• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 26, 2025
Messages
65
59. மிதுனாவை பீச் ஹவுஸ் அழைத்துச் செல்லும் மிதுன்..

ருத்ரா சரோஜா உரையாடல்

அனைவரும் ருத்ராவை சரோஜாவிற்கு துணைக்கு விட்டுவிட்டு மற்றவர்கள் கிளம்ப ...

மிதுனாவோ சனாதனை பார்த்து முறைத்து வைத்தாள்.

அவளின் பாசமான பார்வையை கண்டவன்.. புவனா வண்டி பஞ்சர் ஆகிவிட்டது, அதனால் புவனாவை ரிஷ்வந்த் கூட்டி சென்று விட்டான். இப்போது மிதுனா ஆபீஸ் செல்வதற்கு வழி இல்லாமல் இருக்கு அதனால் நீயே உன்னுடன் அவளை அழைத்துச் சென்று விடு, இருவரும் ஒரே அலுவலகத்திற்கு தானே செல்கிறீர்கள் என்று சொன்னான் சனாதன்.

மிதுன் எதுவும் சொல்லாமல், சனாதன் சொல்லி விட்ட ஒரே காரணத்தால் சரி என்று.. அவனிடம் தலையை அசைத்து விட்டு நேராக பார்க்கிங்கு சென்றான்.

மிதுனாவும் சனாதனிடம் தன் இரண்டு கண்களையும் அடித்து காட்டி விட்டு.. பாய் மாம்ஸ் என்று அவன் பக்கம் வந்து அவன் காதுகளுக்கு மட்டும் விழுகுமாறு சொல்லி விட்டு, சஞ்சனாவிடம் ஓகே சஞ்சு நான் கிளம்புறேன் ஈவினிங் பார்க்கலாம் என்று சொல்லி விட்டு சென்றாள்.

இருவரும் கிளம்பிய பின் சனாதனும் சஞ்சனாவும் வழக்கம் போல் கிளம்பி சென்றார்கள்.

மிதுன் காரில் ஏறியவன் மிதுனா வந்து அமரும் வரை காத்திருந்தவன் .. அவள் வந்த பிறகு காரை சீரான வேகத்தில் ஓட்டிக்கொண்டு சென்றான்.

சிறிது நேரம் காரை சுற்றிலும், அதே சமயம் ரோட்டையும் கவனித்துக் கொண்டு வந்தவள்... ஓர கண்ணில் மிதுனின் நடவடிக்கைகளை கவனித்தாள்.

அவனோ அவனுடைய பார்வை சிறிதும் இவள் பக்கம் திரும்பவும் இல்லை ரோட்டை விட்டு அவன் கவனம் வேறு எதிலும் சிதறவும் இல்லை.

ஓரக்கண்ணால் அவனை பார்த்துக் கொண்டு வந்தவள்..‌ அவனின் கவனம் முழுவதும் ரோட்டில் இருக்க இப்பொழுது நன்றாகவே ஆசை தீர அவனை பார்த்து அவனை மட்டுமே பார்த்துக் கொண்டு வந்தாள்..

அவள் வைத்த கண்ணை எடுக்காமல் அவனைப் பார்த்துக் கொண்டே வந்தவள் .. ஐயோ இவன் என்ன இப்படி ரோட்டை மட்டுமே பார்த்துக் கொண்டு வருகிறான் .. பக்கத்தில் இப்படி ஒரு பெண் இருக்கும் போது கொஞ்சமாவது திரும்பி பார்க்கிறானா பார். அப்படி இல்லை எதற்கு என்னை இப்படி பார்க்கிறாய் என்றாவது ஒரு கேள்வி கேட்கலாம் தானே... சரியான சாமியார் பயலா இருக்கிறானே என்று மனதில் பேசிக்கொண்டு இருந்தவள்... ஆமாம் இவருக்கு மைண்ட் வாய்ஸ் தான் ஒரு கேடு சரியான ரோபோ என்று சத்தமாகவே ஆனால் மெதுவாக முணுமுணுத்தாள்.

அப்பவும் அவன் எந்தவிதமான உணர்ச்சிகளையும் காட்டாமல் சாலையை மட்டும் பார்த்தே வண்டியை ஓட்டிக்கொண்டு இருந்தான் மிதுன்.

சுத்தம் சங்கர் படத்தில் ரோபோவிற்கு கூட காதல் உணர்ச்சி வந்தது... என் பக்கத்தில் இருக்கும் சாமியாருக்கு சுத்தம் ஒன்றும் வர வாய்ப்பே இல்லை... காதல் வேண்டாம் பக்கத்தில் ஒரு பெண் இருக்கிறாள் என்ற நினைப்பாது வேண்டாம்...

ஐயோ செமையா இருக்கு மாமா... ஆனா சரியான சாமியார் மாமாவா இருக்கியே... உன்னை எப்படி டா என் வழிக்கு கொண்டு வருவேன் என்று புலம்பிக் கொண்டு அவன் முகத்தை தான் பார்த்துக் கொண்டு இருந்தாள் மிதுனா.

அவள் என்ன தான் முணுமுணுப்பாக பேசினாலும், அவன் காதுக்கு விழுக வேண்டும் என்று தெளிவாகத்தான் பேசினாள். அது அவன் காதுகளில் விழுந்ததா என்று கேட்டால் அது அவனுக்கு தான் தெரியும். ஆனால் அவன் எதையும் காதில் வாங்காத ரோபோ போல் அமைதியாக வண்டியை ஓட்டிக் கொண்டு இருந்தான் மிதுன்.

அப்போது சட்டென்று சாலையில் இரண்டு நாய்கள் சண்டை போட்டுக் கொண்டு வர சடன் பிரேக் போட..

மிதுனைப் பார்த்துக் கொண்டு அவன் பக்கம் திரும்பி அமர்ந்து இருந்தவள், சுதாரிக்காமல் அவன் கன்னத்தில் சென்று தன் இதழை பதித்து விலகினாள்.

இப்போதாவது தன்னை திட்டவாவது செய்வான் என்று அவனை பார்த்துக் கொண்டு இருக்க.. ஆனால் அவனும் யாருக்கோ வந்த விருந்து போல் ரோட்டை மட்டும் பார்த்துக் கொண்டு மறுபடியும் வண்டியை ஓட்டிக் கொண்டு இருந்தான்.

ச்சே என்ன மனுஷன் டா இவன் சரியான ரோபோவா இருப்பானோ... ஐ திங்க் இவனோட மேனுஃபேக்சரிங்ல தான் ஏதோ ஒரு பிராப்ளம் இருக்கு. இதை முதலில் தனா மாம்ஸ் கிட்ட சொல்ல வேண்டும் என்று கார் நின்றது அறியாமல் புலம்பி கொண்டு இருந்தாள் மிதுனா.

இவ்வளவு நேரமும் அமைதியாக இருந்த மிதுன் அவள் பக்கம் திரும்பி.. கண்களாலேயே அவளை கீழே இறங்கு என்று சொன்னான்.

அவன் தன்னை தான் பார்த்தானா!??... அவன் தன்னை தான் கீழே இறங்க சொன்னானா!!??... இல்லை நான் காண்பது கனவா?? இல்லை நிஜமா?? என்று தெரியாமல் அவனை பார்த்துக்கொண்டு இப்பொழுது சிலை போல் இருந்தாள் மிதுனா...

அவளின் நிலையை பார்த்தவன் இப்பொழுது இவள் இறங்க மாட்டாள் என்று உணர்ந்து, அவளுக்கு மிக அருகில் சென்று அவள் காதில் ஒழுங்கு மரியாதையாக இறங்குடி என்று சொல்லி விட்டு, தான் சொன்னது உண்மையா பொய்யா என்று அவள் சிந்திக்க கூட நேரம் இல்லாமல் அடுத்த நொடி அவன் காருக்கு வெளியில் நின்று கொண்டு இருந்தான் மிதுன்.

என்ன நடந்தது என்று ஒன்றும் உணர முடியாமல், அதே சமயம் அவனுடைய வாசம் தனக்குள் இருப்பதை உணர்ந்தவள்.. உண்மையாலுமே இந்த சாமியார் தான் என் அருகில் வந்தானா என்று யோசித்துக் கொண்டே கீழே இறங்கி நின்றாள்.

ஏய் அப்படி எல்லாம் கனவு காணாதே நீ தான் பிரேக் போட்ட போது அவனிடம் சென்று முத்தமிட்டு வந்தாய், அதில் தான் உன் மீது அவன் வாசம் உள்ளது. அவனாவது உன்னை நெருங்கி உன்னிடம் வந்து பேசுவதாவது என்று அவளின் மனசாட்சி கலாய்த்தது.

அவளும் தன் மனசாட்சி சொல்வது தான் சரியாக இருக்கும் என்று முடிவுக்கு வந்தவள், அப்பொழுது தான் சுற்றத்தையும் கவனித்தாள்.. அது ஏதோ ஒரு கெஸ்ட் ஹவுஸ் மாதிரி இருந்தது. சுற்றிலும் கேட்க கடல் அலைகளின் இரைச்சல் கேட்கும் போது தான் தெரிந்தது... ஏதோ ஒரு பீச் ஹவுஸில் இருக்கிறோம் என்று உணர்ந்தாள்.

காரில் இருந்து இறங்கிய மிதுன் ஷெட்டில் இருந்து வெளியில் வந்தவன் மிதுனாவை பார்க்க அவளும் வெளியில் வந்து நின்றாள்.

அவள் வெளியே வந்ததும் ஷெட்டை மூடி விட்டு.. உள்ளே செல்வான் என்று நினைக்க அவன் திறந்து இருந்த கதவு வழியாக கடலை நோக்கி சென்றான்.

சரி நாமளும் போவோம்.. என்ன இந்த மதிய வேளையில் பீச்சு மணலில் உட்கார்ந்தால் சுடும் தானே... என்ன இவன் இந்த நேரத்தில் கடலுக்கு செல்கிறான் என்று நினைக்க அப்பொழுது தான் மணியை பார்த்தால் மணி நான்கு என்று இருந்தது.

ஐயோ மணி 4 ஆகிவிட்டதா... சித்திரை மாத வெயிலில் மணி ஆனதே தெரியவில்லை.. அதோடு இவர் காரில் நல்ல சொகுசாக வரவும் அவ்வளவு தூரம் டிராவல் பண்ணி வந்த அலுப்பே தெரியவில்லை... ஆமாம் எதுக்கு இந்த ரோபோ நம்ம இங்கே கூட்டிட்டு வந்து இருக்கிறான் என்று என யோசித்துக் கொண்டே நடந்து வந்தவள்.... அங்கு நின்று இருந்த மிதுன் முதுகில் மோதி கீழே விழுந்தாள்.

இப்பவும் அவன் திரும்பி பார்க்காமலேயே அப்படியே நிற்க... அடச்ச சரியான சாடிஸ்ட்டா இருப்பானோ... என்ன மனுஷன் இவன், ஒரு பெண் கீழே விழுந்து விட்டால், அதுவும் தன் மேல் மோதி விழுந்து விட்டாளே, அவளை தூக்கி வீட கை கொடுத்து உதவி செய்வோம்.. அப்படி இல்லை என்றாலும், திரும்பி ஒரு பார்வையாவது பார்க்கிறாரா... அது சரி ரோபோவிற்கு இது எல்லாம் எங்கே தெரியப்போகிறது... மிதுனா உன்னுடைய ஒளிமயமான எதிர்காலம் மிக அருமையாக தெரிகிறது என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டவள்.. அடக்கடவுளே முருகா என்று கடவுளை கூப்பிட்டுக் கொண்டே எழுந்தாள்.

இவ்வளவு நேரம் சிலை போல் நின்றவன் முன்பு போய் கோபமாக நிற்க...

மிதுனோ அவளை இறுக கட்டி பிடித்துக் கொண்டான்...

மருத்துவ மனையில்...

அனைவரும் கிளம்ப ருத்ரா சரோஜா அத்தை அருகில் சென்று அமர்ந்தவன்... மனம் ஒரு நிலையில் இல்லாமல் இருக்க... அவரின் வலியில்லாத காலில் லேசாக தலை வைத்து உட்கார்ந்த வாக்கில் படுத்துக்கொண்டான்.

சிறிது நேரம் தன் மருமகனின் தலையை கோதி விட்டவர்... சிறிது நேரம் கழித்து என்ன கண்ணு என்ன ஆச்சு?.. ஏன் இப்படி ஒரு மாதிரி இருக்கிறாய் என்று கேட்டார்.

அத்தை எனக்கு இரண்டு நாட்களாகவே நடப்பது எதுவும் மனதிற்கு சரியாக படவில்லை என்று சொன்னான்.

ஏன் கண்ணு அப்படி சொல்ற... நான் இப்ப தான் கீழே விழுந்தேன் ஆனா நீ இரண்டு நாட்களாகவே மனசு சரியில்லை என்று சொல்கிறாயே அப்போ வேற எதுவும் நடந்ததா....?.. ஒரு வேளை இன்னும் போலீஸ் ஸ்டேஷன் போயிட்டு வந்ததை நினைத்துக் கொண்டே இருக்கிறாயா என்று கேட்டார் சரோஜா.

ஆமாம் அத்தை எனக்கு என்னமோ அந்த பெண்ணை பார்க்கவே பிடிக்கவே இல்லை. ஆள் என்னமோ பார்க்க அழகாக தான் இருக்கா... ஆனால் அவள் அழகு கூட எனக்கு நல்ல பாம்பின் விஷம் போல் தான் தெரிகிறது... ஏனோ ஒரு பெண்ணை இப்படி தவறாக நினைக்க கூடாது என்று மனம் சொன்னாலும்... மூளை என்னமோ அவள் ஆபத்தானவள் என்று தான் எச்சரிக்கை செய்து கொண்டே இருக்கிறது.... நான் என்ன செய்ய அத்தை... என்று வளர்ந்தும் குழந்தை போல் தன்னிடம் கேட்கும் தன் மருமகனை பார்த்து...

ஏன் கண்ணு அந்த பெண்ணை எனக்கு காட்டு ... நான் அவளை பார்த்தே சொல்லிடுவேன் அவள் லட்சணத்தை என்று சரோஜா சொல்ல...

தன் அத்தையை வித்தியாசமாக பார்த்தான் ருத்ரா...

ஏன் கண்ணு அப்படி பாக்குற என்று கேட்டாள் சரோஜா‌.

ஒன்றும் சொல்லாமல் சிறிது நேரம் யோசித்து விட்டு, ஆமாம் அத்தை நீ எப்படி கீழே விழுந்தாய். இது நாள் வரை ஒரு முறை கூட நீ காய்ச்சல் தலைவலிக்குது அப்படி இப்படி என்று ஒரு முறை கூட நீ நோவு வந்து படுத்தது இல்லை...

அப்படி இருக்கும் போது எப்படி நீ கீழே விழுந்த... அதே போல் உன்னை இங்கு அட்மிட் செய்த பெண் யார் என்று உனக்கு தெரியுமா?.. எப்படி அவள் உனக்கு பழக்கம் என்று ருத்ரா கேட்டான்.

ஏன் கண்ணு நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல்... நீ என் கிட்ட வேற கேள்வி கேக்குற என்று கேட்டாள் சரோஜா.

அத்தை நான் உன்னிடம் கேட்ட கேள்விக்கும், நீ என்னிடம் கேட்கும் கேள்விக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது .. அதை நான் பிறகு சொல்கிறேன்.. முதலில் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு...

உனக்கு எப்படி அடிபட்டது?.. உன்னை இங்கு அட்மிட் செய்த பெண்ணை உனக்கு எப்படி தெரியும்?...
இணைந்திருங்கள்
சொல்லவா... வேண்டாமா...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top