான் சொல்கிறேன் தூங்கப்போகிறேன் என்று சொல்லிக் கொண்டு அவனோ, அவளின் அருகிலேயே அவளை அணைத்தவாறு படுத்து கொண்டான் ருத்ரா.
அச்சச்சோ வெளியில் இருப்பவர்கள் யாராவது தவறாக நினைத்துக் கொண்டால் என்ன செய்வது ... இது முழுவதும் தவறு வீட்டில் பெரியவர்கள் வேறு இருக்கிறார்கள், முதலில் எழுந்து வெளியே போங்க என்று சொன்னாள் கவிப்பிரியா.
எனக்கு இப்போதைக்கு உன்னை எதுவும் செய்யும் ஐடியா இல்லை தயவு செய்து கண்ணை மூடி தூங்கு இல்லையென்றால் நடப்பதே வேறு என்று சொன்ன பிறகு ஐயய்யோ இது என்னடா வம்பா போச்சு என்று இறுக்கி கண்களை மூடிக்கொண்டாள் ருத்ராவின் கவிப்பிரியா...
அதே நேரம் மாடியில் அழகி கர்ணாவை பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள்.
இணைந்திருங்கள்
சொல்லவா... வேண்டாமா...