- Thread Author
- #1
55. பழனியின் திட்டத்தின் முதல் படி..
கவிப்பிரியா சரோஜாவை மருத்துவமனையில் சேர்த்தல்...
ஹோட்டலில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து தங்களுக்குள்ளேயே ஒருவருக்கு ஒருவரை அறிமுகப்படுத்திக் கொண்டு இருக்க... ஏற்கனவே சனாதன் அனைவருமே அசைவ பிரியர்கள் என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு அனைவருக்கும் பிடித்தமாக அசைவ உணவுகளை ஆர்டர் செய்து இருந்ததால் அனைவரும் பேசி கொண்டு இருக்கும் பொழுது, சனாதன் ஏற்கனவே சொல்லி வைத்து இருந்த நேரத்திற்கு சரியாக உணவுகளை எடுத்து வந்து பரிமாறினார்கள்.
அனைவரும் அழகாக பேசிக்கொண்டே சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் பொழுது, ஏனோ கர்ணா அழகி பக்கம் திரும்பி கூட பார்க்கவே இல்லை.
அவர்கள் நான்கு பேருமாகவே காரில் கிளம்பி இங்கு வரலாம் என்று லிபின் சொன்னதற்கு கூட ... இல்லை லிபின், நானும் லீனாவும் ஒன்றாக கிளம்புகிறோம் நீயும் அழகியும் ஒன்றாக வந்து விடுங்கள் என்று அனைவரும் அழைப்பது போல் முதன் முறையாக அழகி என்று சொல்லி விட்டு, அவளை நிமிர்ந்தும் பார்க்காமல் லீனாவோடு கிளம்பி வந்து இருந்தான்.
இங்கு வந்தது முதல் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் சாப்பாடு பிடித்தது பிடிக்காதது என்று பேசிக்கொண்டு பரிமாறி கொண்டும் இயல்பாக இருக்கும் பொழுதும் கூட ஏனோ மருந்துக்கு கூட கர்ணா அழகி பக்கம் திரும்பி பார்க்கவே இல்லை.
அழகியின் நிலமை சனாதனுக்கு மட்டும் புரிய.. ஆஹா இருவருக்கும் ஏதோ பிரச்சனை போலவே... என்ன இவன் அந்த பிள்ளையை பார்க்கவே மாட்டேன் என்கிறான். அழகி அனைவரிடமும் சிரித்து பேசினாலும் அவளின் ஏக்க பார்வை கர்ணா மீது படிவதை உணர்ந்து, தனக்கு அருகில் அமர்ந்து இருந்த சஞ்சனாவை பார்த்து...
சனு என்று மெல்லிய குரலில் அழைத்தான். அங்கு இருந்த கலகலப்பிலும் பேச்சு சத்தத்திலும் கூட அவன் மெதுவாக அழைத்த சனு என்று அழைப்பு அவளைத் தொட அவளும் சட்டென்று திரும்பி என்ன சனா என்று கேட்டாள்.
ஆனால் அவளும் அவனிடம் கேட்டது மற்றவர்களுக்கு தெரியாத அளவுக்கு அவனிடம் மட்டும் அழகாக அமைதியாக கேட்டாள்.
அவள் புரிந்து கொண்ட புரிதலில் ஒரு நிமிடம் மெய் சிலிர்த்தவன்... கண்களாலே அழகி, கர்ணா இருவரையும் காட்டி விட்டு, இயல்பாக அவள் பக்கம் குனிந்து ஏதோ உணவை எடுப்பது போல் குனிந்து அவளிடம் எனக்காக ஒருமுறை அழகியை மெய் என்று கூப்பிடு என்று சொன்னான்.
ஏன் எதற்கு என்று எந்த விவாதமும் செய்யாமல் அவன் சொன்னது போலவே... சஞ்சனாவும் மெய் என்று அழைத்தாள்...
மெய் என்ற அழைப்பு காதில் விழுந்ததுமே தன்னையும் மறந்து சொல்லுங்க அத்தான் என்று கர்ணாவை பார்த்தாள் அழகி.
கர்ணா கூட ஒரு நொடி அந்த அழைப்பை காதில் வாங்கியவன்... சற்றும் யோசிக்காமல் இதுவரை அவள் முகத்தை பார்க்காமல் இருந்தவன் தன் மெய்யை தான் பார்த்தான்.
அவனும் பார்க்க அவளும் தன்னை சுற்றி இருப்பவர்கள் அனைவரையும் மறந்து, சொல்லுங்க அத்தான் என்று கர்ணாவை தான் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
ஏனோ வழக்கம் போல் அவளின் தனிப்பட்ட அத்தான் என்ற அழைப்பில்... இவ்வளவு நேரமும் அவள் மீது இருந்த கோபம் மறைந்து.. எதுவும் சொல்லாமல் கண்களாலேயே சாப்பிடு என்று சொன்னான்.
மற்ற யாருக்கும் இங்கு நடப்பது எதுவும் சரியாக விளங்கிக் கொள்ள முடியாததால் அனைவரும் அவரவர் வேலையை பார்த்து பேசிக்கொண்டு சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள்.
ஆனால் சஞ்சனாவும் சனாதன் இருவர் மட்டும் அவர்களின் காதலை அழகாக பார்த்துக் கொண்டும்.. ரசித்துக் கொண்டும்... சாப்பிட்டார்கள்.
இந்த இனிமையான சூழலை கலைப்பது போல மிதுனின் செல்லிற்கு ஃபோன் வந்தது... அதை முதலில் கவனிக்காதவன் அழைப்பு முடிய போகும் சமயத்தில் எடுத்து காதில் வைக்க...
அந்தப் பக்கம் கூறப்பட்ட செய்தியை கேட்டு... என்ன சொல்ற மா.. எங்கே எப்போது ?.. ஓகே கொஞ்ச நேரம் கவனமாக பார்த்துக் கொள்.. நான் உடனே வந்து விடுகிறேன்.. எந்த மருத்துவமனை ... ஓகே 15 நிமிடத்தில் வந்து விடுவேன் கவனமாக பார்த்துக் கொள்ளுமா என்று சொன்னவன் போனை கட் செய்து விட்டு...
மற்றவர்களை பார்க்க அனைவருமே அவனுடைய பதட்டத்தை பார்த்து விட்டு அமைதியாக அவனே சொல்லட்டும் என்று காத்து இருந்தனர்.
அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவன் சாரி மன்னித்துக் கொள்ளுங்கள் நீங்கள் அனைவரும் சாப்பிடுங்கள்... நான் ... எனக்கு ஒரு முக்கியமான வேலை வந்து விட்டது. நான் கிளம்புகிறேன் என்று தன்னுடைய கார் சாவியை எடுத்தான்..
சஞ்சனா சனாதனை பார்த்து அவரோடு செல் என்று சொன்னாள்.
சனாதனும் சஞ்சனாவை பார்த்தது நான் அவனோடு செல்கிறேன் என்று சொல்வதற்காக தான் பார்த்தான். ஆனால் அதற்கு முன்பே அவள் தன்னிடம் அவனுடன் செல் என்று சொன்னதும் மனதிற்குள் மகிழ்ச்சியாக இருக்க, ஏனோ அவனையும் அறியாமல் அவளின் கைகளைப் பிடித்து யாரும் அறியா வண்ணம் ஒரு அழுத்தம் கொடுத்து விட்டு.. சென்றான்.
அவன் என்ன நினைத்து அழுத்தி விட்டு சென்றானோ தெரியாது... ஆனால் அவனின் கரங்களில் இருந்த அந்தக் கதகதப்பு அவளுக்குள் குறுகுறுப்பு ஒன்றை ஏற்படுத்த... சாப்பிட்ட அனைத்து உணவுகளும் செரித்து வயிற்றில் சில்லென்று ஒரு உணர்வு உண்டாகியது. ஆனால் சட்டென்று சூழ்நிலையில் ஏதோ ஒரு பிராப்ளம் என்று உணர்ந்து கொண்டவன் தன்னுடைய உணர்வுகளை அடக்கிக் கொண்டு அவர்கள் கிளம்பியதும் மற்றவர்கள் அமைதியாக இருப்பதை பார்த்து விட்டு,...
ஹேய் ப்ளீஸ் காய்ஸ் ... ஏதோ ஒரு பிராப்ளம் என்று தெரியுது நல்லா... அதே சமயம் எந்த ஒரு உணவு பொருளும் கேட்டுப் போகக்கூடாது, வீணாகவும் போகக்கூடாது. ப்ளீஸ் எதுவாக இருந்தாலும் அனைவரும் முதலில் சாப்பிடுங்கள் சாப்பிட்டு முடித்து விட்டு, அனைவருமே தனாவிற்கு ஃபோன் பண்ணி கேட்டு விட்டு நாம் சென்று பார்க்கலாம் என்ன எது என்று தயவு செய்து இப்போது அனைவரும் எதையும் நினைத்துக் கொள்ளாமல் சாப்பிடுங்கள் என்று சொன்னாள் சஞ்சனா.
அனைவருமே இப்பொழுது அமைதியாக உணவை சாப்பிடுவது மட்டும் தான் முக்கியம் என்பது போல் பேச்சை குறைத்து சாப்பிட்டு முடித்து விட.. ருத்ரா மிதுனுக்கும் சஞ்சனா சனாதனுக்கும் கால் செய்தனர்.
அந்தப் பக்கம் கூறிய செய்தியை கேட்டு விட்டு அனைவரையும் அழைத்துக் கொண்டு, எம் எம் ஹாஸ்பிடல் நோக்கி சென்றனர்.
அங்கே ரிசப்ஷனில் விசாரித்து விட்டு முதல் தளத்தில் இருக்கும் நீயூரோ டிபார்ட்மெண்ட் சென்று பார்க்க, அங்கே அறைக்கு வெளியில் கவிப்பிரியா நின்று கொண்டு இருந்தாள்.
அவளைப் பார்த்ததும் ருத்ராவிற்கு ஒரு நொடி முன்னேறி செல்ல விருப்பம் இல்லாமல் நின்று விட்டான். மற்றவர்கள் அனைவரும் அவனை கடந்து செல்ல... ஏற்கனவே கவிப்பிரியாவை பற்றி சனா சொல்லி இருந்ததால், சஞ்சனா ருத்ராவை பார்த்து.... ஏனோ அவளையும் அறியாமல் அவனை மாம்ஸ் ப்ளீஸ் வாருங்கள் யார் இருந்தால் நமக்கென்ன... அங்கு உள்ளே அம்மா இருக்காங்க. என்ன நடந்தது என்று தெரியவில்லை, ஆனால் அவள் தான் இப்போது அம்மாவை ஹாஸ்பிடல் சேர்த்து இருக்கா... முதலில் அம்மாவை சென்று பார்ப்போம் வாங்க மாம்ஸ் என்று கூப்பிட்டாள் சஞ்சனா.
கண்டிப்பா அம்மாவிற்கு ரொம்ப பெரிய ஆபத்து எல்லாம் இருக்காதுன்னு மனசுக்கு தோணுது சஞ்சு மா... தவறாக அப்படி ஏதாவது இருந்து இருந்தால் கண்டிப்பா மிதுன் எங்களை விட்டு விட்டு போயிருக்க மாட்டான். அவன் நம்மை சாப்பிட சொல்லி விட்டு அவன் வந்ததிலேயே தெரிகிறது அத்தைக்கு பெரிதாக எதுவும் அடி இருக்காது என்று... ஆனால் என் மனதிற்கு எந்த ஒரு நல்ல விஷயமும் நடக்கும் போதும் இவளை நான் பார்க்கவே இல்லை... அதே போல் இவளை நான் பார்க்கும் போது எல்லாமே நேரம் தவறாகவே இருக்கு.
முதன் முதலில் அவங்க டிரைவருக்காக அவள் பதறிய போது எனக்கு அவளை முதலில் கவனிக்கவே தோன்றவில்லை. பிறகு தான் அவளை நினைத்து பார்த்து சரி நல்ல பெண் என்று நினைத்து தான் அவளை காப்பாற்றினேன்.
ஆனால் அந்த நிமிஷத்தில் இருந்து இந்த நிமிஷம் வரை... இவளை பார்க்கும் போது எனக்குள் என்னையும் அறியாமல் ஒரு வெறுப்பு தான் வருகிறது சஞ்சு மா என்று சொல்லிக் கொண்டு இருந்தான் ருத்ரா.
அவளும் சரி மாம்ஸ் என்ன வேணாலும் நடந்துட்டு போகட்டும்.. இப்போது நாம் அம்மாவை பார்க்க வேண்டும் தானே வாருங்கள் என்று அவனின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு இருந்தாள்.
அனைவரும் உள்ளே சென்றாலும், இவர்கள் மட்டும் அந்த ஃப்ளோர் என்ட்ரன்ஸில் நின்று பேசிக் கொண்டே இருப்பதை கவிப்பிரியாவும் பார்த்துக் கொண்டு தான் இருந்தாள். அதிலும் சஞ்சனா ருத்ராவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு இருப்பதை பார்த்து ... பொறுமை இழந்தவள்,...
அவர்கள் இருவரிடமும் வேகமாக சென்றாள் கவிப்பிரியா. ஆனால் அதற்குள் அவள் அங்கு இருந்து நகர்ந்து தங்களை நோக்கி வருவதை பார்த்து ருத்ரா, ...
சஞ்சனாவின் கையைப் பிடித்துக் கொண்டு அவளோடு இணைந்து நடந்து வந்தான் ருத்ரா.
சஞ்சனா, ருத்ரா இருவருமே கவிப்பிரியாவை கண்டு கொள்ளாமல் அவளை கடந்து... சரோஜாவை அட்மிட் செய்து இருக்கும் அறைக்கு சென்றார்கள்.
இது வரை கவிப்பிரியா பற்றி பெரிய எந்த எண்ணமும் இல்லாமல் இருந்தாள் சஞ்சனா, ஆனால் சனாதன் சொல்லியதில் இருந்து... அவளை பார்க்க பிடிக்காமல் அவள் ஒதுங்கி போக... ருத்ராவிற்கு சொல்லவே வேண்டாம் அவள் நிழல் கூட தன் மீது படாதவாறு ஒதுங்கி போனான்.
கவிப்பிரியா சஞ்சனாவின் ஒதுக்கத்தை சிறிதும் லட்சியம் செய்யவில்லை. ஆனால்.. ருத்ராவின் ஒதுக்கம் அவளின் ஈகோவில் பெரிய சம்மட்டியாக அடி அடித்தது... அதோடு அவன் மீது கொண்டுள்ள காதல் பைத்தியமாகி அவளின் நிதானத்தை இழக்க செய்து மேற்கொண்டு தவறுகளை செய்ய மட்டுமே தோன்றியது.
பாவம் அவள் அறியவில்லை அவன் மீது அவள் கொண்டுள்ளது காதல் அல்ல.. வெறும் மோகம் என்று ... யார் சொல்வார்கள்?.. இவளே உணர்ந்தால் தான் உண்டு. அப்படி அவள் காதல் என்று எப்பொழுது உணர்கிறாளோ அப்போது அவளை நிலை என்ன?.. ருத்ராவின் நிலை என்ன?.. யாருக்கு தெரியும் காலம் தான் முடிவெடுக்கும்...
ஆனால் இப்போது வேகமாக தன் கோபத்தை மறைத்துக் கொண்டு, கேண்டின்கு சென்றாள் சரோஜாவிற்கு ஜூஸ் வாங்குவதற்காக. அதற்குள் அவளின் டிரைவரை ஜூஸ் வாங்கி வந்து அவளிடம் கொடுக்க... அதை வாங்கிக் கொண்டு மறுபடியும் சரோஜாவை அட்மிட் செய்த அறைக்கு சென்றாள்.
அதே நேரம் சஞ்சனாவும் ருத்ராவும் உள்ளே நுழைய அங்கு..
சரோஜா அத்தை இடது காலில் முழங்காலில் இருந்து கட்டு போடப்பட்டு இருந்தது.
அதைப் பார்த்து விட்டு பதறியவன் ஐயோ என்ன ஆச்சு அத்தை என்று கேட்டான் ருத்ரா... இவ்வளவு பெரிய கட்டு போட்டு இருக்கிறார்கள். அடி பலமாகப்பட்டு இருக்கிறதா அத்தை?? எப்படி கீழே விழுந்தாய் நீ கவனமாக தானே இருப்பாய் ஐயோ என்று அழுகாத குறையாக கதறியவனை...
சஞ்சனா தான்... ஐயோ மாம்ஸ் என்ன நீ இவ்ளோ சின்ன பிள்ளை போல அழுகிறாய்... என்று சொல்லி அவளை சமாதானப்படுத்த சரியாக அறைக்குள் நுழைந்தால் கவிப்பிரியா...
ருத்ராவை மாம்ஸ் என்று சஞ்சனா அழைக்க அதை கவனித்தவர்கள் நான்கு பேர்....
அவர்களின் மனநிலை???..
இணைந்திருங்கள்
சொல்லவா... வேண்டாமா...