• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 26, 2025
Messages
63
56. ஹாஸ்பிடலில் சரோஜாவின் நிலையும், சஞ்சனா கேங் அறிமுகமும்.


ஹோட்டலில் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டு இருந்த சமயம்... மிதுன் நம்பரில் அழைப்பு வர அதில் வந்த செய்தியை கேட்டு பதறியவன் அதே சமயம் மற்றவர்களை பார்த்து விட்டு... தன்னுடைய பதட்டத்தை மறைத்துக் கொண்டு அனைவரையும் சாப்பிட சொல்லி விட்டு கிளம்பி சென்றான்.

ஆனால் அவனின் பதட்டத்தை உணர்ந்து சஞ்சனா சனாதனையும் அவளோடு துணைக்கு அனுப்பி வைத்தாள்.

பிறகு மற்றவர்களை சாப்பிட வைத்து.. போன் செய்து கேட்க அங்கு சரோஜா அத்தைக்கு காலில் அடிபட்டு மருத்துவமனையில் சேர்த்து இருப்பதாக தகவல் சொல்ல...

அனைவரும் ஹாஸ்பிடல் நோக்கி சென்றார்கள் அங்கு... அனைவரும் சரோஜாவை பார்க்க சென்று விட அறைக்கு வெளியில் நின்று கொண்டு இருந்த கவிப்பிரியாவை பார்த்து விட்டு ருத்ரா ... காரிடரிலேயே நின்று விட சஞ்சனாவும் அவனுக்கு துணையாக அவனோடு இணைந்து நின்று... அவனிடம் ஜாலியாக பேசி அவனுடைய மனதை இயல்பாக்கி...

சரோஜா அம்மாவை பார்க்க கூட்டி சென்றாள்.

உள்ளே சென்ற ருத்ரா அத்தையின் காலில் இருந்த கட்டை பார்த்து விட்டு, அச்சச்சோ என்னத்தை இவ்வளவு பெரிய கட்டு போட்டு இருக்கிறார்கள் அடி மிகவும் பலமாக பட்டு இருக்கா... எலும்பு எதுவும் பிராக்சர் ஆகி இருக்கிறதா என்று பதறிப் போய் அழுகும் நிலைக்கு சென்றவனை பார்த்து...

சஞ்சனா தான்... ஐயோ மாம்ஸ் என்ன நீ இவ்ளோ சின்ன பிள்ளை போல அழுகிறாய்... என்று சொல்லி அவளை சமாதானப்படுத்த சரியாக அறைக்குள் நுழைந்தால் கவிப்பிரியா...

ருத்ராவை மாம்ஸ் என்று சஞ்சனா அழைக்க அதை சரண், சரோஜா, கவிப்பிரியா, லீனா நான்கு பேரும் கவனிக்க.... மற்றவர்களோ அவள் அழைத்த விதத்தை நினைத்து பெரிதாக அலட்டிக் கொள்ளாமல்....

அவள் ருத்ராவை சமாதானம் படுத்தி விடுவாள் என்ற நம்பிக்கையில், அவள் பண்ண போகும் சேட்டைகளை காண காத்து இருந்தார்கள்.

அதே போல் சஞ்சனாவும் அங்கு டேபிள் மீது இருந்த ஆரஞ்சு பழங்களை பார்த்தவள் ஹை ஆரஞ்ச் என்று சொல்லி விட்டு, அதை எடுத்து கட் பண்ணி ஜூஸ் பிழிந்தவள்... இரண்டு டம்ளர்களில் ஊற்றி ஒன்றை எடுத்து சரோஜா அம்மாவின் கையில் கொடுப்பது போல் சென்று விட்டு, அவர்கள் கையில் கொடுக்காமல் ருத்ரா கையில் கொடுத்து விட்டு...

இந்தா மாம்ஸ் குடிச்சிட்டு தெம்பா அழுகு... நீ என்ன தான் சாப்பிட்டு வந்தாலும் ரொம்ப வீக்கா தான் இருக்க... என்று சொல்லி விட்டு மற்றொரு டம்ளரை எடுத்துக் கொண்டு போய் சரோஜாவின் கையில் கொடுத்தாள்.

இந்த முறை சரோஜா சிரித்துக்கொண்டே இப்பொழுதாவது நான் வாங்கிக் கொள்ளவா? இல்லை இதை நீ குடித்து விடுவாயா என்று அவரும் விளையாட்டாக பேச...

அங்கு இருந்த அனைவருமே சிரித்து விட்டார்கள்.

அதற்கு சஞ்சனாவோ அச்சச்சோ இப்படி கம்பெனி சீக்ரெட்டை‌ எல்லாம் பப்ளிக்கா சொல்ல கூடாது... மாம்ஸ் எங்க அம்மா இன்னும் அப்டேட் ஆகாமலே இருக்காங்க என்று ருத்ராவிடம் சொல்லிக் கொண்டே... கவிப்பிரியாவின் கையில் இருந்த ஜுஸை வாங்கி... ஹாய் கவி இங்கு தான் பழம் இருக்கிறதே, இங்கேயே ஜூஸ் பிழிந்து கொடுத்து இருக்கலாம் தானே ...‌ இதை போய் ஏன் கடையில் வேஸ்ட் ஆக வாங்கிக் கொண்டு வந்தாய் ... சரி குடு. இதை நான் குடித்துக் கொள்கிறேன் என்று சொல்லிக் கொண்டே அந்த ஜூஸை அவள் வாங்கி குடித்தாள்...

பரவாயில்லை ஜுஸ் நல்லா தான் இருக்கு.. எவ்வளவு தான் ஹைஜீனிக்காக இருந்தாலும், பேஷண்ட்ஸ்க்கு அவுட்சைட் புட் கொடுக்க கூடாது சரியா கவி என்று, ஏதோ சிறு பிள்ளைக்கு தெரியாததை சொல்லிக் கொடுப்பது போல் சொல்லிக் கொடுத்தாள் சஞ்சனா. அங்கு இருந்த அனைவருக்கும் அது இயல்பாக தான் தெரிந்தது. ஆனால் அவள் செய்யும் கிண்டலை கவிப்பிரியாவால் நன்றாக உணர முடிந்தது. சனாதன், ருத்ரா இருவருக்கும் சஞ்சனாவின் கிண்டல் புரிந்தது.

ஆனால் அங்கு யார் இருந்தாலும் தன் இயல்பை அவள் காட்டி இருப்பாள்... ஆனால் அங்கு சரோஜாவும், ருத்ராவும் இருக்க அமைதியாக வெளியே சிரிப்பும் உள்ளே கோபமாக நின்று கொண்டு இருந்தாள் கவிப்பிரியா.

சஞ்சனா தன் அண்ணன் சரண், லீனா, புவனா, மிதுனா, ரிஷ்வந்த் அனைவரையும் அறிமுகப்படுத்தி வைக்க ...

நீயும் ருத்ராவும் உள்ளே வர லேட் ஆனது இல்ல பாப்பா... அப்பவே மிதுன் அனைவரையும் அறிமுகப்படுத்தி வைத்தான் டா என்று சொன்னார் சரோஜா.

ஓஹோ பெரிய பாஸ் சொல்லிட்டாங்களா?.. ஓகே இனிமேல் நாங்கள் அனைவரும் உங்களை வந்து அடிக்கடி பார்ப்போம் இப்போது நீங்கள் ஓய்வெடுங்கள். நீங்களும் அழகியும் நல்ல சமைப்பிர்கள் என்று சனா சொல்லி இருக்காரு... அதனால் இந்த ஞாயிறு நாங்கள் அனைவரும் உங்கள் வீட்டிற்கு வருவோம்... அதற்குள் உங்கள் கால் சரியாகி வீட்டிற்கு வந்து சேருங்கள்... என்ன சரோ மா என்று கேட்டாள் சஞ்சனா.

அவளின் படபட பேச்சை ரசித்து கொண்டு இருந்த சரோஜா.... அழைத்தன் அருகில் வர சொல்லி தன் அருகில் அமர வைத்துக் கொண்டவர்... ஏன் கண்ணு என்று சரோஜா எதோ பேச வர அப்போது அங்கு வந்த டாக்டர்...

ஐயோ மிஸ்டர் மிதுன் என்னது இவ்வளவு பேர் இங்கு இருக்கிறார்கள்... சாரி தவறாக நினைத்துக் கொள்ளாமல் யாராவது இரண்டு பேர் மட்டும் இங்கு இருங்கள் ப்ளீஸ் மற்ற அவர்கள் அனைவரும் வெளியே செல்லுங்கள் என்று சொன்னார்.

சரோ அருகில் சஞ்சனா அமர்ந்து இருக்க... மற்றவர்கள் அனைவரையும் மிதுன் வாருங்கள் நாம் வெளியே செல்லலாம் என்று சொல்லி வெளியே அழைத்து வந்தான். கவி பிரியாவும் எதுவும் சொல்ல முடியாமல் வெளியே சென்றாள்.

ஆனால் வந்ததில் இருந்து அழகி அமைதியாக நிற்கவும்.. ஏனோ மனதுக்கு சங்கடமாக இருக்க சஞ்சனா.. அழகி கடைசியாக வெளியே செல்லும் நேரம் அவளை கூப்பிட்டு அழகி அது தான் இருவர் இருக்கலாம் என்று சொன்னார்கள் தானே நீ உள்ளே இரு என்று சொன்னாள்.

சஞ்சனாவின் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டு இருந்த சரோஜாவிற்கு ஏனோ மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

ருத்ராவை இயல்பாகியது இப்போது அழகியின் வருத்தத்தை கவனித்து அவரை இருக்க சொல்லியது என்று ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கவனித்துக் கொண்டு இருந்தார்... ஆனால் அவள் ருத்ராவை மாம்ஸ் என்று அழைத்ததே கவனித்து விட்டு அவளின் விருப்பம் ருத்ரா என்று மட்டும் முடிவு எடுத்து இருந்தார் தவறாக....

உள்ளே வந்த டாக்டர் சரோஜாவை பரிசோதித்து விட்டு, முழங்காலுக்கு கீழ் இருக்கிற எலும்பில் தான் லேசாக பிராக்சர் ஆயிருக்கு. ஓன் வீக் ஃபுல்லா ரெஸ்ட் எடுங்க... ஹாஸ்பிடல்லில் இருந்து ட்ரீட்மென்ட் பண்ணுறீங்களா இல்ல வீட்டுக்கு போறீங்களா சரோஜா அம்மா என்று கேட்டார் டாக்டர்.

இப்ப தான் முதன் முதலில் வாயை திறந்து, டாக்டர் எப்ப கட்டு பிரிக்கணும் என்று சொல்லுங்க.. அப்ப நான் அம்மாவை கூட்டிட்டு வரேன்.. மருந்து மாத்திரைகள் மட்டும் எப்படி கொடுக்கணும் என எனக்கு டீடைல்ஸ் சொல்லிடுங்க என்று சொன்னாள்.

இப்பவே என் அம்மாவை கூட்டிக்கொண்டு போக சொன்னாலும் நான் இந்த நிமிடமே கிளம்பி விடுவேன் என்று சொன்னாள் அழகி.

அழகியின் பேச்சைக் கேட்ட டாக்டர் சிரித்துக் கொண்டே... உன்னுடைய அம்மாவை சாயந்தரம் வீட்டிற்கு கூட்டி செல்.. இப்ப தான் அவருக்கு ஆபரேஷன் நடந்து முடிந்து இருக்கிறது... மைனர் ஆப்ரேஷன் தான் என்றாலும் அவரின் வயதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனால் இன்று மாலை அவரை டிஸ்சார்ஜ் செய்து கொள்ளலாம்... என்று சொல்லி விட்டு வெளியே சென்றார்.

டாக்டர் வெளியே சென்று அடுத்த நொடி சஞ்சனாவை பார்த்து சஞ்சு நான் வீட்டிற்கு போய் அம்மா வந்ததற்கு பிறகு அவர்கள் அறை பின் வாசலில் இருக்கிறது. அவர் எப்பவும் தோட்டத்தை பார்த்து தான் இருப்பார் அதனால் அந்த பக்கம் இருக்கிறது. ஆனால் இந்த கால்களை வைத்துக்கொண்டு அவ்வளவு தூரம் போவது சிரமம்.அவர்களுக்காக முன் பக்கம் இருக்கும் அறையை ஒதுக்கி வைக்கிறேன். அதே சமயம் என்னால் இங்கு இருக்க முடியாது அதனால் நான் கிளம்புகிறேன் உன் பொறுப்பில் அம்மாவை விட்டு செல்கிறேன் பத்திரமாக வீட்டிற்கு கூட்டிட்டு வந்த செய்தி என்று சொல்லிவிட்டு திரும்பியும் பார்க்காமல் வேகமாக சென்று விட்டாள் அழகி.

அழகி வேகமாக வெளியில் வருவதை பார்த்த கர்ணா அவளின் பின்னாடி சென்றான்.

மிதுன் என்ன ஆச்சு என்று பதற... சனாதன் விடு அவன் பார்த்துக் கொள்வான் என்று சொல்லி விட்டு... சரி மிதுன் நீ போய் டாக்டர் கிட்ட ஈவினிங் டிஸ்சார்ஜ் பண்றதுக்கான சம்மரி வாங்கிட்டு வா என்று சொன்னான்.

சரி டா நானும் லிபினும் சேர்ந்து, சம்மரி வாங்கி விட்டு பணத்தை கட்டி விட்டு வருகிறோம் என்று சொல்லி விட்டு லிபினை கூட்டி சென்றான் மிதுன்.

போவதற்கு முன் கவிப்பிரியாவை பார்க்க அவளோ அங்கு இருந்த அனைவரிடமும் ஒட்டாமல் தனியாக நின்று கொண்டு இருந்தாள்.

மிஸ் கவிப்ரியா நீங்கள் செய்த உதவிக்கு மிகவும் நன்றி. நீங்கள் வேண்டுமானால் வீட்டிற்கு சென்று விட்டு, அத்தையை மாலை வீட்டிற்கு அழைத்து வருவோம். நீங்கள் பொறுமையாக நாளைக்கு கூட வந்து பார்க்கலாம். இப்போது நீங்கள் கிளம்புகிறீர்கள் என்றால் கிளம்புங்கள். பாவம் எங்களால் உங்களுக்கு மிகவும் தொந்தரவாகிவிட்டது என்று சொன்னான்.

மிதுனின் ஒட்டாத பேச்சிலும் மரியாதையிலும் கோபம் உச்சிக்கு ஏற... இங்கு இருப்பவர்கள் அனைவரும் ஒரே கும்பல. இதில் நான் மட்டும் தனித்து எவ்வளவு நேரம் நிற்பது, அதனால் இப்போது நான் கிளம்புகிறேன் விரைவில் உங்கள் அனைவரையும் பிரித்து.. என் ருத்ராவை மட்டும் திருமணம் செய்து கொண்டு போய்க்கொண்டே இருக்கிறேன் என்று மனதிற்குள் சபதம் எடுத்துக் கொண்டு வெளியில்...

சரிங்க மிதுன் சார், நான் நாளைக்கு வந்து பார்க்கிறேன். அவர்களின் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே... ஓகே மிஸ் கவிப்பிரியா நீங்க போயிட்டு வாங்க, இப்ப அவங்க பில் கட்டனும். சோ சம்மரி வாங்க டாக்டர் போய் பார்க்கட்டும் என்று சொல்லி, மிதுனையும் லிபினையும் டாக்டரை பார்த்து விட்டு வருகிறீர்களா என்று மிதுனா அனுப்பி வைத்தாள்.

அதற்கு மேல் அங்கு நிற்க விருப்பம் இல்லாமல் கவிப்பிரியா யாரையும் கவனிக்காமல் வேகமாக சென்றுவிட்டாள்.

போகும் அவளைக் கண்டு மிதுனாவும் ருத்ராவும் ஹைபை போட்டுக் கொள்ள...

மிதுன் லிபின் மற்றும் அனைவரும் புரியாமல் பார்க்க...

சனாதன் மிதுனாவின் தலையில் கொட்டி... ஏய் வாலு நீயும் இவனும் சேர்ந்து பண்ற சேட்டையா இது.... என்று அவளின் காதை பிடித்து திருக அங்கு இருந்த அனைவருமே சிரித்து கொண்டு இருந்ததை.... அந்த தளத்தில் இருந்து திரும்பி கீழே செல்லும் போது ஒரு பார்வை பார்த்து விட்டு கோபத்தோடு சென்றாள் கவிப்பிரியா.

இணைந்திருங்கள்


சொல்லவா... வேண்டாமா...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top