- Thread Author
- #1
71... ஒரே மாலை பொழுதின் இரவில்... கவிப்பிரியா பற்றி..
ருத்ரா பிரியா இருவரின் அழகான காதல்....
இரவில் அனைத்து சிறியவர்களும் ஜாலியாக பேசிக்கொண்டும் கதைத்துக் கொண்டும் சாப்பிட்டு விட்டு... அனைவரும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.
பிரியாவின் அறையில்...
ருத்ரா பிரியாவின் விழிகளுக்கு தன் காதலை தேடி அவளுக்குள் தன் காதலை உணர்த்த... அவளின் அருகில் மிக நெருக்கமாக உட்கார்ந்தவன்...
அவளை கவனிக்க அவளோ பயத்தில் நடுங்கிக் கொண்டு இருந்தாள்...
சாயந்திரத்திலிருந்து எங்க வீட்டிற்கு வரும் வரை தன் கைகளில் இருந்தாலும் சற்றும் கூச்சப்படாமல், பயப்படாமல் இருந்தவள்...
இப்பொழுது பயத்தில் நடுங்கி கொண்டு இருப்பதை கவனிக்க மனதிற்குள் சிறு வலி வந்தாலும்... பார்த்த சில மணி நேரங்களில் அவளுக்கு தான் கொடுத்து இருக்கும் அதிர்ச்சியும் அதிகம் தான் என்பதால்...
அவளிடம் இருந்து சிறிது தள்ளி உட்கார்ந்து, அவளின் கைகளை தன் கைகளுக்குள் எடுத்து...
பிரியா என் பெயர் ருத்ரதேவ் என்று தன்னிடம் முதன் முதலில்... தன்னை மதித்து பேசுபவனை ... சிறிதாக தலை நிமிர்ந்து பார்த்தாள்.
ருத்ராவை பார்த்த நிமிடத்தில் இருந்து தன்னை இங்கு பார்த்து அத்தனை மனிதர்களும் மதித்து பேசியது அவளுக்கு மகிழ்ச்சியை அளித்து இருந்தாலும், தனிமையில் அவன் தன்னோடு பேசும் முதல் உரையாடல் என்பதால் அவன் மனம் நோகக்கூடாது என்பதற்காகவே, தனக்குள் ஏற்படும் பயம், கூச்சம் அனைத்தையும் ஓரம் கட்டி வைத்து அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அவளின் நயனங்களில் தன்னை தொலைத்தவன்... செல்லக்குட்டி கொஞ்ச நேரம் நீ கட்டிலில் அதாவது மெத்தையில் இவ்வளவு நேரமும் நான் இருப்பதாக நினைத்து பார்த்துக் கொண்டிருந்தாய் அல்லவா அதே போல் இன்னும் கொஞ்ச நேரம் அதோ அந்த மெத்தையிலேயே நான் இருப்பதாக நினைத்து பார்த்துக் கொண்டு அமைதியாக இரு டா...
நான் பேச வந்ததை பேசி முடித்து விடுகிறேன். பிறகு நீ என்னை பார்க்கலாம், நான் பேசி முடித்ததற்கு பிறகு என்னை பார்த்து உன் பதிலை சொல்லு ஓகே வா...
இப்போது நீ என்னை இப்படி பார்த்தால் எனக்கு என்னென்னமோ தோன்றுகிறது... பிறகு நான் என்னென்னமோ செய்து விடுவேன்... அப்புறம் நீ தான் என்னிடம் கோபப்படும் படி ஆகிவிடும் அதனால், நான் பேசி முடிக்கும் வரை தலை நிமிராமல் அப்படியே இரு... என்று சொல்ல அவளோ சட்டென்று தலையை குனிந்து கொண்டாள்.
அவள் வேகமாக குனிந்ததைக் கண்டு சிரித்தவன் இப்போது மறுபடியும் அவளுடைய கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டு...
பிரியா சத்தியமாக உனக்கு அடிபட்டு நீ கீழே விழுந்து கிடக்கும் போது நான் உன்னை பார்க்கவே இல்லை எனது கோபம் எல்லாம் உன்னை இடித்து தள்ளினாள் பார் ஒரு பெண் அவள் பெயரும் கவி பிரியா தான் அவளை எனக்கு பிடிக்கவே பிடிக்காது என்று அவளுடன் ஆன முதல் சந்திப்பில் இருந்து இப்போது வரை அனைத்தையும் சொல்லியவன்...
அவள் உன்னை தள்ளி விடவும் அவளை அடித்தேனே தவிர நான் உன்னை கவனிக்கவே இல்லை... ஆனால் சஞ்சனா வந்து தான் நீ மயங்கி கிடக்கிறாய்.. என்று சொல்லி விட்டு என்னை கூப்பிட அப்பொழுது தான் உன்னை பார்த்து தண்ணீர் தெளித்து மயக்கம் தெளித்த பிறகு, நீ சொன்ன பாத்தியா உன் பெயர் கவிப்பிரியா என்று அப்பொழுது தான் உன்னை முழுவதுமாக நான் பார்த்தேன்.
அப்போது உன் மருண்ட பார்வையும்... நான் உன்னை தூக்கும் போது என் கழுத்தை நீ கட்டி பிடித்துக் கொண்டாய் பாரு வலியில் அந்த தொடுதலிலும்.. பிறகு ஏதோ ஒரு சங்கடத்தால் உன் வீட்டிற்கு என்னை வரவிடாமல் செய்த போது உன் தவிப்பையும் காணும் போது தான் முழுவதுமாக எனக்குள் நீ வந்தாய்.
பார்த்த சில மணி நேரங்களில் எனக்குள் முழுவதுமாக நீ வந்து விட்டாய், என்னால் உன்னை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது... அதே சமயம் உன் வீட்டில் உனக்கு நிறைய பிரச்சனைகள் இருக்கு என்பதை உன் வீட்டிற்கு நான் வந்த மறுநிமிடமே புரிந்து கொண்டேன். உனக்கு ஒன்று தெரியுமா இனி உன் வாழ்வில் என்றும் மகிழ்ச்சி மட்டும் தான் இருக்கும் .. அதற்கு நான் முழு உத்தரவாதம் தருகிறேன்.
நீ எதை நினைத்தும் பயப்பட வேண்டாம் நாம் திருமணம் நடக்க கண்டிப்பாக சில மாதங்கள் ஆகும் ஏனென்றால் எனக்கு முன் மிதுனும், சனாதனும் இருக்கிறார்கள்.
அதனால் நம் திருமணம் கொஞ்சம் தாமதமாக தான் நடக்க வாய்ப்பு உண்டு ஆனால் அதுவரை நீ உன் வீட்டிற்கு செல்ல வேண்டுமே என்று நினைத்து பயப்படாதே.. இனி அங்கு இருப்பவர்கள் யாராலும் உனக்கு எந்த தொந்தரவும் வராது என்று சொல்லிக் கொண்டு இருந்தவனை இப்பொழுது நிமிர்ந்து பார்த்தவள்...
இல்லங்க உங்களுக்கு எங்கள் வீட்டில் இருப்பவர்கள் பற்றி எதுவும் தெரியாது... அதுவும் என் தம்பி மிகவும் மோசமானவன்... அவனுக்கு கோபம் வந்தால் என்ன செய்வான் என்றே தெரியாது. என்னை பலமுறை எப்படி எல்லாம் அடித்து இருக்கிறான் தெரியுமா?.. இதோ இங்க பாருங்க முந்தான ஆளு அவன் சாப்பாட்டிற்கு மதியம் முட்டை வேக வைத்து தரவில்லை என்று ... அடித்தானா அதில் தான் இந்த காயம் என்று தன்னையும் அறியாமல் அவள் காலில் சுடிதார் பாகத்தை மேலே ஏற்றி காட்ட ..
காலில் இருந்த தழும்பை பார்த்து அவ்வளவு வலி வலித்தது ருத்ராவிற்கு... அதோடு அவனுக்கு ஏற்பட்ட கோபத்தின் அளவை அவன் கண்களைப் பார்த்து இருந்தால் தெரிந்து கொண்டு இருப்பாள் ... ஆனால் ஏதோ தடையின்றி அவள் பேசாமல் பேசிக்கொண்டே இருக்க அவனை கவனிக்க மறந்து விட்டாள்...
அது மட்டும் இல்லாமல் அவன் லைசென்ஸ் ஓட துப்பாக்கி எல்லாம் வைத்து இருக்கிறான்... அவன் உங்களை ஏதாவது செய்து விட்டால்...!!.. வாழ்நாளில் என்னை நானே மன்னித்துக் கொள்ளவே முடியாது. நான் ஏற்கனவே நடை பிணமாக மாறி ஆறு வருடங்கள் ஆகிவிட்டது. இதில் உங்களுக்கு ஏதாவது தவறாக நடந்து விட்டால் சத்தியமாக நான் உயிரோடு இருப்பேனா என்றே தெரியாது பார்த்த சில வினாடிகளிலேயே என்னை அப்படி பத்திரமாக பார்த்துக் கொண்டீர்கள் என் அம்மாவைப் போல்... என்று சொன்னவள் இப்பொழுது ருத்ராவே எதிர்பாராத தருணம் அவனை கட்டிப்பிடித்துக் கொண்டு அம்மா... அம்மா... என்று கதறி அழுதாள்.
இவர்கள் இருவருக்கும் ஸ்பேஸ் கொடுத்து விட்டு வெளியே அமர்ந்து இருந்த மற்றவர்கள் அனைவரும் அவர் கதறி அழுவதில் அதுவும் ரஞ்சித் அவளின் அம்மா என்று கத்தி அழுவதை கேட்டவன் வேகமாக உள்ளே வந்து பார்க்க...
ருத்ராவை கட்டிப்பிடித்துக் கொண்டு அவள் அழுகவும் அமைதியாக நின்றான். அதிலேயே தன் தோழியின் மனநிலையை புரிந்து கொண்டவன் மற்றவர்களை பார்த்து நாம் வெளியேவே நிற்போம்... அவர்கள் இருவரும் பேசி முடிக்கட்டும் என்று சொல்லி மற்றவர்களை அழைத்துக் கொண்டு வெளியேறினான்.
சிறிது நேரம் அவளை அழவிட்டவன்... அவளின் அழுகையை காண முடியாமல், தன்னிடம் இருந்து பிரித்து... அவளின் அழுத கண்களை துடைத்து விட்டவன்...
என்ன ஆச்சு டா... திடீரென்று ஏன் இவ்வளவு அழுகை என்று கேட்டான்... ருத்ரா.
அவளோ அழுது கொண்டே ருது மா.. அம்மா ஹாஸ்பிடல் ல ஆறு வருஷமா இருக்காங்க... எனக்காக அவர்களை பார்க்கணும் போல இருக்கு...
ரஞ்சியும் என்னை கூட்டிட்டு போக எவ்வளவோ முயற்சி செய்தான்... ஆனால் எங்கிருந்து எப்படி இருந்து வருவான் என்றே தெரியாது என் தம்பி வந்து எங்களை தடுத்து விடுவான்... எனக்கு அம்மாவை பார்க்கணும் அவர்களிடம் ரஞ்சியை அப்புறம் உங்கள் அனைவரையும் அறிமுகப்படுத்தி வைக்கணும்... என்று அழுதாள்.
சரி டா... அவ்வளவு தானே நாளைக்கு சாயந்திரத்திற்குள்... அத்தை எங்கே இருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள் என்று பார்த்து உன்னை நான் அங்கு கூட்டி செல்கிறேன் ஓகே வா என்று ருத்ரா கேட்கவும்..
இப்பொழுது அவனைப் பார்த்தவள்... அப்ப நீங்க முடிவே பண்ணிட்டீங்களா என்னை நீங்கள் திருமணம் செய்து கொள்வதாக என்று பாவமாக கேட்பவளை பார்த்து சிரித்துக் கொண்டே...
அடியே இப்படி எல்லாம் பார்க்காதே இப்படி எல்லாம் பார்த்தாய் அப்புறம் இங்கு நடப்பதே வேறு என்று சொல்லி...
அவளின் தலையில் தன் தலையோடு முட்டி கொண்டு, அவளின் நெற்றியில் தன் முதல் முத்தத்தின் தடத்தை பதித்தான்.
அவளும் அவனை உணர்ச்சி வேகத்தில் கட்டி பிடித்து கொண்டு, ருது மா... ஆனால் நான் தரித்திரம் பிடித்தவள் ஆச்சே என்று கேட்டு அந்த வார்த்தை முடிப்பதற்குள் அவளின் இதழ்களை தன் இதழ்களுக்குள் சிறைப்பிடித்து இருந்தான்...
ரஞ்சித் வெளியில் அழைத்து வந்தவர்களிடம் அவளை பற்றின விஷயங்களை சொல்ல நினைத்து சொல்ல தொடங்க...
அப்போது மிதுன் சரோஜா அத்தையை பற்றி சொல்லி அவர்கள் இந்த வீட்டிற்கு மூத்தவர்கள், எங்கள் அப்பாவின் சகோதரி. அதனால் அவர்களிடம் உன்னை முதலில் அறிமுகப்படுத்துகிறோம். அங்கு வைத்தே நீ கவிப்பிரியாவை பற்றி சொல் என்று சொல்லி விட்டு... அவருக்கு காலில் அடிபட்டு இருப்பதால் ஹாஸ்பிடலில் இருந்து கூட்டி வரும்போது தான் நாங்கள் கவிப்பிரியாவை பார்த்தோம் என்று விபரங்களை சொல்லிக்கொண்டே...
சரோஜாவின் அறைக்கு அழைத்துச் செல்ல...
லீனாவின் உபயத்தால் சரோஜா மிதுன இருவருமே வீடியோ காலில் அங்கு நடந்த விஷயங்களை பார்த்துக் கொண்டு இருந்ததால்...
உள்ளே வந்த ரஞ்சித்தை பார்த்து வா பா என்று அழைத்து தனக்கு அருகில் அமர சொல்லியவர்... மற்ற அனைவரையும் பார்த்து அப்படியே அமருங்கள் என்று சொல்லவும், அவரவர் அங்கு இருந்த சோபாவிலும், சேரிலும், கட்டிலில் சரோஜாவோட சேர்ந்து அனைவரும் அமர்ந்து கொள்ள...
ரஞ்சித் முதலில் தன்னை பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டான்... என் பெயர் ரஞ்சித் கிருஷ்ணா...
எனக்கு இங்கே ஆர் கே மால் என்று ஒரு பெரிய மால் இருக்கிறது... அதே நேரம் அங்கே ஆர்கேட் டெக்ஸ்டைல்ஸ் அண்ட் எக்ஸ்போர்ட்ஸ் என்பது என்னுடைய கம்பெனி தான் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவன்...
கவிப்பிரியாவின் அப்பா தர்மலிங்கம் அவர் என் அப்பாவிடம் தான் ஆரம்பத்தில் ஆடிட்டராக பணிபுரிந்தார். பிறகு அவரது திருமணத்திற்கு பிறகு அதுவும்.. கவிப்பிரியா பிறந்த பிறகு தான் அவருக்கு நிறைய கம்பெனியில் இருந்து வாய்ப்புகள் கிடைத்து ... நல்ல ஒரு நிலைமைக்கு வந்தார் என்று என் அப்பாவும் தர்மலிங்கம் அங்கிளும் அடிக்கடி சொல்லுவார்கள்...
ஆனால் அப்படி சொன்னா அதே தர்மலிங்கம் அங்கிள் தான் இப்பொழுது மூச்சுக்கு 300 தடவை அவளை தரித்திரம் பிடித்தவள் என்று சொல்கிறார்.... அதற்குக் காரணம்....
இணைந்திருங்கள்
சொல்லவா... வேண்டாமா...