• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 26, 2025
Messages
66
60. ஹாஸ்பிடலில் இருந்து வீட்டிற்கு வந்த கர்ணா மெய்....

மிதுன் மனநிலையும்... மிதுனாவின் காதலும்....

காரில் மெய்யோடு கர்ணாவின் முதல் பயணம் இது. சரோஜா அத்தைக்கு இப்படி காலில் அடிபட்டு மருத்துவமனையில் இருந்தாலும்... கர்ணாவுக்கு இந்த நிமிடம் ... தான் அவளோடு காரில் தனியாக பயணிப்பதை ரசித்துக் கொண்டு வந்தான்.

ஆனால் அவள் மனதில் மருத்துவமனையும் ... அந்த மருத்துவமனையில் தான் பட்ட கஷ்டமும் அதற்கு காரணமாக இருந்த வலியும் ... அனைவரும் மறக்க சொல்லும் நினைவுகள் மறந்து விட்டதாக நினைவுகள் இன்று மருத்துவமனையில் மறுபடியும் பழைய நினைவுகள் வர... அவளால் அங்கு இயல்பாக இருக்க முடியாமல் தான் வீட்டிற்கு முதலில் அங்கு இருந்து கிளம்பி வந்தாள்.

காரில் அமைதியாக கண்களை மூடி அமர்ந்து இருந்தவள் மனதிற்குள்... பல கசப்பான சம்பவங்கள் வந்து வந்து போய்க் கொண்டு இருந்தது.

சிறிது நேரம் அமைதியாக வந்த கர்ணா, அவளின் மனநிலை என்ன என்று புரிந்து... அதே சமயம் அவள் மருத்துவமனையில் பட்ட துன்பங்கள் எதுவும் தெரியாததால்.. அவளை இயல்பாக மாற்றும் பொருட்டு, மெய் என்று மெதுவாக அழைத்தான்.

அவள் அமைதியாக அப்படியே இருக்க... மெய் அத்தைக்கு சிறு காயம் தான்.. சீக்கிரம் குணம் ஆகிவிடும். ப்ளீஸ் டா கவலைப்படாதே என்று சொல்லி கொண்டே காரை ஓட்டிக் கொண்டு இருந்தான் கர்ணா.

அவளும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். அவனும் அவளை தொந்தரவு செய்யாமல் அமைதியாக வீட்டிற்கு வந்து சேர்ந்தான். கர்ணா காரை நிறுத்தி விட்டு இறங்கப் போகும் சமயம், அவன் கைகளை பிடித்து தடுக்க...

கர்ணாவும் என்ன டா என்று அவளை பார்க்க.. அவளோ கண்களை மூடிய அதே நிலையில் அவன் மடியில் படுத்துக் கொண்டாள். அதோடு அவனின் இடது கையை எடுத்து தன் நெஞ்சோடு சேர்த்து வைத்து அணைத்து கொண்டாள்.

மெய் கையை தன் நெஞ்சோடு இணைத்து கொண்ட பிறகு தான் புரிந்து கொண்டான்.. அவளுக்கு வேறு ஏதோ பிரச்சனை என்பதை...
சிறிது நேரம் அவளுக்கு ஆறுதலோடு தலையில் கை வைத்து தடவி விட்டு கொண்டு இருந்தான்..

சிறிது நேரத்தில் அவளின் இதய துடிப்பு சீராக... அவளிடம் பேசலாம் என்று நினைத்து மெய் என்று மெதுவாக அழைத்தான் கர்ணா.

ஆனால் அவளோ அவன் மடியில் தூங்கி இருந்தாள். அவள் தூங்கி விட்டாள் எனவும் தன் கையை மெதுவாக அவளின் கரங்களில் இருந்து, அவள் தூக்கம் கலையாதவாறு மெதுவாக எடுத்து விட்டு,,, அப்படியே அவளை சீட்டில் சாய்த்து வைத்து விட்டு, காரில் இருந்து இறங்கி, அவள் பக்கம் வந்து காரின் கதவை திறந்து மெய்யை அப்படியே கைகளில் ஏந்தி கொண்டு, அவள் அறையில் சென்று படுக்க வைத்தான்.

கர்ணா அவளை படுக்க வைத்து விட்டு வெளியில் வர, சிறிது நேரம் தூங்கியவள், அவனின் ஸ்பரிசம் தந்த இதம் இல்லாமல் போக... கண் விழித்த அழகி... ஐயோ என்ன இந்த நேரத்தில் தூங்கி இருக்கிறேன்.

அம்மாவை மருத்துவமனையில் இருந்து அழைத்து வரும்பொழுது அவர்களுக்கு அறையை தயார் செய்து வைக்கிறேன் என்று சொல்லி விட்டு, இப்போது இங்கு நன்றாக தூங்கிக் கொண்டு இருக்கிறேன் என்று, தன் தலையில் தானே தட்டிக் கொண்டு எழுந்து வெளியில் வர...

இருவருக்கும் சேர்த்து காபி கலந்து எடுத்துக் கொண்டு கர்ணா மெய்யின் அறைக்கு தான் வந்தான்.

கர்ணா காபியோடு வர அச்சச்சோ அத்தான் ஏன் இந்த வேலை எல்லாம் நீங்கள் செய்கிறீர்கள். வீட்டில் வேலை ஆட்கள் யாரும் இல்லையா?.. அம்மாவை கூட்டிக்கொண்டு வரகிறார்களாமா?.. நான் அவர்களுக்கான அறையை தயார் படுத்தாமல் எப்படி தூங்கினேன் என்றே தெரியவில்லை...

ஐயோ மெய் முதலில் அமைதியாக இரு, நான் அறையை தயார் செய்து விட்டேன். பதட்டப்படாதே முதலில் இந்த காபியை குடி டி என்று கர்ணா சொன்னான்.

அவனிடம் இருந்து காபியை வாங்கி குடிக்க போனவள்... அவனின் டி என்ற உரிமையான பேச்சு ஏதோ செய்ய அப்போதுதான் யோசித்தால் நாம் காரில் தானே வந்தோம். அப்ப காரில் இருந்து நான் எப்படி என் ரூமுக்கு வந்தேன். ஹாஸ்பிடலில் இருந்து கிளம்பும் பொழுது என் மனநிலை எப்படி இருந்தது இப்போது தெளிவாக இருக்கிறது.

அப்போது காரில் வரும் பொழுது அத்தானிடம் எதுவும் உளறி விட்டோமா .. ஐயோ காரில் வரும் போது.. நான் என்ன செய்தேன் எனக்கு நினைவுக்கு வரவே மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது என்று தனக்குள் புலம்பிக் கொண்டே.. காபியை குடித்து முடித்தாள்.

காபியை குடித்து முடித்ததும் கர்ணா அவளிடம் கையை நீட்ட... அவளும் தனக்குள் இருந்த மனக்குழப்பத்தில் காபி டம்ளரை நீட்ட.. அதை வாங்கிக் கொண்டு கிச்சனில் சென்று கழுவி வைத்து விட்டு... திரும்ப அவள் அறைக்கே வர அவள், அவள் கட்டிலில் அமர்ந்த வாக்கிலேயே யோசித்துக் கொண்டே இருந்தாள் அழகி.

ஹலோ மிஸ் மெய்யழகி என்று அவள் வந்து சொடக்கு இட்டு அவள் கவனத்தை தன் பக்கம் திருப்பினான் கர்ணா.

இவ்வளவு நேரம் இருந்தா மனக் குழப்பத்திலும் கூட அவன் சொன்ன மிஸ் மெய்யழகி என்ற வார்த்தை அவளின் இதயத்தில் சென்று தாக்கியது.

சட்டென்று கலங்கிய கண்களோடு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அத்தான் நான் மிஸ் மெய்யழகி இல்லை என்று கலங்கிய கண்களோடு அழுது விடுவேன் என்ற குரலோடு சொன்னாள் கர்ணாவின் மெய்.

ஓஹோ அப்படியா?? அப்ப மிஸ் மெய்யழகி நீங்க இல்லையா?... அது சரி அப்ப நீங்க யாரு என்று கேட்டான் கர்ணா அவளின் வலி என்ன என்று தெரிந்தாலும் அந்த வலியை வேரோடு அறுத்து வெளியே வீசும் எண்ணத்தோடு பேசினான் கர்ணா.

அத்தான் ப்ளீஸ் என்னை கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க அத்தான் என்று கெஞ்சினாள்.

ஓஹோ நான் உன்னை புரிந்து கொள்ள வேண்டுமா?. சரி நான் புரிந்து கொள்கிறேன் எங்கே சொல் பார்க்கலாம் என்று.. கைகளை கட்டிக்கொண்டு அவள் முன்னே அமர்ந்தான் கர்ணா.

மெய்யழகியும் ஒரு முடிவோடு இந்த பிரச்சினையை இன்றே முடித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் சரிங்க அத்தான்...

எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும். ஆனால் அதற்காக உங்களை கல்யாணம் எல்லாம் என்னால் செய்து கொள்ள முடியாது.

ஓஹோ.. ம்ம் .. அப்புறம்.. என்று கர்ணா சம்மணம் போட்டு ஒரு கையை தாவாயில் வைத்து அழகாக அமர்ந்து கதை கேட்பது போல் கேட்டுக் கொண்டு
இருந்தான்.

அச்சச்சோ அத்தான் இப்படி எல்லாம் செய்தீர்கள் என்றால் என்னால் சொல்ல முடியாது போங்கள் என்று செல்லமாக கோபித்துக் கொண்டு முகத்தை திருப்பிக் கொண்டு அமர்ந்தாள்.

உடனே தாவாயில் இருந்த கையை எடுத்து ஓரு விரல் எடுத்து வாயில் வைத்து ஓகே நான் இனி வாயை திறக்க மாட்டேன். நீ சொல்லி முடி என்பது போல் சொல்லி விட்டு கைகட்டி வாய் பொத்தி அமர்ந்து இருந்தான் கர்ணா.


அவன் செய்கையில் சிரிப்பு வந்தாலும் அதை தனக்குள் மறைத்துக் கொண்டு...

எனக்கு திருமணம் ஆன அன்று இரவில் நடந்தது என்ன என்று உங்களுக்கு முன்னமே சொன்னேன். ஆனால் அதற்குப் பிறகு நான் எப்படி இருந்தேன். அங்கு என்ன நடந்தது? என் மனநிலை என்ன? என்றெல்லாம் உங்களிடம் சொல்லவில்லை.

அம்மா அன்று என்னை நேராக அழைத்து சென்றது.. மருத்துவமனைக்குத்தான்.

அங்கு என் உடலில் பட்ட காயங்கள் அனைத்திற்கும் சிகிச்சை அளித்தார்கள் முதலில். ஆனால் அவர்கள் எனக்கு ஊசி போட வந்தாலும் சரி, இல்லை என் காயங்களை சுத்தப்படுத்துவதற்காக நர்ஸ் வந்தாலும் சரி, அவர்கள் அனைவரிடமும் நான் மிகவும் கடுமையாக நடந்து கொண்டேன்.

அதாவது அவர்களை கடுமையாக தாக்க ஆரம்பித்தேன்... அப்படி நான் தாக்கியவர்களுக்கு ரத்த காயங்கள் வருவதைப் பார்த்து நான் சிரித்தேன்... சில நேரம் ரசித்து பார்ப்பேன். பிறகு அழுவேன்.. இப்ப புரிகிறதா நான் அந்த காலகட்டங்களில் எப்படி இருந்தேன் என்று... கிட்டத்தட்ட ஒரு மாதம் யார் என் அருகில் வந்தாலும் பயந்து சாவேன்.. அந்த பயத்தில் மிகவும் மூர்க்கத்தனமாக மாறி அனைவரையும் காயப்படுத்தினேன்...

கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் எனக்கு மிகவும் கடுமையாக மருத்துவம் பார்த்து, கொஞ்சம் கொஞ்சமாக நான் நார்மல் லைஃப்க்கு வந்தேன். கிட்டத்தட்ட இதற்கே ஒன்றரை வருடங்கள் ஆகி இருந்தது.

அந்த ஒன்றரை வருடமும் நான் இருந்த இடம் மெண்டல் ஹாஸ்பிடல் தான். கிட்டத்தட்ட நான் ஒரு பைத்தியமாக தான் இருந்தேன் என்று என் மனதில் பதிந்து விட்டது. அதை யாரும் பதிக்கவில்லை ஆனால் ஏனோ எனக்குள்ளே நான் ஒரு பைத்தியம் என்று என் ஆள் மனது நம்ப ஆரம்பித்து விட்டது.

அதற்காக மறுபடியும் ஆறு மாதங்கள் நான் ட்ரீட்மென்ட் எடுத்தேன். முழுவதுமாக என் வாழ்க்கையில் இரண்டு வருடங்கள் கொடுமையான காலங்கள்... அதன் பிறகு இப்ப வரை நான் தெளிவாக இருக்கிறேன் என்று, நான் நம்பிக் கொண்டு தான் இருந்தேன். அது உங்களை பார்க்கும் வரை என்று சொல்லி விட்டு கர்ணாவை ஒரு பார்வை பார்த்தாள் அழகி. ஆனால் அவனும் நீ சொல் நான் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறேன்.. என்பது போல் அமைதியாக அவள் சொல்வதைக் கேட்டுக் கொண்டு அமர்ந்து இருந்தான் கர்ணா.

கர்ணா ஏதாவது சொல்லுவான் என்று நினைக்க.. நீ சொல்லி முடி என்பது போல் அமைதியாகவே இருக்கவும்.. அத்தான் ப்ளீஸ் நான் சொல்வது உங்களுக்கு புரிகிறதா என்று கேட்டாள்....

வாயில் விரல் வைத்து இருந்த கர்ணா... விரலை எடுக்காமலே நீ சொல்ல நினைத்தது அனைத்தையும் முழுவதும் சொல்லி விட்டாயா என்று மெய்யை பார்த்து கேள்வி கேட்டான்...

பீச்....

பீச்சில்... மிதுன் மீது மோதி கீழ விழுந்தும், மிதுன் எதுவும் செய்யாமல் அப்படியே சிலை போல் நிற்க கோபம் அடைந்த மிதுன கோபமாக அவன் முன்னே போய் நின்றாள்.

கோபத்தோடு அவனிடம் பேச வாய் திறப்பதற்கு முன்பே அவளை இறுக்கி கட்டி அணைத்து இருந்தான் மிதுன்.

மிதுன் திடீரென்று தன்னை இப்படி அணைப்பான் என்று எதிர்பாராதவள்.. சில நொடி என்ன செய்வது.. எப்படி ரியாக்ட் செய்வது என்பதை மறந்து... மிதுனை அணைக்கவும் இல்லை, விலக்கவும் இல்லை ஆனால் அப்படியே அமைதியாக நின்றாள்.

சிறிது நேரம் அப்படியே நின்றவர்கள் காலில் கடலின் அலைகள் வந்து மோத...

இருவருமே சுய நினைவுக்கு வந்தனர். ஆனால் மிதுன் மிதுனாவை விடுவிக்காமல் தன் கரங்களுக்குள்ளேயே வைத்து இருந்தான்...

அவளும் விலக வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் அவனின் கரங்களுக்குள்ளேயே... அவனின் விழிகளை பார்த்துக் கொண்டே இருந்தாள்..
....
இணைந்திருங்கள்

சொல்லவா... வேண்டாமா...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top