• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 26, 2025
Messages
76
70. ருத்ராவை பழிவாங்க.. பழனிவேலோடு சேர்ந்து கவிப்பிரியா செய்யும் சூழ்ச்சி....

சூழ்ச்சியில் சிக்கும் சனாதன் சஞ்சனா...

சஞ்சனா.. கவிப்பிரியா இங்கு வந்தது எப்படி என்று நடந்த விபரங்களை சொல்ல..

ரஞ்சிதா அப்ப கால் வலி சரியா போனால் மறுபடியும் அவள் அந்த வீட்டிற்கு செல்ல வேண்டுமே அங்கு சென்றால் இவளுடைய சித்தி மிகவும் கொடுமை படுத்துவார்களே என்று வேதனை பட...

இதுவரை அமைதியாக இருந்த ருத்ரா இப்போது அவன் அருகில் சென்று கவலைப்படாதே நண்பா...

கூடிய விரைவில் உன் தோழி கவிப்பிரியா ருத்ரதேவ் ஆகிவிடுவாள். அதன் பிறகு எந்த கொம்பன் நாளும் அவள் மீது சிறு கீறல் கூட போட முடியாது என்று சொன்னான் ருத்ரா.

ருத்ரா அவ்வாறு சொல்லியதும், ஏய் நரம்பி உனக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணிட்டு இருக்காங்க.. என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லை... ஏதோ ஒரு கம்பெனிக்கு இன்டர்வியூ போறேன் என்று சொன்னாய்.. என்னோட மாலுக்கு வான்னு கூப்பிட்டேன் வரமாட்டேன் சொல்லிட்ட, அதனால் இரண்டு நாட்கள் உன்னுடன் கோபமாக பேசாமல் இருந்தேன். சரி எங்கேயோ போய் வேலைக்கு தானே சேர போகிறேன் என்று சொன்னாய், இப்ப என்னடான்னா உனக்கு திருமணம் ஏற்பாடு ஆகி இருக்குன்னு சொல்றாங்க!!.. என்னடி ரெண்டே நாள்ல என்னை மறந்துட்டியா என்று கோபத்தோடு பாவமாக கேட்டான் ரஞ்சித் கிருஷ்ணா.

அதற்கு கவிப்பிரியாவின் நிலைமையோ இன்னும் மோசமாக இருந்தது...

அட போடா இவனே... ஐயோ நமக்கு எப்பவும் திட்டு வாங்கி திட்ட கூட தெரிய மாட்டேங்குது என்று புலம்பியவள் ரஞ்சிமா எனக்கு இவர்கள் சொல்லும் ருத்ர தேவ் யாருன்னே தெரியாது டா.

ஆனால் இங்கு இருக்கும் அனைவருமே இதோ இங்கே நிற்கிறார் பாரு... இந்த சூப்பர் மேன் இவரை எனக்கு ஜோடி சேர்த்தே பேசுகிறார்கள்.. நீயே சொல் அவர் எப்படி இருக்கிறார்... நான் எப்படி இருக்கிறேன் அவருக்கும் எனக்கும் ஏதாவது ஒரு வகையில் சம்பந்தம் இருக்கா?... அவர் அழகா அர்னால்டு மாதிரி இருக்காரு ... என்னைய பாரு மனோபாலா சார் கூட என் பக்கத்துல நின்னா கொஞ்சம் வெயிட்டா தெரிவார்... என்னை போய் இவரோடு சேர்த்து வைத்து பேசி காமெடி பண்றாங்க டா...

நானும் எவ்வளவு நேரம் தான் நல்லவள் போல் நடிப்பது எனக்கும் உள்ளுக்குள்ளே சிரிப்பு சிரிப்பா வந்தது. அவரை நினைத்து... ஆனால் இங்கு இருக்கும் எல்லோருமே நட்டு கழண்டவர்களாக இருக்கிறார்கள் என்று மிகவும் ரகசியம் சொல்வது போல் மெதுவாக தன் நண்பன் காதில் சொன்னாலும், அங்கு இருந்த அமைதிக்கு அவள் சொல்வது அப்படியே அங்கு இருந்த அனைவருக்குமே கேட்டது.

ஐயையோ என்ன இவ இப்படி உளறுகிறாள்... விஸ்வாசம் படத்தில் தல அஜித்தை விட இவ ரொம்ப ஓவரா போகிறாளே என்று, அங்கு இருந்த மற்றவர்கள் முகங்களை பார்க்க...

ஒவ்வொருவரும் அவளையை வெட்ட வா... குத்த.. வா... என்று பார்க்க, ருத்ரன் மட்டும் ரஞ்சித்தை முறைத்துக் கொண்டு இருந்தான்.

சரி தான் இவள் இன்று நம்மை ஆம்புலன்ஸில் ஏற்றாமல் அமைதியாக மாட்டாள் என்று நினைத்தவன்...

இன்னும் ஏதோ உளறிக்கொண்டு இருந்தவளை அமைதியாக இருக்கும் ,படி அவள் கையை பிடித்து.. அடியே குட்டி சாத்தான் சிறிது நேரம் அமைதியாக இரு டி என்று சொன்னவன்.. ருத்ராவை பார்த்து மச்சான் என் தங்கச்சி கொஞ்சம் இப்படித் தான் என்று தலையில் கை வைத்து சொல்ல...

இதுவரை கவிப்பிரியா பேசியது சற்று விளையாட்டாக தான் என்றாலும்... கோபமாக இருப்பது போல் நடித்துக் கொண்டு இருந்தவர்கள், ரஞ்சித் செய்கையில் வாய் விட்டு சிரித்தனர் அதுவும் ருத்ரா மனம் விட்டு சிரித்தான்.

இங்கு இவர்கள் சிரித்து பேசிக்கொண்டு இருக்க எதார்த்தமாக இங்கு நடக்கும் அனைத்தையும் நீனா இது நான் செல்போனில் வீடியோ கால் செய்து காட்டிக்கொண்டு இருக்க அங்கு மிதுனம் சரோஜாவும் கூட சேர்த்துக்கொண்டுதான் இருந்தார்கள் ஆனால் துரதிர்ஷ்டவசமாக அங்கு இருந்த (முதல் கவிப்பிரியா கவியாகவும் இப்போது இரண்டாவதாக வந்து இருக்கும் ருத்ராவின் கவிப்பிரியாவை பிரியா என்றும் அழைப்போம்).. கவியும் அந்த வீடியோ காலில் அவர்கள் பேசிக் கொள்வது, சிரித்து கொள்வது .. அவர்களுக்குள் இருக்கும் அந்த ஒற்றுமையான நட்பு அதிலும் ருத்ராவிற்கு இப்போது வந்து இருக்கும் கவிப்பிரியாவின் மீது இருக்கும் காதல்.... அனைத்தையும் பார்த்தவள், வெளியே சிரித்துக்கொண்டு இருந்தாலும் .... உள்ளே எரிமலை போல் கொதித்துக் கொண்டு இருந்தாள்.

கவியின் மனநிலை பற்றி எதையும் கவனிக்காமல் மிதுனாவும், சரோஜாவும் அங்கு நடப்பதை மகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
இதற்கிடையில் மிதுனாலும் சரோஜாவும் சாப்பிட்டுக்கொண்டே அதை பார்க்க வந்து இருந்த கவிப்பிரியாவை ஒரு முறை மட்டும் சாப்பிடுகிறாயா என்று கேட்டு விட்டு அதற்குப் பிறகு அவளை தொந்தரவு செய்யவில்லை ஏனென்றால் வீடியோ காலில் அங்கு நடப்பதை பார்த்துக் கொண்டு இருந்ததால், இவளை கவனிக்க மறந்து விட அவளால் அதற்கு மேல் அங்கு இருக்க முடியாமல்...

சரி மா உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள். நான் நாளைக்கு வருகிறேன். நேரம் ஆயிடுச்சு மணி 9 மணிக்கு மேல் ஆகிவிட்டது ... இதற்கு மேல் வீட்டுப் பெண் பிள்ளைகள் வீட்டிற்கு வர தாமதமானால் என் அம்மா மிகவும் கோபப்படுவார்கள் என்று, ஏதோ நல்லவள் போல பேசிவிட்டு சென்றாள். ஆனால் அதை யாரும் கவனிக்கத்தான் அங்கு ஆள் இல்லை.

சரி டா நீ நேரத்தோடு வீட்டிற்கு செல் என்று சொல்லி விட்டு அவள் சென்றாளா?.. இல்லையா?... என்பதை கூட கவனிக்காமல்,...
பாரேன் நீங்கள் எல்லாம் உங்கள் வாழ்க்கையை எவ்வளவு அழகாக தேர்ந்தெடுத்து கொள்கிறீர்கள்...

உங்கள் அனைவரையும் பார்க்கும் போது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதுவும் உங்கள் அனைவரிடமும் இருக்கும் தெளிவு உங்கள் பெற்றோர்கள் உங்களை மிகவும் அழகாகவும், நேர்மையாகவும் நல்ல அறிவோடும், தைரியமாகவும் வளர்த்து இருக்கிறார்கள் என்று சொல்லி கொண்டு இருக்க..

அதைக் கேட்டுக் கொண்டே வெளியே வந்த கவி..

அங்கே அந்த பிரியாவின் அருகில் அனைவரும் இருப்பது வெளியில் இருந்து பார்க்க தெரிந்தாலும் அதில் ருத்ராவை மட்டும்... குரோதம் நிரம்பிய விழிகளில் பார்த்தவள்...

ம்ம்... என்னிடம் இல்லாதது எது டா அவளிடம் இருக்கு.... சரியான எலும்புக்கூட்டிற்கு சுடிதார் போட்டது போல் இருக்கிறாள்... இவளை உனக்கு பிடித்து இருக்கிறதா?... கண் இல்லாத அறிவு கெட்ட முண்டமே உனக்கு நான் யார் என்று காட்டுகிறேன்... எதற்காக இவளை வேண்டாம் என்று சொன்னோம் என்று கதற வைக்கிறேன் உன்னை என்று சொல்லி விட்டு, வேகமாக வெளியே சென்றாள்.

அவள் சரியாக வெளியே செல்லவும், அவள் அருகில் அவளுடைய கார் வந்து நின்றது. வேகமாக அதில் ஏறியவள் உள்ளே சென்றதும் பழனிவேலை பார்த்து...

என்ன மாமா காரியத்தை முடித்து விட்டீர்களா என்று கேட்டாள்...

அதற்கு அவனும் மிகச் சரியாக காரியத்தை முடித்து விட்டேன் பாப்பா... நாளைக்கு காலையில் சரியான தரமான சம்பவம் கண்டிப்பாக இருக்கும் நீ கவலைப்படாதே என்று சொன்னான்.

இங்கு உள்ளே பிரியாவின் அறையில் இருந்த அழகி, ... சரி சரி எல்லோரும் பேசியது போதும்... மணி ஒன்பதுக்கு மேல் ஆகிவிட்டது நாளைக்கு அனைவரும் அவரவர் வேலையை பார்க்க போக வேண்டும் அல்லவா... அவர்கள் இருவரும் சாப்பிடட்டும்.

அதே போல் சாப்பிட்டு முடித்தவர்கள் வாருங்கள்... சாப்பிடாதவர்களுக்கு பரிமாறுங்கள் என்று சொல்ல...

ஹேய்... சரி சரி வாங்க பா... அழகி சொல்வது சரிதான் என்று லிபின் சொல்ல...

அனைவரும் வெளியே சென்றார்கள் இப்போது சாப்பிடாதவர்கள் அமர சாப்பிட்டு அவர்கள் அனைவரும் அவர்களுக்கு பரிமாறினார்கள்..

சரியாக மிதுனாவும் வந்து அவர்களோடு இணைந்து கொள்ள... சிறியவர்கள் அனைவரும் பேசிக்கொண்டு விளையாடிக் கொண்டும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக சாப்பிட்டு முடித்தனர்.

ருத்ரா .. பிரியாவிற்கு இடியாப்பத்தை நீட்ட அவளோ அதை வாங்கிக்கொண்டு சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள்... குனிந்த தலை நிமிராமல், அவனை பார்க்காமல் சாப்பிட்டு முடிக்க, சரியாக அவனும் வாட்டர் பாட்டிலில் தண்ணீரை நீட்ட.. அதையும் வாங்கி குனிந்து கொண்டே கைகளை அலம்பியவள், இப்போதும் அவனை பார்க்காமலேயே பவுலையும், பாட்டிலையும் கொடுக்க அதை வாங்கி அருகில் இருந்த டேபிள் மீது வைத்தவன்...

ஓஹோ உன் நண்பன் ரஞ்சித் கிட்ட மட்டும் தான் பேசுவாயா ...? எங்களை எல்லாம் நிமிர்ந்து பார்க்க கூட மாட்டாயோ என்று கேட்டான்.

அவள் அப்போதும் தலை நிமிராமல் குனிந்தே இருக்க...

ஓஹோ அப்போ உன் நண்பனிடம் இங்கு இருப்பவர்கள் அனைவரும் நல்லவர்கள் என்று சொன்னதெல்லாம் சும்மா பொய்யோ என்று கேட்கவும் சற்று என்று நிமிர்ந்து அவனை பார்த்தவள்...

ஏன் இப்படி எல்லாம் சொல்கிறீர்கள், நான் உண்மையைத் தான் சொன்னேன். இங்கு இருக்கும் அனைவரும் என் மனதிற்கு நல்லவர்கள் போல் தான் தெரிகிறீர்கள். அதனால் தான் என் நண்பனிடம் சொன்னேன் என்று சொன்னவள் மறுபடியும் தலையை குனிந்து கொண்டாள்.

சரி அப்போ இப்ப மட்டும் என்ன ஆச்சு திடீரென்று மறுபடியும் அமைதியாக மாறிவிட்டாய் அதுவும் என் முகத்தை பார்த்து கூட பேசாமல் கீழே குனிந்து கொண்டு பேசுகிறாய் கட்டில் நெத்தையில் என் முகம் தெரிகிறதா என்று... சற்று அவள் அருகில் வந்து அவளை போலவே மெத்தையில் பார்க்க... அவன் அருகில் வந்தது அவனுடைய வாசத்தில் தெரிந்து கொண்டவள் கண்களை இறுக்கி மூடிக்கொண்டாள்.

தன்னவளின் சேட்டைகளையும் தவிப்பையும் சில வினாடிகள் ரசித்தவன்,

அட! பாரு...டா..!! இதனால் வரைக்கும் எனக்கே தெரியவில்லை எங்கள் வீட்டில் இப்படி கட்டில் மெத்தை மீது எனது முகம் தெரியும் என்று நானும் கவனிக்கவே இல்லை பாரேன்... ஆனாலும் நீ வந்ததும் சரியாக கண்டுபிடித்து விட்டாய் என்று அவன் பேச...

ருத்ராவின் பேச்சில் குழம்பி போய் தன் கண்களை மெதுவாக திறந்து, நிமிர்ந்து பார்க்க... சரியாக அவன் கன்னத்தில் அவளின் இதழ்கள் மோதி நின்றது.

இவ்வளவு நேரம் அவளது விழிகள் மூடி இருக்க சிறு விழிகள் போல் இருந்தது... இப்போது அவனின் கன்னத்தில் தன்னுடைய இதழ் உரசியதில் கண்களை அதிர்ச்சியில் நன்றாக திறந்து பார்க்க...

அப்பப்பா அவளின் விழி ஆழத்தில்...
மீளும் வழி வேண்டாம் என்றே மூழ்கிப் போனான்... பிரியாவின் ருத்ரா...
காலையில் ருத்ராவின் காரில் பயணிக்கும் சனாதன் சஞ்சனா...

இருவருக்கும் ஏற்படப் போகும் ஆபத்து என்ன...???

இணைந்திருங்கள்

சொல்லவா... வேண்டாமா...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top